ஆஸ்திரேலியாவின் புதிய ஜனநாயக விரோத தேர்தல் சட்டங்களை தோற்கடிப்போம். "சோசலிஸ்ட்" என்ற பெயரில் கைவைக்காதே!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (SEP) கடந்த மாதம் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் திணிக்கப்பட்ட ஜனநாயக விரோத தேர்தல் சட்டங்களில் உள்ள முக்கிய விதிகளை எதிர்க்கிறது. இது முன்னர் பதிவு செய்யப்பட்ட எந்த அரசியல் கட்சியும் “சோசலிசம்” என்ற பெயர் உட்பட பொது அரசியல் கட்சி பெயர்களை பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் அதிகாரிகளை அனுமதிக்கும்.

மார்ச் 2019 இல் மெல்போர்னில் நடைபெற்ற அசாஞ்சிற்கு ஆதரவான சோசலிச சமத்துவக் கட்சி பேரணியின் ஒரு பிரிவு (Photo:WSWS media)

அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் (AEC) உட்பட எந்த முதலாளித்துவ அரசு நிறுவனத்திடமும் பரவலாக அறியப்பட்டதும் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியமான பெயர்களான கம்யூனிஸ்ட் அல்லது சோசலிஸ்ட் என்ற பெயர்களை பயன்படுத்துவதற்கு எந்தவொரு கட்சிக்கும் உள்ள உரிமையை ஒப்படைப்பதை சோசலிச சமத்துவக் கட்சி வலுவான முறையில் ஆட்சேபிக்கிறது.

வேறு எந்த அரசியல் கட்சியும், சோசலிஸ்ட் என்ற பெயரைக் கூறி அந்த பெயரின் மீது ஒரு சட்டபூர்வ ஏகபோகத்தை நிறுவ முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கூட நாங்கள் எதிர்க்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி அத்தகைய சட்டரீதியான தடையை ஏற்றுக்கொள்ளாது. 'சோசலிஸ்ட்' என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அனைத்து கட்சிகள் மற்றும் குழுக்களும் அதை பகிரங்கமாக அறிவிக்கும்படி அழைக்கிறோம்.

தாராளவாத-தேசிய கூட்டணி மற்றும் எதிர்க் கட்சியான தொழிற் கட்சி இணைந்து மக்களின் முதுகுக்குப் பின்னால் இச்சட்டத்தை ஆகஸ்ட் 25–26 அன்று 24 மணி நேரத்திற்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இது பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டிருக்காத பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்வது மட்டுமல்லாது, டிசம்பர் 2 இற்குள் முன்னர் இருந்த தொகையை மூன்று மடங்காக்கி திடீரென 1,500 உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பித்து தம்மை மறுபதிவு செய்ய கோரியது.

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம் ஒரு கட்சியை பதிவு செய்வதை இந்த சட்டம் தடை செய்கிறது. அது 1,500 உறுப்பினர்களின் பெயர்களை வழங்கினாலும் கூட அதன் பெயரில் முன்னர் பதிவுசெய்யப்பட்ட ஒரு கட்சியில் அப்பெயரின் ஒரு பகுதி இருந்தால், அது முதலில் மற்ற கட்சியிலிருந்து 'எழுத்துப்பூர்வ ஒப்புதல்' பெறாவிட்டால் அது கணக்கில் எடுக்கப்படமாட்டாது.

ஓரளவிற்கு, இந்த பிற்போக்குத்தனமான ஏற்பாடானது, தாராளவாத, தொழிற் கட்சி மற்றும் பசுமை போன்ற ஏற்கெனவே கோரப்பட்ட எந்தத் தலைப்பின் மீதும் தடை அதிகாரத்தை உருவாக்குகிறது. இது முதலாளித்துவ ஆளும் உயரடுக்கின் கட்டளைகளை பல தசாப்தங்களாகத் திணிக்கப்படுவதன் மூலம் ஆழ்ந்த அரசியல் அதிருப்தியை எதிர்கொள்ளும் அரசியல் ஸ்தாபகத்தின் தற்போதைய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் அப்பட்டமான முயற்சியாகும்.

இருப்பினும், இந்த சட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் உந்துதல்கள் மற்றும் போராட்டங்களுடன் தொடர்புடைய 'சோசலிஸ்ட்' மற்றும் 'கம்யூனிஸ்ட்' என்ற பெயர்களை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டுள்ளது.

கோவிட்-19 பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து இடங்களிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தோல்வியடைந்ததால் அரசியல் அதிருப்தி பெருகும் ஒரு சூழ்நிலையில், பெருநிறுவன இலாபத்தையும் மற்றும் தனியார் செல்வத்தின் குவிப்பையும் உருவாக்குவதற்கு பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கையையும் அடிபணிய செய்வதற்கு ஒரே பதிலாக இருப்பது சோசலிசத்தின் தேவை என்பது பற்றிய விவாதத்தை தடுக்கும், மட்டுப்படுத்தும் அல்லது குழப்பும் முயற்சியாகும்.

சோசலிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய இரண்டு சொற்களும் மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்திற்கு உரித்தானவை. அவற்றின் ஆரம்பகால வேர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையவை. அவை எந்த அரசியல் கட்சியின் தனிப்பட்ட சொத்தாகவும் இல்லை, அவ்வாறு ஆகவும் கூடாது.

சோசலிசம் என்பது தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் மற்றும் அபிலாஷைகளுடன் பரந்த அளவில் தொடர்புடையதும் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து தொழில்துறை புரட்சி ஒரு பரந்த தொழிலாள வர்க்கம் மற்றும் தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கி வளர வழிவகுத்ததிலிருந்து முதலாளித்துவ இலாப அமைப்புக்கு எதிரான போராட்டத்துடனும் தொடர்புபட்டது. பண்டைய இலத்தீன் வார்த்தையான sociare இல் இருந்து உருவாகி, ஒன்றிணைத்தல் அல்லது பகிர்தல் என்ற அர்த்தத்துடன், இது முதலாளித்துவ உற்பத்தி முறையால் இயல்பாக உருவாக்கப்படும் வறுமை, ஒடுக்குமுறை மற்றும் பிளவடைய செய்தல், சமூக சமத்துவமின்மைக்கு எதிரான போராட்டத்தின் ஒரே பொருளுடையதாக மாறியது.

1848 இல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வெளியிடுவதின் மூலம் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரால் புகழ்பெற்ற கம்யூனிசம், தொழிலாள வர்க்க இயக்கங்களுடன் பரவலாக தொடர்புடையதும், ஏங்கெல்ஸின் வார்த்தைகளில் முதலாளித்துவத்தை சீர்திருத்த அல்லது திருத்தியமைக்கும் அவநம்பிக்கையான முயற்சிகள் என்பதை விட 'முற்றுமுழுதான சமூக மாற்றத்தின் அவசியத்தை அறிவித்தது'. இது communis என்றஇலத்தீன் மொழியிலிருந்து, கம்யூனிஸிலிருந்து பெறப்பட்டது. இது 'சமூகத்திற்கு அல்லது சமூகத்தினுடையது' என்று மொழிபெயர்க்கப்படலாம். மேலும் சமத்துவவாதம் மற்றும் உற்பத்தி சக்திகளின் பொதுவுடமையின் அடிப்படையில் வர்க்கமற்ற சமுதாயத்திற்கான தேடலுடன் நீண்டகாலமாக தொடர்புடையது.

'சமூக ஜனநாயக' ஆஸ்திரேலிய தொழிற் கட்சி, பல்வேறு போலி-இடது 'சோசலிஸ்டுகள் மற்றும் உலக முதலாளித்துவ சக்திகளின் அழுத்தத்தின் கீழ் சோவியத் யூனியனின் அதிகாரத்துவ சீரழிவின் விளைவாக உருவான அமைப்புகளும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவற்றால் தவறான பெயர்களால் அதன் பெயருக்கு காட்டிக்கொடுப்பு மற்றும் அரசியல் குற்றங்கள் நடந்தாலும், இந்த வார்த்தை உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு அதிக முக்கியத்துவமும் மற்றும் ஆர்வமும் உள்ள ஒன்றாகும்.

இந்த துரோகங்களின் படிப்பினைகள் மற்றும் உண்மையான சோசலிசத்தின் இயல்புகளை தெளிவுபடுத்துவது, அரசாங்கத்தால் தடை செய்யப்படுவதில் இருந்து விடுபட்டு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஜனநாயக ரீதியான விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த புதிய சட்டங்கள், நீண்டகால ஜனநாயக-விரோத தாக்கங்களை கொண்டுள்ளன. ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி மற்றொரு கட்சியின் பெயரைப் பற்றி கட்சியின் பதிவு செய்யப்பட்ட திகதியை பொருட்படுத்தாமல் எந்த நேரத்திலும் எதிர்க்க அவர்கள் அனுமதிக்கிறார்கள். இதனால் ஒரு கட்சி பதிவு செய்யப்பட்ட பின்னரும் சவால்களுக்கு வழி திறக்கிறது.

இந்தச் சட்டம் குறிப்பாகப் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய எந்தப் பெயர்களையும் பரிந்துரைக்கவில்லை. தடை செய்யப்படுவதிலிருந்து விதிவிலக்கு பெற்றவை, 'செயல்பாட்டு' சொற்கள் (“இந்த” போன்ற), மக்களுக்கான கூட்டு பெயர்ச்சொற்கள் ('கட்சி' போன்ற), ஒரு நாட்டின் பெயர், 'நாடு' என்ற சொல் அல்லது ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட புவியியல் இடம் மற்றும் 'ஜனநாயக' என்ற சொற்கள் ஆகியவை மட்டுமே.

சட்டத்தின் உத்தியோகபூர்வ விளக்க குறிப்பின் படி, 'ஜனநாயக' என்ற வார்த்தை விதிவிலக்காகக் கருதப்படுகிறது, ஏனென்றால் அரசியல் கட்சி பெயரிடும் மரபுகளில் பரவலான வரலாற்றுப் பயன்பாடு மற்றும் அனைத்து ஆஸ்திரேலிய அரசியலின் உள்ளார்ந்த செயல்பாடுகளுடன் நேரடியாக தொடர்புடையதால் இது ஒரு தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது' என்பதாலாகும்.

அது ஒரு அடிப்படை பாசாங்குத்தனம். அடிப்படை ஜனநாயக உரிமைகளைக் வெட்ட நகரும் ஒரு பாராளுமன்ற உயரடுக்கு கூட்டாக 'ஜனநாயக' என்ற பெயரை பயன்படுத்துகின்றது.

கட்சிப் பதிவு இல்லாமல், கட்சிகளும் அவர்களின் தேர்தல் வேட்பாளர்களும் வாக்குச் சீட்டில் தங்கள் அரசியல் தொடர்புகளை அடையாளம் காண முடியாது. அவர்கள் எந்த கட்சிப் பெயரும் இல்லாமல், அல்லது விவரிக்கப்படாத 'சுயேச்சைகள்' என்று பரிந்துரைக்க வேண்டும். இது கட்சிகளின் அரசியல் வேலைத்திட்டங்களுக்காக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்வதற்காக வேட்பாளர்களை நிறுத்துவதற்கான அடிப்படை உரிமையை மறுக்கிறது, அத்துடன் வேட்பாளர்களின் கொள்கைகளை தெரிந்துகொள்ள வாக்காளர்களின் அத்தியாவசிய உரிமையும் மறுக்கப்படுகிறது.

மிக உடனடி இந்த அரசியல் நெருக்கடியில், இந்த சட்டங்கள் அரசியல் ஸ்தாபனத்திற்கு எதிரான எதிர்ப்பை நசுக்கும் முயற்சியும் மற்றும் அதன் பேரழிவான இலாபத்தால் உந்தப்படும் 'வைரஸுடன் வாழ்' என்ற கொள்கைகள் எதிர்வரவிருக்கும் மாதங்களில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சட்டம், கோவிட்-19 இனை உலகளாவிய அளவில் அழிப்பதற்கான ஒரு உண்மையான சோசலிச மாற்றீடு தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தின் மூலம் சோசலிச சமத்துவக் கட்சியினாலும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலுள்ள (ICFI) அதன் சகோதர கட்சிகளின் போராட்டம் பற்றிய விவாதத்தைத் தடம் புரளச் செய்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி இந்த சட்டங்களை இரத்து செய்யக் கோரி ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளதுடன் மற்றும் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் தேர்தலில் நிற்கும் ஜனநாயக உரிமைகள் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் கோருகிறது. அதே நேரத்தில், எங்கள் ஆதரவாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரிடமும் எங்கள் பதிவைத் தக்க வைத்துக்கொள்ளவும், இந்தத் தாக்குதலைத் தோற்கடிக்கவும் எங்களுக்கு உதவ சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் உறுப்பினராகுங்கள் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Loading