World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

On Palestinian suicide bombings: letters to the WSWS and a reply by the editorial board

பாலஸ்தீனிய தற்கொலை குண்டு வெடிப்புக்கள்: உலக சோசலிச வலை தளத்திற்கு வந்த கடிதங்களும் ஆசிரியர் குழுவின் பதிலும்

13 April 2002

Use this version to print | Send this link by email | Email the author

உங்களது பக்கசார்புத்தன்மை மற்றும் உலக சோசலிச வலைதளத்தினது பக்க சார்பு உரத்து தெளிவாக வந்து கொண்டிருக்கிறது! நீங்கள் அரபாத்தின் குரலாக ஆகி இருக்கிறீர்கள்! பிஸ்சா (pizza) சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மதவிழாவில் கலந்து கொண்டிருக்கும் அப்பாவிகளைக் கொல்லுதல் தொடர்பாக உங்களது உளக் கொதிப்பு எங்கே?... உங்களது இந்தத் தன்மைக்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்!

உண்மையுடன்,

GH

1 ஏப்ரல், 2002

* * *

பட்ரிக் மார்ட்டினின் கட்டுரையில் [அரபாத்தைப் படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும் வாஷிங்டனும் விவாதிக்கின்றன, ஏப்ரல் 1, 2002] தற்கொலை குண்டுவெடிப்பு ஒன்றையும் குறிப்பிடவில்லை. இறந்துபோன இஸ்ரேலியர்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் பொருத்தமற்றவர்களா?

JS

1 ஏப்ரல், 2002

GH மற்றும் JS ஆகியோருக்கு,

உண்மை என்னவென்றால், உலக சோசலிச வலைதளமானது பல்வேறு வேளைகளில் தற்கொலைக் குண்டு வெடிப்புக்களில் கொல்லப்பட்ட அப்பாவி குடிமக்களுக்கு தன் அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறது மற்றும் போரில் ஈடுபடாதோர் மீதான பயங்கரவாதத் தாக்குதலை நாம் ஆதரிப்பதில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறோம். நாம் அத்தகைய தந்திரோபாயங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்துக்கு தீங்கு தரத்தக்கது என பார்க்கிறோம். எமது கண்ணோட்டத்தில் மத்தியகிழக்கு மோதலுக்கு ஒரு நீதியான, ஜனநாயக பூர்வமான மற்றும் சமூகரீதியில் முற்போக்கான தீர்வானது, சியோனிச அரசுக்கு மட்டும் எதிராக அல்லாமல் இந்தப் பிராந்தியத்தில் உள்ள முதலாளித்துவ அரபு ஆட்சிகளுக்கு எதிரான பொதுப் போராட்டத்தில் அரபு மக்களையும் யூதத் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான, அத்துடன் மத்திய கிழக்கின் சோசலிசக் கூட்டமைப்பை நிறுவுதலை இலக்காகக் கொண்ட அரசியல் வேலைத்திட்டத்தின் அபிவிருத்தியை தேவையாகக் கொண்டிருக்கிறது.

இருப்பினும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் ஷரோன் அரசாங்கத்தால் செய்யப்பட்டு வரும் யுத்தக் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக பாலஸ்தீனிய தற்கொலை குண்டு வெடிப்பாளர்களை கண்டனம் செய்பவர்களுடன் பொதுவாக நாம் ஒன்றையும் கொண்டிருக்கவில்லை. ஜோர்ஜ் டபிள்யு. புஷ் தற்கொலைக் குண்டு வெடிப்பாளர்களை கொலைகாரர்கள் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று அறிவிக்கும்பொழுது, ஒடுக்கப்படுபவர்களின் துயரம் கண்டு அனுதாபப்படும் புத்திசாலியானவர்கள் அவரது பிரசங்கங்களை எதிரொலிக்கும் முன்பாக நன்றாக சிந்திக்கக் கடமைப்பட்டவர்களாக உள்ளனர்.

தற்கொலைக் குண்டுவெடிப்புக்களின் விளைவுகள் துன்பமானவையாக இருப்பதால், வகைதொகை இல்லாமல் பாலஸ்தீனிய மக்கள் செறிந்து வாழும் நகரங்களிலும் அகதி முகாம்களிலும் இஸ்ரேலிய குண்டு வீச்சுக்களையும் பாலஸ்தீனியத் தலைவர்களைப் படுகொலை செய்வதையும் அதனுடன் சமப்படுத்துவது வேண்டுமென்றே பிழைசெய்யும் மற்றும் சிடுமூஞ்சித்தனமான குறியிட்ட ஒழுக்கவாதம் ஆகும். விலங்கியல்பான இளைஞனின் விரக்தியுற்ற செயல்களையும் மிக சக்திவாய்ந்த இராணுவத்தைப் பயன்படுத்தி முழு மக்களையும் பாடழிவு செய்தலுக்கும் இடையில் சமமான தன்மை இல்லை. முன்னது அரசியல்ரீதியாக தவறாக வழிநடத்தப்பட்ட போதிலும், அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் அடைவதற்கான முயற்சியை மேற்கொண்டிருப்பதற்கும் பின்னது ஒடுக்குமுறையைப் பேணுவதற்கும் இடையில் வேறுபாட்டைக் காணாது.

தசாப்தங்களுக்கு முன்பாக லியோன் ட்ரொட்ஸ்கி ஒடுக்கப்படுபவர் மற்றும் ஒடுக்குபவரின் "கொடுமைக்கான வேறுபட்ட அளவீடுகளை வரலாறு கொண்டிருக்கிறது" என சுட்டிக்காட்டினார். "ஒரு அடிமைச்சொந்தக்காரன் ஒரு அடிமையை வன்முறை மற்றும் தந்திரம் மூலம் சங்கிலிகளில் விலங்குமாட்டுகிறான், மற்றும் அடிமையானவன் தந்திரம் அல்லது வன்முறை மூலம் சங்கிலியை உடைக்கிறான் -ஒழுக்கவியல் நீதிமன்றத்தின் முன்னர் தாங்கள் சமமானவர்கள் என்று இந்த அவமானகரமான அலிகள் எம்மிடம் கூறாதிருக்கட்டும்" (ட்ரொட்ஸ்கியின் அவர்களது ஒழுக்கங்களும் நமது ஒழுக்கங்களும்) நாம் இந்த உணர்வை முற்றிலும் உரிதாக்குகிறோம்.

பெரும்பாலான மக்கள், குறிப்பாக அமெரிக்காவில் உள்ளோர், இஸ்ரேலிய ஆட்சி அப்பாவியானது, அது பாலஸ்தீனிய வன்முறைக்கு எதிர்வினையாற்றுமாறு நிர்பந்திக்கப்படுகிறது என முன்வைக்கும் ஓயாத மற்றும் நவீனமயப்படுத்தப்பட்ட கொள்கைப் பிரச்சாரத்தால் திசைமாறி இருக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கமும் அமெரிக்க செய்தி ஊடகமும் சூழ்நிலையை இந்தப் பாணியில் ஒருமித்த கருத்தில் முன்வைக்கின்றன.

அமெரிக்க ஊடக உள்ளடக்கல் "அரபாத் ஒரு வெறிபிடித்த நாய்" என்பதிலிருந்து "பாலஸ்தீனியர் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் தன்னைப் பாதுகாக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறது" வரையிலான குறுகிய ஒளிக்கற்றைக்குள்ளே நகருகிறது. அவை எவ்வளவு இரத்தம் தோய்ந்தது மற்றும் வகைதொகையற்றது என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலும் பாலஸ்தீனிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு பதிலாக, இரும்புச்சட்ட ஆட்சியாக அமெரிக்க செய்தி ஊடக வண்ணனையாளர்களால் அவதானிக்கப்பட்டது.

இஸ்ரேலிய இராணுவம், குடிமக்கள் வசிப்பிடங்களுள்ளே ஏவுகணைகளைச் செலுத்த ஆதரவு திரட்டும்பொழுது, தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் வசதிகளை அழித்தல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை சுற்றிவளைத்தல், அவர்களின் ஆயுதங்களை எண்ணிக்கையிட்டு முத்திரையிடல், குடிமக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தல், இஸ்ரேலிய நடவடிக்கைகளின் விளைவுகள் வெளி உலகுக்கு அம்பலப்படுவதிலிருந்து தடுக்கும் முகமாக செய்தியாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தல்- பொதுவில், ஐரோப்பிய யூதர்களுக்கு எதிராக நாஜி ஜேர்மனியால் பயன்படுத்தப்பட்ட வழிமுறைகளை நினைவு கூறும் இவற்றைச் செய்கின்ற பொழுது, இந்தப்பாசாங்கு பாரமரிப்பதற்கு மிகவும் கடினமானதாக ஆகிறது.

இருப்பினும், அமெரிக்க செய்தி ஊடகம் அதன் சிறந்த செயலைச் செய்கிறது. புறநிலை வர்ணனைக்காக என்ன கொடுக்கப்படுகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணம் நியூயோர்க் டைம்ஸின் செர்ஜி சிமெமானால் எழுதப்பட்ட கட்டுரை ("இந்த பைத்தியக்காரத்தனத்தின் வழிமுறை", ஏப்ரல் 7, 2002) ஆகும். சிமெமான் சமமாக அணுகுவதாக நடிக்கிறார், ஆனால் அவர் இரு பக்கத்தையும் குறிப்பது எல்லாவற்றையும் வெளிப்படுத்துகிறது. அவர் எழுதுகிறார்: இஸ்ரேலியர்களுக்கு, அப்பாவிகளைப் படுகொலை செய்தல் அரபுகளின் இலக்கு அவர்களைக் கடலுக்குள் தள்ளுவது என்பதை உறுதிப்படுத்துகிறது. பாலஸ்தீனியர்களுக்கு, வலிபொறுக்காத இஸ்ரேலியரின் பதிலானது அவர்கள் பாலஸ்தீனியர்களின் ஒருபோதும் நிறைவேற்ற விரும்பமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது." பாலஸ்தீனியர்கள் வன்முறையினை முன்முயல்பவர்கள் மட்டுமல்ல, அவர்கள் அப்பாவிகளை இரத்தம் உறையச்செய்யும் அளவு கொல்பவர்கள் ஆவர். இஸ்ரேலியர்கள் எதிர்வினையே ஆற்றுகிறார்கள், மற்றும் "ஆக்ரோஷத்துடன்" அவ்வாறு செய்கிறார்கள்."

இருப்பினும், சில உண்மைகளை புதைத்துவிடுவது அவ்வளவு எளிதல்ல. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனிய தேசத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருக்கின்றனர், மற்றவிதத்தில் அல்ல. இஸ்ரேலிய பிரதமர், ஏரியல் ஷரோன் அமைதி நிகழ்ச்சிப்போக்கு என அழைக்கப்படுவதை அதன் தொடக்கம் முதலே எதிர்த்திருக்கிறார் மற்றும் கடவுளால் அருளப்பட்ட யூத தாயகத்தின் பகுதியான, பைபிளில் கூறப்படும் யூதேயா ஆக மேற்குக்கரையை குறிப்பிடும் அதி தேசியவாதக் கட்சியின் தலைவரானார். அவரது இராணுவ மற்றும் அரசியல் பணிகள், 1953ல் மேற்குக்கரை குபியா கிராமத்தில் நடந்த படுகொலையிலிருந்து 1982 லெபனான் ஆக்கிரமிப்பு மற்றும் உச்சக்கட்டமாக சப்ரா-ஷட்டிலா அகதிமுகாமில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய அகதிகளைக் கொன்று குவித்த பெய்ரூட் முற்றுகை வரை பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான அட்டூழியங்களால் குறிக்கப்படுகின்றன. இந்த யுத்தக் குற்றம் இறுதியில் ஷரோனை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து அகற்ற வழிவகுத்தது.

பல்வேறு அரசாங்க பதவிகளில், ஷரோன் பாலஸ்தீனிய நிலத்தைக் கைப்பற்றுதலையும் மேற்குக்கரையில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்தலையும் முன்னெடுத்தார்- "தளத்தில் உண்மைகளை மாற்றல்" எனும் கொள்கை ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்ரேலிய பிடிப்பினைப் பலப்படுத்த வடிவமைக்கப்பட்டது மற்றும் சுதந்திர அரசுக்கான பாலஸ்தீனிய முயற்சிகளை கீழறுத்தது.

ஷரோன் செப்டம்பர் 2000ல் கிழக்கு ஜெருசலேமில் உள்ள அல்-ஹாரம் அல்-ஷரிப் (இஸ்ரேலியர்களால் மலைக்கோவில் என்று அழைக்கப்படுவது) 1000 ஆயுதமேந்திய படைவீரர்களின் பரிவாரத்துடன் விஜயம் மேற்கொண்டதால் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் சமீபத்திய வன்முறை வெடிப்பை ஆரம்பித்து வந்தார். 2001 பிப்ரவரியில் அவர் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாலஸ்தீனிய தேசிய இயக்கத்தின் அரசியல் உட்கட்டமைப்பை அழிப்பதை இலக்காகக் கொண்ட படுகொலைகளுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டார். பாலஸ்தீனிய தற்கொலைக் குண்டு வெடிப்புக்கள் இயல்நிகழ்ச்சி தோன்றியிருக்கும் அரசியல் உள்ளடக்கம் இதுதான்.

பரந்த அளவிலான இயல்நிகழ்ச்சியாக, அது அண்மைய பருவமாக இருக்கிறது. கடந்த ஆண்டு வரை அல்லது அவ்வாறே அத்தகைய நடவடிக்கைகள் ஒப்பீட்டளவில் அரிதாகவும் பொதுவாக இஸ்லாமிய குழுக்களினது மாகாணமாக இருந்தன. மதச்சார்பற்ற தேசியவாத பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்துடன் அணிசேர்ந்துள்ளவர்கள் மத்தியில், தற்கொலைக் குண்டு வெடிப்புக்கள் எதிர்ப்பு வழிமுறையாக பொதுவாக வெறுத்து ஒதுக்கப்பட்டன. அதனை அவர்கள் இப்பொழுது தடைவிலக்கி இருப்பது அதி ஒடுக்குமுறையின் அரசியல் மற்றும் சமூக ஒடுக்கு முறைகளின் நிலைமைகளைப் பிரதிபலிக்கின்றன, மற்றும் பொதுவான அர்த்தத்தில் பாலஸ்தீனிய இளைஞர்கள் மத்தியில் பழைய வழிமுறைகளும் தலைமைகளும் இஸ்ரேலாலும் அமெரிக்காவாலும் திணிக்கப்பட்ட, நிலவுகின்ற ஓயாது வருத்துகின்ற பெருந்தொல்லையிலிருந்து வெளிவருவதற்கான வழியை வழங்கத்தவறிவிட்டன என்பதாகும்.

அமெரிக்க ஊடகம், புஷ் நிர்வாகம் மற்றும் சியோனிச அமைப்பு ஆகியன சமீபத்திய தற்கொலைக் குண்டு வெடிப்புக்களை மத்தியகிழக்கில் விரிந்து வரும் மோதலைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக இருந்தாற் போன்று மேற்செல்கின்றன. இருப்பினும், சூழ்நிலை பற்றிய கரிசனம் கொண்ட அணுகுமுறை 2002 அல்லது 2001 நிகழ்ச்சிகளுடன் ஆரம்பிக்கவில்லை. மத்திய கிழக்கில் உள்ள இந்நெருக்கடியைப் புரிந்து கொள்வதற்கு, ஒருவர் ஒட்டுமொத்த வரலாற்றிலும் அதனைக் கிரகிக்க வேண்டும்.

நாஜி இனப்படுகொலையில், ஐரோப்பிய யூதக் குடியிருப்பிடங்கள் மீதான இனப்படுகொலை அழிப்பால் உண்டு பண்ணப்பட்ட அரசியல் சூழலில், இரண்டாவது உலக யுத்தம் வரைக்கும் யூதர்கள் மத்தியில் சிறுபான்மைப் போக்காக இருந்த சியோனிச இயக்கமானது, உலகம் முழுவதிலும் யூதர் மற்றும் யூதர் அல்லாதார் மத்தியில் அனுதாபத்தை வென்றெடுக்க முடிந்த்து. அது ஒரு எதிர்ப் பொருள் கொள்ளவேண்டிய துன்பகரமான சொற்றொடராக இருக்கிறது -சியோனிச தேசியவாத வேலைத்திட்டத்தில் வேரூன்றி இருந்தது- யூத மக்களுக்கு தீர்வாக, யூத அரசை நிறுவுதலானது, இன்னொரு ஒடுக்கப்பட்ட மக்களது- பாலஸ்தீனியரது உடைமை அகற்றலை அடிப்பையாகக் கொண்டிருந்தது.

1948ல் சியோனிச ஆட்சியானது 700,000 பாலஸ்தீனியர்களை வெளியேற்றியது மற்றும் அவர்களின் 400 கிராமங்களை அழித்தது. 1967ல் இஸ்ரேலியர்கள் மேலும் எல்லைப்பகுதிகளைக் கைப்பற்றினர். அந்த நேரத்திலிருந்து கிழக்கு ஜெருசலேமில் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் யூதர்கள் மட்டுமேயான நாற்று ஐம்பது குடியேற்றங்களும் பதினொரு பிரத்தியேக யூத வசிப்பிடங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. 400,000 யூதக் குடியேறிகள் (200,000 மேற்குக் கரையிலும் 200,000 கிழக்கு ஜெருசலேமிலும்) பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலத்தையும் நீர்வளங்களையும் சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றனர்.

1993ல் ஒஸ்லோ ''அமைதி'' உடன்படிக்கைக்குப் பின்னர், யூதக் குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கை 70சதவீதம்அளவில் அதிகரித்தது, கடந்த 15 ஆண்டுகளில் இஸ்ரேலிய நிர்வாகத்தினர் 2,600 பாலஸ்தீனிய வீடுகளை அழித்திருக்கின்றனர். ஏழ்மையான அகதி முகாம்களில் இலட்சக் கணக்கான பாலஸ்தீனியர்கள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

மேற்குக்கரை மற்றும் காசா பாலைநிலப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமித்த மக்களால் இழிவுபடுத்தலுக்கும் அவமதிப்புக்கும் 35 ஆண்டுகளாக ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்- சோதனைச் சாவடிகள், எல்லைகளை மூடல், தன்னிச்சையான வன்முறை நடவடிக்கைகள் மற்றும் ஒடுக்குமுறை ஆகியன. "பாலஸ்தீனியர்கள் திரும்பிவருவதற்கான உரிமை" மறுக்கப்படுகிறது, அதேவேளை எண்ணிறைந்த யூத வந்தேறிகளுக்கு திருடப்பட்ட நிலங்கள் குடியேறவும் வசிக்கவும் வழங்கப்பட்டன.

2000 செப்டம்பருக்குப் பின்னர், இஸ்ரேல் கிட்டத்தட்ட ஒட்டு மொத்த பொருளாதாரத் தடையைத் திணித்துள்ளது மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் பயணம் தடை செய்யப்பட்டது, இலட்சக் கணக்கான பாலஸ்தீனியர்களது வாழ்வு ஆதாரங்களை இல்லாமற் செய்தல், குடும்பங்களை உடைத்தல், மேற்குக் கரையிலும் காசாவிலும் சிறை போன்ற நிலைமைகளை அமல்படுத்தல் ஆகியன செய்யப்பட்டது.

பாலஸ்தீனியர்களை கொடுஞ்செயலுக்கு ஆளாக்குவதை தவிர்க்க முடியாதது என்றும் முழுமையாக நியாயப்படுத்தவும் செய்கின்ற பொதுவான கட்டமைப்பு இதுதான். பாலஸ்தீனிய தற்கொலை குண்டு வெடிப்புக்களின் இயல் நிகழ்ச்சியை உதயமாகச் செய்த சிறப்பான நிலைமைகள் முதலாளித்துவ தேசியவாதத்தின் தோல்வியுடன் கட்டுண்டிருக்கிறது, அதன் மிகப் போர்க்குணம் கொண்ட வடிவங்களில் கூட, பாலஸ்தீனிய மக்களின் ஜனநாயக, தேசிய மற்றும் சமூக அபிலாஷைகளை அடைவதற்கான உருப்படியான முன்னோக்கை அது வழங்கத் தவறியது.

முதலாவதும் மிக முக்கியமானதும் பாலஸ்தீனிய இயக்கத்தை தனிமைப்படுத்துவதில் மற்றும் அதனை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உட்சூழ்ச்சிகளுக்கு கீழ்ப்படுத்துவதில் அரபு முதலாளித்துவ ஆட்சியாளர்களின் துரோகத்தனமான பாத்திரம் ஆகும். காலந்தாழ்ந்த முதலாளித்துவ அபிவிருத்தியுடன் கூடிய நாடுகளில் உள்ள அனைத்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களையும் போல, அரபு செல்வந்தத்தட்டினர் ஏகாதிபத்தியத்திடமிருந்து உண்மையான சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு அமைப்பு ரீதியாக திராணி அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்ரேலுக்கும் எதிரான பாலஸ்தீனிய மக்களின் புரட்சிகர இயக்கத்துக்கு அடிப்படை ரீதியில் குரோதமானவர்களாக இருக்கின்றனர், ஏனெனில் அத்தகைய இயக்கமானது அவர்களின் சொந்த எல்லைகளுக்குள் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களினால் ஆன கிளர்ச்சியைத் தூண்டி விடும் என்பதால். ஆகையால் அவர்கள் பாலஸ்தீனிய இயக்கத்தை கட்டுப்படுத்த மற்றும் ஆண்மை அற்றதாகச்செய்ய திரும்பத்திரும்ப நாடிவருகின்றனர்.

இந்த நிகழ்ச்சிப்போக்கின் உயர் நீர்மட்டக்குறி 1978ல் எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஏற்பட்ட கேம்ப் டேவிட் அமைதி உடன்படிக்கை ஆகும். அங்கு முதல் தடவையாக அரபு அரசாங்கமானது சியோனிச அரசின் சட்டப்பூர்வ தன்மையை அங்கீகரித்தது, மற்றும் 1982ல் லெபனானில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அங்கீகரித்தது. அரபு அரசுகள் பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனைப்போல் நிற்க, அதேவேளை இஸ்ரேல் பெய்ரூட்டை முற்றுகை இட்டு பி.எல்.ஓ வை லெபனானில் இருந்து வெளியேற்றியது.

இந்தக் காட்டிக் கொடுப்புக்கள் யாசிர் அரபாத் மற்றும் பி.எல்.ஓ வின் தேசியவாத முன்னோக்கின் செல்தகைமையின்மையை அம்பலப்படுத்தியது. அரபாத் உட்பட பி.எல்.ஓ தலைமை மற்றும் காரியாளரின் தனிப்பட்ட தைரியத்தை ஒருவரும் சந்தேகப்பட முடியாது. பி.எல்.ஓவின் ஸ்தாபிதமும் அது கூறிய அதன் நோக்கமான பாலஸ்தீனிய தேசத்தை மீட்டு ஜனநாயக, மதச்சார்பற்ற அரசை நிறுவுதல் என்பதும் இப்பிராந்தியம் முழுவதும் மின்ஊட்டம் கொண்டது. இவ்வியக்கமானது பாலஸ்தீனியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லோர் மத்தியிலும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரந்த ஆதரவை வென்றெடுத்தது.

இருப்பினும், பி.எல்.ஓ வால் முதலாளித்துவ தேசியவாதத்தின் மட்டுப்பாடுகளுக்கு அப்பால் ஒருபோதும் போகமுடியாதுள்ளது. ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத் ஸ்ராலினிச ஆட்சிக்கும் இடையில் சரியீடு செய்வதன் மூலம் சலுகைகளை வென்றெடுக்கும் முகமாக அது முதலில் தன்னை சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துடன் அணி சேர்த்துக் கொண்டது. லெபனானிலிருந்து பி.எல்.ஓவின் வெளியேற்றத்திற்குப் பின்னர், அரபாத் ஹாஸ்னி முபாரக்கின் எகிப்திய ஆட்சியின் பக்கம் திரும்பினார், அதன் பின்னர் இருந்து அமெரிக்க சி.ஐ.ஏ மற்றும் அரசுத்துறை இவற்றின் முழு உறுப்பினர் நிலை அடைந்த கட்சிக்காரர் ஆக ஆனார்.

கெய்ரோவுடனான கூட்டு பி.எல்.ஓ வை சியோனிச அரசுக்கான அதன் எதிர்ப்பை மறுதலிக்க மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனிய- இரு அரசுகளை அரவணைக்க வழிவகுத்தது. இந்த பின்வாங்கலானது, "அமைதி நிகழ்ச்சிப்போக்கு" என்று அழைக்கப்படுவதை முன்னெடுத்த 1993 ஒஸ்லோ உடன்பாட்டில் சம்பிரதாயபூர்வமாக்கப்பட்டது. அப்போது இஸ்ரேலிய பிரமதராக இருந்த ரொபினுடன் அரபாத் வெள்ளை மாளிகை கைகுலுக்கலானது, சோவியத் ஒன்றியத்தின் பொறிவைத் தொடர்ந்து, அதனை வாஷிங்டனின் இறகின் கீழ் உறுதியாக வைத்திருந்ததைக் குறித்தது.

பரந்த அளவீட்டில் "அமைதி நிகழ்ச்சிப்போக்கு" அரசியல் ஏமாற்று ஆகும், அதன் சாரம் பி.எல்.ஓவை பாலஸ்தீனியர்களை ஒடுக்கும் போலீஸ் படையாக மாற்றுவதாகும், அதேவேளை இஸ்ரேல் அதன் குடியேற்றங்களைத் தொடர்ந்து விரிவு படுத்துவது மற்றும் எதிர்கால பாலஸ்தீனிய அரசு எதுவும் இஸ்ரேலிய ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதியை விட அதிமாக எதுவுமில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகும். பாலஸ்தீனிய மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகள் இவற்றுடன் "அமைதி நிகழ்ச்சிப்போக்கு" பொருந்தவில்லை என்பதை விளக்கிக் காட்டல், 2000ம் ஆண்டு கோடையில் நடந்த காம்ப் -டேவிட் உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் அரபாத்திடம் உறுதி அற்ற வார்த்தைகளில் அல்லாமல், வாஷிங்டன் பாலஸ்தீனிய அகதிகள் தங்களின் தாயகத்திற்கு திரும்புதலை ஒருபோதும் அனுமதிக்காது, அல்லது பாலஸ்தீனிய இறையாண்மையின் கீழ் அரபு ஜெருசலேத்துடன் ஐக்கியப்பட்ட பாலஸ்தீனிய அரசை, உருப்படியாய் அமைப்பதை ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய பொழுது ஆரம்பமானது.

கிழக்கு ஜெருசலேத்தில் ஷரோனின் செப்டம்பர் 2000 ஆத்திரமூட்டல் மற்றும் அதன்விளைவான பாலஸ்தீனியர் எதிர்ப்புக்கு எதிராக இஸ்ரேலியரின் மிருகத்தனமான நசுக்குதல் தொடர்ந்தது. இஸ்ரேலின் தந்திரோபாயங்களுக்கு அமெரிக்க எதிர்வினை ஒலியை கூடிய வரையில் மந்தமாக்கியது- அதன் அர்த்தம் ஒடுக்குமுறை மற்றும் ஆத்திரமூட்டலை நோக்கி இஸ்ரேல் திரும்புதலுக்கு அமெரிக்காவின் மெளனமான ஆதரவாகும்.

பாலஸ்தீனிய இளைஞர்களின் ஆற்றொணாநிலை மற்றும் அழிசெயலானது, "அமைதி நிகழ்ச்சிப்போக்கு" ஒரு கொடூரமான கேலிக் கூத்தாக அம்பலப்பட்டதால் மற்றும் பி.எல்.ஓ மீதான நம்பிக்கை இழப்பால் தூண்டிவிடப்பட்டிருக்கிறது, ஒஸ்லோ உடன்பாட்டின் பின்னர் அதன் ஏற்பாட்டிற்குப் பின்னர், பாலஸ்தீனிய நிர்வாகம் பாலஸ்தீனிய மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற ஒன்றும் செய்யவில்லை. ஏதாவது இருப்பதாக இருந்தால், மேற்குக்கரை மற்றும் காசா பாலை நிலப்பகுதியின் ஏழ்மை நிறைந்த பாலஸ்தீனிய பகுதிகளில் அவர்களது சூழ்நிலைகள் மோசமடைந்திருக்கின்றன.

தற்கொலை குண்டுவெடிப்பு இயல்நிகழ்ச்சியை உதயமாகச்செய்த சூழ்நிலைகள் இவைதான். இந்த நடவடிக்கைகள் விரக்தியுற்ற எதிர்ப்பின் நடவடிக்கைகளை விடவும் அரசியல் பயங்கரவாதத்தின் நன்கு திட்டமிட்ட வேலைத்திட்டத்தின் குறைவான உற்பத்திப் பொருளாகும்.

சியோனிச தலைவர்கள் பயங்கரவாத புலம்பல் அறிவிப்புக்களில் பெரிய அளவு பாசாங்கு அம்சம் உள்ளது. யூத வரலாறு மிகப்பெரும்பான்மையான சச்சரவுகளுக்கு எதிராக பயங்கரவாத தந்திரோபாயங்களை மேற்கொண்ட விடுதலைப் போராளிகளின் ததும்பிவழியும் எடுத்துக்காட்டுக்களைக் கொண்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டின்படி, பத்தாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்ற மோசஸ், ஷோஷுவா, சாம்சன் மற்றும் ஏனையோரை ஒருபுறம் ஒதுக்கி வையுங்கள், இஸ்ரேலிய பத்திரிக்கையாளர் யூரி அவ்னரி குறிப்பிடுகிறவாறு, யூத விடுதலையைப் பெறுவதில், மக்காபிஸ் போன்ற வரலாற்றுப் பிரமுகர்கள் "கிரேக்க மொழியையும் வழியையும் பின்பற்றிய யூதர்களை தேடிக் கொன்ற பயங்கரவாதிகளாக இருந்தார்கள்." அவ்னரி கூட சுட்டிக்காட்டுவது போல, ஜாஃபா, ஹைபாவில் அரபு சந்தைகளில் வெடிகுண்டுகளை வைத்தார்கள், கிங் டேவிட் விடுதியைத் தகர்த்தார்கள் மற்றும் அரபு பேருந்துகளைக் கொளுத்தினார்கள்.

நாஜி ஜேர்மனிக்குள் அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவுக்குள், மக்கள் வாழும் மையங்களுக்கு எதிராகவும் கூட, யூதர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை உலகம் எப்படிப் பார்க்கப் போகிறது? தாக்கியவர்கள் நாயகர்களாக கருதப்பட்டிருப்பார்கள் என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? 1943ல் எழுச்சியின் பொழுது வார்சோ நகர யூதர்பகுதியில் வாழ்ந்துவருபவர்கள் வெளியேவர போராடி இருந்தால் மற்றும் அப்பாவி போலந்து மக்களை, அதேபோல ஜேர்மன் படைவீரர்களை கொலை செய்திருந்தால் எப்படி நாம் அவர்களை நினைவு கூருவோம்? அதே ஆண்டில் பகைவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்தவர்களின் தாக்குதலால் ஒரு மாதத்தில் அளிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரம் இரயில் வண்டிகளை நாஜிக்கள் இழந்தனர். இரயில் வண்டியின் சிதைவில் பலியுண்ட அனைவரும் சீருடையில் இல்லை.

சியோனிச வடிவில், யூத தேசியவாதம், பேரச்சத்தை உண்டுபண்ணியுள்ளது பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமல்ல. அந்த யூதர்கள் பரந்த மக்களைச் சுற்றி வளைத்தல், கூட்டாகத் தண்டனைகள், அரசியற் படுகொலைகள் மற்றும் நமது காலத்தின் மிகப் பயங்கரமான கேலிப் பண்பான, ஏனைய மிருகத்தனமான ஒடுக்குமுறை வடிவங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளன. யூத மக்களின் ஜனநாயக மற்றும் சுதந்திரத்தை விரும்பும் மரபுகள் சியோனிசத்தால் கறைப்படுத்தப்பட்டு மற்றும் சகதியில் இழுக்கப்பட்டிருக்கின்றன. உண்மையில், தற்கால செமிட்டிச விரோத மிகவும் ஆபத்தான தனித்த மூலவளம் அரபுகளுக்கு எதிரான இஸ்ரேலியரின் அட்டூழியங்களில் இருக்கிறது என்பதை, யூத மக்கள் ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும் உள்ளபல இலட்சக் கணக்கானோர் மனங்களில், குறிப்பாகச் சுட்டுகிறது.

இஸ்ரேலின் இறுதி ஒழுக்க அழிவானது ஷரோனின் ஆட்சியால் மற்றும் அதன் பயங்கரவாத நடவடிக்கைகளால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுதான் தேசிய அல்லது மதத் தனிச்சிறப்புத்தன்மை- யூத, இஸ்லாமிய அல்லது வேறு எதன் மீதாகவும் கட்டப்படும் எந்த அரசினதும் பிற்போக்கு தர்க்கம் ஆகும். இன்று யூதர்கள் முரண்கொள்ளும் பிரச்சினை இந்தப் பேரழிவில் இருந்து எப்படி வெளிப்படுவது என்பதுதான்.

மேற்குக்கரை மீதான தாக்குதலுக்கு, அது கிட்டத்தட்ட முற்றிலுமாக அமெரிக்க செய்தி ஊடகங்களால் அறிவிக்கப்படாமல் விடப்படுகிற போதிலும், அதற்கு இஸ்ரேலுக்குள் எதிர்ப்பானது பரந்துவிரிந்தும் வளர்ந்தும் வருகிறது என்பதை நாங்கள் நம்பமுடிகிறது. தற்கொலைக் குண்டு வெடிப்புக்களைப்பற்றிப் புலம்பும் இஸ்ரேலியக் குடிமக்கள், அவர்களின் சொந்த அரசாங்கத்தின் கொள்கைகளில் அத்தகைய நடவடிக்கைகளின் இறுதி வளம் இருப்பதை இன்னும் இனம் காணவேண்டியவர்களாக இருக்கின்றனர். இஸ்ரேலிய படையினர் மற்றும் போலீசாரைக் கொண்ட பல ஆயிரம்பேர் தங்களின் எதிர்ப்பைக் காட்டும் துணிவு மிக்கவர்களாக இருக்கின்றனர் மற்றும் நூற்றுக்கணக்கான தயார்நிலை இராணுவப் படையினர் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப்பகுதிகளில் சேவை செய்ய மறுத்திருக்கின்றனர். ஷரோனின் அனைத்து எதிர்ப்பாளர்களும் பயங்கரவாதிகளின் மற்றும் செமிட்டுகள் விரோதத்தின் ஆதரவாளர்கள் என்ற பூசிமெழுகலை இது ஒன்றே பொய்யாக்குகிறது.

சமீபத்திய நிகழ்ச்சிகள் சியோனிச அரசும் கருத்தியலும் மறுதலிக்கப்பட்டிராமல், ஏகாதிபத்தியத்தால் வரையப்பட்ட அனைத்துவிதமான பிற்போக்கு எல்லைகளும் அகற்றப்படாமல் மற்றும் இந்தப்பிராந்தியத்தின் நெருக்கடிக்கு மதச்சார்பற்ற, ஜனநாயகப் பூர்வ மற்றும் சோசலிச விடை காணப்படாமல் அமைதி இருக்கப் போவதில்லை என்று விளக்கிக் காட்டுகின்றன.

ஆசிரியர் குழு

13 ஏப்ரல், 2002

See Also :

அரபாத்தைப் படுகொலை செய்வது பற்றியும் பாலஸ்தீனிய நிர்வாகத்தை அழிப்பது பற்றியும் இஸ்ரேலும் வாஷிங்டனும் விவாதிக்கின்றன

இனப் படுகொலையின் நிகழ்ச்சிப் பட்டியல்: ஷரோனும் அமெரிக்காவும் பாலஸ்தீனியர்கள் மேல் எப்படித் தாக்குதலைத் தயார் செய்தனர்

ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய தொழிலாளர்களும் இளைஞர்களும் ஷரோனின் யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்

புஷ்ஷின் ''சமாதான முன்னெடுப்பு'' அரபு மக்களுக்கு எதிரான பரந்த யுத்தத்திற்கு அடித்தளமிடுகின்றது