World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israel targets Arafat's headquarters

US gives green light for war against Palestinian Authority

இஸ்ரேல் அரபாத்தின் தலைமையகத்தை நோக்கி குறிவைக்கின்றது

பாலஸ்தீன அதிகாரத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அமெரிக்கா பச்சை விளக்கு காட்டுகின்றது

By Chris Marsden
5 December 2001

Use this version to print | Send this link by email | Email the author

திங்கட்கிழமை இரவு ஆறு மணித்தியால சூடான கலந்துரையாடலின் பின்னர் இஸ்ரேலிய பாதுகாப்பு சபை பாலஸ்தீன அதிகாரத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும், ''அதற்கேற்றபடி அதனை அணுகவேண்டும்'' எனவும் தெரிவித்துள்ளது. அமைச்சரவை அறிக்கை ஒன்று, தன்சீம் (Tanzim) இராணுவப் பிரிவையும், பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவரான யசீர் அரபாத்தின் பாதுகாப்பு பிரிவான 17வது விஷேட பிரிவினரையும் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கை மேலும் ''பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவிற்கு நடவடிக்கைகளை [இராணுவ, இராஜதந்திர, தகவல், பொருளாதார] தீர்மானிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்'' குறிப்பிட்டுள்ளது.

இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடாத்த முன்னரே தொழிற்கட்சி அமைச்சர்கள் வெளியேறிவிட்டனர். வெளிநாட்டு அமைச்சரான சிமோன் பெரஸ் அரசாங்கம் ''பாலஸ்தீன அதிகாரத்தை அழிக்க முயல்வதாக'' குற்றஞ்சாட்டினார்.

இதன் சில மணித்தியாலங்களுக்குள் பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவரான யசீர் அரபாத் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் 50யார் தூரத்தில் மூன்று ஏவுகணைகளை வீசியது. அரபாத் காயமடையவில்லை, ஆனால் காஸா கரையோரப்பகுதியில் ஒரு ரொக்கட் இருவரை கொன்றதுடன் 100 க்கு மேற்பட்டோரை காயமடையச் செய்தது. இதில் அதிகமானோர் பாடசாலைப் பிள்ளைகளாவார். காஸா கரையோரத்தில் இரண்டும், மேற்குகரையோரத்தில் ஒன்றுமாக 17வது படைப்பிரிவின் கட்டிடங்கள் தாக்கப்பட்டது. இத்துடன் 8 பாதுகாப்பு நிலையங்கள் இஸ்ரேலிய ஏவுகளைகளால் தாக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் நடவடிக்கைகளானது, பாதுகாப்பு சபையினது தீர்மானம், பாலஸ்தீன அரசுக்கு எதிரான பாரிய இராணுவ தாக்குதலை நடாத்துவதற்கான பாதையை வழங்கியுள்ளதை தெளிவாக்குகின்றது. மேலும், இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத சதியை அரபாத் திட்டமிட்டு நடாத்துவதாக ஆரியல் ஷரோனின் வலியுறுத்தலானது, அவரும் கொல்லப்படுவதற்கான குறியாகலாம் என்பதற்கான தெளிவாக சாத்தியப்பாட்டை காட்டுகின்றது. அமைச்சரவை அறிக்கையில் அரபாத் விஷேடமாக குறிப்பிடப்பாடாததானது தொழிற்கட்சி அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு சலுகையாகும்.

கடந்தவார இறுதியில் நடாத்தப்பட்ட மூன்று தற்கொலைத் தாக்குதலில் 25பேர் கொல்லப்பட்டதும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததும் பாலஸ்தீன அதிகாரத்தை, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அமைப்பாக குறிப்பிடப்படுவதற்கான முன்நிபந்தனையாக அமைந்தது. ஆனால் அரபாத்தும், பாலஸ்தீன அதிகாரத்துவமும் இத்தாக்குதலுக்கு காரணமில்லாதுதடன், ஹமாஸ் இயக்கமும், இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் இத்தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றதுடன், ஹமாஸின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு பதிலாக இத்தாக்குதல் இருக்கலாம். பாலஸ்தீன அதிகாரத்துவம் இத்தாக்குதலை கண்டித்துதுடன், ஹமாஸின் உயர் தலைவர்கள் உட்பட 130 இற்கு மேற்பட்ட இஸ்லாமிய இராணுவத்தினரை கைதுசெய்தது. ஆனால் ஷரோனின் அரசாங்கம் இவற்றை கண்துடைப்பு என நிராகரித்தது.

கடந்தவார இஸ்ரேலிய ஒடுக்குமுறையின் அதிகரிப்புடன் ஹமாஸின் தலைவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷரோன் நன்கு அறிந்திருந்ததுடன், அதற்கான பொறுப்பின் உண்மை வெளிவருவது போலுள்ளது. 1996 இல் ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பின்னரும் இப்படியான தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றன. பாலஸ்தீன அதிகாரத்தை இராணுவரீதியாக அழிக்கும் அவரது மூலோபாயத்தினை அதிகரிப்பதற்கான ஆத்திரமூட்டலை ஷரோன் மீண்டும் செய்துள்ளார். பாலஸ்தீனத்துடனான இஸ்ரேலின் மோதலை அமெரிக்காவின் ''உலக பயங்கரவாதத்திற்கு எதிரான'' போராட்டத்துடன் ஒப்பிட்டு ஷரோன் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியின் பின்னரே இஸ்ரேலிய அமைச்சரவை கூடியது. அவர் பாலஸ்தீன அதிகாரம் யூத அரசின் எதிரி எனவும், ''இங்கு நடக்கு அனைத்திற்கும்'' அரபாத்தே காரணம் எனவும் வலியுறுத்தியுருந்தார். மேலும் அவர் ''எங்களை கொல்வதற்காக எவர் எழுகின்றார்களே அவர்களே தமது அழிவிற்கான பொறுப்பாகும்'' என எச்சரித்தார்.

தொழில், சமூக அமைச்சரான Sholomo Benzri அரபாத்திற்கும், பாலஸ்தீன அதிகாரத்திற்கும் எதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்துமாறு ஷரோனை வற்புறுத்துவதுடன், இதற்கு ஏனைய பல அமைச்சர்களும் ஆதரவளித்துள்ளனர். அமைச்சரவைக் கூட்டத்தின் முன்னர் கல்வி அமைச்சரான Limor Livnat இஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு ''அமெரிக்கர்கள் செய்ததைப்போல் நாமும் ஒரு மூலோபாய தீர்மானத்தை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்தின் தலைவரை அழிப்பதோடு மட்டுமல்லாது, அவர்கள் பயங்கரவாத அரசாங்கத்தை இல்லாதொழிப்பதற்காக சகலதையும் செய்கின்றார்கள். நாங்களும் பயங்கரவாத அரசாங்கத்தை அழிக்கவேண்டும்'' என குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொறுப்பு

புஷ்ஷின் நிர்வாகத்தால் ஷரோனின் நடவடிக்கைகளுக்கு பச்சை விளக்கு காட்டப்பட்டுள்ளது. பிரான்சு, பெல்ஜியம் போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு மாறாக இஸ்ரேலை கட்டுப்படுத்தும் எவ்வித முயற்சிகளையும் வெள்ளைமாளிகை எதிர்க்கின்றது. அமெரிக்காவின் பேச்சாளரான Ari Fleischer ''இஸ்ரேல் ஒரு சுயாதீனமான சக்தி எனவும், அதற்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உள்ளது'' என கூறினார். அவரது நிலைப்பாடு ஜனாதிபதி புஷ்ஷினதும், செயலாளரான கொலின் பெளலினதும், பாதுகாப்பு அமைச்சரான டொனால்ட் ரும்ஸ்வெல்டினதும் முன்னைய கருத்துக்களை பிரதிபலித்தது.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னர் ஷரோன் அமெரிக்கா சென்று புஷ் ஐ சந்தித்திருந்தார். முன்னர் பாலஸ்தீன பிரதேசத்தினுள் தலையிடவேண்டாம் என்ற கோரிக்கை வைத்திருந்தபோதும், தற்போதைய அறிக்கை தற்கொலைத் தாக்குதலுக்கு ஷரோனின் எவ்விதமான பதில் நடவடிக்கையையும் ஆதரிப்பதாக இருந்தது.

அமெரிக்காவின் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் தலிபானிற்கு விதிக்கப்பட்ட கெடுவைப்போல் புஷ் பத்திரிகையாளர்களுக்கு ''அப்பாவி இஸ்ரேலியர்களை கொன்றவர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன்கொண்டுவர அரபாத் தனது ஆதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்தையும் செய்யவேண்டும் என'' கூறினார். பதில்தாக்குதல் எதுவும் செய்யாது தவிர்த்துக் கொள்ளுமாறு புஷ் அழுத்தத்தை பிரயோகித்தாரா என ஷரோனின் உதவியாளர் வினாவியதற்கு அவர் ''நாங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை செய்யவேண்டும் என்பது அமெரிக்காவிற்கு தெரியும். இது தொடர்பாக சிறிதளவேதும் கருத்துமுரண்பாடு இல்லை'' என கூறினார்.

சிலமாதங்களுக்கு முன்னர் அமெரிக்க வெளிநாட்டு திணைக்களத்திற்கும், ஈராக்கிற்கு எதிரான இராணுவ நடவடிக்கையை புதுப்பிக்கவேண்டும் எனவும், மத்திய ஆசியாவில் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க அரபுநாடுகளின் அரசுகளின் ஆதரவை பாதுகாக்கவேண்டும் என்ற கொலின் பெளலின் கருத்திற்கு எதிரானதுமான பென்டகனின் கடும்போக்காளர்களுக்கும் இடையே பகிரங்கமான முரண்பாடு இருந்தது. அரபுநாடுகளின் ஆதரவுக்காக பாலஸ்தீனர்களுடனான ஒரு உடன்பாட்டினை பரிசாக வழங்கவேண்டியிருப்பது தொடர்பாக புஷ் நிர்வாகத்தினுள் இருக்கும் யுத்தவிரும்பிகள் அதிகரித்த வகையில் அமைதியற்ற நிலையை அடைந்தனர். இது இக்கருத்தினை உடையவர்களுக்கு இந்நாள், தலைநகரில் வெற்றிக்குரியதாகும்.

பெளல் தனது கருத்துக்களை கவனமாக வெளியிட்டார். அவர் ''நாங்கள் திரு.ஷரோனுக்கு என்ன செய்யவேண்டும் என கூறவில்லை. ஆனால் நாம் இதேவேளையில் எச்சரிக்கையில் இரண்டு பிரிவினருக்கும் அடுத்த, அடுத்தநாட்களில் வரும் விளைவுகளைப்பற்றி சிந்திக்கும் படி கூறினோம்'' என தெரிவித்தார். ஆனால் NBC இன் தொலைக்காட்சியின் "Meet the Press" என்னும் நிகழ்ச்சியில் அரபாத்திற்கு எதிரான தனது நிலையை வெளிப்படுத்தினார். அதில் அரபாத் பயங்கரவாதியா என கேட்கப்பட்தற்கு ''ஒரு வரலாற்றை பார்த்தால் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை காணலாம். இது எமது அனைவருக்கும் தெரியும்'' என பதிலளித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதியுயர் சாதகமான நடவடிக்கையாக புஷ் நிர்வாகம் உதவிக்கும் அபிவிருத்திக்குமான Holy Land Foundation இனது சொத்துக்களை உறையச்செய்தது. Al Aqsa International Bank உம் முதலீட்டு குழுவான Beit El-Mal Holding Company உம் ஹமாஸ் இயக்கத்திற்கு உதவியளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஷரோன் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப இத்தீர்மானமானது அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் இஸ்ரேலின் நடவடிக்கையுடன் தொடர்புபட்டது. புஷ் தொலைக்காட்சி நிருபர்களுக்கு ''பயங்கரவாதிகளுடன் வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்காவுடன் வியாபாரம் செய்யமுடியாது'' என கூறினார்.

ஷரோனினது அரசாங்கத்தினதும் அதன் ஆதரவாளனான அமெரிக்காவினதும் கவனமற்ற கொள்கையானது ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களினதும், இஸ்ரேலியர்களினதும் வாழ்க்கையை பயங்கரமான அளவுடைய சீரழிவுகளுக்கான வழியை உருவாக்குகின்றது.

கடந்தவார இறுதியில் நடாத்தப்பட்ட தற்கொலைகுண்டுத் தாக்குதலானது அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மட்டுமல்லாது அப்பாவி மக்களான பாலஸ்தீன, இஸ்ரேலியர்களையும் குழந்தைகளையும் கொன்றுள்ளது. இதனை செய்ததன் ஊடாக ஹமாஸ் மீண்டும் சியோனிச அரசியல், இராணுவ தட்டினது யுத்தவெறியர்களின் கைகளில் வீழ்ந்துள்ளது. ஆனால், இன்று நாளாந்த நடவடிக்கையாகியுள்ள பயங்கரவாத்தை அரசியல் ரீதியாக தவறாக நடாத்தப்படும் ஒரு சிலரினதோ அல்லது பேய்த்தனமானவர்களினதோ நடவடிக்கையாக கருதுவது பிழையாகும். மாறாக பயங்கரவாதத்தினை ஒரு குறிப்பிட்ட அரசியல், சமூக உறவுகளின் அடித்தளத்தில் பார்க்கவேண்டும். இது நம்பிக்கையின்மையும், மனக்கொதிப்பும், கோபமும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் மூர்க்கமாக ஒடுக்கியதனும், பாலஸ்தீன மக்களின் ஜனநாயக, சமூக, தேசிய உரிமைகளை பாதுகாக்க தேசிய முதலாளித்துவம் சாதகமான பாதை ஒன்றினை காட்ட இயலாததின் விளைவுமாகும்.

1993 ஒஸ்லோ உடன்படிக்கையின் பின்னர்கூட பாலஸ்தீனர்களுக்கு வரையறுக்கப்பட்டளவில் ஏற்றுக்கொள்ள உறுதியளிக்கப்பட்டிருந்தபோதும், ஒரு சமாதான உடன்படிக்கையை பாதுகாப்பதற்கான ஒவ்வொரு முயற்சியும் இஸ்ரேலினுள் உருவாகிய வலதுசாரி எதிர்ப்பினால் உடைந்துகொட்டியது. சியோனிச அரசாங்கம் பாலஸ்தீன மக்களின் மீதான ஒடுக்குமுறைக்கு அராபாத்தே காரணம் என திரும்பதிரும்ப வலியுறுத்தியது. ஏனெனில் அவர் முற்றாக இஸ்ரேல் இராணுவத்திலும், பொருளாதாரத்திலும் தங்கியிருக்கும் மேற்குகரையையும் காஸா கரையோரத்தையும் உள்ளடங்கிய ஒரு சாத்தியமற்றதும், மொட்டையான பிரதேசத்தை ஆளவிரும்புகின்றார் என்பதாலாகும் என குறிப்பிட்டு வந்தது.

அரபாத்தின் மேல் வைக்கப்பட்ட ஒவ்வொரு நிபந்தனைகளும், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேமை ஏற்றுக்கொள்வது, பாலஸ்தீன அகதிகளை நாடுதிரும்ப அனுமதிப்பது போன்ற சலுகைகளை இஸ்ரேல் நிராகரரித்ததும் அரபாத்திற்கு பாலஸ்தீன மக்கள் மத்தியில் எஞ்சியிருந்த அரசியல் உரிமையையும் அழித்ததுடன், அவரது அடிப்படைவாதிகளை பலமடையச்செய்தது. ஷரோன் மலைக்கோவிலான Al Aqsa விற்கு கடந்த செப்டம்பரில் ஆத்திரமூட்டும் விஜயத்தை மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட பின்னர் பதவிக்கு வந்தார். இது தற்போதைய பாலஸ்தீன எழுச்சிக்கு வழிவகுத்ததுடன் எகூட் பராக்கின் ஒரு தேசம் [One Nation] கூட்டரசாங்கத்தின் முடிவிற்கும் வழிவகுத்தது. ஆரம்பத்திலிருந்தே ஷரோனின் நோக்கம் ஒஸ்லோ உடன்படிக்கையை இல்லாதொழிப்பதும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதும், பாலஸ்தீன மக்கள் ஒரு அரசியல் அமைப்பு என்பதை அழிப்பதாகவுமே இருந்தது.

கடந்த செப்டம்பரில் உலக சோசலிச வலைத்தளம் ஷரோனின் ''திட்டமிட்ட கொலை'' நோக்கங்கள் தொடர்பாக இது அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றுள்ளதையும், மற்றும் அதன்படி பாலஸ்தீனியர்கள் மத்தியில் உள்ள தமது எதிரிகளான முக்கிய தலைவர்களை அடையாளம் கண்டு கொல்வதும், பாலஸ்தீன தேசிய இயக்கத்தின் அரசியல் கட்டமைப்பை இல்லாதொழிப்பதாகும் என குறிப்பிட்டிருந்தது.

அக்கட்டுரை மேலும் ''காம்ப் டேவிட் உடன்படிக்கையின் உடைவின் பின்னர் இஸ்ரேலிய அரசாங்கமானது இராணுவ ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டையும், பாலஸ்தீனியர்களிடமிருந்து எழும் எதிர்ப்பை எதிர்பார்த்து ஆத்திரமூட்டலையும் உருவாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதையும், இது பாலஸ்தீன அதிகாரம் மீதான தாக்குதலுக்கும் மேலதிக கொலைகளுக்குமான முன்நிபந்தனையாக பயன்படுத்தப்படும் எனவும், பராக் 2000 செப்டம்பரில் ஜெருசலேமின் பழைய நகரமான மலைக்கோவிலுக்கான ஷரோனின் கிளர்ச்சியை தூண்டும் விஜயத்தினை பாதுகாத்ததன் மூலம் அக்கொள்கைகளுக்கு ஆதரவழித்தார்'' எனவும் குறிப்பிட்டிருந்தது.

நாங்கள் மேலும் ''இப்படியான வழிகளால் இஸ்ரேல், பாலஸ்தீன நாட்டின் மீதான தனது ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்டதும், அரசியல் ரீதியாக வழிநடாத்தப்படுவதுமான போராட்டத்தை பாலஸ்தீனியர்கள் நடாத்துவதை சாத்தியமற்றதாக்குகின்றது. இவ்விடயத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலும், அரபு உலகத்திலும் உள்ள சியோனிச எதிர்ப்பு இயக்கங்களின் தலைவர்களை கடைசி முடிவாக இல்லாதொழிக்க முனைகின்றது. இஸ்ரேலிய ஆளும்தட்டினரிடம் இருந்து வரும் செய்தி தெளிவானது. இஸ்ரேலிய நாட்டினது பாதுகாப்பை ஏற்றுக்கொள்ளாத எவரும் தப்பமுடியாது'' என குறிப்பிட்டிருந்தோம்.

இதுவரை இஸ்ரேலினது கொலைக்கொள்கையானது பாலஸ்தீன தேசிய இயக்கத்தினுள் இருக்கும் அதிதீவிரவாதப் பிரிவுகளில் இருந்து அரபாத்தை அந்நியப்படுத்துவதாக இருந்தது. இதுவரையில் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் ஆளும்தட்டினரிடையே இவ்வழியானது அரபாத்தின் மீது அழுத்தத்தை பிரயோகிப்பதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதபோராட்டத்தை வழிநடாத்துவோரை ஒடுக்குவது என விவாதிக்கப்பட்டது. எவ்வாறிருந்தபோதும், அரபாத்தை குறிவைப்பதன் மூலமும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை அதிகரிக்கச் செய்வதன் மூலமும் மேற்குக்கரையிலும், காஸா பிரதேசத்திலும் இராணுவ தலையீட்டை நியாயப்படுத்தலாம் என்ற கோரிக்கையாலான வேறு குரல்கள் அதிகரித்தளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.