World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Iran: death sentence sparks protests and coup threats

ஈரான்: மரண தண்டனை, எதிர்ப்புக்களையும் ஆட்சிக் கவிழ்ப்பு சதியையும் கிளப்புகிறது

By Justus Leicht
21 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஒருவார கால மாணவர் போராட்டத்தை தொடர்ந்து, அரசியல் ரீதியாக அறிவித்த மரண தண்டனையை எடுத்துவிட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இம்முடிவு, சமூகப் பதட்டங்களைத் தணிக்க ஒன்றும் செய்யவில்லை. அவை அமெரிக்க அழுத்தத்தால் கிளறிவிடப்பட்டிருக்கின்றன.

ஹஷேமி அகஜாரி (Hashemi Aghajari) எனும் வரலாற்றுப் பேராசிரியர் - உள்ளூர் நீதிமன்றத்தால் ஹமதானில், தெய்வ நிந்தனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார். அகஜாரி, முஸ்லிம்கள் தங்கள் மதத்தலைவர்களை, "கண்மூடித்தனமாகப்" பின்பற்ற அவர்களொன்றும் "குரங்குகள்" இல்லை என்று கூறியது குற்றம் எனப்பட்டது. மரண தண்டனையைத் தொடர்ந்து, சென்ற வாரம் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, பல பல்கலைக்கழகங்களில், மறியல் செய்தனர். ஹமதானிலேயே ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பில் கலந்துகொள்ள மற்ற நகரங்களிலும் டாப்ரிஸ், இஸ்ஃபஹான் எல்லாவற்றிற்கு மேலாக தெஹ்ரான் - உட்பட போராட்டம் நிகழ்ந்தது.

எதிர்ப்புக்கு முன்பே ஈரானில் அரசியற் சூழல் இறுக்கமாயிருந்தது. அண்மைய மாதங்களில் இஸ்லாமிய அரசாங்கத்தின் இரண்டு பிரதான போட்டிப் பிரிவுகளிடையேயான மோதல்கள், தெளிவாக அதிகரித்தது. "சீர்திருத்தவாதிகள்", எனப்பட்டவர்கள் -ஈரானியப் பாராளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதிபர் மொஹம்மது கடாமிக்கு அருகிலிருந்தபடி, பாராளுமன்றத்தில், அவர்களது பழமைவாதப் போட்டியாளர்களின் அதிகாரத்தைக் குறைக்கும்படியாக, இரண்டு சட்டங்களை அறிமுகப்படுத்தினர்.

அவற்றில் ஒன்று ஜனாதிபதிக்கு, அரசியல் கூட்டமைப்பை மீறுவோர்களை, குறிப்பிடும்படியாக, தவறும் நீதிபதிகளை விமர்சிக்கவும் மட்டுமின்றி, தண்டிக்கவும் உரிமை தருவதாகும். மற்றொன்று, காப்பாளர் அவையின் (ஒரு வகையில் இஸ்லாமிய அமைப்பிலான நீதிமன்றம்) அதிகாரமான- தேர்தலுக்கு நிற்க விரும்புவோரைப் புறக்கணிக்கும், அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.

பழமைவாத சமய குருக்கள் -ஈரானிய நீதித்துறை, காப்பாளர் அவை மற்றும் செயலாக்கக்குழு, நாட்டின் பத்திரிகைகள் மற்றும் இராணுவப் படைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எந்தப் புதுச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட, காப்பாளர் அவையின் அனுமதி தேவை. அவையால் நிராகரிக்கப்பட்ட மசோதாக்கள், செயலாக்கக் குழுவுக்கு அனுப்பப்படும். இறுதியாயும் உறுதியாயும், பழமைவாதி எனக் கருதப்படும் ஈரானிய மதத் "தலைவர்", அயதொல்லா அலி அமேனய்- யின் முடிவே நிற்கும்.

இவற்றிற்கெதிராக ஈரானிய பழமைவாத பத்திரிகையுலகும் மத குருமார்களும் பொறி பறக்கும் போராட்டத்தை மேற்கொண்டனர். அதேநேரம், நீதித்துறை, சீர்திருத்தவாதிகளின் செய்தித்தாள்களைத் தடை செய்து `சாதாரண` கிரிமினல் வழக்குகளிலும் பெருவாரியான அளவில் மரண தண்டனை விதித்தனர். இதை நிறைவேற்றுவதும் கூட காட்டுமிராண்டித்தனமாக- கட்டிடம் கட்டும் கிரேனிலிருந்து பொதுமக்களிடையே தூக்கில் இடப்பட்டனர். அகஜாரிக்கெதிரான தண்டனை, இத்தகைய அரசியல் சினமூட்டலில் வெறும் கடைசித் துரும்பு.

சட்டங்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் பொது வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்படுமெனப் பாராளுமன்றத்தில் அதிபர் கட்டாமியும் அவர்களது ஆதாரவாளர்களும் அச்சுறுத்தினர். இவ்வாக்கெடுப்பும் மறுக்கப்பட்டால், அனைத்து அரசியல் அமைப்புகளினின்றும் விலகி -பொதுமக்களின் எதிர்ப்பையும் சினத்தையும் எதிராளிகளுக்கு எதிராக திருப்புவதற்கிணையாக- செயல்பட அணியாயினர்.

இரண்டு தரப்பும், மக்களை பரந்த அளவில் திரட்டுவதற்கு எதிராயிருக்கக் காரணம், அது அடிப்படையில் விரைவில் அவர்களது ஆட்சியை வலுவிழக்கச் செய்யுமென்பதே. இரு பிரிவுகளும் மாணவர் மறியல் பல்கலைக்கழகங்களைத் தூண்டி, மக்களின் பல வகையினரையும் சேர்த்து, கட்டுப்பாடற்றதாக ஆக்கிவிடக்கூடாது என்று அஞ்சினர். அயதொல்லா கமேனய் இரு வழிகளில் செயல்பட்டார். நெருக்கடியைத் தீர்க்க மூன்று அரசு அமைப்புகளும் திறனற்றுப்போயின், தேவைப்பட்டால், "பொதுமக்கள் பலத்தோடு" தான் தலையிடப்போவதாக, சென்ற வாரத் தொடக்கத்தில், அச்சுறுத்தினார். இவ் எச்சரிக்கை, (லி புரட்சிக்காவலர் மற்றும் பஸிஜ் எனும்) துணை இராணுவ படையினரைக் கொண்டு இராணுவப் புரட்சியைத் தூண்ட முனைவதாகப் பொருள் கொள்ளப்பட்டது. இரண்டாவதாக, அகஜாரியின் மரண தண்டனையைக் கண்டித்து, சென்ற வாரம் அதை மறுபரிசீலிக்க உத்தரவிட்டார். இப்பிரச்சினையை விளக்கிக்காட்டுதற்காய் அகஜாரியே கூட, நீதிமன்றத்தின் முடிவுக்கு மேல் முறையீடு செய்வதிலிருந்து ஒதுங்கியபோதிலும், அவர் இம்முடிவை மேற்கொண்டார். அரசியல் நோக்கர்கள், மரண தண்டனை நீக்கப்படக்கூடும் எனக் கருதினர்.

பழமைவாதப் பிரிவு இப்பிரச்சனையில் பிளவுபட்டது. வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பின் 1000 சமயவெறியர்கள், அகஜாரியைத் தூக்கிலிடுமாறு போராடியதும், கமேனயின் உத்தரவு வந்தது. புரளும் வதந்திப்படி, கடுங்கோட்பாட்டாளரான செயலாக்கக்குழு வின் தலைவர் ஹஷேமி ரஃப்சன்ஜானி - தண்டனையை நிறைவேற்றவும், எதிர்ப்பாளரை அடக்க ஈரானிய இராணுவத் தலையீட்டையும், தொடர்ந்து நெருக்கடி நிலை ஆட்சியை நிறுவவும் நோக்கி செயல்படத் தொடங்கினார்.

மாணவர் எதிர்ப்புக்கள் தொடர்பான அரசாங்கத்தின் அச்சம், பிரிட்டிஷின், பைனான்சியல் டைம்ஸால் நவம்பர் 14 அன்று குறிப்பிடப்பட்டது. அதன்படி, தெஹ்ரானில் போலீஸ் தலைவர் - முக்கியமான பல்கலைக்கழகத்திற்கு எதிரே தெருவில் இறங்கி, அதிகாரபூர்வமாய் "போக்குவரத்தைச் சீர்செய்ய" என்கிறவாக்கில் - வளாகத்துக்கு வெளியே மறியல் பரவாது தடுக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார் என்கிறது.

ஃபைனான்ஷியல் டைம்ஸ் கூறுவதாவது: சாதாரண தெஹ்ரானியரில் பலர் பல்கலைக்கழக மறியலில் கலந்துகொள்ளக் காத்திருப்பதை ஈரானிய மதகுருக்களின் ஆட்சியறியும். 1979 ஆண்டைய புரட்சியில் கலந்து தெருவிலிறங்கிய நடு வயதுத் தாயார் ஒருவர், ``மாணவர்கள் வெளியே வந்தால் என்னிரு மகன்களையும் தடுக்கவியலாது என்பதை நானறிவேன்,`` என்றார்.

ஜனாதிபதி கடாமி, மரண தண்டனையை தெளிவாக விமர்சித்தார் எனினும், அமைதியாயிருக்கவும் இறுக்கம் அதிகரிக்காதிருக்கவும் கூறினார். குறிப்பிடும்படியாக, மாணவர்கள் மேலும் மறியல் செய்யாதிருக்கும்படியாகவும், குறைந்தது எந்த ஆர்பாட்டத்தையும் வளாகத்துள்ளேயே வைத்துக்கொள்ளவும் கூறினார்.

பெரியதும் முக்கியதுமான `ஒற்றுமை ஏற்படுத்தும் அலுவலகம்` (Office for the Consolidation of Unity- OCU), எனும் மாணவர் அமைப்பு இக்கோரிக்கையைக் கவனித்தது. எல்லா தர்ணாவும் பல்கலைக்கழகங்கட்குள்ளேயே நடந்தன. மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய, கமேனய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இவ்வாறும் திட்டமிட்ட அனைத்து மறியல்களும் கைவிடப்பட்டதாகப் பின்னர் தெரியலாயிற்று.

இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால் OCU கூட சீர்திருத்தவாதிகளிடமிருந்து விலகியிருந்தனர். ஏனெனில் அவர்கள் தாங்களே தங்களை கோழைத்தனமான மற்றும் தயக்கமான நடவடிக்கைகளால் இழிவுபடுத்திக் கொண்டார்கள். முந்தைய மறியலுக்கு முரணாக, மாணவர்கள் இம்முறை அரசாங்கத்தின் முன்னணி பிரதிநிதிகளான தலைமை நீதிபதி அயதொல்லா மஹ்மூத் ஹஷேமி - ஷரூடி, மதத்தலைவர் கமேனய் மற்றும் கடாமிக்கெதிராகக் குரலெழுப்பினர்.

அரசின் வலதுசாரி பலவீனம் மற்றும் ஒற்றுமையின்மையைக் காட்டும் சமிக்ஞைகளினால் அடுத்த முரண்பாடுகள் தயாரிகியுள்ளது. அகஜாரிக்கு விதித்த மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய கமேனய் கோரிய வாரக் கடைசியில், காவலர் அவை, பாராளுமன்றம் நிறைவேற்றிய இரு சட்டங்கட்கு எதிராக ரத்து அதிகாரத்தை நிலைநாட்டிற்று.

அமெரிக்காவின் அழுத்தம்

ஈரானில் இறுக்கம் வளர்வதில், அரசாங்கத்தின் மீதான அமெரிக்காவின் அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இராணுவ மொழியில் கூறுவதாயின், ஈரான், அமெரிக்கப் படைகளால் சூழப்பட்டிருக்கிறதெனலாம். அமெரிக்க இராணுவ வீரர்கள் பாரசீக வளைகுடா, துருக்கி, சவுதி அரேபியா மற்றும் அண்மையில் ஆப்கானிஸ்தானிலும் மைய ஆசியாவிலும் குவிந்துள்ளனர். பாக்தாதின் மீதான அமெரிக்கப் போரைத் தொடர்ந்து ஈரானுடனும் கூட அவை மோதலாம்.

அந்நாட்டின் மீது அமெரிக்கா தாராளமாக, அரசியல் அழுத்தத்தைக் காட்டுகிறது. ஜனாதிபதி புஷ் ஜனவரியில், ஈராக், வடகொரியாவுடன் ஈரானும் `ஊதாரி நாடு`, என அறிவித்தார். ஜூலையில், தற்போது நிலவும் அமெரிக்க கொள்கையை முறித்து, கடாமியின் தலைமையில் நடக்கும் சீர்திருத்தத்தினின்று முற்ற விலகியுள்ளார். அது முதல், அமெரிக்க இராணுவச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட், பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக மீண்டும் மீண்டும் ஈரானைக் குற்றம் சாட்டி வருகிறார்.

ஈரானிய மக்களில் ஒரு சாரார், அலட்சியப் போக்குடைய முல்லா அரசினின்று, அமெரிக்காவின் உதவியுடன் விடுபட்டு, மக்களாட்சியும் வளமும், மேலைநாட்டுத் தொடர்பினால் சாதிக்கலாம் எனும் மாயையில் உள்ளனர். மாணவர்களின் கோஷங்களில், "காபூலிலும் தெஹ்ரானிலும் தலிபான் ஒழிக", என்பதும் ஒன்றாகும். செப்டம்பரில் எடுத்த வாக்குப்படி தெஹ்ரானியரில் பெரும்பாலானோர், அமெரிக்காவுடனான உறவை மீட்டெடுக்கவும் அதன் நினைவாய் பொருளியல் முன்னேற்றம் பெறவும் ஆதரிக்கின்றனர்.

ஈரானிய அரசாங்கம், அந்நிய நாடுகளின் வற்புறுத்தலால் மேலை நாடுகள் பக்கம் திரும்பியுள்ளது. நாடு ஐரோப்பிய யூனியனுடன் வணிகம் மற்றும் நட்புறவு கொள்ள விவாதித்து அதனால் ஈரானியச் சீர்திருத்தவாதிகளை ஊக்குவித்து, அமெரிக்காவின் திட்டமான ஈராக் போரைக் குறை கூறியுள்ளது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஈரானுடன் ஆதாயமிக்க வணிக உறவுகளை ஏற்கனவே அனுபவித்து வருகின்றன. அகஜாரியின் மரண தண்டனை குறித்து ஐரோப்பிய யூனியன் வெளிப்படையாக விமர்சிக்கத் தவறிற்று. தற்போது ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பிலுள்ள டென்மார்க், அதற்கு மாறாக, ஐரோப்பிய பாராளுமன்றம் ஈரானுடன் "விமர்சன ரீதியான பேச்சுவார்த்தையை" விரும்புவதாகச் சென்ற வாரம் உறுதி செய்தது.

இந்தக் காட்சிகளுக்குப் பின்னால் ஈராக்குடனான போர்த்திட்டங்களுக்கு, அமெரிக்காவுக்கு ஈரான் ஒத்துழைக்கிறது. அமெரிக்காவிடம், தெஹ்ரான் தனது வான்வெளியில் அமெரிக்கப் போர் விமானங்கள் பகையுணர்ச்சியுடன் மீறி நுழைவதை, ஏற்பதாகக் கூறியுள்ளது. போரின் போது ஈரானியப் பகுதியில் விழும் சுடப்பட்ட விமானங்கள் அல்லது கப்பல்களுக்கு ஈரானும் உதவும். மேலும், அமெரிக்கச் செய்தித்தாள்களின்படி, ஈரானியக் கடற்படை அண்மையில், ஈராக் மீதான எண்ணெய்க்குத் தடை விதித்ததிலும் உதவியுள்ளது. அடிப்படையில் ஈரானியரைக் கொண்ட எதிர்க்குழுவான `ஈராக்கில் இஸ்லாமியப் புரட்சிக்கான மேலாண்மைக் குழு`, (எஸ்சிஐஆர்ஐ), இதனிடையில், அமெரிக்க இராணுவத்தின் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க, ஈரானிய அலுவலக வட்டாரங்களிடமிருந்து பச்சை விளக்கு கிடைத்துள்ளது.

United Press International- ன் நவ.11 அறிக்கையின்படி, கூட்டுறவு மேலும் தொடர்கிறது. அமெரிக்க மைய ஆணையகத்தால் நியமிக்கப்பட்ட தொடர்பு அதிகாரிகள் ஈரானுடன், யூப்ரடிஸ் ஆற்றை, அமெரிக்கப் படைகள் கடக்க, ஈரான் பாலச் சாமான்கள் பெரும்பாலானவற்றை அனுப்புவது போன்ற விநியோக விஷயங்களை விவாதிப்பர், என அறிக்கை கூறுகிறது. மேலும், ``தெற்கு ஈராக்கின் சதுப்பு மாவட்டங்களில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விசேட படையாளிகளின் உள்ளே ஈரானியச் சிறப்புப் படைகள் செருகப்பட்டுள்ளதாக, விசேட படைச் சமூகத்தில், பலத்த வதந்திகள்" இருப்பதாக கூறப்படுகிறது.

அறிக்கை மேலும், அண்மையில் சிரியா, ஐ.நா வில் ஈராக்கில் ஆயுதக் கண்காணிப்புத் தீர்மானத்தை ஆதரிப்பதற்கும், ஈரானின் வற்புறுத்தலே முதற்காரணம் எனக் கூறுகின்றது. இதனிடையில், லெபனானைத் தளமாகக் கொண்ட, ஹெஸ்பொல்லா இயக்கம், வெளிப்படையாகவே ஈரானை ஆதரித்து - ஈராக்கிய வெளியுறவு அமைச்சரின் அண்மைய லெபனான் பயனத்தின்போது சந்திக்க மறுத்துள்ளதையும் நோக்கவேண்டும். ஹெஸ்பொல்லா சிரியா மற்றும் ஈரானின் ஆதரவு பெற்றது.

இவைகளுக்கிடையேயும் வாஷிங்டன் ஈரானை தொடர்ந்து நெருக்கி வருகின்றது. அமெரிக்க அரசுத்துறை அகஜாரியின் மரண தண்டனையைக் கடுமையாக விமர்சித்தது. இதனிடையில், இவ்வாரம் திட்டமிடப்பட்ட, ஐ.நா வுக்கான ஈரானியத் தூதர் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுபிப்பினர்கள் இடையிலான நியூயோர்க் சந்திப்பு, தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Top of page