World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : இந்தியா

In the name of America's "war on terrorism"

Hindu regime in India fans anti-Muslim sentiment

அமெரிக்காவின் "பயங்கரவாத யுத்தத்தின்" பெயரில்,

இந்தியாவில் உள்ள இந்துமத ஆட்சி இஸ்லாமிய விரோத உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகிறது.

By Keith Jones
20 September 2001

Use this version to print

பூகோள பயங்கரவாதத்திற்கு எதிரான ஐக்கிய அமெரிக்க அரசுகள் தலைமையிலான கூட்டணியில் தான் சேர்ந்துகொள்ள உள்ள தனது தயார் நிலையை, இந்தியாவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ) அரசாங்கம் விழுந்தடித்து முன் சென்று பிரகடனம் செய்துள்ளது. இந்தியாவின் அரசியல் மேல் தட்டினரின் பெரும் பகுதியினர் தன்னம்பிக்கையுடன் தாம் நன்னிலை அடைந்த மனநிறைவு நிலையை அடைந்தனர். ஏனெனில் கடந்த வாரத் தாக்குதலால் தொடக்கிவிடப்பட்ட நெருக்கடி இந்தியாவிற்கு இரட்டை சந்தர்ப்பத்தை அளித்துள்ளதாக அவர்கள் கண்டனர். ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு ஆதரவாக அணிதிரண்டு இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான எதிர் விளைவுகளை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியா புதியதொரு இந்திய அமெரிக்க "மூலோபாய கூட்டுப்பங்காண்மையை" உறுதியாகச் சமைத்திடும் அதேவேளையில், அதன் வரலாற்று ரீதியாகப் போட்டி அரசாக உள்ள பாக்கிஸ்தானை "பயங்கரவாத அரசு" என்று குற்றப்பழிச் சாட்டிற்கு ஆளாக்க முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை வழிநடத்தும் பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) --வலதுசாரி இந்து தேசியவாதக் கட்சியின் அதிகாரிகள் சிலர்-- "இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு" எதிராக அமெரிக்க--இந்திய--இஸ்ரேலிய-- ஊடச்சு ஒன்று வெளிப்பட்டுத் தோன்ற ஆரம்பித்துள்ளதைப் பற்றித் தனி மறைவில் பேசிக் கொண்டுள்ளார்கள்.

அதன்பின் மனப்பாங்கானது வியப்பைத் தருகின்ற முறையில் மாற்றம் பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையைத் தொடுக்க பாக்கிஸ்தானிய அரசாங்கத்துடன் கூட வேலைசெய்யும் தனது நோக்கத்தைப்பற்றி சமிக்கை செய்ததோடு, ஏக்கம் மற்றும் பரபரப்பூட்டும் அச்சம் ஆகியன புதுடில்லியில் ஆட்சி செய்ய ஆரம்பித்துள்ளன. அயல்நாட்டுக் கொள்கை வல்லுனரும் சுதந்திர நாடாளுமன்ற உறுப்பினருமான குல்திப் நய்யார், "சம்பவங்களுக்குப் பின்னனியில் பாக்கிஸ்தானிற்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கும் இடையில் ஏதோ ஒன்றுநடந்து கொண்டிருப்பதாக இந்தியா ஐயப்படுகின்றது. இதில் இஸ்லாமாபாத் இந்தியாவின் நலன்களுக்கு சாதகமற்ற ஒரு விலையைக் கறந்தெடுக்கின்றது என்று எண்ணுகின்றது" என கூறியுள்ளார்.

பத்திரிகைச் செய்திகளின்படி, இந்தியப் பிரதமர் அட்டல் வாஜ்பாயி, வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த்சிங் மற்றும் உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி ஆகியோர், செவ்வாய்க் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் பெரும் பகுதியை, பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர்களுடன் உடன்பாடு ஒன்றிற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் வரவில்லை என்ற வாஷிங்டனின் உத்தரவாதங்களை எடுத்துக் கூறுவதில் செலவிட்டனர். பாக்கிஸ்தானின் மூன்று நிபந்தனைகளை: காஷ்மீர் பற்றிய பிரச்சினையில் இந்தியா-பாக்கிஸ்தான் தகராறில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் நடுவராய் இருந்து இணக்குவிக்க, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலைமையிலான கூட்டணியில் இருந்து இந்தியா மற்றும் இஸ்ரேலைத் தவிர்த்தல் மற்றும் ஒரு நிதி உதவிப் பொதியம் ஆகிய நிபந்தனைகளை ஐக்கிய அமெரிக்க அரசுகளை ஏற்கச் செய்வதில் பாக்கிஸ்தான் வெற்றிகண்டுள்ளது என்று சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனம் கூறுவதை, ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உயர் அதிகாரிகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்கள் என்பதை அவர்கள் தமது உணர்ச்சி வசப்பட்ட அமைச்சரவை சகாக்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இருந்தபொழுதும் இந்து பத்திரிகையின் செய்தி அறிக்கை கூறுகின்றது, கூட்டம் கலைந்தபொழுது "கடந்த காலத்தில் பயங்கரவாதத்திற்கு உதவியும், துணை போனதுமான பாக்கிஸ்தானின் நிலைச்சான்றை --தலிபானுடன் பாக்கிஸ்தான் கொண்டுள்ள நெருக்கமான உறவுகள் மற்றும் காஷ்மீரில் இந்திய விரோத கெரில்லாக்களுக்கு ஆதரவு பற்றிய குறிப்பு-- பார்த்து அமெரிக்கா கண்ணசைக்கின்றது என்ற குற்றம் சுமத்தலைப் பற்றி பல காபினெட் அமைச்சர்கள் சங்கடப்பட்டார்கள்.

கூட்டம் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சிறிய அமைப்புக்களில் ஒன்றான சமத்தாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், "இஸ்லாமாபாத்தைத் தடுத்து சமாளித்திருக்க வேண்டும்" என்று ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு கூறவில்லை என்று கடுமையாக விமர்சித்தார். கட்சியின் பேச்சாளர் தொடர்கையில், "பயங்கரவாதத்தை உண்டு பண்ணுவதைப் பொறுத்தவரை பாக்கிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இரட்டைச் சகோதரர்களாகும்" என்றார்.

அரசாங்கத்திற்குக் குறிப்பாக நிலைமை சிக்கலாகி உள்ளது எதுவென்றால், திடீரென ஐக்கிய அமெரிக்க அரசுகள் பற்றிய நேசப்பாங்கு அற்ற நிலைமை பா.ஜ.க உறுப்பினர் அணியிலிருந்து வருவதாகும். பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற இருக்கைகளில் மூன்றில் இரண்டு பங்கினை தனதாகக் கொண்டுள்ளது. வரலாற்று ரீதியாக பா.ஜ.க, வணிக சார்பான மற்றும் நச்சுக் கடுப்புடன் கம்யூனிச விரோதம் கொண்டதாகவும் இந்தியாவின் மிகவும் உள்ளார்ந்த ரீதியில் ஐக்கிய அமெரிக்க அரசுகள் சார்பான கட்சியாகவும் இருந்து வந்துள்ளது. பா.ஜ.கவின் செல்வாக்கின்கீழ் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஏவுகணைக்கேடய முன்முயற்சிக்கு இந்தியா வெளிப்படையாக ஆதரவு அளிக்க முன்வந்தது.

ஆனால் பா.ஜ.க பாக்கிஸ்தானிய விரோத மற்றும் இஸ்லாமிய விரோத அடிப்படையில் வளர்த்து எடுக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வாஜ்பாயி மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோர் உட்பட, அதனுடைய தலைவர்களுள் மிகப் பெரும் பகுதியினர், இந்தியாவை ஒரு இந்து தேசம் என்றும், மற்றைய இந்தியர்கள் இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று எண்ணும் பாசிச படை ஆன ராஷ்டிரிய சுயம் சேவக் சங்க் அல்லது ஆர்.எஸ்.எஸ்-ன் வாழ்நாள் உறுப்பினர்கள் ஆவர். "துர் அதிர்ஷ்டவசமாக ஐக்கிய அமெரிக்க அரசுகள் விடுத்துள்ள அறிக்கைகள் வெறுமனே ஒசாமா பின் லேடனைப் பிடிக்கும் மட்டத்திற்கு குறுகிவிட்டது. இது நடக்குமாயின் சர்வதேச சமூகம், பயங்கரவாதத்தின் முழு முக்கியத்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் புரிந்து கொள்ளவில்லை என்று முடிவு செய்துகொள்ளும்" என்று பா.ஜ.கவின் பொதுச் செயலாளர் நரேந்திரமோடி குறை கூறினார்.

புதுடில்லியில் மனநிலைகளில் ஏற்பட்டுள்ள கூர்மையான இடப் பெயர்வு, இந்திய ஆளும் வட்டங்களில், பாக்கிஸ்தானுக்குக் கெடுபிடி யுத்த காலத்தில் வாஷிங்டன் அளித்து வந்த நிதி மற்றும் இராணுவ ஆதரவு, தொடர்ந்தும் அதன் அணுஆயுத ஆற்றல் மற்றும் சீனாவுடன் ஏறக்குறைய சமமான ஜனத்திரளைக் கொண்டிருந்த பொழுதும் இந்தியாவை சீனாவுடன் ஒரு புவிசார் அரசியல் சமனாக தொடர்ந்து ஏற்றுக் கொள்ள மறுப்பதாகியன தொடர்பாக உள்ள அதிருப்தியின் ஒரு அத்தாட்சியாகும். அதிலும் பார்க்க அடிப்படை ரீதியில், ஆப்கானிஸ்தானைத் தவிர, இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத நாடுகளில் உள்ள அறியாத எதிரிகளுக்கு எதிராக வாஷிங்டன் பிரகடனப் படுத்திஉள்ள நீடித்த யுத்தமானது கட்டவிழ்த்து விட்டுள்ள ஏக்கத்தின் அத்தாட்சியாகும். ஆசியாவினதும் மத்திய கிழக்கினதும் புவிசார் அரசியல் சீட்டுகளை ஐக்கிய அமெரிக்க அரசுகள் காற்றில் எறிந்துள்ளது, அவை எங்கு போய் விழப்போகின்றன என்று வாஷிங்டன் உட்பட யாருக்கும் தெரியாது.

ஐக்கிய அமெரிக்க அரசுகளுடன் தன்னைச் சேர்த்துக் கொள்வதற்கான இந்திய அரசாங்கத்தின் ஆவல், அது நியூயோக் மற்றும் வாஷிங்டன் மேலான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 72 மணி நேரத்தினுள் புதுடில்லி பல தசாப்தங்கள் பழமையான இந்தியக் கொள்கையுடன் முறித்துக் கொண்டு, இந்திய இராணுவ தளங்களில் இருந்து அமெரிக்கப் படைகளைப் போருக்கு அனுப்ப உடன்படும் என்று சமிக்கை செய்தது. ஆனால் இப்பொழுது இந்திய அதிகாரிகள் ஐக்கிய அமெரிக்க அரசுகள் இந்திய விமான மற்றும் கப்பல் தளங்களைப் பயன்படுத்த வேண்டுகோள் விடுக்கவில்லை என்று கூறுகின்றனர். ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு தொகை குறிப்பிடா காசோலையைக் கொடுக்க வேண்டாம் என்ற எதிர்க் கட்சிகளின் மற்றும் ரஷ்யாவின் அயல் நாட்டு அமைச்சரின் வற்புறுத்தல்களைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் பகிரங்கமாக வாஷிங்டன் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்துவிடக்கூடாது என்று பகிரங்கமாக அறிவுரை கூறியுள்ளது.

முன்னணி இந்து மதவெறி கடும்போக்காளரான உள்துறை அமைச்சர் அத்வானி, அவரின் பாக்கிஸ்தான் விரோத அறிக்கைகளில் அப்படியான கட்டுப்பாட்டைக் காட்டவில்லை. அவர் கடந்த சனிக்கிழமை எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்த மாநாட்டில் பேசுகையில், "ஒரு தசாப்தத்திற்கு மேலாக பாக்கிஸ்தானும் இப்பொழுது தலிபானும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வந்துள்ளன என்பதை உலகம் உதாசீனம் செய்துவிட முடியாது. பயங்கரவாதவன் முறையில் ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் அவர்கள் பாதுகாப்பும் அடைக்கலமும் கொடுத்து வந்துள்ளனர்" என்றார்.

பா.ஜ.க வின் அதிதீவிர மதவெறி ஆதரவாளர்கள் மற்றும் கூட்டாளிகள் அரசாங்கத்தின் மிக அண்மித்த பாக்கிஸ்தானுக்கு எதிரான தொடர் வசைபாடலில் இருந்து நெஞ்சுரம் பெற்றுள்ளனர். கர்நாடகத்தில் உள்ள ஹூப்ளி நகரம் வகுப்புவாத வன்முறையால் திணறடிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த விஸ்வ இந்து பரிஷத்தின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி, இந்தியாவின் 13 கோடி இஸ்லாமிய சமூகத்தினர் ஒசாமா பின் லேடனுக்கும் "சமாதானத்திற்கும்" இடையில் ஒன்றைத் "தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கோரியுள்ளனர்.

See Also:

24 September 2001

அமெரிக்காவில் ஜனநாயக உரிமைகள்: புஷ்சின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தின் முதல் பலி

ஐக்கியத்திற்கான ஐரோப்பிய பிரகடனங்கள் ஐக்கிய அமெரிக்க அரசுகளுடனான பதட்டங்களை முகமூடியிட்டு மறைக்கின்றன

21 September 2001

புஷ் நிர்வாகத்துக்கு ஏன் யுத்தம் அவசியமாகியுள்ளது?

14 September 2001

நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்களின் அரசியல் வேர்கள்