World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Mounting social tensions in Israel and Palestinian Authority loom over CampDavidsummit

காம்டேவிட் உச்சிமாநாடு தொடர்பாக அதிகரித்துவரும் சமூகப் பதட்டம் இஸ்ரேலிய பலஸ்தீனிய ஆட்சியாளர்களை பயமுறுத்துகின்றது

By Jean Shoal and Chris Marsden
14 July 2000

Use this version to print

இஸ்ரேலிய பிரதம மந்திரி எகூட் பாராக்கும் பலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தும் அமெரிக்காவின் வழிப்படுத்தலின் கீழ் தற்பொழுது நடக்கவிருக்கும் காம்டேவிட் பேச்சுவார்தையை நடத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.பலஸ்தீனம்,இஸ்ரேல், மத்திய கிழக்கு முழுவதும் முகம்கொடுக்கும் சமூக, அரசியல் பதட்டநிலைக்கு ஜனாதிபதி பில்கிளின்டனும், அவரது ஆலோசகர்களும் இந்த 52 வருட பிரச்சனையை ஓர் முடிவிற்கு கொண்டுவர வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தினர்.

பல விமர்சகர்கள் கூறுவதுபோல் சீரழிந்த முறையில் தயார்படுத்தியுள்ளதும் மிகவும் அபாயமும் கூடிய இந்த பேச்சுவார்த்தையின் வற்புறுத்தலின் பின்னால் இருக்கும் ஒரு பெரிய காரணி, 2 மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற இஸ்ரேலிய படை தென் லெபனானில் இருந்து வாபஸ் பெற்றதும், ஓர் கெளரவமான முறையில் பின்வாங்குவதைவிட ஒருங்கற்றமுறையில் வெளியேறியதும் ஆகும்.

எதிர்கால கோலான்குன்று சம்பந்தமாக சிரியாவுடன் நடந்தபேச்சுவார்த்தையுடன் இஸ்ரேலிய பின்வாங்கல்பின்னிப் பினைந்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் பின்வாங்கும் திகதியாக யூலை தொடக்கத்தை குறித்தபோது இஸ்ரேலினுடைய கூலி இராணுவமான தென் லெபனானிய இராணுவம் கண்காணக்கூடியளவில் சீர்குலையத் தொடங்கியது. இதன்விளைவாக, இஸ்ரேலிய துருப்புகள் வெளியேறும்போது காஸ்போலா கொரிலாக்கள் [Hezbollah guerrillas] அதைவிட விரைவாக எல்லைப்பிராந்தியங்களை ஆக்கிரமிக்ககூடியதாக இருந்தது. இஸ்ரேலின் பின்வாங்களின் பின், அத்துடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க சிரியா மறுத்ததுடன், யூன்10ம் திகதி ஜனாதிபதி காவ்ஸ் அல் அசாட் [Hafez al-Assad] இன் மரணத்தின் பின்னர் இப்பிராந்தியத்தில் இது ஓர் புதிய அடிப்படையான ஸ்திரமற்ற அரசியல் நிலையாகிவிட்டது.

தென் லெபனானில் இருந்து இஸ்ரேலியர்களுடைய துரிதமான பின்வாங்கலினால், அராபிய மக்களிடையே ஓர் போராட்டத்தை உருவாக்கும் நிலைமை வளர்ச்சியடைந்தவுடன், அராபிய அரசுகளும், யசீர் அரபாத்தும், சியோனிச அரசுடன் ஓர் சமாதானத்தை நோக்கி நிற்கும் நிலைக்கு எதிர்ப்பு எரியத் தொடங்கியுள்ளது.இதனால் தற்போதய பேச்சுவார்த்தைக்கு மூன்று பகுதியினரும் பீதியடைந்துள்ளனர்.யூன் மாத தொடக்கதில் கிளின்டனிற்கும் பராக்கிற்கும் போத்துக்கல்லில் நடந்தபேச்சுவார்த்தையில் இஸ்ரேலிய படையினரின் துரிதமான பின்வாங்கல் இஸ்ரேலிற்கும் பலஸ்தீனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை அவசியத்தை தூண்டியுள்ளதென அங்கே எச்சரித்தனர்.அமெரிக்க அரசின் செயலாளரான அல்பிறைற்மாடலின் யூனில் தனது சொந்த மத்தியகிழக்கிற்கான பிரயாணத்தின் போது "இங்கே ஓர் தீர்வு இல்லையென்றால் வன்முறைகள் அதிகரிக்கும்" என எச்சரித்தார்.

பலஸ்தீனிய அரசிற்குள்ளஅரசியல் சூழ்நிலை மிகவும் ஆபத்தான நிலையிலுள்ளது. காம் டேவிட் பேச்சுவார்த்தைக்கான காலத்தில் யசீர் அரபாத் அவசரகாலச்சட்டத்தை அமுல் செய்யதிருந்தார். ஆனால் இஸ்ரேலியரிடம் "விற்க வேண்டாம்"என பலஸ்தீனிய விடுதலை இயக்கத் தலைவரைக் கோரிமேற்கு கரையிலும், காசா பிராந்தியத்திலும் பல ஊர்வலங்கள் நடந்தன. இவைகளில் மிகவும் தீயிட்டு எரியும் பிரச்சனையாக இருப்பது,அரபாத்தின் அறிக்கையின்படி, நீண்டகாலமாகஇருந்த கோரிக்கையான அதாவது புதிதாக அமைந்த தாய்நாட்டிற்கு மில்லியன் கணக்கான பலஸ்தீன அகதிகள் திரும்புவதற்கான அனுமதியை கைவிடுவதற்கு தயாராகவிருப்பது ஆகும்.

இஸ்ரேலியர்களால் சிறைவைக்கப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் குற்றவாளிகள் மே மாத தொடக்கத்தில் தங்களது அடிமைத்தன நிலைமைகளை எதிர்ப்புகாட்டும் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு ஆதரவாக நடந்த ஊர்வலங்கள் இஸ்ரேலிய படையுடன் மோதலை உருவாக்கியதுடன், இதில் ஆறுபேர்கள் இறந்ததுடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் காயப்பட்டனர்.

அரபாத்தின் அடக்குமுறை ஆட்சியின் குணாம்சத்திற்கு எதிராக வளர்ந்துவரும் பிரபல்யமான எதிர்ப்பும், பலஸ்தீனத்தின் உருவாக்கத்தால் ஓர் சிறிய குழு மட்டும் இலாபம் பெறுவதாலும் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன. பலஸ்தீன விடுதலை இயக்கம் தங்களுடன் ஒத்துப் போகாதவர்களை இரவில் கைது செய்வதன் மூலமும், இராணுவ நீதிமன்றம், துன்புறுத்துதல், அடக்குமுறை போன்றவற்றால் அடக்கும் வேலையில்1993ல் உருவாக்கப்பட்ட இடைக்கால உடன்பாட்டின் தற்காலிய தன்மை காரணமாக அரசியல் பொருளாதார நலன்களை வழங்க முடியாததை நியாயப்படுத்துகிறது.

காம் டேவிட் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகளில் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள 180.000இஸ்ரேலியர்களில் 20% இனரை வெளியேற்றுவது உட்பட, ஏனைய பகுதி அவர்களின் ஆதிக்கத்தினுள் இருக்குமென்பதும், ஜெருசலேம் இஸ்ரேலின்ஆதிக்கத்தினுள் இருக்குமென்பதும், நகரங்களின் எல்லையில் பேரளவிலான பலஸ்தீன இராணுவப்பிரசன்னமும், 3.5 மில்லியன் பலஸ்தீனிய அகதிகளுக்கு நாடு திரும்பும் உரிமை இல்லை என்பதும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

பராக்கின் நிலைமை அரபாத்தை விட உறுதியானது அல்ல. அவருடைய கூட்டு அரசாங்கம் பலஸ்தீனியர்களுக்கு முக்கியமான சலுகைகளைக்கொடுப்பதை எதிர்ப்பதன் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. பராக் அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு புறப்படும் கட்டத்தில் காம் டேவிட்மேசையில் கலந்துரையாடவுள்ள பிரேரணைகள் இஸ்ரேலிய பத்திரிகையினூடாக வெளியேறியதன் மூலமாக 6 மந்திரிகளில் 3 வலதுசாரியும் ,மதசார்பான கட்சிகளும் அதாவது 1/3 பகுதியான அவரது அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளார்கள்.

பேச்சுவார்த்தையின் மையமாக அமைந்துள்ள சமாதானத்திற்கு-நிலம் என்ற தீர்வு முறையை,இஸ்ரேலிய இராணுவத்தின் பாதுகாப்பின் கீழ் காசாவிலும் மேற்குகரையிலும் குடியேறிய சியோனிசத்தை பிரதிநிதிப்படுத்தும் தேசிய சமயக் கட்சியும், முன்பு சோவியத்யூனியனில் இருந்து வந்த குடியேறிகளை பிரதிநிதிப்படுத்தும் இஸ்ரேலியா பி அல்யா வும் எதிர்த்துள்ளனர்.இராஜினாமா செய்த மூன்றாவது கட்சியான அடிப்படைவாத Shas party அண்மையில் பராக் அதனது கோரிக்கைகளுக்கு இணங்குவதாக கூறிய பின்னரே அண்மையில் அரசிலிருந்து விலகுவதிலிருந்து தவிர்த்துக்கொண்டனர்.

இஸ்ரேலிய நாடாளுமன்றமான கினேசற்இல்120 உறுப்பினர்களில் தனியே 42 மட்டுமே பராக்கிற்கு பின்னனியில் உள்ளனர். காம்டேவிட்காக புறப்படுவதற்கு ஒருமணித்தியாலத்திற்கு முன்னர் தனியே அராபிய பாராளுமன்ற உறுப்பினரதும், சிறிய குழுவாதக் கட்சிகளின் உதவியுடன் மட்டுமே நம்பிக்கையில்லாத்தீர்மானத்தில் பராக்கால் உயிர்தப்பமுடிந்தது.இது பராக்கின் ஆரம்ப நிலையில் பேச்சுவார்த்தைக்காக எதிர்பார்த்த"யூத பெரும்பான்மை"பாராளுமன்றத்தில் இல்லாது போய்விட்டது.

பொருளாதார சமூக சச்சரவுகள் கூடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசியல்சச்சரவுகளும் இஸ்ரேலிற்குள் அதிகரித்திருக்கின்றது.10 வீதமான வேலையில்லாத் திண்டாட்டத்தைஅண்மித்ததுடன் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளி கூடிக்கொண்டேயிருக்கின்றது. பொதுசனப்பகுதிகளில் வேலை செய்பவர்கள் தொடர்ச்சியாக தனியார் மயமாக்குதல், செலவைக்குறைத்தல், வேலையாட்களைக் குறைத்தல்,குறைந்த சம்பளம் உட்பட சீர்கெட்டவேலை நிலைமைகளுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவின் உதவியுடனான ஒப்பந்த மூலம் வியாபார, பொருளாதார உதவியை அவர்களிடம் இருந்து பெறுவதனால் தனது பிரபல்யத்தை கூட்டலாம் என பராக் நம்பிக்கை கொண்டுள்ளார்.அதேநேரம் அவர் அரசியல் இறுக்கக்கயிற்றில்[Tight rope] நடப்பதுடன், மிகவும் வலதுசாரித்தனமான கட்சிகளிள் இருந்து எதிர்ப்பு குறையுமென எதிர்பார்க்கிறார்.

இஸ்ரேலை விட்டு போகும் வேளையில் தொலைக்காட்சிக்கு அளித்தபேட்டியில். அதாவது இறுதியான எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்த சர்வசன வாக்கெடுப்பை நடத்துவதற்கு இஸ்ரேலியர்களை தனக்கு உதவும்படி கோரினார். "இஸ்ரேலிய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும்,எல்லோருக்கும் தெரிந்ததுமான இஸ்ரேலிய அரசாங்கத்தின் சிவப்புக் கோடுகளை பராமரிப்பதுமான உடன்படிக்கைகளிலேயே"கையெழுத்து இடுவதாக அவர் சத்தியம் செய்தார்.ஜெருசலம் "இஸ்ரேலினுடைய நிரந்தரமான தலைநகரம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தலுக்கு போ, எங்களை தொடர்ந்து சண்டையாலும், பலாத்காரத்தால் வெருட்ட வேண்டாம் எனவும் அதன் மூலகாகஎங்களை சம்மதம் செய்ய தள்ளவேண்டாம் என முதன்மை எதிர்கட்சியான லிக்குட்இன் தலைவரான Ariel Sharon கூறினார்.

மத்திய கிழக்கில் உறுதி நிலையை உருவாக்க எடுக்கும் முயற்சிகளில் கூட அமெரிக்கா தனது சொந்த நலன்களைப்பேணும் அரசியல் அபிவிருத்திகளுக்கு மிகவும் ஆணித்தரமாக முத்திரை குத்துகிறது. ஐரோப்பிய சக்திகள் குறிப்பாக பிரான்ஸ் தொடர்ந்து தனது சொந்த ஆளுமையை முழுப் பிராந்தியத்தினுடாக செலுத்துவதன் மூலமும் அமெரிக்காவால் ஈரானிற்கும், ஈராக்கிற்கும் எதிராக ஏற்படுத்தப்பட்ட வியாபாரத்தடையை திரும்பத்திரும்ப அலட்சியப்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் தூண்டுதலின் விளைவாக, செப்டம்பர் 13ம்திகதியில் பலஸ்தீன சுதந்திரத்தை அமுல் செய்வதாக ஒருதலைப்பட்சமாக அரபாத் உறுதிசெய்துள்ளார். இஸ்ரேலியப் பேச்சாளர்கள் குறிப்பிட்டதாவது, ஒருதலைப்பட்சமான முறையில் சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்குப் பதிலாக மேற்குக் கரையின் பகுதிகளை தம்முடன்சேர்ப்பதாக அறிவித்தனர். பலஸ்தீனிய வன்முறைகள் எழுவதற்கான சாத்தியக்கூறுகளை எதிர்பார்த்து இஸ்ரேலியப்படையினர் தம்மைதயார் நிலையில் வைத்துள்ளனர்.

இஸ்ரேலினுடைய இறுதி சம்மதமில்லாமல் யசீர் அரபாத் கடைசியாக பலஸ்தீன அரசை நிறுவும் நோக்கத்தைக் கூறியபோது தனக்கு சர்வதேசரீதியில் முழு உதவியும் இருப்பதாக அவர் ஒரு புள்ளியையும் சேர்த்துக்கொண்டார்.அதாவது இதை அரபாத் யூலை 1ம் திகதி தற்போழுது ஐரோப்பியக் கூட்டின் தலைவராக இருக்கும் பிரெஞ்சு ஜனாதிபதிஜக் சிராக்குடன் பாரிசில் கலந்துரையாடியஉதவியினை மையமாக வைத்தே குறிப்பிட்டார்.

நான்கு நாட்களின் பின்னர் கிளின்டனுடனான பேச்சுவார்த்தையின் பின் பராக் லண்டனுக்குரொனி பிளையரை சந்திக்கச் சென்றதுடன் பாரிசில் சிராக்கையும் சந்தித்தார். பராக் பத்திரிகையாளர்களுக்கு குறிப்பிடுகையில் இதில் செல்வாக்குமிக்க தலைவர்களான பிளையர், சிராக் போன்றவர்கள் இஸ்ரேலினுடைய நிலைப்பாடு சம்பந்தமாக முழுக்கதெரிந்திருப்பது முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
அமெரிக்கா தனது நலனை நிச்சயப்படுத்தும்வகையில் மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் அறிகுறிகளை உபயோகித்ததுடன், யூலை12ம்திகதி இஸ்ரேல் முன்னர் அறிவிக்கப்பட்ட 250 மில்லியன் $ பெறுமதியான Phalcon என்ற முன்கூட்டியே எச்சரிக்கும் ராடார்பொருத்திய போர் விமானத்தை சீனாவிற்கு விற்பதை தடை செய்துள்ளது. அமெரிக்கா இவ் விற்பனையை கடுமையாக கண்டித்ததுடன் இஸ்ரேலிய ஆயுதப்படைகளை நவீனமயமாக்கும் உதவியை நிறுத்துவதாக பயமுறுத்தியுள்ளது.