இந்தியாவில் பெரும் தொற்றுநோயை குற்றத்தன்மையுடன் தவறாக கையாளும் மோடி அரசாங்கத்தின்மீது மக்களின் கோபம் அதிகரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கோவிட்-19 தினசரி உத்தியோகபூர்வ இறப்புகளின் எண்ணிக்கை 3,000 க்கு மேலாகவும் தினமும் புதிய தொற்றுக்கள் சராசரியாக 370,000 க்கும் அதிகமாகவும் இருப்பதால், இந்தியா தற்போது பூகோளரீதியான தொற்றுநோயின் மையமாக உள்ளது.

இந்தியா முழுவதும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடைய இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கம் தவறிழைத்திருக்கும் நிலையில் மக்கள் மத்தியில் கோபம் பெருகிவருகின்றது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, நோயைக் குணப்படுத்துவதற்கு தேவையான மிகமுக்கியமான மருந்துகள் இல்லாமை மற்றும் உள்ளே வரும் சடலங்களை சமாளிப்பதற்கு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இருபத்திநாலு மணிநேரமும் உடல்கள் எரிந்துகொண்டிருக்கும் மயானங்களின் அச்சப்படவைக்கும் காட்சிகளும் மக்களை சீற்றமடையச் செய்திருக்கிறது.

“ஒவ்வொரு வீட்டிலும் சடலங்களின் இறுதிச்சடங்குகளில் அவர் (மோடி) தீ வைக்கிறார்” நீனா என்கிற ஒரு பெண் அவருடைய 50 வயது இளைய சகோதரன் பிரவீன் இறந்த துக்கத்தில, அழுதுகொண்டிருந்தார், கேரவன் (Caravan) என்ற இந்தியாவின் வார பத்திரிகையின் யூடியூப் சேனலில் ஏப்ரல் 25 வெளியிடப்பட்ட காணொளியில் பதிவிடப்பட்டது.

மே 1, 2021 சனிக்கிழமை இந்தியா, புதுடெல்லியில் மயானமாக மாற்றப்பட்ட ஒரு பகுதியில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவரின் தகன இறுதிச்சடங்குக்கு உறவினர்கள் ஏற்பாடுகள் செய்கின்றனர். (படம்: AP Photo/Amit Sharma)

வட கிழக்கு டெல்லியின் ஒரு இடமான பழைய சீமாபுரியில் ஒரு மயானத்திலிருந்து ஒரு நேரடி செய்தி அறிக்கையை வெளியிட்ட கேரவன் காணொளியில், பல சடலங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்க இரவு முழுவதும் கோவிட்-19 ஆல் இறந்தவர்களின் சடலங்கள் எரிந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. மயானத்தில் நீனா அவருடைய இறந்த சகோதரனின் சுற்றி மூடப்பட்ட உடலுக்குப் பக்கத்தில் இருந்துகொண்டிருந்த நிலையில் மோடியை கோபமாக சபித்தார், “அவர் நாடுமுழுவதையும் அழித்துவிட்டார், இந்த மோடி எதற்காக எங்களுடைய வாக்குகளை எடுக்கிறார்? மக்களை கொல்வதற்கு அவர் வாக்டெல்லியில் கோவிட்-19குகளை எடுத்துக்கொண்டாரா?” மேலும் அவர் கூறினார் “எங்கள் இறுதிச் சடங்குகளில் அனைத்திலும் அவருடைய அரசியலை அவர் விளையாடப் போகிறாரா? எங்கள் சிதைகள் எரிவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்”.

அழுதுகொண்டிருந்து அந்த பெண் அவருடைய சகோதரனின் மரணத்திற்கு மருத்துவ பற்றாக்குறைகளே காரணமாக இருந்தது என்று துக்கத்துடன் கூறினார். “என்னுடைய இளைய சகோதரனுக்கு ஒரு படுக்கை எடுக்க முடியவில்லை. அவருடன் டெல்லி முழுவதும் அலைந்தோம் ஆனால் அவருக்கு ஒரு படுக்கை பெறமுடியாமல் போய்விட்டது, அவருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. இதற்கு யார் பொறுப்பு? மோடி, டெல்லி அரசாங்கம், யார் பொறுப்பு?”

குறிப்பாக தேசிய தலைநகர் பிராந்தியமான பாதிக்கப்பட்டவர்களின் ஒரு சுனாமியால் நாட்டின் இடிந்து விழும் நிலையிலுள்ள சுகாதார கட்டமைப்பு இருக்கும் நிலையில் இதைப்போன்ற ஒரு நாளில் நடந்த கொடூரமான துயரங்கள் அதிகரித்திருக்கின்றது. மே 1 அன்று, டெல்லியின் பத்ரா மருத்துவமனையில் அதன் மருத்துவ ஆக்ஸிஜன் விநியோகத்தில் எற்பட்ட 80 நிமிட தடையினால் 12 பேர் மரணமடைந்துவிட்டனர்.

மேலும் இறப்புக்களை நிறுத்தமுடியவில்லை என்று மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர், டாக்டர் சுதான்ஷு பங்காட்டா NDTV க்கு கூறியுள்ளார். “இந்த நோயாளிகள் ஆக்ஸிஜன் வழங்கப்படும் அளவு குறைந்ததால் மூச்சுதிணறினார்கள், இத்தகைய நோயாளிகளை பாதுகாப்பது கடினம், அடுத்த 24-48 மணிநேரங்கள் மிகவும் கடினம்... 220 நோயாளிகள் தற்போது ஆக்ஸிஜன் உதவியுடன் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துடனான ஒரு நேர்காணலில் டாக்டர் பங்காட்டா மேலும் கூறினார். “டெல்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது ஆனால் 490 மெட்ரிக் டன் ஒதுக்கப்படுகிறது. அதுவும் ஒருபோதும் வருவதில்லை. எங்களுக்கு (தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சாதாரண சிகிச்சைப் பிரிவு எண்ணிக்கையை சார்ந்து) 6.5 மெட்ரிக் டன் தேவையாக இருக்கிறது ஆனால் பற்றாக்குறையின் காரணமாக வெறும் 4.9 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்குகிறார்கள், இது மிகப்பெரும் நெருக்கும் நெருக்கடியாக இருக்கிறது” என்று கூறினார்.

பல சம்பவங்களில் ஒன்றாக பத்ரா மருத்துவமனை கோர சம்பவம் இருக்கிறது. கடந்தவாரம், ஆக்ஸிஜன் தீர்ந்துபோனதால் டெல்லியில் இருக்கும் ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் 25 கோவிட்-19 நோயாளிகள் இறந்துவிட்டனர்.

டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவருமான அரவிந் கெஜ்ரிவால் கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லிக்கு 380 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் ஒதுக்கப்பட்ட நிலையில் 312 மெட்ரிக் டன் மட்டுமே பெறப்பட்டுள்ளது.

மோடியின் மத்திய அரசாங்கத்திடம் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக, உதவி கேட்டு கெஜ்ரிவால் திரும்ப திரும்ப வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏப்ரல் 1க்கு முன்னரே, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் வரவிருக்கும் பேரழிவை பிரதமர் அலுவலகத்திற்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், ஏப்ரல் 22 ஆம் தேதி வரை, தொழிற்சாலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஆக்ஸிஜனை நாட்டின் நிறைந்துவழியும் மருத்துவமனைகளுக்கு திருப்பிவிடத் தொடங்கவில்லை.

மோடி அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்தவர்களும் அது பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி தலைமையேற்றிருந்தாலும் அவைகளே இந்த பேரழிவுக்கு முழுப் பொறுப்பாளிகளாவார். பொதுமக்களின் சுகாதார பாதுகாப்புக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP ) மிகவும் அற்பத்தொகையாக 1.5 சதவீதத்திற்கு மேலாக செலவு செய்ய ஒதுக்கப்படவில்லை. கெஜிரிவாலின் ஆம் ஆத்மிக் கட்சியின் நிர்வாகமும் மற்ற எதிர்கட்சிகள் தலைமையேற்றிருக்கும் அரசாங்கங்களும் இந்த மோசமான பேரழிவுக்கு குற்றவியல் பொறுப்புள்ள குற்றவாளிகளாக இருக்கிறார்கள். விஞ்ஞான நிபுணர்களிடமிருந்து எண்ணற்ற எச்சரிக்கைகள் வந்திருந்தபோதிலும், 16 மாதங்கள் தொற்றுக்கள் நீண்டிருந்தபொழுதும் மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்குவதற்கு அவைகள் மறுத்துவிட்டன. அத்தியாவசியமற்ற வணிகங்களை மூடுவதற்கோ, இந்த நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக உதவியை வழங்குவதற்கோ மேலும் பெப்ரவரி மத்தியிலிருந்து இந்தியாவின் கோவிட்-19 தொற்றுக்கள் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையிலும் அவசரமாக வேண்டிய பொது சுகாதார நடவடிக்கைகளையோ செய்யாமல் மத்திய அரசாங்கத்தைப் போல மாநில அரசாங்கங்களும் கடுமையாக எதிர்ப்புகாட்டியிருந்தன.

புதிய, அதிக தொற்றுக்கள் மற்றும் ஆபத்தான உறுமாறிய வைரஸுகளாலும் மற்றும் அதிகாரிகளின் மோசமான அலட்சியங்களும் இந்தியா முழுவதும் தொற்றுக்களின் பரவல் வரும் நாட்களிலும் மற்றும் வாரங்களிலும் அதிகரிக்கும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் இருக்கின்றன.

சனிக்கிழமையன்று, தினசரி கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் முதல்தடவையாக 400,000 ஐ தாண்டியிருக்கிறது. அன்று ஒரு உலக சாதனையாக இந்தியா உத்தியோகபூர்வமாக 401,993 புதிய தொற்றுக்களை பதிவுசெய்திருக்கிறது. தற்போதைய பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை திகைப்பூட்டும் வகையில் 3.3 மில்லியனாக இருக்கிறது. தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து இந்தியா பதிவு செய்துள்ள 19.16 மில்லியன் தொற்றுக்களில் ஆறில் ஒரு பங்கைக் இது குறிக்கிறது. சனிக்கிழமை 3,689 இறப்புகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 215,542 ஆக ஆகியிருக்கிறது.

நாசம் விளைவித்துவரும் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேசிய பொதுமுடக்கத்தை விதிப்பதன் மூலம் பெருவணிகங்களின் லாப நலன்களை பலவீனப்படுத்த மாட்டேன் என்று மோடி அவர்களுக்கு உறுதியளித்துள்ளார். ஏப்ரல் 20 ம் தேதி தனது “தேசத்துக்கு ஆற்றிய உரையில்” தனது அரசாங்கம் “நாட்டைப் பொதுமுடக்கத்திலிருந்து காப்பாற்றும்” என்று சபதம் அளித்தார். வைரஸின் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அல்ல. அதைப்போன்று, பொருளாதாரத்தை திறந்து வைத்திருக்கவும் மற்றும் பெரு வணிகங்களுக்கு லாபங்களை அதிகரிக்கும் வகையிலும் பொது முடக்கங்களை ஒரு கடைசி முயற்சியாக மட்டுமே கருதவேண்டும் என்றும் அதற்குப் பதிலாக “மிகச்சிறு அளவிலான கட்டுப்பாட்டுப் பகுதிகளை” ஏற்படுத்த கவனம் செலுத்தவேண்டும் என்றும் மாநில அரசாங்கங்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குபவர்கள் உட்பட வல்லுநர்கள் பலர், வைரஸின் விரைவான பரவலை உடைக்க ஒரே வழி தேசிய பொதுமுடக்கத்தை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். "தொழில்நுட்ப நிபுணர் அமைப்பின் கோவிட்-19 பணிக்குழுவின் சில உறுப்பினர்கள், மத்திய அரசுக்கு ஒரு தேசிய பொதுமுடக்கத்திற்கு" கடுமையாக அழுத்தம் கொடுக்கிறார்கள்" என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பணிக்குழுவின் தலைவர் வி.கே. பால், பிரதமர் மோடிக்கு நேரடியாக அறிக்கை அளிப்பவராவார்.

“கோவிட் -19 பணிக்குழு கடந்த சில வாரங்களாக இதை மிகவும் ஆக்ரோஷமாக சொல்ல முயற்சிக்கிறது. நாங்கள் ஒரு பொதுமுடக்கம் வேண்டும் என்று மேலே உள்ளவர்களிடம் சொல்ல வேண்டும். " என்று பணிக்குழுவின் ஒரு உறுப்பினரை இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கோள் காட்டியுள்ளது. மற்றொரு உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில், "நாங்கள் இப்போது மாநிலங்கள் முழுவதும் சிறு துண்டுகளாக செய்வதைவிட நாடு தழுவிய பொதுமுடக்கம் அவசியம், ஏனெனில் இது எல்லா இடங்களிலும் பரவுகிறது என்ற எளிமையான உண்மையின் காரணமாகத் தான்."

ஒரு தேசிய பொதுமுடக்கத்திற்கு ஆதரவாக இந்தியன் எக்ஸ்பிரஸ் உடன் பேசிய வல்லுநர்கள் தங்கள் கோரிக்கையை ஆதரிக்க முக்கியமான மூன்று காரணிகளை எடுத்துரைத்தனர். அவற்றில் ஒன்று, அதிகப்படியான சுகாதார வல்லுநர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே "வளர்ந்து வரும் கோபம் அதிகரித்து வருகிறது". ஒரு உறுப்பினர் கூறினார், “பரவலை கட்டுப்படுத்த நாங்கள் ஏன் எதுவும் செய்யவில்லை என்று அவர்கள் (மருத்துவர்கள்) கேட்கிறார்கள். எங்களிடம் ஆம்புலன்ஸ் வரிசையாக நிற்கிறது, நோயாளிகள் கெஞ்சுவது, ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் நிரந்தர பற்றாக்குறை என மருத்துவர்கள் மத்தியில் நிறைய அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதை நிறுத்தம் செய்ய வேண்டும். சுகாதாரப் பணியாளர்களிடையே தொற்றுநோயும் அதிகரித்து வருகிறது.”

எக்ஸ்பிரஸ் அறிவித்த மற்றொரு முக்கியமான பிரச்சினை "கிராமப்புற இந்தியாவில் உருவாகி வரும் நிலைமை" ஆகும், இது "அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்." ஒரு பணிக்குழு உறுப்பினர் விரிவாக கூறினார், “அங்கு [கிராமப்புறங்களில்] என்ன நடக்கப் போகிறது என்பது எங்களுக்குத் தெரியாமலிருக்கிறது. முக்கியமான உள்கட்டமைப்புப் பராமரிப்பை மறந்துவிடுங்கள், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் எதுவும் தயாராக இல்லை. நாம் இதை மறுத்துக்கொண்டு வாழ முடியாது.”

மிகப்பெரும் பெரும் செல்வந்தர்களுக்கு கடமைப்பட்டிருக்கும் மோடி அரசாங்கம் பெருநிறுவன லாபங்கள் வங்கிக்குள் பாய்வதை தடுக்கும் பொது முடக்கத்திற்கான கோரிக்கைகளை எதிர்க்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. அதனால் தான் அது இப்போது நாடு பூராவும் நிகழ்ந்து வரும் பேரழிவு குறித்து வாரக்கணக்கான எச்சரிக்கைகளை பிடிவாதமாக உதாசீனப்படுத்தி வருகிறது. உதாரணத்திற்கு, அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அறிவியலாளர்கள் ஆலோசகர்களின் மன்றமான இந்திய சார்ஸ்-கோவ்-2 மரபியல் கூட்டமைப்பு (Indian SARS-CoV-2 Genetics Consortium) அல்லது INSACOG மார்ச் மாத ஆரம்பத்திலேயே இந்திய அதிகாரிகளிடம் இந்த நாட்டில் ஒரு புதிய மற்றும் அதிக தொற்று பரவக்கூடிய “இரண்டுமடங்கு உருமாறிய” கோவிட்-19 வைரஸ் ஆக்கிரமிக்கப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. "எச்சரிக்கை இருந்தபோதிலும், மத்திய அரசு வைரஸ் பரவுவதைத் தடுக்க பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க முற்படவில்லை." என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் பேசிய ஐந்து INSACOG விஞ்ஞானிகளில் நான்கு பேர் புகார் செய்துள்ளனர்.

அரசு நடத்தும் லைப் சயின்ஸ் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் மற்றும் INSACOGஇன் ஒரு உறுப்பினருமான அஜய் பரிதா வை மேற்கோள்காட்டிய ராய்ட்டர்ஸ் மேற்கொண்டு தொடர்ந்தது, “INSACOGஇன் ஆராய்ச்சியாளர்கள் பிப்ரவரி ஆரம்பத்திலேயே முதலில் B.1.617 எனும் இந்திய உருமாறிய வைரஸைக் கண்டுபிடித்தது.” அந்த வைரஸ் உடனடியாக ஒரு மனிதனின் உயிரணுக்குள் ஊடுருவும் மற்றும் உடனடியாக நபரின் நோயெதிர்ப்பு சக்தியை எதிர்க்கும் வைரஸின் புதிய உருமாற்றம் "அதிக விசாரம்" கொண்டது என்பதை வலியுறுத்துகிறது என்ற மன்றத்தின் கண்டுபிடிப்புகளை அது விபரித்து மார்ச் 10 க்கு முன்னரே இந்திய சுகாதாரத் துறையுடன் பகிர்ந்துகொண்ட்டது. அதற்கு மாறாக, இரண்டு வாரங்களுக்கு மேலாக (மார்ச் 24வரை) அதை வெளியிடுவதற்கு சுகாதாரத் துறை தாமதப்படுத்தியது பின்னர் அதனுடைய பத்திரிகையாளர் அறிக்கையில் “அதிக விசாரம்” என்ற வார்த்தையை நீக்கியிருந்தது. இது ஆபத்தை மறைப்பதற்கு வெளிப்படையான ஒரு முயற்சியாக இருந்துள்ளது.

INSACOGஇன் கண்டுபிடிப்புகள் மீது அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் விரோதத்திற்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டது. “அதிகாரிகள் ஒரு கொள்கை தயாரிக்கும்போது அவர்கள் ஆதாரத்திற்கு போதுமான கவனம் செலுத்துவதில்லை.” என்று அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஷாஹித் ஜமீல் புகார் கூறினார். “கொள்கை ஆதாரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் மற்றும் வேறு வழியில் இருக்கக்கூடாது. கொள்கையை இயக்குவதற்கு அறிவியல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதால் நான் கவலைப்படுகிறேன்.” என்று அவர் மேலும் கூடுதலாக கூறினார்.

கடந்த வசந்தகாலத்தில் ஏற்பட்ட தொற்றுக்களின் ஆரம்ப கட்டங்களிலிருந்து உலக சோசலிச வலைத் தளம் மட்டுமே (wsws.org) வலுவாக வாதிட்டது, அதாவது உத்தியோகபூர்வ சொல்லாட்சி எதுவாக இருந்தாலும், மோடி அரசாங்கமும் மற்றும் இந்திய ஆளும் உயரடுக்கினரும், உலகெங்கிலும் உள்ள அவர்களது சகாக்களும் கடைப்பிடித்த கொள்கையானது, “சமூக நோய் எதிர்ப்பு சக்தி” (“herd immunity”) என்ற கொலைகார, போலி அறிவியல் கொள்கையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

மோடி இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதின் மூலம், இந்தியாவின் பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளின் மற்றும் பில்லியனர்களின் இலாப நலன்களின் சார்பாக செயல்பட்டு பொருளாதாரத்தை திறந்த நிலையில் வைத்திருக்கிறார், இதனால் கொடிய வைரஸ் நாடு முழுவதும் தடையின்றி பரவ அனுமதிக்கப்படுகிறது. மேலும், இது பெருமளவு மக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்ற முழு அறிவோடு செய்யப்பட்டுள்ளது. மே மாதத்தின் இறுதியில், பாஜக அரசாங்கம் பொது முடக்க நடவடிக்கைகளை கடுமையாக பின்னுக்குத் தள்ளுகிறது, மோடியின் “சுகாதார” ஆலோசகர்களில் ஒருவரான ஜெய்பிரகாஷ் முலி "குறைந்தது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான" இந்தியர்கள் தொற்றுநோயால் இறக்கப்போகும் வாய்ப்பைக் மட்டுமதிப்பின்றி நிராகரித்தார், "இறப்பு குறைவாக இருக்கிறது, இளைஞர்கள் வெளியே சென்று வேலை செய்யட்டும்" என்று கூறினார்.

Loading