World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

General election presages sea change in British politics

பொதுத் தேர்தல் பிரித்தானிய அரசியலில் பிரமாண்டமான மாற்றத்துக்கு முன்னெச்சரிக்கை செய்கிறது

Statement of the Socialist Equality Party of Britain
14 June 2001

Use this version to print

தொழிற் கட்சி அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருந்து கொண்டுள்ளது போல் தோன்றினாலும் தொழிற் கட்சி இரண்டாவது ஆட்சிக் காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டமை பிரித்தானியாவிலான அரசியல் உறவுகளில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டுபண்ணுவதற்கான மணியை இசைத்துக் கொண்டுள்ளது. பிரதமர் ரோனி பிளேயரும் வர்த்தக சமூகத்தின் விருப்புக்குரிய கட்சியான புதிய தொழிற் கட்சியும் (New Labour) ஒரு மக்கள் ஆணையில்லாமல் ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. இது நலன்புரி அரசையும் பொதுச் சேவைகளையும் ஒழித்துத் தள்ள வாக்குறுதி அளித்துள்ளது.

பிரித்தானிய தேர்தல் முறையானது தேசத்தின் அரசியல் அரசைப் பற்றிய ஒரு திரிக்கப்பட்ட சித்திரத்தை எப்போதும் தருகின்றது. ஒரு கட்சியினால் வெற்றி கொள்ளப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை பெருமளவுக்கு மத்தியதர வர்க்கத்தின் ஒரு குறுகிய தட்டினரிடையேயான பெயர்ச்சிகள் மூலமே இடம்பெறுகின்றது. குறிப்பாக முக்கிய எல்லைத் தொகுதிகளில் இது இவ்வண்ணம் நடைபெறுகின்றது. கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் இது சிறப்பாக இங்ஙனம் விளங்கியது. தொழிற் கட்சியின் 42 சதவீத வாக்குகள் அதற்கு வெஸ்ட்மினிஸ்டரில் (Westminster) 64 சதவீதமான ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தது. இதே சமயம் டோரி (Tories) களுக்கு (கன்சர்வேடிவ் கட்சி) கிடைத்த 33 சதவீதம் அதற்கு 26 சதவீத ஆசனங்களையும் லிபரல் ஜனநாயகவாதிகள் 19 சத வீக்குகளைப் பெற்று ஆசனங்களில் 8 சதவீதத்தையும் தட்டிக் கொண்டனர்.

இந்த தேர்தலுக்கு முன்னதாக பிளேயர் தொழிற் கட்சியை அவர்களின் ஒரு இயற்கையான இல்லமாக ஆதரிக்கச் செய்யும் விதத்தில் "ஒரு தேசம் பழமைவாதிகள்" (One Nation Conservatives) என்பதற்கான தனது வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார். இதுவே தொழிற் கட்சிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. கட்சி மத்தியதர வர்க்கத்தின் செல்வாக்கு வாய்ந்த தட்டினரிடையே ஆதரவைத் திரட்டிக் கொண்டதால் இது இடம் பெற்றது. தொடர்பு சாதனங்களைப் பொறுத்தமட்டில் தொழிற் கட்சி தேசிய தினசரியில் பத்திரிகைகளில் 91 சதவீதத்துக்கும் அதிகமானோரின் ஆதரவில் சுருட்டிக் கொண்டது. வெளியீட்டு எண்ணிக்கையிலும் ஆதரவிலும் இக்கொனோமிஸ்ட் (Economist), பினான்சியல் டைம்ஸ் (The Financial Times), டைம்ஸ் (Times) போன்ற மாஜி முன்னணி டோரிகளின் ஆதரவு தொழிற்கட்சிக்கு கிடைத்தது.

இந்த தேர்தலின் முக்கிய அம்சம் என்னவெனில் பெருமளவிலானோர் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டு இருந்ததேயாகும். வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 59 சதவீதத்தினர் வாக்களித்தனர். 1997ல் இது 71 சதவீதமாக விளங்கியது. இம்முறை தொழிற் கட்சி 10.74 மில்லியன் வாக்குகளை வெற்றி கொண்டது. இது 1997ல் பெற்றதை விட 30 இலட்சம் குறைவானதாகும். 1992ல் கட்சி தோல்வி கண்ட போது நீல் கினொக் பெற்ற 11.56 மில்லியன் வாக்கை விட இது குறைவானதாகும். தொழிலாளர் வர்க்க மேலாதிக்கம் கொண்ட பகுதிகளில் தொழிற் கட்சி பெற்ற வாக்குகளின் பங்கு வீழ்ச்சி கண்டு போயிற்று. பெரும் நகர்ப்புறங்களில் பல மில்லியன் கணக்கானோர் வாக்களிக்கச் செல்லவில்லை. வாக்காளர்களின் எண்ணிக்கையில் 25 சதவீத ஆதரவை வெற்றி கொண்டது என்பதன் அர்த்தம், புதிய தொழிற் கட்சிக்கு (New Labour) வாக்களித்தவர்களைக் காட்டிலும் அதிகமானோர் வாக்களிக்காமல் இருந்து விட்டனர் என்பதேயாகும்.

மொத்த வாக்குகள் சமூக வர்ணப் பட்டிக்கு குறுக்காக வீழ்ச்சி கண்டது. வறிய தொழிலாளர் வர்க்க பகுதிகளில் வாக்குகள் சராசரியாக 12.8 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது. ஆனால் செல்வந்த பகுதிகளில் கூட இது 12.1 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டது. எல்லை தொகுதிகளில் 11 சதவீத வாக்குகள் வீழ்ச்சி கண்டன.

1918ன் பின்னர் படுமோசமான வாக்களிப்பாக இடைக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்ட போதிலும் இந்த வராற்று ரீதியான ஒப்பீடும் கூட நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. பேராசிரியர்கள் பட்ரிக் டன்லெவி, ஹெலன் மார்கிரெட், ஸ்ரூவாட் வையர் ஆகியோர் ஜூன் 12ம் திகதிய கார்டியன் (Guardian) பத்திரிகையின் கடிதங்களுக்கான பக்கத்தில் எழுதுகையில் "இது அதைவிட மோசமானது. இது ஐக்கிய இராஜ்யத்தில் (UK) ஆகக் குறைந்த வாக்களிப்பு இதுவேதான். ஏனெனில் 1918ல் ஆண்களில் 40 சதவீதமானவர்கள் முதற்தடவையாக வாக்குரிமையைப் பெற்றார்கள். அவ்வாறே சில பெண்களும். யுத்தம் காரணமாக மக்கள் சுற்றிலும் பெயர்ந்து சென்று விட்டார்கள். ஆதலால் புதிய மொத்த வாக்காளர்களில் சுமார் 60 சதவீதத்தினர் வாக்களிப்புக்கு அடியோடு பழக்கப்படாதவர்கள்."

"1918ம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஆதலால் போலியானது. எமது வரலாற்றில் நாம் லிபரல் ஜனநாயகமாக பார்வையாளருக்கு நேரே கீழாக சுவர்க்கத்தில் இருந்து கொண்டுள்ளோம்."

குறைந்த அளவிலான வாக்களிப்பு ஆட்சிப்பீடம் ஏறும் அரசாங்கத்தை சமரசம் காண செய்யும் என்பதை இனங்காண்பதுடன் மட்டுமன்றி அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் மக்களை தமக்கு வாக்களிக்குமாறு விடுத்த வேண்டுகோள்களின் இறுதிநாள் தேர்தல் பிரச்சாரத்தின் முழு அரசியல் போக்கையும் கணக்கில் கொண்டாக வேண்டும். பிளேயர் வாக்காளர்களை வாக்களிக்கச் செல்லுமாறு தூண்டினார். மக்கள் எவ்வாறு வாக்களிக்கிறார்கள் என்பதையிட்டு பிரச்சினை இல்லை என பிளேயர் கூறிக் கொண்டார். அவர்கள் செய்ய வேண்டியது அதுவே என்றார். கடந்த காலத்தில் மக்கள் "வாக்களிக்கும் உரிமைக்காக உயிரைப் பலிகொடுத்தனர்" என அவர் கூறினார். இன்றைய தலைமுறையினர் இந்த அரும்பெரும் உரிமையைக் கட்டிக் காக்க தமது முன்னோடிகளுக்கு கடமைப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் வாக்குரிமைக்காகப் போராடியது யார்? அல்லது நெல்சன் மண்டேலா இன ஒதுக்கலாளர்களுக்கு எதிராக கறுப்பு ஆபிரிக்கர்களின் போராட்டத்தை விளக்கத் தள்ளப்பட்டிருக்கையில் பிரித்தானிய தொழிலாளர் வர்க்கத்தின் வரலாறும் ஜனநாயகத்துக்கும் சமத்துவத்துக்குமான அதன் போராட்டமும் ஒரு மூடிய புத்தகமாக விளங்கியது ஏன்?

1830 பதுகளில பட்டய இயக்கத்தின் (Chartism) தோற்றத்தோடு சொத்துடமை வர்க்கங்களுக்கு எதிராக உழைக்கும் மக்களின் சமூக, அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டமாக விளங்கியது. ஆரம்பத்தில் அதுவே வாக்குரிமையை விஸ்தரிக்கும் போராட்டத்தினால் உந்தப்பட்டது. பட்டய இயக்கம் ஒரு பரந்த அரசியல் இயக்கமாக விளங்கியது. ஒரு புரட்சிகர கன்னையும் ஒரு லிபரல் ஜனநாயக கன்னையையும் உள்ளடக்கியதோடு குட்டி முதலாளித்துவ பாட்டாளி வர்க்க சக்திகளையும் சேர்த்துக் கொண்டது. இதனது பெரிதும் தீவிரமான மூலகங்கள் வாக்குரிமையை வெற்றி கொள்வதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் உலகில் ஒரு அரசியல் சக்தியாக விளங்கும் வாய்ப்பு உள்ளதைக் கண்டன. பட்டய இயக்கத்தினர் (Chartisht) அரசின் கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர். மத்தியதர வர்க்கத்தின் சில பிரிவினர்களுக்கு வரையறுக்கப்பட்ட வாக்குரிமை விஸ்தரிக்கப்பட்டதோடு இறுதியில் இயக்கம் இனப்பெருக்கமின்றிச் செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான உழைக்கும் மக்களின் போராட்டம் 60 ஆண்டுகளின் பின்னர் தொழிற் கட்சியின் சிருஷ்டிப்பில் ஒரு பெரும் காரணியாகத் தோன்றியது. மீண்டும் ஒரு முறை அரசியல் நடவடிக்கை முதலாளிகளுக்கு எதிராக தனது நலன்களை அடைந்து கொள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஆரம்ப நடவடிக்கைகளால் தீர்மானம் செய்யப்பட்டது. தொழிற் சங்கங்கள் தமது அங்கத்தவர்களின் நெருக்குவாரம் காரணமாக அவை முன்னர் லிபரல்களுக்கு வழங்கி வந்த ஆதரவைத் துண்டித்துக் கொள்ளத் தள்ளப்பட்டன. தொழிற் சங்க எதிர்ப்பு, வேலை நிறுத்த எதிர்ப்பு சட்டங்களை கொண்ட கட்டுமரத் தெப்பங்களை எதிர்ப்பதாக அவர்கள் கோரி வருகின்றனர். தொழிற்கட்சி அமைக்கப்பட்டது தொழிற்சங்கவாதிகளின் அரசியல் கன்னையாகவாகும். ஆனால் இதனது வேலைத் திட்டம் ஒரு வசதிவாய்ப்புக்கள் படைத்த தொழிலாளர் பிரபுவின் (Labour Aristocracy) நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஆளும் வர்க்கத்துக்கான தொழிலாளர் அத்தியாவசிய சேவையானது (Labour essential service) தொழிலாளர் வர்க்கத்துக்கான சமூக, அரசியல் விடுதலை படிப்படியான பாராளுமன்ற சீர்திருத்த வழிமுறை மூலமே வந்தடையும் என வலியுறுத்துவதாக விளங்கியது. தொழிற்கட்சியின் முன்நோக்கு, வர்க்கப் போராட்டத்தை பாராளுமன்ற நடவடிக்கைகளுடன் கூட்டாக இணைந்த போர்க்குனம் கொண்ட கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு மட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் முதலாளிகளுடன் (தொழில் கொள்வோர்-Employers) ஒரு பெரிதும் சாதகமான முறையில் இணைந்து கொள்வதாக விளங்கியது. சோசலிசத்தை ஸ்தாபிதம் செய்வது என்பது பரிணாம வார்த்தைகளின் அர்த்தத்தில் நோக்கப்பட்டது. ஒரு நீண்ட நெடும் காலப்பகுதிக்கு உரியதாக கணிக்கப்பட்டது.

இந்த வரையறைகளுக்கு இடையேயும் தொழிலாளர் வர்க்கம் வாக்களிப்பை ஒரு தனித்துப் பிரித்த ஒரு உரிமையாகக் கொண்டது இல்லை. ஆனால் தமது நலன்களை காப்பதற்கான ஒரு கருவியாகக் கொள்ளப்பட்டது. தமது கட்சி என அவர்கள் கணித்துக் கொண்டுள்ளதை ஆட்சியில் வைத்திருப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியும் என கணித்தனர்.

தொழிற் கட்சி அடியோடு ஒரு பெரும் வர்த்தகர் கட்சியாக பரிணாமம் கண்டதும் அரசியல் போக்கில் இருந்து பரந்த உழைக்கும் மக்களில் இருந்தும் அன்னிநியப்பட்டுப் போனதும் இதனுடன் நெருக்கமாக உறவு கொண்டுள்ளன. சமூக சமத்துவமின்மை முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதிகரித்த எண்ணிக்கையிலானோர் கஷ்டங்களையும் நிதி பாதுகாப்பின்மைக்கும் முகம் கொடுக்கின்றனர். பெரும் பணக்காரர்களிடையே முக்கிய கட்சிகள் ஆதரவுக்கு கண் வைத்துக் கொண்டுள்ள வேளையில் தொழிலாளர் வர்க்கம் அரசியல் ரீதியில் வாக்குரிமை இன்றிச் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வர்க்கம் அதனது சுயாதீனமான நலன்களைக் காக்க எந்த வழியும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தொகுதிகளின் எண்ணிக்கை அர்த்தத்தில் தேசிய ரீதியில் கணிசமான அளவு வெற்றி கண்டு கொள்ள முடிந்த ஒரே கட்சி லிபரல் ஜனநாயகவாதிகள். ஆனால் அதன் வாக்குகளிலான இரண்டு சதவீத அதிகரிப்பு பெருமளவு சனத்தொகையினை நோக்கிச் செல்லும் அரசியலின் எந்த ஒரு பெயர்ச்சியையும் கொண்டிருக்கவில்லை. தேசிய சுகாதார சேவையை ஒழிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து போட்டியிட்ட இரண்டு சுயேட்சை வேட்பாளர்களுக்கு கிடைத்த பெருமளவு வாக்கானது, ஒரு பதிலீட்டு முன்நோக்கை கடைப்பிடிப்பதற்கு மாறாக அரசியல் விரக்தியாக வெளிப்பட்டது.

பொதுவில் சோசலிசக் கூட்டு (Socialist Alliance) ஸ்கொட்லாந்து சோசலிச கட்சி (Scotland Socialist Party) சோசலிச தொழிற் கட்சி (Socialist Labour Party) போன்ற தீவிரவாதக் குழுக்கள் சிறிய எண்ணிக்கையிலான வாக்குகளையே பெற்றன. தொழிற் கட்சியை (Mark 2) உருவாக்கி "பழைய தொழிற் கட்சி" பெறுமானங்களுக்கு திரும்புவோம் என்ற அவர்களின் அழைப்பினால் நம்பிக்கை கொண்டுள்ளோர் சிலரே. இந்த அடிப்படையில் ஒரு புதிய தொழிலாளர் வர்க்கக் கட்சியை கட்டியெழுப்புவது என்பது சாத்தியம் அல்ல.

தொழிற் கட்சி ஒரு சீர்திருத்தவாத கட்சி என்ற கருத்து, தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு கணிசமான பகுதியினருக்கு ஒன்றில் ஒரு நீண்டகால நினைவு அல்லது அவர்களின் பெற்றோர் அல்லது மூதாதைகள் அதைப் பற்றிச் சொல்லும் ஏதோ ஒன்றாக உள்ளது. பிளேயரும் புதிய தொழிற் கட்சியும் (New Labour Party) 1970பதுகளுக்கு நீண்டு செல்லும் ஒரு அரசியல் போக்கினை பூர்த்தி செய்வதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. அன்றில் இருந்து தொழிற் கட்சி அதிகாரத்துவத்தின் உள்ளேயான சக்திகள் தொழிலாளர் வர்க்கத்துடனான கட்சியின் வரலாற்றுத் தொடர்பை உடைத்து எறிவதில் ஈடுபட்டுள்ளன. தொழிற் கட்சியை அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஒரு பிரித்தானிய பாணியில் கண்டுபிடிக்க அல்லது ஐரோப்பிய பாணியிலான 'மக்கள் கட்சியை" (Peoples Party) கண்டுபிடிக்க முயற்சிக்கின்றன.

அரசியல் ரீதியில் படிப்பறிவு மிக்க தொழிலாளர்கள் இது இடம்பெற்று விட்டுள்ளதைக் காணலாம். ஆனால் அவர்களது பழைய கட்சிக்கு ஏற்பட்ட பிழை என்ன? இல்லையேல் ஏன் அவர்கள் புதிய ஒன்றை அமைக்க முயற்சிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டாக வேண்டும். பல்வேறு தீவிரவாதக் குழுக்களும் பாரதூரமானதாகக் கொள்ளாத சுருக்கமான விடயம் இதுவேயாகும்.

உத்தியோகபூர்வமான அரசியலில் இருந்து விலகி நிற்பது ஒரு முற்போக்கான அபிவிருத்தியை பிரிதிந்தித்துவம் செய்வதாக நம்புவது ஒரு பெரும் தவறாகும். அந்த அளவுக்கு இந்த அரசியல் மாற்றங்களின் பேரிலான தொழிலாளர் வர்க்கத்தின் அக்கறை பெரிதும் சாதகமானதாக விளங்கும். சகல கட்சிகளையும் ஒரே கட்சியாக அவர்கள் கணிப்பதால் பலர் வாக்களிப்பதற்கு நியாயம் இருப்பதாக காணவில்லை. தொழிற் கட்சிக்கு வாக்களித்தவர்களிடையேயான மனோநிலையானது 18 வருட ஆட்சிக் காலத்தில் டோரிகள் இழைத்த சமூக அநீதிகளை ஒழிப்பதற்கு பிளேயருக்கு தயக்கத்துடன் ஒரு கடைசி சந்தர்ப்பம் வழங்குவதாக உள்ளது.

மேலும் இரண்டு தேர்தல் தொகுதிகளில் 11000 வாக்குகளை வென்ற பிரித்தானிய தேசியக் கட்சிக்கு ஒல்ட்ஹாமில் கிடைத்த வாக்குகள் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு நனவான அரசியல் அக்கறை இல்லாது போகுமிடத்து பாசிசக் குழுக்கள் சமூகப் பதட்டங்களை தமது சொந்த நோக்கங்களுக்காக சுரண்டிக் கொள்ளலாம்.

ஆனால் அத்தகைய தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற முடிவுக்கு எவரும் வரமுடியாது. மாறாக பொது அரசியல் மனோநிலையானது பெருமளவிலான நியாயத்துக்கும் சமூக நீதிக்குமான ஒரு விருப்பின் ஆரம்பத்தினால் பண்பாக்கம் செய்யப்படுகின்றது. இடதுசாரி புறத்திலான இடைவெளி தொடர்ந்தும் நிரப்பப்படாததாக திறந்து இருந்து வரும் வரையுமே வலதுசாரிகள் மேலாதிக்கம் செலுத்த முடியும்.

உலகப் பொருளாதாரத்திலான வீழ்ச்சியும் பிரித்தானியா ஐரோப்பிய தனி நாணயத்துக்கும் பிளேயரின் அரசாங்கத் துறை தனியார்மயத்துக்கும் இயைந்து போக வேண்டுமா என்பதன் பேரிலான பிளவும் ஒரு பெரும் அரசியல் கிளர்ச்சிக்கான கூட்டு பரிகாரமாக இருந்து கொண்டுள்ளன.

இந்தச் சூழ்நிலையின் கீழ் உத்தியோகபூர்வ அரசியல் மாளிகை, சனத்தொகையின் பெரும்பான்மையினரிடம் இருந்து பிளவுபட்ட நிலையில் வர்க்கப் போராட்டத்தை பழைய வடிவங்களுள் உள்ளடக்கி வைக்க இலாயக்கற்றதாக விளங்கும் என்பதை நிரூபிக்கும். தொழிற் கட்சியை மீளப் புதுப்பாணியாக்கிக் கொள்ளும் முதலாளி வர்க்கத்தின் முயற்சிகள் அதனது அழிவுகளை நிரூபிக்கும். பிரித்தானிய அரசியலில் ஒரு புதிய சகாப்தம் உதயமாகிக் கொண்டுள்ளது. அதில் வாழ்க்கைத் தரங்களையும் ஜனநாயக உரிமைகளையும் காக்க முயற்சிக்கும் தொழிலாளர்கள் சோசலிச சமத்துவக் கட்சியினால் (Socialist Equality Party) முன்வைக்கப்பட்டுள்ள சோசலிச, அனைத்துலக முன்நோக்கைச் சூழ அணிதிரள வேண்டும்.