World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Labour government steps up persecution of asylum seekers

பிரித்தானியா: தொழிற்கட்சி அரசாங்கம் புகலிடம் தேடுவோருக்கு எதிரான துன்புறுத்தல்களை உக்கிரமாக்கியுள்ளது

By Chris Marsden
28 April 2001

Use this version to print

ஏப்பிரல் 25 புதன்கிழமை பிரித்தானிய உள்நாட்டுச் செயலாளர் ஜக் ஸ்ட்ரோ(Jack Straw) புகலிடம் தேடி தோல்வி கண்டவர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவதை அதிகரிக்கும் படுகொடூரமான விதிமுறைகளைக் கொணரவும் பிரித்தானியாவுக்குள் நுழைவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வாக்குறுதியளித்துள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கம் 1500 குடிவரவு கட்டுப்பாட்டு அதிகாரிகளில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு மேலதிக குடிவரவு கைது படையை அமைக்க உள்ளது. புதிய மூன்று கைது கோஷ்டிகள் லண்டனில் தங்கி இருப்பதோடு புகலிட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, நாட்டில் இருந்து வெளியேறத் தவறியவர்களை தேடிக் கண்டுபிடிக்கும். இந்தக் கைது செய்யும் கோஷ்டிகள் பொலிஸ் அதிகாரிகள் இல்லாமலே கைது செய்யும் அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இவர்கள் 150 புதிய நடமாடும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரங்களை கொண்டிருப்பர். பிரித்தானிய விமானத் தளங்களிலும் துறைமுகங்களிலும் ஐந்து புதிய எக்ஸ்-ரே இயந்திரங்கள் பொருத்தப்படும். லொரிகளிலும் கார்களிலும் பதுங்கி வருபவர்களைக் கண்டுபிடிக்க கால்வாய்களிலும் சுரங்க வழிகளிலும் இத்தகைய இயந்திரங்கள் பொருத்தப்படும்.

கடந்த 12 மாதங்களில் புகலிடம் கிடைக்க தவறிய 9,000 பேர் நாடுகடத்தப்பட்டனர். ஏனையோர் தம்பாட்டில் வெளியேறினர். எவ்வாறெனினும் அரசாங்கத்தின் இலக்கு 12,000 பேராக விளங்கியது. புதிய நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் 30,000க்கும் அதிகமானோரை வெளியேற்றும் இலக்கை எட்ட உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். புகலிடம் சம்பந்தமான தீர்மானங்களை விரைவுபடுத்தும் பொருட்டு மேலதிகமாக 500 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களை நாடுகடத்தும் விமானப் பயணங்களின் (Charter Flights) எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 215 பேரைக் கொண்ட ஆறு விமானங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் இருந்து வெளியேறிவிட்டன.

உள்நாட்டு அமைச்சினால் (Home office) மார்ச் மாதத்தின் பேரில் வெளியிடப்பட்ட மாதாந்த புகலிடம் கோரியோர் விண்ணப்பங்கள் 5,815 ஆக விளங்கியது. இது 12 மாதங்களுக்கு முன்னர் இருந்ததை விட 13 சதவீதம் குறைவானதாகும். புதிய விண்ணப்பங்கள் ஆப்கானிஸ்தான், சோமாலியா, ஈராக் போன்ற நாடுகளில் இருந்தே அதிகளவில் கிடைத்தன. தீர்மானம் செய்ய வேண்டி இருந்த பாக்கியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 36,390 ஆக வீழ்ச்சி கண்டுள்ளதாக ஸ்ட்ரோ பெருமைப்பட்டுக் கொண்டார். கடந்த ஆண்டு பெப்பிரவரியில் இருந்ததன் (101,000) 1/3 பங்குக்கும் குறைவானது எனவும் கூறிக் கொண்டார். இது கடந்த மாதத்தில் பிரித்தானியாவில் தங்கியிருக்க அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்லது சிறப்பு லீவு வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையின் 25 சத வீதமாகும். மேலும் விண்ணப்பதாரிகளில் 16 சதவீதத்தினர் தொழில்நுட்ப ரீதியிலான "உடன்பாடற்ற" ரீதியில் புகலிடம் மறுக்கப்பட்டனர். (தேறிய புள்ளி 9 சதவீதமாகும்)

ஸ்ட்ரோ அகதியாக தகுதி பெறுபவர் யார் என்பதற்கு ஒரு பொதுவான ஐரோப்பிய வரைவிலக்கணத்தை ஸ்தாபிதம் செய்யும் தமது நோக்கத்தையும் அறிவித்தார். அவரின் நோக்கம் ஒரு அரசின் துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுப்பவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்குவதை கட்டுப்படுத்துவதேயாகும். இது "அரசு அல்லாத துன்புறுத்தல்களுக்கு" பலியாகுவோரை- இனவாதம், இனக்குழு மோதுதல், பாலியல் வல்லுறவு அல்லது கொலைகார கும்பல்களுக்கு பலியாகுவோர்- இதில் இருந்து சுயமாக விலக்கி வைக்கின்றது. ஒரு அகதியாக தகுதி பெற்றவன் யார் என்பதை விளக்கும் விதத்தில் ஒரு "பரஸ்பர அங்கீகாரத்தை" ஐரோப்பிய யூனியன் நாடுகள் விடுத்தால் அது "புகலிட வியாபாரத்துக்கு" முடிவு கட்டும் என அவர் தெரிவித்தார். இன்றைய நடைமுறையினால் குடிவரவுக்காரர்கள் தமது கோரிக்கை அங்கீகரிக்கப்படும் வரை ஐரோப்பிய நாடுகளில் ஒன்றன் பின் ஒன்றாக புகலிடம் தேடுகிறார்கள். இந்த ஐரோப்பிய யூனியன் நெறிமுறையானது பிரித்தானிய சட்டத்திலான மாற்றங்கள் மூலம் நடைமுறைக்கிடப்படும்.

ஸ்ட்ரோவின் நோக்கம் இருமடங்கானது. முதலாவதாக, பிரித்தானியா அரசினால் தூண்டிவிடப்படாத துன்புறுத்தல் நடவடிக்கைகளின் அடிப்படையில் புகலிடம் வழங்குகின்றது. மற்றைய ஐரோப்பிய யூனியனின் நாடுகளைப் போலல்லாது பிரித்தானியா அதற்கு அரசாங்க நடவடிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட ஒரு குறுகிய வரைவிலக்கணத்தை வழங்குகின்றது. இதன் அர்த்தம் என்னவெனில் அதிக அளவிலான அகதிகள் புகலிடம் கோரி பிரித்தானியாவுக்கு விண்ணப்பம் செய்கின்றனர். 2000 ஏப்பிரலுக்கும் 2001 பெப்பிரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் 13 ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு புகலிடம் கோரியோரில் 25 சதவீதமானோர் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரினர். "ஐரோப்பா பூராவும் பிரயோகிக்கத் தக்க அதே வரைவிலக்கணத்தை காட்டும் ஒரே அளவிலான சித்திரம் இருக்க வேண்டும்" என ஸ்ட்ரோ வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, புதிய சட்டம் பிரித்தானிய நீதிபதிகளின் சமீபத்திய வழக்குத் தீர்ப்புகளை தலைகீழாக்கிவிடும். இவை இரண்டு தடவைகளில் மேல் நீதிமன்றங்களில் அரசாங்கத்துக்கு எதிராகவும் புகலிடம் தேடுவோருக்கு சாதகமாகவும் அமைந்திருந்தன. ஒரு தீர்ப்பு உள்நாட்டு அமைச்சு (Home Office) ஜெனீவா உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகலிடம் தேடுவோரின் உரிமைகளை துஷ்பிரயோகம் செய்து விட்டதாகக் கண்டது. இத்தீர்ப்பு 1994க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் சட்டரீதியான பிரயாணப் பத்திரங்கள் இல்லாமல் பயணம் செய்தமைக்காக வழக்குத் தொடுக்கப்பட்ட சுமார் 1000 புகலிடம் தேடுவோருக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டி நேரிடும் என்பதைக் குறிப்பிடுகின்றது. மற்றொன்றில் ஸ்ட்ரோ இரண்டு புகலிடம் தேடியோரை அவர்கள் பிரித்தானியாவுக்கு வந்த வழி மூலம்- பிரான்ஸ், ஜேர்மனி- திருப்பி அனுப்ப முயன்றதன் மூலம் சட்ட விரோதமாக செயற்பட்டுள்ளார். உள்நாட்டு அமைச்சு செயலாளர் இவ்விரண்டு நாடுகளும் கட்டுப்பட்ட முறையில் புகலிடம் கோரும் உரிமைக்கு உட்பட்டவை என்பதையும் அவர்கள் நியாயமான முறையில் கையாளப்படமாட்டார்கள் என்பதையும் அறிவார்.

ஸ்ட்ரோ நீதிமன்றங்கள் புகலிடம் கோரும் வழக்குக்கு "பெரிதும் தாராண்மையான அணுகுமுறையை" கடைப்பிடித்து வந்துள்ளதாக முறைப்பட்டுக் கொண்டார். 1951ம் ஆண்டின் ஜெனீவா உடன்படிக்கையை புதுக்கி அமைக்கும்படி கோரும் ஒரு பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். புகலிட கோரிக்கைகளை கணக்கில் எடுக்கும் போது அவர் மூன்று வகைகளைச் சிருஷ்டிக்கும்படி பிரேரித்தார். முதலாவது, எந்த ஒரு "கோரிக்கைக்கும் இடமளிக்கப்படாத" அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் புகலிட கோரிக்கைகளை உள்ளடக்கி கொண்டுள்ளது. இரண்டாவது, புகலிடம் கோருபவர் இருப்பிடம் கோரும் நாட்டில் செய்யப்படும் "விண்ணப்பம் ஆதாரமற்றது என்ற ஊகத்தில்" செயற்படுமிடத்து; மூன்றாவது நாட்டில் புகலிடம் கோருபவர்கள் தன்பாட்டில் கணக்கில் எடுக்கப்படுவர்.

அவரது உள்நோக்கம் அடைக்கலக் கோரிக்கை அகதி இறுதியாகச் சேரும் நாட்டில் விடுக்கப்படாமல் அவர்களை அவர்களது பயணம் இட்டுச் செல்லும் அயலில் உள்ள "பாதுகாப்பான" நாட்டில் மட்டும் செய்யப்படுவதை ஊர்ஜிதம் செய்வதேயாகும். இது பொருளாதார வெற்றிக்கு அவசியம் எனக் கணிக்கப்படும் திறமைபடைத்த தொழிலாளர்களைத் தவிர பிரித்தானியாவுக்கு ஏனைய சகல குடிபெயர்வையும் விரைவில் முடிவுக்குக் கொணரும். ஐரோப்பாவினுள்ளே ஒரே சீரான அணுகுமுறைக்கு அவர் கடைசியாக விடுத்துள்ள வேண்டுகோள், பிரித்தானியாவினுள் அடைக்கலம் பெறும் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தொடரும் ஒரு பிரச்சாரமாகும்.

குடிவரவு வழக்கறிஞர் நிக்கொலஸ் பிளாக் குறிப்பிட்டது போல் "நீதிமன்ற தீர்மானங்களை தலைகீழாக்க ஐரோப்பிய யூனியன் மட்டத்திலான அரசியல் நடவடிக்கையின் மூலம் பிரித்தானியாவின் கட்டுப்பாடுகளின் தன்மையை மாற்றியமைக்க அவர் முயற்சிக்கின்றார். அது சட்ட ஆட்சியுடன் இணங்கிப் போக முடியாததாகும்."

தொழிற் கட்சி, பல வாரங்களாக "போலி" அடைக்கலம் கோருபவர்கள் எனப்படும் பிரச்சினையைச் சூழ கொன்சர்வேட்டிவ் கட்சியின் (Conservative Party) முன்னணி புள்ளிகள் காட்டிக் கொண்ட இனவாதத்தில் இருந்து தேர்தல் ஆதாயம் தேடிக் கொள்ள முயன்றுள்ளனர். ஸ்ட்ரோ பீ.பீ.சி.யின் 'Today' என்ற வானொலி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் "இனம் சம்பந்தமாக கட்சியோ அல்லது அதன் ஒரு பகுதியோ கொண்டுள்ள நிலைப்பாடு சம்பந்தமாக நான் பெரிதும் கவலை அடைந்துள்ளேன்" என்றுள்ளார்.

ரோரிகளதும் (கொன்சர்வேடிவ் கட்சி) சிறு செய்தி தினசரிகளதும் புகலிடம் கோருவதற்கு எதிரான கூச்சல்களுக்கு தொடர்ந்து தொழிற்கட்சி அக்கறை காட்டி வருவது அதற்கு இணங்கிப் போவதற்காகவேயாகும். ஒரே மூச்சில் ரோரிகளின் இனவாதத்தை கண்டனம் செய்யும் அதே வேளையில் தொழிற் கட்சி முன்னொருபோதும் இல்லாத விதத்தில் கடுமையான முறையில் போலி அடைக்கல கோரிக்கைகள் மீதும் சட்ட விரோத குடிவரவுகள் மீதும் பாய்ந்து விழுகின்றது. இவை எல்லாவற்றையும் இன அமைதியை கட்டிக்காக்கும் பேரிலேயே செய்துள்ளது. இறுதியில் இந்த இரண்டு கட்சிகளும் முற்றிலும் இனங்காணக் கூடிய கொள்கைகளுக்கு வருகின்றன. அடைக்கலம் கோருபவர்களுக்கு எதிராக வசைபாடுவதையே ஒரு தொழிலாக்கிக் கொண்ட நிழல் உள்நாட்டு செயலாளரான ஆன் வைட் கோம்ப் 1993ல் ரோரிகள் துறைமுகங்களில் கைவிரலடையாளங்கள் எடுப்பதை தொழிற்கட்சி எதிர்த்ததாக சுட்டிக் காட்டுகின்றார். இப்போது எவ்வாறெனினும் "அவர்கள் இறுதியில் யதார்த்தத்துக்கு விழித்துக் கொண்டுவிட்டதையும் கொன்சர்வேட்டிவ் கட்சிக் கொள்கையில் அர்த்தத்தைக் கண்டுவிட்டதையும் உணர்த்துகின்றது" என்கிறார்.