நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு

நான்காம் அகிலம் சோசலிச புரட்சியின் உலகக் கட்சியாகும். சோவியத் ஒன்றியத்தினதும்கம்யூனிச(மூன்றாம்) அகிலத்தினதும்ஸ்ராலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கியால் இது ஸ்தாபிக்கப்பட்டது.

ஜோசப் ஸ்ராலின் தலைமையிலான ஒரு தேசியவாத அதிகாரத்துவத்தால் அதிகாரத்தை கைப்பற்றுவதை எதிர்ப்பதற்காகவும், 1917 இல் ரஷ்ய புரட்சிக்கு உயிரூட்டிய சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தை பாதுகாக்கவும், ட்ரொட்ஸ்கி 1923 இல் இடது எதிர்ப்பு இயக்கத்தை ஸ்தாபித்தார். 1933 இல், ஸ்ராலினிசத்தின் பேரழிவுக் கொள்கைகளால் எளிதாக்கப்பட்டு, நாஜிக்கள் ஆட்சிக்கு வந்ததும், ட்ரொட்ஸ்கி ஒரு புதிய (நான்காம்) அகிலத்தை உருவாக்க அழைப்பு விடுத்தார்.

ஸ்தாபிக்கப்பட்ட பல தசாப்தங்களின் பின்னர், நான்காம் அகிலத்திற்குள் திருத்தல்வாத போக்குகள் மீண்டும் மீண்டும் வெளிவந்தன, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியை கட்டியெழுப்புவதற்கான அதன் நோக்குநிலையை கைவிடுமாறு ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் வாதிட்டன, அதற்கு பதிலாக இந்த அல்லது அந்த குட்டி முதலாளித்துவ, ஸ்ராலினிச, சமூக ஜனநாயக அல்லது முதலாளித்துவ தேசியவாத போக்குகளை நோக்கிய ஒரு நோக்குநிலைக்கு அழைப்பு விடுத்தன.

அமெரிக்காவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நிறுவனர் ஜேம்ஸ் பி. கனன் தலைமையிலான மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கும் மிஷேல் பப்லோ, ஏர்னெஸ்ட் மண்டேல் தலைமையிலான சந்தர்ப்பவாதப் பிரிவுக்கும் இடையில் நான்காம் அகிலத்தில் பிளவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நவம்பர் 23, 1953 அன்று ஸ்தாபிக்கப்பட்டது. உலக சோசலிச வலைத் தளத்தை வெளியிடும் ICFI, மார்க்சிசத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தியுள்ளது, இன்று உலகில் புரட்சிகர சோசலிசத்தின் ஒரே பிரதிநிதியாக உள்ளது.

இந்த பக்கத்தில், வாசகர்கள் நான்காம் அகிலத்தின் வரலாறு குறித்த கட்டுரைகள், நூல்கள் மற்றும் தலைப்புகளுக்கான இணைப்புகளைக் காணமுடியும். எங்கள் நூலகத்தில் கிடைக்கும் படைப்புகளை கற்க எங்கள் வாசகர்களை ஊக்குவிக்கிறோம்.

லியோன் ட்ரொட்ஸ்கி
சிறப்புக் கட்டுரைகள்
1917 ரஷ்ய புரட்சி

அக்டோபர், 1917 இல், முதலாம் உலகப் போரின் படுகொலைக்கு மத்தியில், விளாடிமிர் லெனின் மற்றும் லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் போல்ஷிவிக் கட்சியினால் வழிநடத்தப்பட்ட ரஷ்ய தொழிலாள வர்க்கம், அலெக்சாண்டர் கெரென்ஸ்கி தலைமையிலான முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கியெறிந்து, உலக வரலாற்றிலேயே முதலாவது தொழிலாள வர்க்க அரசை நிறுவியது. இதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்னர், இரண்டாம் ஜார் நிக்கோலஸ் II தலைமையிலான ஒரு முடியாட்சி வம்சத்தால் ரஷ்யா ஆட்சி செய்யப்பட்டது. இப்புரட்சி ஏகாதிபத்திய போரினை முடிவிற்கு கொண்டுவருவதன் தொடக்கமாக இருந்தது.

ரஷ்ய புரட்சியானது உலக வரலாற்றில் ஒரு புதிய கட்டத்தை குறித்தது. முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தை தூக்கிவீசுவதானது முதலாளித்துவத்திற்கு மாற்றீடு என்பது ஒரு கற்பனாவாத கனவு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் நனவான அரசியல் போராட்டத்தின் மூலம் அடையக்கூடிய ஒரு உண்மையான சாத்தியம் என்பதை நிரூபித்தது.political struggle of the working class.

ரஷ்ய புரட்சி பற்றி மேலும் படிக்க
ஸ்ராலினிசத்திற்கு எதிரான இடது எதிர்ப்பின் போராட்டம் (1923-1933)

லியோன் ட்ரொட்ஸ்கியும் அவரது ஆதரவாளர்களும் —ரஷ்ய புரட்சியின் மிக முக்கியமான தலைவர்கள் உட்பட— லெனினின் வாழ்க்கையின் கடைசிக் காலகட்டத்திலும், 1923 ஆம் ஆண்டு கருச்சிதைக்கப்பட்ட ஜேர்மன் புரட்சிக்கு மத்தியிலும், 1923 அக்டோபரில் இடது எதிர்ப்பை உருவாக்கினர். இடது எதிர்ப்பின் நோக்கம் சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை சீர்திருத்துவதும், ஜோசப் ஸ்ராலின் தலைமையில் வளர்ந்து வரும் பழமைவாத, தேசியவாத அதிகாரத்துவத்தை எதிர்த்து கம்யூனிச அகிலத்தில் ஒரு சரியான நிலைப்பாட்டுக்காக போராடுவதும் ஆகும்.

ஸ்ராலினுக்கும் ட்ரொட்ஸ்கிக்கும் இடையில் தோன்றிய மோதல் தனிப்பட்ட அதிகாரம் தொடர்பாக இரு நபர்கள் பற்றிய அகநிலை சண்டை அல்ல, மாறாக இணைந்துபோகமுடியாத அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட ஒரு அடிப்படை யுத்தமாகும். ஸ்ராலின் அதிகாரத்தை பலப்படுத்துவதும், அவர் ஆளுமைப்படுத்திய அதிகாரத்துவ சர்வாதிகாரமும் ரஷ்ய புரட்சியின் தவிர்க்க முடியாத விளைபொருள் அல்ல. சர்வதேச மற்றும் ஐரோப்பிய புரட்சியின் தாமதம் காரணமாக பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர் அரசின் நிலைமைகளிலிருந்து இது வளர்ந்தது. சர்வதேச அளவில் புரட்சிகர தலைமையின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையால் தொடர்ச்சியான புரட்சிகர எழுச்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

ஸ்ராலினிசத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில், ட்ரொட்ஸ்கி உலக சோசலிசப் புரட்சியின் ஒரு தத்துவத்தை உருவாக்கினார், இது ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளின் நடைமுறை தேசியவாத சூழ்ச்சிகளைக் காட்டிலும் அளவிடமுடியாத அளவிற்கு தொலைநோக்குடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 1933 வரை இடது எதிர்ப்பு நடத்திய போராட்டம், சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கான புரட்சிகர கொள்கையின் மிக தீர்க்கமான கேள்விகளில் கவனம் செலுத்தியது.

இடது எதிர்ப்பின் போராட்டம் குறித்து மேலும்
நான்காம் அகிலத்தை (1933-1938) ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கியின் போராட்டம்

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மூன்றாம் அகிலத்தில் சீர்திருத்தத்தை கொண்டுவருவதற்கான கொள்கைரீதியான மூலோபாயமே 1923 இல் நிறுவப்பட்டதிலிருந்து சர்வதேச இடது எதிர்ப்பாளர்களின் வழிகாட்டியாக இருந்தது. ஆனால் ஸ்ராலினின் பேரழிவுகரமான கொள்கைகளின் உதவியால்1933 இல் ஜேர்மனியில் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்தமையானது இக்கொள்கையை மறுபரிசீலனை செய்யக் கோரியது.

ஹிட்லரின் வெற்றியைத் தொடர்ந்து வந்த மாதங்களில், ஸ்ராலின் பின்பற்றிய கொள்கைகள் குறித்த எந்தவொரு விமர்சனமும் அகிலத்தின் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் வெளிவருகிறதா என்று அவதானிக்க ட்ரொட்ஸ்கி காத்திருந்தார். ஏப்ரல் 7, 1933 அன்று கம்யூனிசஅகிலம் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி ஒப்புதல் அளித்தது. ட்ரொட்ஸ்கிஒரு புதிய பாதை அவசியம் என்ற முடிவிற்கு வந்தார். ஜூலை 15, 1933 தேதியிட்ட ஒரு அறிக்கையில், மூன்றாம் அகிலத்துடனான ஒரு உடைவிற்கும், ஒரு புதிய அகிலத்தை கட்டியெழுப்பவும்அவர் அழைப்பு விடுத்தார். அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் இப்போராட்டத்திற்கு அர்ப்பணிப்பு செய்திருந்தார்.

ஜனவரி, 1937 இல் மெக்சிகோவிலிருந்து, மாஸ்கோ ஸ்ராலினிச போலி வழக்குகளைகண்டனம் செய்யவும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுயாதீனமான டுவி கமிஷனின் அழைப்பை விளம்பரப்படுத்தவும் ட்ரொட்ஸ்கி இந்த உரையை நிகழ்த்தினார்.

'எனக்கு எதிரான ஸ்ராலினின் வழக்கு பொய்யான ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆளும் குழுவின் நலன்களுக்காக நவீன விசாரணை முறைகளால் மிரட்டிப் பெறப்பட்டது' என்று அவர் கூறினார். 'இந்த போலி வழக்குகள் கம்யூனிசத்திலிருந்து அல்ல, சோசலிசத்திலிருந்து அல்ல, ஆனால் ஸ்ராலினிசத்திலிருந்து, அதாவது மக்கள் மீது அதிகாரத்துவத்தின் கணக்கிட முடியாத சர்வாதிகாரத்திலிருந்து உருவாகின்றன!' என்றார்.

நான்காம் அகிலமும் பப்லோவாத திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டமும்
பாதுகாப்பும் நான்காம் அகிலமும்

ஆகஸ்ட் 20, 1940 இல், மெக்சிக்கோ நகரத்தின் புறநகர்ப் பகுதியான கொயோகானில் நாடுகடத்தப்பட்டு வாழ்கையில் சோவியத் இரகசிய போலிஸ் துறையான ஜி.பி.யுவால் லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டார்.உலக சோசலிசப் புரட்சியின் மார்க்சிச தத்துவார்த்தவாதியும் நவீன அரசியல் வரலாற்றின் உயர்ந்த மனிதர்களில் ஒருவருமான ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கை இவ்வாறு முடிந்தது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் உலக சோசலிச இயக்கத்திற்கும் நீண்டகால தாக்கங்கள் கொண்ட ட்ரொட்ஸ்கியின் படுகொலை இருபதாம் நூற்றாண்டின் மிகவும் அரசியல் ரீதியாக விளைவுகளைக் கொண்ட குற்றங்களில் ஒன்றாகும். இன்னும், பல தசாப்தங்களாக, படுகொலையைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இரகசியமாக மறைக்கப்பட்டுள்ளன. ட்ரொட்ஸ்கிக்கு எதிரான ஸ்ராலினிச சதித்திட்டத்தின் பாரிய அளவு கவனமாக திட்டமிடப்பட்ட மூடிமறைப்புக்கு உட்பட்டது.

1975 ஆம் ஆண்டில், ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு படுகொலைதொடர்பாக முதல்முறை ஒழுங்குமுறையான விசாரணையை மேற்கொண்டது. பாதுகாப்பும் நான்காம் அகிலமும் என அழைக்கப்படும் இந்த விசாரணை, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைக்கு எதிரான ஸ்ராலினின் சதித்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்த நான்காம் அகிலத்திற்குள்ளான ஜி.பி.யூ முகவர்களின் வலையமைப்பை வெளிப்படுத்த வழிவகுத்த

 இந்த விசாரணையை,பப்லோவாத மற்றும் போலி-இடது அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன, இதை ட்ரொட்ஸ்கிசஇயக்கத்திற்குள் இருத்தப்பட்டிருந்த ஒற்றர்களின் 'முகவர்-தூண்டுதல்' என்று கண்டனம் செய்தன. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளிப்பட்டஅரசு புலனாய்வு ஆவணங்கள் அனைத்துலகக் குழுவின் கண்டுபிடிப்புகளை உறுதிசெய்து பாதுகாப்பும் நான்காம் அகிலத்தின் புலன்விசாரணைகளை உறுதிப்படுத்திய போதிலும், இதுவே அவர்களின் நிலைப்பாடாக உள்ளது.

மேலதிக விசாரணைகள் பற்றி
1982-1986 அனைத்தலகக் குழுவில் பிளவு

1985 ஆம் ஆண்டில், அரசியல் சீரழிவின் நீடித்த நிகழ்ச்சிப்போக்கிற்கு பின்னர், ICFI இன் பிரிட்டிஷ் பிரிவான WRP ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து தீர்க்கமாக முறித்துக்கொண்டது. WRP உடனான போராட்டத்தின் வேளையில் எழுதப்பட்ட ஆவணங்களில், WRP முன்னர் பாதுகாத்த உண்மையான ட்ரொட்ஸ்கிசத்தின் கொள்கைகளில் இருந்து அதன் பின்வாங்கல்,அதன் அரசியல் சரிவு, மற்றும் காட்டிக்கொடுப்பு ஆகியவை பப்லோவாத சந்தர்ப்பவாதத்துடன் தழுவியதன் விளைவாகும் என்பதை நிரூபித்தது. 1982-1986 வரை WRP க்கு எதிராக ICFI நடத்திய போராட்டம், மரபுவழி ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ICFI ஆகியவற்றின் தொடர்ச்சியை உறுதி செய்தது. இந்தப் பக்கத்தில், வாசகர்கள் இந்த போராட்டத்தின் முக்கிய ஆவணங்களைக் காணலாம்.

கீர்த்தி பாலசூரியா (1948-1987)

கீர்த்தி பாலசூரியா (நவம்பர் 4, 1948 - டிசம்பர் 18, 1987) இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (RCL) தேசிய செயலாளராகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) முன்னணி உறுப்பினராகவும் இருந்தார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகளில் ஒருவராவர்.

கீர்த்தி பாலசூரியா பற்றியவை