"பயணக் கட்டுப்பாடுகளை" மீறியதாகக் கூறி எறாவூரில் பொதுமக்கள் மீது இராணுவத் துன்புறுத்தல்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வார இறுதியில், எறாவூர் நகரில் ஆயுதமேந்திய இராணுவக் குழுவினரால் பல பொதுமக்களை சித்திரவதை செய்யும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தன. 'பயணக் கட்டுப்பாடுகளை மீறினர்' என்ற குற்றத்திற்காக கைகளை உயர்த்தி நடைபாதையில் மண்டியிடுமாறு இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் என்று அழைக்கப்படுவதை அமல்படுத்தும் போர்வையில், பொதுமக்கள் மீது நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பொலிஸ்-இராணுவ மிரட்டல்களின் கொடூரதை காட்டும் ஒரு சம்பவம் மாகும். இன்னமும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில், இதுபோன்ற செயல்கள் இடைவிடாமல் நடக்கின்றன.

எறாவூர் நகரில் இராணுவத்தால் மண்டியிடப்பட்டுள்ள பொதுமக்கள்

எவ்வாறெனினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரந்தளவு வெளிச்சத்திற்கு வந்தவுடன், இது சம்பந்தமாக ஒரு அறிக்கையை வெளியிட இராணுவம் கட்டாயப்படுத்தப்பட்டது. 'இராணுவத்தின் சில உறுப்பினர்களின் தவறான நடத்தை என்று கூறப்பட்ட' இந்த சம்பவம், 'இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கப்படுத்துகிறது' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ அறிக்கை குறித்து செய்து வெளியிட்ட லங்கதீபா செய்தித்தாள் படி, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இராணுவக் குழுவுக்கும், அதிகாரிக்கும் உடனடியாக அமல்படுத்தப்படும் வகையில் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 'சம்பவம் நடந்தவுடன், இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் இராணுவ பொலிஸ் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்” என்றும் விசாரணையின் பின்னர் குறித்த படைக் குழு மீது “அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும்' என்று இராணுவப் பேச்சாளர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி நகரத்தில் சுற்றித் திருந்தார்கள் என்றும், நகரத்தின் நகராதிபதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களைப் பற்றி அவதானிக்குமாற இராணுவத்திடம் கேட்டுக்கொண்டார் என்றும் அவர் கூறியது, இந்த நடவடிக்கை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையை நியாயப்படுத்த ஒரு மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும்.

சம்பவத்தில் துன்புறுத்லுக்கு உள்ளான இஸ்மாயில் மர்ஸூ, 44, தனது நீரிழிவு நோய்க்கான உணவு மற்றும் மருந்து மற்றும் அரிசி வாங்குவதற்காக தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இராணுவத்தால் பிடிக்கப்பட்டதாக” கூறினார்.

'நான் எனது வெற்று மருந்து பெட்டியைக் காட்டிய போதிலும், நான் என்ன சொன்னாலும், படையினர் என்னை கைகளை உயர்த்தி, மற்றவர்களுடன் மண்டியிடும்படி கட்டளையிட்டனர். நான் ஒரு நோயாளி என்றும், நோயாளிகளுக்கு மருந்து பெற வெளியே செல்ல அனுமதி உண்டு என்றும் அவர்களுக்கு விளக்க முயன்ற போதிலும், அவர்கள் என்னை ஒரு மிருகத்தைப் போல தொடர்ந்து அடித்துக்கொண்டே போனார்கள்” என்று அவர் தனது அனுபவத்தையும் இந்து பத்திரிகைக்கு விவரித்தார்.

ஜூன் 8 அன்று, யாழ் தினக்குரல் இதேபோன்ற மனிதாபிமானமற்ற செயலைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாண மாவட்டத்தில் புன்டாலைகட்டுவான் வடக்கில் உள்ள கப்பன்புலா கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. எனவே அவர்கள் காலை கடனுக்காக அருகிலுள்ள பனை காட்டுக்குச் செல்கிறார்கள். ஜூன் 7 அன்று காலையில், ஒரு நபர் காலை கடனுக்காக சென்ற போது, பாதுகாப்புக் குழுவினர் அவரைத் தடுத்து, 'நீங்கள் எங்கே போகிறீர்கள்?' என்று கேட்டனர். அவருக்கு பதில் சொல்ல அனுமதிக்காமல், பின்னால் இருந்து வந்த மற்றொரு அதிகாரி அவரை ஒரு கேபிள் மூலம் தாக்கி, 'வீட்டிற்கு ஓடுங்கள்' என்று கூறினார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர் மேலும் கூறியதாவது: “போரின்போது எனது காலில் காயம் ஏற்பட்டது. அகற்றப்படாத ஒரு துப்பாக்கி ரவை தலையில் இன்னும் உள்ளது. இதுபோன்று போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் எங்களுக்கு ஒரு கழிப்பறை கட்டக் கூட முடியாதுள்ளது. அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை, எனவே எங்களுக்கு காட்டுக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் என்னைத் தாக்கியதில் நான் மிகுந்த வருத்தப்படுகிறேன்.”

மனித வாழ்க்கைக்கு மேலாக பெரும் முதலாளிகளின் இலாபத்துக்கு முன்னிரிமை கொடுத்துள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கையே இந்த தொற்றுநோய் பரவுவதற்கான உண்மையான காரணம். அந்தக் கொள்கையின் அடிப்படையில், அத்தியாவசியமற்ற பொருட்களைக் கூட தொடர்ந்தது உற்பத்தி செய்து, தொற்றுநோயை பரப்பியது அரசாங்கமே அன்றி, பொது மக்கள் அல்ல.

தீவு முழுவதும் தொற்றுநோய் பரப்பும் மையங்களாக மாறியுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் உட்பட அனைத்து வேலைத் தளங்களும் முழு அரச அனுசரணையுடன் செயல்படுவதோடு, ஏழை, அற்ப தினசரி வருமானத்தில் வாழ்க்கை ஓட்டும் ஏழைகள் வாழ்வாதாரத்தை தேடி வீதியில் இறங்கும் போது பொலிசாரால் கைது செய்யப்படுகின்றனர். பேரழிவுக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்துவதன் மூலம் தொற்றுநோய் பரவுவதற்கு அவர்களே பொறுப்பு என முதலாளித்துவ ஊடகங்கள் உலகிற்குக் காட்டுகின்றன.

கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் தலைவராக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உட்பட முழு இராணுவமும் பொலிசும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு அன்றி, அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கையை முன்னெடுக்கவே செயல்படுகின்றன. இப்போது, ஒட்டு மொத்த அரசாங்கமும், சுகாதார நிபுணர்களை வெளிப்படையாக மிரட்டி அவர்களோடு மோதலுக்குச் சென்றுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதலீட்டாளர்களின் மாநாட்டில், ஜனாதிபதி இராஜபக்ஷ, தனது அரசாங்கம் 'முதலீட்டாளர்களுக்கு ஆதரவான-வணிக சார்பு அரசாங்கம்' என்று பெரிய முதலாளிகளுக்கு முன் மீண்டும் வலியுறுத்தினார். அவருடன் சேர்ந்து, இராணுவத் தளபதி சில்வாவும், 'கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகள் விதித்து இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை மூடுவதற்கு நாங்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்' என்றார்.

ஜனாதிபதி இராஜபக்ஷ அத்தியாவசிய சேவை ஆணைகளை பிறப்பித்து, சுகாதாரத் துறை உட்பட பல அரசாங்க துறைகளில் வேலை நிறுத்தங்களை சட்டவிரோதமாக்கியுள்ளதுடன் தேவை ஏற்படின் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலைக்கு இழுத்துச் செல்லும் நோக்கில் ஆடைத் தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டங்கள் உட்பட தனியார் துறையிலும் அத்தகைய கொள்கையை பிரகடனப் படுத்தாமல் அமுல்படுத்தியுள்ளார்..

அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால், அரசாங்கம் இந்த மாதத்தில் அனைத்து வாழ்க்கை செலவுகளையும் உயர்த்தக் கூடியவாறு எண்ணெய் விலையை கணிசமாக உயர்த்தியது. இது தொழிலாள வர்க்க ஒடுக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பதற்கு மேலும் களம் அமைத்தது.

இராணுவ அடிப்படையிலான ஜனாதிபதி சர்வாதிகாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு ஜனாதிபதி இராஜபக்ஷ தீர்வு காண முயல்கிறார். இது பொலிஸ்-இராணுவ வன்முறையின் அதிகரிப்பானது, தீவிரமாகிவரும் சமூக கோபம் வெடிப்பதைத் தடுக்க, பொதுமக்களை அச்சுறுத்துவதற்கான ஒரு திட்டத்தின் பகுதியாகும்.

இந்த பின்னணியில், சட்ட நட்டிக்கை இன்றி சந்தேக நபர்களை படுகொலை செய்யும் அலைகளை பொலிசார் மீண்டும் கட்டவிழ்த்து விட்டுள்ளதோடு, இந்த மாதத்தில் ஐந்து சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஏறாவூர் பொலிஸ் காவலில் இருந்த விதுஷன் என்ற 21 வயது இளைஞன் கொல்லப்பட்டார். “போக்குவரத்து தடைகளை மீறியதற்காக” இருவர் பொலிஸ் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டனர்.

இந்த பொலிஸ்-இராணுவ வழிமுறைகள், கொழும்பு அரசாங்கத்தால் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின்போது, தமிழ் மக்களுக்கு எதிராக அபிவிருத்தி செய்த அடக்குமுறை பொறிமுறையினுள் கட்டியெழுப்ப ப்பட்டவை ஆகும். இப்போது இந்த அடக்குமுறை சாதனம், ஒட்டு மொத்த பொது மக்களையும் இலக்காகக் கொண்டுள்ளது.

தொற்றுநோயை ஒரு பேரழிவு நிலைக்கு அதிகரிக்க அனுமதித்த அரசாங்கம், இராணுவமயமாக்கல் துரிப்படுத்தப்படுவது சம்பந்தமாக மக்கள் மத்தியில் கோபத்தைத் தூண்டியுள்ளது. எறாவூரில் படையினர் செய்த நடவடிக்கைகள், இராணுவ சிப்பாய்களின் பிழை என ஒப்புக் கொண்டு இராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பதானது, பிரதானமாக இந்த கோபத்தைத் திசைதிருப்பும் நோக்கிலானதாகும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய பிடையினருக்கு 'கடுமையாக தண்டனை கொடுக்கப்படும்' என்ற கதைகளும் பொய்யானவை ஆகும். ஜனாதிபதி இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடனேயே, போர்க்குற்றங்களில் தண்டனை பெற்ற மிருசுவில் படுகொலையாளி சுனில் ரத்நாயக்க ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். ஒரு குழுவினரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட அட்மிரல் வசந்தா கரன்னகொட மீதான வழக்கு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், போர்க்குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

Loading