World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Sharon's election presages escalating conflict in Israel and Middle East

ஷரோனின் வெற்றியானது இஸ்ரேலிலும் மத்திய கிழக்கிலும் மோதல்களின் அதிகரிப்பை முன்னறிவிக்கின்றது

By Chris Marsden
8 February 2001

Use this version to print

கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் தேர்தலில் தொழிற்கட்சியின் எகூட் பராக்கின் மீதான லிகுட் கட்சித் தலைவரான ஆரியல் ஷரோனின் வெற்றியானது இஸ்ரேலினுள்ளும் முழு மத்திய கிழக்கினதும் அரசியல் நிலைமைகளில் ஒரு திருப்பு முனையாகும். இது பாலஸ்தீனர்களுடனான மோதலின் அதிகரிப்பையும் இப்பிரதேசத்தின் உறுதிப்பாட்டை அபாயத்திற்குள்ளாக்குவதுடன் யுத்த அபாயத்தையும் உருவாக்குகின்றது.

ஷரோன் இஸ்ரேலின் அதி வலதுசாரிகளின் சார்பில் பேசுகின்றார். அவருடைய பெயர் அரபுமக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்குவதுடன் அவரது இராணுவ வரலாறு அவரை ஒரு யுத்தக் குற்றவாளியாகக் காட்டுகின்றது. இவர் 1953 ம் ஆண்டு மேற்கு கரையில் உள்ள கிராமமான Qibya மீதான தாக்குதலில் 60 ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் கொல்லப்படுவதற்கும், டசின் கணக்கான வீடுகள், பாடசாலைகள், மசூதிகள் டைனமைட் வைத்து தகர்க்கப்படுவதற்குமான படைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்.

1982 இல் மெனசெம் பெகினின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது ஷரோன் இஸ்ரேலிய படைகளை லெபனானுக்கு அனுப்பினார். இவர் மேற்கு பெய்ரூட்டின் குடிமக்கள் மீது முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லப்படுவதற்கு அடித்தளமிட்டதுடன், பாலஸ்தீனத்திற்கு அண்மையில் உள்ள தென் லெபனான் கிராமங்களை அடியோடு அழிக்க கட்டளையிட்டார்.

அதே வருடம் செப்டம்பர் மாதம் பெய்ரூட்டில் இருந்த பாலஸ்தீன அகதி முகாம்களான ஷப்ரா, ஷட்டில்லாவில் (Sabra and Shatilla) 800 இருந்து 2000 வரையிலானோர் கொல்லப்படுவதற்கான சூத்திரதாரியுமாவார். அவர் லெபனான் கிறிஸ்தவ பலங்கிச இயக்கத்தை [Christian Falangistmilitia] பலஸ்தீன முகாம்களுக்குள் புகுவதற்கான தடைகள் அனைத்தையும் இல்லாதொழிக்க கட்டளையிட்டார். இஸ்ரேலின் ககான் ஆணைக்குழுவின் விசாரணையானது 1983 பெப்ரவரியில் இக்கொலைகளுக்கு ஷரோன் முற்று முழுதான பொறுப்பு எனக் குறிப்பிட்டதுடன், அவர் பதவி விலகவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புல்டோசர் என்ற புனை பெயரைக்கொண்ட ஷரோன் கடந்த வருடம் செப்பம்பர் 28ம் திகதி மலைக்கோவில்/ ஹராம் அல் ஷரீவ் என்ற புனித பிரதேசத்திற்கான அவரின் விஜயத்தினால் ஆத்திரமூட்டி கூடுதலான பாலஸ்தீனர்களை உள்ளடக்கிய 400 உயிர்களை பலிகொண்ட தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல்களின் தோற்றத்திற்கான சூத்திரதாரியுமாவார்.

1993 ஒஸ்லோ உடன்பாட்டிலிருந்தே பாலஸ்தீனர்களுடன் பேச்சுவார்த்தை மூலமாக உடன்பாடு காண்பதற்கான முயற்சிகளுக்கு எதிரான வலதுசாரி கடும்போக்காளர்களின் சார்பிலேயே ஷரோன் கருத்து தெரிவித்துவந்தார். அவர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் மோசமான இராணுவ, பொலிஸ் நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக முன்மொழிந்து வந்ததுடன், பாலஸ்தீனர்கள் மீதான இராணுவ வெற்றி மட்டும்தான் இஸ்ரேலிய யூதர்களின் பாதுகாப்பை வழங்கமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Wall Street Journal பத்திரிகையில் Seth Lipsky எழுதிய கட்டுரை இதனை நிரூபிக்கும் வகையில் ''திரு.ஷரோனின் நிர்ப்பந்தங்களில் ஒன்று மத்திய கிழக்கில் யுத்தத்தை உருவாக்குவதாகும். இது யுத்தத்தில் ஈடுபடக்கூடிய சக்திகள் அணிவகுத்து நிற்கத்தக்கதாக்குகின்றது. நான் அவர் யுத்த முனையில் இருக்காத கடந்த 20வருடங்களாக அவருடன் கலந்துரையாடவில்லை'' என எழுதப்பட்டுள்ளது.

அவருடைய வெற்றி உரையில் பாலஸ்தீனர்களுடனான எந்தவொரு உடன்பாடும் பிரிக்கப்படாத ஜெருஸலேம் உட்பட இஸ்ரேலின் ''முக்கிய நலன்கள்'' பாதுகாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் 90% மேற்குகரையிலும் காஸா கரையோரங்களிலும் பாலஸ்தீன அரசு வழங்கப்பட்டது உள்ளடங்கலாக பராக்கால் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைக் கண்டித்தார். ஷரோன் எந்தவொரு உடன்பாடும் இஸ்ரேல் ஜெருஸலேமை வைத்திருப்பதுடன், ஏற்கனவே பாலஸ்தீனர்களின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்குகரைப் பிரதேசத்தின் 42% இனை மட்டுமே பாலஸ்தீனர்கள் கட்டுப்படுத்த அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலுள்ள குடியேற்றங்களை தொடர்ந்தும் வைத்திருக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படியான ''சமாதான'' திட்டம் பாலஸ்தீனர்களின் முழு சராணாகதிக்கான ஒரு மாற்றீடாக எழுகின்றது.

ஜனவரி மாத New Yorker இதழுக்கு ஷரோன் ''பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதுடன் இஸ்ரேலியர்கள் அவர்களை துரத்தியடிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளதுடன், அண்மையில் பாலஸ்தீன தலைவர் யஸீர் அரபாத்தை ''பயங்கரவாதியும் கொலையாளியும்'' எனத் தெரிவித்துள்ளார்.

அவர் முக்கியமாக தங்கியுள்ளது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் குடியிருப்பாளர்களான வலதுசாரி தீவிரவாதிகளிலாகும். முன்னைய லிகுட் அரசாங்கங்களில் ஷரோன் முன்னைய பாலஸ்தீன பகுதிகளில் பாரிய குடியேற்ற பரவலுக்கானவராக நோக்கப்பட்டார். இவரின் முன்னவரான பராக்கை போல் இவரும் அரசாங்கத்தை அமைக்க பழைமவாத கட்சிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது என்பதை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது.

தனது தேர்தல் பிரசாரங்களில் தனது இராணுவத் திட்டங்களை மட்டுப்படுத்தி வைத்திருக்க பெரும் பிரயத்தனம் செய்தார். அவை ''பாதுகாப்புக்கு'' மட்டும் பாவிக்கப்படும் என மட்டும் குறிப்பிட்டார். ஆனால் அவரின் அரசியல் கூட்டுக்கள் இதனை பகிரங்கமாக பேசியிருந்தன. தாராளவாத பத்திரிகையான Haaretz தேர்தலுக்கு முன்னைய கட்டுரை ஒன்றில் தேசிய ஐக்கிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Rehavam Ze'evi "பாலஸ்தீன பயங்கரவாதத்தை ஒழிக்க இரும்புக் கரங்களை தந்திரோபாயங்களை பாவிக்கவும், எந்தவொரு குடியேற்றங்களும் கலைக்கப்படாது எனவும் ஷரோன் உறுதியளித்ததாக'' குறிப்பிட்டதாக எழுதியுள்ளது. மேலும் அக்கட்டுரை '' இதேபோல் பாராளுமன்ற பிரதித் தலைவரான தேசிய ஐக்கிய கட்சியின் Avigdor Lieberman பெய்ரூட்டுக்கு நெருப்பு வைப்பதாகவும், தெஹ்ரானை நோக்கி ஏவுகணைகளை வீசப்போவதாகவும், அஸ்வான் அணைக்கட்டை தகர்க்கப் போவதாகவும், இஸ்ரேலை நோக்கி சுடும் பாலஸ்தீனர்களின் கிராமங்களை கைப்பற்ற போவதாகவும் பயமுறுத்தியுள்ளதாக'' குறிப்பிட்டுள்ளது.

இவ் அறிக்கைகளுடன் Haaretz பத்திரிகை லிகுட் கட்சியின் உபதலைவரான Gideon Ezra ஆல் கூறப்பட்ட எச்சரிக்கையான ''அரபாத் ஜோர்டானாலும் லெபனாலும் உதைத்து தள்ளப்பட்டுள்ளார். நாம் அவரைஅவருக்கு பழக்கமான சுற்றாடலுக்கு அனுப்புவோம்'' என்பதையும் வெளியிட்டுள்ளது.

பல அராபிய அரசாங்கங்கள் ஷரோனின் தெரிவு தொடர்பான தமது அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியது சற்று ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கின்றது. லெபனான் ''யுத்தத்திற்கான ஒரு அறிவிப்பு' 'எனத் தெரிவித்தது. ஏனைய சில பத்திரிகைகள் ''இஸ்ரேலிய மக்களை'' குற்றம்சாட்டின. எகிப்தின் அரசாங்கப் பத்திரிகையான Al-Akbar இஸ்ரேலுக்கு சமாதானம் தேவையில்லை என முடிவெடுத்தது.

எவ்வாறிருந்த போதும் இவ்வாறான முடிவுகள் இஸ்ரேலினுள்ள அரசியல் நிலைமைகளை திரிபுபடுத்துகின்றன. தேர்தலுக்கு சிலநாட்களுக்கு முன்னர் கருத்துக் கணிப்பீடுகள் 40% இஸ்ரேலியர்கள் ஷரோனின் தேர்வானது யுத்தத்திற்கான அபாயத்தை அதிகரிக்கும் எனப் பயப்படுவதைக் காட்டியது. இன்னொரு கணிப்பீடு 60% மக்கள் பாலஸ்தீன மக்களுடனான சமாதான உடன்பாட்டை விரும்புவதை எடுத்துக்காட்டியது.

ஷரோன் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான முக்கிய பொறுப்பு தற்போது பாராளுமன்றத்தில் தொழிற்கட்சி தலைவராகவும், தொழிற்கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ''ஒரு தேசம்'' இருந்து பதவி விலகிய பராக்கை சேர்கின்றது. 18 மாதங்களுக்கு முன்னர் பராக்கும் அவரது தொழிற்கட்சியும் சமாதானத்தைக் கொண்டு வருவதாக உறுதியளித்ததால் பரந்த வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கு மாறாக ஷரோன் வெற்றிபெற முன்னரே அவர்கள் இஸ்ரேலிய வலதுசாரிகளின் அரசியலுக்கு அடிபணிந்து போயினர். இதன் விளைவாக சமாதானத்தை விரும்பிய இஸ்ரேலியர்களின் ஆதரவை பராக் இழந்தார்.

60% ஆனோர் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். கடந்த காலங்களில் 80% ஆக இருந்ததுடன், வரலாற்று ரீதியாக ஒப்பிடுகையில் இது மிகக்குறைவானதாகும். பாலஸ்தீனர்களுடனான ஒரு சமாதானத் தீர்வுக்கான இஸ்ரேலிய ஆதரவாளர்கள் இரு கட்சிகள் மீதான நம்பிக்கையீனத்தால் வாக்களிக்கவில்லை. சனத்தொகையில் 20% உம் வாக்காளர்களில் 13% ஆன இஸ்ரேலிய அரபுக்களில் 20% இற்கு குறைவானவர்களே வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். கலந்த நாட்களாக நிகழ்ந்த மோதல்களில் 13 இஸ்ரேலிய அரபுக்கள் இறந்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கு முகமாக அரபுகட்சிகளின் பகிஸ்கரிப்பு கோரிக்கைக்கு கூடுதலானோர் ஆதரவளித்தனர்.

பராக் இத்தேர்தலை ஒரு இறுதி மாற்றீடாக முன்வைக்க முயன்றார். மேலும் தனக்கு அளிக்கப்படும் வாக்கு சமாதானத்தை தொடருவதற்கானதாகவும், ஷரோனுக்கான வாக்கு யுத்த ஆதரவுக்கு ஒத்ததானதாகவும் காட்டமுயன்றார். ஆனால் அவர் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் மிகவும் மோசமாக சந்தேகிக்கப்பட்டார்.

தொழிற் கட்சியின் அரசியல் வங்குரோத்து தொழிற்கட்சி தலைவரான சிமோன் பெரஸ், பராக்குக்கு ஆதரவழிக்க மறுப்பவர்கள் ஷரோனின் வெற்றிக்கு வழியமைக்கின்றனர் என குற்றம்சாட்டியதில் வெளிப்பட்டது. அவர் யார் எங்களை ''மடையர்கள், மோசமான இடதுசாரிகள்'' எனக்கூறி விலக்கிவைப்பவர்கள் தமது சொந்தக் கைகளாலேயே தலைமையை முசோலினியின் [ஷரோன்] கைகளில் கொடுக்கின்றனர் எனக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சி, மேரட்ஸ் போன்ற சியோனிச அரசியலமைப்பின் தாராளவாத பிரிவினரின் முக்கியத்துவம் என்னவெனில், அவர்கள் பரந்த மக்களை லிகுட் கட்சியினதும் அதன் பாசிச கூட்டினதும் ''ஒற்றுமையால் சமாதானம்'' என்ற வார்த்தை ஜாலங்களால் கைப்பற்றிக்கொள்ள அனுமதித்ததாகும்.

ஷரோனின் தேர்வானது பாலஸ்தீனர்களுடனான சமாதான உடன்பாடு எதனையும் சாத்தியமற்றதாக்கியுள்ளது. அரபாத் ''இஸ்ரேலிய மக்களின் தீர்ப்பை மதிப்பதாக'' குறிப்பிட்டு ''சமாதான பேச்சுவார்த்தையை'' தொடர்வதற்கான தனது தொடர்ந்த பங்களிப்பை வழங்குவதாகக் கூறியுள்ள போதும், பாலஸ்தீன தகவல் அமைச்சர் Yassir Abed Rabbo ஷரோனின் தேர்வை ''இஸ்ரேல் வரலாற்றில் மிக முட்டாள்த்தனமான நிகழ்வு'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன எதிர்ப்பு குழுக்களான இஸ்லாமிய ஜிகாத், கமாஸ் இயக்கங்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுக்கு எதிராக தமது ஆயுத எதிர்ப்பை தொடரப் போவதாக குறிப்பிட்டுள்ளன.

மேற்கு அரசாங்கங்களால் ஷரோனின் வெற்றி தயக்கத்துடன் வாழ்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி புஸ், ஷரோனின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள போதும் அரசு செயலாளரான கொலின் ்ெபளல் இஸ்ரேலின் அமைதிக்காக அழைப்புவிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய வெளிநாட்டுக் கொள்கைக்கான தலைவரான ஜாவியர் சொலானா ''தற்போது, நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நபருடன் இணைந்து இயங்க தயாராகவுள்ளோம்'' எனக் கூறியுள்ளார். நோர்வேயின் வெளிநாட்டு அமைச்சரான Thorbjoern Jagland "ஷரோன் தனது தேர்தல் பிரச்சாரத்தில் கூறியதை நடைமுறைப் படுத்துவாரானால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக பயப்படுவதற்கு சகல விதமான காரணங்களும் உண்டு'' என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான முழு அளவிலான யுத்தத்திற்கு ஷரோனின் வெற்றியால் உருவான உறுதியற்ற தன்மை மட்டும் காரணமல்ல. இஸ்ரேலின் உள்ளே சமூக, அரசியல் துருவப்படுத்தல் நாளாந்த நிகழ்வாக உள்ளது.

லிகுட்டினது யுத்த நோக்கானது பரந்தமக்களிடம் ஆதரவைக் கொண்டிராததுடன், தொழிற்கட்சியினதும் ''Peace Now" போன்ற இயக்கங்களினதும், வலதுசாரிகளுக்கு எதிரான நேரடி அரசியல் எதிர்ப்பே பாதுகாப்பான வழியெனக் கூடுதலாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. தொழிற்கட்சி இஸ்ரேலிய அரபுக்களின் நிபந்தனைக்குரிய ஆதரவை மட்டும் இழக்கவில்லை, மாறாக தனது சொந்த உண்மையான வாக்காளர்களில் இருந்தும் அந்நியப்பட்டுள்ளது.

ஷரோன் அதிதீவிர பழைமைவாதிகளின் ஆதரவில் தங்கியிருப்பதும், அவர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளும் பராக்கின் ''உள்ளூர்புரட்சி'' என உறுதியளிக்கப்பட்ட மதச்சார்பற்ற அல்லது ஆகக்குறைந்த ஒரு நவீன சமூகத்தினை விரும்பும் பெரும்பான்மை இஸ்ரேலியர்களுடன் முரண்பாட்டிற்கு இட்டுச்செல்லும்.

இஸ்ரேல் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை எவ்வாறாக இருந்தபோதும் 2001 இற்கான வரவுசெலவு திட்டத்தை மார்ச் மாத இறுதியில் முன்வைக்க வேண்டியுள்ளது. வர்த்தகவட்டாரங்கள் $2.2 பில்லியனை இல்லாதொழிக்க கோரிக்கை விட்டுள்ளது. இது சமூக நலசேவைகளையும், அரசாங்க தொழில்களையும் ஊதியங்களையும் பாரிய வெட்டுக்குள்ளாக்குவதாகும்.

ஷரோன் தொழிற்கட்சியுடன் ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதில் தனது நம்பிக்கையை வைத்துள்ள போதும் பராக்கின் இராஜினாமா இதனை சிக்கலாக்கியுள்ளது. 45 நாட்களுக்குள் அவர் ஒரு அரசாங்கத்தை உருவாக்காவிட்டால் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தவேண்டும். இது அரசியல் ஸ்திரமற்ற தன்மையால் இஸ்ரேலின் உடையும் நிலையை எடுத்துக்காட்டுவதை அவசியமாக்கும்.

ஷரோன் பதவியேறுவதனை எதிர்க்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், புத்திஜீவிகளும், மாணவர்களும் எதிர்நோக்கும் முக்கிய கேள்வி என்னவெனில், தமது விருப்பமான அமைதியையும் சமூக நீதியையும் முன்வைப்பதற்கான முன்நோக்கை தயார் செய்வதாகும். இது தேசியவாதத்தையும் சியோனிசத்தின் இனவாத முன்னோக்கையும் நிராகரிக்காமல் பூர்த்தியாக்கப்பட முடியாததுடன், வேறுபட்ட இடதுசாரிகளின் மாதிரியான தொழிற்கட்சியில் இருந்து அரசியல் உடைவினையும் வேண்டி நிற்கின்றது.

இஸ்ரேல், பாலஸ்தீனர்களை இராணுவப் போராட்டத்தின் மூலம் வெளியேற்றுவதால் உருவாக்கப்பட்டது. இப்புதிய அரசு அரபு முஸ்லீம்கள் மீதான யூதர்களின் இன, மத நலன்களை திணித்ததை அடித்தளமாகக் கொண்டது. அது தனது அரபு அயலவர்கள் மீது சிலவேளை தீவிரமான அல்லது தணிந்த யுத்தத்தை செய்துள்ளது.

அதிலிருந்து இஸ்ரேல் அமெரிக்காவின் கண்காணிப்பில் தங்கி ஒரு இராணுவ சிறையாக இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டதுடன், அதனது மக்கள் அனைவருக்கும் சமமான உரிமையை வழங்கும் உண்மையான ஒரு ஜனநாயக சமுதாயத்தை அபிவிருத்தி செய்ய இயலாதிருந்தது. அதன் ஒவ்வொரு முக்கிய வரலாற்றுத் திருப்பு முனைகளிலும் அப்போக்குகள் ஜனநாயகத்தை சியோனிசத்திற்கு சமப்படுத்த இயைந்ததுடன் அதன் அரசியல் அமைப்பினுள் இருந்த யுத்தத்தை விரும்பும் பிரிவுகளை எதிர்நோக்க முடியாதிருந்தது. வலதுசாரிகள் பிடிவாதம் மிக்கதாகவும், அரசியலை வழிப்படுத்தக் கூடியதாகவும் இருந்ததற்கான காரணம் என்னவெனில் அவர்களின் முன்னோக்கு சியோனிசத்தின் முன்னோக்கின் விளைவுகளை தெளிவாக எடுத்துக் காட்டியதாலாகும்.

எந்நவொரு இஸ்ரேலிய அரசாங்கமும் பாலஸ்தீனர்களுடனான உண்மையான ஜனநாயக உடன்பாட்டை அடைய முடியவில்லை. அதற்கு பதிலாக வலதுசாரிகளினதும் குடியேற்றவாசிகளின் தொடர்ந்த பலாத்கரமான எதிர்ப்பு ஒஸ்லோவின் உடன்படிக்கைக்கு பின்னர் 8 வருடங்களாக தொடர்ச்சியாக சலிப்படையச் செய்துள்ளது. இதன் விளைவாக இஸ்ரேல் இன்று உடன்பாடு காணமுடியாத அரசியல் சமூக முரண்பாடுகளுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலைமையில் பாலஸ்தீனர்களுடனான முழு அளவிலான யுத்த அபாயத்தில் உள்ளது.

இச்சீரழிவிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஒரேயொரு சாத்தியக்கூறு சியோனிசத்தின் கருத்துக்களிலிருந்தும், ஷரோனினதும் பராக்கினதும் அரசியல் நோக்கங்களிலிருந்தும், அரசியல் சுயாதீனத்தை தொழிலாள வர்க்கம் உருவாக்கிக் கொள்வதன் மூலமும், யூத மற்றும் அரபுத் தொழிலாளர்களை ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச அடித்தளத்தில் ஐக்கியப்படுத்துவதனாலேயே சாத்தியமாகும்.