World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Iran seeks detente with US

ஈரான் அரசாங்கம் அமெரிக்காவுடனான உறவுகளை சுமூகமாக்க முனைகின்றது
By Justus Leicht
26 September 2001

Use this version to print

ஈரானிய மக்கள் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் இடம் பெற்ற மக்கள் கொலை சம்பவத்திற்காக தமது அனுதாபங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தெகிரானில் நூற்றுக் கணக்கான இளைஞர்கள் தன்னிச்சையாக வீதிகளில் சென்று பலியான மக்களுக்காக மெழுகு வர்த்திகளை ஏற்றி அஞ்சலி செய்தனர். பஹ்ரெயினுக்கு (Bahrain) எதிரான சர்வதேச உதைபந்தாட்ட போட்டியில், 40.000 பார்வையாளர்கள் ஒரு நிமிட மெளன அஞ்சலி அனுஸ்டித்தனர். ஈரானிய விளையாட்டு கழகம் தனது அனுதாப செய்திகளை அமெரிக்க விளையாட்டு கழகத்துக்கு தெரிவித்துக் கொண்டது.

இது மக்களுடைய தன்னிச்சையான மற்றும் கூட்டுணர்வான உணர்வின் வெளிப்படாகும். ஆனால் ஆட்சியில் இருப்போர் அமெரிக்காவுக்கு தெரியப்படுத்திய நெருக்கமான சைகைக்கு வேறு காரணங்கள் உண்டு. அரசாங்கத்தின் இரு பிரிவுகளான சீர்திருத்தவாதி என்று கூறப்படுகின்ற நாட்டின் ஜனாதிபதி Mohamed Khatami யும், பழமைவாத ஆன்மீக சமயக் குருவான Ali Khamenei யும் அமெரிக்காவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்ளை கண்டித்துள்ளதுடன், வாஷிங்டனுடனான தமது உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கான சைகைகளை அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி காட்டாமி இப் பயங்கரதாக்குதல் நடைபெற்ற அன்றே ''பயங்கரவாதத்திற்கு'' எதிரான ஒரு சர்வதேச போராட்டத்திற்கு அழைப்புவிட்டார். பின்னர் இவ் அழைப்பை ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) தலமைக்குள்ளால் கூட்டப்படல் வேண்டும் என புத்திசாலித்தனமாக அதை மாற்றிக் கொண்டார். வெளிநாட்டு அமைச்சரான Kamal Kharrazi இத்தாக்குதலுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருக்கும் அதேசமயம், இஸ்ரேல் இவ்விடயத்தை தனது ''ஆத்திரமூட்டும் இலக்குக்காக'' இதன் பயன்படுத்துகின்றது என அவர் விமர்சித்து உள்ளார்.

தெஹ்ரானின் நகர பிதா, நியூயோர்கில் இருக்கும் தனது அரசாங்க கூட்டாளியான Giuliani க்கு ஒரு அனுதாப செய்தியை அனுப்பி வைத்துள்ளார், அதில் ''சமாதானமாக வாழும் அனைத்து தேசியங்களுக்கும் இடையே நடைபெறும் பயங்கரவாதத்தை திடகாத்திரமான ஒத்துழைப்பால் முறியடிக்க முடியுமென நாங்கள் நம்புகிறோம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது. இது பல வருடங்களுக்கு பின்னால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே முதல் தடவையாக நடைபெறும் உத்தியோக பூர்வமான அரசாங்க செய்தியாகும். ஜனாதிபதி காட்டாமி அண்மையில் பத்திரிகைக்கு வழங்கிய செய்தியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகளை உத்தியோக பூர்வமாக ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விட்டார்.

பழமைவாத ஆன்மீக வாதிகளால் பகிரங்கமாகப் பயன்படுத்தப்படும், விசேடமாக பாரம்பரிய வெள்ளிக் கிழமை பிராத்தனை மேடையில் 22 வருடங்களுக்கு முன்னால் ''அமெரிக்கா ஒழிக'' என கூக்குரல் எழுப்பிய முறை முதல் தடவையாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதற்கு பதிலாக ''அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டுள்ளார்கள்'' என மிக உயர்தர சமயக் குருவான Ayatollah Emami Kashani என்பவர் வாதிட்டுள்ளார். ''இந்த அழிவு மிகவும் கவலைக்குரியது, மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். அமெரிக்கா போன்றதொரு பெரிய சக்திவாய்ந்த நாட்டின் முன்மாதிரிகையிலும், ஒரு புதிய அணுகு முறைகளிலும்தான் இதை மேற்கொள்ள வேண்டுமென'' காஷானி மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் இஸ்ரேலை விமர்சித்து விட்டு, அது அமெரிக்க அரசை ''ஆதிக்கம் செலுத்துவதாக'' வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சரான Colin Powell ஈரானின் இப் போக்குக்கு நன்றி தெரிவித்ததுடன், ஈரான் தனது நிலைப்பாட்டில் இருந்து மிகவும் ஒரு கணிசமான மற்றும் சாதகமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், இது ஒரு பயனுள்ள விடயம் மேலும் ஆராயப்படல் வேண்டும் எனவும் அவர் மிக அவதானத்துடன் குறிப்பிட்டார். Powell உடன் கடமையாற்றும் உயர் அதிகாரிகளில் ஒருவரான Richard Haass, எனபவர் Associated Press எனும் பத்திரிகைக்கு, ஈரான் அமெரிக்காவின் ''பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டில்'' ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அமெரிக்காவின் கடுமையான அரசியல் மற்றும் அதனது இராணுவ பயமுறுத்தல் பிரச்சாரம் என்பன ஈரானின் மாற்றத்திற்கான ஒரு கணிசமான பாத்திரத்தை இங்கு வகிக்கலாம். அமெரிக்காவின் பட்டியலில் ஈரான் ஒரு ''துரோகி'' நாடாகும், ஏனெனில் அதனுடைய தெகிரான் அரசாங்கம், இஸ்லாமுக்கும், இஸ்ரேலிய எதிர்ப்பு குழுக்களுக்கும் ஆதரவை கொடுப்பதினூடு மத்திய கிழக்கில் தனது ஆதிக்கத்தை மேலும் பலபடுத்திக் கொள்ள முயலுகின்றது என்பதனாலாகும்.

அமெரிக்க வானொலியான Radio Free Europe இதைப் பற்றி மிகவும் திருத்தமான முறையில் கூறியுள்ளது. ''அதாவது இந்த நியூயோர்க், வாஷிங்டன் மற்றும் பென்சைல்வேனியா போன்ற தாக்குதல்களின் பின்னணியில் தெகிரான் மறைந்து இருப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. ஆனால் காட்டாமி, பயங்கரவாதத்திற்கான வேர்களுடன் தெகிரான் நெருங்கிய உறவை கொண்டுள்ளதாக வலியுறுத்தியிருந்தார். வெறுக்கத்தக்க அமெரிக்க எதிர்ப்புவாத செய்திகளை மிகவும் பகிரங்கமாக கூறிவந்த ஈரானிய அரசியல் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான வன்முறைகளை வரவேற்பது மட்டுமல்லாது, அவற்றை உணர்வு பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் எனவும் கூறுகின்றனர். தெகிரான் பயங்கரவாதத்திற்கான ஆதரவை வாயளவில் மட்டும் கூறாது அவற்றை நடைமுறைப்படுத்தவும் முன்நிற்கிறது. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சின் வருடாந்த அறிக்கையில், ஈரானிய அரசு பயங்கரவாதத்திற்கான ஆதரவை வழங்குவதில் உலகில் மிகவும் ஒரு நடைமுறையான முன்னணிப் பாத்திரத்தை வகிப்பதாக'' குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வானொலி தெரிவித்த மிகவும் அழுத்தம் திருத்தமான பயமுறுத்தல் செய்திகள் பின்வருமாறு, ''யார் எப்பொழுதும் குற்றம் செய்கிறாரோ, அவருடைய துரோகத்திற்கான விலையை அவர் இறுதியாக செலுத்த வேண்டி ஏற்படும். தெகிரான் கடைபிடித்து வரும் தனது கடுமையான அமெரிக்க எதிர்ப்பு வாதத்திலிருந்தும், மற்றும் பயங்கர வாதத்துக்கு கொடுக்கும் ஆதரவிலிருந்தும் பின்வாங்க வேண்டும். Washington Times பத்திரிகையின் செப்டம்பர் 13 செய்தியில், மத்திய கிழக்கில் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட பரந்துபட்ட தாக்குதலும், அத்துடன் ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலுள்ள பயிற்சி முகாம்களும் தாக்கி அழிக்கப்பட இருக்கின்றன'' என்பது போன்ற செய்திகளையும் வெளியிட்டது.

சமூக நெருக்கடி

அமெரிக்காவின் இம்மாதிரியான பயமுறுத்தல்களினூடு மட்டும், ஒரு நீண்ட காலமாக ஈரானிய பாரம்பரியமாக அரச தத்துவார்த்தமையமாக இருந்த அமெரிக்க எதிர்ப்புவாதத்தை தெகிரான் தலைமையானது இலகுவில் நீக்கிக் கொள்ளாது. ஆனால் அங்குள்ள படுமோசமான பொருளாதார நெருக்கடியும் அதனுடன் இணைந்தால் போல் வெடித்துக் கிளம்பும் அரசியலுமே இம் மாற்றத்திற்கான மிகவும் ஒரு தீர்க்கமான காரணியாக விளங்குகிறது.

ஈரான் மிகவும் ஆளமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கிறது. இந் நாட்டின் வெளிநாட்டுக் கடன் 9 மில்லியாடன் அமெரிக்க டொலர்களாகும், இதனுடைய உத்தியோக பூர்வமான பண வீக்கம் 20 வீதம் ஆகும், உத்தியோக பூர்வமற்ற அறிக்கையின்படி வேலையில்லாத் திண்டாட்டம் 30 வீதம் வரையில் உள்ளது, மற்றும் இந் நாட்டின் ஏழ்மை நிலை 40 வீதத்தை எட்டியுள்ளது. வளர்ச்சி அடைந்து செல்லும் சமூகத்திற்காக ஒரு வருடத்துக்கு 750.000 மேலதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டியுள்ளது.

இம்மாதிரியான நிலைமைகள் இங்கே பெரிய வேலை நிறுத்தங்கள் மூலமாகவும், பகிரங்கமான எதிர்ப்புகளினூடாகவும், மேலும் காவல்படையினருடனான இரத்தம் தோய்ந்த மோதல்களுக்கு செல்வதினூடாகவும் எதிர்கொள்ளப்படுகின்றன. ஈரானிய ஆட்சியாளர்கள் வளர்ச்சியடைந்து செல்லும் இந்த எதிர்ப்பு போராட்டங்களை, ஒரு சர்வதேச ரீதியான ஆதரவு இல்லாமல் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. இதன் அடிப்படையில் ''சீர்திருத்தவாத'' பிரிவைச்சேர்ந்த ஜனாதிபதி காட்டாமி மேற்கத்தைய நாடுகளுடன் ஒரு இணைவுக்கு போகிறார். அவர் ஒரு மிகப் பரந்துபட்ட தனியார்மயப்படுத்தலையும் வெளிநாட்டு மூலதனத்தை உள்ளே வரவழைப்பதையும் கொண்ட லிபரல்வாத பொருளாதார வேலைத்திட்டத்தை முன்வைப்பதினூடு பரந்துபட்ட ஜனநாயகத்தை கொண்டு வரலாம் என்கிறார். ஆனால் அவர் கடைசியாகக் குறிப்பிட்டதை ஒரு வார்தையளவிலும் பெற்றுக்கொள்ளமுடியாது. காட்டாமி ஒருபோதும், பழமைவாத அடக்குமுறை போக்குகளுக்கு எதிரானவர்களுக்கு எதிராக உண்மையில் எதையும் முன்னெடுக்க முயற்சிக்கவில்லை. அவருடைய நெருக்கமான சக ஆதரவாளர்கள் சிறைப்படுத்தப்பட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ அவர் அவற்றிற்காக எதனையும் செய்வதில்லை.

பழமைவாத பிரிவான அரசாங்கம் நீண்ட காலமாக திறந்த பொருளாதாரத்தை எதிர்த்து வந்தது. அது அதனது சடத்துவ வருமானங்கள் கிடைத்த பொதுப்பிரிவுகளிலிருந்தும், மற்றும் பிற்போக்கு பொருளாதாரத்திலிருந்தும் கிடைக்கப் பெற்ற இப்பகுதிப் பொருளாதாரம் உலகச்சந்தையின் முன்னால் பறிபோவதையிட்டு அச்சமடைந்துள்ளது. தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்த தனிமைப்படுத்தல் நிகழ்சியை தடுத்து நிறுத்த முடியாதுள்ளது. நீண்டகாலமாக இப் பழமைவாதிகள் சீர்திருத்தவாதிகளினது பொருளாதாரக் கேள்விகளை நிராகரிக்கையில், காட்டாமி மத குருமாருடைய அடக்குமுறை போக்குகளை மேலும் வலுப்படுத்த ஆதரவு கொடுத்தார் அல்லது அதற்காக அவர்களுடன் குறைந்த பட்சம் ஒத்துழைத்தார்.

கடந்த யூன் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் காட்டாமி மிகப் பெரும்பான்மையான வாக்குகளால் வெற்றி பெற்றார், இது எவ்வாறு என்பது இறுதியில் அரசாங்கத்தை முற்றிலும் மாற்றியமைப்பதில் உறுதியாயிற்று. காட்டாமி பழமைவாத தீவிரவாதிகளின் அழுத்தத்தின் கீழ் பல விடயங்களை செய்வதற்கு உட்படுத்தப்பட்டார். மந்திரி சபையில் ஒரு பெண் பிரதிநிதியும் காலடி எடுத்து வைக்க முடியாதவாறு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பொது இடங்களில் பகிரங்கமாக சவுக்கடிகளும், கல்லெறிந்து காயப்படுத்துவதும், அத்துடன் கொலை செய்வதும் போன்ற சம்பவங்கள் மிகவும் பரவலாக நடைபெறுகின்றன. காட்டாமியின் சீர்திருத்தவாதிகள், இந் நாட்டு முறையைப் பற்றி வெளிநாடுகள் அறிய நேர்ந்தால் எமது சொந்த மக்களுக்குத்தான் அவதூறாக இருக்கும் என விமர்சித்தனர்.

ஒரேயொரு முக்கியமான மாற்றமாக, பொருளாதார மந்திரி Hossein Namazi என்பவர், ''சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறாக சமூக உரிமைகளை முதன்மைப் படுத்தியுள்ளார்'' என Financial Times பத்திரிகை வழங்கிய மதிப்பீட்டையடுத்து அவர் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஈரானுடைய பொருளாதாரத்தை முன்வைத்த Tahmasb Mazaheri என்பவர் இப் பதவியில் சேர்த்துக் கொள்ளப் பட்டார். அதேசமயம் காட்டாமி இதுவரையிலும் தனது எண்ணை அமைச்சராக இருந்து வரும் Bijan Namdar க்கு எதிராக பழமைவாதிகளால் கூறப்பட்ட காரசாரமான விமர்சனத்தை கருத்தில் எடுத்துக் கொண்டார். இந்த Zanganeh என்பவர், வெளிநாட்டு நிறுவனங்களுடன், மில்லியன் கணக்கான பெறுமதிக்கு மறுபடியும் கொள்வனவு (Buy-Back) செய்ய வேண்டும் போன்ற ஒப்பந்தத்துக்கு பொறுப்பானவர் ஆவார்.

ஒரு முதலாவது ஈரானிய தனியார் வங்கி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதில் வெளிநாட்டு முதலீடு சம்பந்தமான சட்டத்தை தளர்த்துவதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யூலை மாதத்தில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்த முன்னைய மற்றும் புதிய வெளிநாட்டு அமைச்சரான Kamal Kharrazi அங்கு கொலம்பியா பல்கலைக் கழகத்தில், பலவிதமான எண்ணை நிறுவனங்களின் ஆதரவுகளின் பேரில் உரையாற்றினார். அவர் அமெரிக்க பிரதமர் புஷ் இடம் ஈரானுக்கு மேலான பொருளாதாரத் தடையை நீக்குமாறு கேட்டுக் கொண்டார். இதே கோரிக்கையையே Kaukasus இன் பொருளாதாரத்திலும் மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களிலும் கேட்கப்பட்டன. ஆனால் அமெரிக்கா ஈரானுக்கு மேலான இப்பொருளாதாரத் தடையை மேலும் தொடர்ச்சியாக நீடித்தது. அதற்கான காரணம் ஈரான் Hisbollah, மற்றும் பாலஸ்தீனிய Hamas, இஸ்லாமிய Jihad போன்றவைகளுக்கு ஆதரவாக இருப்பதனாலாகும்.

ஜனாதிபதி புஷ் ஆல் அறிவிக்கப்பட்ட ''பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்'', இது ஈரானுடைய அரசியல் அபிவிருத்திகளையும் விரைவுபடுத்தி உள்ளது. பழமைவாத மதகுருவான Khamenei இவ்வாறான பொருளாதாரம் ஆரம்பமாவதையிட்டு அதைப் பின்னடிக்கவோ அல்லது அதை நிராகரிக்கவோ அஞ்சினார், ஏனெனில் லிபரல்வாத அரசியல் போக்கு இதனால் ஏற்பட்டு தமது சொந்த ஆட்சியே குழிபறிக்கப்பட்டுவிடும் என்பதனாலாகும். ''பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்'' எனும் தற்போதைய நிலையில் இவர்கள் உணர்ச்சிமிக்க மனித உரிமைகள், மற்றும் ஜனநாயக மயப்படுத்தல் போன்றவற்றோடு தம்மை ஈடுபடுத்துவதைக் காட்டிலும் இப் பொருளாதாரத்தை முன்னெடுப்பதையே முதன்மைப்படுத்தினர். ''பயங்கரவாதத்துக்கு எதிரான'' இப் பரந்துபட்ட கூட்டில் எதுவானாலும் வரவேற்கப்படக் கூடியதே, இதற்கு எப்படியான சர்வாதிகார போக்கை தமது சொந்த அரசாங்கம் வைத்திருப்பினும் கூட பரவாயில்லை எனபதே அவர்களின் நிலையாகும்.

பிராந்திய நலன்கள்

ஈரான் அரசாங்கம் தற்போதைய நிலமைகளில், ஆப்கானிஸ்தானின் தலிபானுக்கு எதிராக ஒரு கூட்டுக்கு போவது அல்லது அதனது பழைய பரம விரோதியான ஈராக்குடன்கூட்டுக்குபோவதன் மூலம் அப்பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்துவதற்கான வழிகளில் செல்வது போன்ற சாத்தியங்களே காணப்படுகின்றன.

தலிபான், ஆட்சிக்கு வந்ததிலிருந்து தெகிரானுக்கும், காபுலுக்கும் இடையேயான உறவுகளில் மிகவும் பதட்டமான போக்குகளே காணப்படுகின்றன. 1994 முதல் 1996 வரையில் சவூதி அரேபியா தலிபானை கட்டியெழுப்பியதுடன் பாக்கிஸ்தானிலிருந்து கிடைத்து இராணுவ ஆதரவின் மூலம் ஆப்கானிஸ்தானில் ஈரானின் ஆதிக்கத்துக்கு எதிராக தனது செல்வாக்கை பலப்படுத்தியது. ஈரான் அதிலிருந்து, ''வடக்கு கூட்டுக்கு'' ஆதரவளித்து வருகிறது. அண்மையில் கொலை செய்யப்பட்ட ஜெனரல் Ahmed Schah Massud உடைய ''வடக்கு கூட்டு'' இன்று வரையிலும் ஒரு உத்தியோகபூர்வமான அரசு என மேற்கத்தைய சக்திகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலிபான் அனேகமாக Paschtunen எனும் மக்கள் பிரிவின் அடித்தளமாக கொள்கையில் வடக்கு கூட்டு அதனுடைய பெரும்பான்மையான Tadschiken மக்கள் பிரிவினை ஆதரவாக கொண்டுள்ளது. Schiiten இவர்கள் ஒரு சிறுபான்மை சமயத்தை சேர்ந்தவர்கள், மற்றும் இவர்களுடைய இஸ்லாம் ஈரானிருந்து வந்ததுடன் இது ஈரானின் அரச மதமுமாகும், Sunnitischen இச்சமயத்தினுடைய வரவு இதற்கு நேர்மாறாக விளங்குவதோடு இது சில சமயங்களில் ஒரு மதமற்ற போக்காகவும் கருதப்படுகிறது.

இந்த வடக்கு கூட்டு (Northern Alliance) முன்னாள் சோவியத் யூனியனின் எல்லையிலிருக்கும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளில் 10 வீதத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளதுடன், இதற்கு ரஷ்யா Usbekistan போன்ற நாடுகள் ஆதரவளிக்கிறது. இந்நாடுகளில் உள்ள அதிகாரத்துவ அரசுகள் எப்பொழுதும் தொடர்ச்சியாக அடிப்படை தீவிரவாத இயக்கமான ''உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்திற்கு'' எதிராக போர் தொடுக்கின்றன, ஏனெனில் அது ஆப்கானிஸ்தானுடைய இராணுவத் தளத்திலிருந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவதுடன், மேலும் தலிபான் மற்றும் Oslama Bin Laden போன்றோருடைய ஆதரவுகளும் இவர்களுக்கு கிடைக்கின்றன என்பதனாலாகும்.

ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், பழைய சோவியத் குடியரசுகளுக்கும் அதே போன்று ஈரானுக்கும் பெருமளவிலான போதைவஸ்து கடத்தல் வியாபாரங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து நடைபெறுவதுவே. போதைவஸ்து கடத்தல் மன்னர்களை போராடி வெல்லும் யுத்தத்தில் ஆப்கானிஸ்தான் ஈரான் எல்லைகளில் கடந்த வருடங்களில் நூற்றுக்கும் அதிகமான காவல் படையினர் உயிர் நீத்தனர்.

ஈரான் அனேகமாக அதனது பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்களை மத்திய ஆசியாவைச் சேர்ந்த அரசுகளான Turkmenistan, Tadschikistan மற்றும் Usbekistan போன்ற நாடுகளுடன் பேணிக் கொள்கின்றன. ரஷ்யா தெகிரானுடன் மிகவும் ஒரு மூலாதாரமான உறவை ஏற்படுத்திக் கொள்ள பெருமளவில் முயற்சி செய்கிறது. இதன்மூலம் மத்திய ஆசியாவில் விசேடமாக துருக்கி மொழி பேசும் Tadschikistans குடியரசை தவிர மற்றைய பகுதிகளில் NATO நாடான துருக்கியின் செல்வாக்குக்கு உட்படுத்துவதற்கு எதிரானதாகும்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு இராணுவத் தாக்குதலை அமுல்படுத்த அமெரிக்கா வடக்கு கூட்டை பாவித்தால், அது ஈரான், மத்திய ஆசியாவின் அரசுகள், ரஷ்யா போன்ற நாடுகளுடன் மிகவும் வரையறைக்குட்பட்ட விதத்திலேனும் இணைந்து வேலை செய்வது சாத்தியமானதே. அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை அமுல் படுத்துவதற்கான உரிமைகளை Tadschikistan இராணுவத் தளத்தில் பெற்றுள்ளது மேலும் ஆப்கானிஸ்தான் எல்லையில் ரஷ்யா தனது 25.000 துருப்புக்களை நிறுத்தியுள்ளது. செப்டம்பர் 13 ல் ஈரான், ரஷ்யா, Usbekistans மற்றும் Tadschikistans போன்ற நாடுகளைச் சேர்ந்த பிரதிநிகள் Duschanbe என்னும் இடத்தில் பூட்டிய கதவிற்குள் ஆப்கானிஸ்தான் பிரச்சனையைப் பற்றி கலந்துரையாடினர். Tadschikistan பகுதியில் உள்ள ரஷ்ய துருப்புகள் அனேகமாக தாக்குதலுக்கு ஆயத்தமான நிலையில் உள்ளனர்.

வடக்கு கூட்டு தாமாகவே அமெரிக்காவுடனான ஒரு கூட்டை தெரியப்படுத்தியது. இதனுடைய ''வெளிநாட்டு அமைச்சர்'' Abdullah Abdullah என்பவர், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராட யாராவது விரும்பினால், அவர்கள் இந்த பேர்வழிகளுக்கு எதிராக பல வருடஙகளாக போராடிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி ஆளமான கவனத்திற்று எடுத்துக் கொள்ளல் மிகவும் அவசியம் என அவர் கடந்த ஞாயிறன்று தெரிவித்தார். Oslama Bin Laden உடைய பயங்கரவாத முகாம்கள் ஆப்கானிஸ்தானில் மிகவும் பரந்தஅளவில் மலைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் எவ்வாறு பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் வெற்றிகரமாக அமைய முடியும்? ''நாம் எமது இதற்கான சிக்கல்களை போக்கி கொள்வதற்கான ஒரு உடன்பாட்டுக்கு வரமுடிந்தால், இத் தாக்குதலை ஒரு மிகவும் பயனுள்ளதாக கொண்டு செல்ல முடியும் ''என கூறியுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் இணந்து செயற்படுவதற்கான தனது சம்மதத்தை தெரிவித்துக் கொண்டது. இக் கருத்துப்பட ஒரு பேட்டியை அரசாங்க சார்பான பத்திரிகையான Iran News செம்டம்பர் 17 ல் வெளியிட்டது. "கூட்டு ஆப்கானிஸ்தானின் உயர்வான சபை'' யின் அங்கத்தவரான Mohammad Fayaz என்பவர் குறிப்பிட்டதின் பிரகாரம் ஆப்கானிஸ்தானுக்கு மேலான அமெரிக்காவின் தாக்குதலை அவர் ஆதரித்துக் கொண்டார். ''உலக வர்த்தக நிறுவனம் மற்றும் பென்டகன் மீதான தாக்குதல்களை Osama Bin Laden என்பவர்தான் செய்தார் என்பது ஊர்ஜிதமாகும் பட்சத்தில் அவருக்கு எதிராகவும், அவருடைய இயக்கங்களுக்கு எதிராகவும் பதில் நடவடிக்கை தாக்குதல்களை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு பூரண உரிமை இருக்கிறது'' என அவர் குறிப்பிட்டார். ''Taliban னையும் Osama Bin Laden னையும் ஆப்கானிஸ்தான் தேசம் உண்மையில் வெறுத்து ஒதுக்குகின்றது'' என அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பேட்டி கொடுக்கப்பட்ட அதேநாளில் ஈரானைச் சேர்ந்த மதத்தலைவரான Ayatollah Ali Khamenei ஆப்கானிஸ்தானுக்கு மேலான அமெரிக்காவின் தாக்குதல் என்பது ''தவிர்க்கப் படமுடியாதவாறு மேலும் அதிகமான மக்களின் பரிதாமான சாவுகழுக்கே வழிவகுக்கும்'' எனத் தெரிவித்தார். கனடாவைச் சேர்ந்த National Post பத்திரிகை அதனது மறுநாள் செய்தியில், ''ஈரானுடைய அதி உயர்ந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள்'' கனடாவின் வெளிநாட்டு அமைச்சரான Manley உடனான தொலைபேசி கலந்துரையாடலில், ஆப்கானிஸ்தானுக்கு மேலான இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுக்குமாறு இவர்கள் கேட்டுக் கொண்டனர். இக் கோரிக்கையை நிராகரித்த Manley, அதே சமயம் அவர் தனது ஈரானிய வெளிநாட்டு அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தது யாதெனில், ''வெளிப்படையாக கூறினால் தலிபானைப் பற்றியும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றிய அக்கறை மிகக் குறைவாகவும், அதே சமயம் இந்நிலமைகளைப் பற்றி, அதாவது மேற்கத்தைய நாடுகள் கொண்டுள்ள அபிப்பிராயங்களே அவர்களுக்கு அதிக அக்கறைக்குரியனவாக இருக்கின்றன'' என்பதையும் மேலும் தெளிவாக்கினார்.

நிலைமை முடிவற்றதாக இருக்கின்றது

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சில சமயம் ஒரு கூட்டு ஏற்பட்டால் அது எவ்வாறு முன்னெடுக்கப்பட இருக்கிறது என்பது இதுவரையிலும் ஒரு திறந்த விடயமாகவே உள்ளது. ஈரான் தனது ஆகாய தளங்களை அமெரிக்காவின் பாவனைக்கு கொடுப்பதும், பின்னால் துருக்கியில் உள்ள இராணுவத் தளங்களிலிருந்து அவை வெளிக்கிளம்ப இருப்பதும் அல்லது அமெரிக்க துருப்புகள் தமது பிராந்தியங்களை விட்டு நகர நேருவதும் போன்ற இந் நடவடிக்கைகள் மிகவும் சுலபமானவை அல்ல. ''எனினும் ஈரான் மூன்றாவது நாடுகளான ரஷ்யா, ஏனைய இஸ்லாமிய நாடுகள் அல்லது கூட்டுச் சேரா நாடுகளூடாக மிக முக்கியமான இரகசிய உளவுச் செய்திகளை மெனமாக இருந்து கொடுக்க முடியும்.'' இவ்வாறு செப்டம்பர் 17 ல் குறிப்பிட்ட பிரித்தானிய Times பத்திரிகை, இதனூடு இராஜதந்திரிகளுக்கும் இதைப்பற்றி அறிவுறுத்தியது.

எல்லைகளில் இருந்து ஈரானுடன் இணைந்து வேலை செய்வதற்கான விருப்பத்தை அமெரிக்காவின் தரப்பில் இருந்தும் காணக் கூடியதாக இருக்கிறது. இந்நாடு அமெரிக்காவினது தாக்குதலுக்கான இலக்காக இல்லாவிடினும், இப்பகுதியில் ஈரான் ஆதிக்கத்தை பெறுவதை அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்க நிர்வாகம் எதிர்நோக்கும் அபாயம் என்னவெனில் இப்பிராந்தியத்தில் எண்ணெய், எரிவாயு அல்லது பொருட்களின் போக்குவரத்து நடைபெறும் மத்திய இடத்தில் ஈரான் அமைந்திருப்பதாகும்.

பாக்கிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் தலிபானுக்கு வழங்கிய ஆதரவு இப்பிரதேசத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களை மத்தியஆசியாவில் ஈரானில் தங்கியிருக்காது சுயாதீனமாகப் பெற்றுக்கொள்ளவாகும். அமெரிக்காவின் எண்ணை நிறுவனமான Unolocal அதே போன்று சவூதிக் கோப்பரேசனைச் சேர்ந்த Delta நிறுவனமும், ஒரு எண்ணை -- எரிபொருள் குழாய் வழிப் பாதையை Turkmenistan முதல் கொண்டு ஆப்கானிஸ்தான் ஊடாக செல்லும் பாக்கிஸ்தான் வெளிவரையிலும் அமைக்க திட்டமிட்டுள்ளனர். பெருமளவிலான Turkmenischen எண்ணெய், எரிவாயு இதுவரையிலும் ஈரானுடைய குழாய் வழிப்பாதையினூடாகவே சென்று கொண்டிருக்கின்றன. ஈரான் ஒரு மிகவும் பெரிய எண்ணை குழாய் வழிப் பாதையை இதுவரையில் Kasachstan, Turkmenistan போன்ற இடங்களில் அமைத்து, உக்ரேயன், ஆர்மேனியனில் எண்ணை, எரிவாயு வர்த்தகத்தையும் மற்றும் போக்குவரத்துகளையும் மேற்கொள்கிறது. மேலும் துருக்கியுடன் ஜனவரி மாதத்தில் ஒரு புகையிரதப் பாதையை அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்றன. இப்பாதை Alma-Ata (Kasachstan) முதல் Taschkent (Usbekistan) ஊடாக சென்று பின்னர் தெகிரானிலிருந்து இஸ்தாம்புல் வரைக்கும் நீடிக்கும். இது மத்திய ஆசியாவில் ஐரோப்பாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அடிப்படையில் இது இடம்பெறுகின்றது.

அமெரிக்காவுடன் நெருங்கிக் கொள்வதற்கான ஈரானுடைய முயற்சிகள் அமெரிக்காவைப் பொறுத்த வரையில் இதுவரையிலும் சுமாராகவே இருந்து கொண்டுள்ள வேளையில், ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்த மட்டில் அவற்றில் விசேடமாக ஜேர்மனி ஈரானுடன் இணைந்து கொள்ள எடுக்கும் முயற்சியானது அதற்கு பிரச்சனையைக் கொடுக்கின்றது. ஈரானிய செய்தித் துறையான IRNA செவ்வாய் வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கும், ஜேர்மனியின் வெளிநாட்டு அமைச்சர் Joschka Fischer க்கும் இடையேயான தொலைபேசிக் கலந்துரையாடலில், அவர் தனது அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் கவலையாக இருப்பதாக தெரிவித்தார். Fischer மறுபடியும் தெரிவிக்கையில், ''இப்பிரச்சனை தொடர்பாக இஸ்லாமியக் குடியரசான ஈரான் காட்டும் அக்கறை நியாயமானதும், இயற்கையானதும் எனவும், அதேசமயம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஏனைய குழுக்கள் அமெரிக்க அரசின் அமைதியற்ற போக்கு தொடர்பாக கவலைகொண்டுள்ளன'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

See Also:

01 Octobre 2001

பாக்கிஸ்தான் இராணுவ ஆட்சி அமெரிக்க யுத்த கூட்டணியின் பின்னே அணிதிரள்கிறது