வகுப்புவாத “பசு பாதுகாப்பு” சட்டத்துடன் சேர்த்து “இந்துக்கள் உரிமைகளைப் பாதுகாக்க” இந்திய நீதிமன்றம் மோடிக்கு அறிவுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வட இந்திய மாநிலமான உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், 59 வயதான முஸ்லீம் மனிதரான ஜாவேத்துக்கு ஜாமீன் மறுத்திருந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இந்து-மேலாதிக்கவாதத்தினை சிந்தும் பிற்போக்குத்தனமான தீர்ப்பை வழங்கியுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் மாதத்தில், மாநிலத்தின் கடுமையான பசு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் பசுவை வதைத்த ”குற்றத்திற்காக” உத்தரப்பிரதேச காவல்துறையால் ஜாவேத் கைது செய்யப்பட்டார், அன்றிலிருந்து அவர் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்.

நீதிபதி சேகர் குமார் யாதவ் தனது 12 பக்க ஜாமீன் தீர்ப்பில் பல கடுமையான இந்து-வகுப்புவாத கவனிப்புகளை உள்ளடக்கியிருந்தார். அவர் தன்னை ஒரு கடுமையான இந்து வகுப்புவாதியாக கருதிக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய அரசாங்கத்திடம், 'பசு பாதுகாப்பை' 'இந்துக்களின் அடிப்படை உரிமையாக' ஆக்கவும், இந்திய நாடாளுமன்றத்தில் பசுவை ”தேசிய மிருகமாக” பிரகடனப்படுத்தும் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

2019 ஆகஸ்டில் டிக்கோயா போர்டைஸ் தோட்டத்தில் தாம் வசித்த லயன் அறைகள் தீயில் எரிந்து போன பின்னர் தற்காலிக கொட்டில்களில் சிறுவர்கள் படிக்கின்றனர். [WSWS media]

நீதிபதி குமாரின் கருத்துக்கள் அவரது வெளிப்படையான இந்து-வகுப்புவாத கண்ணோட்டம், மத்திய கால பின்தங்கிய நிலை மற்றும் அடிப்படை நீதி கொள்கைகளை அவமதிப்பதாக இருக்கிறது. 'பசு ஒரு முக்கிய பகுதியாக இந்தியாவின் பண்டைய நூல்களான வேதங்கள் மற்றும் மகாபாரதம் போன்றவற்றில் காட்டப்படுகிறது, அது இந்திய கலாச்சாரத்தை வரையறுக்கிறது மற்றும் அவ்வாறாகத்தான் இந்தியா அறியப்படுகிறது” என்று பண்டைய இந்திய மத நூல்களைப் பயன்படுத்தி நீதிபதி எழுதியுள்ளார்.

மொகலாய பேரரசர் ஷாஜஹானுக்காக கட்டப்பட்ட மற்றும் பாரம்பரிய இந்திய, பாரசீக மற்றும் ஒட்டோமான் துருக்கிய பகுதிகளை இணைக்கும் இந்திய கலாச்சாரத்தின் உலகப் புகழ்பெற்ற தயாரிப்பான தாஜ்மஹாலை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார் என்பதை சொல்லவே தேவையில்லை. அல்லது, இந்துஷ்தானி இசை, மொகலாய உணவு மற்றும் உருது மொழி உட்பட அரபு, பாரசீக, துருக்கிய, மற்றும் மத்திய ஆசிய முஸ்லிம்களின் கலாச்சாரத்தால் எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய கலாச்சாரம் வளப்படுத்தப்பட்டு மாற்றப்பட்டது என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொள்ள தவறி இந்திய கலாச்சாரம் குறித்து திரிக்கப்பட்ட வசைமாரியை பொழிந்தார்.

நீதிபதி யாதவ் கூற்றுப்படி, பசு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு என்பது ஒரு மதம் பற்றிய குறிப்பல்ல, அது நாட்டின் கலாச்சாரமாக இருக்கிறது. மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

மேலும் முட்டாள்தனமான கருத்துக்களை அவர் வெளியிட்டார், '[எப்போதெல்லாம்] நாம் நமது கலாச்சாரத்தை மறந்தோமோ அப்போது, வெளிநாட்டினர் நம்மைத் தாக்கி அடிமைப்படுத்தினார்கள், நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் மீது தடையின்றி தாக்குதல் நடத்தி கைப்பற்றப்பட்டதை நாம் மறந்துவிடக் கூடாது.'

வாழ்வதற்காக மாடுகளை வளர்ப்பவர்களுக்கு எதிராக 'மாட்டிறைச்சி உண்பவர்களை' கடுமையாக எதிர்த்த நீதிபதி, 'வாழ்வதற்கான உரிமை கொல்லும் உரிமைக்கு மேலானது மற்றும் மாட்டிறைச்சி உண்ணும் உரிமையை ஒருபோதும் அடிப்படை உரிமையாக கருத முடியாது' என்று வாதிட்டார். இந்து உரிமையின் பங்கு மற்றும் வணிகமயமான போலி விஞ்ஞான முட்டாள்தனத்தை உமிழ்ந்த அவர், 'பிராணவாயுவை (oxygen) உள்ளிழுக்கும் மற்றும் வெளியேற்றும் ஒரே விலங்கு பசு என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்' என்றார்.

இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பாஜக கட்சியால் ஊக்குவிக்கப்பட்டுவரும் மோசமான இந்துமத வகுப்புவாதத்தின் அடையாளமாக இருக்கிறது. இது 2014 முதல் இந்தியாவின் தேசிய அரசாங்கங்களுக்கு தலைமை தாங்கியது, கடந்த 23 ஆண்டுகளில் 13 தடவைகள் இந்தியாவின் மதச்சார்பற்ற நீதித்துறை என்று கூறப்படுவதில் மற்றும் அனைத்து நிலைகளிலும் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில், பல தசாப்த கால இந்து வலதுசாரிகளின் கிளர்ச்சியை முன்வைத்து, 16 ஆம் நூற்றாண்டு பாபரி மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு இந்து கோவில் கட்ட இந்திய அரசுக்கு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, இது டிசம்பர் 1992 இல் இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் உத்தரவை வெளிப்படையாக மீறி பாஜக மேலிட தலைவர்களால் தூண்டப்பட்டு, இந்து மத வெறியர்களால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது.

நீதிபதி குமாரின் கருத்துக்கள், மோடி அரசாங்கத்தால் இடைவிடாமல் முன் தள்ளப்படும் விஷமுள்ள இந்து மேலாதிக்க (இந்துத்துவா) நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இருக்கிறது. பரந்த வேலையின்மை, வறுமை மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவை குறித்து அதிகரித்து வரும் சமூக கோபத்தை பிற்போக்குத்தனமாக திசை திருப்புவதையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதையும் இது நோக்கமாக கொண்டிருக்கிறது. 2014இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மோடி அரசு, இதுவரையில் இந்தியாவின் தனி முஸ்லீம் பெரும்பான்மை மாநிலமாக இருந்து வந்த ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் அதன் சிறப்பு அரை தன்னாட்சி அரசியலமைப்பு அந்தஸ்து ஆகியவற்றை அகற்றுவது உட்பட ஒன்றன் பின் ஒன்றாக மோசமான வகுப்புவாத ஆத்திரமூட்டலை நடத்திவருகிறது. 'பசுவை பாதுகாப்பது' என்ற பெயரில், ஏழை முஸ்லிம்களை பயமுறுத்தி கொன்ற இந்து-சமூக விரோதிகள் குழுக்களை ஊக்குவித்து பாதுகாத்துள்ளது. இந்துத்துவா மற்றும் மோடி அரசின் வகுப்புவாதக் கொள்கைகளை விமர்சிப்பவர்களில் ஒரு புகழ்பெற்ற பத்திரிகையாளர் மற்றும் பல முக்கிய புத்திஜீவிகள் உட்பட, இந்துமத தீவிரவாத பயங்கரவாதிகளால் தண்டனையின்றி கொல்லப்பட்டுள்ளனர்.

இது 2018 ஆம் ஆண்டில் 227 மில்லியன் மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தை விட வேறு எந்த இடத்திலும் பாஜகவின் இந்துத்துவா தீவிரவாத செயல்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அங்கு, 34 மில்லியன் மிகப்பெரிய முஸ்லீம் மக்கள் தொகை உள்ளது.

உத்தரபிரதேசத்தின் பாஜக தலைமையிலான மாநில அரசு ஒரு இந்துமத மகான் (உயர் சாமியார்) மற்றும் பிரபல இந்து மேலாதிக்கவாதி யோகி ஆதித்யநாத் தலைமையில் மோடியும் அவரது முக்கிய உதவியாளர் அமித் ஷாவும், ஆதித்யநாத்தை தனிப்பட்ட முறையில் பாஜகவில் சேர்த்தனர். மேலும் அவரை 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் மாநில முதலமைச்சர் வேட்பாளராக்கினர்.

மாநில அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன், ஆதித்யநாத் தனது சொந்த இந்து-தீவிரவாத அமைப்பான இந்து யுவ வாஹினி (Hindu Yuva Vahini) ஐ நிறுவியிருந்தார். ஆட்சிக்கு முந்தைய ஒன்றரை தசாப்தங்களில், இந்த அமைப்பு வறிய முஸ்லிம்களை 'மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள்' என குற்றம்சாட்டி பல கொலைகாரத் தாக்குதல்களை நடத்தி கொன்றுள்ளது, சில சமயங்களில் அவர்களின் உடமைகளையும் குடியிருப்புகளையும் தீ மூட்டி எரித்துள்ளது.

மாநிலத்தை இரும்புக்கரம் கொண்டு ஆளும் ஆதித்யநாத், இப்போது அரசு நிர்வாகத்தை, குறிப்பாக மோசமான வன்முறையான மாநில காவல்துறையை பயன்படுத்தி அப்பாவி முஸ்லீம்கள் மற்றும் தலித்துகளை (முன்னாள் தீண்டத்தகாதவர்கள் என்று கூறப்படுவர்களை) குறிப்பாக பசு வதை அல்லது 'சட்டவிரோத' மத மாற்றம் என வேட்டையாடி துன்புறுத்துகிறார்.

முஸ்லிம்களுக்கு எதிராக வெளிப்படையாக தயாரிக்கப்பட்ட இரண்டு அவசர சட்டங்களை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். 1955 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது மாநில அரசாங்கத்தால் பசு வதை தடை கொண்டுவரப்பட்டது, எனினும் அது தற்போது ஆதித்யநாத்தின் 2020 இல் கொண்டுவரப்பட்ட பசு வதை தடுப்பு (திருத்தம்) சட்டத்தின் (Cow Slaughter Prevention (Amendment) Ordinance) மூலம் அதில் ஈடுபடுபவர்களுக்கு இனிமேல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் மாட்டிறைச்சி ஒரு மலிவான உணவாகும், இது பெரும்பாலும் குறிப்பாக ஏழையாக இருக்கும் முஸ்லீம்கள் மற்றும் தலித்துகள் போன்றவர்களின் ஊட்டச்சத்து-குறைவான உணவுக்கு துணைபுரிகிறது.

இரண்டாவது சட்டம், 'லவ்-ஜிஹாத்' (love-Jihad) சட்டம் என்று அழைக்கப்படுகிறது, இது முஸ்லீம்கள் இந்து பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்காக அவர்களை மயக்குகிறார்கள் என்றும், இது மற்றொருவகையான முஸ்லீம் புனிதப் போரின் (ஜிஹாத்) முனை என்றும் கூறப்படுகிறது. உண்மையில், இந்தச் சட்டம் முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை குற்றத்தனமுள்ளதாக்க பயன்படுகிறது. இந்து மத-பயங்கரவாதிகளாக அலைந்து திரியும் குழுக்கள், இத்தகைய தம்பதிகள் மீது வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளன, மேலும் அரசாங்கம் பல அப்பாவி இளம் முஸ்லீம் ஆண்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த பிற்போக்குத்தனமான சமகால வளர்ச்சிகளின் வேர்கள், துணைக் கண்டத்தினை வேண்டுமென்று முஸ்லீம் பாகிஸ்தானாகவும் மதச்சார்பற்றதாக கருதப்படும் இந்தியா என்றும் உருவாக்கப்பட்ட 1947 வகுப்புவாதப் பிரிவினையில் இருந்து வருகிறது. மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு முதன்மையான அரசியல் பொறுப்பாளியாகும், அது இந்தியாவை ஆட்சி செய்து வந்த பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக மற்றும் முஸ்லீம் லீக்கின் 'இரு தேசிய இன' கோரிக்கை மற்றும் இந்து மகாசபாவின் வகுப்புவாத ஆத்திரமூட்டல்கள் மற்றும் இன்றுவரை பாஜகவின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றுக்கு எதிராக முஸ்லீம் மற்றும் இந்து உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க இயலாயக்கற்றதாகவும் திராணியற்றும் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் வளர்ந்து வரும் இயக்கத்திற்கும், ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தின் தீவிர எதிர்ப்பு மனப்பான்மைக்கும் பயந்து, காங்கிரஸ் ஒரு ஐக்கிய மதச்சார்பற்ற இந்தியாவுக்கான தனது சொந்த வேலைத் திட்டத்தை காட்டிக் கொடுத்தது, லண்டனுடன் ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டதுடன், அதன் கீழ் அது காலனித்துவ அரசு எந்திரத்தை மரபுரிமையாகப் பெற்றது, பின்னர் அது பிரிவினையை நடைமுறைப்படுத்தியது.

இது காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தும் அரசியலமைப்பு சபையின் அப்பட்டமான ஒன்றாக இருக்கிறது. காலனித்துவத்திற்கு பிந்தைய இந்திய அரசியலமைப்பை இந்து-தீவிரவாத 'பசு-ஆதரவு குழு' க்களுக்கு தயாரித்துக் கொடுத்துள்ளது. இது சுதந்திரத்திற்கு பிந்தைய காங்கிரஸ் அரசாங்கம் இந்து வலதுசாரிகளுக்கு வழங்கிய சலுகைகள் மற்றும் சிபாரிசுகளில் ஒன்றாகும். என்றாலும், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியுடனான நேரடி ஒத்துழைப்பு ஆகியவற்றின் காரணமாகவும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்காமை காரணமாகவும் இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியன அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டு மதிப்பிழந்திருந்தது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 'மதச்சார்பற்ற' இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவு 1947 முதல் உருவாக்கப்பட்டு 1950 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது, வெளிப்படையான 'உத்தரவு' உட்பிரிவு, பிரிவு 48 இன் படி 'பசுக்கள் மற்றும் கன்றுகள், பால் கறக்கும் மற்றும் இழுவை கால்நடைகள் ஆகியவற்றை கொல்வதைத் தடுக்கும்' சட்டத்தை வகுக்க இது இந்திய அரசுக்கு உத்தரவிடுகிறது.

காங்கிரஸ் கட்சி, அதன் தலைமையில் இந்து வகுப்புவாதிகளின் கணிசமான அளவு பிரிவை உள்ளடக்கியிருந்தது, அடுத்த மூன்று தசாப்தங்களில், இந்திய அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி, தொடர்ந்து மையத்தில் அதிகாரத்தை வைத்திருந்தபோது, இந்து வலதுசாரிக்கு அது உரமிட்டது. இந்திய முதலாளித்துவ அரசமைப்பில் ஒரு சமயம் விளிம்பில் இருந்த இயக்கத்தை, ஒரு சட்டபூர்வமான பகுதியாக மாற்றுவதன் மூலம் இது முதன்மையானதாகவும், சாதி மற்றும் வகுப்புவாதப் பிரிவினைகளை வளர்த்தது, இதன் மூலம் இந்தியாவின் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறக் உழைக்கும் மக்களிடமிருந்து அதிகரித்து வரும் சமூக எதிர்ப்பைத் தணிப்பதற்கான அதன் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பாஜகவின் பிற்போக்குவாத இந்துமத மேலாதிக்க செயற்திட்டங்களுக்கு காங்கிரஸ் சலுகைகளை வழங்கியது. இது இறுதியில் 1992 இல் பாபர் மசூதியை வீம்புத்தனமாக மற்றும் சட்டவிரோதமாக இடிப்பதற்கு வழிவகுத்தது, மேலும் பாஜக தோன்றுவதற்கான நிலைமைகளை உருவாக்க உதவியது, முதலில் தேசிய அரசாங்கத்தின் கட்சியாகவும், இப்போது இந்திய முதலாளித்துவத்தின் முதன்மையான கட்சியாகவும் இருக்கிறது.

ஐக்கிய சோசலிசத்திற்கான போராட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை உட்பட தெற்காசியாவின் அனைத்து நாடுகளின் உழைக்கும் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தொழிலாள வர்க்க தலைமையிலான முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்குவது தான் இந்த நச்சு வரலாற்று பாரம்பரியத்திலிருந்து வெளியேற ஒரே வழி.

Loading