உலகப் பொருளாதார வளர்ச்சியின் மீது டெல்டா மேகக்கூட்டம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் பொருளாதார நிறுவனங்களின் பொதுவான கண்ணோட்டம் என்னவென்றால், 1930களின் பெரும் மந்தநிலைக்குப் பின்னர் கோவிட்-19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட ஆழமான 2020 மந்தநிலைக்குப் பின்னர் உலகப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என்பதாகும்.

முக்கிய பொருளாதார மையங்களில் சமீபத்திய எழுச்சி இருந்தபோதிலும், வைரஸின் டெல்டா மாறுபாடு பரவுவதால், இந்த நம்பிக்கையான சூழ்நிலை இப்போது கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

இது இரண்டு காரணிகளின் விளைவாகும். முதலாவது, இலாபத்தில் தாக்கம் இருப்பதால், தொற்றுநோயை சமாளிக்க தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் மறுக்கிறது. இரண்டாவது, 'தடுப்பூசி தேசியவாதம்'. இதன் பொருள் உலகின் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகள் விநியோகங்களை இழந்து, கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தான மாறுபாடுகளை உருவாக்க அனுமதிக்கிறது.

கடந்த வாரம், உலகப் பொருளாதாரத்தின் நிலை குறித்த புதுக்குறிப்பில், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்குள் ஒரு குறிப்பிடத்தக்க பிளவை உருவாக்கியதை சுட்டிக்காட்டியது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா பாரிஸில் நடந்த ஆபிரிக்க பொருளாதார மாநாட்டிற்கு நிதியுதவி கூட்டத்தின் முடிவில் பேசுகின்றார் (Ludovic Marin, Pool via AP)

கடந்த இரண்டு தசாப்தங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்டுகளில், எழுச்சியடைந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படுபவை உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக இருந்தன. இது பெரிய பொருளாதாரங்களின் பங்களிப்பை விஞ்சியது. இந்த நிலைமை இப்போது மாறிவிட்டது.

இந்த ஆண்டு உலகளாவிய வளர்ச்சிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஏப்ரல் கணிப்பை 6 சதவிகிதமாக இருக்கும் என்பதை பராமரித்தது. ஆனால் அது எங்கிருந்து வரும் என்ற கணிப்பை மாற்றியது. இந்த ஆண்டு எழுச்சியடையும் மற்றும் வளரும் நாடுகளுக்கான கணிப்பை 0.4 சதவிகிதம் குறைத்து, 6.3 சதவிகிதமாக குறைத்தது. பைனான்சியல் டைம்ஸ் இதை 'இருண்ட கண்ணோட்டம்' என்றும் 'தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில்' மோசமாக இருந்தது என குறிப்பிட்டது.

அதே நேரத்தில், சர்வதேச நாணய நிதிய அபிவிருத்தியடைந்த நாடுகளின் வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை மேல்நோக்கி 0.5 சதவிகிதத்தால் திருத்தி 5.6 சதவீதமாக உயர்த்தியது.

'தடுப்பூசி கிடைத்தல் முக்கிய தவறான நிலைப்பாடாக உருவெடுத்துள்ளது. அதனுடன் உலகளாவிய பொருளாதார மீட்பு இரண்டு தொகுதிகளாக பிரிகிறது' என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது. சில நாடுகள் 'இந்த ஆண்டு செயல்பாட்டை மேலும் இயல்பாக்குவதை எதிர்பார்க்கலாம்', ஆனால் பல நாடுகள் 'நோய்த்தொற்றுகள் மீண்டும் எழுவதையும், இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பையும் எதிர்கொள்கின்றன' என்றது.

சர்வதேச நாணய நிதியம் கூறுகையில், தற்போது தொற்றுநோய்கள் மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் கூட, வைரஸ் வேறு இடங்களில் பரவும் வரை மீட்பு உறுதி செய்யப்படவில்லை. அந்த எச்சரிக்கை வழங்கப்பட்ட ஒரு வாரத்திலேயே உறுதி செய்யப்பட்டது. ஒப்பீட்டளவில் அதிக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நாடுகள் உட்பட டெல்டா மாறுபாடு தொடர்ந்து பரவி வருகிறது.

தொற்றுநோய் அதிக அளவு கடனுடன் சேர்ந்துள்ளது, மேலும் அமெரிக்காவில் நாணய நிலைமைகள் இறுக்கமடையத் தொடங்கினால் வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். 'மோசமான தொற்றுநோய் இயக்கவியல் மற்றும் இறுக்கமான வெளிப்புற நிதிய நிலைகள் இறுக்கமடைதல்' காரணமாக, இந்த பொருளாதாரங்களுக்கு 'இரட்டை தாக்கம்' இருக்கும் என்பது பற்றி சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது. இது உலகளாவிய வளர்ச்சியை அதன் முன்னறிவிக்கப்பட்ட மட்டத்திற்கு கொண்டு வரும்.

முன்னறிவிப்பு மாற்றம் குறித்து புதுப்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவு வர்ணனையில், சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் அபாயங்கள் மோசமாகி செல்கின்றன என்று எழுதினார்.

'மிகவும் தொற்றும்தன்மையுடைய வைரஸ் வகைகளின் தோற்றம், மீட்பை தடம் புரட்டி, 2025 க்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 4.5 டிரில்லியன் டாலர்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படலாம்,' என்று அவர் கூறினார். 'குறிப்பாக அமெரிக்காவில், பணவியல் கொள்கை கண்ணோட்டத்தை திடீரென மறு மதிப்பீடு செய்தால், நீட்டிக்கப்பட்ட சொத்து மதிப்பீடுகளுக்கு மத்தியில் நிதி நிலைமைகளும் திடீரென இறுக்கப்படும். அமெரிக்காவில் அரசாங்கத்தின் நிதிஉதவியளிப்புகள் எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருக்கலாம் என்பதை நிரூபிக்கலாம்” என்றார்.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள், அமெரிக்க பொருளாதாரம் தொற்றுநோயை தாக்கும் முன்பு இருந்ததை விட இப்போது பெரிதாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 6.5 சதவிகித வருடாந்த விகிதத்தில் பொருளாதாரம் வளர்ந்தது. ஆனால் இது பொருளாதார வல்லுநர்கள் முன்னறிவித்த 8.4 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தது. மேலும் 10 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் திரும்புவதற்கான முந்தைய கணிப்புகளை விட மிகவும் குறைவாக இருந்தது.

CNBC இல் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, Action Economics தலைமை பொருளாதார நிபுணர் மைக் எங்லண்ட், “அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீதான 'வேக வரம்பு', விநியோகச் சங்கிலி மீதான இடையூறுகளின் விளைவாக, 'நாங்கள் நினைத்ததை விட சற்று குறைவானது. மற்றும் பெரும்பாலான முன்னறிவிப்பாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட சற்று குறைவானது' என்று எழுதினார்.

பற்றாக்குறை நீடித்தால், மூன்றாம் காலாண்டில் வளர்ச்சிக்கான அதிக நம்பிக்கையான கணிப்புகள் கீழ்நோக்கி திருத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

டெல்டா மாறுபாடு பரவுவதால் தொற்றுநோய் மீண்டும் எழுந்திருப்பதாலும், அதை சமாளிக்க பைடென் நிர்வாகம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க மறுப்பதாலும், அமெரிக்க பொருளாதாரத்திற்கான வாய்ப்புகள் தொடர்ந்து மோசமடையும்.

அமெரிக்க வளர்ச்சியின் முக்கிய கூறுபாடு நுகர்வோர் செலவில் 11.4 சதவிகிதம் அதிகரிப்பு ஆகும். இது பில்லியன் கணக்கான நிதியுதவி திட்டத்தினால் தூண்டப்பட்டது. ஆனால் இது வரும் மாதங்களில் மங்கத் தொடங்கும்.

பொருளாதார கண்ணோட்டத்தில் நிதிய செய்தித்துறையில் கணிசமான குழப்பம் தோன்றுகிறது. உதாரணமாக, கடந்த வாரம், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு தலையங்க கட்டுரை பின்வருமாறு இருந்தது: 'டெல்டா மாறுபாடு உயரும் வரை, அமெரிக்க பொருளாதாரத்தின் வாய்ப்புகள் நன்றாக இருந்தன.' அடுத்த நாள் அதன் ஒரு தலையங்கம்: 'வழமைக்குமாறான கோவிட்-19 திருப்பத்தால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியை எதிர்நோக்குகின்றது' என்றிருந்தது.

யூரோ மண்டலத்தில் வளர்ச்சி விகிதங்களும் உயரத் தொடங்கியுள்ளன. ஆனால் இங்கே, குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மை உள்ளது.

கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரவு, 2020 ஆம் ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் பொருளாதாரம் 0.6 சதவிகிதம் சுருங்கியதைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் யூரோப்பகுதி பொருளாதாரம் 2 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மேலும் 0.3 சதவிகிதம் சரிந்தது. எதிர்பார்த்ததை விட சிறந்த முடிவாக பொருளாதார வல்லுநர்கள் 1.5 சதவிகித வளர்ச்சியை முன்னறிவித்தனர். இது பெரும்பாலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் அதிக வளர்ச்சியின் விளைவாக இருந்தது.

இருப்பினும், 19 நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு முக்கிய பொருளாதாரங்களான ஜேர்மனி மற்றும் பிரான்சில் இது நிலைமை வேறாக இருக்கின்றது. ஜேர்மனி, ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2.1 சதவிகித சுருக்கத்தை பதிவு செய்த பின்னர், அதன் பொருளாதாரத்தை 2 சதவிகிதம் விரிவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வளர்ச்சி 1.5 சதவீதம் மட்டுமே இருந்தது.

ஜேர்மனிக்கு அடுத்தபடியாக யூரோப்பகுதியின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான பிரான்ஸ் முதலில் மாறாமல் இருக்கும் என்று கூறப்பட்ட பின்னர் முதல் காலாண்டில் 0.9 சதவிகித வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்தது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில், கணிசமான நிச்சயமற்ற தன்மையும் உள்ளது. பொருளாதார நடவடிக்கைகளின் முக்கிய குறிகாட்டியான ஜூலை மாதத்திற்கான அதிகாரப்பூர்வ கொள்முதல் மேலாளர்களின் குறியீடு(purchasing managers’ index) ஜூன் மாதத்தில் 50.9 இலிருந்து 50.4 ஆகக் குறைந்தது. இது இன்னும் 50 க்கு மேல் இருந்த போதும், விரிவாக்கம் மற்றும் சுருக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான எல்லையைக் குறிக்கும் நிலை, தொற்றுநோயின் தொடக்கத்தில் பொருளாதாரம் பூட்டுதல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட பிப்ரவரி 2020 க்குப் பின்னர் இது மிகக் குறைந்த அளவாகும்.

பைனான்சியல் டைம்ஸின் படி இந்த குறியீட்டின் வீழ்ச்சி 'அதிகரித்து வரும் பணவீக்க கவலைகள், ஏற்றுமதி வளர்ச்சி சுருங்குதல் மற்றும் நாட்டின் சில பகுதிகளில் தீவிர வெள்ளத்தின் விளைவுகளை பிரதிபலிக்கிறது' என்றது.

இவற்றின் முக்கிய விடயமாக இருந்தது, நிதிய தொழில்நுட்ப (fintech) நிறுவனங்கள் என்றழைக்கப்படும் Ant Group கோடீஸ்வரர் Jack Ma, வாடகை வாகன பதிவுசெய்யும் Didi செயலி மற்றும் 100 பில்லியன் டாலர் தனியார் கல்வித் தொழில் உள்ளிட்டவை மீதான சீன அரசாங்கத்தின் அடக்குமுறையின் விளைவு உள்ளது. சீனாவின் மத்திய வங்கி நிதிய தொழில்நுட்ப துறையை மேலும் 'திருத்தியமைப்பதற்கு' அழைப்பு விடுத்துள்ளது.

சில இணைய ஜாம்பவான்களின் பெருகிவரும் சக்தி குறித்த ஆட்சியின் அரசியல் அக்கறையால், ஓரளவாவது ஊக்கப்படுத்தப்பட்ட இந்த அடக்குமுறை, சீனப் பொருளாதாரத்தின் உயர் தொழில்நுட்பத் துறைகளில் எதிர்கால வெளிநாட்டு முதலீடுகளில் ஒரு கேள்விக்குறியை இட்டுள்ளது. அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட சீன தொழில்நுட்பப் பங்குகள் 2008-09 உலகளாவிய நிதி நெருக்கடிக்கு பின்னரான மிக மோசமான மாதத்தைக் கொண்டிருந்தன. இரண்டு முக்கிய இணைய நிறுவனங்களான டென்சென்ட் மற்றும் அலிபாபாவின் பங்குகளுக்கான விலைகள் முறையே 16 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதம் சரிந்துள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் பைனான்சியல் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கருத்தில், மோர்கன் ஸ்டான்லியின் உலகளாவிய மூலோபாய நிபுணர் ருசிர் சர்மா, பொருளாதார வல்லுநர்கள் வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் திறக்கும் என எதிர்பார்க்கும் அதே வேளையில், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களான சீனா மற்றும் அமெரிக்காவின் நிலைமை அதன் பலத்தையும் மற்றும் காலத்தையும் கேள்விக்குள்ளாக்க காரணமுள்ளது என்றார்.

சீன தொழில்நுட்ப ஒடுக்குமுறையின் விளைவுகளை ஷர்மா சுட்டிக்காட்டினார். 'பழைய பொருளாதார' பொருட்களும் உற்பத்தியும் 'கடன் மற்றும் வீழ்ச்சியில் சிக்கி' உள்ளதால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி தொழில்நுட்ப துறையில் குவிந்துள்ளது. அடக்குமுறை தொடங்கியதிலிருந்து, அடக்குமுறை தொடங்கியதிலிருந்து, தொழில்நுட்பத் துறையின் சந்தை மூலதனம் மூன்றில் ஒரு பங்கு அல்லது சுமார் 1 டிரில்லியன் டாலர் குறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அரசாங்க தூண்டுதல் நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட நுகர்வோர் செலவினங்களின் தொடர்ச்சியான ஏற்றம் குறித்து சர்மா கேள்வி எழுப்பினார். டெல்டா மாறுபாடு நுகர்வோரின் எச்சரிக்கையை அதிகரிக்கும் என்றும், 'ஒரு தூண்டுதல் ஓட்டத்திற்குப் பின்னர், வளர்ச்சி விரைவாக வீழ்ச்சியடையும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

'நிதிய வட்டாரங்களில் எழுந்திருக்கும் விவாதம், பணவீக்கத்தின் உயர்வு தற்காலிகமானதாக இருக்குமா என்பதை மையமாகக் கொண்டிருக்கும் அதே வேளையில், பொருளாதார ஏற்றம் எதிர்பார்த்ததை விட அதிக நிலையற்றதாக இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் இது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

Loading