World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Prague NATO summit: internal tensions near the breaking point

''பிராக் நேட்டோ'' உச்சி மாநாடு: வெடிப்புறும் அளவிற்கு உள்ளுக்குள் பதட்டங்கள்

By Peter Schwarz
4 December 2002

Use this version to print | Send this link by email | Email the author

செக் நாட்டு தலைநகரில் நவம்பர் 21, 22ம் தேதிகளில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் ''மாற்றுவது,'' "மாறுவது" ஆகிய இரண்டும் தான் கேட்கப்பட இருந்த இரண்டு பிரதான சொற்களாக இருந்தன. அதிகாரபூர்வமான விளக்கங்களின்படி அந்த இராணுவ மற்றும் அரசியல் கூட்டு, புதிய அடிப்படையில் மீண்டும் அமைக்கப்படுகிறது.

பிராக் உச்சி மாநாட்டு பிரகடனம் தொடங்குவதாவது:

21ம் நூற்றாண்டின் புதிய ஆபத்தான மிரட்டல்களையும், ஆழமான பந்தோபஸ்து-அறைகூவல்களையும் சந்திக்கின்ற வகையில், 'நேட்டோ ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும் நாம் இன்றைய தினம் இங்கே கூடியிருக்கிறோம். புதிய உறுப்பினர்கள், புதிய திறமைகள், புதிய உறவுகளை நமது பங்குதாரர்களுடன்- இணைந்து நேட்டோவை மாற்றுவதற்கு நாம் உறுதி எடுத்துக்கொள்கிறோம்.''

இந்த உச்சி மாநாட்டை ஒருவர் மிகவும் ஆழமாக ஆராய்ந்தால், ''சரிவு''- மற்றும் சிதைவு நோக்கி நேட்டோ செல்கின்றது, என்பது தெளிவாகத் தெரியும். இந்த வார்த்தைகள்தான் மிகப்பொருத்தமாயிருக்கும். சம்பிரதாய அடிப்படையில், மாநாட்டின் நோக்கங்களும் பிராக்கில் ஏகமனதான முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன என்றாலும், அட்லாண்டிக் ஒப்பந்தம் சிதைந்து கொண்டிருக்கின்றது. காட்சிகளுக்குப் பின்னே அங்கு கடுமையான மோதல்கள் இருந்தன. அமெரிக்கா ஒருபக்கமும், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இன்னொரு பக்கமும் நின்று இந்த மோதல்களில் ஈடுபட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட, அரசுத்தலைவர்கள் கமராக்களுக்காக புன்னகையை வெளிப்படுத்தினர், ஆனால் பூட்டிய அறைக்குள் நடைபெற்ற கூட்டங்கள் கடுமையான மோதல்களால் பண்பிடப்பட்டன, அதிகாரபூர்வமான அறிக்கையில் இடம்பெறவேண்டிய ஒவ்வொரு வார்த்தை தொடர்பாகவும் கடுமையான கருத்து மோதல்கள் எழுந்தன. அதேநேரத்தில் பேராளர்களுக்கு உதவியாக மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்- போட்டி அரசியல் வாதிகளைப்பற்றி அவதூறான விமர்சனங்களை மீடியாக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தன.

ஈராக்கிற்கு எதிரான போர்

மாநாட்டில் முக்கிய பிரச்சனையில் நேட்டோவிற்குள்-ஆழமான பிளவுகள் காணப்பட்டன. அந்த முக்கிய பிரச்சனை ஈராக்கிற்கு எதிரான போருக்கு ஆயத்தம் செய்வதாகும்.

உச்சி மாநாட்டு பிரகடனத்தில் இடம் பெறவேண்டிய-துல்லியமான சொற்கள் தொடர்பாக, இரவு முழுவதும் கடுமையான, மோதல்களில் ஈடுபட்டிருந்த தலைவர்கள் ஐரோப்பிய நாடுகளின் கண்ணோட்டத்தை பொதுவாக, பிரதிபலிக்கின்றவகையில் தீர்மான வாசகத்தை அமைக்க முடிவு செய்தனர். ''ஈராக் தனது பொறுப்புக்களை மீறுகிறவகையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்குமானால் அதனால், கடுமையான பின் விளைவுகள் ஈராக்கிற்கு ஏற்படும்''- என எச்சரிக்கும் ஐ.நா.வின் தீர்மானத்தை ஆதரிக்கின்ற வகையில் அந்த வாசகம் அமைந்தது.

ஈராக்கிற்கு எதிரான போரில் நேட்டோவின் ஆதரவிற்கான உறுதிமொழியைப் பெற அமெரிக்கா முயன்றது, இராணுவத்தாக்குதலுக்கு ''நேட்டோ'' தயாராகயிருக்கிறது என்று அமெரிக்காவின் தீர்மான வாசகம் அமைந்திருந்தது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் அந்த தீர்மான வாசகத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. ஐ.நா. -ஈராக்கிய பிரச்சனையில் சம்மந்தப்படுத்தப்பட வேண்டும் என்று, இரு நாடுகளும் வலியுறுத்தின.

இதில் ஜேர்மனி, பிரான்ஸ் வெற்றி என்பது கானல் நீராக இருந்தது. தீர்மான வாசகங்கள் தொடர்பாக நடைபெற்ற, பேரங்கள் எதுவும் ஈராக்கிற்கு எதிரான போர் முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை. கூட்டணியினது முடிவுகள் அமெரிக்க அரசாங்கத்தின், போர் ஆயத்தங்களை எந்த வகையிலும், கட்டுப்படுத்தாது அத்தகைய கட்டுப்பாடுகளை ஏற்க அமெரிக்க தயாராக இல்லை என்பதை அமெரிக்க பிரதிநிதிகள் தெளிவாக அறிவித்து விட்டனர். பிராக் உச்சி மாநாட்டில் ஐம்பது நாடுகளுக்கு அமெரிக்க தனது எழுத்துபூர்வமான கோரிக்கைகளை வைத்து, நேட்டோ உறுப்பினர்களாகவும், இல்லாமலும் இருக்கும் ஐம்பது நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளில், அவர்கள் கலந்து கொள்ளவிரும்புகிறார்களா என கேட்கும் வேண்டுகோள்களை அது சமர்ப்பித்தது.

இப்படிச் செய்ததன் மூலம், ஒரு பத்திரிகை விமர்சனம் செய்திருப்பதைப்போல, அமெரிக்க அரசாங்கம் நேட்டோவிற்கு மாற்றான, இன்னொரு கூட்டை மாநாட்டின் முன் வைத்தது. அந்தக் கூட்டு "விருப்பமுள்ளவைகளின் கூட்டு" என்பதாகும். உண்மையில் நேட்டோ பற்றிய அமெரிக்காவின் கண்ணோட்டத்தை அந்த முன்முயற்சி உறுதிப்படுத்தியது. ''நேட்டோ'' -என்பது சரிசம பாகஸ்தர்களின் அமைப்பு அல்ல, அமெரிக்கா விரும்புகின்ற நேரத்தில் விரும்புகின்ற படி,-அமெரிக்க இராணுவ தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகின்ற உபகரணப் பெட்டி -(டூல் பாக்ஸ்)- என்று அமெரிக்கா கருதுகின்றது.

அமெரிக்காவின் இத்தகைய போக்கை ஐரோப்பிய தலைநகர்களில் எவரும் வரவேற்கவில்லை, என்பதில் வியப்பில்லை. (லண்டன், ரோம், மற்றும் மட்ரிட் நகர்களில்) ஆதரவு திரட்டும் முயற்சிகள் தொடங்கி (பாரீசிலும் பேர்லினிலும்) அத்தகைய முயற்சிகளின் முனைமுறிக்கப்பட்டது வரை பலவிதமான பதில்கள் இருந்தன. இறுதியாக ஆராய்ந்தால் வாஷிங்டனது முயற்சிகளுக்கு எதிராக ஐரோப்பிய அரசுகள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

உச்சி மாநாடு முடிவிற்குப் பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அரசுகள் அமெரிக்க அரசாங்கம் ஈராக்குடன் போர்செய்யுமானால், அதற்கு எதிராக இடையூறு எதுவும் செய்யப்போவதில்லை என்று தெளிவுபடுத்திவிட்டன. இதை ஜேர்மன் நாட்டு அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (Gerhard Schröder) பகிரங்கமாகவே பிராக்கில் பிரகடனம் செய்தார். அமெரிக்கா போருக்குச் செல்லுமானால் ஜேர்மனியின் விமான நிலையங்களையும், துறைமுகங்களையும், ஜேர்மனியில் உள்ள அமெரிக்கத் தளங்களையும், விமான வழித்தடத்தையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். ''நமது நண்பர்கள் (நட்பு நாடுகள்) போர் முயற்சி உத்திகளுக்கும் நடமாட்டத்திற்கும் எந்த விதமான கட்டுப்பாடும் விதிக்கப்போவதில்லை'' என்று அவர் தெளிவுடுத்தினார். அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது ஈராக்குடன் அமெரிக்கா போர்புரிவது "கூடாது" என திட்டவட்டமாக அறிவித்த ஷ்ரோடர் தற்போது தனது நிலையிலிருந்து பின்வாங்கிக்கொண்டிருப்பதாக பல விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புதிய தலையீட்டுப் படை மற்றும் கிழக்கு நோக்கி பரவல்

பிராக் உச்சி மாநாட்டில் இரண்டு கூடுதல் நடவடிக்கைள் குறித்து உடன்பாடு ஏற்பட்டது. கூட்டணியை மாற்றுகின்ற முயற்சிகளின் முக்கியமான பங்களிப்புகள் இவை என்று, நேட்டோ பொதுச்செயலாளர் இந்த இரண்டு கூடுதல் நடவடிக்கைகளையும் புகழ்ந்துரைத்தார். ஒரு புதிய தலையீட்டு படையை உருவாக்க வேண்டுமென்றும், நேட்டோவின் உறுப்பினர்கள் தற்போதைய எண்ணிக்கை 19-என்றிருப்பதை 26-ஆக விரிவாக்க வேண்டுமென்றும், இரண்டு கூடுதல் நடவடிக்கைளுக்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. இந்த இரண்டு முடிவுகளுக்கும் பின்னணியாக பெரும் வேறுபாடுகள் நிலவுகின்றன.

நேட்டோ புதிய தலையீட்டு படை அமைக்கும், யோசனையை முதலில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் முதலில் தெரிவித்தார். இந்தப் படை 2004 -அக்டோபரில் செயல்படத்துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. உலகில் எந்த இடத்திலும் சில நாட்களுக்குள் தலையிடுகின்ற வல்லமை பொருந்தியதாக இந்த புதிய படை அமைந்திருக்கும். ஆனால், இந்தப்படை உருவாகுமா என்பதே தற்போது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

இந்தப்படை எவ்வாறு அமைய வேண்டுமென்பது குறித்து பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் கூறப்பட்டுவருகின்றன. தலையீடுகளுக்குரிய அடிப்படைக் காரணங்கள் குறித்தோ அல்லது படையின் அமைப்பு குறித்தோ அல்லது அந்தப்படைக்கு எவ்வாறு செலவிடுவது என்பது குறித்தோ உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் உச்சி மாநாடு ஒரு இராணுவக் குழுவை அமைத்தது. இந்த இராணுவக்குழு அடுத்த வசந்தகாலம் வாக்கில் புதிய படைக்கான திட்டத்தை உருவாக்கும் என அறிவிக்கப்பட்டது.

ஜேர்மனியும் இதர ஐரோப்பிய அரசுகளும் கொடுத்த நிர்பந்தங்களின் காரணமாக, கருத்து ஒற்றுமை அடிப்படையில் இந்தப்படை செயல்படத் தொடங்கும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. கருத்து ஒற்றுமை என்பது நேட்டோ உறுப்பு நாடுகளான 26-நாடுகளுக்கும் ஒருமனதான உடன்பாடு ஏற்பட வேண்டுமென்பதாகும். அது மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டின் அரசியல் சட்டத்தையும் ஆராய்ந்த பின்னர் தான் புதிய படை (NRF) தலையீடுகளில் இறங்க முடியும். ஜேர்மனியைப் பொறுத்தவரை அந்த நாட்டு நாடாளுமன்றம் புதிய படை அமைப்பிற்கு ஒப்புதல் வழங்கவேண்டும். அமெரிக்கா தூண்டிவிட்டு தன்னிச்சையாக புதிய படை செயல்பட்டுவிடக் கூடாது என உறுதிசெய்கின்ற வகையில் இத்தகைய நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஆண்டு ஐரோப்பிய யூனியன் தனது சொந்தத்தலையீட்டு இராணுவத்தை சேவையில் ஈடுபடுத்த இருக்கின்றது. எனவே, நேட்டோவின் புதிய தலையீட்டுப் படைக்கும் ஐரோப்பிய யூனியனின் சொந்த படைக்கும் இடையே நிலவவேண்டிய தொடர்புகள் குறித்து கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றியுள்ளன. ஜேர்மன் நாட்டு பேராளர் குழுவினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இரண்டு படைகளும் ''ஒன்றுக்கொன்று உறுதுணையாக'' செயல்படவேண்டுமென்ற உடன்படிக்கை ஏற்பட்டது. உண்மையில் இரண்டு படைகளும் இவ்வாறு செயல்பட முடியாது. ஏனெனில், இரண்டு படைகளுமே இராணுவ அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதிலும், நிதிஒதுக்கீடு செய்வதிலும், தொழில் நுட்ப ஆதாரங்களை பகிர்ந்துகொள்வதிலும் போட்டிபோட்டு இயங்க வேண்டிய சூழ்நிலையில் மேற்கண்ட மூன்று அம்சங்களிலும் பற்றாக்குறை நிலவுகின்றது.

ருமேனியா, பல்கேரியா, சுலோவாக்கியா, சுலோவேனியா, எஸ்தோனியா, லாட்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பின் உறுப்பினர்களாக 2004-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்திருப்பது சம்பிரதாய அடிப்படையில் அமைந்ததாகும். பழைய வார்ஷோ ஒப்பந்த உறுப்பு நாடுகள் பெரும்பகுதியாகவும், சோவியத் யூனியனின் பழைய குடியரசுகள் மூன்றும் தற்போது மேற்கத்திய அணியின் உறுப்பினர்களாக ஆகியிருக்கின்றன. இவற்றுக்கு நேட்டோவைப் பலப்படுத்தும் அளவிற்கு இராணுவ வலிமை இல்லை. எஸ்தோனியாவில் 6500-பேரும் சுலோவினியாவில் 7,600-இராணுவ வீரர்களும்தான் உள்ளனர். புதிய உறுப்பினராக இணைந்துள்ள நாடுகளில் ருமேனியாவில் மட்டுமே 2-கோடிக்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அந்த நாடு மிகவும் வறுமை நிலையில் உள்ளது. மற்ற 6 புதிய உறுப்பினர் நாடுகளின் மக்கட்தொகை முழுவதையும் சேர்த்த அளவுக்கு ருமேனியாவின் மக்கள்தொகை உள்ளது.

புதிய உறுப்பினர் நாடுகளின் தலைவர்கள் பலர் பல ஆண்டுகள் ஸ்ராலினிச நிர்வாக அமைப்பில் அனுபவம் பெற்றவர்கள். ருமேனிய தலைவரான இயான் இலியஸ்கு 1953-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். அப்போதைய ருமேனிய சர்வாதிகாரி செளசெஸ்குவின் அன்பிற்கு பாத்திரமானவர் என தருதப்பட்டார். மிலான் குக்கான் ஸ்லோவேனிய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஆவார். ஸ்லோவேனிய அதிபர் ரூடால்ப் சுஸ்டர் ஸ்ராலினிச அடிப்படை சிதறும்போது அரசுத் தலைவராக இருந்தார். எஸ்தோனிய முன்னணி பிரதிநிதியான ஆர்னால்ட் ரூட்டல், சோவியத் நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

புதிய உறுப்பினர்களை நேட்டோவில் அதிக அளவில் இணைத்துக் கொள்வது அமெரிக்காவின் தந்திரமாகவே, ஐரோப்பிய நாடுகளில் கருதப்படுகிறது. ஜேர்மனியின் முன்னணி சஞ்சிகை ேடர் ஸ்பீகல் (Der Spiegel) அதன் நிருபர் ஜேர்மன் பேராளர்குழுவினருடன் நெருங்கிய தொடர்புகள் உள்ளவர், அவர் எழுதியுள்ள கட்டுரை, நேட்டோவிற்குள் நிலவுகின்ற கசப்பான உணர்வுகளை அம்பலப்படுத்துகின்றன. நேட்டோவின் ஐரோப்பிய நாடு ஒன்றின் பேராளர் புதிய உறுப்பினர்களை ''ஆமாம்சாமிகள் என்று'' வர்ணிப்பதாக அந்த நிருபர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கர்களை விடவும் அதிக அமெரிக்க அக்கறையுடன் புதிய உறுப்பினர்கள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக அந்த நிருபர் விமர்சனம் செய்திருக்கிறார்.

ஜேர்மன் பேராளர் குழுவினர் இத்தகைய புதிய அடிமை நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். புஷ் ஒரு அரசரைப்போல் கருதி, முதலாவதாகவும் முக்கியமானவராகவும் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியும் புதிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், அவரைச்சுற்றி அமர்ந்து இரவு விருந்து சாப்பிடுவதாக கடுமையாக அந்த நிருபர் விமர்சனம் செய்துள்ளார்.

நெருக்கடியின் ஆணி வேர்

நேட்டோவில் வளர்ந்து வரும் நெருக்கடிகள் குறித்து ஆய்வாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர். சுவிஸ்நாட்டு முன்னணி பத்திரிகையான Neue Zürcher Zeitung கீழ்கண்டவாறு விமர்சனம் செய்திருக்கிறது. ''கடந்த சில ஆண்டுகளாக அட்லாண்டிக் கூட்டின் தன்மை மாறிவருவது தெளிவாக தெரிகின்றது, பல அம்சங்களில் அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பிய பங்காளர்களும் முரண்பட்டு நிற்கின்றனர். அவர்களது உரையாடல்களில் பொறுமையின்மையும் புரிந்து கொள்ளாத்தன்மையும் நிலவுகிறது, பந்தோபஸ்து அரசியல் பொதுக்கருத்து என்பது முன்பு எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு நொருங்கும் தன்மை கொண்ட மெல்லிய பொருளாக மாறிவிட்டது.''

நேட்டோவில் பிளவுசக்திகள் தலைதூக்குவதற்கான ஆணிவேர் அதன் மாற்றப்பட்ட அமைப்பிலேயே அடங்கியிருக்கின்றது. கெடுபிடிப்போர் காலத்தில் பொதுவான எதிரி மற்றும் அசைக்க முடியாத அமெரிக்க ஆதிக்கம் ஆகியவற்றால், நேட்டோ பெரும்பாலும் ஸ்திரத்தன்மை கொண்டதாக செயல்பட்டது. நேட்டோ தனது எல்லைகளை பாதுகாக்கின்ற பொறுப்பை மட்டுமே அப்போது, நிறைவேற்றி வந்தது.

வார்ஷோ ஒப்பந்தமும், சோவியத்யூனியனும் சிதைந்த பின்னர் நேட்டோ மண்டலப் பாதுகாப்பு அமைப்பு என்ற நிலையிலிருந்து, உலக அளவில் தாக்குதல் நடத்தும் அமைப்பாக உருவாயிற்று. அமெரிக்கா துவக்கும் "சுதந்திரம் காக்கும்" இராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதும், நேட்டோ பதிலடிப் படை பற்றியதில் உடன்பாடும், ஐரோப்பிய அரசாங்கங்கள் மாறிய இந்நிலையை அடிப்படையிலேயே ஏற்றுக் கொண்டு விட்டன என்பதைக் காட்டுகின்றது.

பயங்கரவாதத்திற்கு எதிரான கிளர்ச்சி மற்றும் பொது மக்களை பெருமளவில் கொல்லுகின்ற ஆயுதங்களின் அச்சுறுத்தல் என்ற போர்வையில் வல்லரசுகள் உலகை தங்களுக்குள் மறுபங்கீடு செய்து கொள்ளும் கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன. இந்தக் கொள்கையில் பணயம் வைக்கப்பட்டிருப்பவை, மூலப்பொருட்கள், சந்தைகள், வர்த்தக வழித்தடங்கள் மற்றும் கேந்திர செல்வாக்கு மையங்கள் ஆகியனவாகும்.

நீண்டகால அடிப்படையில் பார்த்தால் எந்த விதமான பொதுக்கருத்தும் உருவாக முடியாத நிலைதான் உள்ளது. பொதுவான நலன் காக்கும் ஒப்பந்தம் என்ற நிலைமாறி இப்போது நேட்டோவே போர்க்களமாக ஆகிவிட்டது. ஒன்றுக்கொன்று மோதலுறும் அரசுகள் தங்களது செல்வாக்கை நிலைநாட்டிக் கொள்வதற்கு போர்க்களமாக நேட்டோவை பயன்படுத்தி வருகின்றன. இந்தப்போரில் பிராக் உச்சி மாநாடு ஒர் எல்லைக் கல்லாகும்.

தற்போது, ஐரோப்பிய அரசுகள் பகிரங்கமோதலில் அமெரிக்காவுடன் ஈடுபடுவதற்கு தயக்கம்காட்டி வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ ஆதிக்கத்தால் இந்த தயக்கம் உருவாகிறது மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளுக்குள்ளேயே ஒற்றுமையின்மை, பிளவுகள் நிலவுவதாலும் உருவாகின்றன. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தில், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கு வகிக்கின்ற அமெரிக்காவுடன் மோதிக்கொள்வதால் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் பகிரங்கப்பிளவு வெடிக்குமானால் ஐரோப்பிய ஸ்திரத்தன்மையில் கடுமையான விளைவுகள் ஏற்படும். அண்மைய மாதங்களில் வாஷிங்டன் கொடுத்த நிர்ப்பந்தங்களின் காரணமாக பாரிசும் பேர்லினும் நெருங்கிவந்தன. நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்கா விலகிக் கொள்ளுமானால், ஐரோப்பாக் கண்டத்தில் எந்த நாடு மேலாதிக்கம் செலுத்துவது என்ற பழைய பிரச்சனை மீண்டும் தலைதூக்குவது தவிர்க்க முடியாமல் போகலாம்.

ஆனால், மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ, ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே பகிரங்க மோதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அத்தகைய அவசரநிலையை நோக்கி ஐரோப்பிய நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு அடையாளம்தான், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றுவரும் ஆயுதக்குவிப்பு முயற்சி. உச்சி மாநாடு முடிந்ததும் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் Joschka Fischer ம் Dominique de Villepin ம் ஐரோப்பிய பந்தோபஸ்து மற்றும் பாதுகாப்பு யூனியனை உருவாக்குவதற்கான கூட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டுமென்று நடவடிக்கை எடுத்தனர். இந்தக்கூட்டு அறிக்கை ஐரோப்பிய யூனியனை விரிவுபடுத்த வலியுறுத்தியது. ஐரோப்பாவிற்கு பொதுவான, விரிவான, அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்க அதற்கான மாநாடு நடத்தப்படவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அந்த கூட்டு அறிக்கை வெளியிட்டது.

இந்தக் கருத்தினை ஏற்ற ஜேர்மனிய பசுமைக் கட்சி அமைச்சரும், அவரது கோலிஸ்ட் கூட்டாளியும், நேட்டோவின் ஐரோப்பிய ''தூண்களை வலுப்படுத்த வேண்டுமென்று" வலியுறுத்தினர். ''ஐரோப்பிய பாதுகாப்பு பண்பாட்டை" உருவாக்க கேட்டுக் கொண்டனர். ஜேர்மன், பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர்கள் Fischer ம் de Villepin ம் "ஐரோப்பிய ஆயுத ஏஜென்சி" ஆதரவோடு "கூட்டு ஆயுத சந்தையை" அமைக்கும் வகையில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் இருநாடுகளுக்கும் இடையில் நெருங்கிய ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என வலியுறுத்திக் கூறினர்.

See Also :

பிராக்கில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் ஈராக் மீதான போர் மேலாதிக்கம் செய்கிறது

Top of page