கோவிட்-19 தொற்றுநோயால் 120 மில்லியன் மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்பட்டனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை (UN) அறிக்கையின்படி, கோவிட்-19 தொற்றுநோயால் உலகளவில் நான்கு மில்லியன் இறப்புக்கள் நிகழ்ந்ததற்கு கூடுதலாக, 119-124 மில்லியனுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் மீண்டும் வறுமை மற்றும் நீண்டகால பசிக் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர், மேலும் தொற்றுநோயால் 255 மில்லியன் முழுநேர வேலைகள் இழக்கப்பட்டுள்ளன.

இந்த புள்ளிவிபரங்கள் ஐ.நா.வின் Sustainable Development Goals Report 2021 இல் இருந்து பெறப்பட்டது, இது, வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் தொற்றுநோய் பெரும் பின்னடைவை உருவாக்கியுள்ளது எனக் கூறியது. அறிக்கையை வெளியிடுகையில், ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளர் லியு ஜென்மின் (Liu Zhenmin), “தொற்றுநோய் பல ஆண்டுகால, அல்லது தசாப்த கால வளர்ச்சிப் போக்கை நிறுத்திவிட்டது, அல்லது தலைகீழாக்கிவிட்டது” என்று கூறினார்.

ஜூலை 17, 2020, வெள்ளிக்கிழமை, லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹம்ரா வணிக வீதியில் தரையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு வீடற்ற லெபானியரை ஒரு பெண் பார்க்கிறார். (AP Photo/Hassan Ammar)

தொற்றுநோய்க்கு முன்னர் 700 மில்லியன் மக்கள் பசி பட்டினியில் இருந்தனர் என்பதுடன், 2 பில்லியன் பேர் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய் காலத்தின் போது மேலும் 83-132 க்கு இடைப்பட்ட மில்லியன் மக்கள் பசிக் கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என ஐ.நா. தரவு காட்டுகிறது.

தொற்றுநோய் சுகாதார பாதுகாப்பு வளர்ச்சியை நிறுத்தியது அல்லது தலைகீழாக்கியது என்பது கோவிட்-19 ஐ விஞ்சி பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கியதானது அதிகரித்து வந்த ஆயுட்கால எதிர்பார்ப்பை குறைத்துவிட்டது. இதற்கிடையில், உலகின் பல பகுதிகளில் துல்லியமான தரவுகள் கிடைக்காததால் இறப்பு எண்ணிக்கைகள் மற்றும் தொற்றுநோயின் உண்மையான தாக்கம் பற்றிய விபரங்கள் இன்னும் கூட முழுமையானதாக இல்லை.

தொற்றுநோய் நாடுகளுக்குள்ளேயும், நாடுகளுக்கு இடையிலும் ஏற்றத்தாழ்வுகளை தீவிரப்படுத்துவதுடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களையும் மிக வறிய நாடுகளையும் கடுமையாக பாதிக்கிறது. கடந்த ஆண்டு உலகின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழை மக்கள் மீது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய முன்நிகழ்ந்திராத மற்றும் பேரழிவுகரமான தாக்கத்தின் அளவை ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்துகிறது.

இந்த அறிக்கை உலகளவில் பதினேழு குறியீடுகளின் நிலையை ஆராய்ந்து, ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் கையெழுத்திட்ட முன்னுரையில், “ஓராண்டுக்கும் மேலாக உலகளவில் பரவி வரும் தொற்றுநோயினால், மில்லியன் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன, மனித மற்றும் பொருளாதார இழப்பு தொடர்புபட்ட எண்ணிக்கைகள் முன்நிகழ்ந்திராத வகையில் அதிகரித்துள்ளன, மேலும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான மீட்பு முயற்சிகள் இதுவரை சீரற்றதாகவும், சமமற்றதாகவும் மற்றும் போதாததாகவும் உள்ளன” என்று குறிப்பிடுகிறது.

ஆராயப்பட்ட ஏனைய குறியீடுகளில், பாலின சமத்துவமின்மை அதிகரிப்பு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரக் குறைபாடு, மலிவான மற்றும் சுத்தமான எரிசக்தி குறைபாடு, உள்கட்டமைப்பு முதலீடுகளில் ஏற்பட்ட குறைவு மற்றும் குழந்தைகளை சுரண்டுவதில் உள்ள தீவிரம் ஆகியவை அடங்கும்.

ஐ.நா.வால் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வரையறுக்கப்பட்டு, ஒவ்வொன்றையும் 2030 ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு திட்டமிடப்பட்டதான, பதினேழு நிலையான வளர்ச்சி இலக்குகளில் (Sustainable Development Goals-SDGs) ஒவ்வொன்றும், கடந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க சீரழிவு நிகழ்ந்ததை காட்டியது. 68 பக்க ஐ.நா. அறிக்கையில் “முதலாளித்துவம்” என்ற சொல் எங்கும் காணப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் உலகின் பில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொண்ட பேரழிவுகர நிலைமைகளின் சுருக்கமானது, கோவிட்-19 சுகாதார நெருக்கடிக்கு இலாப நோக்கு அமைப்புமுறையும் ஆளும் ஸ்தாபகமும் பதிலிறுத்தது பற்றிய குற்றச்சாட்டாகும்.

உலக மக்கள்தொகையின் எந்தவொரு அடிப்படை சமூக தேவையையும் நிறைவேற்ற இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஸ்தாபிக்கப்பட்டதும் மற்றும் மேலாதிக்க ஏகாதிபத்திய சக்தியான அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றதுமான ஒரு உலகளாவிய முதலாளித்துவ நிறுவனமான ஐ.நா. தாமே வெளியிட்ட திவால்நிலை அறிக்கையாக கூட இந்த தரவு உள்ளது.

தொற்றுநோய் காலம் முழுவதும் செல்வ சமத்துவமின்மை அதிகரிப்பது பற்றி ஐ.நா. குறிப்பிட்டாலும், நிதிய உயரடுக்கு பெரும் செல்வத்தை குவிப்பது மற்றும் தொற்றுநோயின் போது மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் எண்ணிக்கை பெருகுவது பற்றி எதுவும் விவாதிப்பதை ஐ.நா. கவனமாக தவிர்க்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கினர், தொற்றுநோய்க்கு முன்னர் அவர்கள் வைத்திருந்ததை விட இப்போது சமூகத்தின் செல்வத்தில் ஒரு பெரும் பங்கை தங்களுக்காக பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டனர் என்பதே உண்மை. முதலில் மத்திய வங்கிகளால் நிதிச் சந்தைகளுக்குள் டிரில்லியன்கள் பாய்ச்சப்பட்டு தூண்டப்பட்டதான பணக்காரர்களின் இந்த செல்வ அதிகரிப்பின் ஒரு பகுதியாக, ஊதியங்கள், வேலை நேரம் மற்றும் சலுகைகளை குறைப்பது தொடர்புபட்ட தாக்குதலை ஆழப்படுத்தி தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்துவது உள்ளது.

தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னர் உலக சூழ்நிலையில் ஏற்கனவே நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் போக்குகளை உண்மையில் துரிதப்படுத்தியதைக் குறிப்பிட்டு, செயலாளர் குட்ரெஸ், “வருந்தத்தக்க வகையில், கோவிட்-19 பரவ ஆரம்பிப்பதற்கு முன்னரே SDG க்கள் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டன. வறுமைக் குறைப்பு, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், மின்சாரம் அணுகல், பாலின சமத்துவம் ஆகியவற்றில் முன்னேற்றம் காணப்பட்டது, என்றாலும் 2030 க்குள் இலக்குகளை அடையும் அளவிற்கு அவை போதுமானதாக இல்லை” என்று கூறுகிறார்.

ஜென்மின் கையொப்பமிட்ட “தொற்றுநோயிலிருந்து உருவான பார்வைகள்: அப்பட்டமான யதார்த்தங்களும், முக்கியமான தெரிவுகளும்,” என்ற தலைப்பிலான ஒரு பிரிவில், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு தொடங்கியது முதல், “இது மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் மீது பேரழிவுகர விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான விகிதங்களின் நெருக்கடி என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று அறிக்கை தெரிவிக்கிறது.

ஐ.நா. அறிக்கை “SDG க்கள் தொடர்புபட்ட நெருக்கடியின் பேரழிவுகர தாக்கங்களை வெளிப்படுத்திய சமீபத்திய தரவுகள் மற்றும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது” என்பதுடன், இது 50 க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை (United Nations Department of Economic and Social Affairs) ஆல் தயாரிக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், ஐ.நா. பகுப்பாய்வு, “சிக்கலான நேரத்தில் உயிர் காக்கும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளின்” அபிவிருத்தி குறித்து விஞ்ஞான சமூகத்திற்கு கிடைக்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கும் மற்றும் தடுப்பூசி விநியோகத்தில் உள்ள உலகளாவிய ஏற்றத்தாழ்வுக்கும் இடையேயான முரண்பாட்டை சுட்டிக்காட்டுகிறது. ஜென்மின் குறிப்பிட்டது படி, “ஜூன் 17, 2021 நிலவரப்படி, துணை சஹாரா ஆபிரிக்காவில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேருக்கு குறைவானவர்களுக்கே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஒவ்வொரு 100 பேருக்கு சுமார் 68 தடுப்பூசிகள் வரை வழங்கப்பட்டுள்ளன.”

கடந்த ஆண்டு உலகளவில் தீவிர வறுமை அதிகரித்தது தொடர்புபட்ட இந்த புள்ளிவிபரங்கள், முதலாளித்துவத்தின் வலதுசாரி மற்றும் தாராளவாத பாதுகாவலர்கள், இலாப நோக்கு அமைப்புமுறை மீதான நம்பகத்தன்மைக்கு சான்றாக இந்த புள்ளிவிபரங்களில் முன்னைய இரண்டு தசாப்த காலத்தில் நிகழ்ந்த சரிவுகளை நிறுத்தி வைத்துள்ள நிலையில் குறிப்பாக இவை முக்கியத்துவம் வாய்ந்தது. ஐ.நா. அறிக்கை, ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான வருமானத்துடன் தீவிர வறுமையில் வாழும் உலக மக்கள்தொகையின் பங்கு, “2015 இல் 10.1 சதவீதமாக இருந்தது 2017 இல் 9.3 சதவீதமாக குறைந்தது” என்று கூறுகிறது.

தீவிர வறுமையின் பங்கு 2019 இல் 8.4 சதவீதமாக இருந்தது 2020 இல் 9.5 சதவீதமானதையும், மேலும் 2021 இல் அது 10 சதவீதத்திற்கு மேலாக அதிகரிக்கும் என்பதையும் ஐ.நா.வின் முன்மதிப்பீட்டு தரவு காட்டுகிறது. தீவிர வறுமையின் அதிகரிப்பு “பேரிடர் கால தயார்நிலை மற்றும் வலுவான சமூக பாதுகாப்பு அமைப்புக்களின் முக்கியத்துவத்தை” காட்டுகிறது என்று ஐ.நா.வின் முடிவு கூறினாலும், மீண்டும் வறுமை பெரிதும் அதிகரிப்பது முதலாளித்துவத்தின் தோல்விக்கான நிரூபணமாகும் என்பதுடன், உலகளவில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கான முன்னோடியாகும்.

ஐ.நா. அறிக்கை, 2020 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து உலக சோசலிச வலைத் தளமும் (WSWS), நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) வழங்கிய பகுப்பாய்வின் நிரூபணமாக உள்ளது. பிப்ரவரி 28, 2020 அன்று, ICFI, “தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான வளங்களை கிடைக்கச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை கவனிக்கவும் சிகிச்சையளிக்கவும், மேலும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படக்கூடிய நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும்” என தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தொற்றுநோய்க்கு எதிராக உலகளவில் ஒருங்கிணைந்த அவசரகால நடவடிக்கைகளை எடுக்க அழைப்பு விடுத்தது.

தொற்றுநோயால் விளைந்த பொருளாதார சேதம் “2008 நிதி நெருக்கடியின் அளவை விட அதிகமாக இருக்கலாம்” என்றும், “நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான ஆளும் உயரடுக்கினர் மற்றும் அரசாங்கங்களின் பதிலிறுப்பு அவர்களது அலட்சியத்தின் குற்றவியல் அளவுடன் கூடிய திறனின்மையுடன் இணைகின்றது” என்றும் அறிக்கை எச்சரித்தது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள், நிதிய தன்னலக்குழுவின் முதலீட்டு இலாகாக்களுக்கு முட்டுக் கொடுக்க “ஊக்கமளிக்கும்” விதமாக வரம்பற்ற டிரில்லியன் டாலர்களை கொண்ட கூட்டாட்சி கருவூலங்களை திடீர் சோதனை செய்ததற்கு முன்னர், ICFI அறிக்கை “பொருளாதார விளைவுகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதி உதவியும் வருமான இழப்பீடும் வழங்க” அழைப்பு விடுத்தது. மேலும், இந்த அறிக்கை, 2008 ஆம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, “அஅமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையில் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்கள் பங்குபத்திரங்களின் சந்தை மதிப்பை உயர்த்துவதற்கு நடைமுறையளவில் வரைமுறையின்றி பணத்தை ஒதுக்கி உள்ள” நிலையில், “தொழிலாள வர்க்கம் அவசரகாலநிலையின் தேவைக்கேற்ற அளவிற்கு தன்னலக்குழுக்களின் செல்வத்தின் மீது அவசரகால வரிகளை விதிக்க அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்” என்றும் எச்சரித்தது.

இறுதியாக, ICFI அறிக்கை, “இத்தகைய அவசரகால நடவடிக்கைகளை முதலாளித்துவ அரசாங்கங்களை நடைமுறைப்படுத்த கோருகையில், சர்வதேச தொழிலாள வர்க்கம் அதன் அடிப்படை நோக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது: அதாவது முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதை. …. முதலாளித்துவம் ஒரு காலங்கடந்த பொருளாதார அமைப்புமுறை என்பதையும், மனித முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக உள்ளது என்பதையும் தற்போதைய இந்த நெருக்கடி எடுத்துக்காட்டுகிறது. இந்த தொற்றுநோய் முன்வைக்கும் அபாயமும் மற்றும் பேரழிவுகரமான தாக்கங்களைக் குறித்த உலகளாவிய எச்சரிக்கைகளும், முதலாளித்துவ அமைப்புமுறை உலகளாவிய சோசலிசத்திற்கு வழிவிட்டே ஆக வேண்டும் என்பதையே நிரூபிக்கிறது” என தெரிவித்தது.

https://www.wsws.org/ta/articles/2020/03%20(March)/02/pers-m02.html

https://www.wsws.org/ta/articles/2008/09/30/prin-s30.html

Loading