World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

International condemnation of Israeli settlements dominates events in Middle East

சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலின் குடியேற்றம் மத்திய கிழக்கின் நிகழ்வுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

By Chris Marsden
19 May 2001

Use this version to print

கடந்த கிழமைகளாக பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆத்திமூட்டல் அதிகரித்துள்ளது.

இம்முரண்பாடுகளின் மத்தியில் இஸ்ரேல் முதல்தடவையாக மேற்கு கரைப்பகுதியையும் காஸா பிரதேசத்தையும் தாக்குவதற்காக F-16 ரக யுத்த விமானங்களை பாவித்துள்ளது. இதனால் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். மேற்கு கரையின் நகரமான நாபுஸ் இலுள்ள பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 54 பேர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன ஜனாதிபதி பாதுகாப்புபடையின் றமல்லாவிலுள்ள [Ramallah] விடுதி ஒன்றின் மீதான ஏவுகணைத் தாக்குதலில் 14 பேர் காயமடைந்ததுடன், ஒருவர் இறந்துமுள்ளார். காஸா பிரதேசத்தின் மீதான ஆகாயத் தாக்குதல்களில் மேலும் 20பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலிய பிரதமரான ஆரியல் ஷரோனின் பேச்சாளர் ஒருவர் இத்தாக்குதல்களை, முதல் நாள் ரெல் அவீவ் இற்கு வடக்கே உள்ள கரையோர நகரமான நெற்றன்யாவில் உள்ள ஜனநெருக்கமான கடைத்தொகுதி மீது கமாஸ் இயக்கத்தின் தற்கொலை குண்டுத்தாக்கதல்களுக்கான பதிலடி என நியாயப்படுத்தியுள்ளார். இத்தாக்குதலில் 6 இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 45 பேர் காயமடைந்தனர். மேற்குகரையின் நகரமான றமல்லாவிற்கு அருகாமையில் நடந்த இன்னுமொரு தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய குடியிருப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் காயமடைந்தனர்.

இத் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் ஒரு கிழமையாக பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடாத்திய ஆத்திரமூட்டும் தாக்குதல் நடவடிக்கைகளின் பின்னரே நிகழ்ந்தது. கடந்த வியாழக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தென் காஸா கரையோர பாலஸ்தீன நகரமான Khan Yunis மீது இயந்திரத்துப்பாக்கி பிரயோகம் செய்ததில் நால்வர் காயமடைந்தனர். டாங்கிகளும் புல்டோசர்களும் Rafah அகதி முகாமுள் புகுந்து விவசாய நிலங்களை தரைமட்டமாக்கியதுடன், செல் வீச்சிலும் ஈடுபட்டன.

இதற்கு முந்திய மாலையில் காஸா நகரத்திற்கு அண்மையிலுள்ள Jabaliya அகதிமுகாமின் பாதுகாப்பு தடைமுகாம்மீது வான்ஊர்திகள் றொக்கட் தாக்குதலை நடாத்தி 10 பேரை காயமடையச் செய்தது. மேற்குகரையிலுள்ள ஜெனின் நகரத்தின் மீது வான்ஊர்திகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி பிரதான பொலிஸ் நிலையத்தின் மின்சாரத்தை துண்டித்தன.

Gush Katif குடியேற்றத்தினுள் இஸ்ரேலிய படைகள் புகுந்து பலமாடிக் கட்டிடமொன்றை தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்தன. புல்டோசர்களின் உதவியுடன் டாங்கிகள் சகிதம் வடக்கு காஸாவின் நகரமான Beit Hanoun இனுள் புகுந்த படையினர் பழ மரங்களை பிடுங்கி எறிந்தனர்.

1948 ஆம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்ட தினத்தை குறிக்கும் Al-Naqba ஞாபகார்த்த நாளில் மேற்குகரையிலும் காஸாவிலும் இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஊர்வலங்கள் செவ்வாய்கிழமை நிகழ்ந்தபோது இஸ்ரேலிய படையினர் 4 பேரை கொன்றனர். பிரெஞ்சு தொலைக்காட்சி நிருபரான Bertrand Aguirre நெஞ்சில் சுடப்பட்டபோதும், குண்டுபாதுகாப்பு கவசத்தால் படுகாயங்களுடன் உயிர்தப்பினார்.

திங்கட்கிழமை மேற்குக்கரையில், 5 பாலஸ்தீன இராணுவ பொலிசாரை இஸ்ரேலிய படைகள் சுட்டுக்கொன்றன. இதில் தப்பிய Ahmedal-Najjar தாம் எந்தவொரு ஆத்திரமூட்டலில் ஈடுபடாதபோதும் கொல்லப்பட்டதாக கூறினார். இஸ்ரேலிய படை உயர்அதிகாரி Shaul Mofaz தமது படையினர் கொல்லும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை எனக்கூறி, விசாரணைக்கு உத்தரவாதமளித்துள்ளார். இக்கொலை ''உளவுப்படையின் பிழையின்'' விளைவால் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றது.

கடந்த செப்டம்பரில் மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து 430 இற்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 87 இஸ்ரேலியர்களும், 13 இஸ்ரேலிய-அராபியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீன கலாச்சார, தகவல்துறை அமைச்சரான Yasir Abed Rabbo கடந்தகிழமை நிகழ்வுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ''வன்முறைகளை அதிகரிப்பதன் மூலம் இராஜதந்திர நடவடிக்கைகளிலிருந்து கவனத்தை திசைதிருப்பி, எந்தவொரு பேச்சுவார்த்தையும் பொருத்தமற்ற நேரத்தில் செய்யப்படும் உடன்பாடாக காட்ட முனைவதே இஸ்ரேல் பிரதமரான ஷரோனின் மூலோபாயம்'' என தெரிவித்துள்ளார்.

இவ்வகைப்படுத்தலானது நியாயமானதாகவே தோன்றுகின்றது. முக்கியமாக இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையின் ''காரணங்களை கண்டுகொள்ளும்'' குழுவினது முன்னாள் அமெரிக்க செனட்டரான George Mitchell's வெளியிட்ட அறிக்கை மீதான இஸ்ரேலிய ஆழும்வட்டாரத்தினதும், தொலைத்தொடர்பு சாதனங்களினதும் ஆத்திரம் இதனை எடுத்துக்காட்டுகின்றது. எகிப்தின் Sharm el-Sheikh இல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உச்சிமாநாட்டினை தொடர்ந்த ஆணைக்குழுவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு, பாதுகாப்பு உயர்பிரதிநிதியான ஜாவியர் சோலானாவும் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிக்கை பாலஸ்தீனர்களுக்கு சாதகமாக காட்டிக்கொள்ளாவிட்டாலும், அது ''தற்போதுள்ள குடியேற்றங்களின் 'இயற்கையான வளர்ச்சி' உட்பட சகல குடியேற்றங்களை நிறுத்தி, இஸ்ரேலை ''நம்பிக்கையை கட்டியெழுப்ப உதவ'', தூண்டுகின்றது.

34 வருடங்களுக்கு முன்னர் எகிப்துக்கும் ஜோர்டானுக்கும் எதிரான 6 நாள் யுத்தத்தினை தொடர்ந்து சர்வதேச சட்டங்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்குகரையிலும் காஸா பிரதேசத்திலும் யூத குடியேற்றங்களை உருவாக்க ஆரம்பித்தது. இதன் இருப்பினை இவை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் அல்ல மாறாக ''பெறுமதியற்ற'' இடத்தில் நிறுவப்பட்டதாக கூறி நியாயப்படுத்தி வருகின்றனர். ஷரோன் இக்கொள்கைகளுடன் மிகவும் இணக்கமானவர். இவர் மெனாசிம் பெகினின் கீழ் விவசாயத்திற்கும், குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சரவை குழுத்தலைவராக இருக்கையில் இதன் விரிவாக்கத்தினை முன்வைத்தவராவார்.

1994 இல் இஸ்ரேல்-பாலஸ்தீன உடன்படிக்கை கையெழுத்து வைக்கப்பட்டதிலிருந்து பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேல் குடியேற்றகாரர்களின் தொகை 72% ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 200.000 குடியேற்றவாசிகள் மேற்குக்கரை, காஸா பிரதேசத்தில் வாழ்வதாக கணிப்பிடப்பட்டுள்ளது. அக்குடியேற்றங்கள் ஆயுதம் தரித்த இஸ்ரேலின் வெளிமுகாம்களாக இயங்குகின்றன. காஸாவில் இவர்கள் வழமான நிலத்தையும், கடல்கழிமுகத்தையும் ஆக்கிரமித்துள்ளதுடன், மேற்குக்கரையை துண்டுகளாக பிரித்துள்ளதன் மூலம் பாலஸ்தீனர்களை ஒரு தொகை இஸ்ரேலிய சோதனை முகாம்களூடாக செல்ல நிர்ப்பந்தித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டளவில் உலகின் யூதமக்கள் அனைவரும் இஸ்ரேலில் வாழக்கூடியதாக இருக்கும் என கூறியுள்ளதன் மூலம் அவர் குடியேற்ற கொள்கையை கைவிடப்போவதில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. முன்னாள் தொழிற்கட்சி பிரதமரான எகூட் பராக் 90% மேற்குகரை, காஸா உள்ளடங்கலாக பாலஸ்தீனர்களுக்கு கூடிய சலுகைகளை வழங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஷரோன் ஜெருஸலேமினை இஸ்ரேல் வைத்திருக்கவேண்டும் எனவும், தற்போது பாலஸ்தீனர்களிடம் இருக்கும் மேற்குக்கரையில் 42% மட்டும் வைத்திருக்க அனுமதிக்கப் போவதாக கூறியுள்ளார்.

அரசாங்கம் குடியேற்றத்திற்கு உதவிமானியங்கள் வழங்கவும், இஸ்ரேலிய குடியேற்றக்காரர்களுக்காக பாலஸ்தீன கிழக்கு ஜெருஸலேமிற்கு செல்லும் ''குறுக்கு'' பாதை ஒன்றையும் அமைக்க $375 மில்லியன் செலவிட திட்டமிட்டுள்ளதாக பத்திரிகை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

George Mitchell's வெளியிட்ட அறிக்கை ஷரோனை பின்னடிக்கவைத்துள்ளது. எவ்வாறிருந்த போதிலும் மே மாதம் 11 ம் திகதி அமெரிக்க அரசதிணைக்கள அதிகாரி ஒருவர் ''இஸ்ரேலிய அதிகாரிகள் அவ்வறிக்கை தொடர்பாக [$375 மில்லியன் நிதியுதவி] அது பிழையானது எனவும் தாம் அது தொடர்பாக விசாரிக்க அறிவித்துள்ளதாகவும்'' தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் உடனடி பிரதிபலிப்பு இருவகைப்பட்டது. ஒரு பக்கத்தில் அது பாலஸ்தீனியர்கள் மீதான ஆத்திரமூட்டல்களை அதிகரித்துள்ளதுடன், மறுபுறத்தில் வெளிநாட்டு அமைச்சரான சிமோன் பெரஸ் இனை ''இயற்கை வளர்ச்சி'' இன் கீழ் மேலதிக குடியேற்றத்தின் விரிவாக்கத்தை நியாயப்படுத்த கூறியுள்ளனர்.

பாராளுமன்றத்தின் தொழிற்கட்சி அங்கத்தவரும் நோபல் பரிசு பெற்றவருமாகிய பெரஸ், லிகுட் கட்சியின் யுத்த நோக்கங்களுக்கு ஒரு இடதுசாரி சாயம் பூசுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றார். மே மாதம் லிபரல் பத்திரிகையான Haaretz இற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் இஸ்ரேல் தனது ''உயிர்வாழ்விற்கான போராட்டதினுள்'' இறுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்தகாலத்திலும் இவ்வாறான நிலைமைகள் இருந்தன. ஆனால் அப்போது அனைவரும் அணிதிரண்டிருந்தனர், இன்றும் அனைவரும் அணிதிரளவேண்டும் '' எனவும் குறிப்பிட்டார்.

பெரஸின் கடமை பாலஸ்தீனர்களுக்கு மேற்குநாடுகள் எதுவும் உதவி செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாகும். அவர் மேலும் ''குடியேற்றங்களினால்தான் பயங்கரவாதம் உருவாகியுள்ளதாக அவர்கள் எங்களுக்கு கூறக்கூடாது. பயங்கரவாதத்திற்கு எந்தவித நியாயப்படுத்தலோ அல்லது மன்னிப்போ இருக்ககூடாது என்பது முக்கியம். இதற்காகத்தான் நான் இதனை விளங்கப்படுத்த ஒரு இடத்திலிருந்து மற்றைய இடத்திற்கு பைத்தியம் பிடித்தவன்போல் ஓடித்திரிகின்றேன்'' என தெரிவித்தார்.

பெரஸ், அமெரிக்காவை ஒரு உறுதியான கூட்டாக கருதுகின்றார். ஆனால் ''ஐரோப்பாவில் இது இலகுவானதல்ல. இங்கு அவர்கள் குடியேற்றத்தை பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதை நம்புகின்றார்கள். இது அமெரிக்காவிற்கும் நிகழ்ந்துவிட நாம் அனுமதிக்ககூடாது'' எனவும் தெரிவித்துள்ளார். அவர் இஸ்ரேலியர்களாலும் பாலஸ்தீனர்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமன்பாட்டை கண்டுபிடிக்க உத்தரவாதமளித்துள்ளார். ''அகராதி மிகப்பெரியது'' என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தபோதிலும் இக்குடியேற்றத்தின் உண்மையான உள்ளடக்கத்தை பெரஸால் மறைக்கமுடியாதுள்ளது. வியாழக்கிழமை மேலதிக ஆச்சரியம் ஒன்று நிகழ்ந்தது. இப் பிரதேசத்திலுள்ள International Committee of the Red Cross [ICRC] இன் தலைவரான Rene Kosirnik ''இக்குடியேற்ற கொள்கையானது மனிதாபிமான சட்டங்களுக்கு இணங்க ஒரு யுத்தக் குற்றமாகும்'' என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இஸ்ரேல் குடியேற்றங்களை சூழ்ந்துள்ள நிலங்களை மேலும் பறிப்பதை நிறுத்திக்கொள்ளும் எனவும், தற்போதுள்ள எல்லைகளுக்குள் புதிய கட்டிடங்களை கட்டுவது தொடர்பாக கடுமையான கொள்கையை கடைப்பிடிக்கும் என பெரஸ் உத்தரவாதமளித்தார். தொலைக்காட்சிக்கு அவர் ''இஸ்ரேல் குடியேற்றங்களை விஸ்தரிக்க விரும்பவில்லை எனவும், நாங்கள் இந்நிலங்களை குடியேற்றங்களுக்கு சுரண்டிக்கொள்வதாக ஐயுறவிற்கு உள்ளாகின்றோம். ஆனால் இது எங்களது நோக்கமில்லை'' என தெரிவித்தார்.

இவை அனைத்தும் வெறும் வார்த்தைகளாகும். முதலாவதாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் வெறுமையாக இருக்கும்போது புதிய கட்டிடங்கள் தேவையில்லை. இரண்டாவதாக ஒரு சமாதான தீர்வு இல்லாது தற்போது இருக்கும் குடியேற்றங்களை பராமரிக்கமுடியாது. மூன்றாவதாக லிகுட் கட்சியினர் இவ்வாக்குறுதிக்கு மதிப்பளிக்கும் நோக்கமில்லை. அதிகாரம் இல்லாத இக்கட்சியின் அமைச்சரான Danny Naveh ''முதலாவதாக தற்போதுள்ள குடியேற்றங்களை கட்டுவதை நிறுத்துவது நிகழமுடியாததொன்று, இரண்டாவதாக பாலஸ்தீனியர்களின் வன்முறைக்கு முடிவுகட்டாமல் இதை நிறுத்தமுடியாது'' என பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார்.

முக்கிய பாலஸ்தீன பேச்சுவார்த்தையாளரான Saeb Erekat பெரஸின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அவர் B.B.C இற்கு ''நாங்கள் 'நிறுத்துவது' என்ற வார்த்தைகளை கேட்கவில்லை. நாங்கள் 'ஏமாற்றுதல்' என்ற விளையாட்டான [இஸ்ரேலியர்களுடன்] மேலும் தொடர்வீட்டு கட்டிடங்களை கட்டுவது என்ற, அதாவது குடியேற்றங்களை தொடருவதாக கூறுவதையே கேட்டுள்ளோம். இது இஸ்ரேலின் விரிவுபடுத்தலாகும். இது தான் உண்மையான பிரச்சனை'' என தெரிவித்தார்.

பெரஸின் கருத்துக்கள் முக்கியமாக சர்வதேச நலன்களுக்காகும். அவர் பாலஸ்தீனர்களுக்கான அனுதாபம் அதிகரித்துவரும் வேளையில் இஸ்ரேல் முற்றாக தங்கியிருக்கும் அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவது தனது நோக்கமென ஏற்றுக்கொண்டுள்ளார். அமெரிக்காவினுள் புஷ் நிர்வாகம் உறுதியான இஸ்ரேல் சார்பான நிலைப்பாடு எடுக்க நெருக்கப்படுகின்றது. கடந்த கிழமை வரவுசெலவுத் திட்டத்திலிருந்து $15.2 மில்லியன் வெளிநாட்டு உதவி வழங்குவதை ஆராய்வதற்கான செனற் உதவிக்குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அரச செயலாளரான கொலின் பெளல் ''பெரஸ் அமைதியை விரும்பாத மனிதர், எனவும் மேலும் பாலஸ்தீன தலைவர் யசீர் அரபாத்தும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதையிட்டு விருப்பமற்றிருப்பதாக'' தெரிவித்தார்.

அவர் உதவிக்குழுவின் தலைவரான குடியரசுக்கட்சி செனற்டரான Mitch McConnell எகிப்தில் யூத எதிர்ப்புவாதம் ''ஆகக்கூடிய உயர்நிலையில் இருக்கையில்'' அமெரிக்கா தொடர்ந்தும் எகிப்திற்கு உதவியளிக்கவேண்டுமா என முதல் தடவையாக கேள்வி எழுப்பியபோது கொலின் பெளல் எதிர்ப்பான நிலையை Capitol Hill இல் சந்தித்தார். ''பாலஸ்தீனர்களுக்கு ஒருபோதும் கிடைக்கமுடியாத ஒரு தீர்வைவிட்டு'' வெளியேறியதால் அரபாத் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். $75 மில்லியன் மேற்குகரை, காஸா பிரதேச பாலஸ்தீனியர்களுக்கு வழங்குதாக கூறப்பட்டதை நியாயப்படுத்துவது தொடர்பாக McConnell கேள்வி எழுப்பினார்.

ஜனநாயக்கட்சி செனற்றரான Mary Landrieu உம் பாலஸ்தீனர்களுடனான அமெரிக்க உறவை மீளாய்வு செய்ய பெளலிடம் கோரிக்கைவிட்டார்.

மத்திய கிழக்கின் அமெரிக்காவின் முக்கிய கூட்டான எகிப்திற்கு வழங்கும் $2 பில்லியனை வெட்டவேண்டாம் என பெளல் காங்கிரசினை நிர்ப்பந்திக்க தள்ளப்பட்டார். அவர் ஜோர்டானுடன் இணைந்து எகிப்தும் ''இப்பிரதேசத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக'' குறிப்பிட்டார். மே மாதம் 22-30 வரையிலான அவரது ஆபிரிக்க- ஐரோப்பிய விஜயத்தின் போது அரபாத்தை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.