பிரெஞ்சு பெற்றோர்கள் இங்கிலாந்தில் அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்த அழைப்பை ஆதரிக்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலக சோசலிச வலைத் தளத்தால் ஆதரவளிக்கப்படும் இங்கிலாந்தில் அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்தத்திற்கான லீசா டியஸ் இன் அழைப்புக்கு பிரான்சில் தொழிலாளர்களும் பெற்றோர்களும் ஆதரவளிக்கின்றனர்.

பள்ளிகளை மீண்டும் திறப்பதன் மூலம் குழந்தைகளிடையே கொரோனா வைரஸ் தடையின்றி பரவ அனுமதிக்கும் உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களின் கொள்கைகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இது சர்வதேச அளவில் தற்காலிக பூட்டுதல்கள் மற்றும் ஒருங்கிணைந்த பொது சுகாதார நடவடிக்கைகளை இணைப்பதன் மூலம், கோவிட்-19 ஐ ஒழிப்பதற்கான கோரிக்கையை எழுப்புகிறது.

மே 3, 2021, பாரிஸின் மேற்கில் உள்ள லு செனேயில் மாணவர்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். (AP Photo/Michel Euler)

வேலைநிறுத்தத்திற்கான வேண்டுகோள் பிரான்சில் பெற்றோர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தைப் போலவே, மக்ரோன் அரசாங்கம் பிரான்சில் உள்ள குழந்தைகளிடையே சோதிக்கப்படாமல் வைரஸ் பரவுவதை அனுமதிக்கிறது. நேற்று, பிரான்சில் கொரோனாவால் 40 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அவர்களில் 9 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் இருந்தனர். ஆகஸ்ட் 20 இல் ஒரு குழந்தை உட்பட, தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து குறைந்தது பத்து வயதிற்குட்பட்ட ஏழு குழந்தைகள் நாட்டில் இறந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மற்றவர்கள் சேதமளிக்கும் நீண்ட கோவிட் மற்றும் இன்னும் அறியப்படாத விளைவுகளுக்கு ஆளாகியுள்ளனர்.

மக்ரோன் அரசாங்கம் பள்ளிகள் மூலம் வைரஸ் பரவுவதற்கு மேலும் நெறிமுறைகளை தளர்த்துவதன் மூலம் பதிலளித்து வருகிறது, அக்டோபர் 4 ஆம் தேதி சில மாவட்டங்களில் ஆரம்ப பள்ளிகளில் முகமூடி அணிவதை கைவிடுகிறது, மேலும் ஒரு தொற்று கண்டறியப்பட்ட பின்னரும் வகுப்புகளை மூடுவதைத் தடுக்கும் ஒரு புதிய கொள்கையை முயற்சிக்கிறது.

WSWS நிருபர், கோவிட்-19 தொற்றுநோய் குறித்த அரசின் கொள்கையை எதிர்த்து நிறுவப்பட்ட, மறக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் குழந்தைகள் சங்கத்தின் (Forgotten Schools and Children Association) உறுப்பினர் எலிசா செனோவிடம் பேசினார்.

பிரிட்டனில் லீசா தொடங்கிய அழைப்பு பற்றி கேட்டபோது, எலிசா கூறினார்: 'நாங்கள் அதற்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம். நாங்கள் தனிநபர்களாகவும், எங்கள் பள்ளிகளை பாதுகாப்பாக வைக்க போராடும் பெற்றோர்களின் குழுவாகவும் ஆதரிக்கிறோம். அவர்கள் [பிரிட்டனில்] எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் நன்கு புரிந்துகொள்கிறோம், ஏனென்றால் எங்களுக்கும் அதே பிரச்சினைகள் உள்ளன. கிரேட் பிரிட்டனில் குழந்தைகளைப் பாதுகாக்க எதிர்வினையாற்றும் இந்த பெற்றோரை நாங்கள் பாராட்டுகிறோம் என்று கூட நான் கூறுவேன். அவர்களின் முன்முயற்சியை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம் ... பள்ளியில் தொற்றுநோய்களைத் தடுக்க முடியும் என்பதால், இது குழந்தைகளுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஆபத்து.”

மக்ரோன் அரசாங்கத்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் செயல்படுத்தப்பட்ட கொள்கைகளை எலிசா விமர்சித்தார்: “இது கிரேட் பிரிட்டனில் உள்ள அதே பிரச்சனை. குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட அனுமதிக்க முடியாது. அவர்களின் கடைசி பாதுகாப்பும் இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, ஏனென்றால் பிரான்சில் அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள், ஆனால் இப்போது இது மாற்றப்பட உள்ளது. இது 5 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கானது. ஜனாதிபதி எப்போதும் சொல்வார் குழந்தைகளுக்கு எப்போதுமே முன்னுரிமை என்று இது எப்படி சாத்தியம்?, ஆனால் அதே நேரத்தில் ... அவர்களுக்கு காற்று சுத்திகரிப்பான்கள் போன்றவற்றைக் கூட வழங்காமல் இந்த பாதுகாப்பை திரும்பப் பெறுகிறார்கள்?'

வேலைநிறுத்தத்திற்கான லீசாவின் அழைப்புக்கு அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலுமான சர்வதேச ஆதரவை எலிசா வரவேற்றார். அவர் கூறினார், மற்ற நாடுகளில் உள்ள பெற்றோர்களைப் போலவே, 'பிரெஞ்சு பெற்றோர்கள் இந்த முயற்சிக்கு ஒற்றுமை காட்டுவார்கள் என்று நம்புகிறோம். இறுதியாக, குழந்தைகளின் நலன்களைப் பாதுகாப்பது உலகளாவிய பிரச்சினை, அது தேசிய எல்லைககளுக்கு அப்பாற்பட்டது. துரதிருஷ்டவசமாக நம் அரசாங்கங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்றன.”

அரசின் கொள்கைகள் மற்றும் உத்தியோகபூர்வ தவறான தகவல்களால் ஒவ்வொரு நாட்டிலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பெரும் சிரமங்களை எலிசா சுட்டிக்காட்டினார்: “இங்கே, குழந்தைகள் மருத்துவ சங்கம் COVID-19 ஐ காய்ச்சலுடன் ஒப்பிடும் சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்கிறோம்! … நீண்ட கோவிட் அபாயங்கள் அல்லது சம்பந்தப்பட்ட பிற நீண்ட கால அபாயங்கள் குறித்து பெற்றோர்களுக்கு நன்கு தெரிவிக்கப்படவில்லை.”

Aix-en-Provence இல் முன்-பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் இரண்டு மாணவர்களின் தாயான அமான்ட், WSWS இடம் கூறினார், “நான் பல காரணங்களுக்காக இங்கிலாந்தில் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறேன். மிகவும் தீவிரமான நெறிமுறைகளை வகுத்துள்ள பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, கொரோனா வைரஸ் அபாயத்தை எதிர்கொள்ளும் குழந்தைகள் பிரெஞ்சு அரசால் பாதுகாக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை ... '

அவர் மேலும் கூறுகையில், 'என்னைப் போன்ற பெற்றோரின் கவலைகள் எந்த எதிர்க் கட்சியுடனோ அல்லது பெற்றோர் சங்கத்துடனோ தொடர்பட்டதல்ல. @Ecole_Oubliee என்ற குழு மட்டுமே எங்கள் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்துள்ளது. மற்ற பெற்றோர்களைப் போலவே, பாலைவனத்தில் பிரசங்கம் வைப்பது போன்ற எண்ணம் எனக்கும் உள்ளது ... ஆங்கில வேலைநிறுத்தம் எங்கள் குரலை நீட்டிக்க அனுமதிக்கும், ஆனால் அது தொடரப்பட வேண்டும் மற்றும் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.”

மத்திய பிரான்சின் சொன்ஸ் (Sens) பகுதியைச் சேர்ந்த, ஒன்று மற்றும் மூன்று வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான ரபாய்ல் லாபோத்ர், அக்டோபர் 1 பள்ளி வேலைநிறுத்த அழைப்பை ஆதரித்ததை விளக்கினார். 'ஆம், பெரியவர்களிடையே நிறைய இறப்புகளை ஏற்படுத்தும் இந்த வைரஸ், ஒரு கடுமையான காய்ச்சலாக, தொற்று முடிந்தவுடன் பாதிப்பில்லாததாக, எங்களுக்கு காட்டப்படடுள்ளது, ஆனால் அது உண்மையல்ல. மூளை, கணையம், இதயம் மற்றும் நுரையீரல் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளையும் COVID பாதிக்கிறது என்று பல விஞ்ஞான ஆய்வுகள் காட்டுகின்றன.

ரபாய்ல் லாபோத்ர்

'எல்லோரும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படவில்லை என்பது உண்மையாக இருந்தாலும், இது பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் ஆரோக்கியமானவர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் எல்லோரையும் பாதிக்கிறது. மேலும், ஏற்படும் சேதம் ஒவ்வொரு விஷயத்திலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் பிரான்சில், குழந்தைகளைப் பொறுத்தவரை, அரசாங்கம் அவர்களின் ஆரோக்கியத்தில் வைரஸின் தாக்கத்தை முடிவில்லாமல் குறைக்கிறது, டெல்டா மாறுபாடு மிகவும் ஆபத்தானது மற்றும் அவர்களைப் பாதிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம்.” மேலும் அவர் குறிப்பிடுகையில், 'COVID இருந்த குழந்தைகளுக்கு உளவியல் பிரச்சினைகள் மட்டுமே உள்ளன, அது பூட்டுதலின் வேதனையால் ஏற்படுகிறது' என்று சொல்லப்படுகிறது.

'என்னைச் சுற்றியுள்ளவர்களுடன் இந்த சூழ்நிலையை நான் குறிப்பிடும் போது ... அரசாங்கம் ஏன் குழந்தைகளுக்கு தீங்கு செய்ய விரும்புகிறது என்று என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது,' என்று அவர் கூறினார். 'பள்ளிகளிலும் பொது இடங்களிலும் அவற்றின் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு முதலீடு செய்வது ஒரு செலவை உள்ளடக்கியது, கொரோனா வைரஸின் தாக்கத்தைப் பற்றி தெளிவாகக் குறைத்து மதிப்பிடப்படுகிறது, ஆனால் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சிக்கனத்தை தொடரும் பிரெஞ்சு அரசுக்கு இது இன்னும் பெரியது.'

'ஒரு நச்சு வளையம் இருப்பதாக நான் நினைக்கிறேன்,' அவர் மேலும் கூறினார், 'பொருளாதார உலகம் (நிதி மற்றும் பெரு வணிகம்) ஒரு புதிய கடுமையான பூட்டுதலை விரும்பவில்லை, நாங்கள் வைரஸை அழிக்க விரும்பினால் அது தவிர்க்க முடியாதது. இந்த அடுக்கு, விஞ்ஞானிகள் மற்றும் ஆளுமைகளை தெளிவின்மையை அறிமுகப்படுத்த அல்லது கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாதிட ஊக்குவிக்கிறது.”

Loading