ஆப்கானிஸ்தான் தோல்வி ஆஸ்திரேலிய ஆளும் வட்டாரங்களுக்குள் அதிர்ச்சி அலைகளை அனுப்புகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மற்றும் தன் பங்காளிகள் சந்தித்த வரலாற்றுத் தோல்வி, ஆஸ்திரேலியாவின் ஆளும் வர்க்கத்தில் 70 வருட அமெரிக்க இராணுவக் கூட்டணியின் நம்பகத்தன்மை குறித்து ஆழமான அரசியல் நெஞ்செரிச்சலை உருவாக்குகிறது.

ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்து பதவிக்குவந்த தாராளவாத-தேசிய மற்றும் தொழிற் கட்சி அரசாங்கங்கள் உட்பட அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் பில்லியன் கணக்கான டாலர்கள் நிதியுதவியினாலும் வன்முறையினாலும் பதவிக்கு கொண்டுவரப்பட்ட காபூலில் ஊழல்மிக்க பொம்மை ஆட்சியின் வீழ்ச்சியைக் குறித்து புலம்புவதற்காக, அரசியல் மற்றும் ஊடக நிறுவனங்களில் 'அவமானப்படுத்துதல்', 'பெருங்கேடு', 'பேரழிவு' மற்றும் 'பீதியுற்ற தற்செயலான நிகழ்வு' ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

ஆஸ்திரேலியாவின் சிறப்புப் படைகளால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் உட்பட 20 வருட குற்றகர போரை மூடிமறைக்கும் கசப்பான குற்றச்சாட்டும் முயற்சிகள், சீனாவை எதிர்கொள்வதற்காக ஒரு பெரிய இராணுவ விரிவாக்கத்திற்கு அழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன.

தலிபான்களின் கைகளில் ஏற்பட்ட தோல்வியினால் ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தை நச்சரிப்பது, ஆப்கானிஸ்தானின் மிருகத்தனமான நடவடிக்கை மட்டுமல்ல மற்றும் இராணுவ பலத்தால் அமெரிக்க உலக மேலாதிக்கத்தை மீண்டும் வலியுறுத்தும் முழு தசாப்தகால மூலோபாயத்தின் முறிவை அம்பலப்படுத்துவதும் ஆகும்.

ஆஸ்திரேலியாவின் முதலாளித்துவ வர்க்கம் இராணுவ, உளவுத்துறை ஆதரவு, வெளிநாட்டு முதலீடு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் அதன் சொந்த ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவை நம்பியுள்ளது. 1942 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ச்சியடைந்ததிலிருந்து இவ்வாறே இருக்கின்றது. இது அப்போது, அதன் பாரம்பரிய பாதுகாவலரான பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அதிகாரம் இல்லை என்பதை நிரூபித்தது.

மேலும், கடந்த தசாப்தத்தில் ஒபாமா, ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகங்கள் சீனாவுடன் அதிகரித்துவரும் அமெரிக்க மோதலின் முன்னணியில் ஆஸ்திரேலியாவை அதிக அளவில் வைத்துள்ளன. சீனா ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும்.

இது தொடர்பாக பகிரங்கமாக கவலைகளை எழுப்புபவர்களில் அமெரிக்க கூட்டணியின் முன்னாள் தீவிர ஆதரவாளரான Australian’s இதழின் வெளிநாட்டு பிரிவு ஆசிரியர் கிரெக் ஷெரிடன் ஆவார். சனிக்கிழமையன்று, அவர் தனது சமீபத்திய தொடர் கட்டுரைகளில் 'ஆப்கானிஸ்தானில் அமெரிக்க அவமானத்தை' கடுமையாகக் கண்டித்து மீள்பதிவு செய்தார்.

ஷெரிடனின் சமீபத்திய கட்டுரை: 'நாங்கள் அமெரிக்க இராணுவ வலிமையை நம்ப முடியாது, எங்களுடைய இராணுவமும் ஒரு நகைப்புக்கிடமானது.' என்ற தலையங்கத்தை கொண்டிருந்தது. அவர் அமெரிக்காவிடமிருந்து நீண்டதூர ஏவுகணைகளை வாங்கியதை பாராட்டுவதனுடன் ஆரம்பித்து, விஷேடமாக சீனாவிடம் இருந்துவரும் ஆபத்தின் மத்தியில் எமது மோசமடையும் மூலோபாய சூழ்நிலையில் உதவுவதாக இருக்கும்” என எழுதினார்.

பின்னர் ஷெரிடன் கூட்டணி செனட்டர் மற்றும் முன்னாள் மேஜர் ஜெனரல் ஜிம் மோலனின் 'பேரழிவுகரமான போட்காஸ்டை' மேற்கோளிட்டு, ஆஸ்திரேலியாவின் ஆயுதப்படைகள் 'ஒரு தீவிரமான சண்டையில் ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்க முடியாது' என்று எச்சரித்தார். மோலனின் வார்த்தைகளில், 'ஒரு தடவை பாவிக்கக்கூடிய பாதுகாப்பு படை' என்பது 'முற்றிலும் மரணத்தை விளைவிக்கவோ அல்லது நிலைத்துநிற்கவோ கூடியதல்ல' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷெரிடன், சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான போரின் தயாரிப்பின் ஒருபகுதியாக அடுத்த பத்தாண்டுகளில் ஆயுதப் படைகளுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 575 பில்லியனுக்கும் மேலான, ட்ரோன் ஏவுகணைகள் உட்பட, 'எங்கள் பிராந்தியத்தில் பலத்தை எடுத்துக்காட்ட' இராணுவ செலவினங்களை கூர்மையாக அதிகரிக்க வலியுறுத்தினார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் (AP/Kiyoshi Ota)

காபூலின் திடீர் வீழ்ச்சி குறித்து பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் கலந்துரையாட ஜனாதிபதி ஜோ பைடென் வெளிப்படையாக மறுத்ததும் அல்லது பைடென் பதவிக்குவந்து நான்கு மாதங்களுக்கு பின்னரும் மொரிசனுடன் ஒரு நேரடிசந்திப்பு அல்லது வீடியோ அழைப்பை நடத்தாமல் இருப்பதும் இந்த ஏமாற்றத்தின் மற்றொரு வெளிப்பாடாகும்.

டொனால்ட் ட்ரம்புடன் நெருக்கமாக அடையாளம் காணப்பட்ட போதிலும், மொரிசனுடனான தனிப்பட்ட முறையிலான பகைமையால் இந்த அவமதிப்பை விளங்கப்படுத்த முடியாது என்பதே ஆஸ்திரேலிய உயரடுக்கிற்குள் உள்ள வெளிப்படையான பதட்டத்திற்கான காரணமாகும்.

தகவல்தொடர்பு பற்றாக்குறையானது அமெரிக்காவை ஒரு இராணுவ கூட்டாளியாக நம்புவது பற்றிய சந்தேகங்களை வலுப்படுத்துவதுடன், 'அமெரிக்காவை மீண்டும் பலமானதாக்கு' (ட்ரம்ப்) அல்லது 'அமெரிக்கா முதலில் ”(பைடென்) என்பதின் கீழ் வாஷிங்டன் தனது சொந்த புவிசார் நலன்களைப் பின்தொடர்கையில் தனது முன்னாள் நட்பு நாடுகளை கைவிட தயாராக உள்ளதா என்ற ஐயுறவுகளை வலுப்படுத்துகின்றது.

செப்டம்பர் 1, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தின் (ANZUS) 70 வது ஆண்டு நிறைவாகும். 1949 சீனப் புரட்சி மற்றும் 1950 இல் கொரியப் போர் தொடங்கியதற்கு பதிலளிக்கும் விதமாக சான் பிரான்சிஸ்கோவில் இராணுவக் கூட்டணியை ஸ்தாபிக்க இதில் கையெழுத்திடப்பட்டது.

கடந்த நவம்பரில், மொரிசன் ஆரம்பத்தில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடெனை ஆண்டுவிழாவைக் கொண்டாட ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைத்தார். ஏனென்றால் இந்த உறவு மிகவும் 'வியக்கத்தக்கது', 'ஆழமானது' மற்றும் 'தனிப்பட்டரீதியானது' எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த அழைப்பு காதில் விழவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, மொரிசனுடன் பைடென் ஒரு வீடியோ அழைப்பை மேற்கொண்டார். மேலும் இது ஒரு 'உளப்பூர்வமான கலந்துரையாடல்' என்று கூறி, 'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மிகவும் வலுவான கவனத்தை செலுத்துவதை' எடுத்துக்காட்டியது என்றார். இருப்பினும், மூன்று வாக்கியங்கள் கொண்ட வெள்ளை மாளிகை அறிக்கை மேலெழுந்தவாரியானதாக இருந்தது.

ஆப்கானிஸ்தான் தோல்வியின் தாக்கங்கள் குறித்த ஆளும் வட்டாரங்களில் உள்ள கவலை, முன்னாள் தொழிற் கட்சி பிரதமர் பௌல் கீட்டிங்கின் குற்றச்சாட்டில் வெளிப்பட்டது. தாராளவாத-தேசிய அரசாங்கம் ஆஸ்திரேலியாவை 'தேவையில்லாமல்' சீனாவை ஆத்திரமூட்டுவதன் மூலம் 'மூலோபாய முட்டுச்சந்துக்கு' இட்டுச்செல்கிறது என்றார்.

ஆப்கானிஸ்தான் பேரழிவை அடுத்து, கடந்த வாரம் Australian Financial Review இல் கீட்டிங்கின் தலையங்க கட்டுரை மொரிசன் அரசாங்கத்தை 'ஆஸ்திரேலியாவின் நலன்களை புறக்கணித்து' பெய்ஜிங்குடன் ஒரு மோதலுக்கு இட்டுச்செல்கின்றது மற்றும் “அமெரிக்காவிற்கு அடிபணிந்த ஒன்றாக முக்கியமாக வாஷிங்டனில் பார்க்க வைக்கின்றது” என்று குற்றம் சாட்டியது.

ஓரளவிற்கு, கீட்டிங்கின் பத்தி மூன்று தசாப்தங்களாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்து இலாபம் ஈட்டிய சுரங்கத்துறை அதிபர்கள் மற்றும் பிறரின் நலன்களை பிரதிபலித்தது. அதே நேரத்தில், அவர் வாஷிங்டனின் உலகளாவிய ஆதிக்கத்திற்கான அபிலாஷைகளை கேலி செய்ததுடன், அமெரிக்க கூட்டணியின் விசுவாசமான ஊழியராக 1983 முதல் 1996 வரை முதலில் பொருளாதார அமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் இருந்த தனது சொந்த வரலாற்றை மறுக்கின்றார்.

'சீனாவின் எழுச்சி வெறுமனே அமெரிக்காவின் திட்டத்தில் இருக்கவில்லை. அதன் இருப்பும் மற்றும் அது இந்த அளவில் இருப்பதும் அமெரிக்கா தன்னை விதிவிலக்கான நாடாகவும், தெய்வீக விருப்பத்தினை பரப்புபவராக கருதுவதற்கு ஒரு அவமானம்' என்று கீட்டிங் எழுதினார்.

சில வருடங்களாக, கீட்டிங் 'ஆஸ்திரேலியாவின் நலன்களை' 'வேறொரு நாட்டின் நலன்களுக்கு' கீழ்ப்படுத்தாத 'ஒரு சுயாதீன வெளியுறவுக் கொள்கைக்கு' அழைப்பு விடுத்தார். இந்த தேசியவாத பிரதிபலிப்பு, ஷெரிடன் மற்றும் மோலன் போன்ற நபர்களிலும் மற்றும் பெருநிறுவன ஊடகங்கள், இராணுவ-உளவுத்துறை சாதனங்களில், சீனாவுடனான அமெரிக்காவின் மோதல் காரணமாக ஆஸ்திரேலியாவின் மூலோபாய நிலையை வலுப்படுத்த ஒரு இராணுவ கட்டமைப்பைக் கோருகிறது.

கோவிட்-19 தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் விதமாக, அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் உலகின் ஆளும் வர்க்கங்களின் பேரழிவுகரமான இலாப உந்துதல் கொள்கைகளின் தாக்கத்தின் கீழ், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமடையும் நிலைமையிலும் இந்த இராணுவவாத விவாதம் நிகழ்கிறது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த மோசமான உள்மோதலில் அனைத்து பிரிவுகளின் விஷம்மிக்க தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் இயக்கத்திற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கு முன்வைக்கப்பட வேண்டும். இது போரின் மூலகாரணமான முதலாளித்துவ அமைப்பு முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

Loading