World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரித்தானியா

Britain's general election: The disenfranchisement of the working class and the need for a new socialist party

பிரித்தானிய பொதுத் தேர்தல்: தொழிலாளர் வர்க்க சுதந்திரத்தின் பறிமுதலும் ஒரு புதிய சோசலிச கட்சியின் அவசியமும்

Statement by the Socialist Equality Party of Britain
17 May 2001

Use this version to print

ஜூன் 7 பொதுத் தேர்தல் பிரச்சாரம் தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த தட்டினர் அனுபவித்துக் கொண்டிருந்த பாராளுமன்ற விதிமுறைகளுடன் ஆழமாக வேறுபட்டுக் கொண்டுள்ளதை அம்பலமாக்கிக் கொண்டுள்ளது. தொடர்புச் சாதனங்களின் விமர்சகர்கள் தொழிற் கட்சியின் சாத்தியமான வெற்றியின் பரிமாணத்தையும் கன்சர்வேட்டிவ் கட்சித் தோல்வியின் அளவையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுள்ளனர். இருப்பினும் 1997ம் ஆண்டின் தொழிற் கட்சியின் வெற்றியினால் உருவாக்கப்பட்ட திட நம்பிக்கைக்கும் இவ்வாண்டு தேர்தலின் பேரிலான அலட்சியத்துக்கும் இடையேயான முரண்பாடு பெரிதும் விறைப்பானதாக விளங்க முடியாது.

தொழிற் கட்சி ஒரு கணிசமான அளவு பெரும்பான்மையை பெறுமா என்பது, ரொனி பிளேயர் அரசாங்கத்தின் பேரிலான எந்த ஒரு பொதுஜன ஆர்வத்தைக் காட்டிலும் டோரி கட்சியின் தொடர்ச்சியான வீழ்ச்சியுடனேயே பெரிதும் தொடர்புபட்டுள்ளது. தொழிற் கட்சி முன்னொரு போதும் இல்லாத அளவிலான பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் என்பதைப் போலவே அது முன்னொரு போதும் இல்லாத அளவிலான வாக்குகளை பெறும் என்பதற்கான முன் அனுமானங்களும் இருந்து கொண்டுள்ளன. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் பாராளுமன்ற இடைத் தேர்தல்களிலும் வாக்காளர்கள் பங்கு கொள்வது தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு போயுள்ளது. குறிப்பாக உள்வாரி நகர்ப்புறங்களில் இது வீழ்ச்சி கண்டுள்ளது. இளைஞர்களிடையே கட்சிகளுக்கு விசுவாசமான போக்கு கிடையாது. முக்கிய நீரோட்டத்தைச் சேர்ந்த சகல கட்சிகளது அங்கத்தவர்களதும் சராசரி வயது 50 வயதுக்கு மேற்பட்டதாகவே உள்ளது.

தொழிற் கட்சி பிரதமர் பிளேயர் அத்தியாவசிய அரசாங்க சேவைகளான கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு மீண்டும் முன்னுரிமை வழங்க வாக்குறுதி அளித்துள்ளதோடு கன்சர்வேடிவ் கட்சியுடனான தமது கட்சியின் கருத்து வேறுபாடுகளையும் வலியுறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் இது வறுமையினாலும் பொருளாதார பாதுகாப்பின்மையாலும் வாழ்க்கையை முளையிலேயே கருகுண்டு போகச் செய்த பல மில்லியன் கணக்கானோரின் வாழ்க்கையை குழிபறிந்து போகச் செய்துள்ளது. தொழிற்கட்சி நான்கு வருடங்கள் ஆட்சியில் இருந்தது. இக்காலப் பகுதியில் அது 1997ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பெற்ற வரவேற்பை - நன்மதிப்பு தடாகத்தைச் சிதறுண்டு போகச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளது.

1980பதுகளிலும் 1990களின் ஆரம்ப காலத்திலும் நான்கு கன்சர்வேடிவ் கட்சி அரசாங்கங்கள் பெரும் வர்த்தகர்களின் சார்பில் தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான அரசியல் எதிர்த் தாக்குதலில் ஈடுபட்டன. "நலன்புரி அரசுகளின் காவலரண்களை பின்வாங்கச்" செய்யும் கன்சர்வேடிவ் அரசாங்கக் கொள்கைகள் பிரித்தானியாவை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் கூட்டத்தாபனங்களுக்கும் திறந்து விட்டதோடு ஒரு சிறு பெரும் செல்வந்தர்களுக்கும் சனத் தொகையின் பிரமாண்டமான பகுதியினருக்கும் இடையேயான திசைமாறிச் சென்ற சமுதாயத்தினைக் கொண்ட ஒரு மலிவு உழைப்புப் பொருளாதாரத்தை சிருஷ்டிப்பதாகவும் விளங்கியது. இவர்கள் வாழ்க்கைத் தரத்தின் வீழ்ச்சி, நிதி ஈடாட்டம், சமூக சேவைகளின் சீர்கேடுகளின் தாக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்டனர்.

தொழிற் கட்சி முன்னொரு போதும் இல்லாத அளவிலான பாராளுமன்றப் பெரும்பான்மையை ஆழமான டோரி வெறுப்புணர்வு காரணமாகப் பெற்றுக் கொண்டது. அது நாட்டின் பெரும் பகுதிகளில் கன்சர்வேடிவ் கட்சியினர் ஒரு அரசியல் சக்தியாக விளங்கிய நிலைமையை துடைத்துக் கட்டியது. இருப்பினும் இந்த வெற்றி ஒரு தவறான அரசியல் வழியிலேயே நிர்மாணிக்கப்பட்டது.

தொழிற் கட்சி பெரும் வர்த்தக நிறுவனங்களின் கணிசமான பகுதியினரின் ஆதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது. அவை தொழிற் கட்சி மாஜி. கன்சர்வேடிவ் கட்சி பிரதமர் மார்க்கிரட் தட்ச்சர் கடைப்பிடித்த வர்த்தக சார்பு நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கோரின. ஆனால் அது அப்படிச் செய்ய நேரிடக் காரணம், கன்சர்வேடிவ் கட்சியை நாசமாக்கிய வகையிலான வர்க்க குரோதத்தை கிளறிவிடாது செய்வதற்கேயாகும்.

இந்த இலக்கில் பிளேயர் "புதிய தொழிற்கட்சி" அரசாங்கம் ஒரு "மக்கள் அரசாங்கம்" ஆக விளங்கும் என வாக்குறுதி அளித்ததோடு, தட்ச்சர் மரபுகளில் ஒரு சாதகமானதாக விளங்கியதாக அவர் குறிப்பிட்டவற்றின் அடிப்படையில் பிரித்தானியாவை ஐக்கியப்படுத்தும் எனவும் குறிப்பிட்டார். இது சக்திவாய்ந்த பொருளாதாரத்துக்கும் கைத்தொழில் சச்சரவுகளை நசுக்குவதற்குமான ஒரு பொறுப்பாகும். வர்த்தக நலன்களைக் காக்க அதிக அக்கறை காட்டும் அதே வேளையில் சமுதாயத்தில் உள்ள பெரிதும் மென்மையான பகுதியினரின் தலைவிதியை பற்றி கணக்கெடுக்காததாக விளங்கியது.

தொழிற் கட்சி 18 வருடகால கன்சர்வேடிவ் ஆட்சியினால் உருவாக்கப்பட்ட சமூகப் பிளவுகளை குணமாக்குவதாக வாக்குறுதியளித்தது. "விடயங்கள் நலமாகும்" என அது வாக்குறுதி தந்தது. தனது முதல் ஆட்சிக் காலத்தின் முடிவில் சமத்துவமின்மையை குறைக்காது போனால் அது திரும்பவும் ஆட்சிக்கு தெரிவு செய்யப்பட தனது கட்சி இலாயக்கற்றது எனக் கூறுமளவுக்கும் கூட பிளேயர் சென்றிருந்தார். தேசிய ஐக்கியத்தை அடைவதற்கும் "சமூக ரீதியில் விலக்கப்பட்டவர்களுக்கு" உதவும் கொள்கைகளை அமுல் செய்வதற்கும் பெரும் முக்கியத்துவம் கொடுத்தது. தொழிற் கட்சி உழைக்கும் மக்களின் சமூக நலன்களைக் கட்டிக் காப்பதோடு இலாபத்துக்கான முயற்சியையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்வது சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டி இருக்கும்.

இதனை பழைய பாணியிலான "வரிவிதித்து செலவிடுதல்" கொள்கைகள் என ஏளனம் செய்யப்பட்ட கொள்கைக்கு மீண்டும் திரும்பிச் செல்வதன் மூலம் அடைய முடியாது. இதற்குப் பதிலாக தொழிற் கட்சி ஒரு அரசியல் ரீதியான "மூன்றாவது பாதை" யை ஆதரித்தது. இது சமூகச் சீர்திருத்த வேலைத் திட்டங்களுக்கான அதனது வரலாற்று பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதை சுட்டிக் காட்டுகின்றது.

பிளேயர், தொழிற் கட்சி ஒரு குறுகிய வர்க்க அடிப்படையிலான கட்சியாகச் செயற்படாது என வலியுறுத்திக் கொண்டுள்ளார். இது டோரிகளின் முக்கிய அரசியல் தவறாக பிரகடனம் செய்யப்பட்டது. உண்மையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தொழிற் கட்சி லிபரல் கட்சியில் இருந்து பிளவுண்டமையும் அது தொழிற் சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியாக ஸ்தாபிக்கப்பட்டமையும் ஒரு வரலாற்று ரீதியான தவறை பிரகடனம் செய்தது. பிளேயர் தமது பெரும் வர்த்தக நிறுவனங்களின் ஆதரவாளர்களின் கட்டளைகளை ஈவிரக்கமின்றி திணித்தவாறே "வர்க்க யுத்தம் முற்றுப் பெற்றுவிட்டது" என்று ஜம்பம் அடித்துக் கொண்டார்.

தொழிற் கட்சியின் அரசியல் பரிமாணத்தின் முழுச் சிறப்பு முக்கியத்துவத்தை மிகைப்படுத்திவிட முடியாது. தமது சொந்த நலன்களைக் கட்டிக் காப்பதற்கான ஒரு வாகனமாகத் தொழிலாளர் வர்க்கத்தினால் அமைக்கப்பட்ட கட்சியானது பெரும் செல்வந்தர்களதும் இராட்சத கூட்டுத்தாபனங்களதும் ஆதரவு கட்சியாகியது. அதனது உத்தியோகபூர்வமான அரசியல், சகல பெரும் அரசியல் கட்சிகளும் சேவையாற்றும் இரட்சத வர்த்தகர்கள், தொடர்புச் சாதனங்கள், உயர் மத்தியதர வர்க்கத்தின் ஒன்றாக வசதிவாய்ப்புகள் கொண்ட தட்டினருக்குச் சார்பான ஒரு கட்சியாக மாறியது.

இந்த தேர்தல் முன்வைத்துள்ள முக்கிய பணி பெரும் வர்த்தக நிறுவனங்களின் அரசியல் கட்சிகளில் இருந்து தொழிலாளர் வர்க்கத்தின் சுதந்திரத்தைக் கட்டிக் காக்க தொழிலாளர் வர்க்கத்தை அரசியல் ரீதியில் மீண்டும் ஆயுதபாணிகளாக்குவதே; தொழில் உரிமை, வாழ்க்கைத் தரம், ஜனநாயக உரிமைகளை காக்கும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதே. இந்தப் புதிய ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சக்தி வாய்ந்த முறையில் தொழிலாளர் வர்க்க சுதந்திரம் பறிக்கப்பட்டது. காலவதியான மூலதனத்தின் ஊடுருவலை எதிர்ப்பதற்கான பெரிதும் ஆரம்ப நிலையான சாதனங்களும் கூடப் பறிக்கப்பட்டது. இதன் பெறுபேறாக பல இலட்சோப லட்சம் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து முன்னொரு போதும் இல்லாத விதத்தில் பின்வாங்க நேரிட்டது.

சமூக அசமத்துவத்தின் வளர்ச்சி

அடுத்த ஒரு சில வார காலங்களில் இடம்பெறப் போகும் சகல தேர்தல் பிரச்சாரங்களிலும் உண்மையில் ஒரு விடயம்- தொழிற் கட்சி அரசாங்கத்தின் சாதனைகளையும் கொள்கைகளையும் விவரிக்கும் விடயங்கள்- கலந்துரையாடப்பட போவதில்லை. இது பிரித்தானியாவில் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் வளர்ச்சி கண்டுள்ள சமூக அசமத்துவமாகும்.

தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் சனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினரான செல்வந்தர்கள் தேசிய வருமானத்திலான தனது பங்கினை (வரிவிதிப்புக்கு பின்னர்) 45 சதவீதமாக அதிகரித்துக் கொண்டுள்ளனர். தொழிற் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சனத்தொகையில் 10 சத வீதத்தினரான செல்வந்தர்கள் 1988ம் ஆண்டில் இருந்து -தட்ச்சர் ஆட்சிக் காலம்- தேசிய வருமானத்தில் உயர்ந்த பங்கினைப் பெற்றுக் கொண்டனர்.

கோடீஸ்வரர்களின் கிளப்புகள் இப்போது ஆண்டுக்கு 17 சத வீதத்தினால் வளர்ச்சி காண்கிறது. கடந்த ஆண்டின் "சண்டே டைம்ஸ்" பத்திரிகையின் "செல்வந்தர் பட்டியல்" பிரித்தானியாவில் உள்ள ஆயிரம் செல்வந்தர்களின் கூட்டு செல்வம் 31 பில்லியன் பவுண்களால் (43 பில்லியன் டாலர்கள்) அதிகரித்துள்ளதாக காட்டிக் கொண்டுள்ளது. உயர் மட்டத்தில் உள்ள ஆயிரம் செல்வந்தர்களின் மொத்தச் செல்வம் சுமார் 157.7 பில்லியன் பவுண்களாக (220.8 பில்லியன் டாலர்கள்) உள்ளது.

கம்பனி இணைப்புக்களிலும் கம்பனி சுவீகரிப்புக்களிலும் ஈடுபட்டுள்ளவர்களே பெரும் இலாபம் ஈட்டுபவர்களாக உள்ளனர். தனிப்பட்ட பங்கு இலாபங்களும் பங்கு தேர்வு உரிமை கொள்ளவனவுகளும் மட்டும் 10 மில்லியன் பவுண்களாக விளங்கியது. ஆடம்பரப் பொருட்களின் சந்தையானது முன்னொரு போதும் இல்லாத அளவிலான செழிப்பைக் காட்டிக் கொண்டது. ''எக்கொனோமிஸ்ட்' (Economist) சஞ்சிகையின்படி "19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியில் இருந்து ஆச்சரியமான புதிய வீடுகளை அமைக்க இந்தளவு பெரும் அவஸ்தை காணப்பட்டது இல்லை. தற்சமயம் இந்தப் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு பொறுப்பான ஒரு உத்தியோகபூர்வமான புதிய அமைப்பு ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று விண்ணப்பங்களைப் பெறுகின்றது."

அத்தோடு உயர்- மத்திய தர வர்க்கத்தின் ஒரு சிறிய தட்டினரான உயர் செல்வந்தர்கள் பங்குமுதல் சந்தைகளிலான ஊகச் செழிப்புக்களில் இருந்து இலாபம் கண்டுள்ளனர். "பெரும் பணக்காரர்" என்ற வார்த்தையால் நேர்மையற்ற முறையில் அழைக்கப்படும் இந்தத் தட்டினர் -50000 பவுண்களுக்கு (70000 டாலர்கள்) மேலான திரவ முதலீட்டை கொண்டவர்கள்- 1995க்கும் 2000 ஆண்டுகளுக்கும் இடையே அரைவாசியால் அதிகரித்தனர். சனத்தொகையில் 6 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்தத் தட்டினரின் பொருளாதார, சமூக நலன்கள் தொழிற் கட்சியின் கொள்கையை பெருமளவுக்கு உருவாக்கியுள்ளன. தொழிற் கட்சியினர் டோரிகளைக் காட்டிலும் வாழ்க்கைப்பாணி விவகாரங்கள் இன, பால் உறவு பிரச்சினைகள் சம்பந்தமட்டில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளில் பெரிதும் ஆளுமையற்றதாக உள்ளது. அல்லது அரசாங்க செலவு வெட்டுக்களை காண ஆர்வம் குறைந்ததாயும் நேரடி வரிவிதிப்புக்களை கட்டுப்படுத்துவதில் அக்கறை குறைந்ததாயும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் "சுதந்திர சந்தையின்" ஆர்வம் நிறைந்த ஆதரவாளர்களாக உள்ளனர்.

சமுதாயத்தின் உச்சியில் உள்ளவர்களின் பரந்த அளவிலான செல்வத் திரட்சிக்கு முரணான விதத்தில் தொழிலாளர் வர்க்கம் தனது வாழ்க்கைத் தரங்கள் வெட்டிச் சரிக்கப்பட்டதைக் கண்டது. பொருளாதார ஒற்றுமைக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) பிரித்தானிய சனத்தொகையில் 55 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆறு ஆண்டு காலப் பகுதியில் வறுமையை அனுபவித்ததாக மதிப்பிட்டுள்ளது. 4 மில்லியன் சிறுவர்கள் உட்பட சுமார் 15 மில்லியன் மக்கள் தேசிய சராசரி கூலிக்கும் அரைவாசிக்குக் கீழ் வாழ்ந்து கொண்டுள்ளனர். தனிப் பெற்றோர்களில் அரைவாசிப் பங்கினர் வறுமையில் வாழ்ந்து கொண்டுள்ளனர். தனிப் பெற்றோர் வீடுகளில் வாழும் 80 சதவீதமான சிறுவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் வறியவர்களாக வகுக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் சிறுவர் வறுமை அனைத்து கைத்தொழில் நாடுகளிலும் மூன்றாவது உயர்ந்த இடத்தில் உள்ளது. ரூஷ்யாவும் அமெரிக்காவும் மட்டுமே இதைத் தாண்டிச் சென்றுள்ளன. நிறை குறைந்த பிள்ளைகளின் பிறப்பு, இங்கிலாந்தில் அல்பேனியாவுக்குச் சமமானதாக உள்ளது. சிங்கப்பூர், சுலோவீனியாவுக்கு குறைவானதாக உள்ளது.

தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பான்மையினர்- அரசாங்கத்தினால் வறுமைக்கான அளவீட்டாகக் கொள்ளப்படுவதற்கு குறையாதது- அன்றன்றாடைய வாழ்க்கை வருமானத்தையே கொண்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்கள் இப்போது வீட்டுக்கு கிடைக்கும் இரண்டு சம்பளங்களில் தங்கியுள்ளனர். பெண்கள் இப்போது நாட்டின் ஊழியப் படையில் சுமார் அரைப் பங்கினராக உள்ளனர். நீண்ட உழைப்பு நேரத்துக்கு இடையேயும் "உழைக்கும் வறியவர்களின்" தரத்தில் ஒரு கணிசமான அதிகரிப்பு இருந்து கொண்டுள்ளது. சேவைத் துறை பிரித்தானியாவின் உழைக்கும் சனத்தொகையில் 70 வீதத்துக்கும் அதிகமானோரைக் கொண்டுள்ளது. தொழில்கள் பெருமளவுக்கு குறைந்த சம்பளம் கொண்டவையாகவும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானவையாகவும் விளங்குகின்றன.

வருமானத்திலான அசமத்துவம் சுகாதாரத்திலான அசமத்துவத்துடன் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது. இளமை மரணங்கள், உடற் பருமன், உயர் இரத்தக் கொதிப்பு, விபத்துக்கள், மூளை ஆரோக்கிய பிரச்சினைகள் போன்றவை செல்வந்தர்களை விட ஏழைகளிடையேயும் திறமையற்றவர்களிடையேயும் அதிகமாக உள்ளது. 1970பதுகளின் ஆரம்பத்தில் திறமையற்ற ஆட்களின் மரண வீதம் தொழில்சார் ஆட்களைக் காட்டிலும் ஏறக்குறைய இரண்டு மடங்கானதாக விளங்கியது. இன்று இது சுமார் மூன்று மடங்கு அதிகம். "பிறரை சார்ந்திருக்கும் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுதல்"; நலன்புரி அரசுக்கு எதிரான தொழில் கட்சியின் தாக்குதல்.

டோரிகளின் பொருளாதார நிகழ்ச்சி நிரலை பெரும் வர்த்தகர்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை தொழிற் கட்சி கெளரவித்துக் கொண்டுள்ளது. இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி வீதங்களை ஒழுங்குபடுத்தவும் நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்து நாணயக் கொள்கையை விடுதலை செய்யவும் சுதந்திரம் வழங்கியது. கோர்பரேசன் வரிகள் ஐரோப்பாவிலேயே கீழ் மட்டத்துக்கு வெட்டிச் சரிக்கப்பட்டது. தொழிற்கட்சி ஆட்சியின் முதல் இரண்டு வருட காலங்களில் அரசாங்க செலவீனங்கள் மீதான டோரிகளின் கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டன.

தொழிற் கட்சி ஒரு தொகை தனியார்மயமாக்கல் திட்டங்களை மேலும் முன்னெடுக்கத் தள்ளப்பட்டது. அத்தோடு தனியார் நிதி சம்பந்தமான ஆரம்பிப்புக்கள், ஆஸ்பத்திரிகள், படைத்தளங்கள், நீதிமன்றங்கள் பொது நிர்வாகத்தின் ஏனைய துறைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. தொழிற் கட்சியின் ஆரம்பகால பொதுச் செலவீன கட்டுப்பாடுகளும் அரச சொத்து விற்பனைகள் மூலம் கிடைத்த வருமானங்களும் கடந்த ஆண்டு அது 16.5 பில்லியன் பவுண்களை வரவு செலவுத் திட்ட உபரியாக திரட்டிக் கொள்வதை சாத்தியமாக்கியது. வரலாற்றில் இதுவே ஆகக் கூடிய தொகையாகும். அத்தோடு இதன் மூலம் தேசிய கடன் தொகைகளின் பேரில் 34 பில்லியன் பவுண்களை (47.6 பில்லியன் டாலர்) திருப்பிச் செலுத்தவும் முடிந்தது. இது முன்னைய 50 ஆண்டுக் காலத்தில் சகல அரசாங்கங்களும் திருப்பி செலுத்திய மொத்த தொகையை விட அதிகமானதாகும்.

எவ்வாறெனினும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் நிலைப்பாட்டில் இருந்து தொழிற் கட்சி அரசாங்கத்தின் மிகவும் முக்கியமான ஆரம்பிப்பு, பிரித்தானியாவில் சமூக கொள்கையை புதுக்கி அமைக்கச் செய்த இடைவிடாத முயற்சியேயாகும்.

1945 தொடக்கம் 1970பதுகளின் கடைப்பகுதி வரை பதவியில் இருந்தது தொழிற் கட்சியா அல்லது கன்சர்வேடிவ் கட்சியா என்பதைப் பொருட்படுத்தாமல் பிரித்தானிய அரசியலும் சமூக கொள்கையும் வர்க்கங்களுக்கு இடையிலான சமூக பதட்டங்களைத் தணிக்கும் பொது விருப்பினாலேயே ஆளப்பட்டன. இந்த விதத்தில் நலன்புரி அரசு மாதிரி சகலருக்கும் சில சமூக உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் நவீன சமுதாயத்தில் உயிர்வாழ அவசியமான குறைந்த பட்ச தேவைக்கு குறைந்து போகாத விதத்தில் சகலருக்கும் கிடைக்கும் விதத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இது ஆளும் பிரமுகர்களுக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையேயான ஒரு சமூக எல்லை அரண்களாகச் செயற்படும் நிர்வாக அதிகாரிகள் மத்தியதர முகாமையாளர்களை ஒரு சார்பு ரீதியான வசதிவாய்ப்பு கொண்ட தட்டினராக விதைப்பதற்கென வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஓர் நடவடிக்கையாகும்.

"வைட் கொலர்" (White collar) ஊழியர்களின் உயர் தட்டுக்களும் கைத்தொழில் துறையின் திறமை கொண்ட தொழிலாளர்களும் தம்மை ஒரு தனியான சமூகத் தட்டினராக நோக்கும் வண்ணம் ஊக்குவிக்கப்பட்டனர். சமூக ஏணியில் தமக்கு கீழேயுள்ளவர்களிலிருந்து தமது நலன்கள் வேறுபட்டவையாயும் அவற்றுக்கு குரோதமானதாயும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொண்டனர்.

கடந்த இரண்டு தசாப்த கால அரசாங்கங்கள் இதற்கு முரணான விதத்தில் பரந்த அளவிலான பெரும்பான்மையினரின் இழப்பீடுகளின் பேரில் வசதி வாய்ப்புக்கள் படைத்த சிலரின் செல்வங்களை அதிகரிக்கும் வகையிலான கொள்கைகளை அமுல் செய்து வந்தன. தொழிலாளர் வர்க்கத்தின் பரந்த தட்டினர்- ஒரு காலத்தில் தம்மை மத்தியதர வர்க்கம் என கணித்துக் கொண்டவர்கள் உட்பட- நிதிப் பாதுகாப்பற்ற நிலைமைக்குள் தள்ளப்பட்டனர். நம்பத்தகுந்த எந்த ஒரு சமூகப் பாதுகாப்பும் அவர்களின் காலடியில் போட்டு நசுக்கப்பட்டன.

கன்சர்வேடிவ் கட்சியினர் நலன்புரிச் சேவை உரிமைகளதும் ஓய்வூதியத்தினதும் (pension) பெறுமானங்களை வெட்டிச் சரிக்கும் ஒரு முறைமுறையான கொள்கையை கடைப்பிடித்தனர். இதே சமயம் அரசுடமையான கல்வியையும் தேசிய சுகாதார சேவையையும் இளைத்துப் போகச் செய்தனர். பூகோளரீதியான சந்தைக் களத்தில் போட்டியிடவும் ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்தாபனங்களிடம் இருந்து முதலீடுகளை கவரவும் பிரித்தானிய முதலாளித்துவத்துக்கு அத்தகைய நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை என ஆளும் பிரமுகர்கள் கண்டனர்.

ஆனால் பெருமளவில் அரசாங்க செலவீனங்களை வெட்டித் தள்ளும் அவர்களின் முயற்சிகள் பிழைத்துப் போயின. ஏனெனில் அவர்களின் கொள்கைகள் காரணமாக உருவான பாரிய அளவிலான வேலையின்மை வயது முதிர்ந்த சனத் தொகையினரின் கோரிக்கைகளுடன் சேர்ந்து கொண்டது. இது முன்னொரு போதும் இல்லாத அளவில் அதிக அளவிலானோர் காய்ந்து போன சமூக நலன்புரி முறையின் மீது கோரிக்கைகள் வைத்து வந்தனர். 1990ம் ஆண்டில் தட்ச்சரை பதிலீடு செய்ததைத் தொடர்ந்து டோரி பிரதமர் ஜோன் மேயர் நலன்புரி சேவை நலன்களுக்கும் அரசினால் நிதியீட்டம் செய்யப்பட்ட ஓய்வூதிய உரிமைக்கும் முடிவு கட்ட முடியாது என்பதைப் புரிந்து கொண்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான தொழிலாளர் வர்க்க குடும்பங்கள் தங்கியுள்ள பொருளாதார, சமூக நடவடிக்கைகளின் சிக்கலான முறையை ஒழித்துக் கட்டுவது- பிரித்தானிய நலன்புரிச் சேவை அரசினை அமைப்பதில் பெரும் பங்கு கொண்ட- தொழிற் கட்சியைச் சார்ந்தது.

பிளேயரின் "புதிய தொழிற் கட்சி (New Labour) அரசாங்கம் ஒரு "சார்ந்திருக்கும் கலாச்சாரத்தை" ஊக்குவித்த உலகளாவிய நலன்புரி விதிமுறைகளைக் கொணர்ந்த யுத்தத்தின் பின்னைய அமைப்புமுறையை கண்டனம் செய்தது. அதற்குப் பதிலாக பிளேயர் இருமுனை அணுகுமுறையை பிரேரித்தார். சமுதாயத்தின் வறிய அங்கத்தவர்களை "சமூக ரீதியில் தள்ளி வைப்பதை தாண்டும் விதத்தில் செய்வதும் நலன்களை பெறுவர்களை நலன்புரி திட்டத்தில் இருந்தும் ஊழியப் படையில் இருந்தும் தள்ளி வைக்க நடவடிக்கை அறிமுகம் செய்வதும்.

பிளேயர் "பொறுப்புக்கள் இல்லாமல் உரிமைகள் கிடையாது" என வலியுறுத்தி வந்தார். தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக வேலை செய்ய முடியாதவர்கள் மட்டுமே -விக்டோரியன் காலத்து "தகுதியான ஏழைகள்"- அரச உதவிகளுக்கு அருகதை உடையவர்கள். சம்பளம் எவ்வளவுதான் குறைவானதாக இருந்தாலும் பெரும்பான்மையான வாரிசுகள் வேலை செய்விக்க வைக்கப்பட வேண்டும். இந்த விதத்தில் தொழிற் கட்சி அரசாங்கம் 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையேயான சகல வேலையற்றவர்களுக்கும் ஒரு "புதிய தீர்ப்பை" கட்டாய சேவைக் கட்டணத் திட்டமாக அறிமுகம் செய்தது. இதனை தனிப்பட்ட பெற்றோர்களுக்கும் வலது குறைந்தவர்களுக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் "சுயேச்சை" அடிப்படையில் விஸ்தரித்தது. இத்தோடு தொழிற் கட்சி பல உலகளாவிய நலன்களை "வரி கிரெடிட்" மூலம் பதிலீடு செய்தது. இதனை சம்பள பக்கட்டுகள் மூலம் செய்தது.

தொழிற் கட்சி நலன்புரி சேவை கொள்கைகளில் பெரும் மாற்றங்களைச் செய்வதன் மூலம் பெரும் வர்த்தகர்களுக்கு கிடைக்க கூடியதாகவுள்ள மலிவு உழைப்பு தடாகத்தை விஸ்தரிப்பதேயாகும். இது வேலையற்றோருக்கு வேலை செய் அல்லது பட்டினி கிட என்ற ஒரு கடும் தெரிவை முன்வைப்பதாகும். இதனது குறைந்த பட்ச கூலியானது மணித்தியாலத்துக்கு 3.60 பவுணாக (5.04 டாலர்) அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் தொழிலாளர்களில் ஒரு சிறு பகுதியினர் சிறிதளவு நன்மை கண்ட போதிலும் பல தொழிலாளர்களின் இன்றைய சம்பள விகிதத்தை தேங்கிக் கிடக்க வைக்கச் செய்துள்ள பரந்த தாக்கமாக இது விளங்குகின்றது.

தமது முன்னோடிகளான டோரிகளைப் போலவே தொழிற் கட்சியினரும் அரசாங்க ஓய்வூதிய திட்டத்தை கையாளாமல் அரசாங்க செலவீனங்களை குறைப்பதில் கணிசமான அளவு முன்னேற்றம் காண்பது என்பது முடியாத காரியமாகும். மாறாக தனி ஓய்வூதியம் பெறுவோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் வராந்தம் 90 பவுண்களை (126 டாலர்) பெறுவதோடு அரசாங்க ஓய்வூதியத்தில் நின்று கொண்டு ஓய்வு பெறும் 5 இலட்சம் பேரில் 3/4 பங்கினர் 1997க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்க ஓய்வூதியத்தின் பெறுமதி அதிகரிக்கப்படுவதானது முழு அரச செலவீனத்தைக் குறைப்பதோடு பல்வேறு அரசாங்க ஊக்குவிப்புக்களோடு மக்களை தனிப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் சேர்ந்து கொள்ளும்படியும் நெருக்குகின்றது. தொழிற் கட்சியினர் தாம் உலகளாவிய அரச ஓய்வூதிய திட்டத்தை ஒரு "மூன்றாம் தரப்பு ஓய்வூதியத்தினால்" பதிலீடு செய்ய யோசித்துள்ளதாக அறிவித்தனர். இது அரசாங்கத்தினால் மேற்பார்வை செய்யப்படும். ஆனால் தனியார் துறையினால் நடாத்தப்படும். நலன்புரித் திட்டத்தின் பெறுமானமானது ஓருவரின் வேலைக் காலத்தின் போது செய்த பங்களிப்பின் மட்டத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படும்.

தொழிற் கட்சிக்கு பெரிதும் பிரச்சினைக்கிடமான வேறு இரண்டு அரசாங்கத் துறைகள் கல்வியும், சுகாதாரமுமாகும். ஏனெனில் டோரிகளின் கீழ் இவற்றின் தலைவிதியையிட்டு பொதுமக்கள் அசாதாரணமான கவலை கொண்டுள்ளதே அதற்குக் காரணம். 1997ம் ஆண்டில் தொழிற் கட்சியினர் வழங்கிய வாக்குறுதிகளுக்கிடையேயும் இது இந்தத் துறைகளில் டோரிகள் கடைப்பிடித்த செலவு சுருக்கத்தை தொடர்ந்தனர். அத்தோடு தனியார்மயமாக்கத்தினையும் விஸ்தரித்தனர். அரசாங்கத் துறையில் பலவற்றையும் இலாபம் சம்பாதிக்கும் ஒரு அரங்காக மாற்றுவதில் ஈடுபட்டனர்.

இதுவரை தொழிற் கட்சி அரசாங்கம் 13 மில்லியன் பவுண்கள் மதிப்புள்ள தனிப்பட்ட நிதித்துறை கொடுக்கல் வாங்கல் ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் கூட்டுத்தாபனங்களுக்கு அரசாங்கத் துறை நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்கி, பராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. தனிப்பட்ட நிதி ஆரம்பிப்பு (Private finance initiative) உடன்படிக்கைகளை பரிமாறும் பணிகளை அடுத்து வரும் 30 ஆண்டுகளுக்கு செய்வதற்காக 84 பில்லியன் பவுண்களுக்கு பொறுப்பாக உள்ளன. பல உள்ளூர் கல்வி அதிகார சபைகளும் முழுமனே தனியார் கல்வி- வியாபாரங்களுக்கே (Edu-businesses) கையளிக்கப்பட்டன. இதன் பெறுபேறாக தனியார் கல்வி சேவைத் துறை வருடாந்தம் சுமார் 30 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகின்றது.

வரலாற்று ரீதியில் சுருக்கமான உயர்நிலைக் கல்விக்கான கலப்பு திறன் கொண்ட பாடசாலைகள் முதலில் தொழிற் கட்சியினாலேயே அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அத்தகைய பாடசாலைகள் பழைய இலக்கண பாடசாலைகளையும் 11 வயதில் தெரிவு செய்யப்படும் உயர்தர நவீன பாடசாலைகளையும் கொண்ட இரட்டை முறையை ஒரு பெரிதும் சமத்துவமான முறையினால் பதிலீடு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1980பதுகளின் போது டோரிகள் இந்த பாடசாலைகளை ஒழித்துக் கட்டி தெரிவு முறைக்குத் திரும்பவும், தனியார் கல்வித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தமது உள்நோக்கத்தை மூடிமறைக்கவில்லை.

பிளேயர் கல்வியை டோரிகள் புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஒரு மலிவான தொழிற் கட்சிப் பொருளாதாரம் பொருளாதார வெற்றிகளை ஊர்ஜிதம் செய்யப் போதுமானது என்ற கருத்தையும் தாக்கியுள்ளார். எவ்வாறெனினும் இது தொழிற் கட்சிக்காரர்கள் முன்னர் இருந்தது போல் அரசாங்கத் துறையை புதுப்பிக்க விரும்புகிறார்கள் என்பதாகாது. அத்தோடு அவர் பிரித்தானியாவுக்கு ஒரு திறமையானதும் படிப்பறிவு கொண்டதுமான ஊழியப் படை அவசியமாகியுள்ளது என்றுள்ளார். இதற்குப் பதிலாக "திறமையை கடைப்பிடிக்கும்" பேரிலும் "பூகோள பொருளாதாரத்தின் சவால்களுக்கு" இளைஞர்களை ஆயுதபாணிகளாக்குவதன் மூலமும் கல்விசார்ந்த தெரிவுகளை ஊக்குவிக்கும் விதத்தில் அரசாங்கம் கல்விக் கொள்கையை புதுக்கி அமைத்துள்ளது. அதன் மூலம் அமைப்பின் அசமத்துவத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

பெரும்பான்மையான மாணவர்களுக்கு நவீன ஊழியச் சந்தையில் தொழிற்படத் தக்க விதத்தில் குறைந்த பட்ச கல்வி அறிவு, எண்ணறிவு, தகவல் தொழில் நுட்பம் போன்றவை போதிக்கப் படவேண்டும். உயர்ந்த தரத்திலான பரீட்சை பெறுபேறுகளில் பொதுவாக முதலிடம் வகிக்கும் சமூக ரீதியில் வசதிவாய்ப்புகள் படைத்த தட்டினர் விஞ்ஞானம் அல்லது கணிதம் போன்ற பாடங்களில் சிறப்பு தகுதி படைத்த பாடசாலைகளுக்கு எடுக்கப்படுகின்றனர். பாடசாலைகள் ஏதோ ஒரு கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கொள்ளும்படி ஊக்குவிக்கப்படுகின்றன. பொருத்தமான விதத்தில் புதுக்கி அமைக்கப்பட்ட பாடவிதானத்தை போதிக்கவும் பெரிதும் திறமை கொண்ட மாணவர்களை தொடங்கி வைக்கும் வர்த்தக நிலையங்களுக்கு தலைமைக்கு தெரிவு செய்யும் வாய்ப்பையும் வழங்குகின்றன. டோரிகளால் ஊக்குவிக்கப்பட்ட பரீட்சை "லீக் டேபிள்கள்" (leaque Tables) திறமை காட்டாத பாடசாலைகளை அவை "தோல்வி" கண்டு விட்டதாக கூறி இழுத்து மூடுவதற்கான ஒரு அளவுகோலாக பயன்படுத்தப்பட்டன. இவை பெரிதும் பின்தங்கிய உள்வாரி நகரப் புறங்களில் அடிக்கடி இடம்பெற்றது. இதே சமயம் பிரித்தானியக் கல்வி முறையில் சுமார் 8 சதவீதமாக உள்ள பல தனியார் கட்டணம் அரவீடும் பாடசாலைகள் அறசாங்க சிறப்பு ஊக்குவிப்புகள் மூலம் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.

இதே சமயம் தொழிற் கட்சியின் கொள்கைகள், பிரித்தானிய உயர் கல்வி அமைப்பினுள் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டு வந்த வர்க்கப் பாகுபாட்டை ஆழமாக்கியது. மாணவர் கடன்களும் வருடாந்த கல்வி கட்டணங்களும் (1250 பவுண்கள்) அறிமுகம் செய்யப்பட்டமை தொழிலாளர் வர்க்க பின்னணியைக் கொண்ட மாணவர்களில் அரைவாசிக்கும் குறைவானோர் ஒரு பல்கலைக்கழக இடத்துக்காக விண்ணப்பிக்கும் சாத்தியம் உள்ளது. இதே சமயம் கல்வியின் நிதிச் சுமையின் அதிகரிப்பு பாடசாலைகளில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமடைய இடமுண்டு. உயர்தர பல்கலைக்கழகங்கள் வருடாந்தம் 7000 பவுண் தொடக்கம் 20000 பவுண்களை கல்விக் கட்டணமாக அறவிட இடமளிக்குமாறு கேட்டு ஏற்கனவே அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்து கொண்டுள்ளன.

தேசிய சுகாதார சேவையின் (NHS) தலைவிதி இதற்கு ஒன்றும் குறைவானது இல்லை. தேசிய சுகாதார சேவை அதன் ஆரம்ப காலத்தில் இருந்து நிதிப் பற்றாக்குறை காரணமான பாராமுகம் காரணத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் ஆளும் பிரமுகர்களும் செல்வாக்கானவர்களும் தனியார் சுகாதார சேவை வசதிகளை முற்றிலும் அனுபவித்துக் கொண்டுள்ளனர். 1960பதுகளில் திட்டமிடப்பட்ட ஆஸ்பத்திரி கட்டிட வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உண்மையில் இடம்பெற்றது. 1976ல் சர்வதேச நாணய நிதியம் தொழிற் கட்சி அரசாங்கத்தின் மீது செலவீனக் கட்டுப்பாடுகளைத் திணித்ததைத் தொடர்ந்து சுகாதார அபிவிருத்தி நிர்மாண வேலைகள் பலவும் ஸ்தம்பிதம் கண்டன. இதன் பெறுபேறாக ஆஸ்பத்திரி படுக்கைகளில் 50 சதவீதமானவை 1914ம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்களிலேயே இருந்து கொண்டுள்ளன.

நலன்புரி அரசின் "கிரீடத்தின் மணி" ஆன தேசிய சுகாதார சேவையில் (NHS) இருந்து சிகிச்சை பெறுவோர் "அதிஸ்ட இலாப பெற்றோர்" என அழைக்கப்படுகின்றனர். இதில் வெற்றி காணத் தவறுவோர் நீண்டகால உடல் பலவீனங்களுக்கு அல்லது மரணத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.

குறைந்த சம்பளமும் கணிசமான அளவு தனியார் துறை சுகாதார நிலையங்களின் அபிவிருத்திகளும் தேசிய சுகாதார சேவையில் 20000தாதிமார் வெற்றிடங்களை ஏற்படுத்தி உள்ளன. கனிஷ்ட டாக்டர்கள் தற்சமயம் ஒரு கிழமைக்கு குறைந்த பட்சம் 56 மணித்தியாலங்கள் தொழில் செய்ய வேண்டியுள்ளது. ஆஸ்பத்திரி சிகிச்சைகளுக்காக காத்துக் கிடப்போர் பட்டியல் முன்னொரு போதும் இல்லாத விதத்தில் நீண்டுள்ளது. சுமார் 5 இலட்சம் மக்கள் வெளிவாரி சிகிச்சைக்கான திகதியைப் பெறுவதற்கு முன்னர் 13 வாரங்களுக்கு மேலாக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. உயிரைக் காப்பாற்றும் சிகிச்சைகள் பெறுவோர் தமது சத்திர சிகிச்சைகள் ஒத்திப் போடப்படுவதை காண்பது வழக்கமாகிவிட்டது. சில நோயாளிகளுக்கு இது பல தடவைகள் இடம்பெற்றுள்ளதோடு, அவர்களின் நிலைமை சத்திர சிகிச்சைக்கு உள்ள முடியாத நிலைமையையும் அடைந்துள்ளது.

தொழிற் கட்சியினர் டோரிகளால் தேசிய சுகாதார சேவையில் (NHS) அறிமுகம் செய்யப்பட்ட உள்வாரி சந்தையை விஸ்தரித்துள்ளனர். ஆஸ்பத்திரிகள் தாம் வழங்கும் பெரும் சேவைகளின் இழப்புக்களின் பேரில் சிறப்பு சிகிச்சைகளை வழங்குமாறு ஊக்குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் ஒரு சத்திரி சிகிச்சையின் பேரில் வாட்டுக்கு வாட்டு ஏற்றி இறக்கப்படும் நிலையும், இடைவழியில் நோயாளிகள் இறந்து போகும் நிலையும் உருவாகியுள்ளது. தொழிற் கட்சி அரசாங்கம், "வாழ்க்கை பாணி தெரிவுகள்" அல்லது சில சிகிச்சைகள் செலவுக்கிடமானவை எனக் கூறி சுகாதார சேவைகளை பங்கீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரை பெரும் வர்த்தக நிலையங்களின் பேரிலான பிளேயரின் சேவைகளுக்கு இடையேயும் தொழிற் கட்சி அடுத்து வரும் ஆண்டுகளில் ஆளும் வர்க்கம் முழுதாகச் செலுத்த வேண்டியுள்ள கட்டணங்களில் ஒரு பகுதியை மட்டுமே செலுத்தியுள்ளது. பிளேயர் தீர்மானம் இன்றி இருப்பதாகக் கூறி ஆளும் வட்டாரங்கள் அவரை விமர்சனம் செய்துள்ளன. அவர் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் தனது வீதாசாரம் பற்றியே பெரிதும் அக்கறை கொண்டுள்ளார். இதனால் பிரித்தானிய ஆளும் வட்டாரங்கள் வேண்டும் பாணியிலான சமூக தாக்குதல்களில் ஈடுபடுவது சம்பந்தமாக பிளேயர் அரசாங்கம் ஆட்டம் கண்டு போயுள்ளதாக அவை சாடியுள்ளன. "சன்" பத்திரிகை தொடக்கம் "பினான்சியல் டைம்ஸ்" வரையிலான பத்திரிகைகள் நலன்புரி சேவைகளை நீக்குவது சம்பந்தமாகவும் செல்வந்தர்களதும் கம்பனிகளதும் வரிகளைவெட்டி குறைப்பது சம்பந்தமாகவும் அடுத்த தொழிற் கட்சி அரசாங்கம் பெரிதும் தாராண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றுள்ளன.

அரசியல் ஈடாட்டத்துக்கான பரிகாரமும் வர்க்க மோதுதலும்

நாட்டின் நலன்புரி அமைப்பையும் அரச கல்வியையும் அரச சுகாதார சேவையையும் பாதிப்படையச் செய்வது என்பது பிரித்தானிய ஆளும் வர்க்கத்தை வரைபடம் இல்லாத ஆழத்துக்கு இட்டுச் செல்லும் ஒரு சமூகப் பொறியியலாகும்.

இந்த மாற்றங்களின் ஆரம்பத் தாக்கம் பெருமளவிலான தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் முகம் கொடுக்கும் நிதி சம்பந்தமான பிரச்சினைகளின் அதிகரிப்பாக விளங்கியது. ஏர்ணஸ்ட் அன்ட் யங் (Ernest & Young) என்ற கணக்காளர் கம்பனியின் பங்காளரான பட்ரிக் ஸ்ரீபன்சின்படி "12000 பவுண் தொடக்கம் 30,000 பவுண் வரையிலான வருட வருமானம் கொண்ட மக்கள் ஒரு அளவு கணக்கற்ற வேதனையை நிச்சயம் உணர்வர்."

நலன்புரி சேவைகள் ஒழிக்கப்படுவதன் நீண்ட காலத் தாக்கங்கள் பேரழிவு மிக்கதாக விளங்கும். முழுத் தலைமுறைகளும் அரச வசதி அமைப்பு முறையில் தங்கியே வளர்ச்சி கண்டன. இதற்காக அவர்கள் பல தசாப்தங்களாக செலுத்தி வந்துள்ளனர். இது இன்று சரிந்து போகும் கட்டத்துக்கு வந்துள்ளதை அவர்கள் கண்டு கொண்டுள்ளனர். சாதாரண தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் தனிப்பட்ட திட்டங்களை ஓர் யதார்த்தமான தெரிவாக்கும் விதத்தில் கொடுப்பனவுகளை செய்யும் வகையில் நிதியீட்டம் செய்யும் சாத்தியம் கொண்டவர்களாக இல்லை. மக்களில் பலரும்- மிகவும் வறியவர்கள் மட்டுமல்ல- தினசரி வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் அவர்கள் உழைக்கும் ஒவ்வொரு பென்சையும் செலவழிக்கின்றனர்.

பிஸ்கால் ஸ்ரடி நிறுவனத்தின் (Institute of Fiscal Studies) உடைமையும் செல்வ பங்கீடும் என்ற அறிக்கையின்படி "செல்வப் பங்கீட்டின் அடியில் அதிகரிக்கும் எண்ணிக்கையிலான குடும்பங்கள் எதுவிதமான செல்வமும் இல்லாமல் இருப்பது தெரிகின்றது. ஜனத்தொகையில் பெரும்பான்மையினர் உடனே அடையக் கூடியதாகவுள்ள செல்வத்தின் மட்டங்கள் (வீடு அல்லது ஓய்வூதியங்களுடன் சேராதது) பெரிதும் குறைந்ததாக உள்ளது."

பிரித்தானியா உழைத்த ஒவ்வொரு பவுணுக்கும் 3 பென்சுகளை (pence) மட்டுமே சேகரிக்கின்றது. இது 1997ம் ஆண்டில் 10.5 பென்சுகளாக இருந்தது. வளர்ந்தோரில் 10 மில்லியன் மக்கள் மாதாந்தம் 10 பவுனை ஒழுங்காகச் சேகரிக்க முடியாதவர்களாக உள்ளனர். சனத்தொகையில் அரைவாசிப் பங்கினர் 200 பவுண் அல்லது அதற்கும் குறைவான சேமிப்பைக் கொண்டுள்ளனர். 40 வயதுக்கு மேலானவர்களின் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. 24-35 வயதுக்கு இடைப்பட்ட தனிப்பிள்ளையை கொண்ட குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் ஒரு வங்கி சேமிப்பு கணக்கு கூட கிடையாது. 24 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களில் ஐந்திற்கு நால்வர் கடந்த இரண்டு வருடங்களில் எந்தப் பணத்தையும் சேமிக்க முடியாது போயுள்ளனர்.

தனிப்பட்ட கடன்கள் வீதம் 657 பில்லியன் பவுண்களாக (919.8 பில்லியன் டாலர்) உள்ளது. இது வாழ்க்கையை ஓட்டுவதற்கு பலருக்கு கடனே ஒர் மார்க்கமாக இருந்து கொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றது. வளர்ந்தோரின் சராசரி கடன்- ஈடுகள் தவிர- ஆளுக்கு 15000 பவுண்களாக (21000 டாலர்கள்) உள்ளது.

பல காலமாக சாதாரண குடும்பங்களுக்கு வீட்டு உடமை வயோதிப காலத்தில் ஏதோ ஒரு வகையிலான உத்தரவாதமாக இருந்து வந்தது. சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினர் தமது சொந்த வீடுகளையே வாங்குகின்றனர். இந்தச் சொத்து ஈடுகளைத் திருப்பிக் கட்டியதன் பின்னர் மட்டுமே கிடைக்கும். இது வழக்கமாக 25 வருடங்களாக அல்லது அதற்கும் அதிகமானதாக உள்ளது. வட்டிக் கொடுப்பனவுகளைக் கணக்கெடுக்கும் போது மொத்தச் செலவு வீட்டின் மூல விலையைக் காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகமானதாக உள்ளது.

1980பதுகளில் ஒரு பொருளாதாரப் பின்னடைவும் உயர்ந்த வட்டி வீதங்களும் ஈட்டுக் கடன்களின் மறு கொடுப்பனவை மொத்த குடும்ப வருமானத்தின் சராசரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயரச் செய்தது. இது இலட்சக் கணக்கானோரை "எதிர்மறையான பங்குகளில்" தலைமூழ்கச் செய்தது. இதனால் அவர்களின் வீடுகளின் நடப்பு பெறுமதி அவர்கள் திருப்பிக் கட்டிவரும் ஈட்டுக் கொடுப்பனவுகளை விட பெரிதும் கீழானதாக விளங்கியது. இதனால் இலட்சக் கணக்கானோரை சொத்து இல்லாதவர்களாக்கியது.

தொழிற் கட்சி பொருளாதாரத்தில் ஒரு தொடர்ச்சியான வளர்ச்சியின் நலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வரை வேலையற்றோர் மட்டத்தின் வீழ்ச்சியும் கடன் மூலம் எண்ணெய் வார்க்கப் பட்ட நுகர்வு செலவீனங்களும் சமூகப் பிளவுகளின் பெருக்கத்தை திரை போட்டு மூடக் கைகொடுத்தன. ஆனால் உலகப் பொருளாதாரப் பின்னடைவின் சூறாவளி அலைகள் திரண்டு வருகின்றன. ஒரு உக்கிரமான சமூகப் பதட்ட நிலைக்கான காலப் பகுதியையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் ஆட்சியின் முதலாளித்துவ பாரம்பரிய பொறிமுறைகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன.

பொலிசிலும் சட்ட முறையிலும் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க முடியாட்சியின் புகழ் என்றும் இல்லாத விதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது. மத நம்பிக்கை சரிந்து போயுள்ளது. பிரித்தானியா உலகில் குறைந்த அளவிலான "நம்பிக்கையான" விசுவாசம் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஒரு வரையறையான சுயாட்சி வடிவத்துக்கு இடமளிக்கும் வகையில் தேசிய பற்றுதலை புனர்நிர்மாணம் செய்வதை நோக்கமாக கொண்டு ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்துக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பகிர்வுகள் பிரிவினைவாத போக்குகளுக்கு மட்டுமே ஊக்கமளித்துள்ளன. முன்னர் "அரசாங்கத்தின் இயற்கையான கட்சி"யாக காட்டப்பட்டு வந்த கன்சர்வேடிவ் கட்சி ஓர் தெரிவு செய்யப்பட முடியாத கட்சியாகி விட்டது. உள்வாரி அடிதடிகளிலும் ஈடுபடத் தள்ளப்பட்டு உள்ளது. வரலாற்று ரீதியில் அது அடிப்படையாகக் கொண்டு இருந்த நிதி மூலதனத்தின் ஆளுமை கொண்ட பகுதியினரின் செல்வாக்கை அது தொடர்ந்தும் பெறுவதாக இல்லை.

மிகவும் அடிப்படையான அரசியல் பெயர்ச்சி தொழிலாளர் வர்க்கம் தொடர்பான தொழிற் கட்சியின் உறவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற பெரும் சமூக, ஜனநாயக முன்னேற்றங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் முயற்சியோடு இறுகப் பிணைக்கப்பட்டு இருந்தது. பெரும் வர்த்தக நிறுவனங்களின் அரசியல் ஏகபோகத்துக்கு எதிராக தனது கூட்டுப் பலத்தை அணிதிரட்ட தொழிற் சங்கங்கள் மூலமும் தொழிற் கட்சி வழங்கிய அரசியல் பிரதிநிதித்துவத்தின் ஊடாகவும் முயன்றது.

சோசலிசத்தை தமது இறுதி இலக்காகக் கொண்டுள்ளதாக பேரளவில் கூறிக் கொண்டு வந்தாலும் தொழிற் கட்சியும் தொழிற் சங்கங்களும் எப்போதும் பெரும் வர்த்தக நிறுவனங்களின் அடிப்படை நலன்களையே பேணிக் காத்து வந்துள்ளன. இலாப முறையின் படுமோசமான கெடுதிகளை சீராக்கி, அதை சீர்திருத்தும் சாத்தியம் இருந்து கொண்டுள்ளதாக காட்டுவதன் மூலம் இவர்கள் (தொழிற் கட்சியும் தொழிற் சங்கங்களும்) தொழிலாளர் வர்க்கத்தின் விசுவாசத்தை வென்று கொண்டனர்.

இப்போது தொழிற் கட்சி நலன்புரி அரசை (Welfare state) தவிடுபொடியாக்கி, தொழிலாளர் வர்க்கம் ஈட்டிய சமூக தேட்டங்களை தலைகீழாக்க தயாராகி வருகின்றது. அவற்றின் முயற்சிகள் பிளேயர் அரசாங்கத்துக்கு எதிரான கைத்தொழில் நடவடிக்கைகளை அல்லது எந்த ஒர் உருவிலான எதிர்ப்பையும் ஒடுக்கித் தள்ளுவதாகவே இருந்து கொண்டுள்ளது. எரிபொருள் வரிக்கு எதிரான சமீபத்திய எதிர்ப்புக்களின் போது இது ஓர் உச்சக் கட்டத்தை அடைந்தது. அப்போது தொழிற் சங்க காங்கிரஸ் (TUC) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தை அணிதிரட்டும் அழைப்புக்கு ஆதரவளித்தது.

முதல் காலத்தில் பலம் வாய்ந்த பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு பிளேயர் அரசாங்கம் ஜனநாயக உரிமைகளைத் துவம்சம் செய்யும் ஓர் படுபயங்கரமான சட்டங்களை- தெப்பத்தை அமுல் செய்வது அவசியம் என உணர்ந்தது, அசாதாரணமான ஒன்றாகத் தோன்றலாம். இது சுதந்திரமான பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமைகளை கட்டுப்படுத்துவது தொடக்கம் சில வழக்குகளில் ஜூரர் வழக்கு விசாரணையை ஒழிப்பது வரை நீண்டு செல்கின்றது.

ஆனால் இந்த வெளிப்படையான முரண்பாடுகள் ஒரு உண்மையை பிரதிபலிக்கிறது. பரந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கைத் தரங்களை முறைமுறையாகப் பாதிக்கும் ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒரு தேசிய கருத்தொருமைப்பாட்டை தாக்கிப் பிடிக்கச் செய்ய முடியாது. பொதுத் தேர்தலின் உடனடிப் பெறுபேறுகள் என்னவாக இருப்பினும் உத்தியோகபூர்வ அரசியலின் வலதுசாரி நெழிவு சுழிவுகள் இடது புறத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. இன்று இருந்து கொண்டுள்ள அமைப்பினுள் உழைக்கும் மக்கள் தமது மிகவும் அடிப்படையான நலன்களைக் கூட ஈட்டிக் கொள்ள முடியாத ஒரு நிலையில் தொழிலாளர் வர்க்கம் தொழிற் கட்சியில் இருந்து பிரிந்து, ஒரு புதிய பரந்த சோசலிசக் கட்சியை கட்டி எழுப்புவதற்கான ஒரு அரசியல் பிளவுக்கான நிலைமைகள் தோன்றியுள்ளன.