இந்தியா கடுமையான தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில், அங்கு நாளாந்தம் பெரும்பாலும் 4,000 கோவிட்-19 இறப்புக்கள் பதிவாகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தியா முழுவதும் தற்போது கோவிட்-19 நோய்தொற்றுக்கள் விரைந்து அதிகரித்து வரும் சூழ்நிலை ஒட்டுமொத்த கோவிட்-19 நோய்தொற்று காலத்தில் இதுவரை அங்கு நிகழவில்லை. நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்று பாரிய உயர்வாக 412,618 என்ற புதிய உச்சத்தை எட்டியது, இது உலகளவில் பதிவான 850,000 நோய்தொற்றுகளில் கிட்டத்தட்ட பாதியளவாக உள்ளது.

மே 5, 2021, புதன்கிழமை, இந்தியாவின் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஒரு கிரானைட் குவாரியில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி தகன மைதானத்தில் கோவிட்-19 ஆல் இறந்தவர்களை தகனம் செய்கையில் சிதைகளின் மீது ஒரு தகனத் தொழிலாளி எரிபொருள் தெளிக்கிறார். (AP Photo/Aijaz Rahi)

அதேபோல, இந்நாட்டில் இதுவரை பதிவாகாத அளவிற்கு நேற்று உச்சபட்சமாக 3,980 நாளாந்த கொரோனா வைரஸ் இறப்புக்கள் பதிவாகின. அனைத்து வகைகளில் பார்த்தாலும், இந்த எண்ணிக்கைகள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டவையே, அதிலும் இந்த இறப்புக்களை ஆவணப்படுத்தும் பணி இந்தியாவின் பழமையான மற்றும் செயலிழந்து போன உத்தியோகபூர்வ பதிவகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

உலகளவில், கோவிட்-19 நோய்தொற்றுக்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 160 மில்லியனை நெருங்குகிறது, அதேவேளை இறப்புக்கள் 3.26 மில்லியனாக உள்ளது. தொடர்ச்சியாக 10 வாரங்களாக, உலகம் முழுவதும் கோவிட்-19 நோய்தொற்றுக்கள் சீராக அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் இறப்புக்களின் எண்ணிக்கை முன்னைய வாரத்தை விட 0.13 சதவிகிதம் மட்டுமே அதிகரித்திருந்தமை ஒரு புதிய பீடபூமியை எட்டியது போலத் தோன்றியது.

என்றாலும், இறப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நேற்று, உலகளவில், 14,567 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 4,418 இறப்புக்கள் தென் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன, பிரேசிலும் பல இலத்தீன் அமெரிக்க நாடுகளும் முடிவில்லாத இறப்புக்களைத் தொடர்ந்து, புதிய நோய்தொற்றுக்களின் தொடர்ச்சியான கடும் எழுச்சிகளையும் எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில், வட அமெரிக்காவும் ஐரோப்பாவும் முறையே 1,303 மற்றும் 2,809 இறப்புக்களை பதிவு செய்துள்ளன, இவை சில மாதங்களுக்கு முன்னர் நிலவிய உச்சங்களை விட குறைவானவையாகும்.

ஆசியா 5,713 இறப்புக்களை பதிவு செய்துள்ளது, இந்த மோசமான புள்ளிவிபரத்திற்கு இந்தியா கடுமையாக பங்களித்துள்ளது, அதாவது ஐரோப்பாவும் அமெரிக்காவும் தொற்றுநோயின் மையமாக தோன்றிய, மேலும் ஒப்பீட்டளவில் ஏழை நாடுகள் குறைவாக பாதிக்கப்பட்டிருந்ததன் போதான, தொற்றுநோய் காலத்தின் முதல் ஆண்டைப் போலல்லாமல் முன்னேற்றங்களில் முற்றிலும் தலைகீழான வளர்ச்சியை இந்தியா எதிர்கொண்டதே அதற்கு காரணம்.

அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் அதிர்ஷ்டத்தை மாற்றியமைப்பது என்பது, எந்த வகையிலும் தந்திரோபாயங்களை மாற்றுவதால் அல்லது விஞ்ஞான மற்றும் முக்கியமான பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்துவதால் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. மாறாக, ஏகாதிபத்திய மையங்கள் நன்கு வளர்ச்சியடைந்திருந்த மருந்துத் தொழில்களை தாம் எடுத்து நடத்துவதை பயன்படுத்திக் கொண்டன, அவை பாரிய அரசாங்க நிதியுதவியுடன், ஆரம்பத்தில் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக தடுப்பூசி விநியோகத்தை மேற்கொண்டன.

தடுப்பூசி தேசியவாதத்தின் அடுத்து வரவிருக்கும் கொள்கை மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்து தொற்றுநோய் முற்றிலும் ஒழிந்தது என்று அறிவிப்பதாகும், அதேவேளை இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் (அத்துடன் மேம்பட்ட பிராந்தியங்களின் ஏழ்மை பிரிவுகளிலும் உட்பட) நோய்தொற்றின் மிகவும் சோகமான மற்றும் அச்சுறுத்தலான முன்னேற்றங்கள் தொடர்கின்றன.

உலகெங்கிலுமாக, முக்கியமாக அதிக வருவாய் உள்ள நாடுகளுக்கு சாதகமாக, இதுவரை 1.21 பில்லியன் அளவு (dose) கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்கா 250 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்கியுள்ளது, அதாவது அதன் மக்கள்தொகையில் 32.3 சதவிகிதம் பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் குறைந்தபட்சம் 45 சதவிகிதத்தினர் ஒரு அளவு தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

விநியோக பிரச்சினைகளும் அரிதான தடுப்பூசி தொடர்புபட்ட இரத்த உறைவு சிக்கல்களும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் நோய்தடுப்பு முயற்சிகளை குழப்பினாலும், சமீபத்திய முயற்சியில் இதுவரை 160 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன, அதாவது 100 பேரில் 35 பேருக்கு மேற்பட்டவர்கள் என்ற மக்கள்தொகை விகிதத்தில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியா அதன் கணிசமான மருந்துத் தொழிலில் இருந்து 160 மில்லியன் தடுப்பூசி அளவுகளை வழங்கியிருந்தாலும், இது மக்கள்தொகையில் வெறும் 10 சதவிகிதத்திற்கு மேலானதே. இங்கு 30 மில்லியன் பேருக்கு மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, இது மொத்த மக்கள்தொகையில் வெறும் 2 சதவிகிதத்திற்கு மேலானதாகும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இரண்டிலும், பாரிய தடுப்பூசி வழங்கல் மற்றும் பெரியளவில் மக்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படுவது ஆகியவற்றின் கலவை என்பது, மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் SARS-CoV-2 வைரஸூக்கான நோயெதிர்ப்பு சக்தியை குறிப்பிட்ட அளவுக்கு பெற்றுவிட்டால், வைரஸ் “எளிதில்” தொற்றிக் கொள்பவர்களின் எண்ணிக்கையையும், மற்றும் புதிய, பெரியளவிலான நோய்தொற்று வெடிப்புக்களின் எழுச்சியையும் குறைக்க முடியும் என்பதாகும்.

குறிப்பிடத்தக்க வகையில், ஏப்ரல் 14, 2021 நிலவரப்படி அமெரிக்காவில் அநேகமாக 115 மில்லியன் மக்கள் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டிருந்தனர், இது உத்தியோகபூர்வ எண்ணிக்கை 30 முதல் 35 மில்லியன் என்பதை விட மூன்று மடங்கிற்கும் அதிகமானது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) சமீபத்தில் மதிப்பிட்டுள்ளன. 100 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி போடப்பட்டவர்களுடன் சேர்ந்து, மற்றும் இரு குழுக்களுக்கு இடையில் பகுதி ஒத்திருக்கும், இதன் பொருள் அமெரிக்க மக்கள்தொகையில் குறைந்தது பாதி பேர், மற்றும் அனைத்து பெரியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 க்கு எதிரான சில நோயெதிர்ப்பிகளை கொண்டுள்ளனர் என்பதாகும்.

அமெரிக்காவின் சில பிராந்தியங்களில் நன்கு அறியப்பட்ட நோய்தொற்றின் சரிவுகளுக்கு இது தான் அடிப்படை காரணம், என்றாலும் கூட புளோரிடா, டெக்சாஸ், மிச்சிகன் மற்றும் ஏனைய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க நோய்தொற்று வெடிப்புக்கள் தொடர்கின்றன. ஒரு நேரத்தில் அமெரிக்காவின் தொற்றுநோய் மையமாக இருந்த தெற்கு கலிஃபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணம் நேற்று 170 நோய்தொற்றுக்களையும் 15 இறப்புக்களையும் மட்டுமே பதிவு செய்துள்ளது.

என்றாலும், உலக மக்கள்தொகையில் அண்ணளவாக 18 சதவிகிதத்தைக் கொண்ட இந்தியாவில், அதன் மக்கள்தொகையில் பெரும்பகுதியினருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படாமல், முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். தற்போது, இந்தியாவில் 21.48 மில்லியன் நோய்தொற்றுக்களும் 234,000 இறப்புக்களும் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன.

உள்நாட்டுக்கான முன்னுரிமைக்கு கவனம் செலுத்த தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திவைத்தாலும், விநியோக சிக்கல்கள் விளைவிக்கும் பிரச்சினைகளின் காரணமாக தடுப்பூசி திட்டம் போராட்டத்தில் உள்ள நிலையில், இந்த சிகிச்சைகள் குறித்து மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகள் உக்கிரமடைவதால் அது தேசிய தடுப்பூசி போர்களின் விரிவாக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. ரஷ்யாவின் Sputnik V தடுப்பூசியை பயன்படுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது, இந்த வாரம் அதற்கான முதல் கட்ட மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

புது டெல்லி மருத்துவரும், தடுப்பூசிகள், பொதுக் கொள்கை, மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளில் நிபுணருமான டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா, “திட்டமிடப்பட்ட வகையில் மருந்து விநியோகம் கிடைத்திருந்தாலும், தடுப்பூசி வழங்கலை பூர்த்தி செய்யும் வகையில் அநேகமாக எந்தவொரு அமைப்பும் தடுப்பூசிகளை எதிர்பார்க்கலாம் என்றல்லாமல், மிகப்பெரியளவு மக்கள்தொகையினருக்கு தடுப்பூசிகளை வழங்கும் ஏற்பாட்டை இந்தியா தொடங்கியுள்ளது. இது அடிப்படையில் ஒரு வரையறுக்கப்பட்ட விநியோகம், மற்றும் முழுமையான விநியோகத்தை கவனத்தில் கொள்ளாத தடுப்பூசிக் கொள்கை ஆகியவற்றின் விளைவாகும். இந்தியாவில் 940 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவது தற்போது தேவைப்படும் நிலையில், எந்தவித மேம்பட்ட திட்டமிடலும் அந்த வகையான விநியோகத்தை உறுதிப்படுத்தியிருக்க முடியாது” என்று புதன்கிழமை CNBC க்கு தெரிவித்தார்.

கோவாக்சின் தடுப்பு மருந்தை தயாரிக்கும் Serum Institute of India மற்றும் பாரத் பயோடெக் உட்பட, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தித் திறனை கொண்டிருந்தாலும் கூட, மில்லியன் கணக்கான கோவிட்-19 தடுப்பூசி அளவுகளை ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் ஏற்றுமதி செய்ய அனுமதித்ததற்காக இந்திய அரசாங்கம் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த இரண்டு உற்பத்தியாளர்களும் இணைந்து, மாதத்திற்கு 100 மில்லியன் அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றனர்.

அஸ்ட்ராசெனேகா கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி, அதார் பூனவல்லா (Adar Poonawalla), தடுப்பூசி பற்றாக்குறை ஜூலை இறுதி வரை தொடரும் என்று பைனான்சியல் டைம்ஸூக்கு தெரிவித்தார். மேலும், எங்கள் நிறுவனம் அதன் திறனை முன்னரே அதிகரிக்கவில்லை, ஏனென்றால் “எங்களுக்கு எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை என்பதுடன், ஆண்டுக்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை தயாரிக்க வேண்டியிருக்கும் என்றும் நாங்கள் நினைக்கவில்லை” என்றார்.

நிறுவனம் தடுப்பூசி விலையை கடுமையாக உயர்த்துவதற்கு எதிராக விமர்சனம் எழுந்த பின்னர், அவர் உடனடியாக இவ்வாறு ட்வீட் செய்தார்: “@SerumInstIndia சார்பாக ஒரு பரோபகார சமிக்ஞையாக, உடனடியாக மாநிலங்களுக்கான ஒரு அளவு தடுப்பூசியின் விலை ரூபாய் 400 ஐ 300 ஆக குறைக்கிறேன்.” இரண்டு வாரங்களுக்கு முன்னர், மூத்த அரசியல்வாதியும், பிரதான எதிர்க்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ், “ஒரு அளவு கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு (அஸ்ட்ராசெனேகா தடுப்பூசி) மத்திய அரசு தொடர்ந்து ரூபாய் 150 செலுத்தும். இது கூட்டுறவு கூட்டாட்சி முறை அல்ல. இது ஏற்கனவே தள்ளாடும் மாநில நிதியை மேலும் வறண்டுபோகச் செய்யும். மிகக் கொடுமையானது!” என்று அவர் தனது கண்டனத்தை ட்வீட் செய்திருந்தார்.

ஒரு பரோபகார சமிக்ஞையை அதிகம் குறிப்பிடுவதாக. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை விட உண்மையான இறப்பு எண்ணிக்கை ஐந்து முதல் பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ள போதிலும், இலாபங்கள் பற்றிய கவலைகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த எதிர்வினைகளும் முன்னேற்றங்களும் இந்திய முதலாளித்துவத்தின் ஒரு பகுதியாகும் என்பதுடன், ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அமைப்பினுள் அதன் அடிபணிந்த பாத்திரத்தின் குணாம்சங்களாகும்.

தற்போது சட்ட ரீதியாகவும் அத்துடன் உற்பத்தி செய்யக்கூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்த மனித உழைப்பு ரீதியான தடைகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்ற, இந்த தடுப்பூசிகளுக்கு ஒரு பரந்த உற்பத்தி தளத்தை உருவாக்குவதையும், மற்றும் அவற்றின் விநியோகத்தையும் எளிதாக்க, கோவிட்-19 தடுப்பூசிகள் தொடர்புபட்ட அனைத்து அறிவுசார் சொத்து பாதுகாப்புகளையும் தற்காலிகமாக கைவிடுவது குறித்த பிரச்சினைக்கு உலக வர்த்தக அமைப்பின் பொது கவுன்சில் பொறுப்பேற்றுள்ளது. இதற்கு உலக சுகாதார அமைப்பின், மற்றும் கொரோனா வைரஸூக்கு நோயெதிர்ப்பு ரீதியாக பலவீனமாக இருக்கும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி போட தீவிரமாக எதிர்நோக்கியிருக்கும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவு உள்ளது, மேலும் இந்நாடுகள் அவற்றின் வர்த்தகத்தை முழுமையாகத் திறக்க வழியின்றி பொது சுகாதாரத் தடைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

பைடென் நிர்வாகம் “அறிவுசார் சொத்து பாதுகாப்புகளை தீவிரமாக நம்புகிறது, ஆனால் இந்த பெருந்தொற்றை இல்லாதொழிக்கும் சேவையை முன்னிட்டு, கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான அத்தகைய பாதுகாப்புகளை கைவிடுவதை ஆதரிக்கின்றார்” என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி கேத்ரின் தை அறிவித்தார். எவ்வாறாயினும், அத்தகைய நடவடிக்கைகள் இறுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் கூட, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், தடுப்பூசிகள் வேகமாக தயாரிக்கப்பட்டாலும், பேச்சுவார்த்தைகளும் உண்மையான செயலாக்கமும் மீண்டும் மீண்டும் தாமதங்களையும் அதிகாரத்துவ தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிவர்.

தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து நின்றனர். Biotechnology Innovation Organization வர்த்தக குழுவின் தலைமை நிர்வாகி டாக்டர் மைக்கேல் மெக்முர்ரி-ஹீத் (Dr. Michelle McMurry-Heath), “தடுப்பூசி தேவைப்படும் நாடுகளுக்கு மருந்து உற்பத்திக்கான கலவை கூறுகள், பாதுகாப்புகள், மற்றும் தேவைப்படும் கணிசமான தொழிலாளர் சக்தி ஆகியவை இல்லாத நிலையில் அவர்களிடம் ஒரு செய்முறை புத்தகத்தை மட்டும் ஒப்படைப்பது தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு உதவாது” என்று AP க்கு கூறினார். அமெரிக்காவின் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்கள் (Pharmaceutical Research and Manufacturers of America) நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிறைவேற்று அதிகாரியுமான ஸ்டீபன் உப்ல் (Stephen Ubl), “அமெரிக்காவின் முடிவு பொது மற்றும் தனியார் கூட்டாளர்களிடையே குழப்பத்தையே விதைக்கும், அத்துடன் ஏற்கனவே வலுவிழந்த விநியோகச் சங்கிலிகளை மேலும் பலவீனப்படுத்தி, போலி தடுப்பூசிகளின் பெருக்கத்தை தீவிரமாக வளர்க்கும்” என்று குறிப்பிட்டார்.

Loading