சீனாவுடன் அமெரிக்கா தலைமையிலான போருக்கு எதிராக, ஆஸ்திரேலிய இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஆஸ்திரேலியன் ஒலி பரப்பு நிறுவனம் (ABC) பிப்ரவரி 20-21 அன்று 'சீனாவுடனான போர் ஆஸ்திரேலியாவுக்கு எப்படி இருக்கும்?' என்ற தலைப்பில் இரண்டு பகுதி தொடரை வெளியிட்டது. வாஷிங்டனின் பெருகிய போர்க்குணமிக்க நிலைப்பாட்டிற்கு மத்தியில், சீனாவுடனான அமெரிக்கத் தலைமையிலான போரின் பேரழிவு விளைவுகள் குறித்து சில ஆளும் வட்டாரங்களில் அதிகரித்து வரும் அச்சங்களை இது எடுத்துக்காட்டுகிறது. 

ABC ஒலி பரப்பு நிறுவனத்தின் இரு பகுதி தொடர் [Photo: ABC News screen shot]

ABC விவரித்தபடி, 'ஆஸ்திரேலியாவின் மிகவும் அனுபவம் வாய்ந்த நான்கு இராணுவ மூலோபாயவாதிகள்' உடன் நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை. இவர்கள் அனைவரும் 'இயலுமான அளவு மிக உயர்ந்த பாதுகாப்பு அனுமதிகளைப் பெற்றுள்ளனர்' மற்றும் 'உணர்வுமிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.'

இந்த நான்கு பேர்: பேராசிரியர் ஹக் ஒயிட், பாதுகாப்புத் துறையின் உத்தி மற்றும் உளவுத்துறையின் முன்னாள் துணைச் செயலாளர்; அட்மிரல் கிறிஸ் பாரி, 1998 முதல் 2002 வரை பாதுகாப்புப் படைத் தலைவர்; ஆலன் பெஹ்ம், பாதுகாப்புத் துறையின் சர்வதேச கொள்கை மற்றும் வியூகப் பிரிவுகளின் முன்னாள் தலைவர்; மற்றும் பேராசிரியர் கிளின்டன் பெர்னாண்டஸ், முன்னாள் ராணுவ உளவுத்துறை அதிகாரி.

இவர்களில் யாரும் எந்த வகையிலும் போருக்கு எதிரானவர்கள் அல்லது ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவர்கள் அல்ல. அவர்கள் அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவிற்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான போரில் ஈடுபடுவது தொடர்பாக ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றி ஆழ்ந்த அக்கறை கொண்ட ஆளும் வர்க்கத்தின் ஒரு அதிருப்தி பிரிவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், அதில் சிலர் மிகவும் சுதந்திரமான ஆஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கையை ஆதரிக்கின்றனர்.

அரசுக்குச் சொந்தமான தேசிய ஒளிபரப்பு நிறுவனம் அவர்களை ஒன்றாக கொண்டுவந்தது என்பது, சீனாவுடனான அமெரிக்க மோதலுக்கான காலக்கெடு இன்னும் குறுகியதாக வளர்ந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. டிரம்ப் மற்றும் இப்போது பைடனின் கீழ், அமெரிக்கா ஆசியாவின் மிக ஆபத்தான வெளிச்சப் புள்ளியை வேண்டுமென்றே கொளுத்தி விட்டுள்ளது – அதாவது தைவான் – இது 1979 முதல் அமெரிக்க-சீனா உறவுகளுக்கு அடித்தளமாக இருந்த ஒரே சீனா என்ற கொள்கையை இன்னும் வெளிப்படையான பாணியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

ABC விளக்கியது போல், நேர்காணல் செய்த ஆய்வாளர்கள் அனைவரும் 'சீனாவுடனான சாத்தியமான போரைப் பற்றி சில பகுதிகளில் போர் முரசுகள் அடிப்பதை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.' அமெரிக்க போர் திட்டமிடல் அந்த அறிக்கையை விட மிகவும் முன்னேறியுள்ளது என்பது அந்த நான்கு பேருக்கும் தெரியும். இந்த மாத தொடக்கத்தில் கசிந்த ஒரு உள் குறிப்பில், அமெரிக்க நான்கு நட்சத்திர விமானப்படை ஜெனரல் மைக்கேல் மினாஹான், 2025ல் தைவான் குறித்து அமெரிக்கா சீனாவுடன் போரில் ஈடுபடும் என்று தனக்கு தைரிய உணர்வு இருப்பதாகக் கூறினார். பலவற்றில் முதன்மையான அவரது குறிப்பேடு, அதற்கான விரிவான ஏற்பாடுகளை தயார் செய்யும்படி அவரது தளபதிகளுக்கு உத்தரவிட்டது..

ABC சுட்டிக்காட்டியது: “நாங்கள் சீனாவுடன் போரில் ஈடுபட்டுள்ளோம் என்ற செய்தியை கேட்டபடி ஆஸ்திரேலியர்கள் ஒரு நாள் காலையில் எழுந்திருக்கலாம். அதை அவ்வாறாக எதிர்கொள்கையில், மிகவும் அதிகமாக  எதிர்கொள்ளும் பிரச்சினை என்னவென்றால் அது குறித்து ஒருவேளை பலரும் உணராமல் இருப்பது தான்; அத்தகைய முடிவுக்கு பாராளுமன்றத்தில் எந்த விவாதமும்  தேவையில்லை. போருக்குப் போவது என்ற முடிவுக்கு பொது விவாதம் தேவையில்லை. இதற்கு கவர்னர் ஜெனரலின் ஒப்புதல் தேவையில்லை, அது முழுக்க முழுக்க அன்றைய பிரதமரின் கைகளில் தான் உள்ளது.”

அட்மிரல் பாரி சீனாவுடனான மோதல் குறித்து மிகக் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். 'ஆஸ்திரேலியப் பொருளாதாரம், ஆஸ்திரேலிய மக்கள் மீதான தாக்கம் மற்றும் நிலம் முழுவதிலும் உள்ள நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் அழிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுக்கு ஏற்படும் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும்,' என்று அவர் ABC இடம் கூறினார்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான மோதலில் அதில் ஈடுபட்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை மட்டுமே அது பாதித்தது, ஆனால் அவ்வாறான மோதல்களைப் போலல்லாமல்,   சீனாவுடனான இந்தப் போர் அனைத்து ஆஸ்திரேலியர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அட்மிரல் பாரி கூறினார். “பொருளாதார ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் இது நம் அனைவரையும் வறுமையில் ஆழ்த்தக்கூடும்; அது அணுஆயுத போருக்கு செல்லுமாயின் நம்மில் பெரும்பாலோரையும் அது கொல்லக்கூடும்,” என்று அவர் கூறினார்.

சீனாவுடனான மோதலில், ஆஸ்திரேலியா அதில் இணைந்தாலும் இணையாவிட்டாலும் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஹக் வைட் சுட்டிக்காட்டினார். 'சீனா மற்றும் பிற முக்கிய கிழக்கு ஆசிய பங்காளிகளுடன் அனைத்து வர்த்தகமும் முடங்கிவிடும், மேலும் நீண்ட காலத்திற்கு மீண்டும் தொடங்காமல் போகலாம், ஏனெனில் நமது பொருளாதாரம் முடங்கிவிடும். நாங்கள் சண்டையில் சேர்ந்தாலோ, அல்லது அமெரிக்கப் படைகளை இங்குள்ள தளங்களில் இருந்து செயல்பட அனுமதித்தாலோ, சீனாவின் நீண்ட தூரப் படைகளின் நேரடித் தாக்குதலை ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் தெளிவான வாய்ப்பு இருக்கும்.

உண்மையில், ஆஸ்திரேலியா ஆரம்பத்தில் இருந்தே சீனாவுடனான எந்த அமெரிக்கப் போரிலும் ஈடுபடும். கடந்த தசாப்தத்தில், ஆஸ்திரேலிய இராணுவப் படைகளும் தளங்களும் சீனாவுடனான அமெரிக்கப் போர் திட்டங்களில் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க கடற்படையினர், போர்க்கப்பல்கள் மற்றும் இராணுவ விமானங்கள், அணுசக்தி திறன் கொண்ட B-52 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட, வடக்கு ஆஸ்திரேலியா வழியாக வழக்கமாக 'சுழலும்'. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடனான நாற்கர பாதுகாப்பு உரையாடலில் ஆஸ்திரேலியா ஒரு பங்காளியாக உள்ளது, அத்துடன் அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுடனான AUKUS ஒப்பந்தம் வழங்கும். மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பைன் கேப் தளம், அமெரிக்க இராணுவத்தின் உளவுத் தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு மற்றும் ஆசியா முழுவதும் இலக்கு வைப்பதற்கு இன்றியமையாதது. 

ஹக் ஒயிட், ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் மூலோபாய ஆய்வுகளின் எமரிட்டஸ் பேராசிரியர். [Photo: Australian National University]

சீனாவுடனான போரில் ஆஸ்திரேலிய இராணுவத்திடம் இருந்து அமெரிக்காவுக்கு என்ன தேவை என்று கேட்டதற்கு, ஒயிட் அறிவித்தார்: 'அமெரிக்கப் படைகள் தங்கள் ஆற்றலின் அதிகபட்ச சக்திக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும் மேலும் அவர்கள் அதைத்தான் எங்களிடம் எதிர்பார்ப்பார்கள், உண்மையில் அதையே கோருவார்கள்.' சாத்தியமான உயிரிழப்புகள் பற்றி கேட்டபோது, அவர் இவ்வாறு முடித்தார்: 'சீனாவுடனான ஒரு போரில் ஈடுபடுவது வியட்நாம் மற்றும் கொரியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை விரைவாக மீறுவதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கும்.'

ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவை சார்ந்திருத்தல்

இந்த நான்கு பகுப்பாய்வாளர்களில் ஆலன் பெஹ்ம், அமெரிக்காவின் கடந்தகால போர்களில் ஆஸ்திரேலிய ஈடுபாட்டை மிகவும் வெளிப்படையாக விமர்சித்தார். 'அமெரிக்க சாகசத்தை ஆதரிக்கவும் அதில் பங்கேற்கவும் ஆஸ்திரேலியா ஒருபோதும் தயங்கியதில்லை. வியட்நாம், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல்களைப் போலவே கொரியா ஒரு தேவையற்ற போராக இருந்தது. வியட்நாம் மற்றும் ஈராக் சட்டவிரோத போர்கள், அமெரிக்க நிர்வாகம் (கள்) தங்கள் குடிமக்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளிடம் அவற்றின் மூலோபாய தேவை மற்றும் ஆயுதப் படையைப் பயன்படுத்துவதற்கான தார்மீகத்தைப் பற்றி பொய் கூறியது, ”என்று அவர் ABC இடம் கூறினார்.

'ஆஸ்திரேலியாவுக்கு  ஒரு அடிப்படை மூலோபாய நோயியல் உள்ளது – அது நமது சொந்த செலவில் அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவளிப்பதாகும். தைவான் குறித்து சீனாவுடனான ஒரு போர், மிகவும் மோசமானதாக இருக்கும், அதில் ஆஸ்திரேலிய தேசிய நலன்கள் எதுவும் உள்ளடங்கவில்லை. பெஹ்ம் லிபரல்-நேஷனல் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மற்றும் தொழிற்கட்சியின் பாதுகாப்பு மந்திரி ரிச்சர்ட் மார்லஸ் ஆகியோர் எங்கும் எப்போது வேண்டுமானாலும் 'அமெரிக்காவுடன் எல்லா வழிகளிலும்' என்ற இயல்புநிலை நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டதற்காக விமர்சித்தார்.

'அடிப்படை மூலோபாய நோய்க்குறியியல்' என்று Behm அறிவித்தது, தவறான சிந்தனை கொண்ட தனிநபர்களின் விளைபொருளல்ல, இது ஒரு தேசிய குணாதிசயக் குறைபாடும் அல்ல, மாறாக நடுத்தர-வரிசை சக்தியான ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியத்தின் புறநிலையான பலவீனத்திலிருந்து எழுகிறது. பிராந்தியத்திலும் சர்வதேச அளவிலும் அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னெடுக்க அது எப்பொழுதும் பெரிய ஏகாதிபத்திய சக்தியை-முதலில் பிரிட்டன், பின்னர் இரண்டாம் உலகப் போரின் நடுப்பகுதியில் இருந்து அமெரிக்காவை நம்பியிருந்தது.

பெஹ்ம் போன்றவர்கள் மிகவும் சுதந்திரமான ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் இராணுவக் கொள்கையை ஆதரிப்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர், ஏனெனில் ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கப் பிரிவினரைப் பொறுத்த வரையில் ஒரு வெறும் கனவாகவே உள்ளது. பெரிதாக வளர்ச்சி கண்டு வருவது தைவான் மீதான அமெரிக்க-சீனா சண்டை மட்டுமல்ல, அணுஆயுத சக்திகளை உள்ளடக்கிய ஒரு பரந்த உலகளாவிய மோதலாகும் - இதன் ஆரம்ப குண்டுகள் ஏற்கனவே ஐரோப்பாவில் சுடப்பட்டுள்ளன.

வாஷிங்டன் உக்ரேனில் ரஷ்யாவுடனான அதன் போரை சீனாவுடனான போருக்கு முன்னோடியாகக் கருதுகிறது, அதன் பூகோள  மேலாதிக்கத்திற்கு சீனா பெரும் ஆபத்தாக இருக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்கிறது. உக்ரேனில் ஒரு பலவீனமான போருக்கு ரஷ்யாவைத் தூண்டியது போல், தைவானைத் தாக்க சீனாவை அமெரிக்கா தூண்டிவிடுகிறது. இந்த முற்றிலும் பொறுப்பற்ற கொள்கையின் நோக்கம் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரே மாதிரியாகவே உள்ளது - பலவீனப்படுத்துவது, சீர்குலையச் செய்வது மற்றும் உடைப்பது மற்றும் இறுதியாக இரு நாடுகளையும் அமெரிக்க நலன்களுக்கு அடிபணியச் செய்வதாகும். 

குறிப்பிடத்தக்க வகையில், உக்ரேன் போர் அல்லது ஆஸ்திரேலியாவின் ஈடுபாடு பற்றி ஆசியாவில் போருக்கு அதன் தாக்கங்கள் இருந்தபோதிலும். நான்கு ஆய்வாளர்களில் எவரும் அது குறித்து எதுவும் சொல்லவில்லை, மற்ற அமெரிக்கப் போர்கள் பற்றிய அவரது அனைத்து கண்டனங்களும், இருந்த போதிலும் உக்ரேனில் மோதல் வெடித்ததற்கு பெஹ்மின் எதிர்வினை வாஷிங்டனையோ அல்லது அதன் கொள்ளைக்கார நோக்கங்களையோ விமர்சிப்பதாக இல்லை. பதிலாக ஆஸ்திரேலிய அரசாங்கம் எந்தப் பங்கும்  எடுத்துக் கொள்ளாமல், ஆசியாவில் அதன் இராணுவ முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஏபிசியின் பெரும்பாலான கட்டுரைகள், தைவான் மீது சீனாவுடனான போரில் அமெரிக்கா வெற்றி பெறுமா என்பதில் குறுகிய கவனம் செலுத்துகிறது. ஒப்பீட்டளவில் இராணுவ பலம், புவியியல் மற்றும் சாத்தியமான சீன உத்திகளை எடைபோட்ட பிறகு-கிளிண்டன் பெர்னாண்டஸ் தீவின் மீது படையெடுப்பதற்கு பதிலாக ஒரு சீன முற்றுகையின் சாத்தியக்கூறுகளுக்கு தனது கருத்துக்களை அர்ப்பணித்தார்– இந்த நான்கு பேரும் அதன் முடிவு ஒரு முட்டுக்கட்டை அல்லது அமெரிக்க இழப்பு என்று முடிவு செய்கிறார்கள்.

Loading