டெப்-ஹியர்ட் வழக்கில் நடுவர் மன்ற தீர்ப்பு: #MeToo இன் வேட்டையாடலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தகுதியான அடி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

புதனன்று, வேர்ஜீனியா, பெயர்பாக்ஸில் (Fairfax) உள்ள ஒரு நடுவர் மன்றம், நடிகர் ஜொனி டெப்பிற்கு எதிரான அவரது முன்னாள் மனைவி நடிகை ஆம்பர் ஹியர்ட் தொடர்ந்த அவதூறு வழக்கில் டெப்பிற்கு சார்பாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, #MeToo இன் பாலியல் தவறான நடத்தை வேட்டையாடலுக்கு எதிரான பாரிய தோல்வியும், குற்றமற்றவர் என்ற அனுமானம் மற்றும் உரிய வழக்கு நடைமுறைக்கான உரிமை உட்பட அடிப்படை சட்ட விதிமுறைகளை பாதுகாப்பதற்கான வெற்றியுமாகும்.

ஏப்ரல் 21, 2022 வியாழன் அன்று வேர்ஜீனியா, பெயபாக்ஸில் உள்ள பெயபாக்ஸ் மாநில நீதிமன்றத்தில் நடிகர் ஜொனி டெப் சாட்சியம் அளித்தார் (Jim Lo Scalzo/Pool Photo via AP) [AP Photo/Jim Lo Scalzo/Pool Photo via AP]

ஏழு நபர்களை கொண்ட பொது உரிமை நடுவர் மன்றம் டெப்பிற்கு 10 மில்லியன் டாலர்கள் இழப்பீட்டுத் தொகையாகவும், 5 மில்லியன் டாலர்கள் தண்டனைக்குரிய சேதாரமாகவும் (மாநில சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக $350,000 ஆகக் குறைக்கப்பட்டது) வழங்கியது. முன்னதாக, இங்கிலாந்தில் தோல்வியுற்ற வழக்கின் போது பிரிட்டிஷ் பத்திரிகையில் டெப்பின் வழக்கறிஞர் தெரிவித்த கருத்துக்காக ஹியர்டுக்கு 2 மில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கப்பட்டது. டெப் தனது திரைப்பட வாழ்க்கையில் ஏற்பட்ட சேதத்திற்காக 50 மில்லியன் டாலர்களைக் கோரினார். மேலும் ஹியர்ட் 100 மில்லியன் டாலர்களுக்கு எதிர் வழக்கு தொடர்ந்தார்.

அக்டோபர் 2017 முதல், பெரும்பாலும் ஆதாரமற்ற கூற்றுக்கள், வம்பு பேசுதல் மற்றும் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் நூற்றுக்கணக்கான வாழ்க்கை மற்றும் தொழில்கள் அழிக்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் தனிமைப்படுத்தப்பட்டு, உத்தியோகபூர்வமாக அவமானப்படுத்தப்பட்டு, உடனடியாக ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, வெறுமனே கண்காணாமல் போவதைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உண்மையில் அவர்களில் எவருக்கும் எதிராக குற்றம் சாட்டப்படவில்லை, தண்டனை கூட விதிக்கப்படவில்லை. இப்போது, மிகவும் பிரபல்மான நபர் ஒருவர் குட்டி முதலாளித்துவ கும்பலுக்கு எதிராக நின்று, பிரச்சினையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, வழக்கின் தகுதியை தீர்மானிக்க ஒரு நடுவர் மன்றத்திற்கு அனுமதித்துள்ளார். இதன் முடிவுகள் தெளிவாக உள்ளன.

நடுவர் மன்றம், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், டெப்-ஹியர்ட் விவகாரத்தில் மட்டுமல்லாது, நியூ யோர்க் டைம்ஸ், நியூயோர்க்கர், வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் “இடது” ஆதரவாளர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் உயர் நடுத்தர வர்க்கத்தினரின் கணிசமான பகுதியினரால் பயன்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த மெக்கார்திய வகைப்பட்ட ஊழல்மயமாக்கல் பிரச்சாரத்திற்கு எதிராக ஒரு தீர்க்கரமான தீர்ப்பை வழங்கியது. உண்மையில், பெரும்பாலான #MeToo குற்றச்சாட்டுகள் அதே அளவிலான புறநிலை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டால், அவை இதே பாணியில் சிதைந்துவிடும். அதனால்தான், புதன் கிழமையின் தீர்ப்பைத் தொடர்ந்து அடையாள அரசியலில் ஊறிய வெறிபிடித்த ஊடகங்களின் சீற்றத்தின் அலறல்கள் எழுந்துள்ளன.

டெப்-ஹியர்ட் வழக்கு, #MeToo பிரச்சாரத்தின் ஒரு வருடத்தில் டிசம்பர் 2018 இல் வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் கருத்துக் கட்டுரையில், “நான் பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசினேன் — நமது கலாச்சாரத்தின் கோபத்தை எதிர்கொண்டேன். அது மாற வேண்டும்” என்று ஹியர்டின் பெயருடன் தோன்றியது. அந்த பகுதியில், நடிகை (உண்மையில், விசாரணையில் தெரியவந்துள்ளவாறு ஒரு அந்நிய எழுத்தாளரால் எழுதப்பட்டது) 'இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ... நான் வீட்டு துஷ்பிரயோகத்தை எதிர்கொண்ட பொது நபராக ஆனேன்' என்று வலியுறுத்தினார். இது டெப்புடனான (2015-2017) திருமணத்தைப் பற்றிய மெல்லிய மறைமுகக் குறிப்பாகும். இது இறுதியில் அவரது வழக்கைத் தூண்டியது. ஹியர்டை உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யவில்லை என நடிகர் மறுத்தார்.

ஆறுவார சாட்சியங்கள் மற்றும் மூன்று நாட்கள் தகவல்களை மதிப்பிட்ட நடுவர் மன்றம், தனது விவாதங்களை இவ்வளவு தீர்க்கமான பாணியில் வெளிப்படுத்தியது. பல்வேறு வர்ணனையாளர்கள் குறிப்பிட்டது போல், பொது அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள், நஷ்ட ஈடுகளை பெறுவதற்காக 'மிகக்கூடிய ஆதாரங்களை' முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். போஸ்ட்டின் இரண்டு பத்திகளும் இடுகை கட்டுரையின் தலைப்பும் அவதூறானதா என்பதை நடுவர் மன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்க வேண்டும். அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டது, டெப்பின் பிரபல்யம் காரணமாக, 'ஹியர்ட் அவரை தூற்றுதல் செய்தார் என்பதை கண்டறிந்து, நடுவர் மன்றம் ஹியர்ட் 'வேண்டுமென்றே தீய நோக்கத்துடன்' செயல்பட்டார் என்ற முடிவுக்கு வரவேண்டியிருந்தது. அதாவது அவர் எழுதியது பொய் என்று அவருக்குத் தெரியும் அல்லது பொறுப்பற்ற அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளார். நடுவர் மன்றம் அவர் உண்மையிலேயே தீங்கிழைத்ததாகக் கண்டறிந்து மூன்று விஷயங்களிலும் டெப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதற்கிடையில், ஹியர்டின் வழக்கறிஞர்கள் நடுவர் மன்றத்திற்கு 'ஹியர்ட் ஒரு தனி விடயத்தில் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியிருந்தால் கூட டெப்பின் வழக்கு தோல்வியடைய வேண்டும்' என்று தெரிவித்தனர். உடல் ரீதியான துஷ்பிரயோகம் குறித்த நடிகையின் குற்றச்சாட்டுகளை நடுவர் மன்ற உறுப்பினர்கள் நம்பவில்லை.

CNN சட்ட ஆய்வாளர் ஜோய் ஜாக்சன் டெப்பிற்கு இது ஒரு 'மகத்தான வெற்றி' என்று குறிப்பிட்டார். நடிகர் கடந்துவர வேண்டியிருந்ததை ஜாக்சன் சுட்டிக்காட்டினார், “முதல் அரசியலமைப்பு சட்டப் பிரச்சினை, அதாவது நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்கள் (ஜூரிகள்) கூறியது என்னவென்றால், ஆம், ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் மற்றும் அவர்களின் தொழிலில் அவர்களுக்கு சேதம் விளைவிக்கும் பொய்யான ஒன்றை நீங்கள் கூறாத வரையில் உங்களுக்கு முதலாம் அரசியலமைப்பு சட்ட உரிமை உள்ளது”.

தீர்ப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், டெப் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவருடைய வாழ்க்கையும் அவருக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையும் 'என்றென்றும் மாறிவிட்டது” என்றார். அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்தன. ஊடகங்கள் வழியாக என் மீது பொய்யான, மிகக் கடுமையான மற்றும் குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது வெறுக்கத்தக்க உள்ளடக்கத்தின் முடிவில்லாத சரமாரியான தாக்குதலைத் தூண்டியது. இருப்பினும் என் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. டெப் வலியுறுத்தியதுபோல், இக்குற்றச்சாட்டுகள் 'எனது வாழ்க்கையிலும் எனது தொழில்வாழ்க்கையிலும் நில அதிர்வுமிக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், நடுவர் மன்றம் என் வாழ்க்கையை திரும்பக் கொடுத்தது. நான் உண்மையில் மதிப்பளிக்கப்பட்டதாக உணர்கின்றேன்”.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'நான் எதிர்கொள்ளவேண்டிய சட்டத் தடைகளின் உயரங்களை நன்கு அறிந்தே' வழக்கைத் தொடர முடிவு செய்ததாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார். அவர் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், “உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற எனது தேடுதலானது எனது சூழ்நிலையில் இருந்த ஆண்களாயினும் பெண்களாயினும் அவர்களுக்கு உதவியிருக்கும். மேலும் அவர்களை ஆதரிப்பவர்கள் ஒருபோதும் கைவிட மாட்டார்கள். நீதிமன்றத்திலும் ஊடகங்களிலும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என்ற நிலை இப்போது திரும்பும் என்று நம்புகிறேன். … Veritas numquam perit. உண்மை என்றும் அழியாது”.

தீர்ப்புக்கு பிந்தைய அவரது சொந்த அறிக்கையில், ஹியர்ட், 'எனது முன்னாள் கணவரின் விகிதாசாரரீதியாக பொருத்தமற்ற பலம், செல்வாக்கு மற்றும் கவர்ச்சிக்கு எதிராக நிற்கும் அளவுக்கு ஆதாரங்கள் இன்னும் போதுமானதாக இல்லை என்பது எனது இதயத்தை உடைக்கிறது' என்று கருத்து தெரிவித்தார். 'இந்த தீர்ப்பு மற்ற பெண்களுக்கு எதனை அர்த்தப்படுத்துகின்றது” என்பதில் தான் இன்னும் ஏமாற்றமடைந்ததாக அவர் மேலும் வலியுறுத்தினார். இது ஒரு பின்னடைவு. வெளிப்படையாகப் பேசும் ஒரு பெண் பகிரங்கமாக தூற்றப்படும் மற்றும் அவமானப்படுத்தப்படும் ஒரு காலத்திற்கு இது கடிகாரத்தை திருப்புகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தீவிரமாக எடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு இது ஒரு பின்னடைவு”.

ஹியர்ட் பொதுவாக பெண்களையோ அல்லது குறிப்பாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்களையோ பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதால், விசாரணையின் முடிவுகள் அத்தகைய 'பின்னடைவு' அல்ல. மாறாக, நீண்டகால பின்விளைவுகளை பொருட்படுத்தாமல், பிற்போக்குத்தனமான #MeToo பிரச்சாரத்தை பயன்படுத்தி, தங்கள் நலன்களை மேம்படுத்த முயற்சிக்கும் வசதி படைத்த ஆண்கள் மற்றும் பெண்களின் சுயநல அடுக்கினை அடையாளப்படுத்தும் மாதிரியாக இருக்கின்றார். ஹாலிவுட்டில் உள்ள பலருடன் சேர்ந்து, பாலியல் துஷ்பிரயோக சூனிய வேட்டையின் போது ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத்துறை நிறுவனங்களின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர் தெளிவாக அடையாளம் கண்டார். எனவே, 2018 ஆம் ஆண்டில், 'பெண்கள் உரிமைகளுக்கான' ஒரு சிலுவைப் போராளியாக தன்னை காட்டிக்கொள்ள சந்தர்ப்பவாத முடிவை எடுத்தார். அந்த செயல்பாட்டின் இழிந்த தன்மையை மிகைப்படுத்த முடியாது.

கடந்த பல ஆண்டுகளாக நடிகர்கள், இசைக்கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்களுக்கு எதிராக செய்யப்பட்ட அனைத்து ஆதாரமற்ற கூற்றுக்களின் மீது இந்த தீர்ப்பு வழங்கலினால் இடப்பட்ட கேள்விக்குறிதான் இங்கு பரந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஹியர்ட்டின் வார்த்தைகளை வெறுமனே ஏற்றுக்கொள்ளப்படமுடியாவிட்டால், அவருடையதே இல்லை என்றால், வேறு எவருடைய வார்த்தைகளையும் ஏன் நம்பவேண்டும்? என நடுவர் மன்றம் தீர்க்கமாக முடிவு செய்திருந்தது.

மேலே குறிப்பிட்டது போல், புதன்கிழமை தீர்ப்பின் இந்த பரந்த தாக்கங்கள் #MeToo ஆதரவு சக்திகளை கோபத்தில் ஆழ்த்தியது. பலர் தங்களின் சொந்த வடிவமான 'நடுவர் மன்றத்தை செல்லுபடியற்றதாக செய்வதில்' ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தத் தீர்ப்பை சட்டவிரோதமானது என்று நிராகரித்து, ஹியர்ட் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பித்துகொண்ட ஒரு பாதிக்கப்பட்டவர் என்று ஆதாரம் இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.

Rolling Stone அதன் பதிலை ''ஆண்கள் எப்போதும் வெல்கின்றார்கள்': ஆம்பர் ஹியர்ட்டின் தீர்ப்பால் தப்பிப்பிழைத்தவர்கள் 'நோயுற்றுள்ளனர்' என தலைப்பிட்டது. 'டெப் எதிர் ஹியர்ட் தீர்ப்பு மிகவும் மோசமானது' என BuzzFeedNews பின்வருமாறு கருத்து கூறியது, 'உலகில் ஒரு பெண்ணாக இருப்பதன் அர்த்தம் நீங்கள் ஒரு ஆணால் அல்லது ஒரு நிகழ்வால் மட்டுமே தண்டிக்கப்படுகிறீர்கள் என்று அர்த்தமல்ல; அது அடிபணியச் செய்யும் தாக்குதலுடன் மோதலில் ஈடுபட வேண்டும் என்பதாகும். 'நியூ யோர்க் டைம்ஸில் ஏ. ஓ. ஸ்காட், ஒரு துளி கூட ஆதாரத்தை வழங்க கவலைப்படாமல், 'அவரை [டெப்பை] தவறு செய்யாத, பாதிக்கப்படக்கூடிய, மனிதாபிமானவராக ஏற்றுக்கொள்வதற்கும், அவரை [ஹியர்ட்டை] கொடூரமானவராகப் பார்ப்பதற்கும் பொதுமக்கள் தயாராகவுள்ளதாக தெரிவித்தார். ஏனென்றால் அவர் ஒரு ஆணாவார். பிரபலயத்தன்மையும் ஆண்மைத்தன்மையும் பரஸ்பரம் வலுப்படுத்தும் முன்னுரிமைகளை கொண்டுவருகின்றன”.

குறிப்பாக வெறுக்கத்தக்க கருத்து ஒன்றில், பிரிட்டிஷ் தாராளவாத பிலிஸ்டினிசத்தின் தாயகமான கார்டியனில் உள்ள மொய்ரா டோனெகன், 'விசித்திரமான, நியாயமற்ற மற்றும் அநியாயமான' தீர்ப்பைக் கொண்ட இந்த விசாரணையானது, 'பொதுமக்கள் வெறுப்புணர்ச்சிக்கான களியாட்டமாக மாறியுள்ளது என்று கூறினார். பெரும்பாலான ஏளனப்படுத்தல்கள் பெயரளவில் ஹியர்டை நோக்கி செலுத்தப்பட்டாலும், உண்மையில், இது எல்லா பெண்களையும் நோக்கியதாக உள்ளது என்ற உணர்வை அசைப்பது கடினம்”.

டைம் இதழில், சமூகவியலாளர் நோரா பெடெரா விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டுபவர்களை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்துவது ஒரு 'கட்டமைப்புரீதியான சமத்துவமின்மை' எனவும் மற்றும் மறைமுகமாக தடை செய்யப்பட வேண்டும் என்றும் முடிவு செய்தார். சத்தியப்பிரமாணத்தின் கீழ் கடினமான கேள்விகளை 'உண்மையைத் தேடுவதற்கான அதிகூடிய தராதரம்' என்று பொதுமக்கள் தவறாகக் கருதும் அதே வேளையில், 'பாலியல்-வன்முறை வழக்குகளில் உண்மைகளை விஞ்ஞான ஆய்வுகள் மறைப்பதாக' டைம் கருத்துப்பிரிவு வாதிட்டது. குறுக்கு விசாரணை 'பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிர்ச்சிகரமான அறிகுறிகளை உருவாக்குகிறது. அது அவர்கள் அனுபவித்த வன்முறையின் விவரங்களை நினைவுபடுத்தும் திறனைத் தடுக்கலாம்.' பெடெரா, நிச்சயமாக, துஷ்பிரயோகத்தில் குற்றம்சாட்டுபவர்கள் 'பாதிக்கப்பட்டவர்கள்' என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என்றும் கருதுகிறார். இது அவருக்கு அவரது வாதத்தை மிகவும் எளிதாக்குகிறது. உண்மையில், குற்றம் சாட்டியவரை வழக்கறிஞர் மூலம் முழுமையாக விசாரிக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை இருக்க வேண்டும் என்பதை இந்த வழக்கு நிரூபிக்கிறது. இதை நேர்மையானவர்கள் யாரும் எதிர்க்க முடியாது.

டெப் தனது திரைப்பட நட்சத்திர அந்தஸ்தின் காரணமாக இந்த வழக்கில் வெற்றி பெற்றார் என்ற வாதம் சிறிதளவு அல்லது செல்லுபடியாகாது. உண்மையில், சுட்டிக்காட்டப்பட்டபடி, அவர் ஒரு அமெரிக்க நீதிமன்றத்தில் ஹியர்ட் மீது வழக்குத் தொடர கணிசமான சட்ட சிக்கல்களை எதிர்கொண்டார். இதை ஒருவர் இவ்வாறு கூறலாம்: டெப்பின் பிரபல்யம் பலரைப் போலல்லாமல், ஊடக விரோதப் போக்கைப் புறக்கணிக்கவும், சட்டச் செலவை ஏற்கவும், வழக்குக்காக மாதங்களை செலவிடவும் முடிந்த அளவுக்கு அவருக்குச் சாதகமாக இருந்தது. அவரது அந்தஸ்து, ஒருதடவை ஒரு சமமான பொதுநிலைமையை உருவாக்கியது.

டெப்பின் மிகவும் பரந்த பிரபலமான ஆதரவு அவருக்கு ஒரு நியாயமற்ற முன்னுரிமையை வழங்கியது என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, இது ஒரு பகுதியாக, ஒரு முக்கிய கலைஞராக (Minamata, Waiting for the Barbarians போன்ற படங்களில் உட்பட), நீதிமன்றத்தில் அவர் தோன்றியது மற்றும் ஹியர்டின் சாட்சியத்தில் பொதுவான நம்பிக்கை இல்லாமையை காட்டுகின்றது.

மே 23 நிலவரப்படி டிக்டொக்கில், '#IStandWithAmberHeard சுமார் 8.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் #JusticeForJohnnyDepp சுமார் 15 பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது' என்றும் NPR சுட்டிக்காட்டியுள்ளது. இந்த பரந்த பிரதிபலிப்பு ஹாலிவுட்டின் சுயநலம், சுய பரிதாபம் மற்றும் சுய விளம்பரம் உள்ளடங்கலாக #MeToo கும்பல் மீதான பொது மனப்பான்மையின் மிகவும் துல்லியமான படத்தை வழங்குகிறது

உலக சோசலிச வலைத் தளம் அக்டோபர் 2017ல் இருந்து கண்டனங்கள் மற்றும் அதைத் தொடர்ந்து “காணாமல் போவது” பெண்களின் உரிமைகளை பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ பாதுகாப்பதில் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையில், களையெடுப்பின் ஜனநாயக விரோதமான தன்மை நீண்டகாலப் போக்கில் அனைவரின் உரிமைகளையும் அழிவிற்கு உட்படுத்தும். இந்த கட்டத்தில் இந்த உணர்வு நிச்சயமாக மிகவும் பரவலாக பகிரப்படுகிறது என வலியுறுத்தி வந்தது.

டெப்-ஹெர்ட் வழக்கானது, #MeToo பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சலுகை பெற்ற சமூக அடுக்கின் குறுகிய தன்மையையும், பெண்கள் மற்றும் ஆண்கள் போன்று பெரும்பாலான வெகுஜனங்களில் இருந்து அதன் தனிமைப்படுத்தப்பட்ட தன்மையையும் வெளிக்கொணர்வதில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது.

Loading