50 ஆண்டுகளுக்கு முன்பு: சீன மக்கள் குடியரசு ஐக்கிய நாடுகள் சபையில் அனுமதிக்கப்பட்டது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மாவோவுடன் கிஸ்ஸிங்கர், கிஸ்ஸிங்கருக்கு பின்னால் நின்று, சூ என்லாய் மாவோவை பார்க்கிறார்

அக்டோபர் 25, 1971 இல், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, சீன மக்கள் குடியரசை அமைப்பில் உறுப்பினராக ஒப்புதல் அளித்தது. சீனாவின் உறுப்புரிமையை அங்கீகரிக்கும் தீர்மானம் 2758, தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. 76 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, 35 எதிர்த்தன மற்றும் 17 வாக்களிக்கவில்லை. எதிர் வாக்குகளில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகியவை அடங்கும்.

ஐக்கிய நாடுகள் சபையில், மாவோ சேதுங் தலைமையிலான ஸ்ராலினிச அரசாங்கத்தின் மக்கள் சீனக் குடியரசின் அனுமதி பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஆனால் மிக முக்கியமானது, சீனாவை அனுமதிக்க தைவான் வெளியேற்றப்பட வேண்டும், ஏனெனில் அது அனைவருக்கும் ஒரே நாடாக ஐ.நா.வில் வாக்களிக்க வேண்டும்.

முன்னதாக, சியாங் காய்-ஷேக் தலைமையிலான தேசியவாதப் படைகள் சீனப் புரட்சியில் தோல்வியடைந்ததை அடுத்து 1949 இல் தீவுக்குத் தப்பிச் சென்ற பின்னர் தைவான் அனைத்து சீனாவின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டது. சீனாவை ஏற்றுக்கொள்வதும், தைவானை அகற்றுவதும் ஐ.நா.வின் குறிப்பிடத்தக்க ஒப்புதலாகும், உண்மையில் சீனப் பெருநிலப்பரப்பில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியே ஆளும் சக்தியாக இருந்தது என்பதற்கு தெளிவான உண்மையாகும்.

வாக்கெடுப்புக்குப் பின்னர், தைவானின் வெளியுறவு அமைச்சர் சௌ ஷு-காய் மற்றும் அவரது பிரதிநிதிகள் ஐ.நா.வில் இருந்து வெளியேறி, “[PRC] பொதுச் சபையிலும் பாதுகாப்பு கவுன்சிலிலும் அமர்த்தப்பட்டவுடன், அது நிச்சயமாக ஐக்கிய நாடுகள் சபையை மாவோவாத முன்னணியாக மாற்றுவதோடு சர்வதேச அழிவுக்கான போர்க்களமாக்கும்.' என அறிவித்தனர்.

சௌ வின் கூற்றுக்கு மாறாக, ஐ.நா.வில் சீனாவின் நுழைவு, சர்வதேச முதலாளித்துவ அரசு அமைப்பில் நாட்டை ஒருங்கிணைப்பதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். ஏற்கனவே நிக்சன் நிர்வாகம், அமைதியான முறையில் உறவுகளை இயல்பாக்குவதற்கான விவாதங்களை ஆரம்பித்திருந்தது, அது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை எதிர் எடையாக சேர்ப்பதோடு மற்றும் இறுதியில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை தொழிலாளர் சுரண்டலுக்கு திறக்கும் என பார்த்தது.

சீனாவில் உள்ள மாவோவாத தலைமை நீண்ட காலமாக ஐ.நாவை 'ஏகாதிபத்திய ஓடும் நாய்' ['ஏகாதிபத்திய ஓடும் நாய்' என்ற சொல் மாவோ சேதுங்கால் எதிர்புரட்சிகர ஏகாதிபத்திய சக்திகளின் கூட்டாளிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது] என்று கண்டித்து வந்த நிலையில், அது வாக்கெடுப்பை இரு கரம் நீட்டி வரவேற்றது.

லெனின் முன்பு வர்ணித்த -ஐ.நா வின் முன்னோடியான லீக் ஆஃப் நேஷன்- ஐ 'திருடர்களின் சமையலறை' என்று குறிப்பிட்டதில் ஆவலுடன் அமர்ந்து கொண்டது. சீனாவின் பிரதமர் சூ என்லாய், இந்த வாக்கெடுப்பை 'உலக மக்களின் வெற்றி' என அறிவித்தார்.

Loading