சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) ஸ்தாபிக்கப்பட்டு 50 வது ஆண்டு நிறைவு

லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிகொடுப்பில் இருந்து புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதம் வரை

| பகுதி ஒன்று | பகுதி இரண்டு | பகுதி மூன்று | பகுதி நான்கு | பகுதி ஐந்து | பகுதி ஆறு |

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) 1968 ஜூனில் ஸதாபிக்கப்பட்டதில் இருந்து 50 வது ஆண்டு நிறைவை குறிக்கும் முகமாக அது வெளியிடும் தொடர் கட்டுரைகளில் இது இரண்டாவதாகும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (RCL) என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட அது, 1996ல் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என பெயர் மாற்றப்பட்டது. 1968 ஜூன் 16-17 இல் நடந்த ஸ்தாபக மாநாட்டை குறிப்பதன் பேரில் ஏற்கனவே அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரைகள் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் கொள்கைப் பிடிப்பான அடித்தளங்களை விளக்குவதோடு, கடந்த 50 ஆண்டுகளாக இந்த கொள்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இன்றியமையாத அரசியல் படிப்பினைகளை வெளிக்கொணர உள்ளன. ட்ரொட்ஸ்கிச கட்சி எனக் கூறிக் கொண்ட லங்கா சம சமாஜக் கட்சி, 1964ல் சிறிமா பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்து காட்டிக்கொடுத்த, வேலைத்திட்டம் மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்தையும் பாதுகாப்பதை அடித்தளமாகக் கொண்டே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தியடைந்த நாடுகளில், சர்வதேச ரீதியில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளிகளின் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் இயலுமை கொண்ட ஒரே வர்க்கம் தொழிலாளர் வர்க்கமே, என்று ஸ்தாபித்த ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்திற்காக போராடுவதே சோசலிச சமத்துவக் கட்சியின் மையப் பணி ஆகும். இந்த படிப்பினைகள் இலங்கையில் மட்டுமன்றி ஆசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்துவரும் போராட்டங்களுக்கு தீர்க்கமானவை ஆகும்.

1964 ஜூன் மாதம், லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்தகொண்டு செய்த பெரும் காட்டிக்கொடுப்பை அடுத்து, இலங்கையிலான அரசியல் நிலைமையில் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் ஒவ்வொரு பகுதியினர் மத்தியிலும் அலை அலையான அரசியல் குழப்பங்கள் செல்வாக்கு செலுத்தின.

எவ்வாறாயினும், லங்கா சம சமாஜக் கட்சி சக்திவாய்ந்த 21 அம்சக் கோரிக்கை இயக்கத்தை நிறுத்திகொண்ட போதிலும், தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களிடையேயும் இளைஞர்களிடையேயும் அமைதியின்மை மெதுவாக தலைதூக்க தொடங்கியது.

வெலோனா துணி தொழிற்சாலை உட்பட தனியார்துறை வேலைநிறுத்தங்கள் வெடித்தன. வெலோனாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பெரும்பாலும் பெண்கள், கூட்டணி அரசாங்கத்தின் பொலிஸ் துன்புறுத்தலுக்கு முகம் கொடுத்தனர். வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக, பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் அருகிலுள்ள கண்டி நகரத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

சோசலிசத்தை கொண்டுவரும் என, லங்கா சம சமாஜக் கட்சியும் ஸ்ராலினிச தலைவர்களும் பொய்யாக வாக்குறுதி அளித்த பண்டாரநாயக்கவின் கூட்டணி அரசாங்கமானது, 1964 இன் இறுதி வரை கூட நீடித்திருக்கவில்லை. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பினால் அது பதவி இழந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த சமயத்திலும் அரசியல் தீவிரமயமாதல் தொடர்ந்தது. பெரதிக சுலங் (கிழக்குக் காற்று), கினி பபுர (தீப்பொறி) மற்றும் ரது தருவ (சிவப்பு நட்சத்திரம்) போன்ற பல குட்டி முதலாளித்துவ அரசியல் குழுக்கள், மாணவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் உருவாயின.

சோவியத் ஒன்றியத்தில் லுமும்பா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோஹன விஜேவீர தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (JVP) இந்த குழுக்களுள் முன்னணியில் இருந்தது. அதன் சித்தாந்தமானது மாவோவாதம், காஸ்ட்ரோவாதம், சேகுவேராவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்தினதும் கலவையால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த குழுக்கள் அனைத்தும் இலங்கையிலும் மற்றும் சர்வதேச ரீதியிலும் அபிவிருத்தியடைந்து வந்த அரசியல் நெருக்கடியின் சர்வதேச குணாம்சத்தையும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தையும் நிராகரித்தன.

தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொண்ட பிரதான அரசியல் கட்சியாக லங்கா சமசமாஜ கட்சி (புரட்சிகர) அல்லது LSSP (R) என அழைக்கப்பட்ட கட்சியானது, பண்டாரநாயக்க அரசாங்கத்திற்குள் நுழைவதற்கு எதிராக வாக்களித்திருந்த லங்கா சம சமாஜக் கட்சியிலிருந்த பிரதிநிதிகளால் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

1964 ஜூலையில் நடந்த லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டில், கூட்டணியின் எதிர்ப்பு குழு முன்வைத்த தீர்மானமானது, பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) அரசாங்கத்துடன் கூட்டணி சேருவது 'கட்சியின் புரட்சிகர வேலைத்திட்டத்தினை ஒட்டு மொத்தமாக மீறுவதாகும்' என்று வகைப்படுத்தியது. எவ்வாறெனினும், லங்கா சம சமாஜக் கட்சி இன் துரோகத்தை கூட்டணி அரசாங்கத்தில் 'அமைச்சர் பதவிகளை பெறும் செயலாக' பண்புமயப்படுத்தியதன் மூலம், அந்த தீர்மானமானது சிங்கள ஜனரஞ்சகவாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடன் ஏற்படுத்திக்கொண்ட போட்டியிடாமை தேர்தல் உடன்படிக்கை மற்றும் இனவாத மக்கள் ஐக்கிய முன்னணியுடன் ஒரு ஐக்கிய இடது முன்னணிக்குள் நுழைந்தமை உட்பட லங்கா சம சமாஜக் கட்சியின் சந்தர்ப்பவாதத்தினுள் மீண்டும் வீழ்ந்தமையை நியாயப்படுத்தியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, முந்தைய தசாப்தம் முழுதும், லங்கா சம சமாஜக் கட்சி சோசலிச சர்வதேசியவாத கொள்கைகளிலிருந்து பின்வாங்கியமைக்கு அரசியல் ரீதியாக பொறுப்புக் கூறவேண்டிய பப்லோவாத ஐக்கிய செயலகத்திற்குள் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி தொடர்ந்தும் இருந்து வந்தது. லங்கா சம சமாஜக் கட்சி, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தை நிராகரித்தமையும் முதலாளித்துவ தேசியவாதம், ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் உட்பட ஆளும் வர்க்கத்தின் அனைத்து முகமைகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவதற்கு போல்ஷிவிக் வகையிலான கட்சிகளை ஸ்தாபிப்பதன் அவசியத்தை நிராகரித்தமையும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்தின் பிரதான அம்சங்களாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) ஸ்தாபக உறுப்பினர்கள், ஆரம்பத்தில் லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக ட்ரொட்ஸ்கிசத்திற்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி பற்றி ஆராய்ந்தனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே, லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பின் அரசியல் வேர்கள் அதன் பப்லோவாத முன்னோக்கிலேயே உள்ளன என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களே 1968 இல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை ஸ்தாபித்தவர்களாவர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் விளக்கியதாவது: 'இலங்கையில் பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) ஊடாக, முதலில் 1964 ஜூனில் ஜெரி ஹீலி மற்றும் டிசம்பரில் சோசலிச தொழிலாளர் கழகத்தின் செய்தித்தாளின் ஆசிரியர் மைக் பண்டா மூலம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இலங்கையில் செய்த தலையீடுகள், புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உள்ளே ஒரு அனைத்துலக குழு-சார்பான ஒரு குழுவை உருவாக்கியது. எவ்வாறாயினும், புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி ஒரு விரோதமான அரசியல் சூழலில் இருந்தது... முதலாவது புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டில், 'சர்வதேச பிரச்சினையை', அதாவது, பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிராக அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தைப் பற்றி கலந்துரையாட அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் கொண்டுவந்த தீர்மானத்தை தடுப்பதற்காக முழு தலைமையும் ஒன்றிணைந்தது.”

1964 ஜூனில் லங்கா சம சமாஜக் கட்சி மாநாட்டில் அரசியல் ரீதியாக தலையிடுவதற்கு இலங்கைக்கு வந்திருந்த ஜெரி ஹீலி, அவரது இலங்கையில் மாபெரும் காட்டிக்கொடுப்பு என்ற ஆவணத்தில் எழுதியதாவது: 'லங்கா சம சமாஜக் கட்சியின் புரட்சிகரப் பிரிவானது இப்போது இலங்கையில் புரட்சிகரக் கட்சியை மீண்டும் கட்டமைப்பதற்கான வரலாற்று பணியை கொண்டுள்ளது. அவர்கள் கடந்த காலத்துடன் அதற்குள்ள தொடர்பை புரிந்து கொண்டு பாரிசில் ஐக்கிய செயலகத்துடன் முற்றிலுமாக முறித்துக் கொள்ளும்போது, அவர்கள் இதைச் சிறப்பாக செய்வார்கள்.'

வில்பிரட் “ஸ்பைக்” பெரேரா

இந்த ஆலோசனையை முக்கியத்துவமானதாக எடுத்துக் கொண்ட ஒரே நபர், இரண்டாம் உலகப் போரின் போது போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த, ஒரு மூத்த ட்ரொட்ஸ்கிஸ்டான, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி இன் மத்திய குழு உறுப்பினராக இருந்த ஸ்பைக் என்றழைக்கப்பட்ட வில்ஃபிரட் பெரேரா ஆவார்.

புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியில் இணைந்த இளைஞர்கள், தமது சொந்த அனுபவங்களினூடாக, அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வை தொலைநோக்குடன் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. 1965 பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது, 'லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்பு இறுதியாக நடக்கும் வரை, ஏன் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி தலைவர்களால் அதைப் பற்றி முன்கூட்டியே எச்சரிக்க முடியாமல் போனது?” என்ற கேள்வியை கேட்ட போது, அவர்களிடம் அதற்கு பதில் இல்லை என்பதை அவர்கள் கண்டார்கள்.

புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி இன் மோசமான தேர்தல் முடிவுகள், கட்சியின் நெருக்கடியை அதிகப்படுத்தியது. முன்னணி புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி உறுப்பினரான வி. காராளசிங்கம், குறிப்பாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடன் நெருங்கிய உறவுகளை வளர்ப்பதற்காக இந்த சூழ்நிலையை சுரண்டிக்கொண்டார். 1965 டிசம்பரில், மாணவர்களின் பகிஷ்கரிப்பின் போது, தலைமை தாங்கியதற்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அவர் சட்ட உதவிகளை வழங்கியிருந்தார்.

காராளசிங்கம், “முதுமைத் தளர்ச்சியுற்ற இடதுசாரியம்” (Senile Leftism) என்ற தனது சிறு பிரசுரத்தில், 1964 டிசம்பரில் லங்கா சம சமாஜக் கட்சி இன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உடன் இணைந்து அரியாசன உரைக்கு எதிராக வாக்களித்து, பண்டாரநாயக்க அரசாங்கத்தை கவிழ்த்தமையை ஒரு 'இமாலயத் தவறு' என்று வகைப்படுத்தினார். அவர் பிரதானமாக மாணவர்களை உள்ளடக்கிய ஒரு புதிய மத்தியவாத குழுவை, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சிக்குள் அமைத்தார். அது சக்தி என்ற ஒரு புதிய பத்திரிகையை பிரசுரிக்கத் தொடங்கியது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியின் பகுதியாக இருந்த லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு “இடது” பக்கம் திரும்புமாறு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும் பப்லோவாத அரசியலை சக்தி குழு தொடர்ந்தும் முன்னெடுத்தது. 1966 மே தினத்தன்று, காராளசிங்கம் எழுதிய 'பகிரங்க கடிதம்' ஒன்றை சக்தி வெளியிட்டது. ஒரு புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-லங்கா சம சமாஜக் கட்சி-கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அரசாங்கமானது தற்போதுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு ஒரு முற்போக்கான மாற்றீடாக இருப்பதோடு அது 'ஒரு உண்மையான புரட்சிகர அரசாங்கத்திற்கான பாதையில் அடி எடுத்து வைப்பதாக இருக்கும்' என்று அந்த கடிதம் வாதிட்டது.

ஸ்பைக் இந்தக் கட்டுரையை பரந்த விமர்சனத்திற்கு உள்ளாக்கினார். காராளசிங்கம் முன்மொழிந்துள்ள 'இடைக்கால ஆட்சி' என்பது முதலாளித்துவ அரசாங்கங்களின் தொடர்ச்சியே தவிர வேறொன்றும் அல்ல, அத்துடன் 'ஐக்கிய தேசியக் கட்சி-எதிர்ப்பு, வெகுஜனங்களின் மிக பின்தங்கிய அடுக்குகளின் தற்போதைய நனவு மட்டத்திற்கு சரணடைவதை' இது பிரதிநிதித்துவம் செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

தனது உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்திய காராளசிங்கம், சக்தி குழு முன்னணி உறுப்பினர்களுக்கும் லங்கா சம சமாஜக் கட்சி செயலாளர் லெஸ்லி குணவர்தனவிற்கும் இடையில் இரகசியக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். சக்தியின் உறுப்பினர்களுக்கும் அவர்கள் லங்கா சம சமாஜக் கட்சியில் மீண்டும் இணைந்தால் அதன் அரசியல் பாதைக்கும் சாதகமானதாக இருக்கும் என கபடத்தனமாக சித்தரிக்கப்பட்ட ஒரு திட்டமும் திட்டமிடப்பட்டது. இதன் அர்த்தம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான அதன் பிற்போக்கு கூட்டணியின் ஒரு பாகமாக மாறுவதே ஆகும்.

சக்தி குழுவின் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்து, அதன் உறுப்பினர்கள் லங்கா சம சமாஜக் கட்சி இன் தொழிற்சங்கங்கள் மற்றும் இளைஞர் அமைப்பிலும் முன்னணி பதவிகளை பெற முடியும் என காராளசிங்கம் கூறினார். இது லியோன் ட்ரொட்ஸ்கி ஏற்றுக்கொண்ட, ஒரு 'நுழைவு தந்திரோபாயம்' என்று ஒரு போலி தொடர்பையும் அவர் ஏற்படுத்தினார்.

விஜே டயஸ்

மற்றொரு சக்தி உறுப்பினரின் ஆதரவோடு, இதை எதிர்த்த விஜே டயஸ் 1964 ஜூன் மாதம் லங்கா சம சமாஜக் கட்சி காட்டிக்கொடுப்பை எதிர்க்க எடுத்த முடிவை இது தலைகீழாக மாற்றுவதாகும் என்று வலியுறுத்தினார். 1966 ஜனவரியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த இனவாத, தமிழர் விரோத ஆர்ப்பாட்டத்திற்கு லங்கா சம சமாஜக் கட்சி கொடுத்த ஆதரவு, இந்தக் கூட்டணியின் முற்றிலும் பிற்போக்கான பாத்திரத்தை உறுதிப்படுத்த போதுமானதாகும் என அவர் விளக்கினார். ஒரு இறுதி முடிவு எடுக்கப்படாமல் கூட்டம் கலைந்தது.

சக்தி குழுவினரின் பல உறுப்பினர்களுக்கு அப்போது கொழும்பில் இருந்த ஒரு முன்னணி பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழக உறுப்பினரான டோனி பண்டாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. காராளசிங்கத்தின் 'நுழைவு' அரசியலின் சந்தர்ப்பவாத பண்பை பண்டா விளக்கியதுடன், புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியின் உள்ளே அனைத்துலகக் குழுவுக்காகவும் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்திற்காகவும் ஒரு போராட்டத்தை நடத்திய ஸ்பைக்கிற்கும் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் முன்னோக்குக்கு ஈர்க்கப்பட்டவர்கள் ஒரு புதிய குழுவை உருவாக்கி, அதற்கு விரோதய என்ற பெயரை வைத்தனர். அதன் பத்திரிகையும் அந்த பெயரில் வெளியிடப்பட்டது. பல வாரங்களாக இலங்கையில் தங்கியிருந்த பண்டா, 1953 இல் நான்காம் அகிலத்தில் ஏற்பட்ட பிளவு மற்றும் அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) 1963 இல் பப்லோவாதிகளுடன் மீண்டும் இணைவதற்கு எதிராக பிரித்தானிய சோசலிச தொழிலாளர் கழகம் (SLL) முன்னெடுத்த அரசியல் போராட்டம் உட்பட, பப்லோவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தின் இன்றியமையாத வரலாற்றை அந்தக் குழுவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

கீர்த்தி பாலசூரிய

இந்த கலந்துரையாடல்களில், விரோதய குழுவில் இருந்த 19 வயதே ஆன மிக இளமையான உறுப்பினர் கீர்த்தி பாலசூரிய, ட்ரொட்ஸ்கிசத்திற்கான மிகக் கடுமையான தத்துவார்த்த மற்றும் அரசியல் போராளியாக எழுந்ததோடு, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்ட தருணத்தில், குழுவின் தலைமைத் தலைவராக ஏகமனதாக கருதப்பட்டார்.

லெனினின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என பண்டா வலியுறுத்தினார்? லெனின் அதில் அவர் தொழிலாள வர்க்கத்தின் உண்மையான புரட்சிகரக் கட்சியை கட்டமைப்பதற்கான பிரச்சனையை பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். 'மார்க்சிசத்தை தேசிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைப்பதாக' கூறிக்கொண்ட அந்த நேரத்தில் பெருகிவந்த எண்ணிலடங்கா குட்டி முதலாளித்துவ தீவிரவாத குழுக்களை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியமாக இருந்தது. அவற்றின் தேசியவாத கண்ணோட்டத்தின் அடித்தளம், தத்துவத்தை அவமதிப்பது மற்றும் 'நடைமுறை வெற்றிகளே முக்கியம் வாய்ந்தவை தத்துவத்தின் சுமைகள் அல்ல” என்ற வலியுறுத்தல்களில் அடங்கியிருந்தது.

அவரது நாட்களில் இருந்த சந்தர்ப்பவாத குழுவினருக்கு பதிலளித்த லெனின் பின்வருமாறு அறிவித்தார்: '’உண்மையான இயக்கம் முன்வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு டசின் வேலைத் திட்டங்களையும் விட முக்கியமானது’ என்ற மார்க்சின் கருத்தை ஆரவாரத்துடன் மேற்கோள் காட்டும்போது, ரபோச்சியே தேலோ எந்தளவுக்கு உணர்மையற்று இருக்கின்றது என்பதை நாம் அவதானிக்க முடியும். தத்துவார்த்த குழப்பங்களின் ஒரு காலகட்டத்தில் இந்த வார்த்தைகளை மீண்டும் கூறுவதனாது, மகிழ்ச்சியான நாளாக இருக்கட்டும் என ஒரு மரணச்சடங்கில் அஞ்சலி செலுத்துபவர்களுக்கு கூறுவது போன்றதாகும்.' (ரபோச்சியே தேலோ -வெளிநாட்டு ரஷ்ய சமூக ஜனநாயகவாதிகளின் பத்திரிகை)

பப்லோவாதிகளின் சந்தர்ப்பவாதத்தை அம்பலப்படுத்த விரோதய குழு மீண்டும் மீண்டும் தலையிட்டது. அதன் உறுப்பினர்கள் 1967 இல் கொழும்பில் நடந்த பகிரங்க விரிவுரையில் வைத்து ஐக்கிய செயலகத் தலைவர் ஏர்னெஸ்ட் மண்டேலை சவால் செய்தனர். 20 ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அரசியல் குற்றம் என்ன என்று கேட்டபோது, 1940 இல் லியோன் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை புறக்கணித்த மண்டேல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசியல் பிரதிநிதியான அமெரிக்க ஜனாதிபதி ஜோன் கென்னடியின் கொலையை குறிப்பிட்டார்.

மண்டேல் பங்கேற்ற புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியின் உறுப்பினர் கூட்டத்தை பயன்படுத்திக்கொண்ட ஸ்பைக், ஐக்கிய செயலக தலைவரை எதிர்கொண்டார். 'லங்கா சம சமாஜக் கட்சியின் சீரழிவு மற்றும் இறுதிக் காட்டிக்கொடுப்புக்கு நேரடி பொறுப்பாளி' என்று அவர் ஐக்கிய செயலகத்தை குற்றம் சாட்டினார். இதற்கான மண்டேலின் பதிலானது ஸ்பைக்கிற்கு எதிராக ஒரு வேட்டையாடலை நடத்த முற்படுவதாக இருந்தது. ஸ்பைக், ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதிய ஒரு ஆசிரியர் தலையங்கத்தில், ஒரு மூன்று கண்ட மாநாட்டில் வைத்து காஸ்ட்ரோ நான்காம் அகிலத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டனம் செய்திருந்ததை மண்டேல் அதற்காகப் பற்றிக்கொண்டார்.

பாலா தம்பு

புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவர் பாலா தம்புவும் மத்திய குழுவும், தன்னை 'பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர அபிப்பிராயங்களின் நேர்மை குறித்து சந்தேகத்தை பரப்புவதன் மூலம் அவருக்கு எதிராக ராஜ அவமரியாதை செய்வதாக' குற்றம் சாட்டுகின்றனர் என அறிவித்து, ஸ்பைக் தன்னை தைரியமாக பாதுகாத்துக்கொள்ள முன்வந்தார். தான் ஒரு சாதாரண மனிதராக அல்லாமல், லியோன் ட்ரொட்ஸ்கி நிறுவிய சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் பெருமை வாய்ந்த உறுப்பினர் என்ற வகையிலேயே... காஸ்ட்ரோவை விமர்சித்ததாக” அவர் அறிவித்தார். “சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஏமாற்ற மற்றும் திசைதிருப்ப முற்படுவதற்கும், மறைமுகமாகமாக ட்ரொட்ஸ்கிஸ்டுகளை வேட்டையாடுவதற்கு தூண்டுவதற்கும் எதிராக காஸ்ட்ரோவை விமர்சிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்,” என்றும் அவர் கூறினார்.

1968 ஏப்பிரலில் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி காங்கிரஸில், ஐக்கிய செயலகத்தின் திருத்தல்வாத அரசியலில் இருந்து முறித்துக் கொண்டு அனைத்துலகக் குழுவில் சேருவதற்கான ஒரு தீர்மானத்தை கட்சிக்குள் ஸ்பைக் கொண்டுவந்தார். தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட போது, ஸ்பைக் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்து பிளவுற்று, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.

இது உலக முதலாளித்துவத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வந்த காலம் ஆகும். இது 1967 இல் ரூபாயின் மதிப்பைக் குறைத்ததன் ஊடாக, வாழ்க்கை நிலைமைகள் வீழ்ச்சியடைந்து, சமூக அமைதியின்மையை அதிகரிக்கச் செய்து அரசுதுறை வேலைநிறுத்த அலைகளைத் தூண்டிவிட்டதன் மூலம் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

இலங்கையிலான இந்த போராட்டங்கள் சர்வதேச அளவில் சக்திவாய்ந்த வர்க்கப் போராட்டங்களுக்கு சமாந்தரமாக இடம்பெற்றன. 1968 மே-ஜூன் மாதங்களில், டு கோல் ஆட்சிக்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தத்தில் தொடங்கி, 1968 முதல் 1975 வரை ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகர போராட்டங்கள் வெடித்தன. 1968 இல் செக்கோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற 'பிராக் வசந்தம்' உட்பட இந்த போராட்டங்கள் ஸ்ராலினிச கிழக்கு ஐரோப்பாவையும் பற்றிப்படர்ந்தன. அமெரிக்க இராணுவம் வியட்நாமிலிருந்து வெளியேற்றப்பட்டது. இந்தியாவில், 1975ல், இந்திரா காந்தி அரசாங்கமானது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கு அவசரகால ஆட்சிக்கு முயன்றது.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக மாநாடு, 1968 ஜூன் 16 மற்றும் 17 அன்று நடைபெற்றது. 1966 இல் பிரிட்டனில் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் மூன்றாம் காங்கிரஸின் அறிக்கையை இது கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொண்டது. மூன்றாம் காங்கிரசில், நான்காம் அகிலம் கலைக்கப்பட்டு, மறுபடியும் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று அறிவித்த ஒரு போக்கை எதிர்த்தது சோசலிச தொழிலாளர் கழகம் போராடியது. நான்காம் அகிலத்தின் தொடர்ச்சியானது அனைத்துவித சந்தர்ப்பவாதத்திற்கும் எதிரான தொடர்ச்சியான அரசியல் போராட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளதாக சோசலிச தொழிலாளர் கழகம் வலியுறுத்தியது. லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி இரண்டினதும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் மைய முக்கியத்துவத்துக்கு புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதம் ஒரு வாழும் சாட்சியமாகும்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக மாநாட்டில், லங்கா சம சமாஜக் கட்சி, புரட்சிகர லங்கா சம சமாஜக் கட்சி மற்றும் சக்தியின் வரலாற்றை ஆய்வதன் ஊடாக இலங்கையில் ஒரு தேசிய புரட்சிகர போக்கு அனைத்துலகக் குழுவுடன் இணைவதையே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் உருவாக்கம் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்ற ஒரு நிலைப்பாடே முக்கியமாக கலந்துரையாடப்பட்ட விடயமாகும்.

இந்த நிலைப்பாட்டிற்கு எதிராக கீர்த்தி பாலசூரிய பலமாக வாதிட்டார். இந்த அரசியல் இயக்கத்தின் தொடர்ச்சியானது பப்லோவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த சர்வதேச போராட்டத்தில் தங்கியிருக்கின்றது அது ஒரு தேசிய போக்கு அல்ல, என்று கீர்த்தி வலியுறுத்தினார். சர்வதேச அளவில் பப்லோவாதத்தின் பரந்த தாக்கத்தின் ஒரு பகுதியே லங்கா சம சமாஜக் கட்சியின் காட்டிக் கொடுப்பு என விளக்கிய, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தலைமை பிரிவான, சோசலிச தொழிலாளர் கழகத்தின் தலையீடு மூலம் மட்டுமே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபிதம் சாத்தியமானது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மாநாடு, அனைத்துலகக் குழுவின் மூன்றாவது மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சோசலிச தொழிலாளர் கழகத்தின் தீர்மானத்துடன் முழு உடன்பாட்டையும் பிரகடனப்படுத்திய ஒரு தீர்மானத்தை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. அது கூறியதாவது: 'மத்தியத்துவமயப்பட்ட பாட்டாளி வர்க்க தலைமைத்துவமாக நான்காம் அகிலத்தை கட்டி எழுப்புவதற்கான புதிய சவால்களை எதிர்கொள்ள, நான்காம் அகிலத்தின் வேலைத்திட்டம் மற்றும் வழிமுறைக்கு அதன் தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெற்றுள்ள அதன் திறமையில் இந்த மாநாடு முழுமையான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

'இந்த மாநாடு அனைத்துவிதமான திருத்தல்வாதங்களுக்கும் எதிரான சளைக்காத போராட்டத்தில் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக இலங்கையில் தொழிலாள வர்க்க புரட்சிக்கான கட்சியை கட்டியெழுப்பும் பணிக்கு தன்னை உறுதியாக அர்ப்பணித்துக்கொள்வதோடு, எல்லா இடங்களிலும் எல்லா சூழ்நிலைமைகளின் கீழும் அதிகபட்சம் சாத்தியமானளவு வர்க்கப் போராட்டத்தில் செயலில் தலயீடு செய்வதுடன் பிரிக்க முடியமல் இந்தப் பணி பிணைந்துள்ளது என்பதையும் அறிவிக்கின்றது.”

இந்த மாநாடு கீர்த்தி பாலசூரியவை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் முதல் பொதுச் செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுத்தது.

Loading