மோடியின் வணிக சார்பு சட்டங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் விவசாயிகளின் அணிதிரட்டலுக்கு ஆதரவு பெருகுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பாரதிய ஜனதா கட்சியின் வேளாண் வணிக சார்புச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திங்கட்கிழமை விவசாயிகள் சங்கத்தால் அழைப்பு விடுக்கப்பட்ட பாரத் பந்த் (இந்தியா முழுவதும் அடைப்பு) பரந்தளவில் பேரதரவைப் பெற்றிருக்கிறது. காலை 6 மணியிலிருந்து மாலை 4 வரை நடந்த 10 மணிநேரப் போராட்டம் பல மாநிலங்களில், சமூக பொருளாதார வாழ்க்கையை கணிசமாக சீர்குலைத்துவிட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் வடக்குப் பகுதியிலும் மேலும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர் கட்சிகளின் அரசாங்கங்கள் இருக்கும் தெற்குப் பகுதியின் பல மாநிலங்களிலும் இது குறிப்பிடப்படும்படி உண்மையாக இருந்தது.

இந்தியாவிலுள்ள பெங்களூரில் திங்கட் கிழமையன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்து தேசியளவிலான முழு அடைப்புக்காக பல்வேறு அமைப்புகளின் போராட்டக்காரர்கள் மேற்கொண்ட பேரணியில் அவர்களுடன் சேர்ந்து காவல்துறையினரும் நடந்துவந்தனர். [Credit: AP Photo/Aijaz Rahi]

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடைய அதி வலது பாஜக வினால் எந்தவித விவதாங்களுக்கும் உட்படுத்தப்படாது பாராளுமன்றம் மூலமாக அவர்களுடைய “வேளாண் சீர்திருத்தம்” வலுக்கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தியிருந்தது அந்த ஒரு வருடம் பூர்த்தியானதைக் குறிக்கும் வகையில் 40 விவசாயக் குழுக்களால் ஒன்றிணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி (Samyukta Kisan Morcha- SKM) இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியத்திற்குள் நுழையும் மூன்று வழிகளில் முகாமிட்டுக்கொண்டு தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பத்தாயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றியிருந்தனர். அந்த எதிர்ப்பு போராட்டத்தை விவசாயிகளின் அமைப்புகள தொடங்கப்பட்ட நாளாக செப்டம்பர் 26 சரியாக 10 மாதங்களை குறிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

திங்கட்கிழமை நாட்டின் பெரும் பகுதிகளில், விவசாயிகள் மற்றும் ஆதரவாளர்கள் உத்திரப் பிரதேசத்திலிருந்து டெல்லி உட்பட நெடுஞ்சாலைகளின் போக்குவரத்தை மறித்தும் மற்றும் இரயில் பாதைகளில் உட்கார்ந்தும் போராட்டத்தை மேற்கொண்டனர். மற்ற இடங்களில் இரயில் நிலையங்கள் மற்றும் அரசாங்க கட்டிடங்களுக்கு வெளியே அணிவகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ட்ரிப்யூனின் கருத்துப்படி, 'பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன, அங்கு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 1 உட்பட முக்கிய நெடுஞ்சாலைகளைத் தடுத்தனர். போராட்டங்களில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு பெரும்பாலான நகரங்களில் வர்த்தகர்கள் தங்கள் ஆதரவை வழங்குவதற்காக கடைகள் மற்றும் பிற வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரின் வடக்கில், மேற்கு வங்கம் மற்றும் ஓடிசாவின் கிழக்குப் பகுதி, திரிபுராவின் வட கிழக்குப் பகுதி, இராஜஸ்தானின் மேற்கில் மற்றும் கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் தெற்குப் பகுதியிலும் பாதிப்புகள் இருந்தன.

திங்கட்கிழமை நடைபெற்ற பந்த் க்கு கிடைத்த ஆதரவு “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மற்றும் வரலாற்று” முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) கூறியிருக்கிறது. கூடுதலாக, இந்தியாவின் 28 மாநிலங்களில் 23 இடத்தில் நாட்டின் அன்னதாடா (உணவு வழங்குபவர்கள்) ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளிலிருந்து தன்னெழுச்சியாக பங்குபற்றியது பெரும்பாலான இடங்களில் பார்க்ககூடியதாக இருந்தது”.

பாஜக வுக்காக வக்காலத்து வாங்குபவர்கள், போராட்டத்தை இழிவுபடுத்தும் விதமாக இது எதிர் கட்சிகளின் ஒரு சதி என்று உடனடியாக முத்திரை குத்தினார்கள். பணக்காரர்களாகவும், அரசியல் ரீதியாக இணைந்த விவசாயிகளாகவும் அல்லது உள்ளூர் அரசியல் தலைவர்களாகவும் இருக்கும் விவசாயிகளை பிளவுபடுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை நீண்டகால பேச்சுவார்த்தைகள் மற்றும் மூன்று சட்டங்கள் குறித்து சிறிய, முக்கியமாக ஒப்பனை மாற்றங்களை வழங்குவதன் மூலம் சோர்வடையச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சில திருத்தங்களுக்கு மேல் செய்யமுடியாது என்று அரசாங்கம் வலியுறுத்தியிருந்த நிலையில் சட்டங்கள் திருத்தப்படவேண்டும் என்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நீடித்துக்கொண்டிருந்தது.

சமீபகாலம் வரை இந்திய முதலாளித்துவத்தின் பிரியமான கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஸ்ராலினிச சிபிஐ மற்றும் சிபிஎம் உட்பட பெரும்பாலான எதிர்கட்சிகள் சேர்ந்து பந்த் க்கு அதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. சில சந்தர்ப்பங்களில் அவர்களின் கட்சி ஊழியர்கள் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். கேரளாவில், ஸ்ராலினிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (Left Democratic Front) அரசாங்கம், பந்த் போராட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தனது தொழிற்சங்கத்துடன் சேர்ந்து கலந்துகொண்டது மேலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைக்குப் போகவில்லை மற்றும் அரசுத் துறை போக்குவரத்து வாகனங்களை ஓட்டவேண்டாம் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தது, இதனால் மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்த முழு பணிநிறுத்தம் இருந்துள்ளது. காங்கிரஸ் இலிருந்து பிரிந்து ஒரு பிராந்தியவாத தலைமையேற்றுவருகிற, வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆந்திரப் பிரதேச அரசாங்கமும் ஆர்ப்பாட்ட காலத்தில் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியிருந்தது. தமிழ்நாட்டில் ஸ்ராலினிச கட்சிகளின் ஆதரவு திமுக ஒரு சில ஆர்ப்பாட்டங்களில் திமுக கட்சியின் கொடியை அசைக்கும்மாறு கட்சியின் ஊழியர்களுக்கு உத்தரவிட்டு அரசு விவசாயிகளுக்கான “ஆதரவை” மட்டுப்படுத்தியிருந்தது.

பாஜக அரசாங்கத்தின் வணிக சார்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து 10 மாத காலமாக விவசாயிகள் நடத்தும் எதிர்ப்பு பரந்தளவில் ஆதரவை பெற்றிருப்பதால் அதனுடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன்மூலம், அடுத்தவருடம் நடைபெறவிருக்கும் மாநில தேர்தல்களில் ஆதாயங்களை அறுவடை செய்துகொள்ள குறிப்பாக இந்தியாவின் பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்திரப் பிரதேசத்திலும் எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. எப்படியிருந்தாலும் மோடி மற்றும் இந்துமேலாதிக்கவாத பாஜக வுக்கு எதிரான அதிகளவில் பெருந்திரளாக வளர்ந்துவரும் மக்களின் வெடிப்புத் தன்மை கொண்ட எதிர்ப்பை நீர்த்து போகச் செய்து அடக்குவதற்கு பாராளுமன்றத்திற்குள்ளும் மற்றும் ஆர்ப்பாட்ட அரசியலுக்குள்ளும் கட்டுப்படுதுவதே அவர்களுடைய பிரதான அக்கறையாக இருக்கிறது.

கோவிட்-19, இந்தியாவை சிதைப்பதற்கு முன்னிருந்தே முஸ்லீம்களுக்கு எதிரான, பாகுபாடான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான பெருந்திரளான மக்களின் போராட்டங்களால் மோடி மற்றும் அவருடைய இந்து மேலாதிக்கவாத பாஜக பின்வாங்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டன. மற்றும் அதன் “முதலீட்டாளர் சார்பு” சிக்கன நடவடிக்கை, தனியார் மயம் மற்றும் இயற்கை சூழல் மற்றும் தொழிலார்களின் தரங்களை அழித்தல் போன்றவற்றை வளர்ச்சியடைந்துவரும் வர்க்கப் போராட்டங்கள் சவால் செய்கின்றன.

வைரஸ் பெருந்தொற்றுக்கு இந்திய ஆளும் வர்க்கம் அழிவுகரமான மற்றும் குற்றவியில் ரீதியாக பதிலிறுப்பு என்பது உயிர்களைக் காப்பாற்றுவதை விட பெருநிறுவன இலாபங்கள் மற்றும் முதலீட்டாளர் செல்வங்களுக்கு முறையாக முன்னுரிமை அளிப்பதாக உள்ளது. மேலும் பெருந்திரளான மக்களை சாகடித்துள்ளதுடன் ஏற்கனவே இருந்த கடுமையான சமூக நெருக்கடியை அதிகப்படுத்தியுள்ளது. மோடி மற்றும் அவருடைய பாஜகவின் இந்திய அரசாங்கம் “பொருளாதாரத்தை மீண்டும் திறக்க” இடைவிடாமல் அழுத்தம் கொடுத்து வந்துள்ளது. இந்தியாவின் பாழடைந்த மோசமான சுகாதார அமைப்பு பெருந்தொற்றின் இரண்டு பேரழிவு தரும் அலைகளில் மூழ்கியது. மேலும் தற்போது ஒரு மூன்றாவது அலை அச்சுறுத்துகிறது. உத்தியோகபூர்வமாக, இந்தியாவில் 450,000 பேர் கோவிட்-19 ஆல் இறந்துள்ளதாக பதியப்பட்டிருக்கிறது. ஆனால் தரவுகளின் படி பெருந்தொற்று காலத்தில் இறப்புகளின் எண்ணிக்கை பல்வேறு ஆய்வுகளின் கருத்துப்படி அதன் உண்மையான எண்ணிக்கை 5 மில்லியனுக்கும் அல்லது அதற்கும் அதிகமானதாக இருக்கிறது.

மேலும், சுகாதார நலன்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் தொற்றுநோயால் வேலையிழப்பு மற்றும் வறுமை ஏற்பட்டிருக்கிறது. பெருந்தொற்று காலத்தில் மார்ச் 2020 இல் மோடியினால் நான்கு மணிநேரத்திற்கும் குறைவான நேரத்தில் மோசமாக தயாரிக்கப்பட்ட பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது, அந்த சமயத்தில் இந்திய அரசாங்கங்கள் இந்தியாவின் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் முன்கண்டிராத வகையில் வேலைகளை இழந்திருந்த நிலையில் அவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும்படி அவர்களை கை விட்டனர். ஆகஸ்டில், இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (the Centre for Monitoring the Indian Economy) கொடுத்த அறிக்கையின்படி, தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த 40 மில்லியன் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்பொழுது, 28 மில்லியன் தொழிலாளர்கள் அங்கே உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். எந்தவொரு வருமானமும் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் பத்தாயிரக்கணக்கான இந்தியர்கள் தமது சொந்த வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்பவர்களாகவோ அல்லது விவசாயத் தொழிலாளர்களாகவோ பெருந்தொற்று காலத்தில் வாழ்வதற்கு தள்ளப்பட்டார்கள்.

மோடி அரசாங்கமும் இந்திய பெருமுதலாளிகளும் பெருந்தொற்றால் ஏற்பட்ட பூகோள முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு மிக கூர்மையாக மேலும் வலதுக்கு திரும்புவதன் மூலம் பதிலிறுப்பு செய்துள்ளார்கள். முதலீடுகளைக் கவருவதற்றாக, அவர்கள் இந்திய தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் மீது அவர்களுடைய வர்க்க போர் தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கின்றனர். மேலும் பூளோக மூலோபாய மற்றும் பொருளாதார காரணங்கள் ஆகிய இரண்டுக்குமாக அவர்கள் சீனாவுக்கு எதிரான வாஷிங்கடனின் இராணுவ மூலோபாய தாக்குதலில் இந்தியாவை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

செப்டம்பர் 2020 பாரளுமன்ற பருவகால கூட்டத்தொடரில், மோடி அரசாங்கம் மூன்று வேளாண் “சீர்திருத்த” சட்டங்களை நிறைவேற்றியது. இது இந்தியாவின் வேளாண் துறையை முழுவதுமாக ஆதிக்கம் செய்வதற்கு வேளாண் வணிகத்திற்கு பாதையை திறந்துவிடுவதாக இருக்கிறது. அவர்கள் சந்தை பதுக்கல்களில் உள்ள பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களை ஏற்கனவே இருக்கும் அரசு சந்தைகளை (மண்டிஸ்) கடந்து செல்ல அனுமதிக்கின்றனர். முக்கியப் பொருட்களுக்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச ஆதரவு விலையை ரத்து செய்வதற்கும், ஒப்பந்தப் பண்ணையாளர்களுடனான ஒப்பந்தத்தில் பெருநிறுவன வணிகத்தை வலுப்படுத்துவதற்கு அவர்களுக்கு சட்ட விலக்கு வழங்குவது உட்பட வழங்கப்படும் என்றம் விவசாயிகள் நியாயமான அச்சத்தில் இருக்கிறார்கள்.

அதே பாரளுமன்ற கூட்டத் தொடரில், மோடி அரசாங்கம் தொழிலாளர் சீர்திருத்த சட்டத்தையும் அமுல்படுத்தியிருக்கிறது. இது ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு ஏற்கனவே இருக்கும் முதலாளிகளின் உரிமைகளை மேலும் விரிவுபடுத்துகிறது. மேலும் பெரும்பாலான தொழிலாளர் வேலை சார்ந்த நடவடிக்கைகளை சட்டவிரோதமாக்கும் நோக்கத்துடன் ஒரு விரிவான அரசு மேற்பார்வையுடன் 'தொழிலாளர் உறவுகள்' மீதான ஆட்சிமுறையில் தொழிலாளர்களை சிக்க வைக்கிறது.

இந்த ஆண்டின் பாரளுமன்ற பருவகால கூட்டத்தொடர் வெறுமனே நிறைவடைந்திருக்கிறது. மேலும் தனியார்மயமாக்கலை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தொழில்களில் தொழிலாளர்களின் அனைத்து வேலைநிறுத்தங்களையும் சட்டவிரோதமாக்குதல் உட்பட வலதுசாரி சட்டங்களை மேலும் முன்னோக்கி மோடி அரசாங்கம் தள்ளியுள்ளது. அரசாங்கம் “தேசிய பொதுச் சொத்துக்களை பணமாக்குதல்” திட்டத்தினையும் கொண்டுவந்துள்ளது. இதன்கீழ் ரயில் பாதைகள், நெடுஞ்சாலை முதல் மின் நிலையங்கள் வரை அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் சொத்துக்களின் மேலாண்மை மற்றும் இடங்களை பெருநிறுவனங்களுக்கு வணிகத்திற்கு“குத்தகைக்கு” விடவுள்ளது.

வேலைகள் மற்றும் ஊதியங்களின் மீது முதலாளிகளின் தாக்குதலுக்கும் மற்றும் அவர்கள் பெருந்தொற்றுகளை குற்றவியல் ரீதியாக கையாண்டமைக்கும் மோடியின் அரசாங்கத்தின் மீது தொழிலாள வர்க்கத்திற்கு பெருந்திரளான எதிர்ப்புகள் இருக்கின்றன. சமீபத்திய மாதங்களில் அரசாங்கத்தின் தனியார்மயமாக்கலின் உந்துதலுக்கு எதிராக ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்களிலிருந்து சுரங்கத் தொழிலாளர்கள் வரை தொழிலாளர்களின் மிகப் பெரிய பிரிவினர் கலந்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று, பெருந்தொற்று பரவல் நேரத்தில் அதற்கு எதிரான போராட்டத்தில் முதல்நிலைப் பணியாளர்களான நூறாயிரக்கணக்கான கிராம சுகாதாரப் பணியாளர்கள் (ASHA) மேம்படுத்தப்பட்ட ஊதியம், காப்பீடு மற்றும் முறையான தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை கோரி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். பூகோள அளவிலான வாகனத் தொழிற்துறையில் இணைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் தொழிலாளர்கள் வேலைப் பளு, வறுமைநிலையிலான ஊதியம் மற்றும் மோசமான ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிரான போராட்ட அலைக்குள் இழுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகிலிருக்கும் வாகனத் தொழிற்சாலை பகுதியில் கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டிருந்த குறைபாடுகளுக்கு எதிராக எழுச்சிபெற்ற ஒரு தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த போராட்டத்தினால் ஹுண்டாய், போர்ட் மற்றும் ரெனால்ட் நிசான் ஆகிய அவர்களின் தொழிற்சாலைகளை தற்காலிகமாக இழுத்து மூடுவதற்கு தள்ளப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும், தொழிற்சங்கங்களும் மற்றும் மேற்கூறிய அனைத்து ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் அதன் நெருங்கிய கூட்டணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி (சிபிஐ) ஆகிய இடது கட்சிகள் என்று கருதப்படுபவை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புகளை கட்டுப்படுத்தி வைப்பதற்கும் அரசியல் ரீதியாக நசுக்குவதற்கும் அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன.

அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதாக வாயளவில் கூறிக்கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஓரங்கட்டி வைத்திருக்கின்றன மேலும் மேற்கூறியபடி, விவசாயிகளின் பேரணியில் குறிப்பாக சிறிய மற்றும் விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் பின்னால் அணிசேர்ந்து ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்கும் மற்றும் சோசலிச சர்வதேச வேலைத் திட்டத்திற்கும் போராடுவதற்கு ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக தலையிடுவதிலிருந்து தடுப்பதற்கும் வேலை செய்கின்றன. இந்தியாவின் 2024 தேசிய தேர்தலில் காங்கிரஸ் அல்லது ஒரு பிராந்திய பேரினவாத மற்றும் சாதியக் கட்சிகளின் கூட்டணி மூலம் ஒரு மாற்று வலதுசாரி அரசாங்கத்தைக் கொண்டுவருவதற்கு அதனுடைய முழு முயற்சிகளை மேற்கொண்டு அடிபணியவைப்பதன் மூலம் மோடிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளை மழுங்கடிப்பது தான் நீண்ட காலமாக முதலாளித்துவ அரசியல் அமைப்புடன் ஒருங்கிணைந்திருக்கும் ஸ்ராலினிஸ்டுகளின் இலட்சியமாக இருக்கிறது.

Loading