World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Sharon's bloody offensive plunges Israel into turmoil

ஷரோனின் மூர்க்கத்தனமான எதிர்ப்பு நடவடிக்கை இஸ்ரேலை குழப்பமான நிலமைக்குள் இட்டுச்செல்கின்றது

By Chris Marsden
9 March 2002

Back to screen version

ஜனாதிபதி ஷரோன் பாலஸ்தீன அதிகாரத்துவத்தை அழித்தொழிப்பதற்கான இராணுவ நடவடிக்கையை ஒரு வாரத்திற்கும் பின்னால் துரிதப்படுத்தியதிலிருந்து இஸ்ரேலானது அதன் பேரழிவின் விளிம்பிற்கே சென்றுள்ளது.

கடந்த பதினேழு மாத காலங்களில் இடம்பெற்ற பிரச்சனைகளுள் மார்ச் 8 வெள்ளியன்று நடைபெற்றது மிகவும் மோசமானதாகும். இவ் வன்முறைச் சம்பவத்தில் இராணுவம் பாலஸ்தீனர்களுடைய நகரங்களையும், முகாம்களையும் தாக்கியதில் 40 பேர்வரையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதையடுத்து காயப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கவும், இறந்தவர்ளை ஏற்றிச் செல்வதற்கும் விரைந்து வந்த முதலுதவி வாகனம் படையினரின் கவச வாகனங்களால் தடுக்கப்பட்டது. கடந்த ஏழு நாட்களில் இஸ்ரேலின் பாதுகாப்பு படையினர் அகதிகளின் முகாம்களுக்கு மேல் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத தாக்குதலை செய்ததினூடு 108 பாலஸ்தீனர்களும், 36 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஷரோனின் திட்டம், கடந்த காலங்களில் அடிக்கடி செய்து வந்ததைப் போன்று, இஸ்லாமிய தீவிரவாத குழுவான ஹமாசை பழிவாங்கல் நடவடிக்கையினூடு ஆத்திரமூட்டுவதனூடு பாலஸ்தீன எதிர்ப்பு போக்கை கிளப்பி விடுவதும், ஒரு வரையறை செய்யப்பட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தத்துக்கு அதை உட்படுத்துவதும் ஆகும். ஆனால் இம்முறை அவருடைய திட்டம் பின்தள்ளப்பட்டுள்ளது. ஷரோன் எதிர்பார்த்ததற்கு மாறாக விளைவுகளை உருவாக்கியதுடன், உண்மையில் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதம் விரிவடைந்துள்ளது. அமெரிக்கா ஒரு கட்டாயத்தின் பேரில் அதைக் கண்டனம் செய்திருந்த போதும் இஸ்ரேல் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு சர்வதேச விமர்சனம் பாரியளவில் இருக்கவில்லை. மற்றும் வளர்ச்சியடைந்து செல்லும் உள்நாட்டு நடவடிக்கைகளின் போக்குகளானது லிகுட்- தொழிற் (Likud-Labour) கட்சி கூட்டு அரசாங்கத்தின் இக்கட்டான நிலையை முன்னொருபோதும் இல்லாதவாறு மேலும் ஆட்டம் காணச் செய்துள்ளது.

ஐரோப்பிய சக்திகள் இவ்விடயத்தில் சற்று கவனத்தை காட்டியதும், ஷரோனும் ஒரு சில வரையறைக்குட்பட்ட அரசியலை சிறிது காலத்திற்கு கடைப்பிடித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கின் அராபிய மக்களுக்கிடையில் தீவிரமடயலாம் என அச்சமுற்றதுடன், அங்கே மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை மேற்கொள்ளப் படவேண்டும் என இந்த ஐரோப்பிய சக்திகள் தெரிவித்தன.

கடைசியான முரண்பாட்டை ஷரோன் தீவிரமடைய வைத்தது, இஸ்ரேலால் அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பிராந்தியங்களை விட்டு இஸ்ரேல் விலகவேண்டும் எனவும் இதற்கு பதிலாக அராபிய நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கும் என்று சவுதி அரேபியா கேட்டுக்கொண்டதற்கான பிரதிபலிப்பாகும். இஸ்லாமிய நம்பிக்கையின் ஒரு பாதுகாவலன் போன்ற பாத்திரத்தை வகிக்கும் அராபிய அரசாங்கம் ஏகாதிபத்திய சார்பு முகமூடியை அணிந்தவாறு அது தனது வாயளவிலான திருப்தியின்மையை இஸ்ரேலுக்கு எப்பொழுதும் தெரியப்படுத்திக் கொள்ளும். இது கடைப்பிடிக்கும் அதனது அதீத அமெரிக்க சார்புக்கான எதிர்ப்புக்கு முகம் கொடுக்கும் அதே சமயம், மறுபக்கத்தில் இஸ்லாமிய தீவீரவாதக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இது போதுமான வரையில் மேற் கொள்ளவில்லை என அமெரிக்காவிடமிருந்து வேறு அச்சுறுத்தலையும் எதிர் நோக்குகிறது. பாலஸ்தீனர்களை கொன்று தள்ளும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு கொடுப்பதால், ஈராக்குக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்துக்கு மக்களின் எதிர்ப்பு அலையின் முன்னே தப்பமுடியாது என அரச குடும்பத்துக்கு நன்றாகவே தெரியும். எனவேதான் சவுதி இந்த அராபிய அமைதி உள்ளடங்கலான விடயத்தில் விசேடமாக தலையீடு செய்வதுடன் அதற்கான ஒரு கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் அரசியல் மற்றும் நிர்வாகத்தை ஜெருசலேமில் அங்கீகரிக்க போவதுமில்லை அல்லது இஸ்ரேல் கோலான் குன்று, மேற்குகரை, காஸா போன்ற இடங்களிலான அதனது குடியிருப்புக்களை நீக்கிவிடப்போவதுமில்லை.

அராபிய அரசுகளின் கோரிக்கையை ஷரோன் மறுக்கும் பட்சத்தில், அவருடைய போலி வேடம் கலைக்கப்பட்டு சமாதானத்துக்கு அவர் ஒரு எதிரியாகவும், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதே அவருடைய உண்மையான நோக்கம் எனவும் அராபிய அரசுகள் கணிப்பிட்டுக் கொள்ளும்.

இவ் விடயம் உடனடியாகவே ஐரோப்பிய கூட்டமைப்பின் வெளிநாட்டுக்கான உயர் அதிகாரி ஹஜாவியர் சோலானாவாாலும் மற்றும் ரஷ்யாவாலும் ஊக்குவிக்கப்பட்டன. சவுதி அரேபியா ஐக்கிய நாடுகள் சபைக்கு அதனது புதிய சாமாதான உடன்படிக்கையை சமர்பித்தது ஒரு சில மணித்தியாலங்களில் அகதி முகாம்களுக்கு மேலான தீடீர் தாக்குதல் இடம்பெற்றது. ஷரோன், பாலஸ்தீன அதிகாரத்துவத்துக்கு மேல் ''தொடர்ச்சியான இராணுவ அழுத்தம்'' கொடுக்கும் திட்டத்தை வெளிப்படுத்தி, ''அவர்களுக்கு தாக்குதல் கொடுத்த பின்னர்தான் அவர்களை எம்முடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்க முடியும்'' எனத் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், ''பாலஸ்தீன அதிகாரத்துவம் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடாது, ஏனெனில் அவர்களே பயங்கரவாதிகள்'' எனத் தெரிவித்தார்.

வாஷிங்டனிலிருந்து வந்த ஒரேயொரு அரசாங்க அலுவலகத்தைச் சேர்ந்த பேச்சாளரான Richard Boucher என்பவர் ஷாரோனுக்கு உதவுகையில் குறிப்பிட்டதாவது, இஸ்ரேல் அதனை பாதுகாப்பதற்கான உரிமைக்காக புஷ் நிர்வாகம் அதற்கு மதிப்பழிக்கிறது. ''மக்களுக்கு தீங்குநேராமல்'' எடுக்கப்படும் ''ஒவ்வொரு நடவடிக்கைக்கும்'' அவர் அழைப்புவிட்டார். அதே நாளில், வெள்ளை மாளிகையின் பேச்சாளரான Ari Fleischer என்பவர் மத்திய கிழக்கில் நடை பெறும் தற்போதைய பயங்கரவாதத்துக்கு முன்னைய ஜனாதிபதியான கிளின்டனை குற்றம் சாட்டினார், ஏனெனில் ''இப் பயங்கரவாதம் இவ்வாறு ஒரு உயர்ந்த மட்டத்தை நோக்கி போவதற்கான'' எதிர்பார்ப்புகளை அவர் ஆராய்ந்திருந்தார் என குறிப்பிட்டார். .

உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து கொண்டும், அமெரிக்க சார்பான ஷரோன் வாதிகளின் நிலைப்பாடு மேலும் உறுதியற்றும் போய்க்கொண்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் அமெரிக்க அரசுகளின் செயலாளரான கொலின் பெளல் என்பவர், '' தனது கொள்கை தொடர்பான கவனமெடுக்கும் படியும்... பாலஸ்தீனர்களுக்கு மேலான யுத்தம் சரிவராத ஒன்று'' எனவும் ஷரோனைக் கேட்டுக் கொண்டார். அதையடுத்து புஷ், மத்திய கிழக்கின் பிரதிநிதியான Anthony Zinni என்பவர் அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்வார் என அறிவித்தது, இதனால் இதுவரையிலும் இருந்து வந்த, பாலஸ்தீனர்களுடன் இடம் பெறும் சமாதான பேச்சு வார்த்தைக்கு முன்னர் அவர்கள் தமது ஆயுத நடவடிக்கைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடல் வேண்டும் எனும் வாஷிங்டனின் ஒரு கருத்து இதனால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டில், ஷரோன் மிகவும் உயர்ந்த மட்டத்திலான ஒரு எதிர்ப்பை இடது மற்றும் வலது சாரிகளிடம் இருந்து எதிர் நோக்குகிறார்.

Likud கட்சியின் Binyamin Netanyahu என்பவருடைய ஒரு செல்வாக்கற்ற தலைமையானது, ஷரோன் ''அமைதி உடன்படிக்கைக்காக'' மிகவும் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வாதாடி அவரை கண்டித்துள்ளது. லிக்குட் கட்சியின் அமைச்சரான Dani Naveh, இவர் Binyamin Netanyahu வின் கன்னையை பிரதிநிதித்துவப்படுத்துபவர், ''அரபாத்தின் அதிகார ஆட்சியை'' ஒரு முடிவுக்கு கொண்டுவர'' இவ்அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலைப்பாடு ஒரு வலதுசாரி பத்திரிகையில் எதிரொலித்தது, பெப்ரவரி 27 ல் Daniel Pipes என்பவர் இதற்கான ஒரு வகையான உதாரணத்தை Jerusalem Post பத்திரிகையில் வெளியிட்டார். " வெற்றி எதிரியின் மீது ஒருவரின் விருப்பத்தை திணிப்பதால் உள்ளடங்கியுள்ளது. ஒரு பிரிவினர் விட்டுக்கொடுக்காமல் மனிதப் படுகொலைகள் ஒரு இறுதிக் கட்டத்தை நெருங்காது என்பதை வரலாறு கற்பித்துள்ளது. அனேகமாக பாலஸ்தீனர்கள் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டி உள்ளார்கள், அதாவது அவர்களுடைய கோரிக்கை எதுவாக உள்ளதெனில், இஸ்ரேல் அதனது தற்போதைய அரசியல் நடவடிக்கைகளை கைவிடாது விடின் வெற்றியின் சாத்தியம் மிக அண்மையில் உள்ளது.''

பாசிசவாதக் குடியேறிகளின் கட்சிகள் யுத்தத்தை நடத்து என்பதாக கூக்குரல் இடுகின்றன. பிரத்தியேகமாக வைக்கப்பட்டுள்ள பிரிகேடியரான ஜெனரல் Effie Eitam, இவர் ஒரு மதவாத தேசியவாதிகளின் உரிமைகளுக்கான ஒரு முக்கிய தலைவராவார், அவர் இஸ்ரேலின் வானொலிக்கு, அரசாங்கம் பாலஸ்தீன அதிகாரத்தை அழிப்பதற்கான நிலைப்பாட்டை எடுக்காது விடின், ''நாம் எங்கள் மீது ஒரு யுத்தத்தை கொண்டு வருவோம்.... அவை மிகவும் கூடிய பலமுடையதாக, எமது சக்திக்கு முடிந்த வரையிலும் அதிகம் பலமுள்ளதாகவே அது விளங்கும் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஷரோனுடைய இப் பிழையான நடவடிக்கைகளுக்கான விமர்சனங்களுக்கு என ஒரு மகத்தான மற்றும் தீர்மானகரமான ஆதரவு என்பது ஏதேனும் ஒரு சிறு அளவில் கூடத்தன்னும் கிடைக்கவில்லை. பதிலாக, அங்கே ஆயுதங்களை பாவிப்பதற்காக அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொண்டு செல்லும் தனிப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கைதான் கூடிக் கொண்டு போகிறதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் மீண்டும் அங்கே ஒரு ஸ்திரமற்ற நிலைகளும் அல்லது மேலும் அடக்கு முறைக்கான போக்குகளும்தான் முன்னணி வகிக்கின்றன. ஷரோன் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவே முதல் தடவையாக, இப் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்படி நெருக்கி பிடிக்கும் ஒரு பரந்த மட்ட எதிர்ப்பை, இஸ்ரேலின் பாரிய மக்கள் மத்தியில் அவர் எதிர் நோக்குகிறார்.

அனேகமான மக்கள் ஷரோனுடைய திட்டவட்டமான ஆத்திரமூட்டலை எதிர் கொள்வதற்காக ஆயத்தமாகி உள்ளனர். ஒரு சமாதான இயக்கத்தின் பேச்சாளரான Adam Keller என்பவர் உலக சோசலிச வெப் தளத்தின் தொடர்பாளருக்கு குறிப்பிடுகையில், '' ஆரியல் ஷரோனுடைய ஒரு வருட ஆட்சியில், இந்த சமாதான முன்னெடுப்புகள் எப்போதாவது சீர்குலையும் போது, அரசாங்கமும், இராணுவமும் உடனடியாகவே ஒரு விசர்த்தனமான ஆத்திரமூட்டலை பெரியளவில் கட்டவிழ்த்து விடும், இவற்றை பாலஸ்தீனர்களிடமிருந்து ஏதாவது கண்மூடித்தனமான தாக்குதல் மற்றும் பழிக்குப் பழி போன்றவை இடம் பெறாமல் இருக்கும்போதே இவர்களால் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இவை ஒரு புதிய முறையிலான பழிவாங்கலாக, மேலும் தொடர்ந்து கொண்டு போகும் பழிவாங்கலாக ஒரு வட்டத்தையே மீண்டும், மீண்டும் சுற்றி நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இது, அமைதி நடவடிக்கை ஒரு இரத்த வெள்ளத்தில் கரைந்து, மறைந்து போகும் வரையிலும் இவை இடம்பெறுகின்றன. ''

ஆதாம் கெலர் மேலும் தொடர்ந்தால் போல் குறிப்பிடுகையில், ''இவ்வாரம் சவுதியின் இளவரசன் இஸ்ரேலால் அபகரிக்கப்பட்ட அதனது பிராந்தியங்களிலிருந்து இஸ்ரேல் முற்று முழுதாக விலகிவிட வேண்டும் என அனைத்து அராபிய உலகும் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். அதாவது இரு தரைப்படைச் சேனைகள், கவச வாகனங்கள், மற்றும் ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ஹெலிக்கொப்டர் போன்றவற்றை அனுப்புவதற்கு ஷரோன்தான் காரணம், இரண்டு நாட்களுக்குள் இரண்டு அகதி முகாம்களை ஆக்கிரமித்து தாக்குதல் நடாத்தியதில் 20 க்கும் மேற்பட்ட ஆயுதம் தரித்த போராளிகள் கொல்லப்பட்டும், பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இறந்தவர்கள், மற்றும் காயப்பட்டோர் அதேபோன்று அப்பாவி மக்கள் அவர்களுக்குள் பிள்ளைகள், வயது வந்தோர் என்பவர்கள் மிகவும் கடுமையான பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஷரோன் மேற்கொள்ள இருக்கும் யுத்தத்துக்கான எதிர்ப்பானது, இருப்பில் உள்ள 300 க்கும் அதிகமான றிசேவ் இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தால் வளர்ச்சியடைந்து ஜனவரி 25 ல் அவர்களால் ஒரு நிராகரிப்பு விண்ணப்பமும் கையொப்பமிட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் எடுக்கப்படும் ''ஒடுக்குமுறை நடவடிக்கை'' யில் அவர்கள் பங்குபற்ற மாட்டார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான ஒரு புள்ளி விபரத்தின்படி 15 முதல் 33 வரையிலான வீதத்தினர் இதற்கு ஒரு வியக்கத்தக்க ஆதரவைக் கொடுத்து, இந்நடவடிக்கையை ஒரு தேசத் துரோகம் என வெளிப்படுத்தி அதை நிராகரித்தும் உள்ளனர்.

ஷரோனுக்கு காட்டப்படும் இவ்வாறான எதிர்ப்பானது மிகவும் ஒரு உயர்ந்த மட்டத்திலான குழப்பம் உடையதாகும், இது மேலும் இஸ்ரேலின் ஆளும் வர்க்கத்தின் ஒரு கன்னையாலும், ஐக்கிய நாடுகள் சபையினராலும் மற்றும் ஏனையோராலும் முன்னெடுக்கப்படுவதை விட வித்தியாசமானதல்ல. அனேகமான பத்திரிகைகள் மற்றும் இராணுவத்தின் அடிவருடிகள் போன்றோர், ஷரோனின் இந் நடவடிக்கையை, ஓர் அளவுக்கு மீறிய செயலாகவும், மேலும் இந்த இராணுவ நடவடிக்கை இஸ்ரேலின் அரசை மிகவும் ஒரு ஆபத்தான முறையில் அழித்துவிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவரை அரசாங்கத்தில் இருந்து இராஜினாமா செய்து கொள்ளும் படியும் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர். எப்படியிருந்தபோதும், இச்சக்திகளின் தற்போதைய இயக்கமானது ஒரு உறுதியான வர்க்க அடிப்படையை கொண்டுள்ளது. அதன் அனைத்து மட்டங்களிலுமான ஒரு தீவிரவாத எதிர்ப்பை காட்டுகின்றபோதிலும், அது தொழிற்கட்சியின் யுத்த ஆதரவு கொள்கைகளுக்கும், மற்றும் இனவாதத்திற்கு அடிமைப்பட்டு போகும் பழைய அமைதிவாத இயக்கங்களுக்கு அடிபணிந்து உள்ளது.

ஷரோன் இவ்வாறான கொடூரமான இராணுவத் தாக்குதல்களை தொடர்சியாக நடைமுறைப் படுத்துவதற்கான காரணம், முன்னைய ஒரு தேசியத்துக்கான -கூட்டு அரசாங்கத்தில் தொழிற்கட்சி தன்னை ஒரு மக்களின் அமைதிக்கான பிரதிநிதியாகக் காட்டிக் கொண்ட அந்த ஒரு பிழையான அரசியல் குழப்பத்தை தொழிலாள வர்க்கத்திற்குள் உருவாக்கியதால் மட்டுமே சாத்தியமாகி உள்ளது. ஷரோனை எதிர்ப்பதற்கு பதிலாக, தொழிற்கட்சி கூட்டு அரசாங்கத்தில் இணைந்து கொண்டு அது வகித்த முக்கியமான பாத்திரத்தால் Shimon Peres வெளிநாட்டு அமைச்சராகவும், கட்சியின் தலைவரான Binyamin Ben-Eliezer பாதுகாப்பு மந்திரியாகவும் வர முடிந்துள்ளன.

தொழிற் கட்சிக்குள் உள்ள எதிர்ப்பினால், Yossi Beilin என்பவரின் தலைமையின் கீழ் கூட்டு அரசாங்கத்தில் இருந்து உடைத்துக் கொள்ள முனைகின்றபோதிலும், Meretz இன் மத்தியவாதிகள், மற்றும் Peace Now இயக்கத்தின் ஆதரவாளர்கள் போன்றவை வெகுஜன அனுதாபங்களில் இருந்து வெகுதூரத்துக்கு அப்பால் சென்று விட்டன. அண்மையில் இடம் பெற்ற ஒரு அமைதிக்கான ஊர்வலத்தில் 15,000 முதல் 20,000 வரையிலுமான மக்கள் இதில் கலந்து கொண்டனர், இதில் Yossi Beilin, Meretz இன் தலைவரான Yossi Sarid போன்ற எவருமே றிசேவ் இராணுவத்தினரை பாதுகாப்பதற்கான எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்குள் இடம் பெறும் கூர்மையான அரசியல் அபிவிருத்திகளின் அச்சத்தால், ஐரோப்பிய சக்திகள் அமெரிக்கா ஷரோனுக்கு வழங்கும் உதவியை ஒரு முடிவுக்கு கொண்டு வரும்படி நெருக்குவாரம் கொடுக்கும் மற்றுமோர் முக்கிய தயாரிப்புக்கான பணிக்கு முன்னால் அதை நிறுத்தி உள்ளது.

தொழிற்கட்சி கூட்டு அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்வதற்கான அதனது பிரயத்தனத்தை பெரும்பாலும் நிராகரித்துக் கொண்டுள்ளது, இவ் விடயம் இஸ்ரேலின் ஒரு பகுதியினராலும், ஐரோப்பிய செய்தி ஸ்தாபனங்களாலும் மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஒரு மத்தியவாத பத்திரிகையான Haaretz, இக் கூட்டை ஒரு ''அவமானம்'' எனக் கூறுகையில், லண்டனின் Financial Times , இதை ''தொழிற்கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாவது மூலம் அது ஒரு மீள் ஒருங்கிற்குள்ளாகி இவற்றிற்கான முரண்பாடுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வரவும், மேலும் அதற்கான ஒரு தீர்வையும் அதனால் வழங்க முடியும். கருத்துக் கணிப்பீடுகள் வட்டாரத்தின் ஒரு கூற்றுப் பிரகாரம், இஸ்ரேலியர்கள் மிகவும் குழப்பமுற்று உள்ளார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பேச்சுவார்த்தைகளின் விடயங்களை மிகவும் அவதானமான பரீட்சித்து பார்க்க வேண்டிய ஒரு தேவை அவர்களுக்கு உள்ளது. அனேகமான இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுக்கு எதிரான விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை கோரியபோதும், ஏதாவது சமாதானத்துக்கான ஒரு சுமுகமான பிரயத்தனத்தை கொண்டு வரவும் அவர்களும் முயற்சிக்கின்றனர். ஒரு மாற்றீட்டுக்காக தொழிற்கட்சி ஒரு சுயமான அணுகு முறையை மீள அமைக்காது விடின், ஷரோனுக்கு மாற்றீடான, முன்னைய பிரதமரான Benjamin Netanyahu உடைய கடினமான நடவடிக்கைகளும் இதை ஒத்ததாகவே இருக்கும். ஒரு பலம் வாய்ந்த இடது சாரிக் கட்சியின் எதிர்ப்பு வாஷிங்டனுடைய செல்வாக்குக்கு மேலும் நல்ல வாய்ப்புகளை வழங்கக் கூடியதாக இருக்கும்''என குறிப்பிட்டது.

Financial Times பத்திரிகை, மேலும் ஆட்டம் கண்டு செல்லும் வலதுசாரிப் போக்குகளால் மட்டும்தான் ஆபத்து இருந்து கொண்டுள்ளதாக அதனது மன உளைச்சலை கொட்டியுள்ளது, ஆனால் Likud கட்சிக்கும், சியோனிச வலதுசாரிகளுக்கும் ஒரு பதிலீடாக விளங்கிய தொழிற்கட்சி வெளிப்படையாகவே மதிப்பிளந்து போயுள்ளமை இஸ்ரேலின் உள்ளே ஒரு இடதுசாரி அபிவிருத்திக்கும், அத்துடன் யுத்தத்துக்கு எதிரான யூத, அராபிய தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட மற்றுமொரு பாரிய அரசியல் ஒன்றிணைவிற்கு வழிவகுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved