அமெரிக்க உடற்பயிற்சி வல்லுனர் சிமோன் பைல்ஸ், ஒலிம்பிக் விளையாட்டு மற்றும் "உலகின் அழுத்தம்"

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் அணி இறுதிப்போட்டியின் போது அமெரிக்க உடற்பயிற்சி வல்லுனர் சிமோன் பைல்ஸ் தான் போட்டியிலிருந்து விலகுவது என்ற முடிவு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. அதில் பெரும்பாலானவை அரசியல் அல்லது கருத்தியல்ரீதியான உள்நோக்கம் கொண்டவை.

இந்த ஜூலை 27, 2021, கோப்பு புகைப்படம் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ், 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்காக செவ்வாய்க்கிழமை டோக்கியோவில், கலை உடற்பயிற்சி வல்லுனர் பெண்கள் இறுதிப்போட்டியின் போது மேடையில் நிகழ்த்த காத்திருப்பதைக் காட்டுகிறது. (AP Photo/Gregory Bull, File)

இதில் எந்த விமர்சனமும் சிறிதும் செல்லுபடியாகாவை. உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் இயலாமை அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு உடலியல்ரீதியான ஆபத்தில் திசைதிருப்பப்படுவதையும் மற்றும் தான் நிலைகுலைந்திருப்பதையும் உணர்ந்தார். போட்டியிலிருந்து வெளியேற அவருக்கு ஒவ்வொரு உரிமையும் மற்றும் ஒரு கடமையும் கூட இருந்தது. அவரது முடிவுக்கு முன்னாள் உடற்பயிற்சி வல்லுனர்கள், முதன்மை வீரர்கள் உட்பட, பெரும்பாலான பொதுமக்களும், பல விளையாட்டு வீரர்களும் அனுதாபத்துடன் பதிலளித்தனர்.

இதற்கிடையில் பல்வேறு வலதுசாரி பண்டிதர்கள் பைல்ஸுக்கு முதுகெலும்பு இல்லாமை, கடமை தவறியது மற்றும் 'தனது நாட்டை கைவிட்டதாக' கண்டனம் தெரிவித்துள்ளனர். டெக்சாஸ் துணை அரச வழக்குத்தொடுனர் ஆரோன் ரீட்ஸ் பைல்ஸை 'ஒரு சுயநல, குழந்தைத்தனமான தேசிய அவமானம்' என்று குறிப்பிட்டார். டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளரான ஆபிரிக்க-அமெரிக்க விளையாட்டு வர்ணனையாளர் ஜேசன் விட்லாக், பைல்ஸை 'கோழை' என்று கண்டனம் செய்தார். மேலும், 'எங்களுக்கு என்ன செய்யப்பட்டது மற்றும் நாங்கள் அனுமதித்தது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு மூளை சலவை பிடிக்காது. பொறுப்புக்கூறல் இல்லாதுள்ளது. எமது மகத்துவத்தின் பற்றாக்குறை பாரியளவிலுள்ளது' என்றார். The Spectator இன் வாஷிங்டன் ஆசிரியர் அம்பர் அதேய், 'சிமோன் பைல்ஸ் ஒரு கோழை' என்று அவர் மீது மோசமான உணர்ச்சித் தாக்குதலுக்கு தலைமை தாங்கினார்.

இது பைல்ஸை கண்டனம் செய்வது பல சந்தர்ப்பங்களில் சந்தேகத்திற்கு இடமின்றி இனவெறி உள்ளடங்கிய குரலால் அத்தகைய குப்பைகளிலிருந்து உற்சாகத்தைப் பெறும் வகையை சேர்ந்த பாசிச வலதுசாரிகள் மற்றும் பெருநிறுவன பில்லியனர் நபர்களுடன் தமது நிலை உறுதிப்படுத்தும் என்ற அழுக்கான மக்களிடமிருந்து வெளிவரும் அழுக்கான விஷயமாகும் என்பதை கணிப்பிட்டுவிடலாம்.

ஆனால் பைல்ஸ் சிறப்பு வசதிகளை பெறுகிறார் என்ற 'இடது' களின் அபத்தமான வாதம், ஆபத்தான நிலையில் வேலை செய்ய மறுக்கும் ஒரு சாதாரண தொழிலாளி பணிநீக்கம் அல்லது துன்புறுத்தலை எதிர்கொள்வதை போன்றது. இந்த உடற்பயிற்சியின் முதலில் காண்பிப்பது என்னவென்றால், இன்றைய சமூகத்தில், பகுத்தறிவு, பொறுப்பு மற்றும் விவேகமான நடத்தை போன்றவற்றை 'கடந்து வருவதற்கு' ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருக்க வேண்டும். கொலைகார தொற்றுநோயின் சூழலில், எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு அமசன் இறைச்சி பொதியாக்கும் மற்றும் வாகனத்துறை தொழிலாளருக்கும் ஒரேமாதிரியான உரிமை இருக்க வேண்டும்.

டோக்கியோ ஒலிம்பிக், சமகால விளையாட்டு மற்றும் இன்னும் பரந்தளவில், ஒட்டுமொத்த சமூக ஒழுங்கு பற்றி மிகப் பயங்கரமான தவறு என்ன என்பதை பைல்ஸின் விவகாரம் தன்னுள் உள்ளடக்கியுள்ளது.

இந்த '2020' விளையாட்டுகள், அவற்றைப் பற்றிய ஒவ்வொரு பொதுக் கருத்தும் வினோதமாக அறிவிப்பது போல, ஒருபோதும் நடத்தப்பட்டிருக்கக்கூடாது. “6000 மருத்துவர்களைக் கொண்ட டோக்கியோ மருத்துவ பயிற்சியாளர்கள் சங்கம் இரத்து செய்யுமாறு பிரதமர் யோஷிஹைட் சுகாவிடம் கேட்டது. ஜப்பான் மருத்துவர்கள் சங்கமும், அதன் தலைவரும் ஒலிம்பிக்கில் கொரோனா வைரஸின் மாறுபாடுகளை பரப்பலாம் என்று எச்சரித்தார். செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவக் குழுக்களும் இதனை எதிர்த்தனர்” என Associated Press யூன் மாதம் குறிப்பிட்டது.

மேலும், New England Journal of Medicin 'ஒலிம்பிக் நடத்துவதென்ற சர்வதேச ஒலிம்பிக் குழுவின் [IOC] முடிவு 'சிறந்த அறிவியல் சான்றுகளால் தெரிவிக்கப்படவில்லை' என்று கூறியது. மேலும் British Medical Journal ஏப்ரல் மாத தலையங்கத்தில் போட்டிகளை நடத்துவதை அமைப்பாளர்களை 'மறுபரிசீலனை செய்ய' கேட்டது. வடிவமைக்கப்பட்ட கேள்விகளை பொறுத்து விளையாட்டுகளை ஆரம்பிப்பதை 50-80% [ஜப்பானிய மக்களில்] எதிர்க்கின்றனர். ஜப்பானின் மிகப்பெரிய செய்தித்தாள்களில் ஒன்றான Asahi Shimbun தனது தலையங்கத்தில், 'அமைதியாகவும் புறநிலையாகவும் மதிப்பீடு செய்து, இந்த கோடையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸ் நடத்த முடிவு செய்வதை' எதிர்க்குமாறு பிரதமர் சுகாவிடம் “கோரியது”.

ஜப்பான் தேசிய விளையாட்டரங்கம் Japan National Stadium in Tokyo (Arne Müseler)

(டோக்கியோ புதன்கிழமை 3,177 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்களை பதிவு செய்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, 'அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் மருத்துவமனைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.')

11,000 விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பயிற்சியாளர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றவர்களுடன் வரவிருக்கும் ஆபத்துடன் விளையாட்டுகள் 'முன்னோக்கி செல்கின்றது' ஏன் என ஒரு மாதத்திற்கு முன்பு அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கேட்டது? செய்தி சேவை அதன் சொந்த கேள்விக்கு பதிலளித்தது: 'பில்லியன் கணக்கான டாலர்களை பணயம் வைத்து தொடங்கவும், சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு பெரிதும் சாதகமான ஒரு ஒப்பந்தம், மற்றும் அதை, பாதையை தொடருவது என்ற ஜப்பானிய அரசாங்கத்தின் முடிவு, சுகா 'தனது பதவியிலிருப்பதற்கு' உதவும்' என்று எழுதியது.

'ஜப்பான் ஒலிம்பிக்கிற்கு உத்தியோகபூர்வமாக 15.4 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது' என்று AP அறிக்கை தொடர்ந்தது. 'ஆனால் பல அரசாங்க மதிப்பீடுகள் அது இன்னும் அதிகமாக இருப்பதாக கூறுகிறது. இதில் 6.7 பில்லியன் டாலர் தவிர மற்ற அனைத்தும் பொதுப் பணம். புவிசார் அரசியல் போட்டியாளரான சீனா, டோக்கியோவில் முடிவடைந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த உள்ளது. மேலும் டோக்கியோ நடத்துவதில் தோல்வியடைந்தால் மையஅரங்க உரிமையை அது கோரலாம்”.

சர்வதேச ஒலிம்பிக் குழு 'தன்னை நாடுகளின் ஒரு விளையாட்டு கழகம்' என்று சித்தரிக்கிறது என்றாலும், AP இன் கூற்றுப்படி, அது உண்மையில், 'பல பில்லியன் டாலர் விளையாட்டு வணிகமாகும்.' வரலாற்றின் இந்த கட்டத்தில், உறுதியாக, சர்வதேச ஒலிம்பிக் குழு என்பது ஊடக பெருநிறுவனமான NBCUniversal இன் 'ஓரளவு சொந்தமான' துணை நிறுவனமாகும்.

Hollywood Reporter, 'ஒளிபரப்பு உரிமைகளை விற்பதன் மூலம் அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தை சர்வதேச ஒலிம்பிக் குழு உருவாக்குகிறது. மேலும் அமெரிக்க உரிமைகளைக் கொண்ட NBCUniversal இற்கு இது அதன் வருவாயின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. இது மொத்தத்தில் 40 சதவிகிதத்தைக் குறிக்கிறது.' எனச்சுட்டிக்காட்டியது.

Hollywood Reporter மேலும் விளக்கமளித்தது. NBC “2014 முதல் 2020 வரை நான்கு ஒலிம்பிக்கிற்கு 4.4 பில்லியன் டாலரும் மற்றும் 2022 முதல் 2032 வரை நடக்கும் அடுத்த ஆறு விளையாட்டுகளுக்கு மேலும் 7.75 பில்லியன் டாலரும் சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு வழங்குவதாக விளக்கமளித்தது. ஐரோப்பிய உரிமைகளைக் கொண்ட Discovery Inc. இதில் இலாபமடையும் முக்கியமானவற்றில் ஒன்றாகும். இரு நிறுவனங்களும் தங்கள் இணைய ஒளிபரப்பு தளங்களான Peacock மற்றும் Discovery+ ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இந்த விளையாட்டுகளை பயன்படுத்துகின்றன.

டோக்கியோ விளையாட்டுகள் இரத்து செய்யப்பட்டால், சர்வதேச ஒலிம்பிக் குழு 'சுமார் 3.5$ -4$ பில்லியன் ஒளிபரப்பு வருவாயை இழக்க நேரிடும்' என்று மாசசூசெட்ஸில் உள்ள ஸ்மித் கல்லூரியின் பொருளாதார நிபுணர் ஆண்ட்ரூ ஜிம்பாலிஸ்ட் கணக்கிட்டார்.

எனவே விளையாட்டுகள் தொடர வேண்டும்!

பைல்ஸ் மற்றும் பிற விளையாட்டு வீரர்களின் மன நிலையில் இருந்து, விளையாட்டுகள் மீது நோய் மற்றும் மரண அச்சுறுத்தல் உள்ள இந்த ஊழல்மிக்க சூழ்நிலையை ஒருவர் எவ்வாறு பிரிக்க முடியும்? விளையாட்டுகளின் ஆண்டு ஒத்திவைப்பால் ஏற்படும் சிரமங்களையும், டோக்கியோவில் விளையாட்டு வீரர்களின் தனிமைப்படுத்தப்பட்ட மன அழுத்தத்தையும் இந்த விளையாட்டு வீராங்கனை குறிப்பிடுகிறார். 'வழக்கமாக நாங்கள் ஒலிம்பிக் கிராமத்தில் சுற்றித் திரிகிறோம்' என அவர் விளக்கினார்.

'நீங்கள் உலகின் அழுத்தத்தை உணரும்போது அது எரிச்சலூட்டுவதாக உள்ளது. நாங்கள் செய்யும் பயிற்சியின் அளவிற்கு திறன்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு வழிமுறையும் இல்லை' பலரைப் போலவே, குழு மருத்துவர் லாரி நாசரால் (Larry Nassar) செய்யப்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தின் சுமையுடன் பைல்ஸும் வாழ்கிறார் மற்றும் அவரது சொந்த விளையாட்டுக்கு பொறுப்பானவர்களால் இதுபற்றி மூடிமறைக்கப்படுகிறார்.

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், 'டோக்கியோவின் தொற்றுநோய் ஒலிம்பிக்கின் அழுத்தங்கள்' என்ற கட்டுரையில், பைல்ஸின் வெளியேற்றத்தை தொடர்ந்து 'பெண்கள் ஒற்றையர் போட்டியின் மூன்றாவது சுற்றில் ஜப்பானிய டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகாவிற்கு அதிர்ச்சியூட்டும் தோல்வியை பற்றி குறிப்பிட்டது. ஒசாகா ... தனது தொழிலின் உளவியல் அழுத்தங்களை பற்றி குறிப்பிட்டுள்ளார். இப்பத்தியில் டோக்கியோ நிகழ்வு 'நவீன வரலாற்றில் விசித்திரமான விளையாட்டுகள். கட்டுப்பாட்டு நிலைமைகள், ரசிகர்கள் இல்லாமை, கடும் வெப்பம் மற்றும் ஒரு வருட தாமதம் ஆகியவை நேர்த்தியான பயிற்சி சுழற்சிமுறைகளை தூக்கி எறிந்துவிட்டன. இது உலகளாவிய ஈர்ப்புக்காக ஏற்கனவே போராடும் ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் ஒலிம்பிக்கின் ஒளிர்விடும் சக்தியை மங்கச் செய்துள்ளது. இது விளையாட்டுகளை 'உயர் அழுத்த விளையாட்டுகள், உலகளாவிய புகழ்ச்சி மற்றும் ஒரு நெருக்கும் தொற்றுநோய்களின் பின்னிப்பிணைந்த விகாரங்களின் பொது கண்காட்சியாக' மாற்றியுள்ளது. பைல்ஸ், ஒசாகா மற்றும் மற்றவர்கள் சந்தித்த பிரச்சனைகளுக்கு காரணம், 'தமது போட்டிகள் நிகழுமா என்ற உத்தரவாதமில்லா நிலையில் தனிமையில் பயிற்சியெடுக்க வேண்டியிருந்த உடல் மற்றும் உளவியல் அழுத்தங்கள்' என கட்டுரை கூறுகிறது.

நிச்சயமாக, விளையாட்டுகளை நடத்த அமைப்பாளர்களை ஊக்குவிக்கும் ஒரே நோக்கம் பணம் மட்டுமல்ல. சர்வதேச ஒலிம்பிக் குழு உத்தியோகபூர்வமாக, 'ஒலிம்பிக் ஆர்வ எழுச்சி ஒரு அமைதியான மற்றும் சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான தனது பணி” என அறிவிக்கிறது. இதற்கு “நட்பு, ஒற்றுமை மற்றும் நேர்மையான விளையாட்டு ஆகியவற்றுடன் பரஸ்பர புரிதல் தேவைப்படுகிறது'. நான்கு ஆண்டுக்கு ஒரு முறை நிகழும் இது கசப்பான தேசியவாத போட்டிகள், இராணுவ நோக்கங்களுக்கும் மற்றும் ஒவ்வொரு நாட்டின் ஆளும்தட்டினரும் இச்சந்தர்ப்பத்தை பேரினவாதத்தையும் மற்றும் இனவெறியை தூண்டுவதற்கான வாய்ப்பாக பயன்படுத்துவதால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது.

கனடாவில் உள்ள CBC, பிரிட்டனில் BBC மற்றும் பிற தேசிய ஊடகங்கள் இந்த விஷயத்தில் குற்றம் சாட்டப்படவேண்டியவர்கள். ஆனால் கொடி அசைக்கும் துறையில் அமெரிக்காவில் உள்ள NBC இனை விட எந்த ஒளிபரப்பாளரையும் கற்பனை செய்வது கடினம். இந்த சேவையானது வெட்கக்கேடான முறையில் 'அமெரிக்க குழுவினை' சுரண்டுவதற்கு அதன் விபரணங்களிலும் மற்றும் வர்ணனைகளையும் சுரண்டுகின்றது. கிட்டத்தட்ட ஏனைய அனைவரையும் தவிர்த்து அமெரிக்க விளையாட்டு வீரர்களைப் பற்றிய படங்கள் மற்றும் கதைகளால் பார்வையாளர்களை நிரப்பியுள்ளனர். பின்னர் கருத்துக் கணிப்பாளர்கள், பதிலளித்தவர்களில் 82 சதவீதமானோர் 'அமெரிக்காவிலிருந்து விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதாக' கண்டுபிடித்துள்ளதாக ஆச்சரியப்படுகிறார்கள்.

உண்மையில், அமெரிக்க பார்வையாளர்கள் கொரிய, பிரேசிலிய, ஈரானிய, ஜேர்மன், ரஷ்ய அல்லது சீன விளையாட்டு வீரர்களின் நிகழ்ச்சிகளில் குறைந்த ஆர்வத்துடன் இருப்பதற்கு 'இயற்கையான' அல்லது உள்ளார்ந்த காரணம் இல்லை. அவர்களுக்கு அந்த ஆர்வம் வளர்வது தடுக்கப்படுவதை தவிர இதற்கு வேறு காரணமில்லை.

நியூ யோர்க் டைம்ஸின் போர்க்குணத்துடன் பிணைக்கப்பட்ட பாசாங்குத்தனத்திற்கு எல்லையே இல்லை. ஜூலை 29 அன்று, டைம்ஸ் 'சீன விளையாட்டு இயந்திரத்தின் ஒற்றை இலக்கு: எந்த செலவிலும் அதிக தங்கம்' என்று ஒரு கட்டுரையை வெளியிட்டது. சீனாவின் 'விளையாட்டு உற்பத்தி மேடை ஒரு நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது: தேசத்தின் மகிமைக்காக தங்கப் பதக்கங்களை வெளியேற்றுவது”. இது 1980 களில் ஒலிக்கத் தொடங்கி 'அமெரிக்கா! அமெரிக்கா! அமெரிக்கா!' குண்டர் கூச்சல்கள் மற்றும் நிறுத்தப்படாத ஒரு நாட்டில் இருந்துவருகின்றது. அமெரிக்காவில் விளையாட்டு மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக்காக பில்லியன்கள் செலவிடப்படுகின்றன. 'ரொட்டி மற்றும் விளையாட்டு' என்ற கொள்கையின் இந்நிகழ்வுகளை பயன்படுத்தி அழுத்தமான சமூக பிரச்சனைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பப்படுவது வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இங்கு உயிரோடு உள்ளது. அந்த நேரத்தில் ஜேர்மன் ஒலிம்பிக் ஸ்கேட்டிங் வீராங்கனையான கத்தரீனா விட், பல ஆண்டுகளுக்கு முன்பு கருத்து தெரிவித்தபடி, 'உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு விளையாட்டு வீரர்களைப் பற்றி அமெரிக்காவில் ஒரு ஈர்ப்பு உள்ளது.' 'இது ஒரு மோசடி செய்யப்பட்ட ஈர்ப்பு' என்று அவர் இன்னும் துல்லியமாக சொல்லியிருக்கலாம்.

தற்போதைய விளையாட்டுகளைப் பற்றிய ஒரு அசாதாரண உண்மை என்னவென்றால், பைல்ஸின் முற்றிலும் சட்டபூர்வமான நடவடிக்கை மிகவும் விதிவிலக்காகும். மீண்டும், ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் வெளியேறிச் செல்லும் அவளது திறமை ஓரளவு அவரது பிரபலயத்துடன் தொடர்புடையது. 'உலகின் அழுத்தம்' பலவிதத்தில் அழுத்துகிறது.

டைம்ஸ் இந்த வாரம் 'அமெரிக்கன் நியாஜா ஹஸ்டன், ஸ்கேட்போர்டிங்கில் போட்டியில் மிகப்பெரிய பெயர், தங்கப் பதக்கம் பெறக்கூடியவர்' என்று அறிவித்தது. ஆனால் ஜூலை 25 அன்று ஹஸ்டன் தெரு போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தார். 'பின்னர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் 'இவ்வளவு அழுத்தத்தை உணர்ந்ததில்லை' என்று கூறினார். அவர் மேலும் கூறினார்: 'மன்னிக்கவும். நான் நிச்சயமாக சிலரை ஏமாற்றினேன் என்று எனக்கு தெரியும். அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் நான் ஒரு மனிதன்' என்றார்.

பல விளையாட்டு வீரர்களின் நிதானம் மற்றும் சிறந்த நிகழ்ச்சிகளில் திரும்பும் திறன் அவர்களின் திறமை மற்றும் பயிற்சி, அவர்களின் கவனத்தை ஒருங்குவிக்கக்கூடிய சக்திகள் மற்றும் குறிப்பிட்ட மட்டத்திற்கு, அவர்களின் திறமை உலகின் பிற பகுதிகளைச் கண்மயங்க செய்கின்றது.

அத்தகைய நிகழ்ச்சிகளின் பட்டியல் (மற்றும் வெறுமனே முதல், இரண்டாவது அல்லது மூன்றாவது இடங்களுக்கு வந்தவர்கள் அல்ல) நீளமானது. பெர்முடாவின் ஃப்ளோரா டஃபி, தணிந்த, அமைதியான மற்றும் இயல்பான ஒருவர், பெண்களின் ட்ரையத்லோனில் தங்கப் பதக்கத்தை எடுத்தார். இப்போட்டி 1.5 கிலோமீட்டர் நீச்சல், 40 கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டம் மற்றும் 10 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றின் கொடூரமான கலவையால் ஆனது. இரண்டாம் இடத்தைப் பிடித்த ஜார்ஜியா டெய்லர்-பிரவுனின் செயல்திறன் இன்னும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. டெய்லர்-பிரவுனின் சைக்கிள் டயர் ஒன்று இரண்டு கிலோமீட்டருக்கு முன்னர் காற்றுப்போய்விட்டது. அவள் சேதமடைந்த டயரினால் முன்னால் சென்றவர்களிலிருந்து மோசமாக பின்னடைந்துவிட்டார். ஆனால் ஆரம்ப “பீதி” இருந்தபோதிலும், தன்னுடைய புத்திசாலித்தனத்தை கொண்டு, எப்படியாவது டஃபியைத் தவிர மற்ற எல்லா போட்டியாளர்களையும் கடந்து செல்ல முடிந்தது.

சீனாவின் நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குபவரான 15வயதான சென் யுக்சி மற்றும் 17 வயதான ஜாங் ஜியாகி, பெண்கள் 10 மீட்டர் ஒத்திசைக்கப்பட்ட மூழ்குதல் நிகழ்வில் வெற்றி பெற்று பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். ஜாங் ஊடகங்களிடம் கூறினார், “எங்கள் வயதில் எங்களுக்கு ஒரு நன்மை உண்டு. நாங்கள் குறுகிய மற்றும் லேசானவர்கள். இதன் பொருள் எங்கள் நீர் நுழைவு மற்றவர்களை விட சிறந்தது. அவளுடைய பங்குதாரர் கருத்துரைத்தார், “நிச்சயமாக, நாம் இளமையாக இருப்பதால், நாம் அழுத்தத்தை உணர முடியும். ஆனால் நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எந்த சவாலையும் எதிர்கொள்ள நாங்கள் தைரியமாக இருக்கிறோம்” என்றார்.

400 மீட்டர் நீச்சலில் துனிசியாவைச் சேர்ந்த 18 வயதான நீச்சல் வீரர் அகமது ஹஃப்னோய், கொரிய வில்லாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இலக்கை மையமாக வைத்து தங்கள் அம்புகளை செலுத்தி வியக்கத்தக்க அதிர்ச்சி வெற்றி பெற்றனர். குறிப்பாக சீனா, ஹாங்காங், தென் கொரியா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் மேசை டென்னிஸ் மற்றும் மென்பந்தாட்ட வீரர்கள், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் 41 வயதான ஈரானிய விளையாட்டு துப்பாக்கி சுடும் வீரர் ஜவாத் ஃபோரோஜியின் வெற்றி, பெண்களின் தெரு ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த 13 வயதான மோமிஜி நிஷியா மற்றும் பிரேசிலின் ரைஸ்ஸா லியால் ஆகியோருக்கு இடையிலான போட்டி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இறுதியில் பிரகாசித்த நிஷியா, வரலாற்றில் இளைய தங்கப் பதக்கம் வென்றவர்களில் ஒருவரானார்.

தனிப்பட்ட செல்வத்தை குவிப்பதைத் தவிர எல்லாவற்றிலும் அலட்சியமாக இருக்கும் சமூக ஒழுங்கமைப்பின் மூலம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் மத்தியில், மற்றவர்களைப் போல தோற்றமளிக்கும் வியக்கத்தக்க சாதனைகளைச் செய்யும் மனிதர்களின் திறன் ஊக்கமளிக்க வேண்டும். இது எந்த விதத்திலும் ஆறுதலளிக்காது. இலாப அமைப்பு ஒழிந்தால் எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு சிறிய கணநேர தோற்றத்தை மட்டுமே இது போன்ற சந்தர்ப்பங்களில் ஒருவர் பெறுகிறார்.

1915 இல் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், ஐரோப்பா ஒரு வருடத்திற்கும் மேலாக 'இரத்தத்திலும் தீப்பொறிகளிலும் மூழ்கியிருந்த' முதலாம் உலகப் போரின்போது லியோன் ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார். 'புதிய சகாப்தத்தின் முக்கிய ஊற்றுகளான இயந்திரங்கள், மின்சாரம், வாகனங்கள், செய்தித்தாள்கள், நகரம் போன்றவற்றை காணாது இருப்பது நம்பிக்கையின்மையாகவே இருக்கும். இது மனிதகுலத்திற்கு முன்னோடியில்லாத ஆற்றல் மற்றும் நம்பமுடியாத உறுதியை கொடுக்கின்றது!

இந்த கட்டுரை தொடர்ந்தது, 'சந்தேகத்திற்கு இடமின்றி மனிதகுலம் இந்த போரில் முன்னெப்போதையும் விட வலுவாக, மிகவும் தைரியமாக, ஆரோக்கியமாக நுழைந்தது. ஆனால் இது போருக்குள் வந்தால், அது எப்படி அதை விட்டுவிடும்? தொற்றுநோயின் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், ஒலிம்பிக் போட்டிகளின் யதார்த்தம் நமக்கு முன்னால் இருக்கையில், போரைப் பற்றி ட்ரொட்ஸ்கி செய்தது போல், தொற்றுநோய் 'நம் தலைமுறையின் நனவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்' மற்றும் அதன் இடத்தைப் பிடித்துக்கொள்ள மறைமுகமாக என்ன வளர்ச்சியடையும்?' என்று கேட்பது நியாயமானதே.

Loading