World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German chancellor speaks against US war vs. Iraq

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

By Ulrich Rippert and Peter Schwarz
12 August 2002

Back to screen version

பல பகிரங்கமான பேச்சுகளிலும் பேட்டிகளிலும், ஜேர்மன் அதிபர் ஹெகாட் ஷ்ரோடரும் (சமூக ஜனநாயக கட்்்சி) வெளிநாட்டு அமைச்சர் ஜொஸ்க்கா பிஷ்ஸ்சர் (Joschka Fischer -பசுமைகட்சி) மற்றும் கூட்டரசாங்கத்தின் முன்னணி அரசியல்வாதிகளும், ஈராக் மீதான தாக்குதலில் ஜேர்மன் பங்கு கொள்வதை நிராகரித்துள்ளனர். ஐக்கிய நாடுகளின் தலைமையின் கீழ் இத்தாக்குதல் நடந்தாலும் இதுதான் தமது நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் எவ்வித முடிவு எடுத்தாலும் ''ஜேர்மனி தனது வழியில் செல்லவேண்டும்'' என சமூக ஜனநாயக் கட்சியின் தலைவரான Franz Müntefering கடந்த செவ்வாய்க் கிழமை ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

ஹனோவர் நகரில் நடந்த உச்சகட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஹெகாட் ஷ்ரோடர் பேசும் போது ''முழு மத்திய கிழக்கு சம்பந்தமாக எந்தவொரு அரசியல் முன்னோக்கு இல்லாமலும் அங்கு ஏற்படும் பின் விளைவுகளையும் பற்றி எந்தவொரு சிந்தனை இல்லாமலும் ஈராக் மீது யுத்தம் தொடுப்பது பற்றி எச்சரித்த அவர், ''யார் அங்கு போகிறார்களோ அவர்களுக்கு தெரிய வேண்டும் ஏன் அவர்கள் அங்கு செல்கிறார்கள் என்றும், என்ன தேவை அவர்களுக்கு அங்கு உண்டு எனவும்'' ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.

1991 இல் வளைகுடா யுத்தத்தில் உடன்பட்டது போல இன்று பற்றாக்குறையான நிதி உதவியில் கூட பங்கெடுப்பதையும் நிறுத்துவதோடு ஜேர்மனி அரசியலுக்கு பதிலாக காசோலை வழங்கும் நாடாக இனிமேல் இருக்க முடியாது எனவும் இந்த வளங்கள் மத்திய கிழக்கில் பிழையான முறையில் பிரயோகிப்பதை தான் அனுமதிக்க முடியாது எனவும் ஷ்ரோடர் கூறியுள்ளார்.

மேலும் வெளநாட்டு அமைச்சர் பிஷ்சர் Süddeutschen Zeitung ஜேர்மன் பிரபல பத்திரிகைக்கு, கடந்த புதன் கிழமை பேட்டியளிக்கையில் ''ஈராக்கிற்கு மேலான தாக்குதலானது எண்ணிப்பார்க்க முடியாத நெருக்கடிகளை உருவாக்கலாம்'' என கூறியுள்ளார்.

அமெரிக்கா ஒரு இராணுவ தீர்வின் மூலம் பலாத்கார முறையில் ஈராக் அரசாங்கத்தினை மாற்ற முனைகின்றது. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகள் தெளிவாக உள்ளதா? என்ற அவர் ''இது இராணுவ ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் மத்திய கிழக்கை முற்றுமுழுதாக மாற்றியமைக்கவேண்டி வரலாம் என்பது தெளிவாக இருக்கின்றதா?'' எனவும் ''இது ஒரு திறந்த கேள்வி என்பதை அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனரா?, எனவும் ''அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் அங்கிருந்து பின்வாங்கிக்கொள்ளவரானால் அயலவரான நாங்கள் தான் அதனால் உருவாகும் பாரிய விளைவுகளை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்'' எனவும் கூறினார்.

தேர்தல் தந்திரோபாய முனைப்பு

அமெரிக்காவின் ஈராக் மேலான தாக்குதலுக்கு ஜேர்மன் அரசின் எதிர்ப்பு நிலைப்பாடானது புதிதான ஒன்றல்ல. இன்றுவரை ஷ்ரோடரும் பிஷ்சரும் இராஜதந்திர வழிகளிலேயே தமது எதிர்ப்பினை வெளிகாட்ட முயற்சி செய்து வந்தனர். அத்துடன் பகிரங்க ரீதியாக எதிர்ப்பதை தவிர்த்து வந்தனர். ஈராக் மீதான தாக்குதல், கூட்டினருடன் கலந்துரையாடலின் பின்னரே மேற்கொள்ளப்படும் என புஷ் தனக்கு உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டு அவர் இவ்யுத்தம் தொடர்பான ஜேர்மனியின் நிலைப்பாடு தொடர்பான கேள்வியை நிராகரித்து வந்தார்.

இன்று அரசாங்கம் இராஜ தந்திர முறைகளை விட்டு பகிரங்கமான முறையில் வழமைக்கு மாறான முறையில் தீர்மானகரமான எதிர்ப்பினை தெரிவித்ததானது, அதன் தேர்தல் நலன்கள் பற்றிய தந்திரோபாய முன்நிபந்தனைகளை கருத்தில் கொண்டதாலேயாகும். கடந்த கிழமைகளில் நடந்த தேர்தல் அபிப்பிராய கணிப்பு பழமைவாத எதிர்கட்சியினருக்கே 22 செப்டம்பர் தேர்தல் அதிக சாத்தியமாகவுள்ளது என முன்கூட்டியே கூறுவதுடன், ஆளும் கட்சி தனது ஆதரவை இழந்து வருகின்றது.

வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு வருடங்களில் முதல் தடவையாக கடந்த கிழமைகளில் ஆகக்கூடிய உயர்ந்த மட்டத்தினை எட்டியுள்ளது. அதே நேரத்தில் ஜேர்மன் பங்கு சந்தைகள் கடந்த ஐந்து வருடங்களின் பின்னர் முதல் தடவையாக கீழ் மட்டத்தினை எட்டியுள்ளது. வங்கிகளிலும் நிறுவனங்களிலும் இந்த துன்பகரமான தகவல்கள் முடிவற்று போய்விட்டன. தொடர்ச்சியான பாரிய வேலை நீக்கங்கள், குறைந்த நேர வேலை, சமூக வெட்டுக்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கொண்டுள்ளன. மத்திய, மாநில, மாநகர அரசாங்கங்களுக்கான வரிவருமானம் குறைந்து செல்வதுடன், அவை சமூகநல செலவுகளை மேலும் வெட்டித்தள்ளவுள்ளன.

ஈராக் யுத்தத்தில் ஜேர்மனி பங்கு கொள்வதற்கு எதிராக ஒரு உயர்ந்த தொனியில் பிரச்சாரம் செய்வதன் மூலம் ஷ்ரோடர் அரசாங்கம் தம்மிலிருந்து விலகி சென்றுள்ள வாக்காளர்களை திசை திருப்ப முனைகிறது. இந்த பிரச்சாரத்தின் ஊடாக தேர்தலில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் போக்கினை பகுதியளவாவது தவிர்க்க முனைகிறது. பரந்துபட்ட மட்டத்தில் அதற்கு எதிர்ப்பு இருப்பதும் யுத்தத்தை ஒரு தேர்தல் பிரசாரமாக்குவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியும் தாராளவாத கட்சியும் ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் கருத்துக்கள் குறித்து ஆச்சரியமடைந்துள்ளதுடன் வேறுபாடான முறையில் தமது பிரதிபலிப்பை வெளிக்காட்டின. சிலவேளையில் அவர்களது கருத்து வெளிப்படையாக முரண்பாடானதாக இருந்தது.

CDU (கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி) அரசியல் பிரமுகர் வோல்வ்காங் சொய்பல (Wolfgang Schäuble) (இவர் கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான ஸ்ரொய்பர்- Stoiber இன் தேர்தல் பிரச்சாரத்தில் வெளிநாட்டு, பாதுகாப்புப்துறைக்கு பொறுப்பானவர்) குறிப்பிடும் பொழுது ''ஒரு பொருத்தமான அளவில்'' ஈராக் யுத்தத்தில் பங்கெடுப்பது தேவையானது எனவும் அத்துடன் ஐக்கிய நாடுகளின் அங்கீகாரமும் முன்நிபந்தனையானது என குறிப்பிட்டார். CDU வெளிநாட்டு அமைச்சர் Friedbert Pflüger குறிப்பிடும்போது ஐக்கிய நாடுகள் அங்கீகாரம் இல்லாமலே நாம் யுத்தத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.

கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியின் வேட்பாளரான ஸ்ரொய்பர் (Stoiber) மிகவும் கவனமாக இருந்தார். அவர் தன்னை யுத்த ஆதரவாளராக காட்டமுனைவதை எதிர்த்து இது தொடர்பாக ஒரு விதமான கருத்தும் தெரிவிக்க மறுத்துவிட்டார். பதிலாக யுத்தத்தை தேர்தல் பிரசாரமாக்குவதாக அரசாங்கத்தை குற்றம் சாட்டினார். அவர் பிரதமரினதும், வெளிநாட்டு அமைச்சரினதும் நடவடிக்கை ''பொருத்தமற்றதும், பிரயோசனமற்றதும்'' என குற்றம்சாட்டி வெளிநாட்டு கொள்கை தொடர்பான பிரச்சனையை உள்நாட்டு அரசியல் இலாபத்திற்கான மூலதனமாக்குகின்றார்.

இது கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்கள் ஜனநாயகத்தன்மையை எவ்வாறு விளங்கிக்கொள்ளகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. அவர் மில்லியன் கணக்கானோரின் தலைவிதியின்மீது ஆதிக்கம் செலுத்தும் யுத்தம் தொடர்பான கேள்வியை தேர்தல் பிரசாரத்திலிருந்து விலத்திவைக்க முனைகின்றார்.

தாராளவாதக் கட்சியின் (FDP) தலைவரான Guido Westerwelle எதிர்மாறான நிலைப்பாடு எடுத்துள்ளார். அவர் பிரதமரை, ஒரு அரசாங்க விளக்கத்தை வெளியிடும்படியும், இது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

அத்திலாந்திக்கு இடையாலான முரண்பாடுகள்

ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் கருத்துக்கள் தேர்தல் தந்திதிரோபாயத்தை அடிப்படையாக கொண்டிருப்பினும், இது கடந்த வருடங்களாக அமெரிக்காவிற்கும், அதன் ஐரோப்பிய கூட்டிற்கும் இடையில் அதிகரித்துவரும் ஆளமான முரண்பாடுகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

கடந்தகாலங்களின் யுத்தங்களான, முதலாவது வளைகுடா யுத்தம், யூகோஸ்லாவியா யுத்தம், கொஸவோ யுத்தம் மற்றம் அண்மைய ஆப்காஸ்தான் யுத்தத்திலும் இடையிடையே பிரச்சனைகள் இருந்தாலும் ஜேர்மன் அரசாங்கம் அவற்றிற்கு அரசியல், பொருளாதார, இராணுவ ஆதரவை வழங்கியிருந்தது. ஈராக் தொடர்பான விடயத்தில் அவர்களுடைய நலன்கள் மிகவும் ஆழமானவையாக உள்ளன. இதனால் அவர்கள் சாதாரணமாக ஆதரவளிக்க தயாராக இல்லை.

தேர்தல் பிரசாரம் தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இது தொடர்பாக பிரச்சனை இருந்தாலும், அவர்களுக்கு இடையே ஒரு உடன்பாடுள்ளது. முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான Hans-Dietrich Genscher (FDP) Deutschland funk என்னும் வானொலிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கிய பேட்டியில் யுத்தத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளார். அவர் ''ஜேர்மனியில் எவரும் யுத்தத்தை எதிர்க்கவில்லை'' என்பது தனக்கு தெரியும் என தெரிவித்தார். Die Zeit என்னும் பத்திரிகை பிஷ்ஸ்சரையும், சிலவேளை அவருக்கு அடுத்ததாக வெளிநாட்டு அமைச்சராக வரக்கூடிய Wolfgang Schäuble (CDU) இனையும் ஒப்பிட்டு ''அடிப்படையில் இருவரும் ஈராக் தொடர்பாக ஒத்த கருத்துடையவர்கள். Schäuble உம் அரசியல் ரீதியாக ஒரு புதிய யுத்தத்தை ஜேர்மனியின் ஆதரவுடன் விரும்புவதாகவும், அப்படியான யுத்தத்தில் கலந்துகொள்ளாவது விடுவது என்பது வெறும் கற்பனையே என்பது பிஷ்ஸ்சருக்கும் தெரியும்'' என குறிப்பட்டது.

அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையாலான முரண்பாட்டுக்கு காரணம் அவர்களுக்கு இடையாலான கருத்துவேறுபாடல்ல, மாறாக இது யுத்தத்திற்கு எதிராக ஒரு பரந்தபட்ட இயக்கத்தை தோற்றுவித்துவிடும் என்ற பயமாகும். வியட்னாம் யுத்தத்திற்கு எதிராக 60ம் ஆண்டுகளில் தோன்றயதைப்போன்ற அப்படியான ஒரு இயக்கமானது சொந்த நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக இலகுவாக திரும்பிவிடலாம். இதனால் ஏற்கனவே தேர்தல் தோல்வியை எதிர்நோக்கியுள்ள சமூக ஜனநாயக் கட்சியும் பசுமைக் கட்சியும் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தை தேர்தல் தலையங்கமாக்கியுள்ளன. இதனால் கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி இதனை நிராகரிக்கின்றது.

அமெரிக்காவின் யுத்தத் திட்டத்திற்கு எதிரான ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் விமர்சனங்கள் மக்களின் பரந்த பிரிவினர் நிராகரிப்பதை விட வேறுநோக்கத்தை கொண்டுள்ளன. ஈராக் மீதான அமெரிக்காவின் ஆகாயத்தாக்குதல் பாரிய அழிவை ஏற்படுத்தும் என்ற மக்களின் பரந்த பிரிவினரின் எதிர்ப்புக்கு மாறாக ஆளும் தட்டினரது கவனம் அப்பிரதேசத்தில் புஷ் நிர்வாகத்தின் தலையீடானது ஐரோப்பாவினதும் தமது நலன்களுக்கும் பாதகமாகிவிடும் என்பதாகும். 1991 யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கானோர் ''எண்ணெயில் இரத்தத்தை கலக்காதே'' என்ற கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஷ்ரோடரும் பிஷ்ஸ்சரும் ஈராக் அரசாங்கத்தை பதவி விலக்குவதற்கு அமெரிக்காவிற்கு உரிமை உள்ளதா என கேட்கவில்லை? அல்லது அப்பாவி ஈராக்கிய மக்கள் மீது யுத்தம் உருவாக்கும் அவலங்கள் குறித்தோ கவலைப்படவில்லை. அவர்களின் கவனம் அப்பிரதேசத்தில் புஷ் நிர்வாகத்தின் தலையீடானது ஐரோப்பாவினதும் தமது நலன்களுக்கும் பாதகமாகிவிடும் என்பதாகும்.

இது முன்னாள் வெளிநாட்டு அமைச்சரான Genscher, Deutschlandfunk இற்கு வழங்கிய பேட்டியில் தெளிவாகியது. அவர் ''அங்கு அமெரிக்காவை விட ஐரோப்பாவே உடனடியான தாக்கத்தை எதிர்நோக்குகின்றது. மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலைமை மோசமாக உள்ளது. இங்கு நிலைமை இன்னும் மோசமடையுமானால் அது ஐரோப்பாவிற்கே பாரிய விளைவுகளை உருவாக்கும்'' எனக் குறிப்பிட்டார்.

Genscher இங்கு குறிப்பிடுவது ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தினால் உருவாக்கூடிய பொருளாதார, அரசியல் விளைவுகள் பற்றிய ஐரோப்பாவினது பயம் தொடர்பாகவாகும். வெளிநாட்டு அமைச்சரான பிஷ்ஸ்சரின் பயமானது முன்னேற்பாடில்லாத அமெரிக்காவின் இராணுவ தலையீடானது அதன் பின்னர் உருவாக்கூடிய முன்னெதிர்பாராத வெடிப்புமிக்க நிலைமையை அயலவரான ஐரோப்பா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதாகும்.

ஈராக் மீதான அமெரிக்காவினது தாக்குதலானது மத்திய கிழக்கிலும், தூரகிழக்கிலும் உள்ள மற்றைய நாடுகளின் அரசாங்கங்களை நிலைகுலைய வைத்தால் என்ன நிகழும்? வடக்கு ஈராக்கில் ஒரு தனி குர்திஸ்தான் உருவாகி அது துருக்கியில் குர்திஸ்தான் பிரச்சனைக்கு தீ மூட்டினால் என்ன நிகழும்? ஏற்கெனவே பலவீனமடைந்துள்ள உலகப்பொருளாதாரத்தை அதிகரிக்கும் எண்ணைய் விலை ஒரு இறுதியான வீழ்ச்சிக்குள் (மந்தநிலைக்குள்) இட்டுச்சென்றால் என்ன நிகழும்? இக்கேள்விகள் ஐரோப்பிய அரசுகளை தற்போது கவனத்திற்குள்ளாக்கியுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க ஆதரவிலான ஒரு அரசாங்கத்தின் பூகோள மூலோபாய விளைவுகள் இன்னமும் பிரச்சனையானதாக இருக்கும். அந்த நாடானது சவுதி அராபியாவிற்கு அடுத்து ஆகக்கூடிய எண்ணெய் வளத்தை கொண்டுள்ளது. அமெரிக்க படைகள் மத்திய ஆசியாவிலும், கஸ்பியன் கடல் பகுதியிலும் தம்மை நங்கூரமிட்டுக்கொண்ட பின்னர் ஈராக்கினுள்ள தலையிடுவதானது உலகத்தின் முக்கிய எண்ணெய் வளங்களை மீது தமது கட்டுப்பாடு மீதான அபாயம் தொடர்பான அமெரிக்க வெளிநாட்டு கொள்கையின் நோக்கமாகும். இது ஐரோப்பிய சக்திகளால் மிகவும் ஐயுறவுடன் நோக்கப்படுகின்றது. அவர்கள் சக்தி உற்பத்தி (Energy) தொடர்பாக அமெரிக்காவில் கூடியளவில் தங்கியிருப்பதை கட்டாயமாக தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றனர்.

அமெரிக்காவினது யுத்தத்திட்டங்கள் மீதான ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் விமர்சனங்கள் சமாதானத்தை கொண்டுவருவதனை நோக்கமாக கொண்டதல்ல. இது ஏகாதிபத்திய சக்திகளிடையே அதிகரித்துவரும் பதட்டங்களினதும் மற்றும் வெளிநாட்டுகொள்கையை அதிகரித்துவரும் இராணுவ மயப்படுவதற்கான முக்கியகாரணமுமாகும்.

தற்போதைய மத்திய கிழக்கு அபிவிருத்து தொடர்பாக ஜோர்ஜ். புஷ் இனை சுற்றியுள்ள வலதுசாரி பிரிவினரினது அரசியல் எவ்வளவு முக்கியமாக இருந்தாலும், கடந்த 10 வருடங்களாக அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கலை தனி அரசில்வாதிகளின் அகநிலையான விருப்பங்களின் அடிப்படையில் விளங்கப்படுத்தமுடியாது. இது கிளின்டனின் ஜனாதிபதித்துவத்தின் கீழ் பலமடைந்ததுடன், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனியில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத அளவில் சர்வதேசரீதியான இராணுவப்பங்கெடுப்பு நடவடிக்கை சிவப்பு-பச்சை கூட்டரசாங்கத்தின் கீழ் அதிகரித்துள்ளது.

சர்வதேச மூலதனமானது தேசிய எல்லைகளை மட்டும் கடந்த செல்லவில்லை. இது உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முனைகின்றது. பலமானதும் அதனால் மூர்க்கமானதுமான அமெரிக்க மூலதனமானது இப்போக்கினை தெளிவான விதத்தில் வெளிப்படுத்துகின்றது. அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் அகராதியிலிருந்து தேசிய இறைமை, உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதில்லை, சுயநிர்ணய உரிமை போன்றவை மறைந்துவிட்டன. ''எவர் எம்முடன் இல்லையோ, அவர்கள் எமக்கு எதிரானவர்கள்'' என்பதுதான் புதிய வெளிநாட்டுக் கொள்கைக்கு புஷ் இன் பொருத்தமான விளக்கமாகும்.

ஜேர்மனியின் அரசாங்கம் இதனை பின்தொடர முனைகின்றது. தனது முன்னைய அரசாங்கம் யூகோஸ்லாவியாவை உடைப்பதை முன்வைத்ததைப்போல் தற்போதைய அரசாங்கமும் பெல்கிராட் மீதான குண்டுத்தாக்குதலையும், கொசவோவின் அதிதீவிர தேசியவாதிகளான கொசவோ விடுதலை இராணுவத்தை ஆதரித்ததும் இதற்கான சிறப்பான உதாரணங்களாகும்.

ஐரோப்பாவின் விமர்சனம்

தற்போது தற்காலிகமானதாக இருந்தாலும் அமெரிக்க பொருளாதார நெருக்கடியும், டொலரின் பலவீனமும், முன்னொருபோதும் இல்லாதவாறு ஜேர்மனியையும் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களையும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிரான விமர்சனத்தை உரத்த குரலில் தெரிவிப்பதற்கான உற்சாகத்தை வழங்கியுள்ளது. அத்துடன் தற்போது அமெரிக்காவின் ஜனநாயக் கட்சியிடம் இருந்து வரும் அதிகரிக்கும் உள்நாட்டு எதிர்ப்பானது அடிக்கடி புகழ்ந்து குறிப்பிடப்படுகின்றது.

அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையாலான முரண்பாடுகளை பிரித்தானியாவில் காணக்கூடியதாகவுள்ளது. இதுவரை பிளேயரின் அரசாங்கமானது தனது பாரம்பரியமான உறவுகளை பாதுகாத்துக்கொள்ள முனைந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி ஈராக் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மீது தனது பின்னடிப்பை காட்டத்தொடங்கியுள்ளது. பழமைவாத பத்திரிகையான Sunday Telegraph கடந்தவார இறுதியில் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையாலான ''வெட்கங்கெட்ட பிளவு'' பற்றி குறிப்பிடுகையில், தாராளவாத Observer பத்திரிகை ''பிளவுளுக்கான சைகைகள்'' பற்றி குறிப்பிட்டது. மத்திய கிழக்கின் நெருக்கடிக்கு ஒரு தீர்வு இல்லாதவரை ஈராக் மீதான தாக்குதலை பிரித்தானிய அரசாங்கம் நிராகரிப்பதாக Financial Times பத்திரிகை குறிப்பட்டது.

தனது கட்சியின் உள்ளேயே பிரதமர் பிளேயர் எதிர்ப்பை எதிர்நோக்குகின்றார். ஒரு உள் அறிக்கையின்படி யுத்தம் தொடர்பாக வாக்களிப்பிற்கு விடப்படுமானால் தொழிற் கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர்களில் 60பேர் வரையில் எதிராக வாக்களிக்கலாம் என குறிப்பிட்டது. முக்கிய இராணுவத் தலைவர்களும் ஈராக் மீதான சாகசத்தை எதிர்க்கின்றனர்.

அமெரிக்காவினது மத்திய கிழக்கு மற்றும் ஈராக் தொடர்பான கொள்கையின் முக்கிய எதிர்ப்பாளனாக பிரான்ஸ் உள்ளது. அதன் அரசாங்கங்கள் ஈராக் மீதான பொருளாதாரத்தடையை நீக்குமாறு கடந்த வருடங்களில் வலியுறுத்திவந்திருகின்றன. இதன் மூலம் தமக்கு கிடைக்கவேண்டிய பாரியகடனை திரும்பப்பெற முனைகின்றது. லு மொன்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் வெளிநாட்டு அமைச்சரான டொமினிக் டு வில்பன் (Dominique de Villepin) ''பேச்சுவார்த்தை மூலம் ஈராக்கின் பிரச்சனையை தீர்க்கவேண்டும்'' எனவும் சகல இராஜதந்திர வழிகளிலும் பாக்தாத் மீதான அமெரிக்கவின் யுத்தத்தை தடுக்க முனையப்போவதாகவும் குறிப்பட்டார்.

90 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததைப்போல், முதலாம் உலக யுத்தத்திற்கான வெடிமருந்தகமாக எவ்வாறு பால்கன் இருந்ததோ, அதேபோல் இன்று மத்திய கிழக்கில் முக்கிய ஏகாதிபத்தியங்களின் வேறுபட்ட நலன்கள் மோதிக்கொள்கின்றன.

எவ்வாறிருந்தபோதிலும், அமெரிக்க இராணுவ மேலாதிக்கம் தொடர்பாக பேர்லினும், லண்டனும் பாரீசும் எவ்வளவிற்கு தெளிவாக இருந்தபோதிலும், பங்கு பிரிவினை தமது போட்டியாளரிடம் மட்டும் விட்டுவிடாதிருக்கும் வகையில் இறுதியில் ஈராக்கின் மீதான தாக்குதலில் கலந்துகொள்ளவதற்கான சாத்தியங்கள் அனைத்தையும் திறந்துவைத்துள்ளன.

இதனால்தான், ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் கலந்துகொள்ளாதது தொடர்பான ஷ்ரோடரினதும் பிஷ்ஸ்சரினதும் கருத்துக்களை வெற்றுவார்த்தைகளாக எடுக்கக்கூடாது. குவைத்தில் நிலைகொண்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் கவசவாகனங்கள் ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்படக்கூடியதாக உள்ளதுடன், இன்னும் அங்கிருந்து பின்வாங்கப்படவில்லை. அத்துடன் ஜேர்மன் கடற்படை கப்பல்கள் இன்னும் ஆபிரிக்காவின் முனையை காவல்காத்துவருகின்றன. சமூக ஜனநாக கட்சியும் பசுமைக் கட்சியும் சகல சந்தர்ப்பங்களையும் திறந்து வைத்துள்ளன.

பாரிய விளைவுகளை உருவாக்கக்கூடிய ஒரு புதிய ஈராக் யுத்தத்திற்கு எதிரான போராட்டத்தை வெறும் தேர்தல் வாக்குறுதிகளின் பின்னே விட்டுவிடக்கூடாது. அதற்கு யுத்த கேள்வியை சமூகக் கேள்விகளுடன் தொடர்புபடுத்தும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச இயக்கம் ஒன்று தேவை. ஏகாதிபத்திய யுத்தமானது சொந்த நாட்டின் சமூக மற்றும் அரசியல் ஒடுக்குமுறையுடன் நேரடியாக தொடர்புபட்டது. பென்டகனின் மூர்க்கமான இராணுவ கொள்கைகளுக்கு எதிரான ஐரோப்பிய தொழிலாளர்களின் உண்மையான கூட்டாளிகள் அமெரிக்க தொழிலாள வர்க்கமாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved