World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Europe seeks greater role in Middle East

மத்திய கிழக்கில் பெரும் பங்காற்ற ஐரோப்பா விரும்புகிறது

By Jean Shaoul
30 August 2001

Use this version to print

பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னனியின் தலைவர் அபு அலி மன்சூரை படுகொலை செய்ததும் பாலஸ்தீனியர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அடுதடுத்த ஊடுருவலும் இஸ்ரேல் யுத்தத்துக்காக தொடர்ந்து தள்ளுவதைக் காட்டுகிறது. அது ஜேர்மனியால், பாலஸ்தீனிய பொறுப்பின் தலைவர் யாசிர் அரபாத் மற்றும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஷிமோன் பெரஸ் ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப் போவதாய் அறிவித்த சிலநாட்களுக்குள் இடம்பெற்றது, பாலஸ்தீனியருக்கு எதிராக ஆத்திரமூட்டல்களை முன்னெடுப்பதன் மூலம் ஒவ்வொரு அமைதி முயற்சிக்கும் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரோன் எதிர்ச்செயல் புரியும் பாணியை இது உறுதிப்படுத்தி உள்ளது.

பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்னரே அது தண்டனை விதிக்கப்பட்டதாய் காணப்படுகிறது. அமைதியை மீளக் கொண்டுவருவதற்கு தேவையான எந்த ஒரு சலுகைகளையும் செய்வதற்கு ஷெரோன் ஆர்வம் கொள்ளவில்லை. ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுத்தவும் வன்முறையை நிறுத்தவும் அழைப்புவிடும் மிட்செல் அறிக்கையை (Mitchell Report) நடைமுறைப்படுத்துதற்கு அவர் எண்ணிப்பார்ப்பதற்கு முன், ஏழுநாட்களுக்கு முழு போர்நிறுத்தத்தினை அவர் தொடர்ந்து வலியுறுத்தினார். இஸ்ரேல் அமைதி என்று கருதும் மூடப்பட்ட பாலஸ்தீனிய பகுதிகளில் மூடலைத் தளர்த்தவும், மேலும் வன்முறையை தடுத்து நிறுத்துவதில் பாலஸ்தீனிய பொறுப்பின் ஒத்துழைப்பிற்கு பதிலாக இஸ்ரேல் அந்தப்பகுதியில் உள்ள தொழிலாளர்களை இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதிக்கும் என்ற, "படிப்படியான போர்நிறுத்தம்" என்று அழைக்கப்படும் பெரஸின் முன்மொழிவுகள், அதனை அர்த்தம் இல்லாமல் செய்தன. ஆனால், அது அமல்படுத்தப்பட்டாலும் கூட, அம்முன்மொழிவானது பிரித்தாளும் மூலோபாயத்தை அதிகரிக்கும் மற்றும் பாலஸ்தீனிய மக்களிடையே அரசியல் மற்றும் சமூகப்பதட்டங்களை மேலும் கிளறிவிட அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனிய பொறுப்பானது, பெரஸ் முன்முயற்சியை தளத்தின் மீதான மறைமுகமான நடவடிக்கையிலிருந்து கவனத்தை திசைதிருப்பும் பாசாங்கு என்று நிராகரித்தது. பாலஸ்தீனிய பேச்சுவார்த்தையாளர் சாயெப் எரக்காத் சொன்னார்: "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாங்கள் இந்த இரட்டைப்பேச்சினால் சலிப்படைந்து விட்டோம் மற்றும் களைப்பு அடைந்துவிட்டோம். "பாலஸ்தீனிய செய்தித்துறை அமைச்சர் யாசிர் அபெட் ரபோ, "எமது மக்களுடன் ஒரு கூட்டு சந்திப்பிற்கு பெரஸ் கேட்கும்பொழுதெல்லாம், எமது மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளினால் ஆன தாக்குதல்களின் அதிகரிப்பை காண்கிறோம். பெரஸ் வழியாக தடையை உடைத்து ஒரு வழியைக்காணலாம் என சூதுவாதற்று நம்பினால், இறுதிஆய்வில் தீர்மானிப்பவர் ஷெரோனாகத்தான் இருக்கும்" என்று அவர் கூறும்பொழுது, இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் முதலே தொடரமுடியாததாக இருந்தன மற்றும் ஷெரோனிடமிருந்து மேலும் ஆத்திரமூட்டல்கள் எதிர்பார்க்கப்படக் கூடியன என அவர் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார்

இருப்பினும், இந்த தீய சூழ்நிலைமைகள் இருந்தும், ஐரோப்பியர் பொதுவாகவும் ஜேர்மனி குறிப்பாகவும், சில உடன்பாட்டை பேசுவதற்கும் முழுயுத்தத்திற்கும் செலவைத்தடுக்கவும் தலையீடு செய்தாக வேண்டியது ஒரு வகை அரசியல் திருப்புமுனை ஆகும்.

மத்திய கிழக்கில் ஐரோப்பியர்கள் தங்களின் நலன்களை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள் மற்றும் இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை சவால் செய்ய விரும்புகிறார்கள் என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஷ்கா பிஷ்சர் (Joschka Fischer) மிகத் தெளிவாகக்குறிப்பிட்டார். இஸ்ரேலிய பாராளுமன்றத்தின் அவைத்தலைவர் மற்றும் தொழிற்கட்சியின் அடுத்த தலைமைக்கு வர விரும்பும் ஆவ்ரஹாமுடனான (Avraham) அவரது பேச்சில், பிஷ்சர் ஐரோப்பாவையும் ரஷ்யாவையும் உள்ளடக்கியதாக பரந்த சர்வதேச அமைதிக் கூட்டை ஏற்படுத்துதற்கான நேரம் வந்திருப்பதாக கூறினார். பிஷ்சர், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு பில்லியன் டொலர்கள் உதவிக்கு ஆதரவு பெற விரும்பினார் என்று இஸ்ரேலிய நாளிதழ் யெடியட் அஹரோனாட் கூட செய்தி வெளியிட்டது, ஆனால் அது மறுக்கப்பட்டது.

அமெரிக்காவின் ஆட்சி எல்லை என்று பெரும்பாலும் பார்க்கப்படும் பகுதியினுள் ஐரோப்பிய ஒன்றியத்தால் நேரடியாக தலையீடு செய்யப்படுவது அமெரிக்கா மீதான நம்பிக்கையில் அவர்களின் விரக்தியையும், ஷெரோனின் போர்வெறிக்கு என்றுமில்லாத அளவு அமெரிக்கா வெளிப்படையாய் ஆதரவு தெரிவிப்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள அவர்களின் சொந்த நலன்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதுவதையும் பிரதிபலிக்கிறது. அமெரிக்க பாதுகாப்புக்கு உட்பட்ட நிலையிலிருந்து தம்மை துண்டித்துக்கொள்வதற்கும் மத்திய கிழக்கில் மீண்டும் சுதந்திரமான அரசியல் சக்தியாக ஆவதற்கும் ஐரோப்பிய வல்லரசுகள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கின்றன என்பதை அது மேலும் காட்டுகிறது.

ஜனாதிபதி கிளிண்டனின் கீழ் மத்திய கிழக்கில் உடன்பாட்டுக்கான ஜனநாயகக் கட்சியினரின் விருப்பம், இஸ்ரேலை அமெரிக்காவின் பிரதானக் கூட்டாளி என்பதிலிருந்து கைவிடுதலாக ஒருபோதும் குறிக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் கீழ், நிர்வாகமானது எந்தவிதமான உடன்பாடும் அடைவதில் அக்கறையில்லாததுடன் இஸ்ரேலை இந்தப் பிராந்தியத்தில் செல்வ காலத்தும் அல்லற் காலத்தும் தனது "மூலோபாய சொத்தாக" ஆதரிப்பதைக் கொண்டிருக்கிறது என்று ஐரோப்பியர்கள் பார்க்கின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் பொருளாதார மற்றும் இராணுவ தாக்குதல், படுகொலைகளைச் செய்யும் அதன் கொலைகாரக் கொள்கை, காசாவையும் மேற்குக்கரையையும் மீண்டும் ஆக்கிரமித்தல் ஆகியன அமெரிக்காவின் முழு ஆதரவு இல்லாமல் போனாலும் அதன் மறைமுகமான உடந்தை இல்லாமல் முன்செல்ல முடியாது என்பதைக் காட்டுகிறது. ஆகையால் மத்திய கிழக்கில் இஸ்ரேலியர்கள் யுத்தத்தைத் தூண்டி விடுவார்கள் அது தங்களின் கம்பெனிகள் எண்ணெய்க்கும் இலாபத்திற்கும் சார்ந்திருக்கும் பிற்போக்கு ஆட்சியாளர்களைச் சீர்குலையச் செய்துவிடும் என்ற ஐரோப்பிய வல்லரசுகளின் அச்சம், தீய அழிவினின்று மீட்பதற்கான கடைசி முயற்சியைத் தொடுக்க வைத்திருக்கிறது.

1990களில் ஐரோப்பிய வல்லரசுகளும் மத்திய கிழக்கும்

ஒரு தசாப்தத்திற்கும் மேலான மோதலுக்கு தீர்வு காணும் முதலாவது முன்முயற்சியானது--அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மேற்பார்வையின் கீழ் மட்ரிட் பேச்சுவார்த்தைகள் 1991ல் இக்கட்டான நிலையை அடைந்த பொழுது, நோர்வேயர்கள்தான் பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான முறைசாரா பேச்சுக்களை நடத்தி ரகசியமாக இரண்டாவது பாதையைப் போட்டனர், அவை 1993ல் ஒஸ்லோ உடன்படிக்கையை விளைவித்தது.

கிளிண்டன் நிர்வாகமானது நோர்வேயர்களிடமிருந்து முன்முயற்சியை உடனே கைப்பற்றிக் கொண்டு, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இஸ்ரேல் ஏற்கக்கூடிய விதிமுறைகள் மீதான இறுதி உடன்பாட்டை கொண்டு வருவதை இலக்காகக் கொண்டு, வை நதி மற்றும் காம்ப் டேவிட் (Wye River and Camp David) ஆகிய இடங்களில் வரிசைக்கிரமமான சந்திப்புக்களை நடத்தியது. அது பெரும்பாலும் ராஜாங்க செயலாளர் வாரன் கிறிஸ்டோபரின் விடாப்பிடியான வேண்டுதல் மூலம், இஸ்ரேலும் ஜோர்டானும் 1994 அக்டோபரில் மேலோட்டமான ஒரு அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டதன் மூலம், தங்களின் நீண்டகால, செய்முறைவாத ரீதியான வாழும் வழியை ஸ்தாபனமயப்படுத்தின. இஸ்ரேலில் முதலீடு செய்யும் அல்லது அதனுடன் வர்த்தகம் நடத்தும் மேற்கத்திய கம்பெனிகளுக்கு எதிரான இரண்டாம் நிலை அரபு எதிர்ப்பினை அகற்றுவதையும் கூட அவர் செய்தார்.

இஸ்ரேலுடன் வாணிகம் செய்வதற்கான அனைத்து உத்தியோகப்பூர்வ தடைகளும் இப்பொழுது அகல, ஐரோப்பிய வல்லரசுகள் இஸ்ரேலுடனான புதிய வர்த்தக வாய்ப்புக்களை சுரண்டிக்கொண்டன. 1995ல் பார்சிலோனாவில், அவை, இஸ்ரேல் மற்றும் அதன் பக்கத்து அரபு நாடுகள் உட்பட, மத்தியதரைக் கடற்பிராந்தியத்தில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பகுதிகளை எல்லையாகக் கொண்ட பன்னிரண்டு நாடுகளுடன் புதிய ஐரோப்பிய --மத்தியதரை பங்காளர் உடன்பாடு ஒன்றைப் பேசின. பார்சிலோனா பங்காளர்கள் விவசாயம், தொழில், செய்தித் தொடர்புகள் மற்றும் போக்குவரத்தில் இணைந்த வேலைத்திட்டங்களுக்கு அர்ப்பணித்துக்கொண்ட பன்னாட்டுக் குழுக்களின் வலைப்பின்னல்களால் சுற்றி வளைக்கப்பட்டன.

இந்த உடன்பாட்டை ஐரோப்பியர்கள், மத்திய கிழக்கில் மேற்கத்திய நலன்களின் பாதுகாப்பாளர் என்ற அமெரிக்காவின் 40 ஆண்டுகால நீண்ட பாத்திரத்திற்கு ஒரு மாற்றீடாகப் பார்த்தனர். உடன்பாடானது அரபு- இஸரேலிய உறவுகளை சிறப்பாக அணுகுவதற்கு வடிவமைக்கப்படாத அதே வேளையில், அது ஐரோப்பியர்கள் தங்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய வடிகாலை வழங்கியது. எடுத்துக்காட்டாக, அது இஸ்ரேலியர்களும் சிரியர்களும் சந்தித்து 1995-96 பேச்சுவார்த்தைகளில் புதிதாக ஈடுபடுதற்கு ஒரே இயங்குமுறையை வழங்கியது.

ஒஸ்லோவைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் இட்சாக் ரொபின் மற்றும் யாசிர் அரபாத் ஆகிய இருவரும் பாலஸ்தீனிய பொறுப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பொருளாதார உதவிகளை நாடினர். ஐரோப்பிய ஒன்றியமானது 600 மில்லியன் டொலர்கள் உதவியை பாலஸ்தீனியர்களுக்கும் மேலும் 104 மில்லியன் டொலர்களை புதிய பாலஸ்தீனிய படையைக் கட்டி அமைக்கவும் முன்மொழிந்தது. ஐரோப்பிய ஒன்றியம் 1996ல் பாலஸ்தீனியரின் முதலாவது "தேசிய" தேர்தலுக்கு நிதி உதவிசெய்தது. வளைகுடாப் போருக்குப் பின்னர், வளைகுடாவிலிருந்து வரும் பாலஸ்தீனிய அகதிகளை சமாளிப்பதற்காக ஜோர்டானுக்கு இலட்சக்கணக்கான டொலர்களை அது வழங்கியது.

1995ல், அரபாத்தும் பெரஸூம் கையெழுத்திட்ட, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவின் கீழான பாரிஸ் உடன்படிக்கையானது, ஐரோப்பிய-மத்தியதரை உடன்படிக்கையின் அடிப்படையில் போலவே ஐரோப்பாவிற்கு பாலஸ்தீனிய ஏற்றுமதியை அங்கீகரித்தது. மூன்று ஆண்டுகள் கழித்து, பாலஸ்தீனிய பண்டங்களுக்கான வர்த்தக சலுகைகள் பாலஸ்தீனியருக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்குத்தான் பொருந்தும், இஸ்ரேலிய இலாபத்திற்கு அல்ல என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. பிந்தையது பாலஸ்தீனிய அல்லது இஸ்ரேலிய வகையினத்தில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வரி இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படாது. நடைமுறையில், இது இரு தரப்பினரின் பாலுமான ஐரோப்பிய ஒன்றியத்தின் பாரபட்சமற்ற முறையினை எடுத்துக்காட்டுவதற்கான அரசியல் சமிக்ஞையைத் தவிர ஒன்றுமில்லை மற்றும் அது ஒரு போதும் நிறைவேற்றப்படவில்லை.

பாலஸ்தீனியருடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிவிருப்பமானது, இஸ்ரேலுடன் எந்த அளவிலும் குரோதம் கொள்வதைக் குறிகாட்டவில்லை. உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இஸ்ரேலின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பின்வரும் வர்த்தகப் புள்ளி விவரங்களில் இருந்து பார்க்க முடியும். இஸ்ரேலில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி 1976ல் 526 மில்லியன் டொலர்களில் இருந்து 1997ல் 6.6 பில்லியன் டொலர்களாக வளர்ந்துள்ளது. அதேகால கட்டத்தில் இஸ்ரேலுக்கு அதன் ஏற்றுமதி 1.3 பில்லியன் டொலர்களில் இருந்து 14.8 பில்லியன் டொலர்களாக இன்னும் வேகமாக தாவியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்தியதரைப்பகுதி உறுப்பினர்களுடனான மற்றும் அதனோடு தொடர்புடைய உறுப்பினர்களின் போட்டியால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய விவசாய ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது அவற்றின் விவசாயப் பொருளாதாரத்தை கீழறுத்துள்ளது, இஸ்ரேல் ஐரோப்பிய பொருட்களுக்கான முக்கிய சந்தையாக ஆகி உள்ளது.

1990களின் மத்தியில் இந்த பிராந்தியத்தில் அதிகாரத் தரகராக ஆவதற்கு அவை தேவையான முதற்கட்ட பணம் செலுத்துதலைச் செய்யவேண்டும் என்பதை உணரத் தொடங்கின. 1996ல் பிரெஞ்சு ஜனாதிபதியின் சந்திப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் --மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான-- இஸ்ரேல் பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகளுக்கான மறைமுக வார்த்தைப் பிரயோகம்-- இஸ்ரேலுக்கான அதன் சொந்த சிறப்புப் பிரதிநிதியை நியமித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள்ளே, 1950களில் குறுகிய காலமே நீடித்த இஸ்ரேலுடனான பிரெஞ்சு உறவுக்குப் பிறகு, ஜேர்மனிதான் இஸ்ரேலின் பிரதான நிதி ஆதரவாளர். இஸ்ரேலின் முதலாவது பிரதமர், டேவிட் பென் குரியன் இன அழித்தொழிப்பில் பாதிக்கப்பட்டதற்கு நஷ்டஈடாக மேற்கு ஜேர்மனியுடன் ஆண்டு செப்பனிடுதலுக்கான திட்டத் தொகுதிக்காகவும் உதவித் திட்ட தொகுதிக்காகவும் 125 மில்லியன் டொலர்களை பேசி முடித்தார். அதுதான் 1960களில் அமெரிக்கா அதன் திட்ட ஆதரவாளராக ஆகும் வரை சியோனிச அரசின் வங்கி ஆதாரமாக இருந்தது. 1980களில் ஈரான்- ஈராக் யுத்தத்தின்பொழுது சர்வதேச உடன்பாடுகளைமீறி இஸ்ரேல் ஈரானுக்கு நவீன ஆயுதங்களை அளித்தபொழுது, இஸ்ரேலின் அளிப்பு முயற்சிக்கு ஜேர்மனிதான் தனது துறைமுகங்களையும் விமான தளங்களையும் கொடுத்து உதவியது.

வளைகுடா யுத்தம் ஆரம்பமானதுடன் தனது சொந்த முன்னேற்றத்திற்காக ஜேர்மனியின் ஆயுத பேரத்தைக் கட்டிஎழுப்புதல் பக்கம் இஸரேல் திரும்பமுடிந்தது. 1991ல் ஈராக்கிற்கு எதிரான நேச நாடுகளின் குண்டு வீச்சுப் பிரச்சாரத்தின் பொழுது, 1982க்கும் 1989க்கும் இடையில் மேற்கு ஜேர்மனி ஆயுத உற்பத்தியாளர்கள் 700 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பத்திறன்களை ஈராக்கிற்கு அளித்திருந்தனர் என்பது தெளிவானது. சோவியத் ஒன்றியம் மற்றும் பிரான்சுக்குப் பிறகு ஜேர்மன் சமஷ்டிக் குடியசு ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக மாற்றிய வேலைத்திட்டத்திற்கு ஜேர்மன் அரசாங்கத்தை பாராமுகமாக்கி இருந்தது. தைசென்ரெய்ன்ஸ்டால் டெக்னிக் என்ற ஒரு கம்பனி மட்டுமே, ஈராக்கின் தீவிர இரசாயன ஆயுதத்திட்டத்தை கட்டி அமைத்திருந்தது, ஈராக்கின் ஸ்கட் ஏவுகணைகளை உயர்தரப்படுத்தி இருந்தது, ஈராக்கின் இராணுவக்கட்டுப்பாட்டு மையங்களைப் பாதுகாக்கும் மற்றும் அரசியல் தலைமைகளைப் பாதுகாக்கும் பரந்த நிலவறை முறைகளைக் கட்டியிருந்தது.

ஈராக்கின் ஸ்கட் ஏவுகணைகள் டெல் அவிவில் விழுந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே, இஸ்ரேல் ஜேர்மனியிடமிருந்து நேரடியாக நஷ்ட ஈடைக் கேட்டது. முதல்வர் ஹெல்மட்கோலிடம் கூறியது, அது பலர் அறிந்தவாறு, "திருவாளர் முதல்வரே, மூன்று கருத்துருக்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட முடியாதது. யூதர்கள், ஜேர்மானியர்கள் மற்றும் விஷ வாயு" என்பதாகும்.

கோல் உடனடியாக மறுகட்டுமானத்திற்காக 250 மில்லியன் டொச்மார்க்குகளை அறிவித்து பொறுப்பை ஏற்றார், பின்னர் அது ஒரு பில்லியன் டொச்சுமார்க்குகளாக உயர்ந்தது. அதன் பின் உடனடியாக இஸ்ரேலியர்கள் பாதிப்பை சீர் செய்தலுக்கான செலவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலிருந்து விலகி, ஜேர்மனி சென்று கண்டதை எல்லாம் வாங்கத் தொடங்கினர். பல வருடங்களாக நிதிப்பற்றாக்குறையின் காரணமாக வாங்கும் எண்ணத்தைக் கைவிடும்படி நிர்ப்பந்திக்கப் பட்டிருந்த, ஜேர்மன் கப்பற் தளத்தில் இருந்த இரண்டு நீர்மூழ்கிக்கப்பல்களை நன்கொடையாகப் பெற்றனர். கோல் அரசாங்கம் அந்த இரு நீர்மூழ்கிக்கப்பல்களையும் இலவசமாகமட்டும் கொடுக்கவில்லை மூன்றாவது கப்பலுக்ககு பாதி விலையையும் தானேகொடுத்தது.

ஜேர்மனி அதன் ஆராய்ச்சி மற்றும் பரிவர்த்தனை திட்டங்களின் வலைப்பின்னல்களை இரு நாடுகளுக்கும் இடையில் விரிவுபடுத்தி உள்ளது. ஜேர்மனின் மூன்று அரசியல் கட்சிகள், அதன் தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் எண்பது ஜேர்மன் நகராட்சிக்கழகங்கள் இஸ்ரேலியர்களை ஜேர்மனிக்கு அழைக்கும் பரிவர்த்தனைத் திட்டங்களுக்கு நிதி அளித்துள்ளன.

ஒஸ்லோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டமை இஸ்ரேலில் ஜேர்மனியின் முதலீட்டையும் இஸ்ரேலில் சுற்றுலாத் துறையையும் பரந்த அளவில் முடுக்கி விட்டது, முன்னரே ஜேர்மனி இஸ்ரேலின் இரண்டாவது மிக முக்கியமான வர்த்தகப் பங்காளி ஆகியிருந்தது மற்றும் அமெரிக்காவிற்குப் பிறகு இரண்டாவது மிகமுக்கியமான ஆயுத அளிப்பாளர் ஆகவும் ஆகியிருந்தது. இப்பொழுது டய்ம்லர்-பென்ஸ், சிமென்ஸ், வோல்கஸ் வேகன், ஹெங்கல் டெடர்ஜன்ட்ஸ் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் கம்பெனி ஆகியன இஸ்ரேலில் பல கோடி டொலர்களை முதலீடுகளைச் செய்துள்ளன. ச்னெய்டர் ஒப்டிக்கல் வேர்க்ஸ் (Schneider Optical Works) மற்றும் பிராங்க்பர்ட் FG வங்கி ஆகிய கார்ப்பொரேஷன்கள் இஸ்ரேலிய கார்ப்பொரேஷன்களுடன் கூட்டு நிறுவனங்களாக ஆகியுள்ளன. இஸ்ரேலின் பிரதான ஈர்ப்பு அதன் உயர் தொழில்நுட்பத்திறனுடைய தொழில்துறை மற்றும் கல்வி அறிவு பெற்ற உழைப்போர் தொகையினர் ஆகும். மேலும், 1996 அளவில் ஆண்டுக்கு 2,00,000 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலுக்கு வருகை தந்தனர். இன்று ஜேர்மனியானது ஐரோப்பிய வல்லரசுகளிலேயே இஸ்ரேலிய சார்பு அரசாக பரவலாக கருதப்படுகிறது.