World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel to expand Jewish settlements in Hebron

ஹெப்ரோனில் யூதக் குடியிருப்பை அதிகரிக்க இஸ்ரேல் திட்டம்

By David Cohen and Jean Shaoul
26 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

1997ம் ஆண்டின் ஹெப்ரோன் ஒப்பந்தத்திற்கான முதற் குறிப்பை கிழித்தெறிந்துவிட்டு, மேற்குக் கரையினின்று, பாலஸ்தீனிய நிர்வாகத் தலைவர் யாசிர் அரபாத்தை வெளியேற்ற வழிவகுக்கும் வகையில், பிரதமர் ஏரியல் ஷெரோன், இஸ்ரேல், மேற்குக்கரை நகரமான ஹெப்ரோனில் அதி தீவிர மரபுவழி சியோனிச குடியேற்றங்களை அதிகரிக்கும் என அறிவிக்க நவம்பர் 15 அன்று நடைபெற்ற இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் பதுங்கித் தாக்குதலைப் பற்றிக் கொண்டார்.

பதுங்கித் தாக்குதலும் அதைத் தொடர்ந்த மூன்று மணி நேர துப்பாக்கிச் சண்டையும் இஸ்ரேலிய ஆயுதப்படையைச் சார்ந்த பன்னிரண்டுபேரையும் - ஒரு பிரிகேட் கமாண்டர், ஒரு கேர்ணல் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் உட்பட- கொன்று, பதினைந்துக்கு மேற்பட்டவர்களைக் காயப்படுத்தியது அத்தோடு மூன்று பாலஸ்தீனிய போராளிகளும் காயமுற்றனர்.

இஸ்லாமிய ஜிஹாத் குழு, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கெதிரான தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. பாலஸ்தீன எல்லைப்பகுதியில் இஸ்லாமியக் குடியரசை நிறுவும் பணியைக் கொண்டிருப்பதாகக் கூறும் இச்சிறு பாலஸ்தீனிய போராளிக்குழு, இஸ்ரேல் புரிந்த போர்க் குற்றங்களுக்கு பதிலடி இது என்றது. செய்தியாளர்களிடம், ஆயுதந்தாங்கிய ஒருவர் கூறுகையில், "எங்கள் மக்களுக்கெதிராக, சியோனிச ஆக்கிரமிப்பு செய்த தினசரிக் குற்றங்கள் மற்றும் மோசமான படுகொலைகளுக்குப் பழிவாங்கும் நடவடிக்கை," என்றார்.

வெள்ளி இரவுத் தொழுகைக்குப்பின் யூதக் குடியிருப்பாளர்கள் வீடு திரும்புகையில் செய்யப்பட்ட படுகொலையென சித்தரித்துக் காட்ட இஸ்ரேலிய அதிகாரிகள் தொடக்கத்தில் முயன்றனர். உண்மையில், மக்பெலா (Machpelach) குகைக்குத் தினசரித் தொழுகைக்கு வந்த குடியிருப்பாளர்களை, பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் சென்றுவிட்டு, வந்த பதினைந்து நிமிடங்கட்குப் பின்னரே இத்தாக்குதல், அதுவும் இராணுவத்தினருக்கு எதிராக மட்டுமே நடந்தது.

கொல்லபட்ட மற்றும் காயமுற்ற இஸ்ரேலியர்கள், பாதுகாப்புப்படையினர், எல்லை ரோந்துக்காரர்கள் அல்லது குடியிருப்பின் பாதுகாப்பு அதிகாரிகள் எனத் தெளிவாகத் தெரிந்த பிறகும், இறந்தவர்கள் குடிமக்களே என ஏன் சொன்னது என்பதை அரசாங்கம் விளக்க மறுத்தது.

இறந்தோரின் எண்ணிக்கை, பாதுகாப்பு ஆட்களுக்கெதிராக தரப்பட்ட தண்டனைகளுள் பெரிதாகும். இறந்தவர்களில் ஒருவர் ஹெப்ரோன் இராணுவ கமாண்டர் - மூத்த உயர் அதிகாரி ஆவார். செப்.2002 ஆண்டின் பாலஸ்தீனிய எழுச்சிக்குப்பின் இத்தகைய உயர் அதிகாரி இறந்தார் என்பது அரசுக்குப் பிரதான அரசியல் தர்மசங்கடமாக இருந்தது. எனவே ஷெரோனின் மூடிமறைப்பதற்கான முயற்சி, அதேசமயம், தனது விரிவுபடுத்தும் கொள்கையை நியாயப்படுத்துதற்கான சாக்காகப் பயன்பட்டது.

ஷெரோன், சிறிய, சியோனிச ஆக்கிரமிப்புகளான, நகரத்தைப் பார்த்தபடியுள்ள கிழக்கு மலையுச்சியில் உள்ள கிர்யத் அர்பாவிலுள்ள 7,000 பலத்த குடியிருப்புகளுக்கும், ஹெப்ரோனில் உள்ள முஸ்லீம் மற்றும் யூதர்களால் புனிதமெனக் கருதப்படும் இடத்தில் சமாதியுள்ள இடத்திற்கும் இடையே நிலப்பரப்பு அருகாமை இருக்க வேண்டியது முக்கியம் என்றார். அதாவது, குடியிருப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் சமாதிகளுக்கிடையேயுள்ள பாலஸ்தீனியர்கள், வீடுகளை விட்டு அகலும்படி செய்யப்பட்டு, புதிய குடியேற்றக்காரர்களுக்கு வழி செய்வதாகும் --உலகு முழுவதும் இனத்தூய்மை என அறியப்பட்ட கொள்கை இதுவாகும்.

ஹெப்ரோனில் உள்ள கொமாண்டர்களிடம், இஸ்ரேல், இவ் "வாய்ப்பை நன்கு பயன்படுத்தி", யூதக் குடியேற்றக்காரர்கள் மத்தியிலுள்ள பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து, "யூதர் வாழும் மையங்களை", நிறுவ வேண்டும் என்றார். புதிய குடியிருப்புகளை அமைப்பதும் இருக்கும் குடியிருப்புகளைப் பெரிதுப்படுத்துவதும் அரசின் கொள்கை என, நீண்ட காலத்திற்கு முன்னரே அவரது நடவடிக்கைகள் இதனைத் தெளிவாகக் காட்டி விட்டாலும், இப்போதுதான் முதன்முறையாக ஷெரோன் இதனை வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.

கடுங்கோட்பாட்டாளரான, ஷெரோனின் புதிய பாதுகாப்பு அமைச்சர், ஷாகுல் மொஃபாஸ் (Shaul Mofaz) நகரைக் கைப்பற்றுமுகமாக பீரங்கிகளையும் ஆயுதந்தாங்கிய வீரர்களையும் அனுப்பி, ஹெப்ரோனின் ஒப்பந்தத்தை முறிக்க வைத்தார். நகரத்தைப் பிரிக்க உடன்பட்ட யாசீர் அராபத் - தனது தலைமையகத்தை காசாவிலிருந்து ரமல்லாவிற்கு மாற்றுதற்கீடாக, அப்போதைய பிரதமரும் இன்றைய வெளியுறவு அமைச்சருமான பென்யமின் நேடன்யாஹுவுடன் 1997ல் ஒப்பந்தத்திற்கான குறிப்பில் கையெழுத்திட்டார். அதன்படி நகரின் நூற்றுக்கு எண்பது சதவீத பகுதி பாலஸ்தீனியர் வசமிருக்கும். எனினும், 30,000 பாலஸ்தீனியர்கள் நகரின் இந்தப் பகுதியில் வசிப்பினும், இஸ்ரேலிய இராணுவத்தினர் யூதர் குடியிருப்புகளைக் காக்க, மதஞ்சார்ந்த மற்றும் வணிகம் சார்ந்த மையங்களில் தங்குவர். இவ்வாறு இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேத்தை மட்டுமின்றி மேற்குக்கரையிலுள்ள இரண்டாம் பெருநகரமான ஹெப்ரோனையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்து வருகின்றது.

"இஸ்ரேல் கொண்ட அனைத்து ஒப்பந்தங்களும் அரபாத்தால் செல்லாதபடி ஆக்கப்பட்டதெனக் கூறி, நெதன்யாகு, இராணுவத்தின் மறு ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினார். வலதுசாரியின் உச்சமாக உள்ள, நெதன்யாகு, யாசிர் அரபாத்தை வெளியேற்றுமாறு கோரினார். ஹெப்ரோனுக்கெதிராக கடுமையயாயிருக்கப் போவதாகவும் அறிவித்தார். "நாங்கள் இப்பரப்பு முழுவதையும் தூயதாக்கி, நாங்களே வேலைசெய்துகொள்வோம்", என அவர் கூறினார்.

இஸ்ரேலிய செய்தி நிறுவனமான Y - நெட்டின்படி, ஷெரோன் தனது கிழமைதோறும் நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், "ஹெப்ரோனின் ஒப்பந்தத்திற்கான முதல் குறிப்பு செல்லாதது என இன்று தெளிவாகியுள்ளது. அது எவ்வகையிலும் பின்பற்றப்படவுமில்லை; முக்கியத்துவம் வாயந்ததுமில்லை" எனக் கூறினார். உள்ளடக்கமாக, அவரது அறிக்கை அரபாத்துக்கு அச்சுறுத்தலாயும் அவர் ரமல்லாவில் தங்குதற்கு எதிர்ப்பாயும் உள்ளது. ஷெரோன், அரபாத்திடமிருந்து விடுபட விரும்பியும், வாஷிங்டனில் உள்ள அவரது ஆதரவாளர்களால் அவர் அவ்வாறு செய்ய முடியாதவாறு உள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படை ஊரடங்கை அமுல் செய்து, 40 பாலஸ்தீனியர்களைக் கைது செய்து கண்களை கட்டிப்போட்டது. பாலஸ்தீனியக் குடும்பங்கள் மூன்றின் வீடுகளை இடித்து, தாக்குதல் நடத்தும் இடங்களில், அறுவடை நடக்கின்ற நிலையிலுள்ள ஒலிவ் மரங்களை வேரோடு அகற்றியது. பாலஸ்தீனியரின் முக்கியமான வருவாய் ஈட்டுவனவாக ஒலிவ்கள் விளங்குகின்றன.

குடியேற்றக்காரர்கள் நேரத்தை வீணாக்கவில்லை. டசன் கணக்கில் இளைஞர்கள் திரண்டு, கப்பலில் அனுப்பும் மூன்று சரக்குப் பெட்டகங்களை, வீடுகளும் ஒலிவ்களுமிருந்த இடத்தில் நிறுத்தி, புதிய குடியிருப்புக்கான அடிப்படையாக "புறக்காவற் சாவடியை" நிறுவினர். ஸ்வி கட்சோவர் (Zvi Katsover) எனும் ஹெப்ரோன் குடியேற்றத் தலைவர் கூறுகையில், ``நாங்கள் புதுக்குடியிருப்புக்கான தளம் அமைத்து விட்டோம். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தாவிடில் அது ஒரு வரலாற்றுப் பாவமாக இருக்கும்.`` மேலும் ``கிர்யட் அர்பாவிற்கும் ஹெப்ரோனுக்குமிடையே இஸ்ரேலிய நில ரீதியான தொடர்பை உறுதி செய்ய, அடிப்படையை அமைக்க வேண்டியுள்ளது.`` என்றார் கட்சோவர், அப்பகுதியில் 1000 வீடுகளைக் கூட்டுவோம் என்றார். மேலும், ``இச்செயல்திட்டத்தை ஷெரோன் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்`` என்றார்.

வரலாறு மற்றும் யூதயிச ஆசிரியரும் கிர்யாத் அர்பாவில் தலைவராயுமுள்ள, மெய்ர் மெனாச்சம் (Meir Menachem) என்பவர் நியூயோர்க் டைம்ஸிடம் கூறுகையில், ``டெல் அவிவ்-ஐ விட எங்களுக்கே இங்கு பாத்யதை அதிகம்,`` என்றார். ``இது எங்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜாகோபின் நிலம். 2000 ஆண்டுகளுக்குப்பின் திரும்பிய எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை,`` என்று வலியுறுத்தினார். ``இரைத்தூதர் வரும் வரை, அமைதிக்கு வழியில்லை,`` என்றும் கூறி முடித்தார்.

``ஹோம் லாண்ட்,`` கட்சி எனும் தீவிர வலதுசாரியின் தலைவர் பென்னி எலோன்," வெறும் யூதர் வாழ்விடமாக இருக்கக்கூடாது,`` என அறிவித்தார். ``யூதர்களின் நகரம்`` ஒன்று அங்கு இருக்குமென ஹெப்ரோனில் ஒரு பேரணியில் கூறினார்.

கார்டியன் பத்திரிகைப்படி, கிர்யாத் அர்பாவைச் சேர்ந்த தாக்குதல் நடத்தியோர் மறைந்திருந்த மரங்களும் வீடுகளும் அகற்றப்படும் என்றனர். "மொத்த இடமும் இரு வாரங்களில் சரி செய்யப்படும். பாலஸ்தீனியர் துரத்தப்பட்டால்தான் நாங்கள் இங்கு அமைதியாக வாழ முடியும். மற்றெல்லா மாற்று வழிகளையும் அவர்கள் இல்லாமற் செய்த பின்னர் அரசாங்கம் இதை உணரும்," என்றனர்.

நியூயோர்க் டைம்ஸ் கூற்றுப்படி, "கொந்தளிக்கும் கூட்டத்தில் அவர்கள் (குடியேற்றக்காரர்கள்), அருகிலிருந்த பாலஸ்தீனியரின் வீட்டுக் கதவுகளை உடைத்தனர். "அரபு ஒருவனைக் கொல்லும் ஒவ்வொரு நாளும் எனக்கு விடுமுறை - பழிக்குப்பழி", என்று நீல க்ராபிட்டியை, வெளிறிய கற்கள் மீது ஒட்டினர்.

யூதர் குடியிருப்புள்ள ஹெப்ரோன் பகுதிக்கும் கிர்யாத் அர்பா-விற்கு இடையேயுள்ள வழியில் இருந்த மேலும் 15 பாலஸ்தீனியரின் வீடுகளை இடிக்க, பின்னர் அரசாங்கம் ஆணையிட்டது. மேலும், காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய உலோக ஆலையை இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் ஏவுகணை செலுத்தி அழித்தது மற்றும் இரண்டு பாலஸ்தீனியர்களைக் காயப்படுத்திற்று.

புஷ் அரசாங்கம், ஈராக்குக்கெதிரான தனது போர்த் தயாரிப்புக்களுக்கான ஆதரவை குழம்பாதவாறு பார்க்கும் முயற்சியில், பாலஸ்தீனியருக்கு எதிராக பலமாய் திருப்பித்தாக்குவது பற்றி விழிப்புடன் இருக்குமாறு ஷெரோனை எச்சரித்தது. குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டிலிருக்கும், காங்கிரசின் ஒப்புதலின் பேரில், இஸ்ரேலுக்கான இராணுவ உதவி அதிகரிப்பை புஷ் அங்கீகரித்திருந்தார் எனும் அறிவிப்பில் அதன் அர்ப்பணிப்பின் நேர்மையை அறியலாம். 2004ம் ஆண்டிற்கு இராணுவ உதவியானது, 2003-ம் ஆண்டிற்கான அதன் உதவியான 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்களில் இருந்து 2.16 பில்லியனாக உயரவிருக்கிறது.

குடியேற்றக்காரர்கள் இயக்கத்தின் குவிமையம் - ஹெப்ரோன்

உள்நாட்டுப் பாலஸ்தீனியர்க்கும் குடியேற்றக்காரர்களுக்குமான இடைப்பட்ட கடுமையான தகராறுகளுக்கு உரிய களமாக ஹெப்ரோன் நீண்ட காலமாக இருந்து வருகின்றது. 1994ம் ஆண்டு, மதகுருமாரின் சமாதியான மக்பெலாவில் கட்டப்பட்டுள்ள மசூதியில் தொழுதுகொண்டிருந்த நூறு பேர்களைக் காயப்படுத்தி இருபத்தொன்பதுபேரை, அமெரிக்காவில் பிறந்த -கிர்யாத் அர்பா குடியிருப்பிலுள்ள பருச் சோல்ஸ்டின் எனும் மதவெறியன் சுட்டுக் கொன்றான். யூதத் தீவிரவாதிகளுக்கு, கோல்ட் ஸ்டெய்னின் கல்லறை மலர் தூவப்படும் புனித ஸ்தலமாகிவிட்டது.

ஹெப்ரோன் நகருள் இஸ்ரேல் 1000 இராணுவங்களைக் கொண்ட சிறு படையை 130,000 பாலஸ்தீனியர்க்கு அருகிலுள்ள 450 குடியேற்றக்காரர்களின் பாதுகாப்புக்கென்றே, நிறுத்தி வைத்துள்ளது. மேற்குக் கரையில் -பாலஸ்தீனியருக்கு அருகில் சியோனிசக் குடியேற்றங்கள் அமைந்துள்ள ஹெப்ரோனில் மட்டுமே, தினமும் இறுக்கமும், மோசமான, வன்முறைத் தாக்குதல்களும் உருவாகி வருகிறது.

குடியேற்றக்காரர்கள் பாலஸ்தீனியரின் நிலத்தையும் சொத்துக்களையும் கொள்ளையடிப்பது, அழிப்பது மற்றும் பாலஸ்தீனியரின் ஹெப்ரோன் மக்களை சீரழிப்பதுமென அச்சமின்றி செய்து வந்தனர். இவர்களது குற்றங்களை இஸ்ரேலிய ஆயுதப்படைகள் அலட்சியம் செய்தன.

ஹெப்ரோன் உட்பட, மேற்குக்கரையின் பல பகுதிகளை, சென்ற ஜூனில், இஸ்ரேலியப் படைகள் எடுத்துக் கொண்டன. சென்ற மாதம் படைகள் பின்வாங்கி, ஹெப்ரோனில் பாலஸ்தீனியர் ஆட்சி நடைபெறும் பகுதிகளில் ரோந்து வருவதை நிறுத்தி விட்டன.

குடியேற்றக்காரர்கள் செல்வாக்கு அற்றவர்கள். அண்மைய வாக்கெடுப்பில் 72 சதவீத இஸ்ரேலியர் "முறையற்ற புறக்காவற் சாவடிகளை" காலி செய்யவும், 62 சதவீத இஸ்ரேலியர் குடியேற்றக்காரர்களை அகற்ற படையை அனுப்பவும் கூறியுள்ளனர். மதச்சார்பற்ற பெரும்பான்மையினர், குடியேற்றக்காரர்களின் தீவிர தேச மற்றும் மதக் கொள்கைகளை வெறுக்கின்றனர். குடியேற்றக்காரர்களின் பாதுகாப்பு ஆனது, இஸ்ரேலிய ஆயுதப்படையில் கைவிடுவோர் எண்ணிக்கை அதிகரிப்புக்கு வழிவகுத்து இருக்கின்றது. அது சேர்ம இருப்பு படையினரைப் பொறுத்து இருக்கின்றது.

ஹாரேட்ஸ் எனும் இதழில் கிடியோன் லெவி (Gideon Levi) எனும் பத்திரிகையாளர், இஸ்ரேலியரின் பாலஸ்தீனியருக்கு எதிரான அநீதிகள் பற்றி எழுதுகையில் "கடந்த இரண்டாண்டு காலமாக, பாலஸ்தீனியர்கள் அவர்களது இருப்பிடங்களிலேயே வரலாறு காணாத வகையில் இஸ்ரேலிய ஆக்ரமிப்பாளர்களால் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பசி, இழிவு செய்தல், உயிர்ப்பாதுகாப்பின்மையை -இஸ்ரேலியர் அனுபவிப்பது போலப் பன்மடங்கு- அனுபவிக்கின்றனர். இரமலான் நோன்பை முடிக்கும் மாலை உணவிற்காக ஒவ்வொரு நாளும் அவர்கள் மாலையில் சந்திக்கையில், தெருக்களில் பீரங்கிகளையும் வீட்டில் வறுமையையும் பார்க்கின்றனர். பயங்கரவாதம் வளர்வதற்கு இவையெல்லாம் அருமையான சூழல்கள்`` என்றார்.

குஷ் ஷலோம் அமைதி இயக்கத்தின் பேச்சாளர் அடம் கெல்லர் (Adam Keller), "தவறாக இரத்தம் சிந்தவைத்தல், மேலும் இரத்தம் சிந்துவதற்கே வழிவகுக்கும் செயலுக்கான ஒரு சாக்குப் போக்கு என்ற பைத்தியக்காரத்தனமான யோசனையை எதிர்த்து, இந்த மாலை, பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளியே, நாங்கள் `இப்போது அமைதி` க்காக சேர்ந்திருக்கிறோம். பொதுவாக ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளிலும், குறிப்பாக ஹெப்ரோனிலும் குடியேற்றங்களைக் கலைத்துவிடவும் வாபஸ் பெறவும் அழைப்பு விடுக்கிறோம். வாரத்தின் மீத நாள்வரை இத்திட்டம் விழிப்புடன் செயல்படுத்தப்படும். எவரும் எந்த பிரமையையும் கொள்ள முடியாது: ஷரோன் - இப்போதைய வாக்கெடுப்பின்படி வாய்ப்புள்ளவர் -ஜனவரியில் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தால்- நிச்சயம் குடியேற்றக்காரர்களுக்கு மரண மேடையைக் கட்டுவார் மற்றும் ஏனைய மதிப்புமிக்க மடத்தனங்களையும் செய்வார்.``

ஜெருசலேம் போஸ்ட் -ன் படி, பாலஸ்தீனிய சட்ட உறுப்பினர் ஹுசம் காதே (Husam Khade) வன்முறையை முடிவுக்கு கொண்டுவருமாறு கேட்கையில், இஸ்ரேலுக்குள் தற்காப்பு வெடிகுண்டு கூடாதென்றார். மேலும், ``நாம் தாக்குதலை ஏன் நிறுத்த வேண்டுமெனில், அவர்கள் நமது சட்ட பூர்வ உரிமைகள் மற்றும் தேச நலனுக்கெதிராக, இஸ்ரேலியரைத் திரட்டுகின்றனர். மாற்றாக, பிரிகேட்ஸ் மேற்குக்கரை மற்றும் காசா படுகையில் உள்ள ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக தாக்குதல்களை அதிகரிக்க வேண்டும்.`` என்றார்.

See Also :

இஸ்ரேல்: ஷரோன் புதுத் தேர்தலுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்.

பி.எல்.ஓ வின் அரசியல் தோல்வியும் ஹமாஸ் இன் தோற்றமும்
பகுதி1|பகுதி2|பகுதி3

மிலோசிவிக்கும் ஷரோனும்: ஒரு போர்க்குற்றவாளி எப்பொழுது போர்க்குற்றவாளி இல்லாமல் போகிறார்?

Top of page