முன்னோக்கு

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உண்மை நிலை

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உலகம் முழுவதும், வட அமெரிக்கா முதல் ஆசியா வரை, கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் கைவிட்டு வருகின்றன, பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் வெகுஜனக் கூட்டங்களை மீண்டும் திறக்கின்றன. இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த, கொரோனா வைரஸ் தொற்றுநோய் திறம்பட முடிந்துவிட்டது என்ற தவறான கூற்றை ஊடகங்கள் முடிவில்லாமல் ஊக்குவிக்கின்றன.

உண்மை நிலை இதற்கு நேர்மாறானது. கடந்த ஏழு நாட்களில், அமெரிக்காவில் 620,000 க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன மற்றும் தொற்றுநோயின் விளைவாக குறைந்தது 10,000 உத்தியோகபூர்வ இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன. உலகளவில், புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 2.8 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 48,000 பேர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த லைரஸ் தோன்றியதிலிருந்து, கிரகத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்ந்து கொடிய அச்சுறுத்தலாக உள்ளது.

அக்டோபர் 7, 2021 வியாழக்கிழமை ரஷ்யாவின் ஓம்ஸ்க் நகருக்கு வெளியே உள்ள கல்லறையில் ஒரு கோவிட்-19 பாதிக்கப்பட்டவரை அடக்கம் செய்யும் போது பாதுகாப்பு உடையை அணிந்த ஒரு புதைகுழி தொழிலாளி நிற்கிறார் [Credit: AP Photo/Uncredited]

இத்தகைய புள்ளிவிவரங்கள் நியூ யோர்க் டைம்ஸ் வியாழக்கிழமை போல் க்ரூக்மன் எழுதிய 'விஷயங்கள் நன்றாக வரப்போகிறது என்றால் என்ன?' என்ற தலைப்பில் ஒரு கருத்தை வெளியிடுவதைத் தடுக்கவில்லை. க்ரூக்மனின் கூற்றுப்படி, மகத்தான மனித இழப்புகள், 'எங்கள் அதிருப்தியின் கோடைக்காலத்தின்' முடிவாகவே பார்க்கப்பட வேண்டும். டைம்ஸ் கட்டுரையாளரின் வார்த்தைகளின்படி, ஜூன் 21 மற்றும் செப்டம்பர் 22 க்கு இடையில் அமெரிக்காவில் 160 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 86,000 பேர் இறந்துள்ளனர் என்பது முக்கியமல்ல.

அதற்கு பதிலாக, க்ரூக்மன் வாதிடுகையில், அமெரிக்காவில் தொற்றுக்கள் குறைந்து வருவதாலும், மத்திய அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட தடுப்பூசி கட்டளைகளாலும், மக்கள் 'அலுவலகத்திற்குச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள், சாப்பிடுவதற்கு வெளியே செல்லும்போது மற்றும் மிக முக்கியமாக - அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது பாதுகாப்பாக இருப்பதை உணர முடியும். மேலும், 'அபாயகரமான செயல்களில் ஈடுபடுவதற்கு' தொழிலாளர்கள் தங்கள் 'விருப்பமின்மையை' சமாளிக்க வேண்டும் மற்றும் மீண்டும் திறப்பு மற்றும் பல்லாயிரக்கணக்கான தவிர்க்க முடியாத முன்கூட்டிய இறப்புகளை ஏற்க வேண்டும்.

டைம்ஸ் கட்டுரை 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் இல்லை என்ற சங்கடமான உண்மையையும் புறக்கணிக்கிறது, அதாவது கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் இன்னும் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பெடியாட்ரிக்ஸின் (American Academy of Pediatrics) தரவு, ஒவ்வொரு வாரமும் நூறாயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்படுவதையும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் காட்டுகிறது. இந்த நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை க்ரூக்மன் 'மிக முக்கியமானவை' என்று கருதுவதால், குழந்தைகள் மீண்டும் பள்ளிகளுக்கு வருவதால் ஏற்படுகிறது.

இது மற்றய நாடுகளில் தொற்றுநோய் பரவுவதையும் புறக்கணிக்கிறது. தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று கிழக்கு ஐரோப்பா. போலந்து கடந்த வாரத்தில் 11,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களையும் 175 புதிய இறப்புகளையும் சந்தித்துள்ளது, இவை இரண்டும் முந்தைய வாரத்தை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் 82,000 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் மற்றும் கிட்டத்தட்ட 1,700 பேர் இறந்துவிட்டதாக உக்ரேனிலும் இதேபோன்ற அதிகரிப்பு உள்ளது. ருமேனியாவில், ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் தொற்றுக்கள் 89,000 ஆக உயர்ந்துள்ளது, இது 28 சதவீதம் அதிகரிப்பாகவும், அதே நேரத்தில் இறப்புகள் வாரத்திற்கு 1,762 ஆகவும் உயர்ந்து, 49 சதவீதம் அதிகரித்தது.

ஐரோப்பாவில் தொற்றுநோய்க்கு பதிலளிக்கும் ஒரு முன்மாதிரியாகப் போற்றப்படும் ஜேர்மனியில் கூட, முந்தைய ஏழு நாட்களுடன் ஒப்பிடுகையில், கடந்த ஏழு நாட்களில் புதிய தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த வாரத்தில் தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் முறையே 68,000 மற்றும் 1,700 ஐ எட்டியுள்ளன.

மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்று ரஷ்யா, சமீபத்திய வாரங்களில் வழக்குகள் மற்றும் தொற்றுக்கள் கடுமையாக அதிகரித்துள்ளன. செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து நாட்டில் தினசரி புதிய தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன மற்றும் கடந்த டிசம்பர் மாதம் பார்த்த உச்சத்தை நெருங்குகிறது. இந்த வெடிப்பின் விளைவாக, கடந்த வாரம் நாட்டில் 6,400 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சூடான் மற்றும் சோமாலியா ஆகியவை தங்கள் தொற்றுக்கள் மற்றும் இறப்புக்கள் எண்ணிக்கையில் உயர்வைக் கண்ட பிற நாடுகளில் அடங்கும். அமெரிக்காவின் மறைமுக அல்லது நேரடி அமெரிக்க இராணுவத் தலையீடுகளின் விளைவாக பல வருடங்களாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு ஆபிரிக்க நாடுகளிலும், புதிதாகப் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதே காலப்பகுதியில் இறப்புகள் சூடானில் இருமடங்காகவும், சோமாலியாவில் ஐந்து மடங்குக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நூறாயிரக்கணக்கான புதிய தொற்றுக்களின் பல விளைவுகளில், தடுப்பூசியை முழுமையாக எதிர்க்கும் சாத்தியக்கூறு உட்பட, கொரோனா வைரஸின் புதிய மற்றும் அதிக தொற்று மாறுபாடுகளின் தோற்றம் தவிர்க்க முடியாமல் நிகழும். இத்தகைய மாறுபாடு, க்ரூக்மனின் பாங்லோசியன் (Panglossian நம்பத்தகாத நம்பிக்கை) முன்கணிப்பின் கீழ் அமெரிக்காவில் தொற்றுநோய் முடிவடைகிறது, தவிர்க்க முடியாமல் தொற்று அலைகளை மீண்டும் தொடங்கும் மற்றும் இறப்பு அலைகளை தவிர்க்க முடியாமல் மீண்டும் உருவாக்கும்.

அமெரிக்காவின் நிதி தன்னலக்குழு இந்த ஆபத்துகளுக்கு கண்மூடித்தனமாக உள்ளது, மாறாக பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறப்பதில் கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவில் மீண்டும் திறப்பதற்கான கடைசி படியாக வெகுஜன கலாச்சார நிகழ்வுகள் நேரில் மீண்டும் தொடங்கப்பட்டது. டெட்ராய்ட் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா, இசைக்கலைஞர்கள் தங்கள் இசை நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு 20 சதவிகிதம் சம்பளத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, விற்கப்பட்ட இசை நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதேபோல், பாஸ்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா செப்டம்பர் இறுதியில் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.

இது ஒரு சர்வதேச நிகழ்வு. உலக தொற்றுநோயின் ஆபத்தான இடங்களான இந்தியா மற்றும் பிரேசில் உட்பட இங்கிலாந்து அக்டோபர் 11 அன்று 47 நாடுகளை பயணத்திற்கு பாதுகாப்பற்ற நாடுகளின் 'சிவப்பு' பட்டியலில் இருந்து நீக்குகிறது. பாலி, இந்தியா மற்றும் வியட்நாம் அனைத்தும் தங்கள் சொந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாம், ஜூலை முதல் அதன் 800,000 கொரோனா வைரஸ் தொற்றுக்கள் மற்றும் 20,000 கொரோனா வைரஸ் இறப்புகளை அனுபவிக்கையில், உள்நாட்டு விமான சேவைகளை தொடங்குகிறது மற்றும் 2022 கோடைகால சுற்றுலாப் பருவத்திற்கு முழுமையாக நாட்டை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தானில், ஒவ்வொரு நாளும் 1,200 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட புதிய இறப்புகள் இருந்தபோதிலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் திறக்க இது சரியான நேரம் என்ற வாதம் மிகவும் கொலைகாரமானது மற்றும் தவறானது. அமெரிக்காவில் தொற்றுக்களின் எண்ணிக்கை சற்றே குறைந்திருந்தாலும், தொற்றுநோயின் அனைத்து காலங்களையும் விட தொற்று விகிதம் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி உச்சங்களைத் தவிர அதிகமாக உள்ளது. மேலும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பில் தொடங்கி ஜோ பைடெனின் கீழ் தொடர்ந்து, சோதனைகளை கட்டுப்படுத்துதல், முறையற்ற தொடர்புத் தடமறிதல் மற்றும் தரவுகளின் வெளிப்படையான பொய்மைப்படுத்தல் உள்ளிட்ட உண்மையான தொற்றுக்களை மூடிமறைக்க ஒரு முறையான முயற்சி நடந்து வருகிறது.

தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் இதே போன்ற வாதங்கள் பொருளாதாரம் மீண்டும் திறப்பது பாதுகாப்பானது என்று அர்த்தப்படும் என்பதை தொழிலாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது மார்ச் 2020 இல் ஆரம்ப பூட்டுதல்களின் பின்னணியில், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் கூட்டாட்சி கொள்கையாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் தொற்றுக்களில் சிறிது குறைவு, போதுமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற பிற முக்கியமான சாதனங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்ற கூற்றுக்களுடன் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படும் ஆட்டோ தொழிற்சாலைகள் மற்றும் பிற பகுதிகளை மீண்டும் திறக்க ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பயன்படுத்தப்பட்டது.

முடிவுகள் கணிக்கத்தக்க வகையில் பேரழிவை தரும். கோடையில் இரண்டாவது அலை மேலும் பல்லாயிரக்கணக்கான இறப்புகளைக் கண்டது, அதைத் தொடர்ந்து சில வரையறுக்கப்பட்ட பூட்டுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சோதனையின் அதிகரிப்பு மற்றும் சிகிச்சையின் வளர்ச்சி ஆகியவை மீண்டும் திறப்பது பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் அவை அகற்றப்பட்டன. இது, அமெரிக்காவிலும் உலகளவிலும் இன்றுவரை காணப்பட்ட தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பை தொடர்ந்தது.

COVID-19 ஐ ஒழிக்க தொழிலாளர்கள் போராட வேண்டும். இந்த முன்னோக்கின் ஆரம்ப வெளிப்பாடு இங்கிலாந்தின் பெற்றோர் லிசா டியஸால் குரல் கொடுக்கப்பட்டது, அவர் அக்டோபர் 1 அன்று தொற்றுநோய்களின் போது பாதுகாப்பற்ற மறுதொடக்கங்களுக்கு எதிராக முதல் உலகளாவிய பள்ளி வேலைநிறுத்தத்தை நடத்தி, இப்போது இரண்டாவது நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில், 'எங்கள் அரசியல்வாதிகள் எங்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை என்பதால், நான் இன்னொரு பள்ளி வேலைநிறுத்தத்தை முன்மொழிகிறேன். ஒரு வலுவான செய்தியை, உலகளாவிய செய்தியை அனுப்புவோம், எங்கள் குழந்தைகள் சேதப்பட நாம் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எளிதான இலக்குகளாக இருக்கக்கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த முயற்சியானது, தொழிலாள வர்க்கத்தின் பரந்த உணர்வுகளை வெளிப்படுத்துகிறது, குறிப்பாக டியஸின் சமீபத்திய நடவடிக்கைக்கான அழைப்பு 24 மணி நேரத்தில் 42,000 க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. மில்லியன் கணக்கானவர்கள் தொற்றுநோயின் மோசமான நிலையை தணிப்பதற்காக மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட இரண்டு வருட தேவையற்ற துன்பம் மற்றும் மரணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விஞ்ஞான அடிப்படையிலான மூலோபாயத்தையும் தேடுகிறார்கள்.

அத்தகைய மூலோபாயத்திற்கான புறநிலை அடிப்படையானது, உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'பெருந்தொற்றை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது: தொற்றுநோயை ஒழிப்பதற்கான வழிகள்' என்ற அக்டோபர் 24 கூட்டத்தில் கலந்துரையாடப்படும். விஞ்ஞானிகள் மற்றும் தொழிலாளர்கள் தொற்றுநோயின் நிலையை முன்வைத்து, உலகளவில் கோவிட்-19 ஐ முற்றாக ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்குவார்கள். உயிர்களைக் காப்பாற்ற வழி தேடும் அனைவரையும் நிகழ்வை முடிந்தவரை விரிவாகப் பகிருமாறும், இன்றே பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Loading