World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

State of the Union speech: Bush declares war on the world

நாட்டின் நிலைமை தொடர்பான பேச்சு: புஷ் உலகின் மீது போர்ப் பிரகடனம் செய்கிறார்
By the Editorial Board
31 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

செவ்வாய்க் கிழமை இரவு ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் நாட்டின் நிலைமை தொடர்பாக வழங்கப்பட்ட உரையானது, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அச்சுறுத்துகின்ற மற்றும் போரில் ஈடுபடுகின்றவர் மத்தியில் நிலவுவதாக இருந்தது. கொள்ளையடிக்கும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் வழியில் நிற்கும் எந்த ஆட்சிக்கும் எதிராகவும் ஒவ்வொரு கண்டத்தின் மீதும் அளவற்ற மற்றும் முடிவில்லாத யுத்தத்திற்கான வேலைத்திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி அதில் விவரித்தார்.
புஷ்- ஈரான், ஈராக் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளைப் பெயர் குறிப்பிட்டு அவற்றின் மீது தாக்கப்போவதாக அச்சுறுத்தினார். "படுகொலை வழிமுறைகளில் பயிற்றுவிக்கப்பட்ட, ஆயிரக்கணக்கான ஆபத்தான கொலைகாரர்கள், வழமையாக சட்டவிரோத ஆட்சிகளால் ஆதரிக்கப்படுகிறார்கள்" என்ற அவரது தெய்வ எச்சரிக்கை இருந்த போதும், அமெரிக்க அரசாங்கத்தாலேயே உறுதிப்படுத்தப்பட்ட உண்மையின் படி, இந்த நாடுகளுடன் செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக ஒன்றும் செய்வதற்கு இருக்கவில்லை.
பதிலாக புஷ் ஈரான் , ஈராக் மற்றும் வடகொரியா ஆகியன இரசாயன, உயிரியியல் மற்றும் ஆணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதை நாடிக் கொண்டிருந்ததாகக் கூறிக்கொண்டு இராணுவ நடவடிக்கைக்கான புதிய காரணத்தை விவரித்தார். "பேரழிவிலான அழிவுகர ஆயுதங்களை நாடுவதன் மூலம் இந்த ஆட்சிகள் உயிராபத்தான மற்றும் வளர்ந்துவரும் ஆபத்தைக் கொண்டிருக்கின்றன" என்றார்.
"இந்த அரசுகளும் அவர்களது பயங்கரவாதக் கூட்டாளிகளும் உலக அமைதியை அச்சுறுத்துவதற்கான துன்பத்தின் அச்சைக் கொண்டிருக்கின்றன" என்றார் அவர்.
"துன்ப அச்சு" என்ற அவரது குறிப்பில் இரண்டாம் உலக யுத்தம் தொடர்பான வாய்ச்சவடாலை உயிர்த்தெழ செய்யும் புஷ்ஷின் முயற்சி இருப்பினும், நாஜிக்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவது அமெரிக்க அரசாங்கமும் புஷ்ஷூம் ஆவார். பிரதான உலக வல்லரசுகளின் பகிரங்கப் பிரகடனங்களில் அதனை ஒப்பிடக்கூடிய போர்நாட்டத்தைக் காண்பதற்கும் இராணுவ ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்தலுக்கான பொய்களிலும் ஆத்திரமூட்டல்களிலும் அதனோடு ஒப்பிடக்கூடிய எரிச்சலைக் காண்பதற்கும் ஒருவர் அடோல்ப் ஹிட்லரின் பழியுரைக்குப் போக வேண்டி இருக்கிறது.
உலகைக் கைப்பற்றுதலுக்கான வேலைத்திட்டம்
ஹிட்லர் மற்றும் நாஜிக்கள் போல அமெரிக்க இராணுவவாதம் உலகைக் கைப்பற்றுவதற்கான மற்றும் உலக மேலாதிக்கத்திற்கான பிரச்சாரத்தில் புகுந்துள்ளதன் காரணமாக ஒப்பீடு பொருத்தமான ஒன்றுதான். நாட்டின் நிலைமை தொடர்பான பேச்சானது இராணுவத்தின் வேட்கையாகவும் ஜோர்ஜ்.டபிள்யு புஷ்-ஐ தங்களது நேரடி பிரதிநிதியாகக் கண்டு கொண்டிருக்கும் அமெரிக்க ஆளும் தட்டின் ஊழல்மிக்க, மிக ஈவிரக்கமற்ற மற்றும் குற்றம்புரியும் பகுதிகளின் அறிவிப்பாகவும் இருந்தது.
ஹிட்லரைப் போலவே, புஷ் உலகைத் தலைகீழாகப் பார்க்கும் பார்வையை முன்வைக்கிறார், அதில் சிறிய மற்றும் பலவீனமான அரசுகள் மிக சக்திவாய்ந்த மற்றும் நன்கு ஆயுதமயமாக்கப்பட்ட அரசுகளுக்கு மரண அச்சுறுத்தலாக முன்வைக்கப்படுகின்றன. 1938-39ல், ஹிட்லர் முதலில் செக்கோஸ்லோவேகியாவையும் பின்னர் போலந்தையும் ஜேர்மனியின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகப் பூதாகரமாக்கிக் காட்டினார், அவை ஒவ்வொன்றையும் ஆக்கிரமித்துப் பாழடிக்கும் முன்பாக அவ்வாறு செய்தார். 2002ல் புஷ் வடகொரியா, ஈரான் மற்றும் ஈராக்கைக் குறிவைத்து பின்வருமாறு அறிவித்தார், "உலகின் மிகவும் ஆபத்தான ஆட்சிகள் உலகின் மிகப் பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்து அச்சுறுத்துவதற்கு ஐக்கிய அமெரிக்க அரசுகள் அனுமதி அளிக்கப் போவதில்லை."
யதார்த்தத்தில், இந்நாடுகள் இரண்டு விஷயங்களை மட்டும் பொதுவாகக் கொண்டிருக்கின்றன--ஆற்றொணா வறுமை, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நீண்டகாலமாக பழிக்கு ஆளாக்கப்படல் ஆகியனவாகும். "உலகின் மிக ஆபத்தான ஆட்சி" என்பதைப் பொறுத்தமட்டில், அதன் அடையாளம் தெளிவானதாக இருக்க வேண்டும்: அது ஐக்கிய அமெரிக்க அரசுகளின் அரசாங்கம் ஆகும், இராணுவ பட்ஜெட்டில் (வரவு-செலவு திட்டம்) அடுத்த ஒன்பது அரசுகளின் மொத்த பட்ஜெட்டை விட அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட நாடு, கடந்த 12 ஆண்டுகளில், பனாமா, ஹைத்தி, யூகோஸ்லாவியா, ஈராக், சோமாலியா, சூடான் மற்றும் இப்பொழுது ஆப்கானிஸ்தான் ஆகிய சிறு நாடுகள் மீது ஊடுருவல், ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல் நடத்திய நாடு.
செவ்வாய்க் கிழமை இரவு புஷ் பெயர் குறிப்பிட்ட மூன்று ஆட்சிகளையும் தேர்வு செய்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. வடகொரியாவானது, புஷ்ஷின் அரசியல் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த அதிவலதுசாரி சக்திகளின் பங்கில், உள்ளத்தை ஆட்டிப்படைத்த குரோதத்தின் குவிமையமாக நீண்டகாலமாக இருந்து வந்தது, சோவியத் கூட்டுடன் ஆன கெடுபிடி யுத்தத்தின் கடைசி மிச்சசொச்சங்களுள் ஒன்றாக அது இருந்தது. அரபு எண்ணெய் உற்பத்தி நாடுகள் மத்தியில், மிகவும் விரும்பத்தக்க இலக்காக இருப்பது, புஷ் இன் தந்தையின் ஆட்சியிலிருந்து முடிவடையாத விவகாரமான, பாக்தாத்தை வெற்றி கொண்டு அமெரிக்க ஆதரவு அடிவருடி ஆட்சியை நிறுவத் தவறியது வாஷிங்டனை நீண்டகாலமாக மனதை உறுத்திக் கொண்டு வருகிறது. ஈரான் ஆனது ஷாவின் சர்வாதிகாரத்தைத் தூக்கி வீசிய 1978-79 புரட்சிக்குப் பின்னர் இருந்து அமெரிக்க ஐக்கிய அரசுகளுடன் மோதலில் இருந்து வருகிறது.
இந்த மூன்று நாடுகளையும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு இலக்காக்குவதற்கு பங்களிப்பு செய்த மூலோபாய அக்கறைகள் இரண்டு உள்ளன-- எண்ணெய், மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தமது பிரதான போட்டியாளராகக் கருதும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க யுத்தத்திற்கான தயாரிப்புக்கள் ஆகியனவாகும்.
மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா, அவைகளுக்கு இடையில், உலக எண்ணெய் மற்றும் இயற்கைவாயு இவற்றின் சேர்ம இருப்பின் மூன்றில் இரு பங்கிற்கும் அதிகமானவற்றைக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா ஆப்கானிஸ்தானைத் தாக்கியது மத்திய ஆசியாவில் தனது இராணுவ நிலையை ஏற்படுத்துதற்கான பிரச்சாரத்தின் முதல் அடி எடுப்பாக இருந்தது. பாரசீகம் பேசும் மேற்கு ஆப்கானிஸ்தானில் தங்களது சொந்த நலன்களினால் ஈரான் இந்த முயற்சியுடன் நேரடி மோதலுக்கு வந்திருக்கிறது. ஈரானும் ஈராக்கும் தாமே இந்தப் பிராந்தியத்தில் அதிகம் எண்ணெய் உற்பத்தி செய்வதில் செளதி அரேபியாவை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது எண்ணெய் உற்பத்தியாளராக இருக்கின்றன.
இராணுவ நிலைப்பாட்டிலிருந்து, செப்டம்பர்11 க்குப் பின்னர் இருந்து ஏற்படுத்தப்பட்ட தளங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான உரிமைகள் இவற்றின் வலைப்பின்னல்கள் சீனாவைச் சுற்றிலும் -உஸ்பெக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இப்பொழுது கொரிய தீபகற்பத்தில் இராணுவப் படைபலத்தை வைத்து அச்சுறுத்துவது என மேலும் மேலும் சுருக்குப் போட்டு இறுக்குவதை ஒத்ததாக இருக்கின்றன.
புதன் கிழமை அன்று பிரிட்டிஷ் நாளிதழ் கார்டியன் குறிப்பிட்டவாறு, "பயங்கரவாதத்தின் பேரிலான யுத்தத்தில் ஒவ்வொரு திடீர்த் திருப்பமும் ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், முன்னாள் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் முதல் பிலிப்பைன்ஸ் வரை புதிய பென்டகன் புறக்காவல் அரணை விட்டுச் செல்வதாகத் தெரிகிறது. யுத்தத்தின் நீடித்திருக்கும் விளைபயன்களில் சீனாவைச் சுற்றிய இராணுவ சுற்றிவளைப்பைக் கூட்டுவதும் ஒன்றாக இருக்கக் கூடும்."அச்செய்திப் பத்திரிகை பென்டகனின் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டை மேற்கோள் காட்டியது, அது சீனாவைப் பெயர் குறிப்பிடாமல், "வல்லமை மிக்க தளம் கொண்ட வளங்களுடன் ஒரு இராணுவப் போட்டியாளர் இப்பிராந்தியத்தில் தோன்றுவார்" என்று எச்சரித்ததுடன், "மேலதிக வாய்ப்பு வசதிகளையும் உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களையும் உத்தரவாதப்படுத்துவதை ஊக்கமூட்டி வளர்ப்பதை வைக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டது.
அமெரிக்க இராணுவக் குறிக்கோள்களின் அளவானது புஷ் முன்மொழிந்த பென்டகனின் வரவு-செலவுத் திட்டத்தில் பிரமாண்டமான அதிகரிப்பால் எடுத்துக் காட்டப்படுகிறது, அது திகைக்க வைக்கும் அளவில் 48 பில்லியன் டாலர்கள் ஆகும், வேறு எந்த நாட்டினதும் மொத்த இராணுவ வரவு--செலவுத் திட்டத்தை விடவும் பெரிய அளவிலான அதிகரிப்பாகும். மற்றும் ஒவ்வொரு அமெரிக்கனும் பொதுநல சேவையில் இரண்டு ஆண்டுகளைத் தியாகம் செய்ய வேண்டும் என்பதற்கான அழைப்பு இந்த கட்டற்ற இராணுவவாத வேலைத்திட்டத்தின் காரண காரியத் தொடர்பை-- அமெரிக்க இளையோரின் புதிய தலைமுறைக்கான கட்டாய இராணுவ சேவையை மீளமைப்பதை-- தெளிவாகக் கருத்துரைக்கின்றது.
உள்நாட்டில் நெருக்கடியும் யுத்தத்திற்கான துரத்தலும்
அமெரிக்கா இறங்கியிருக்கும் சர்வதேச வழிப்பறிக் கொள்கையானது, இறுதி ஆய்வில், அதன் சொந்த எல்லைகளுக்குள் உள்ள தீர்க்க முடியாத மோதலின் வெளிப்பாடாக இருக்கிறது. யுத்தத்திற்கான துரத்தலின் வெறிகொண்ட அவசரத்தினை: புஷ் செவ்வாய் அன்று காங்கிரசில் கூறியவாறு, "காலம் நம் பக்கம் இல்லை. ஆபத்து சூழ வருகையில் சம்பவங்களுக்காக நான் காத்திருக்க மாட்டேன். இடர் நெருங்கி நெருங்கி வருகையில் நான் உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு இருக்க மாட்டேன்" என்பதை -- அதுவன்றி வேறு எவ்வாறு புரிந்து கொள்வது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்கொள்ளுகின்ற உண்மையான ஆபத்துக்கள் அங்கு இருக்கின்றன, ஆனால் அவை பயங்கரவாதிகளின் சிறு குழுக்களில் இருந்தோ அல்லது உலகின் மறு பக்கத்தில் உள்ள வறுமை பீடித்த மற்றும் பலவீனமான அரசாங்கங்களில் இருந்தோ தோன்றவில்லை. இந்த ஆபத்துக்கள் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடிக்குள் இருந்து மற்றும் அமெரிக்காவிற்குள்ளே உள்ள பெரும் செல்வந்தத்தட்டுக்கும் பரந்த பெரும்பான்மையினராகிய உழைக்கும் மக்களுக்கும் இடையில் என்றுமில்லாத வகையில் உக்கிரமடைந்து வரும் முரண்பாடுகளில் இருந்து முளைவிடுகின்றன.
அமெரிக்கப் பொருளாதாரம் பின்னிறக்கத்தில் நுழைந்துள்ளதை புஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார், ஆனால் வேலையின்மையின் வளர்ச்சி, ஏழ்மை மற்றும் சமூக ஏற்றத் தாழ்வுக்கான தீர்வு எதுவும் அவரிடம் இருந்ததில்லை, செல்வந்த மற்றும் பெரும் முதலாளிகளுக்காக வரிகளை வெட்டுகின்ற அவரது வேலைத்திட்டத்தை நீடித்தலை மட்டுமே முன்மொழிகிறார். அவர் ஒன்றியத்திற்கான உரையில் கல்வி மற்றும் சுகாதார சேவை போன்ற சமூகத் தேவைகள் பற்றி போகிற போக்கில் மட்டும் சொல்லி விட்டுப் போகிறார், மற்றும் அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கும் அவரது வரவு-செலவுத் திட்டமானது கிட்டத்தட்ட அனைத்து புதிய செலவழிப்புக்களையும் இராணுவத்திற்கும் "உள்நாட்டுப் பாதுகாப்பிற்கும்" விடும் பெய்குழல் (புனல்) ஆக இருக்கும்.
கேமார்ட், குளோபல் கிராசிங், சன்பீம், முழு இரும்பு எஃகுத் தொழிற்சாலையுமாக தொடரான மற்றைய கார்ப்பொரேட்டுகளின் திவால்களைப் போன்று, ஏழாவது பெரிய அமெரிக்கக் கம்பெனியும் புஷ் மற்றும் குடியரசுக் கட்சிக்கு மிக நெருக்கமான அரசியல் பிணைப்பைக் கொண்டிருப்பதுமான என்ரோன் நிறுவனத்தின் பொறிவின் நிழலில் நாட்டின் நிலைமை தொடர்பான உரையானது வெளிவந்துள்ளது. ஆனால் புஷ் கார்ப்பொரேஷன்களுக்கு நிறைய அரசாங்க உதவிகளைச் செய்வதைத் தவிர வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் தொடர்பாக ஒன்றையும் முன்மொழிய முடியவில்லை.
புஷ்ஷின் உள்நாட்டுக் கொள்கையானது உள்நாட்டில் போலீசையும் இராணுவத்தையும் கட்டி எழுப்பும் உள்நாட்டு ஒடுக்கு முறையினை மையப்படுத்தியுள்ளது. "பயங்கரவாதத்தின் மீதான யுத்தம்" என்பது சாக்குப்போக்காக இருக்கிற அதேவேளை, அதன் உண்மையான நோக்கம் பலாத்காரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பெரும் சமூக எழுச்சிகளைக் கவனிப்பதற்கான தயாரிப்பாக இருக்கிறது. மக்களின் வாக்குகளால் அமர்த்தப்படாத, மாறாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 5 க்கு 4 என்ற பெரும்பான்மையால் அமர்த்தப்பட்ட அரசாங்கத்தில், புஷ் நிர்வாகமானது மேலும் மேலும் இராணுவத்தின் மீதும் போலீஸ் மீதும் தங்கி இருக்கிறது மற்றும் ஜனநாயகத்தை சூழ்ச்சியில் வீழ்த்துவதுடன் இல்லாதொழிக்கிறது.
முற்றிலும் ஆர்வம் இழந்த மற்றும் எரிச்சல் கொண்ட ஊடகங்களால் புஷ் புகழப்படுதலும் ஜனநாயகக் கட்சியின் சரணாகதியும் இருப்பினும், இந்த நிர்வாகமானது தனிமைப்பட்டுள்ளது மற்றும் உண்மையான எந்த எதிர்ப்பையும் கண்டு அதிகமாய் அச்சம் கொண்டுள்ளது. புஷ் அமெரிக்க மக்களுடன் பரந்த அளவில் செல்வாக்கு கொண்டுள்ளவர் என்ற பண்டிதர்களின் கூற்றுக்களையும் கருத்துக் கணிப்புக்களையும் பொறுத்தவரை, இவை அரசியல் ஆத்திரமூட்டலின் வெறும் கருவிகள்தான். தொழிற்சாலைகளில் மற்றும் அலுவலகங்களில் அல்லது தொழிலாளர் வசிப்பிடங்களில் புஷ் தொடர்பான பொதுவான கருத்துப்பாடானது வேறுபட்டதாக இருக்கிறது, சந்தேகம் கொண்டதாக அல்லது அவமதிப்புச் செய்வதாக இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் யுத்தமானது பரந்த அளவிலான அமெரிக்க மக்கள் மத்தியில் அரிதாகத்தான் பேசப்படுகிறது மற்றும் உணரப்படுகிறது.

அங்கு மனநிறைவமைதிக்கு இடம் இல்லை. அமெரிக்க முதலாளித்துவத்துக்கு எதிராகவும் புஷ் நிர்வாகத்திற்கு எதிரான எதிர்ப்பானது தவிர்க்க முடியாத வகையில் எழும், ஆனால் அது சக்தி மிக்கதாக இருக்க, பரந்த உழைக்கும் மக்கள் மத்தியிலான அரசியல் அபிவிருத்தி மீதுதான் அது தளப்படுத்தப்பட வேண்டும்.