முன்னாள் பிரெஞ்சு பிரதமர் கோவிட்-19 தொற்றுநோய் பதிலிறுப்பு தொடர்பாக விசாரணையில் உள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

முன்னாள் பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் அக்டோபர் 18 அன்று குடியரசு நீதிமன்றத்தால் (Court of Justice of the Republic - CJR) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், இது பிரெஞ்சு அரசாங்க அமைச்சர்கள் பதவியில் இருக்கும்போது செய்த குற்றங்களுக்கு தீர்ப்பளிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் விவகாரத்தை தவறாக நிர்வகித்த குற்றச்சாட்டின் பேரில், அவரது முன்னாள் சுகாதார மந்திரி அன்னியேஸ் புஸனின் மீது செப்டம்பர் 10, 2021 அன்று குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர், பிலிப் ‘துணை சாட்சி’ ஆக்கப்பட்டார், ஆனால் குற்றம்சாட்டப்படவில்லை.

ஜூலை 3, 2020, வெள்ளிக்கிழமை, பாரிஸில் நடந்த ஒப்படைப்பு விழாவிற்குப் பின்னர், வெளியேறும் பிரெஞ்சு பிரதம மந்திரி எட்வார்ட் பிலிப் (இடது) பேசுவதை புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம மந்திரி ஜோன் காஸ்டெக்ஸ் கேட்கிறார். பிரான்சின் வைரஸ் தொற்று காலத்தின் மீளத்திறக்கும் மூலோபாயத்தை ஒருங்கிணைத்த ஜோன் காஸ்டெக்ஸை நாட்டின் புதிய பிரதமராக பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் வெள்ளிக்கிழமை நியமித்தார் [AP Photo/Michel Euler]

குடியரசு நீதிமன்றத்தின் முடிவு, பிலிப் அரசாங்கத்தின் தொற்றுநோய்க்கான பதிலிறுப்பு அரசு குற்றவியல் சம்பந்தப்பட்டது என்பதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. பிரெஞ்சு சட்டத்தில், ‘துணை சாட்சி’ என்பவர், அவருக்கு எதிராக குற்றத்தை பரிந்துரைக்கும் ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அவர் குற்றவியல் வழக்கில் ஈடுபட்டவராகக் கருதப்படுவார். ‘மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்’ மற்றும் ‘ஒரு பேரழிவை எதிர்த்துப் போராடுவதில் இருந்து தானாக விலகிக் கொள்ளுதல்’ போன்ற குற்றங்களுக்கு பிலிப் துணை சாட்சியாக இருக்கிறார்.

இன்றுவரை பிரான்சில் 156,000 க்கும் அதிகமான மக்களையும், ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் கொன்று குவித்த தொற்றுநோய் காலத்தில் அரசாங்க உறுப்பினர்கள் செயல்பட்ட விதத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான தனிநபர்கள், மருத்துவர்கள் மற்றும் சங்கங்கள் புகார் அளித்துள்ளனர்.

எனவே, CJR, பிலிப்பிற்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஜூலை 2020 இல் விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணை பல அமைச்சர்களை குறிவைக்கிறது: பிலிப், புஸன் அவருக்குப் பின் சுகாதார அமைச்சராக பதவிக்கு வந்த ஒலிவியே வெரோன், மற்றும் பிலிப் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் சிபெத் என்டியாயே போன்றவர்கள் அதில் அடங்குவர். பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை பொறுத்தவரை, ‘வைரஸூடன் வாழ்வது’ என்ற கொள்கையை திணிப்பதில் அவரது பொறுப்பு மிகப்பெரியது, மேலும் அவர் ஜனாதிபதியாக சட்டபூர்வ விதிவிலக்கை அனுபவித்து வருகிறார்.

  • அக்டோபர் 2020 இல், பிலிப், வெரோன், புஸன் மற்றும் என்டியாயே, சுகாதாரத்திற்கான பொது இயக்குநர் ஜெரோம் சாலமன், மற்றும் பிரெஞ்சு பொது சுகாதார அமைப்பு (Santé Publique France) இன் இயக்குநர் ஜெனிவியேவ் சென் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்த CJR உத்தரவிட்டது. தோல்விகளுக்கு மத்தியில் பிலிப் விளக்கமளிக்க வேண்டியது என்னவென்றால்:
  • தொற்றுநோய் முடிவடைவதற்கு முன்பாக முகக்கவச கையிருப்பு கடுமையாக குறைந்தது;
  • தொற்றுநோயின் தொடக்கத்தில் மக்கள் முகக்கவசம் அணிவதைப் பரிந்துரைக்கத் தவறியது;
  • மார்ச் 2020 இல் நகராட்சித் தேர்தல்களை நடத்தியது;
  • உள்-அமைச்சக நெருக்கடிக் குழுவை (Inter-ministerial Crisis Committee - CIC) சரியான நேரத்தில் செயலாற்ற வைப்பதில் தோல்வியடைந்தது;
  • ஏற்கனவே இருக்கும் தொற்றுநோய் திட்டங்களில் வகுக்கப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் தோல்வியடைந்தது.

“நெருக்கடி நிர்வாகத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கை” தேவைப்படுவது தொடர்பான ஒரு ஆவணத்தில் குறைந்தது ஒரு ஆண்டுக்கு முன்பே பிலிப் கையெழுத்திட்டிருந்தாலும், CIC ஐ செயல்படுத்துவதில் அவர் தாமதம் செய்தார். “பல்வேறு துறைகளுக்கு நெருக்கடியை நீட்டிக்க திட்டமிடப்பட்டவுடன், போதுமான அளவு முன்கூட்டியே” ICC ஐ செயல்படுத்த இந்த ஆவணம் அழைப்பு விடுத்துள்ளது. மிக முன்னதாக டிசம்பர் 2019 இல் சீனாவில் இருந்து எச்சரிக்கைகள் வந்த போதிலும் மற்றும் ஜனவரி 2020 இல் பிரான்சில் முதல் நோய்தொற்றுக்கள் பதிவான போதிலும், பிரான்சின் முதல் கட்டுப்பாடு தொடங்கியபோது, அதாவது மார்ச் 17, 2020 அன்று தான் ICC செயல்படுத்தப்பட்டது.

பிலிப்பிற்கு துணை சாட்சி நிலையை வழங்கி, புஸனை குற்றம்சாட்டும் CJR இன் பொருத்தமற்ற முடிவானது, அதன் நடைமுறை பற்றிய மிகவும் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. முக்கிய குற்றவாளிகளான பிலிப் மற்றும் மக்ரோனை நீக்கும் நோக்கில், புஸனின் மீது கவனத்தை திசைதிருப்ப CJR முயற்சிப்பதாக அது தெரிவிக்கிறது.

கோவிட்-19 நோய்தொற்று பாதிப்பாளர்களின் சங்கமான CoeurVide19 இன் வழக்குரைஞர் Me Yassine Bouzrou, “இந்த முடிவை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் திருமதி அன்னியேஸ் புஸனின் நடவடிக்கைகள்… அரசாங்கத் தலைவரின் உடன்பாடு இல்லாமல் எடுக்கப்பட்டிருக்க முடியாது என்பது வெளிப்படையானது” என்று கூறினார். மேலும் அவர், “[பிரான்சில்] தரநிலை நீதிமன்றங்கள், புகார்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் எதுவும் செய்யவில்லை என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்றும் கூறினார்.

செப்டம்பர் 10, 2021 அன்று குற்றம்சாட்டப்பட்ட புஸன், ஏற்கனவே சுமார் 20 விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார், மற்றும் பத்திரிகைகளில் தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

இந்த வாரம், லு மொன்ட் நாளிதழ் “கோவிட்-19: தொற்றுநோய் பதிலிறுப்பு பற்றிய அன்னியேஸ் புஸனின் உண்மைகள்,” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பிரசுரித்தது, இது ஆவணங்களின் அடிப்படையில் தனது பெயரை நீக்க செய்திகளை சேகரித்த புஸனுக்கு புணர்வாழ்வளிக்க முயற்சிக்கிறது. “தகவல் கசிவுகளுக்குப் பயந்து, அமைச்சர்கள் குழுவிற்கு வெளியே, தனிப்பட்ட முறையில் அவரிடம் [மக்ரோனிடம்] தனது கவலைகளை தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்துகிறார்” என்பது போன்ற அதிர்ச்சிகரமான அறிக்கைகள் ஒரு சில வார்த்தைகளில் விளக்கப்பட்டுள்ளன. Mediapart செய்தியின்படி, புஸன் சுகாதார அமைச்சகத்தை விட்டு வெளியேறும் வரை, அமைச்சர்கள் குழுவில் அவர் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை.

புஸனின் பாதுகாப்பிற்கு நம்பகத்தன்மை இல்லை. இது அவரை ஒரு மருத்துவ நிபுணராக முன்வைக்கிறது, அவர் ஒரு அரசியல் சார்பற்ற நபர் என்றும், அவரை பற்றி போதுமான அளவு செவிகொடுத்து கேட்கப்படவில்லை என்றும் கூறுகிறது. உண்மையில், ஆளும் வர்க்கத்தில் அவர் கொண்டிருந்த பல தொடர்புகள் காரணமாக மக்ரோனால் மே 2017 இல் சுகாதார அமைச்சகத்தில் அவர் நியமிக்கப்பட்டார். 2015 ஆம் ஆண்டின் இறுதியில், ஹோலண்டின் கீழ், சுகாதாரத்திற்கான உயர் அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் சுகாதார நிர்வாகத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.

எவ்வாறாயினும், எல்லாவற்றிற்கும் மேலாக, புஸனின் செயலற்ற தன்மை நேரடியாக மக்ரோன் மற்றும் பிலிப்பின் மீது பொறுப்பை சுமத்துகிறது. புஸன் எதுவும் செய்யவில்லை, ஏனென்றால், குறிப்பாக அதன் பாதுகாப்பு வங்கிகளுக்கு கிடைக்கும் இலாபத்தைக் குறைக்க அச்சுறுத்தியது என்பதால், பிரெஞ்சு மக்களின் ஆரோக்கியத்தைப் பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்று அவர் சரியாக நினைத்தார். இது இப்போது CJR இன் முன் உள்ளது மக்ரோன் அல்லது பிலிப்பின் முன்முயற்சியால் அல்ல, மாறாக சிவில் கட்சிகளின் முன்முயற்சியால்.

அனைத்து மூத்த பிரெஞ்சு அதிகாரிகளையும் உள்ளடக்கிய CJR விசாரணையின் முடிவுகள், கோவிட் பற்றிய உத்தியோகபூர்வ விவரிப்பு பொய்களின் உள்ளடக்கம் என்பதை வெளிப்படுத்துகிறது. முதல் பூட்டுதலின் முடிவில் இருந்து, ஊடகங்களும் ஆளும் உயரடுக்குகளும் வைரஸின் முதல் அலையைத் தடுக்க எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளைக் கண்டித்துள்ளன. தொற்றுநோய் ஏற்படுத்தும் முக்கிய ஆபத்து என்னவென்றால், விஞ்ஞானிகள் அதைத் தடுக்க முற்படலாம் மற்றும் அதனால் உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்ற ஒரு தவறான கதையை அரசியல் ஸ்தாபகம் ஊக்குவிக்கிறது.

Since the pandemic began, pseudo-left parties in France like Olivier Besancenot's New Anti-capitalist Party and Nathalie Arthaud's Workers’ Struggle have joined their voices with those of the libertarians and the far right, hostile to any policy to eliminate the virus. A consensus in favor of “living with the virus,” at the expense of mass death, dominates capitalist media and the bourgeois and petty-bourgeois parties.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பிரான்சில் உள்ள போலி-இடது கட்சிகளான ஒலிவியே பெஸென்ஸநோவின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (New Anti-capitalist Party) மற்றும் நத்தலி ஆர்த்தோவின் தொழிலாளர்கள் போராட்டம் (Workers’ Struggle) ஆகியவை சுதந்திரவாதிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் குரல்களுடன் இணைந்து, வைரஸை அகற்றுவதற்கான எந்தவொரு கொள்கையையும் எதிர்த்தன. பாரிய உயிரிழப்பில் ‘வைரஸூடன் வாழ்வதற்கு’ ஆதரவான ஒருமித்த கருத்து, முதலாளித்துவ ஊடகங்கள், மற்றும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவக் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த கொடிய கொள்கை பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பின்பற்றப்பட்டது, இது சமூக செலவினங்களைக் குறைக்கவும், பொது சுகாதாரத்தின் இழப்பில் நிதியப் பிரபுத்துவத்தை வளப்படுத்தவும் உறுதியாக உள்ளது. முதல் கடுமையான பூட்டுதலின் போது –இத்தாலி மற்றும் ஐரோப்பா முழுவதும் எழுந்த வேலைநிறுத்தங்களின் அலைக்கு பதிலளிக்கும் வகையில் மார்ச் 2020 இல் பிரான்சில் விதிக்கப்பட்டது, மேலும் இது வைரஸின் புழக்கத்தை கிட்டத்தட்ட அகற்றியது- மக்ரோன் மக்களுக்கு கஞ்சத்தனமான உதவியை மட்டுமே வழங்கினார். மறுபுறம், முதல் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து, வங்கிகளுக்கு டிரில்லியன் கணக்கான யூரோக்களை வழங்கிய பிணை எடுப்புப் பொதியை வடிவமைக்க அவர் உதவினார்.

ஐரோப்பிய ஒன்றியமும் இதே கொள்கையை பின்பற்றியுள்ளது, இது மில்லியன் கணக்கான உயிர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தின் இழப்பில் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பில்லியனர்களை வளப்படுத்திய அதே வேளையில் பணவீக்கத்தை தூண்டியுள்ளது, உண்மையில், சீனாவைப் போலவே தொடர்புகளைக் கண்டறிந்து வைரஸ் பரவுவதை அகற்ற தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், மே 2020 இல் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதை உறுதிசெய்ய மக்ரோன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. BMJ (முன்னாள் பிரிட்டிஷ் மருத்துவ பத்திரிகை), இந்த கொள்கையை ‘சமூகக் கொலை’ என்று விவரிக்க மதிப்புமிக்க மார்க்சிசவாதியான ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸை மேற்கோள் காட்டியது.

இப்போது, பிரெஞ்சு நீதி அமைப்பு அதன் சொந்த தரநிலைகளின்படி, இந்தக் கொள்கை ஒரு அரசு குற்றம் என்பதற்கு உத்தியோகபூர்வ ஆவணத்தில் ஆதாரம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை பேரழிவு குறித்து எச்சரிக்கின்ற மற்றும் வைரஸை ஒழிப்பதற்கான விஞ்ஞான கொள்கைகளை வலியுறுத்துகின்ற வகையிலான, கோவிட்-19 நோய்தொற்று பற்றிய ஆயிரக்கணக்கான கட்டுரைகளை பிரசுரித்த உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கருத்துக்களை இது உறுதிப்படுத்துகிறது. WSWS உம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) தொற்றுநோய் ஒரு மருத்துவ நெருக்கடி மட்டுமல்ல, முதன்மையாக அது ஒரு அரசியல் நெருக்கடி என்று விளக்கியுள்ளன. உத்தியோகபூர்வ செயலற்ற தன்மை என்பது, ஐரோப்பிய சிக்கன நடவடிக்கை மற்றும் உலகளாவிய முதலாளித்துவத்தின் மரண நெருக்கடியுடன் தொடர்புடைய போர்க் கொள்கைகளின் தொடர்ச்சியாகும்.

எனவே, CJR இன் விசாரணை குறித்து மிகத் தீவிரமான எச்சரிக்கைகளை வெளியிடுவது அவசியம். முதலாளித்துவ அரசின் அரசியல் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் இத்தகைய விசாரணைகள், முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதில் சென்று முடிவடையும் என்ற கசப்பான அனுபவத்தை தொழிலாள வர்க்கம் ஏற்கனவே சந்தித்துள்ளது.

உண்மையில், அசுத்தமான இரத்தத்தின் பயங்கரமான சுகாதார ஊழல் மற்றும் 1982-1985 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் வைரஸால் பிரான்சில் இரத்தம் உறையும் திறனை மாசுபடுத்தியதில் மித்திரோனின் பெருவணிக சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பங்கைத் தொடர்ந்து CJR உருவாக்கப்பட்டது. 1990 களில் சுகாதார அதிகாரிகளின் கண்டனங்கள் இருந்தபோதிலும், CJR 2003 இல் சோசலிஸ்ட் கட்சியின் அனைத்து அரசியல் தலைவர்களையும் சுத்தப்படுத்தியது. பிலிப்பை விசாரணைக்கு உட்படுத்தக்கூடாது என்ற முடிவு, அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் குற்றத்தை மறைக்க ஒரு புதிய முயற்சியைக் குறிக்கிறது.

தொழிலாள வர்க்கம் விஷயங்களைத் தனது கைகளில் எடுத்துக் கொண்டு, மக்ரோன் மற்றும் கோவிட்-19 க்கு எதிரான தனது சொந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பணியிடங்கள் மற்றும் பள்ளிகளில் தொற்றுநோய்க்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், பல தொழிலாளர்கள் வைரஸைப் பற்றிய விஞ்ஞான புரிதலைப் பெற முடியாமல் விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். தொழிலாள வர்க்கத்திற்கு இது பற்றி கற்பிப்பதற்கும், அரசாங்கங்கள் மற்றும் ஊடகங்களின் பொய்களை எதிர்ப்பதற்கும், ICFI ஆனது, நவம்பர் 20, 2021 அன்று கோவிட்-19 தொற்றுநோய் குறித்த உலகளாவிய தொழிலாளர் விசாரணையைத் (Global Workers’ Inquest) தொடங்கியுள்ளது.

உலகெங்கிலும் நிகழும் படுகொலையின் உண்மையான குற்றவாளிகளின் முகத்திரைகளைக் கிழிக்க, உலகளாவிய தொழிலாளர்கள் விசாரணைக்கு பங்களிக்குமாறும் மற்றும் அதில் பங்கேற்குமாறும் தொழிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) ஊக்குவிக்கிறது.

Loading