World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: வட அமெரிக்கா: ஐக்கிய அமெரிக்கா

The Enron collapse and the crisis of the profit system

என்ரோன் பொறிவும் இலாப அமைப்பின் நெருக்கடியும்

By Nick Beams
29 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

டிசம்பர் 2 அன்று எரிசக்தி நிறுவனமான என்ரோன் பொறிவு --அமெரிக்க கார்ப்பொரேட் வரலாற்றில் மிகப் பெரிய திவால்-- அமெரிக்க மற்றும் சர்வதேச பத்திரிக்கைகளில் தொடரான அதிகமான கடும் விமர்சனங்களை விளைவித்துள்ளது .

ஊழலும் மற்றும் சாத்தியமான வகையில் குற்ற நடவடிக்கைகளும் என்ரோன் தொழிற்படலில் அத்தகைய பாத்திரத்தை ஆற்றின என்று, அது பொறிந்த மட்டத்துக்கு விவரிக்கின்ற அதேவேளை, சிலவேளைகளில் கடுகடுப்பான குரலில், இவை அனைத்தும் அத்தியாவசிய அரசியல் நோக்கத்திற்காக சேவை செய்கின்றன. அது அதே புள்ளியில் ஆழமாக விசாரிக்க வேண்டியதை நிறுத்துவதற்கு விழைகிறது.

கேள்விக்கு விடை சொல்வது ஒருபுறம் இருக்கட்டும், இங்கு தீர்க்கமான கேள்வி என்னவென்றால், ஊழலும் குற்ற நடவடிக்கைகளும் அத்தகைய மைய பாத்திரமாற்றுகின்ற சூழ்நிலைக்கு வழிவகுத்த பொருளாதாரத்துக்குள்ளே உள்ள இயக்கு சக்திகள் யாவை என்பதாகும். என்ரோன் ஏழாவது பெரிய அமெரிக்க கார்ப்பொரேஷன் மட்டுமல்ல, அது "சந்தையின் தலைவராக" வும் கூட கருதப்பட்டது.

வலதுசாரி வாஷிங்டன் போஸ்ட் கருத்துரையாளர் ஜோர்ஜ் வில், ஆஸ்திரேலிய ஃபைனான்சியல் டைம்ஸ் ஜனவரி 22-ம் தேதி பதிப்பில் வெளியிடப்பட்ட கட்டுரையில், என்ரோன் பொறிவால் வெளிப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் "அமெரிக்க ஐக்கிய அரசுகளின் சட்டம், நிதி மற்றும் கணக்கு இவற்றின் பணித்துறையில் அண்மைய மாற்றங்களில் வேரூன்றி இருக்கின்றன, "அவை அவற்றின் மூலத்தை" இம்மூன்று பணித்துறையாளர்களும் 'வழமைக்கு மாறாக சிந்திக்கும்' 'பிரச்சினை தீர்ப்பவர்களை'- மனிதர்களை 'உருவாக்க முடியும்' என்று தங்களைத் தாங்களே எண்ணத் தொடங்கிய பொழுது, 1980 களில் இருந்த வலியத் தாக்குதல் எனும் நோயில்' கொண்டிருக்கிறது" என்றது.

இந்த மனோபாவத்தின் விளைவு மற்றும் அதிகரித்த அளவில் பங்கு (Stock Options) தேர்வுகளைப் பயன்படுத்தலை, அவர் பராமரித்தல் ஆகியன "பங்கு மதிப்புக்களில் பெரும் அவாவுடைய இலக்குகளுடன் ஆய்வாளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தும் முகமாக "மிக வலியத் தாக்கும் நிர்வாக காரியாளர்" ஆக இருந்தது. இலக்குகளை அடைந்தபொழுது, ஆய்வாளர்கள் அளவு காட்டியை உயர்த்துவார்கள், மற்றும் சில நேரங்களில் என்றுமில்லாத அளவுக்கான எதிர்பார்ப்புக்கள் நிதிரீதியான மற்றும் கணக்கு நடைமுறைகள் இல்லாமல் நிறைவேற முடியாது, அவை ஸ்டெராய்ட்ஸ்களுக்கு (ஊக்க மருந்து) இணையானது."

என்ரோனின் "ஆபத்துக்குள்ளாகும் நடத்தை" க்கான பிரதான காரணம் --தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம்-- என்பதைக் கவனிக்கவும் புரிந்து கொள்ளவும் -தங்களைத் தாண்டி ஒருவரும் கவனிக்க முடியாது என்று நம்பிக்கை கொண்ட நிர்வாகிகளின் வளர்ந்து வரும் அகந்தை" யாக இருந்தது என்று வில் முடிக்கிறார்.

ஆனால் அனைத்து அடிப்படைக் கேள்விகளும் விடையளிக்காமல் விடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 1980 களின் நிதி மற்றும் கணக்கு நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி என்ன கூற இருக்கிறது மற்றும் எப்படி அவை மேலாதிக்கம் செய்வதற்கு வந்தன? பங்குகளின் மதிப்பிலும் என்றுமில்லா அளவு அதிகரிப்பு பற்றி எதிர்பார்ப்பு ஏன்? பல சாப்தங்களாக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒழுங்குபடுத்தும் முறைகளை கைவிடல் ஏன்? இந்த கேள்விகளில் எதுவும் கூட தொடப்படவில்லை.

ஜனவரி 15 அன்று நியூயோர்க் டைம்ஸ் பததிரிகையில் வெளியிடப்பட்ட கருத்துரையில் பந்தியாளர் போல் க்ரக்மேன் என்ரோன் விவகாரத்தை "அமெரிக்க பாணியிலான, நட்பு முதலாளித்துவம்" என பூசுகிறார் மற்றும் ஒரு கம்பெனியை விடவும் "உண்மையான விவரம் மிகப் பெரியதாக இருக்கிறது" என்கிறார். மூன்று நாட்கள் கழித்து, "ஊழல் மயமாக்கப்பட்ட ஒரு அமைப்பு" எனத் தலைப்பிடப்பட்ட உரையில், அவர் மேலும் விரித்துரைத்தார்.

அவர் எழுதினார், "என்ரோன் நெருக்கடி தோல்வியுற்ற ஒரு கம்பெனியின் வெறும் கதை மட்டுமல்ல; அது தோல்வி அடைந்த அமைப்பின் கதையாகும். மற்றும் அந்த அமைப்பு கவனமின்மை அல்லது சோம்பல்தன்மை மூலம் தோல்வி அடைந்தது அல்ல; அது ஊழல் மயமாக்கப்பட்டது."

க்ரக்மேன் படி, நவீன வணிகக்கணக்கு விதிமுறைகள், சுதந்திரமான தணிக்கையாளர்கள், கடனீட்டுப் பத்திரங்கள் மற்றும் நிதிச்சந்தை ஒழுங்கு மற்றும் உள்ளுக்குள் வணிகம் செய்வதற்கு எதிரான தடைகள் உட்பட, முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஆளுமை செய்யும் நிறுவனங்கள் ஊழல்மயமாகி இருக்கிறது என வெளிப்படுத்துகிறது.

"நமது பொருளாதார அமைப்பைத் தாங்கி நிற்கும் முக்கிய நிறுவனங்கள் ஊழல்மயமாகி இருக்கின்றன என்பது உண்மை ஆகும். இருக்கக் கூடிய கேள்வி என்னவென்றால் எவ்வளவு தூரத்திற்கு மற்றும் எவ்வளவு உயரத்திற்கு ஊழல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது."

"இந்த அமைப்பு" பற்றிய அவரது அனைத்துவிதமான பழிப்புரைகளையும் பொறுத்தவரை, க்ரக்மேன் ஆய்வை எங்கே ஆரம்பிக்க வேண்டுமோ அந்தப் புள்ளியில் விட்டுவிடுகிறார். அவரது கட்டுரைகள் தொடரான விவரிப்புக்களைக் குவிக்கின்றன, முடிவில் அவை ஒன்றையும் விளக்கவில்லை. என்ரோனின் ஊழல் இந்த அமைப்பை ஒழுங்கமைக்கவும் கட்டுப்படுத்தவும் இருக்கிறதாகக் கூறப்படும் இந்த அமைப்பின் ஊழலால் விளக்கப்படுகிறது. ஆகையால் முடிவில், ஊழல் இருப்பது... ஊழலால் விளக்கப்படுகிறது, அதன் தோற்றுவாய் ஒருபோதும் ஆழ்ந்து ஆய்வு செய்யப்படவில்லை.

போருக்குப் பிந்தைய பொருளாதார மாற்றங்கள்

என்ரோன் பொறிவின் முக்கியத்துவமும் குறிப்பாக அதன் தாக்கங்களும் முதலாளித்துவ பொருளாதாரத்தின் வரலாற்று அபிவிருத்தியின் உள்ளடக்கத்திற்குள்ளே குறிப்பாக இரண்டாம் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அதனை ஆய்வு செய்தால் மட்டுமே அதனைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் இந்த சகாப்தம் பரந்த அளவில் இரண்டு பகுதிகளாக அமைகிறது. மூலதனத் திரட்சியின் விரிவாக்கம், இலாபங்களின் வளர்ச்சி மற்றும் பிரதான முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கைத் தரங்களில் பொதுவான அதிகரிப்பைக் குறிக்கும் காலகட்டம் 1945 லிருந்து 1973 வரையாகும். கடந்த 25 ஆண்டுகளில், 1974-75 பூகோள பின்னடைவுடன் தொடங்கி, இலாபவீதங்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததில் அரைப்பங்கு அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன, வாழ்க்கைத் தரங்கள் தேக்கம் அடைந்திருக்கின்றன அல்லது வீழ்ச்சி அடைந்திருக்கின்றன மற்றும் வேலையின்மை உயர்வாக இருந்து வருகின்றன.

வர்த்தக சுழற்சி --செழுமை, கீழிறக்கம், பின்னடைவு மற்றும் மேல் ஏற்றம்-- இரண்டு காலகட்டத்திலும் இயங்கியுள்ளன, அதன் இயல்புகள் வேறுபட்ட வகையில் பதிவாகி இருக்கின்றன. லியோன் ட்ரொட்ஸ்கி விளக்கியவாறு, உயிருள்ள மனிதனுக்கு மூச்சு போன்று முதலாளித்துவத்துக்கு வர்த்தக சுழற்சி ஆகும். பிறப்பிலிருந்து இறப்புவரை சுவாசித்தல் தொடர்கிறது, ஆனால் அதன் பண்பு மாறுகிறது மற்றும் இம்மாறுதல்கள் உடல் நலம் பற்றிய குறிகாட்டலை வழங்குகின்றன.

அதுபோல, வர்த்தக சுழற்சி முதலாளித்துவத்துடன் அதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவ்வமைப்பு நீடிக்கும் வரை சேர்ந்து வருகின்றது. சுவாசித்தல் போன்று, அது பொதுவான பொருளாதார நிலை பற்றிய குறிகாட்டலை வழங்குகிறது.

இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கையில், ஐக்கிய அமெரிக்க அரசுகளில் பொருளாதார விரிவாக்கத்தின் தசாப்தம் --என்ரோன் மற்றும் ஏனைய "புதிய பொருளாதாரம்" என்றழைக்கப்படும் கம்பெனிகள்-- ஆரம்பகால சுழற்சிகளுடன் மாறுபடும் வடிவங்களைப் பதித்தன. 1990களின் மேல் ஏற்றம் மற்றும் செழுமை அமெரிக்க முதலாளித்துவத்தின் வரலாற்றில் வளர்ச்சியின் மிக நீண்டகாலத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த சராசரி ஆண்டு வளர்ச்சி வீதம் 3.1 சதவீதமாக மட்டுமே இருந்தது. இது 1970களில் குறைந்த வீதமானது, இது 1980 களில் வளர்ச்சியில் சிறு அளவு கூடுதலாக இருந்தது --குறிப்பிடத்தக்க பொருளாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட தசாப்தத்தை உறுதிப்படுத்தியது-- மற்றும் அது 1950 மற்றும் 1960 களில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் 4 சதவீத அதிகரிப்புக்கு குறைவான வளர்ச்சி வீதங்களுக்கு மிகக் கீழாக இருந்தது.

1990களில் பொருளாதார வாழ்க்கையின் தன்மையை 1950 மற்றும் 1960 களினதுடன் நாம் எண்ணிப் பார்த்தால், மாறுபாடானது மிகவும் வெளிப்படையானதாகக் கூட ஆகிறது. கடந்த கால கட்டம், சிறப்பாக கடந்த தசாப்தம், கணினி சில்லுகளுடன் (Computer Chip) உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளில் பரந்த மாற்றங்களால் பண்பிடப்பட்டு வருகின்றது, அப்படி இருக்க ஆரம்ப காலகட்டம் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்குகளில் ஒப்பீட்டளவான ஸ்திரத்தன்மையால் பண்பிடப்பட்டு வந்திருக்கிறது. இருந்தும் ஆரம்ப காலகட்டத்தின் வளர்ச்சி வீதம் கடந்த தசாப்தத்தை விட மிகவும் அதிகமாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், முந்தையதுபோல் அதே விளைவுகளை உருவாக்குதற்கு பெரும் அளவிலான பேரம் கொண்ட பொருளாதார நடவடிக்கை தேவைப்படுகிறது. அதாவது, முதலாளித்துவ அமைப்பின் "சுவாசித்தல்" அதிகமான பேருழைப்பைக் கொண்டதாக ஆகியுள்ளது.

இந்த அம்சங்கள் முதலாளித்துவ உற்பத்தியின் முக்கியப் பகுதியிலேயே மாற்றங்களை ஏற்படுத்த இருக்கின்றன. இந்த அமைப்பின் கீழ், உற்பத்தியானது சமூக செல்வத்தை அதிகரிக்க அல்லது சமூகத் தேவைகளை நிறைவேற்ற மேற்கொள்ளப்படவில்லை மாறாக இலாபத் திரட்சியின் மூலமாக மூலதனத்தை விரிவாக்குதற்காகும். இந்த நிகழ்ச்சிப் போக்கு முதலாளித்துவத்தின் பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் இடம் பெறும். எந்த காலகட்டத்திலும் அதன் ஆரோக்கிய நிலையைத் தீர்மானிக்கும் தீர்க்கமான விஷயம், இந்தத் திரட்சி நிகழும் வீதமாகும். இறுதி ஆய்வில், அதுதான் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் "சுவாசித்தல்" ஆகும். இந்தத் திரட்சி இடம்பெறும் வீதத்தை வர்த்தக சுழற்சி வெளிப்படுத்துகிறது, அது இலாபவீதத்தால் குறிகாட்டப்படுகிறது.

முதலாளித்துவம் பற்றிய தனது ஆய்வில், இந்த மூலதனத் திரட்சி வீழ்வதற்கான உள்ளார்ந்த போக்கு அங்கு இருக்கிறது, அது இலாபவீத்தால் அளவிடப்படுகின்றது என்று மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். இந்தப் போக்கு முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அதே கட்டமைப்பிலிருந்தே எழுகிறது. இலாபத்திற்கான ஒரேவளம் உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் உயிருள்ள உழைப்பிலிருந்து கறந்தெடுக்கப்படும் உபரி மதிப்பு ஆக இருக்கின்ற அதேவேளை, உழைப்பு சக்தியின் மேல் செலவிடப்பட்ட தொகை, உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இடப்பட்ட மொத்த மூலதனத்தின் வீதாசாரத்திற்கு என்றுமில்லாத குறைவான வீதாசாரத்தை அமைக்கும்.

வேறுவார்த்தைகளில் சொன்னால், ஒப்பீட்டளவிலான மிகச்சிறிய அளவு உயிருள்ள உழைப்புச் சக்தியானது என்றுமில்லாத அளவு அதிக மூலதனத்தைப் பெருக்குகிறது. உழைப்பிலிருந்து கறந்தெடுக்கப்படும் உபரி மதிப்பில் அதிகரிப்பு வீதம் மூலதன விரிவாக்கத்துடன் இசைவிணக்கமாக இருக்கத் தவறும் பொழுது, இலாபவீதம் விழ ஆரம்பிக்கின்றது. இலாப வீதத்தில் ஏற்படும் இந்த வீழ்ச்சியானது முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள்ளே அதனை வென்று கடந்து வருவதற்கு முயற்சித்தலை நோக்கமாகக் கொண்ட இன்னொரு நிகழ்ச்சிப் போக்கை இயக்கத் தொடங்குகிறது-- நிகழ்ச்சிப் போக்குகள் கடந்த இரு தசாப்தங்களாக அதிகமாய் வெளிப்பட்டிருக்கின்றன.

மார்க்ஸ் எழுதினார்: "இலாபவீதம் குறையுமானால், ஒரு புறம் மூலதனம் இன்னும் கூட முனைந்து செயல்படுகிறது; இவ்விதம் தனிப்பட்ட முதலாளிகள் மேம்பட்ட வழிமுறைகளைக் கொண்டும் இன்னபிறவாலும் தமது தனிப்பட்ட சரக்கின் மதிப்பை சமுதாய சராசரி மதிப்புக்கும் கீழானதாய்க் குறைத்து, இவ்விதம் நடப்பிலுள்ள சந்தை விலையில் கூடுதல் இலாபம் அடையமுடிகிறது. மறுபுறம் மோசடியும் ஏமாற்றும் தலை தூக்குகின்றன. புதிய உற்பத்தி வழிமுறைகளும் புதிய முதலீடுகளும் புதிய சாகசங்களுமான அவசர முயற்சிகள் இந்த மோசடியைப் பரவலாய் வளர்க்கின்றன. இவையாவும் பொது சராசரியைச் சாராமலும், அதற்குமேல் கூடுதலாகவும் சிறிது இலாபம் பெறும் முயற்சிகளே." [ Capital, Volume III, Marx, pp. 253-254].

உற்பத்தித் திறனில் அதிகரிப்புக்கள்

அதன் வரலாறு முழுவதும், முதலாளித்துவமானது புதிய தொழில் நுட்பங்களின் அடிப்படையில், புதிய உற்பத்தி வழிமுறைகள் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறனைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்திருக்கிறது. இருப்பினும், உழைப்பின் உற்பத்தித் திறனில் அதிகரிப்பு இலாபவீத வளர்ச்சியில் முரண்பட்ட விளைவைக் கொண்டிருக்கிறது. உழைப்பின் உற்பத்தித்திறனில் அதிகரிப்பானது உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கிலிருந்து உழைப்பை வெளியேற்றும் மட்டத்துக்கு அது உபரி மதிப்பின் திரளைக் குறைக்கிறது மற்றும் இலாபவீதத்தைத் தாழ்த்துகிறது. இருப்பினும், உழைப்பின் உற்பத்தித்திறனின் அதிகரிப்பானது, உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் எஞ்சி இருக்கும் தொழிலாளர்களிடமிருந்து அதிகரித்த அளவில் உபரி மதிப்பைக் கறந்தெடுத்தலை செய்யக் கூடியதாய் இருக்கும் மட்டத்துக்கு, அது உபரிமதிப்பின் திரளை அதிகரித்து, மூலதனத்தின் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கிறது.

இதன் அர்த்தம் பொருளாதாரம் முழுவதும் உழைப்பின் உற்பத்தித்திறனின் அபிவிருத்தியானது இலாபவீதத்தில் விரிவாக்கத்தை அமைத்துக் கொடுக்கும், பிந்தைய போக்கு முந்தையதின் மேல் மேலாதிக்கம் செய்யும் மட்டத்துக்கு. இது இடம்பெற்றால் முதலாளித்துவப் பொருளாதாரம் விரிவடையும் மற்றும் " சுவாசித்தல்" எளிதாகிறது.

இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து மூன்று பத்தாண்டுகளாய் அதுதான் விஷயமாக இருந்தது. பிரதான முதலாளித்துவ நாடுகள் முழுவதும் உற்பத்தியின் இணைந்த வரிசை (Assembly-line methods) வழிமுறைகள் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறனில் பரந்த அதிகரிப்பானது இலாபவீதத்திலும் திரட்சியின் பொதுவான விரிவாக்கத்திலும் அதிகரிப்பைக் கொண்டுவந்தது. இருப்பினும் , 1970 களின் நடுப்பகுதி முதற்கொண்டு இலாபமானது தலைகீழாகத் தொடங்கியது.

கடந்த கால் நூற்றாண்டாக, மார்க்ஸ் சுட்டிக்காட்டிய வகையில் மூலதனம் பதிலிறுத்தது. ஒருபுறம் உழைப்பின் உற்பத்தித் திறனைக் கூட்டுதற்கான வெறிபிடித்த ஓட்டம் இருந்து வருகின்றது, அதேவேளை மற்றொருபுறம் நிதி சாதனங்களினூடாக இலாபங்களில் வீழ்ச்சியைத் தடுத்து வெல்வதற்கான ஊகவாணிப முயற்சிகளின் வளர்ச்சி இருந்து வருகின்றன.

தொழில்நுட்ப மாற்றங்கள் உழைப்பின் உற்பத்தித்திறனில் பரந்த அதிகரிப்பைக் கொண்டு வந்திருக்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. எடுத்துக்காட்டாக, அமெரிக்க எஃகு இரும்பு 1980-ல் 1,20,000 பேரை வேலையில் வைத்திருந்தது. பத்தாண்டுகள் கழித்து அதன் தொழிலாளர் எண்ணிக்கை 20,000 ஆகக் குறைந்தது இருந்தும் உற்பத்தி கொஞ்சம் மட்டுமே குறைந்திருந்தது. 1980களின் பொழுது, எஃகு இரும்பு தயாரிக்கும் பகுதியான ஷெபீல்டு (Sheffield) இலட்சக்கணக்கான வேலைகள் அழிவதைக் கண்டது. இருந்தும் அந்தப் பகுதியில் இருந்து எஃகு இரும்பு உற்பத்தி கடந்த காலத்தில் முன் எப்பொழுதும் இருந்த எந்த அளவிலும் உயர்வாக இருக்கிறது. அதே தசாப்தத்தில் ஜெனரல் எலெக்டிரிக் கம்பெனி தனது வேலைபார்ப்போர் எண்ணிக்கையை வெட்டியது, இருந்தும் அதன் விற்பனை மூன்று மடங்காகியது.

மற்றைய தொழிற்சாலைகளில் இருந்து வைக்கக் கூடிய பல எடுத்துக்காட்டுகள் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் உழைப்பின் உற்பத்தித்திறனில் அதிகரிப்பு இருந்து வருகின்றது என தெளிவாக்குகிறது. ஆனால் உற்பத்தித்திறனில் உயர்வானது சராசரி இலாப வீதத்தில் ஏதாவது அதிகரிப்பைச் செய்திருக்குமானால், குறைவாக விளைவைச் செய்திருக்கிறது என்பது கூட தெளிவானது.

அமெரிக்க பொருளியல் அறிஞர் பிரெட் மோஸ்லே இன் படி, இலாபவீத வீழ்ச்சியானது 1940களின் இறுதியில் 22 சதவீதத்திலிருந்து 1970களின் மத்தியில் 12 சதவீதத்துக்கு வீழ்ந்தது --வீழ்ச்சி கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆகும். அடுத்த இரு தசாப்தங்களில்-- உண்மைக் கூலிகளின் மட்டங்களில் வீழ்ச்சி அடையச் செய்தல் உட்பட அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பரந்த மாற்றங்கள் -- அதிகரிப்பைக் கொண்டுவர இருந்தன. ஆனால் இம்முயற்சிகள் இருப்பினும், 1990களில் இலாபவீத வீழ்ச்சி 12 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் மட்டுமே அதிகரித்திருந்தது. அதாவது, அது அதன் ஆரம்ப வீழ்ச்சியில் 40 சதவீதத்தை மட்டுமே திரும்பப் பெற முடிந்தது மற்றும் அதன் முந்தைய உச்சியைவிட 30 சதவீதம் இன்னும் கீழே இருந்தது.

அனைத்துத் தொழிற்துறைப் பகுதிகளிலும் இலாப வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய அழுத்தத்தை சோதிக்கும் பல பொருளாதார நிகழ்ச்சிப் போக்குகள்: பல பிரதான தொழிற்துறைகளில் அளவுக்கு அதிகமான கொள்திறத்தின் இருப்பு, பொருளாதாரத்தின் மற்றும் செலவினங்களை அனைத்துத் துறைகளிலும் கடும் போட்டி மற்றும் அடக்கவிலைகளை வெட்டவும் போட்டியை அகற்றவும் கார்ப்பொரேஷன்கள் சமீபத்திய காலகட்டத்தின் பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒன்றிணைதலைச் செய்தன.

உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் இலாபவீதத்தின் மீதான கீழ்நோக்கிய அழுத்தத்தைத் தடுத்து வெல்லத்தவறியமை, நிதி சாதனங்களின் மூலமாக அதனை சூழ்ந்து கைப்பற்ற அதிகரித்த அளவிலான முயற்சிகளுக்கு இட்டுச் சென்றது. பிரிட்டிஷ் பொருளியல் வல்லுநர் ஹாரி ஷட் படி, 1980கள் ஆரம்பித்த பின்னர் முதலீடுகளில் மீதான வருவாயின் அதிகரித்த அளவினதாக வீதாச்சாரம் சம்பாதித்ததிலிருந்து வருவதைவிட மூலதன ஈட்டங்களில் இருந்து விளைவித்தது. பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் சில மொத்த வருவாயின் 75 சதவீதம் 1979 முதலான காலகட்டத்தில் இந்த வளத்திலிருந்துதான் வந்தது, 1900-79 காலகட்டத்தில் உள்ள 50 சதவீதத்திற்கும் குறைவான வீதத்துடன் ஒப்பிடுகையில் என்றது.

"மதிப்பில் ஏற்படும் உயர்வு, கடனீட்டுப் பத்திரங்களால் உருவாக்கப்படும் உண்மையான வருவாயை விட.... சந்தையில் பாயும் நிதிகளின் அதிகரிப்பு மற்றும் விலைகள் தொடர்ச்சியாக மேல்நோக்கித் தள்ளப்படும் என்ற ஊகவாணிகம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது, என்று இது தெளிவாகக் கூறுகிறது." [ The Trouble with Capitalism, Harry Shutt, p. 124].

நிதி ஒழுங்கமைப்பு ஒழிக்கப்பட்டது

சமீபத்திய காலகட்டத்தின் அரசியல் பொருளாதாரத்தின் தீர்க்கமான தனிச்சிறப்பினை இது சுட்டிக்காட்டுகிறது. இலாபமானது நிதி நடவடிக்கைகளில் பெறும் ஆதாயங்களாக எங்கு அதிகமாக வடிவெடுக்கிறதோ அந்த சூழ்நிலைகளின் கீழ் சந்தைக்கு என்றும் இல்லாத அளவுக்கு அதிக நிதிகள் பாய்வது தேவைப்படுகின்றது --அசலான "பணச் சுவர்"-- அவற்றைத் தக்கவைக்க தேவைப்படுகிறது. நிதிச் சொத்துக்களை (எடுத்துக்காட்டாக பங்குகளை) வாங்குபவர்கள் அவற்றை வாங்கிய, முன்னர் "அறிவுக்கு பொருந்தாதது" என்று நிராகரிக்கப்பட்டு இருந்திருக்கக் கூடிய விலைகளானது, விலைகளை இன்னும் உயர்த்தவும் அவற்றை மூலதனத்தின் இலாபமாக்கவும் சந்தைக்குள் அதிகப் பணம் வரச் செய்யக்கூடியதாக இருக்கின்றன.

அதிகரித்த அளவில் பணம் பாய்வதற்கான தேவை, ஏன் கடந்த தசாப்தம் முந்தைய ஒழுங்கு படுத்தும் முறைகளின் சீர்குலைவைப் பார்த்தது என்பதற்கான காரணங்களுள் ஒன்றாகும் --ஐக்கிய அமெரிக்க அரசுகளில் 1999ல் கிளாஸ்-ஸ்டெகால் சட்டத்தை அகற்றல், அது வங்கிகளை முதலீடு செய்வதிலிருந்தும் வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதிலிருந்தும் தடுத்தது நிகழக்கூடியதாக இருந்தது-- மற்றும் கட்டுப்படுத்தும் புதிய நடப்பிலிருக்கும் முறைக்கான ஏற்பாடுகளுக்கு குரோதம் ஆகியனவாகும். ஒழுங்குபடுத்தலுக்கு எதிர்ப்பானது, இறுதியில் அது நிதிச் சந்தைகளின் பழக்கத்திற்கு அடிமையாதலைத் தக்கவைப்பதற்கு தேவையான பணப் பாய்ச்சலை சுருக்குவதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற உண்மையிலிருந்து அதனை மூலமாகக் கொண்டு தோன்றுகிறது.

நிதிகள் பாய்தலை விரிவாக்குவதற்கான நிதிச் சந்தைகளின் தேவையானது ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் மற்றும் எங்கும் ஓய்வுதியத் திட்டத்தில் மாறுதல்களுக்கு பின்னால் இயங்கும் சக்திகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த மாற்றங்களின் அடிப்படை நேரடியாக நிதிச் சந்தைகளுக்குள் நிதிகளை இணைத்தலாக இருந்து வருகிறது. அதன் அர்த்தம், என்ரோன் விஷயத்தில் போல, தொழிலாளர்கள் தங்களது முழு சேமிப்பையும் எதிர்கால வருமானத்தையும் ஒரேநாளிரவில் துடைத்துக்கட்டப்படுவதை எதிர்கொள்கின்றனர்.

இந்த மாற்றங்களின் செயல்பரப்பு, பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களின் 30 உறுப் பினர்களின் OECD அமைப்பால் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்களால் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்றன. உறுப்பினர் நாடுகளில் முதலீடு செய்யும் நிறுவனங்களால் வைத்திருக்கும் நிதிரீதியான சொத்துக்களின் மதிப்பு (ஓய்வூதிய நிதிகள், காப்பீட்டுக் கழக நிறுவனங்கள் இவற்றைக் கொண்டிருக்கும்) 1990க்கும் 1995க்கும் இடையில் 9,800 பில்லியன் டாலர்கள் அளவில் உயர்ந்திருக்கின்றன-- ஆண்டு சராசரி அதிகரிப்பு உள்நாட்டு நிகர உற்பத்தியின் 10 சதவீதத்திற்கு சமமானது. [See The Trouble with Capitalism, Harry Shutt, pp. 110-111.]

1990களில் இந்த அதிகரித்த நிதிப் பாய்ச்சல்கள்தான் "புதிய பொருளாதாரம்" என்று அழைக்கப்படுவதன் மீது பலவிதமான பிரமைகளை உற்பத்தி செய்தன-- முதலாளித்துவம் தன்னின் அதே தொழிற்படலால்தான் பிரமைகள் தக்கவைக்கப்படுகின்றன.

முதலாளித்துவ அமைப்புக்குள்ளே உள்ள புதிருக்கான மூலவளங்களுள் ஒன்று சந்தையின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கையில், மூலதனத்தின் அனைத்துப் பகுதிகளும் ஒரேமாதிரியானதாக தோன்றுவதாகும். ஒரு குறிப்பிட்ட அளவு பணமானது அதன் பண இயல்பிலிருந்தே இலாபத்தை உற்பத்தி செய்கிறது என்பதாகும்.

ஆனால் மூலதனத்தின் வடிவங்களுக்கு இடையில் அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. நிதி ரீதியான சொத்துக்களானது வருவாயை உற்பத்தி செய்கிற அதேவேளை, அவைதாமே தொழிலாள வர்க்கத்திலிருந்து உண்மையாக உபரி மதிப்பைக் கறந்தெடுக்கின்றதில் ஈடுபடுகின்ற உற்பத்தி மூலதனம் அல்ல. அவை சொத்துக்களுக்கான உரிமைப் பத்திரம் மட்டுமே, அதாவது, மூலதனத்தின் ஏனைய பகுதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட வருவாயில் உரிமை கோரிப் பெறுவதாகும். இதன் அர்த்தம் கார்ப்பொரேஷன்கள் நிதிச் சந்தைகளில் நடவடிகைகள் மூலம் இலாப வீதங்கள் பேரிலான அழுத்தத்தை வெல்லுதல் சாத்தியமாகிற அதேவேளை, இந்த நிகழ்ச்சிப் போக்குகளுக்கு திட்டவட்டமான மட்டுப்பாடுகள் இருக்கின்றன, மூலதனத்துக்கான வருவாயின் அனைத்து வடிவங்களின் இறுதி வளமும் தொழிலாள வர்க்கத்திலிருந்து கறந்தெடுக்கப்பட்ட உபரி மதிப்பு என்ற உண்மையால் ஒதுக்கிவைத்துக் கொடுக்கப்படுகிறது.

இந்த மட்டுப்பாடுகளை நோக்கிய அணுகுமுறை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உறுப்பமைதி இயலில் (Physiognomy) குறிப்பிடத்தக்க மாற்றங்களைத் தோற்றுவித்திருக்கிறது.

இலாபங்களை உத்திரவாதப்படுத்துவதற்கு நிதிச்சந்தைகளில் நடவடிக்கைகளில் திரும்புமாறு நிர்ப்பந்திக்கப்பட்டு, மூலதனத்தின் அனைத்துப் பகுதிகளும் புதிய பணத்தை ஈர்க்க அவர்களின் திறத்தின் மீது அதிகமாகச் சார்ந்திருக்க வைத்திருக்கிறது. கெய்ன்ஸ் ஒருமுறை நிதிச்சந்தைகளை அழகுப் போட்டியுடன் ஒப்பிட்டார். அத்தகைய போட்டியில், அதில் பங்கேற்போர் நடுவர்களிடமிருந்து அவர்களின் குறைகளை மறைக்கும் விதமாகவும் பாதிக்கும் தகவல்களை மறைக்கும் விதமாகவும் உடை உடுத்திக் கொள்வது தேவையாக இருக்கிறது.

அவ்வாறுதான் நிதிச் சந்தைகள் இருக்கின்றன. ஆனால் அழகிப்போட்டி போன்று முடிவான நிகழ்ச்சியாக அல்லாமல், சந்தையில் தீர்ப்பானது ஒருபோதும் முடிவடையாத நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது. நிதிகளுக்கான போராட்டத்தில், மோசமான செய்திகள், பங்குகளின் விலைகளில் வீழ்ச்சிக்கு இட்டுச் சென்று, பேரழிவுகளைக் கூற முடியும். அத்தகைய சூழ்நிலைகளில் ஒவ்வொரு கார்ப்பொரேஷனும் இலாபத்தை அடைய முடியாதது மட்டுமல்ல, மாறாக "சந்தை எதிர்பார்ப்புக்களை" விடவும் சிறப்பாகச் செய்வதாக பார்க்கப்படும், உண்மையான நிலையை மூடி மறைப்பதற்கான அழுத்தத்தை சகித்துக் கொள்ள முடியாததாகவும் ஆகின்றன.

இவ்வாறு என்ரோன் விஷயத்தில் போல், கடன் அதிகரிப்பு போன்ற, உள்ளுறைந்த ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகள், கட்டாயாம் மறைக்கப்பட வேண்டும், விற்பனையையும் இலாபங்களையும் கூட்ட கணக்குவழக்குகளை மேற்கொள்ளவும் மற்றும் "நிலுவைக் கணக்கை விலக்கி" மோசமான செய்திகளை இடம் நகர்த்த மற்றும் பங்குகளின் விலைகளில் வீழ்ச்சியைத் தடுக்க தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் 401(K) நிதிகளை எடுக்கவிடாமல் கட்டாயம் முடக்கி வைக்கப்பட வேண்டும். ஏமாற்றும் பொய்மைப்படுத்தல்களும் பருவகால நோய்களாக ஆகின்றன.

கடந்த ஞாயிறு அன்று தற்போதைய விவகாரங்கள் பற்றிய நிகழ்ச்சி நிரலில் என்.பி.சி. இன் "பத்திரிகை சந்திப்பில்" பேசுகையில், என்ரோனின் தணிக்கைக் கணக்காளர்கள், வணிகக் கணக்கின் பகாசுர நிறுவனமான ஆர்தர் ஆண்டர்சனின் தலைவர் ஜோசப் பிரார்டினோ, இந்த வழிமுறைகளின் செயல்பரப்பை சுட்டிக் காட்டினார்." என் அறிவுக்கெட்டியவரை, சட்டவிரோதமானது எதையும் நாம் காணவில்லை" என்றார் அவர். வேறு வார்த்தைகளில் சொன்னால், என்ரோனில் செய்த கணக்கியல் மற்றும் நிதி நடைமுறைகள் உருமாதிரியாகக் கருதப்பட்டன.

வருகின்ற மாதங்களிலும் வாரங்களிலும் என்ரோன் போன்றவை மீண்டும் நிகழாவண்ணம் கணக்கு நடவடிக்கைகளை இறுக்குவதற்கான ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான அழைப்புக்கள் வளர்ச்சி பெறும்........... முந்தைய நிதிப் பேரழிவுகள் ஏற்பட்டத்றகுப் பின்னர் அத்தகைய அழைப்புக்கள் இருந்திருப்பது போல் அழைப்புகள் இருக்கும்.

நியூஸ் வீக் இதழின் ஜனவரி 28 பதிப்பில் வந்த கட்டுரை குரல் கொடுக்கிறது. "என்ரோன் சிக்கலுக்கு முக்கிய காரணம் அந்நிறுவனமானது பல ஆண்டுகளாக உலகுக்கு தவறான நிதி பற்றிய தகவல்களை வழங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது" என்று கூறியது. புனையப்பட்ட புள்ளி விவரங்கள், இலாபங்கள் உயர்வதை நன்கு காட்டியது, என்ரோனை 100 பில்லியன் ஆண்டு வருமானம் வருகின்ற, நாட்டின் ஏழாவது பெரிய நிறுவனமாக ஆக்கியது. அக்டோபரில் ஒருமுறை உண்மையான எண்கள் வெளிவரத் தொடங்கியதும், பங்கு வைத்திருப்போர், கடன் வழங்குவோர் மற்றும் முன்னர் அடங்கிக் கிடந்த SEC ஆகியோரிடமிருந்து வந்த அழுத்தங்களுக்கு நன்றிக்கடன் தெரிவிக்க, என்ரோன் ஆறுவாரங்களில் திவால் (Bankrupt) ஆகியது. காணப்படும் உண்மை: நிறுவனங்களுக்கு சான்றளிப்பதை மரண அச்சமாகக் கருதும் கணக்காளர்களை நாம் உருவாக்க இருக்கிறவாறு, நிறுவனங்கள் நேர்மையற்ற எண்களை உருவாக்குவதில் மரண பயம் கொள்ளச்செய்ய நாம் விதிமுறைகளை மாற்ற வேண்டும். ஏதாவது இருப்பதெனில் அது ஒப்பனை விளக்கமாகும்."

அத்தகைய கூற்றுக்கள் ஒருபுறம் பொதுமக்களின் கோபத்தை அமைதிப்படுத்துவதற்கு முயற்சிப்பதை நோக்கமாகக் கொண்டது மறுபுறம் இப்பொறிவின் கீழ் காணப்படும் காரணத்தை ஆழமாக ஆராய்வதை தடுக்க முயற்சிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. என்ரோன் நெருக்கடியானது கணக்கிடும் வழிமுறைகளின் தோல்வியின் விளைவு அல்ல மாறாக முதலாளித்துவப் பொருளாதாரம் தன்னின் கட்டமைப்பு மாற்றங்களில் ஆழமாக வேரூன்றி இருந்தது.

கென்னத் லே மற்றும் அவரது சக என்ரோன் நிர்வாகிகளும் ஊழல்மிக்க மற்றும் குற்றம் செய்யம் நிறுவனத்தை நிறுவும் திட்டத்துடன் ஆரம்பிக்க வில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர்கள் இயக்கிய முழுப் பொருளாதார சூழலும், இலாப அமைப்பு தன்னின் ஆழமாகிச் செல்லும் நெருக்கடியால் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அது அவர்களை என்றுமில்லா வகையில் தப்பான நடைமுறைகளை நாடுவதற்கு ஆணையிட்டது. மேலும், கணக்கியல் விதிமுறைகளில் மாற்றங்கள், கணக்குத் தணிக்கை தரமுறைகளைக் கைவிடல், நலன்கள் முதலியவற்றில் மோதல்கள் முதலியனவற்றின் அபிவிருத்தி ஆகியன, என்ரோன் நிர்வாகத்திற்கு வழியை அகற்றின. அந்நிர்வாகமே இச்சூழலின் வெளிப்பாடாக இருந்தது. தணிக்கைக் கணக்குகளுக்கும் நிதி மேற்பார்வைக்கும் பொறுப்பான கணக்குவழக்கை மேற்பார்வை செய்யும் நிறுவனங்கள் அவர்களின் கட்சிக்காரர்களைக் காட்டிலும் சந்தையின் அழுத்தங்களுக்கு குறைவாகவே ஆளாகுகின்றார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் இலாப அமைப்பின் கட்டமைப்புக்குள்ளே தங்கி இருக்கும் பெரிய அளவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்துதற்கான அழைப்பு, மையப் புள்ளியைத் தவறவிடுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பொருளாதாரச் சீரழிவை கொண்டு வந்திருக்கும் என்ரோன் நெருக்கடி, ஒரு நோயின் அடையாளம் தவிர, அதுவே நோய் அல்ல.

அது முதலாளித்துவப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக உள்ள நெருக்கடியின் வெளிப்பாடாகும். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படையான --செல்வத்தை உற்பத்தி செய்வது தனியார் இலாப உற்பத்திக்கு கீழ்ப்படுத்துவது-- பொய்யும் பித்தலாட்டமும் அதன் செயல்வகையாக ஆகும் அளவுக்கு இப்பொழுது சீரழிவை அடைந்திருக்கிறது.

கணக்குவழக்குகளின் விதிமுறைகளிலும் செயல்முறைகளிலும் இறுக்கிப் பிடிப்பதன் மூலம் உண்மையான கட்டுப்பாட்டை நிலைநாட்ட முடியாது. இது ஏனெனில் கணக்குப் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள்தாமே பிரதான கார்ப்பொரேட்டுகளின்படி பாத்திரம் ஆற்றுபவர்கள் மற்றும் கணக்குமுறைதாமும் அதே தனிச்சொத்துடைமை மற்றும் தனியார் இலாப அமைப்பை அடித்தளமாகக் கொண்டிருக்கின்றது, அதுவே நெருக்கடியின் மையத்தில் இருக்கிறது. உண்மையான கட்டுப்பாடு, எந்த வகையிலும், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளின் குழுக்களால் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப்பட முடியாது. சமுதாயம் ஒட்டு மொத்தமாக அதன் உறுப்பினர்கள், எல்லா செல்வத்தையும் உற்பத்தி செய்பவர்கள், எப்படி அது பயன்படுத்தப்பட வேண்டும் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை ஜனநாயக ரீதியாக தீர்மானிக்கக் கூடியவர்களாக ஆகும்பொழுது மட்டுமே அது ஏற்படுத்தப்பட முடியும். அத்தகைய சமூக ஒழுங்கானது உற்பத்திச் சாதனங்களின் சமூக உடைமையாதலை முன்நிபந்தனையாகக் கொண்டிருக்கிறது. என்ரோன் பொறிவினால் எழுப்பப்படும் விஷயம் இதுதான்.