ஏகாதிபத்தியமும் உள்மனதிலிருந்து பொய் கூறலும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது

பைனான்சியல் டைம்ஸின் கீடியோன் ராக்மான் (Gideon Rachman) ஒரு பத்தியை எழுதியுள்ளார். அது தற்செயலாக இருந்தாலும் இன்னும் அழிவுகரமானததாகும். இது முதலாளித்துவ ஊடகவியல் மற்றும் அது பாதுகாக்கும் அரசியல் மற்றும் சமூக அமைப்புமுறையின் அறிவார்ந்த மற்றும் தார்மீகச் சீர்குலைவுகளை அம்பலப்படுத்துகின்றது.

'பொய்கள் ரஷ்யாவை அதன் வலிமையின் பரிசோதனையில் பலவீனப்படுத்துகின்றன' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில், அமெரிக்க பாசாங்குத்தனத்தில் ஊறியுள்ள புட்டின், மேற்கு நாடுகளை 'பொய்களின் சாம்ராஜ்யம்' என்று பொய்யாகக் குற்றம் சாட்டுகிறார் என்று ராக்மான் புகார் கூறுகிறார்.

'பாசாங்குத்தனமும் பொய்களும் ஒரே மாதிரியானவை அல்ல' என்று வாதிடுவதன் மூலம் புட்டினின் கண்டனத்தை ராக்மான் 'மறுக்கிறார்'. ரஷ்ய அரசாங்கம் 'முழுமையான பொய்களில் நிபுணத்துவம் பெற்றது,' 'அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், மாறாக, பாசாங்குத்தனத்தில் நிபுணத்துவம் பெற்றுள்ளன' என்கிறார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மேற்கத்திய பாசாங்குத்தனம், ரஷ்ய பொய்களுடன் ஒப்பிடுகையில், மிகக் குறைந்த அளவிலான ஒரு தவறு என்று அவர் வாதிடுகிறார். 'ஒரு இலட்சியத்தை அல்லது கொள்கையை பிரகடனப்படுத்துவது, ஆனால் அதை தொடர்ந்து செயல்படுத்தத் தவறுவது' என்பது வெறுமனே துரதிர்ஷ்டவசமான போக்கு' என்கிறார்

'லிபியாவில் மனிதாபிமானத் தலையீடு நேரடியாகவும் ஒருவேளை வேண்டுமென்றே ஆட்சி மாற்றத்திற்கும் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியின் வன்முறை மரணத்திற்கும் வழிவகுத்தது' என்று மேற்கத்திய நாடுகளால் அதன் இலட்சியங்களின் ஒரு சீரற்ற பயன்பாட்டிற்கு உதாரணமாக ராக்மான் மேற்கோள் காட்டுகிறார்.

பாதிக்கப்பட்டவர் பொய்களால் தயாரிக்கப்பட்ட கொலையைப் போலவே இறந்தாலும் கூட பாசாங்குத்தனத்தால் புனிதப்படுத்தப்பட்ட ஒரு கொலை மன்னிக்கத்தக்கது. பாசாங்குத்தனத்தின் ஏனைய சாதகமான தன்மைகளை பற்றி ராக்மான் குறிப்பிடுகிறார்.

'பாசாங்குத்தனத்தின் சாம்ராஜ்யத்தில், வெளிப்படையான விவாதம் மற்றும் விமர்சனம் இன்னும் சாத்தியமானது' என்று ராக்மான் எழுதுகிறார். தவறுகள் செய்யப்படுகின்றன மற்றும் குற்றங்கள் செய்யப்படுகின்றன. ஆனால் அந்தக் குற்றங்களை உத்தியோகபூர்வ விசாரணைகள் மூலமாகவோ அல்லது சுதந்திரமான பத்திரிகை மூலமாகவோ சுட்டிக்காட்ட முடியும்”.

பாசாங்குத்தனத்தின் ஒரு சாம்ராஜ்யத்தில், அமெரிக்க ஆளற்ற விமான ட்ரோன் போரால் ஏற்பட்ட 'பொதுமக்கள் உயிரிழப்புகளில் பயங்கரமான எண்ணிக்கையை' நியூ யோர்க் டைம்ஸ் அம்பலப்படுத்த கூடியதாக இருந்தது. 'இதற்கான பென்டகனின் பிரதிபலிப்பு செய்தித்தாளுக்கு நன்றி தெரிவித்து மற்றும் மாற்றங்களை உறுதி செய்தது' என ராக்மான் குறிப்பிடுகிறார்.

அமெரிக்காவினால் பாரிய கொலைகள் அம்பலப்படுத்தப்பட்டதில் இருந்து உருவான முற்றிலும் திருப்திகரமான விளைவு அல்ல என்பதை உணர்ந்து, ராஹ்மான் பின்வருமாறு கருத்து தெரிவிக்கிறார்: 'மீண்டும் பாசாங்குத்தனமா? ஒருவேளை - ஆனால் விசாரணையும் அம்பலப்படுத்தலும் இல்லாமல் சீர்திருத்தத்திற்கான வாய்ப்பு இருக்காது”.

மேலும், மேற்கத்திய பாசாங்குத்தனத்திற்கும் ரஷ்ய பொய்களுக்கும் இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாட்டை ராக்மான் காட்டுகிறார்: 'புச்சாவில் நடந்த போர்க்குற்றங்கள் அல்லது மரியுபோலின் அழிவு பற்றிய விசாரணைக்காக ரஷ்யாவில் யாரும் பரிசுகளை வெல்ல மாட்டார்கள்.'

அமெரிக்க போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியதற்காக ஜூலியன் அசான்ஜிற்கு வழங்கப்பட்ட பரிசு இரக்கமற்ற அரசு துன்புறுத்தல், பிரிட்டிஷ் நரகக் குழியில் கொடூரமான சிறைவாசம் மற்றும் வரவிருக்கும் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் ஆகியவற்றை எப்படியோ ராக்மான் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.

ராக்மானின் கட்டுரையின் மிக முக்கியமான அம்சம், அமெரிக்க பாசாங்குத்தனமானது, உத்தியோகபூர்வ மற்றும் எங்கும் பரவும் பொய்களின் ஒரு பயங்கரமான அமைப்பின் குறிப்பிட்ட மற்றும் மிகவும் வளர்ந்த வடிவத்தை விட, நேர்மையிலிருந்து வருந்தத்தக்க முறையில் தடக்கிவிழுதல் மட்டுமே என்ற அதன் அபத்தமான மற்றும் சுய-ஏமாற்றும் முன்மாதிரி ஆகும்.

புத்திசாலித்தனமான பைனான்சில் டைம்ஸின் வர்ணனையாளர்களில் ஒருவரான கிடியோன் ராக்மான், பொய்யிலிருந்து அரசு பாசாங்குத்தனத்திற்கான தனது சொந்த மன்னிப்புக்கோரும் கோட்பாடானது, சமகால முதலாளித்துவ சமூகத்தில் பொய்யின் மேலாதிக்கத்திற்கு மிக ஆழமான அர்த்தத்தில் சாட்சியமாக இருக்கின்றது என்பதை உணரவில்லை என்பது விந்தையாகத் தோன்றலாம்.

அண்ணளவாக 1910 இல் ஜே.ஏ. ஹொப்ஸன் (Credit: Elliott & Fry, public domain)

120 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஏகாதிபத்தியம், ஒரு ஆய்வு என்ற அவரது புகழ்பெற்ற கட்டுரையில், ஜே. ஏ. ஹொப்ஸன் காலனித்துவ பேரரசுகளின் ஆளும் உயரடுக்குகளின் நலன்களுக்காக நடத்தப்பட்ட கொடூரமான குற்றங்களை நியாயப்படுத்துவதில், பொய்யின் ஒரு வடிவமாக பாசாங்குத்தனம் ஆற்றிய இன்றியமையாத பங்கை விளக்கினார்.

ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது ஒத்துழைப்பாளர்கள் மற்றும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் பாசாங்குத்தனம் வழக்கமான, வெறும் தனிப்பட்ட குணம் கொண்டதல்ல. இது சமூக யதார்த்தத்தின் தன்மை பற்றிய திட்டமிட்ட பொய்யை அடிப்படையாகக் கொண்டதுடன், அது அதன் சொந்த பயிற்சியாளர்களை ஏமாற்றும் அளவுக்கு ஆழமாக வேரூன்றி உள்ளது.

'ஏகாதிபத்தியம், வரலாற்றின் முகத்தை சிதைக்கும் வகையில் ஆர்வமுள்ள குழுக்கள் மற்றும் நபர்களால் இயக்கப்பட்ட, மிக நேர்த்தியான தேர்வு, மிகைப்படுத்தல் மற்றும் கவனக்குறைவு ஆகிய நிகழ்ச்சிப்போக்கின் மூலம் உண்மைகள் மற்றும் சக்திகளை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதை அடிப்படையாகக் கொண்டது' என்று எழுதினார்.

'ஏகாதிபத்தியத்தின் மிகப்பெரிய ஆபத்து, இந்த ஏமாற்றத்திற்குப் பழக்கமாகி, சுயவிமர்சனம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு தேசத்தின் மனநிலையில் உள்ளது.' இந்த ஏகாதிபத்திய சிந்தனையின் மிகப் பெரிய குற்றச்சாட்டுகளில் ஒன்றாக பின்வரும் பந்தி உள்ளது.

ஏனென்றால், பிளாட்டோ 'உள்மனதிலிருந்து உள்ள பொய்' என்று கூறும் நிபந்தனை இதுதான். தன்னை ஒரு பொய் என்று அறியாத ஒரு பொய்யாகும். இந்த நோயுற்ற நிலையின் அடையாளங்களில் ஒன்று ஒரு அபாயகரமான சுயதிருப்தியடைதலாகும்.

ஒரு தேசம் அதற்கு அடிபணிந்தால், அது பொறாமை மற்றும் தீமை காரணமாக மற்ற நாடுகளின் அனைத்து விமர்சனங்களையும் எளிதாகவும் உள்ளுணர்வாகவும் நிராகரிக்கிறது. மேலும் அனைத்து உள்நாட்டு விமர்சனங்களும் தேசபக்தியின் எதிர்ப்பினை நோக்கி சார்வதற்கு காரணமாகின்றது.

மாபெரும் மார்க்சிஸ்டுகளின் பிற்கால படைப்புகளை எதிர்பார்த்து, ஏகாதிபத்தியத்திற்கான தாராளவாத எதிர்ப்பாளரான ஜே. ஏ. ஹொப்ஸன், 'உள்மனதில் உள்ள பொய்யை' அடிக்கோடிட்டுக் காட்டும் புறநிலை சமூக நலன்களை ஒரு பொதுவான வழியில் அடையாளம் காட்டினார்.

முழு செயல்முறையையும் கட்டுப்படுத்தும் மற்றும் வழிநடத்தும் முகவர், நாம் பார்த்தது போல், ஒரு நாட்டில் திறமையான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சிறிய குழுக்களின் நேரடி, குறுகிய தூர, பொருளாதாய நலன்களுக்காக இயக்கப்படும் நிதிய மற்றும் தொழில்துறை நோக்கங்களின் அழுத்தமாகும்.

ராக்மான் தனது வாசகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் அலையில் அடித்துச் செல்லப்பட்ட அவர், ஏகாதிபத்தியத்தை உந்தித் தள்ளும் நலன்களைப் பற்றி மற்றவர்களை ஏமாற்றுபவர்கள் 'முதலில் தங்களைத் தவறாக வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்' என்ற ஹொப்ஸனின் அவதானிப்புக்கு அவர் சான்றாக உள்ளார்.

Loading