World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தோனேசியா

Indonesian military emerges as powerbroker in Megawati's installation as president

ஜனாதிபதியாக மேகாவதி நியமனத்தில் இந்தோனேஷிய இராணுவம் அதிகாரத் தரகராக வருகின்றது

By Peter Symonds
24 July 2001

Use this version to print

பிரதான அரசுகள் மற்றும் சர்வதேச பத்திரிகை சாதனங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் ஜனாதிபதி அப்துர்ரஹ்மான் வாஹித்தை உதவி ஜனாதிபதி மேகாவதி சுகர்ணோபுத்திரியைக் கொண்டு நேற்று பதிலீடு செய்ததை, ஜனநாயக ரீதியான மரியாதையின் ஒளி வட்டமாக செய்வதற்கு இந்தோனேஷியாவில் பெரும் அளவிலான முயற்சி செலவிடப்பட்டது. ஆனால் ஜனநாயகவாதிகள் என்று அழைக்கப்படுபவர்களுக்கு இடையிலான ஆளும் தட்டின் கசப்பான அணித் தகராறாக இருந்து வருவதில் உண்மையான அதிகாரத் தரகர்கள், முன்னாளைய சுகர்த்தோ சர்வாதிகாரத்தின் கருவிகளாக --இராணுவம் மற்றும் கோல்காருக்கு-- வலதுசாரி இஸ்லாமிய கட்சிகளின் "அச்சு" கூட்டுக்கள் வழியாக-- கருவிகளாக இருந்து வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை மறைப்பது கடினமானதாகும்.

இந்த அரசியல் அணிதிரளல் மக்கள் ஆலோசனை சபையில் (MPR) இரண்டு வருடங்களுக்கும் குறைவாக அதிகாரத்தில் இருந்த வாஹித்தை வெளியேற்றுவதற்கு அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை மட்டும் உறுதிப்படுத்தவில்லை, ஜனாதிபதியின் அவசரநிலைப் பிரகடனத்தைக் கொண்டு வரும் கடைசி நிமிட முயற்சியையும் கூட தோற்கடித்தது. மேகாவதி இன்னும் மந்திரி சபையை அமைக்க வேண்டி இருக்கிறது அல்லது எந்த கொள்கை பற்றியும் அறிவிக்க வேண்டி இருக்கிறது. ஆனால் இரண்டுமே அவரை ஆட்சியில் இருத்திய மற்றும் அதற்கு அவர்களிடம் இப்போது நன்றிக்கடன்பட்டுள்ள, சுகர்தோ சகாப்த சக்திகளின் கனமான அடையாள முத்திரையை சந்தேகத்திற்கு இடமின்றி சுமந்து கொண்டிருக்கும். ஏற்கனவே உதவி ஜனாதிபதி பதவிக்காக முன்னாள் படைத்தளபதிகள் மற்றும் வலதுசாரி அரசியல்வாதிகள் அணிவகுத்து நிற்கும் ஒரு அணி இழை காணப்படுகிறது.

நான்கு நாட்களாக நடந்த அரசியல் கையாளல்களுக்குப் பின்னர் நடந்த நேற்றைய வாக்கானது, பாராளுமன்ற பதவி நீக்க விசாரணையின் ஆறுமாத கால நிகழ்ச்சிப்போக்கின் உச்சக்கட்டம் ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தனது அரசியல் எதிராளிகள் ஆகஸ்டு 1ல் கூடவிருக்கும் MPR ன் சிறப்புக் கூட்டத்தில் தன்னை விசாரணை செய்யும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், அவசர நிலைப் பிரகடனத்தை திணிப்பதற்கான வாஹித்தின் அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த MPR உறுப்பினர்கள் பாராளுமன்றக் கட்டிடத்தில் கூடினர்.

வாஹித் அவரது அச்சுறுத்தலில் இருந்து தற்காலிகமாக பின்வாங்கி, புதிய இடைக்கால தேசிய போலீஸ் தலைமையின் ஆணை இட்டுபணி தொடங்குதலை செய்விக்க மேற்சென்றார். இது, சில வாரங்களாக பாராளும்னறத்தின் ஆதரவுடன் இருக்கும் தற்போதைய போலீஸ் தலைவரான ஜெனரல் பிமான்டோரோவைக் கீழறுக்கும் மேலும் கூடிய முயற்சியாக இருந்தது, அவரை நீக்கக்கோரும் ஜனாதிபதியின் முடிவை எதிர்த்து அவர் நின்றார். அடுத்த நாள் வாஹித்தை விமர்சிப்பவர்கள் ஜனாதிபதியின் நடவடிக்கையை MPR சிறப்புக் கூட்டத்தினை திங்கட்கிழமை கொண்டு வருவதற்கான சாக்குப்போக்காகக் கொண்டனர் மற்றும் வாஹித் அதன் முன்தோன்றி ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் தகுதிக் கேட்டுக்கும் பதில் சொல்லவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இரு அரசியல் முகாம்களும் பலப்பரீட்சை நடத்துவதற்காக வெறியூட்டப்பட்ட தயாரிப்புக்களில் ஞாயிற்றுக்கிழமையைச் செலவிட்டனர். மேகாவதி தனது தனிப்பட்ட வசிப்பிடத்தில் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்தார். அவரது வீட்டுக்கு வெளியே செய்தியாளர்கள் முன் தோன்றுகையில், சபாநாயகரும் "அச்சு" குழுவின் தலைவருமான அமியன் ரெய்ஸ், கீழ் சபையின் (DPR) சபாநாயகர் மற்றும் கோல்க்காரின் தலைவர் அக்பர் தான்ஜூங் ஆகியோர் புடைசூழ வந்தார்.

அவசரநிலையைத் திணிப்பதற்கான வாஹித்தின் எந்த முயற்சிக்கும் ஆயுதப்படைகளும் (TNI) போலீசும் திரும்பாது என்று அதனுடைய முந்தைய பிரகடனங்களுக்கு வலு சேர்க்கும் வண்ணம், இராணுவ உயர் மட்டம் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியில் படைகளை நிற்கச்செய்தது. டஜன் கணக்கான கவச வண்டிகள் பின்னே வர 1000க்கும் மேலான நன்கு ஆயுதம் தரித்த துருப்புக்கள் ஞாயிறு நண்பகல் மாளிகைக்கு எதிரில் குவிக்கப்பட்டிருந்தது. Army Strategic Reserve command ன் (Kostad) கொமாண்டர், ஜெனரல் ரியாமிசார்ட் ரியாக்குடு இதனை, "வழக்கமான பயிற்சி" என கரவாகக் குறிப்பிட்டார்.

அதிகாகத் தனிமைப்படுத்தப்பட்ட வாஹித், தாம் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் தன்னை விசாரிக்கக்கோரும் MPR ன் நகர்வு அரசியற் சட்டத்துக்கு விரோதமானது என மீண்டும் அறிவிக்கப்போவதாக அறிவித்தார். அவர் TNI தலைவர் அட்மிரல் விடோடோ அடிசுசிப்டோவை மாற்றுவதற்கான கடைசிக் குழி தோண்டும் முயற்சியைச் செய்வதாக அநேக செய்திகள் சுட்டிக்காட்டின. ஆனால் சுவற்றின் மேலதிகாரிகளை மாற்றுதற்கு அவர் அணுகியது மறுக்கப்பட்டதென்று எழுதப்பட்டிருந்தது.

திங்கட்கிழமை அதிகாலை 1 மணி அளவில், வாஹித் தேசியரீதியில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில் பாரளுமன்றத்தின் இரு அவைகளையும் களைத்து மற்றும் கோல்க்கார் கட்சியைத் தடை செய்து அவசர நிலைப் பிரகடனத்தை பிரகடனம் செய்தார். அதன்பின் உடனே, தரைப்படை, கப்பற்படை மற்றும் வான்படைத் தலைமைகள் புடைசூழ, விடோடோ ஆயுதப்படைகள் ஜனாதிபதியின் ஆணைகளுக்கு கீழ்ப்படியாது என்று அறிவித்தார். அவரது உயர் பாதுகாப்பு அமைச்சர் அகும் குமேலார் மற்றும் அமைச்சரவைச் செயலாளர் மார்சுக்கி டாருஸ்மான் உட்பட வாஹித்தின் அமைச்சரவையில் உள்ள பல மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். திங்கட்கிழமை அதிகாலை நேரம் மேகாவதி பாராளுமன்றத்தை பாதுகாக்க இராணுவத்தை வேண்டிக்கொள்ளுமாறும் மேற்கொண்டு செல்லுமாறும் MPR க்கு வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றக் கட்டிடத்தில் 6000 பாதுகாப்புப் படைவீரர்கள் உட்பட ஜாகார்த்தா முழுவதும் 42,000 போலீசும் இராணுவத்தினரும் இறக்கிவிடப்பட்டனர்.

வாஹித் MPR முன் தோன்ற மறுத்தார், அது அதன் விவகாரத்தை சிறிதளவாய் அல்லது விவாதம் இல்லாமலே விரைந்து தள்ளிக்கொண்டு சென்றது-- 100 ஜனாதிபதியின் சொந்த ஆதரவாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனர். பாராளுமன்றம் சம்பிரதாயப்பூர்வமாக ஜனாதிபதியின் அவசரநிலைப் பிரகடனத்தை நிராகரித்தது. முடிவானது நாட்டின் உச்ச நீதிமன்றத்தால் வலு சேர்க்கப்பட்டது, அது வாஹித்தின் ஆணையை அரசியற் சட்ட விரோதம் என அறிவித்தது. நண்பகல் இடைவேளை அளவில், விவாதங்கள் முடிந்து MPR 591க்கு 0 என்ற வாக்கு எண்ணிக்கையில் வாஹித்தை அகற்றியது.

சிறப்பாக ஆயுதப்படைகள் மற்றும் போலீசாரின் நியமன பிரதிநிதிகள் 38 பேர் தீர்மானத்திற்கு வாக்களித்தனர் --முந்தைய நிகழ்ச்சிகளின்போது அவர்கள் நடுவுநிலைமையின் போலித் தோற்றத்தைப் பாராமரிக்க அதனைத் தவிர்த்துவிடுவார்கள். அரைமணி நேரம் கழித்து, மேகாவதி ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இதுவரை வாஹித் ஒதுங்கி இருக்க அல்லது ஜனாதிபதி மாளிகையை விட்டு நீங்க மறுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் அவரது பெரும்பான்மை அமைச்சர்களால் கைவிடப்பட்ட மற்றும் கையளவே ஆன ஆலோசகர்களுடன் குழுமி இருக்கும் காட்சியை முன்நிறுத்துகிறார். ஒரு வாரத்திற்குள் அவர் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறத் தவறினால் கைது செய்யப்படுவதாக MPR சபாநாயகர் அவருக்கு அச்சுறுத்ததல் விடுத்துள்ளார்.

ஞாயிறு அன்று தனது ஜனாதிபதி பதவியைக் காக்க தனது ஆதரவாளர்கள் மாளிகையில் கூடுவதற்கு அவர் விடுத்த அழைப்பு மிககுறைவாக இருந்தது -- நேற்று முழுவதும் சில நூறு பேர்கள் விழிப்போடு இருந்தார்கள். பாராளுமன்ற கட்டிடத்தில் எதிர்ப்புக்கள் எதுவும் இல்லை. பின்வரும் நாட்களில் அல்லது வாரங்களில் ஆர்பாட்டங்களைக் காண நேரலாம், குறிப்பாக அவரது செல்வாக்கு உள்ள கிழக்கு ஜாவா பகுதியில். ஆனால் நேற்று அவருக்கு ஆதரவின்மையானது, அவரது சொந்த தேசிய விழிப்புணர்ச்சிக் கட்சி (PBK) மற்றும் இசுலாமிய அமைப்பான நாதுலத்துள் உலமா (NU) பல பிளவுகள் உள்ளன மற்றும் வாஹித் ஆதரவை இழந்துள்ளார் என்பதைக்காட்டுகிறது.

சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்படுவோர்

இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும்: இந்தோனேஷியாவில் சுகர்த்தோ வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து இறக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு, இராணுவமும் அதன் அரசியல் கூட்டாளிகளும் எவ்வாறு நிகழ்ச்சிகளின் போக்கை தீர்மானித்திருக்கின்றனர் என்பது எப்படி? அனைத்துக்கும் மேலாக, அவர்களின் அரசியல் மறு தோற்றமானது சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்பட்ட --- வாஹித், மேகாவதி மற்றும் ரெய்ஸ் போன்றோரை-- நேரடியாகச் சார்ந்துள்ளது. வெகு ஜனங்களின் எழுச்சியைக்கண்டு மிக அஞ்சும் இவர்கள், உண்மையான ஜனநாயக மாற்றங்களுக்கான கோரிக்கைகளை எதிர்ப்பவர்கள் மற்றும் தாங்கள் ஒருமுறை எதிர்க்கப்பட வேண்டும் என்று கூறியவர்களுடன் சேர்ந்து சதி செய்பவர்கள் ஆவர்.

சுகார்த்தோவின் சர்வாதிகாரத்தின் கீழ், வாஹித், மேகாவதி மற்றும் ரெய்ஸ் ஆகியோர் மிக எச்சரிக்கையான எதிர்ப்பினைக் கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்ட அதேவேளையில், இராணுவம், கோல்ககார் மற்றும் அரசு எந்திரத்துடன் உயர்மட்டத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். 1998 மே மாதத்தில் இறுதியாக சுகர்த்தோவைப் பதவியில் இருந்து நீக்கிய நிகழ்ச்சிப் போக்கில் இம் மூவரும் மாணவர் கிளர்ச்சிகளை, தங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவிவிடும் பரந்த மக்களின் எழுச்சியைப் பற்றவைத்ததுவிடும் என்று அஞ்சி, அதனை கடிவாளமிட்டுக் கட்டுப்படுத்தினர். சுகர்த்தோவின் முந்தைய கூட்டாளிகள் பின்வாங்குமாறு நிர்பந்திக்கப்பட்ட அதேவேளை, அவர்கள் அரசு எந்திரத்துடன் அதே இடத்தில், பொதுவிடத்தில் "ஜனநாயகவாதிகள்" மற்றும் "சீர்திருத்தவாதிகள்" என்று ஊர்வலம் போகக்கூட அவர்களால் முடிந்தது.

சுகார்த்தோவின் புறப்பாட்டுக்குப்பிறகு, சீர்திருத்தவாதிகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள் அரசியல் நிலைமைகளை ஸ்திரப்படுத்தவும் கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டு வரவும் அவருக்குப்பின் வந்த பி.ஜே. ஹபீபி உடன் நெருக்கமாக ஒத்துழைத்தனர். சுகார்த்தோ சகாப்தத்து அரசியல் கட்டமைப்புக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை MPR செய்ய வேண்டும் என்று கோரி ஜகார்த்தாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தபொழுது 1998 முடிவில் தீர்க்கமான திருப்பு முனை வந்தது.கிளர்ச்சிகளை ஆதரிப்பதற்குப் பதிலாக, வாஹித், மேகாவதி மற்றும் ரெய்ஸ் ஆகியோர் சுகார்த்தோவின் முன்னாள் தொழிற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்ட மிக மட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களுக்கு உடன்பட்டு, பொலீசார் கிளர்ச்சியை நசுக்கி ஒடுக்க பச்சை விளக்கு காட்டினர், அதில் பல மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன்விளைவாக,1999ல் நடைபெற்ற தேசிய தேர்தலின் வெளிப்பாடு ஆரம்பம் முதலே நையாண்டிக்குரியதாய் இருந்தது.DPR அல்லது கீழ் சபைக்கு வேட்பாளர்களை நிறுத்த மனுச்செய்தவர்களில் அரைவாசி அரசியல் கட்சியினர் மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டனர்.அது இராணுவத்தால் நியமிக்கப்பட்ட குழுவைது தக்கவைத்திருந்தது. MPR அல்லது மேல் சபையுடன் DPR ஐயும் சேர்த்து 200 பிரதிநிதிகள் மாகாண பாராளுமன்றங்களாலும் சிறப்பு நலன்கொண்ட குழுக்களாலும் நியமிக்கப்பட்டனர்.1999ல் ஜனாதிபதியையும் உதவி ஜனாதிபதியையும் தேர்ந்தெடுக்க MPR கூடிய பொழுது, மூன்றில் இரண்டுபங்கினர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக இருந்தனர் -- எஞ்சியோர் நியமனம் செய்யப்பட்டவர்களாக இருந்தனர்--முழுவிவகாரமும் அரசியல் குதிரை வியாபாரம் பேசும் ஒருவகைப் பயிற்சியாக இருந்தது.

மேகாவதி தனது இந்தோனேஷிய ஜனநாயகக் கட்சி-போராட்டம் (PDI-P) 35 சதவீத மக்கள் வாக்குகளைப் பெற்றிருப்பதன்காரணமாக தான் ஜனாதிபதியாக ஆகலாம் என கருதியிருந்தார். மேகாவதி ஜனாதிபதியாக ஆனால், சலுகைகள் செய்யும்படி கோரும் ஆதரவாளர்களின் அழுத்ததிற்கு அவர் ஆளாக நேரும் என்ற கவலைகள் ஆளும் வட்டத்திற்குள் இருந்தன. PDI-P இநதோனேஷியாவின் முதல் ஜனாதிபதி சுகர்ணோவின் மகள் என்ற மேகாவதியின் குடும்பத் தொடர்பை ஆதாயப்படுத்திக்கொண்டது, மேலும் இந்த ஒரு கட்சிதான் தொழிலாளர்கள், மற்றும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் குறிப்படத்தக்க ஆதரவு தளத்தைக் கொண்டிருந்தது.

வரிசையான கொல்லைப்புற பேரங்கள் வழியாக, தாஞ்சுங்கும் ரெய்யும் மேகாவதியைத் தடுக்கும் மற்றும் வாஹித்தை ஜனாதிபதி ஆக்கும் தொளதொள கூட்டை இணைந்து ஏற்படுத்தினர். மேகாவதியின் ஆதரவாளர்களின் கிளர்ச்சி வெடிப்புக்களுக்குப் பின்னரே மேகாவதி துணை ஜனாதிபதியாக ஆக்கப்பட்டார். கடந்த 20 மாதங்களில், வாஹித்தின் எதிராளிகளால் அவர் "திறமைஅற்றவர்" மற்றும் "ஒழுங்கற்றவர்" என அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் வாஹித்தின் தோல்விகள் வெறுமனே தனிநபர் சார்ந்ததாக ஒரு போதும் இருந்ததில்லை---அவை அவர் குறிப்பிடத்தக்க சொந்த தளத்தை கொண்டிருந்ததில்லை மற்றும் மற்றவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக கையாளுதல்களைச் செய்யுமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார் என்பதில் இருந்து கிளைத்தெழுகிறது.

ஒருமுறை அதிகாரத்தில் இருக்கையில், வாஹித் பொருளாதார மறு சீரமைப்பை நடைமுறைப்படுத்தவும் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்வில் இராணுவத்தின் தலையீட்டை குறைக்குமாறும் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் பிரதான அரசுகளிடம் இருந்து வந்த அழுத்தத்திற்கு ஆளானார். ஊழலுக்காக சுகார்த்தோவையும் அவரது சகாக்களையும் விசாரணைக்கு தற்காலிகமாக முன்வைத்த பொழுதும் கிழக்கு திமோரில் சுதந்திர--எதிர்ப்பு வன்முறையில் அதனது தலையீட்டிற்காக இராணுவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முனைந்தபொழுதும், இராணுவம், கோல்க்கார் மற்றும் ஏனையோரிடம் வாஹித் மோதலுக்கு வந்தார். ஏசே மற்றும் மேற்கு பாப்புவா ஆகிய இடங்களில் பிரிவினைவாத இயக்கங்களை நசுக்கத் தவறியதற்காககவும் கூட ஜனாதிபதி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

அவரது பங்களிப்பைப் பொறுத்தவரை, மேகாவதி 1999 அக்டோபரில் அவரது தோல்விக்குப்பிறகு, தாம் இராணுவத்துடனும் கோல்க்காருடனும் நெருக்கமான ஒத்துழைப்பை வைத்திருக்க வேண்டுமென முடிவுக்கு வந்தார். இந்தோனேஷிய தேசத்தைப் பாதுகாத்தல் என்ற பதாகையின் கீழ், அவர் தன்னைச்சுற்றி பிரிவினைவாதத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கக்கோருகிறவர்கள் மற்றும் நாட்டின் நிதி அமைப்பு முறைகளை தனியார் மயமாக்க மற்றும் மறு சீரமைக்கக்கோரும் பன்னாட்டு நாணய நிதியத்தினைக் கடுமையாய் விமர்சிப்பவர்கள் ஆகியோரை இழுத்துக் கொண்டார். சுகார்த்தோவின் வீழ்ச்சிக்கு முன்னர் எதிர்க வேண்டும் என்று கூறிய மற்றும் 1999ல் அவரை ஜனாதிபதியாகவிடாமல் தடுத்த அதே சக்திகளைப் பொருத்தவரை, அவர் குறைவாகவே மறைந்து இயங்க வேண்டியவராக இப்போது ஆனார்.

வாஹித்துக்கு எதிரான முதல் நகர்வு 2000ல் இரண்டு இட்டுக்கட்டப்பட்ட ஊழல்கள் அடிப்படையில் செய்யப்பட்டது, 2001ன் தொடக்கத்தில் பதவி நீக்க விசாரணையின் சம்பிரதாயப்பூர்வ நிகழ்ச்சிப்போக்கு ஆரம்பமானது. வாஹித்துக்கு எதிரான சான்றுகள் இல்லாவிட்டாலும், DPR வாஹித்தை அகற்ற வேண்டியும் தொடர்ந்து அதனை முன்னெடுக்குமாறும் பிப்ரவரி1, ஏப்ரல்30 மற்றும் மே 30 ஆகிய தேதிகளில் அறுதிப் பெரும்பான்மையாக வாக்களித்தது. மே மாதம் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வாஹித் பதில் சொல்லவேண்டிய சட்ட ரீதியான வழக்கு எதுவும் இல்லை என்று கண்டபோது, இந்தக் குற்றச்சாட்டுக்களின் கிழிசல்கள் அம்பலப்பட்டன. இதன் பதிலாக, அவரது அரசியல் எதிராளிகள் ஜனாதிபதியின் "தகுதிக்குறைவுக்கு" சாதாரணமாய் நகர்த்திக் கொண்டனர். சுகார்த்தோ வீழ்ச்சிக்குப் பின்னரான முழுக்காலகட்டமும் ஒரு முக்கிய அரசியல் விஷயத்தை -- இந்தோனேஷியாவில் உண்மையான ஜனநாயகத்துக்காகவும் வாழ்க்கைத் தரங்களை உயர்த்துவதற்காகவும் ஆன சாதாரண உழைக்கும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற, சீர்திருத்தவாதிகள் என அழைக்கப்படும் வாஹித் மற்றும் மேகாவதி போன்றோரின் முழுத் திராணி இன்மையை-- கோடிட்டுக்காட்டுகின்றது. மேகாவதி இப்பொழுது இராணுவம் மற்றும் கோல்க்காரின் சைகை மற்றும் அழைப்பினால் பதவிக்கு வந்துள்ளார். அவர்கள் அவரது புதிய நிரவாகத்தில் முக்கிய பாத்திரத்தை ஆற்ற விரும்புவர். அவர் பொருளாதார நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுவார், அது தவிர்க்கமுடியாதபடி நாட்டின் சிறு துளி அளவேயான தட்டினருக்கும் வறுமை பீடித்த பரந்த மக்களுக்கும் இடையிலான இடைவெளியை மேலும் அகலப்படுத்தும்.

தெளிவாகப் பேசும் ஆற்றல் அற்ற மற்றும் உள்ளீடற்ற அரசியல் நபர், அவரே ஒப்புக்கொண்டபடி இல்லத்தில் மணைவியாகவும் தோட்டக்காரராகவுமே நீடித்திருக்கிறவர் மேகாவதி என்பது மிக உண்மை, அவர் தேசிய முதலாளிகளின் அரசியல் பலவீனத்தைப்பற்றி தொகுதிதொகுதியாகப் பேசும் இந்தோனேஷிய மேடையின் மையத்திற்கு வந்துள்ளார். 32 ஆண்டுகளாக அதன் ஆட்சியைத் தூக்கி நிறுத்துவதற்காக ஒரேயடியான இராணுவச் சர்வாதிகாரத்தின்மீது தங்கி இருந்த ஆளும் வர்க்கமானது, இந்தோனேஷிய சுதந்திரத்திற்கான போராட்டத்தில் சுகர்ணோவின் தகுதி இல்லாத புகழானது சிறிது காலத்தை அவகாசமாக எடுக்கும் என்ற நம்பிக்கையில், சுகர்ணோவின் குழந்தைகளுள் ஒன்றன்பால் திரும்பி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இராணுவமானது அதன் கரத்தைப் பலப்படுத்தி இருக்கின்றது என்ற பின்னனியில், அது எதிரணியை கவனிப்பதற்கு ஏற்றவாறு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் தீனி போடப்பட்டுள்ளது, அது தவிர்க்கமுடியதபடி அரசாங்கத்திற்கு கொள்கையாக வளர்த்து எடுக்கப்படும்.