சர்வதேச பெகாசஸ் ஸ்மார்ட்போன் ஒற்றறி மென்பொருள் செயல்பாட்டால் குறிவைக்கப்பட்டவர்களில் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனும் அடங்குகின்றார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் 50,000 ஊடகவியலாளர்கள், வணிக, அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை ஒற்றறி (spyware) மென்பொருளால் ஸ்மார்ட்போன்களை இலக்கு வைப்பது குறித்து பெகாசஸ் திட்ட ஊடக கூட்டமைப்பு செவ்வாயன்று புதிய வெளிப்படுத்தல்களை வெளியிட்டது. வாஷிங்டன் போஸ்ட்டின் கூற்றுப்படி, அடையாளம் காணப்பட்ட இலக்குவைக்கப்பட்ட நபர்களின் பட்டியலில் பதினான்கு முக்கிய அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்கள் இருந்தன.

அடையாளம் காணப்பட்டவர்களில் எவரும் தடயவியல் பகுப்பாய்விற்காக தங்கள் தொலைபேசிகளை வழங்காததால், ஒற்றறி மென்பொருள் மூலம் அவர்களின் சாதனங்களின் ஊடுருவலை உறுதிப்படுத்த முடியவில்லை. போஸ்ட்டின் அறிக்கை, இலக்கு வைக்கப்பட்ட தலைவர்களின் பட்டியலில் 'மூன்று ஜனாதிபதிகள், 10 பிரதமர்கள் மற்றும் ஒரு மன்னரும்' அடங்குவதாக குறிப்பிட்டது.

இமானுவேல் மக்ரோன் [Sebastien Nogier, Pool via AP] [AP Photo]

பதினான்கு நபர்களின் அடையாளங்கள் இலாப நோக்கற்ற பிரெஞ்சு ஊடக Forbidden Stories மற்றும் சர்வதேச மன்னிப்பு சபைக்கு கசிந்த 50,000 தொலைபேசி எண்களின் பட்டியலிலிருந்து பெறப்பட்டன. பின்னர் அவை பெகாசஸ் திட்டத்தை உள்ளடக்கிய 17 செய்தி அமைப்புகளால் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

மூன்று பதவியிலுள்ள ஜனாதிபதிகளான பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் பர்ஹாம் சாலிஹ் மற்றும் தென்னாபிரிக்காவின் சிரில் ராமபோசா என்று போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போதைய பதவியிலுள்ள மூன்று பிரதமர்கள் பாகிஸ்தானின் இம்ரான் கான், எகிப்தின் மொஸ்டாபா மட்பூலி மற்றும் மொராக்கோவின் சாத்-எடின் எல் ஒத்மானி ஆகும். ஏழு முன்னாள் பிரதமர்களில் யேமனின் அஹ்மத் ஓபீட் பின் தாக்ர், லெபனானின் சாத் ஹரிரி, உகண்டாவின் ருஹகானா ருகுண்டா, பிரான்சின் எட்வார்ட் பிலிப், கஜகஸ்தானின் பகிட்சான் சாகின்தாயேவ், அல்ஜீரியாவின் நூரெடின் பெடூய் மற்றும் பெல்ஜியத்தின் சார்லஸ் மிஷேல் அடங்குவர். மன்னர்களில் மொராக்கோவின் ஆறாவது முகமது அடங்குகின்றார்.

பெகாசஸ் திட்டத்திற்குள் உள்ள ஊடகக் குழுக்கள் தொலைபேசி எண்களை கொண்டிருப்பதை “பொது பதிவுகள், பத்திரிகையாளர்களின் தொடர்பு புத்தகங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் அல்லது சாத்தியமான இலக்குகளின் நெருங்கிய கூட்டாளிகளிடம் விசாரணைகள் மூலம்” உறுதிப்படுத்தியதாக போஸ்ட் கூறியது.

சர்வதேச அளவில் பெகாசஸ் ஒற்றறி மென்பொருள் பயன்பாட்டின் நோக்கம் பற்றிய வெளிப்படுத்தல்கள் உலகெங்கிலும் தொடர்ச்சியான வழக்குத்தொடுத்தல்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகளை விளைவிக்கின்றன. உதாரணமாக, செவ்வாயன்று, ஊடுருவல் நடவடிக்கையால் குறிவைக்கப்பட்ட நபர்களில் ஜனாதிபதி மக்ரோனும் ஒருவர் என்ற அறிக்கை குறித்து விசாரணை நடத்துமாறு பிரெஞ்சு அரசாங்கம் கோரியது.

விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டதாக பிரெஞ்சு பிரதமர் ஜோன் காஸ்டெக்ஸ் தேசிய சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஒரு அதிகாரி எலிசே அரண்மனை அறிக்கை, “உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டால், அவை தெளிவாக மிகவும் அக்கறைக்குரியவை. இந்த செய்தி வெளிப்படுத்தல்களின் மீது அனைத்து கவனமும் செலுத்தப்படும். சில பிரெஞ்சு பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர், எனவே நீதி விசாரணைகள் தொடங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தது.

iOS அல்லது ஆண்ட்ராய்ட் இயக்க முறைகளின் சமீபத்திய பதிப்புகளை கொண்டு இயக்கும் ஸ்மார்ட்போன்களை 24 மணி நேர கண்காணிப்பு சாதனங்களாக மாற்றுவதற்காக இணைய பாதுகாப்பு நிறுவனமான NSO குழுமத்தால் உருவாக்கப்பட்ட பெகாசஸ் ஒற்றறி மென்பொருள் 2016 முதல் அரசாங்கங்களால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இம்மென்பொருளின் ஆரம்ப பதிப்புகள் “spear-phishing” எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தின. இதில் தகவல் அல்லது மின்னஞ்சல் செய்திகள் அனுப்பப்பட்டு அந்த தீங்கிழைக்கும் இணைப்பை சாதனத்தின் உரிமையாளரை அழுத்தமாறு செய்யப்படுகின்றன. இதன் மூலம் பின்னர் அது ஒற்றறி மென்பொருளை தொலைபேசியில் பதிவிறக்கும்.

இந்த முறைகள் குறைவான செயல்திறன் மிக்கவையாகிவிட்டதால், ஒற்றறி மென்பொருளை செயல்படுத்துவதற்கு சாதன உரிமையாளர் எதுவும் செய்யத் தேவையில்லாத “zero-click” தாக்குதல்கள் போன்ற ஸ்மார்ட்போன்களில் பெகாசஸை இறக்குவதற்கான மேம்பட்ட முறைகளை NSO உருவாக்கியது. இந்த “zero-click” முறை, இயக்க முறைகளின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போனில் நுழைவதற்கு பயன்படுத்துகின்றது.

எடுத்துக்காட்டாக, தி கார்டியன் ஞாயிற்றுக்கிழமை, வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பு பலவீனங்களை NSO பயன்படுத்தி தீங்கிழைக்கும் குறியீட்டை இயக்கமுறைகளில் நேரடியாக உள்ளிருத்துவதன் மூலமும், அது பதிவிறக்கம் செய்தவுடன் பயனரின் தொலைபேசியை பாதிப்படைய செய்வததாக அறிவித்தது. மிக சமீபத்தில் NSO, ஆப்பிளின் iMessage இன் ஒரு பாதுகாப்பு பலவீனத்தை 'நூற்றுக்கணக்கான மில்லியன் ஐபோன்களுக்கான அணுகலை' பெற பயன்படுத்தி வருகிறது.

கார்டியன் மேலும் கூறுகையில், “ஒரு இலக்குக்கு அருகில் அமைந்துள்ள கம்பியில்லா செலுத்திவாங்கி வழியாகவும் பெகாசஸ் பதியப்படலாம். அல்லது ஒரு NSO கையேட்டின் படி, ஒரு முகவர் இலக்குவைக்கப்பட்டவரின் தொலைபேசியை திருட முடிந்தால் கைகளால் நேரடியாக பதியப்படும்.”

பெகாசஸால் ஒரு தொலைபேசி ஊடுருவல் செய்யப்பட்டவுடன், ஒற்றறி மென்பொருள் இயக்கிகள் சாதனத்தில் தொலைபேசி அழைப்பு பதிவுகள், உரை செய்திகள், முகவரி புத்தகங்கள், நாட்குறிப்புக்கள், மின்னஞ்சல் செய்திகள், இணைய உலாவல் வரலாறுகள், புவிஇருப்பிடம் மற்றும் வரைபடத் தரவு உள்ளிட்ட எந்த தரவையும் சேர்த்துக்கொள்ளலாம். மற்றும் அது நுண் ஒலிபேசி மற்றும் ஒளிப்பதிவுகருவியை செயல்படுத்தலாம்.

NSO குழுமம் அதன் நிறுவனர்களான நிவ் கார்மி, ஷாலெவ் ஹுலியோ மற்றும் ம்ரி லாவி ஆகியோரின் முதல் பெயர் எழுத்துக்களால் பெயரிடப்பட்டது. அவர்கள் அனைவரும் 2010 இது டெல் அவிவில் 2010 இல் நிறுவப்பட்ட இஸ்ரேலிய புலனாய்வுப் படை யூனிட் 8200 இன் முன்னாள் உறுப்பினர்களாக உள்ளனர். மெக்ஸிகோ அரசாங்கத்துடன் 20 மில்லியன் டாலர் ஒப்பந்தம் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களை உளவு பார்ப்பதற்காக NSO இன் மென்பொருளின் பயன்பாடு ஆரம்பத்தில் 2012 இல் அம்பலப்படுத்தப்பட்டது.

2014 ஆம் ஆண்டில், NSO குழுமத்தை அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பிரான்சிஸ்கோ பார்ட்னர்ஸ் 130 மில்லியன் டாலருக்கு வாங்கியது. பின்னர் இந்த முதலீட்டாளர்கள் இணைய பாதுகாப்பு நிறுவனத்தை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1 பில்லியன் டாலருக்கு விற்றனர்.

2018 ஆம் ஆண்டளவில், அமைப்பின் ஊழியர்களில் ஒருவரை உளவு பார்க்க சவுதி அரேபியாவின் ஆட்சிக்கு NSO குழுமம் உதவுவதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சாட்டியது. சவுதி ஆட்சியால் பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டதில் NSO வின் பெகாசஸ் மென்பொருள் ஒரு பங்கைக் கொண்டிருந்தது என்று பின்னர் குற்றம் சாட்டப்பட்டது. தனது மென்பொருளின் அழைப்பு பயன்பாட்டை ஊடுருவுவதன் மூலம் NSO குழுமம் ஒற்றறி மென்பொருளை அதன் இயக்கமுறைகளுள் செலுத்துவதாக 2019 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் குற்றம் சாட்டியது.

தீங்கிழைக்கும் மென்பொருள் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பு என்பதை NSO குழுமம் மறுத்துள்ளது. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட ஊடுருவல்களை குற்றம்சாட்டி NSOவின் கருவிகளால் ஸ்மார்ட்போன் ஊடுருவல் செய்ததற்கான ஆதாரங்களை வாட்ஸ்அப் முன்வைத்தது. பெயரிடப்படாத 40 நாடுகளுக்கு பெகாசஸிற்கான உரிமங்களை விற்றுள்ளதாக நிறுவனம் சமீபத்தில் பகிரங்கமாகக் கூறியதுடன், அது தனது வாடிக்கையாளர்களின் எந்தவொரு தரவையும் பராமரிக்கவில்லை அல்லது ஒரு நாட்டிற்கு மென்பொருள் விற்கப்பட்ட பின்னர் அதை இயக்கவில்லை என்று தொடர்ந்து கூறுகிறது.

அமெரிக்காவிற்குள் ஸ்மார்ட்போன்களில் அதன் ஒற்றறி மென்பொருள் நிறுவப்படுவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்றும் NSO குழுமம் கூறிவருகிறது. ஸ்லேட்டின் கூற்றுப்படி, பெகாசஸ் மென்பொருள் 'அமெரிக்க எல்லைகளுக்குள் இருப்பதாக தன்னைக் கண்டறிந்தால் அது சுய அழிவை ஏற்படுத்தும்' என்று நிறுவனம் கூறுகிறது.

உலகளாவிய அமெரிக்க அரசாங்க மின்னணு கண்காணிப்பு திட்டத்தை அம்பலப்படுத்திய தகவல்வெளிப்படுத்துனர் மற்றும் முன்னாள் உளவுத்துறை ஆய்வாளரரான எட்வேர்ட் ஸ்னோவ்டன், NSO குழுமத்தின் அபத்தமான அறிக்கைகளுக்கு பதிலளித்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் பின்வருமாறு ட்வீட் செய்துள்ளார். “அமெரிக்க தொலைபேசி எண்களை உளவு பார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என்று NSO கூறியது ஒரு முழுப்பொய்யாகும். மக்ரோனின் ஐபோனுக்கு எதிராக செயல்படும் ஒரு உளவு பைடெனின் ஐபோனிலும் செயல்படும். ஒரு நாட்டைக் குறிவைப்பதைத் தடைசெய்ய எழுதப்பட்ட எந்த குறியீடும் திருத்தி எழுதப்படலாம். இது ஒரு போலிக்காரணமாகும்”.

முந்தைய நாள், ஸ்னோவ்டன் பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் இலக்கு பட்டியலில் உள்ளார் என்பது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட வடிவமைக்கப்பட்ட ஒற்றறி மென்பொருள் துறையில் இருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை. எளிதில் துஷ்பிரயோகம் செய்யப்படும் இந்த தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறையாக ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தோல்வியடைந்துள்ளன. வர்த்தகத்தில் உடனடி உலகளாவிய உடன்படிக்கை இல்லாமல், இது இன்னும் மோசமாகிவிடும்” என்றார்.

பெகாசஸ் வெளிப்படுத்தல்கள் பற்றிய வாஷிங்டன் போஸ்ட்டின் ஆசிரியர் குழுவின் பிரதிபலிப்பை ஸ்னோவ்டென் கண்டித்தார். 'NSO ஊழலுக்கு வாஷிங்டன் போஸ்ட்டின் ஆசிரியர் குழுவின் தீர்வு மிகவும் ஆச்சரியப்படத்தக்கவகையில் பலவீனமாக உள்ளதுடன், அது ஒரு ஊழலும் கூட. இந்த நிறுவனங்கள் (மற்றும் அவற்றின் புரவலர்கள்) ‘வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உரிமத் தேவைகள்’ ஏற்கனவே உள்ளன என்று கூறுகின்றன! நீங்களும் ஒன்றுமில்லாததை கேட்கின்றீர்கள்.”

Loading