World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள் : நான்காம் அகிலம்

Ernest Mandel, 1923-1995

A critical assessment of his role in the history of the Fourth International

ஏர்னஸ்ட் மண்டேல் 1923-1995

நான்காம் அகிலத்தின் வரலாற்றில் அவரது பாத்திரம் பற்றிய ஒரு விமர்சன ரீதியான மதிப்பீடு

23 October 1995
By David North

Use this version to print | Send this link by email | Email the author

Part 1 | Part 2 | Part 3 | Part 4

நான்காம்அகிலத்தினுள்ளான உடைவு.

The split in the Fourth International

ஏர்னஸ்ட் மண்டேலின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம்

The shift in the position of Ernest mandel

மண்டேல் யுத்தத்தின் பிந்திய வருடங்களில் எழுதியவற்றையும் 1949க்கு பின்னர் எழுதியவற்றையும் ஒப்பிட்டுப்பார்த்தால் அவரின் அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கின்ற முக்கிய மாற்றம் எவருக்கும் தெளிவாக தெரியும். இந்த மாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படுத்துவதும், அதற்கு காரணமாக இருந்தவை என்னவென்பதையும் கண்டுபிடிப்பது ஒரு திறமையான சுயசரிதை எழுத்தாளரின் கடமையாக இருக்கும். அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் (SWP) தலைவரான ஜேம்ஸ். பி. கனன் மண்டேலின் அபிவிருத்தியால் குழப்பமடைந்து உடைவின் பின் மண்டேல் பப்லோவில் இருந்து விலகிவருவார் என நினைத்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் பிரச்சினைகளுள் இருந்தவர்கள் பப்லோவின் புதிய வரையறுப்புக்களை மண்டேல் எதிர்த்ததாகவும், இவ் இருவருக்கும் இடையே பாரிய மோதல்கள் நடந்ததாகவும் கூறக் கேள்விப்பட்டுள்ளேன், நடந்து இதுதான் என எனக்கு தெரியாது. ஆனால் ஒரு அரசியல் கூட்டிற்காக மண்டேல் தனது நிலைப்பாட்டை சாதாரணமாக பின்வாங்கிக் கொண்டார் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை.

அடிப்படை கருத்துக்களை பாதுகாக்க அவர் ஆரம்பங்களில் போராடிய போதும் ஸ்ராலினிச இயக்கங்களின் வெளிப்படையான பலத்தினால் மண்டேல் குழப்பமடைந்தார் என ஊகிக்கமுடியும். சோவியத் யூனியனின் உலக ரீதியான ஆளுமை அதிகரித்தது மட்டுமல்லாது, உலகம் முழுமையுமான பாரிய இயக்கங்களின் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி, ஸ்ராலினிசம் புரட்சிகர மூலங்களை கொண்டுள்ளது என்பதற்கான உதாரணமாகவும் நான்காம் அகிலம் அதனை ஊக்குவிக்கத் தவறிவிட்டது எனவும் கூறப்பட்டது.

உண்மையில் நான்காம் அகிலத்தின் நிறுவன ஆவணமான இடைமருவு வேலைத்திட்டத்தில் "முற்றுமுழுதான வழமைக்கு மாறான நிலைமைகளுக்குள் (யுத்தம், தோல்வி, நிதி நெருக்கடி பாரிய புரட்சிகர அழுத்தம்........) குட்டி முதலாளித்துவ கட்சிகள் ஸ்ராலினிச கட்சிகளும் கூட முதலாளித்துவத்திலிருந்து உடைத்துக்கொண்டு வேறுபாதையில் செல்வதற்கான சாத்தியங்கள் தத்துவார்த்த ரீதியில் திட்டவட்டமாக மறுக்கமுடியாது" என்பதை ஏற்றுக்கொள்கின்றது. ஆனால் அது தொடர்ந்து பின்வருமாறு எச்சரிக்கின்றது. "இப்படியான நிகழ்வுக்கான கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தாலும், இது ஒருபோதும் ஒரு உண்மையான தொழிலாள வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்கான மாற்றீடாக இருக்கமுடியாது. (Leon Trotsky, The Transitional Program for Socialist Revolution [New York: Pathfinder Press, 1974], p. 95).

அதியுயர்ந்த ஞாபகசத்தியையும், ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களில் மிகுந்த புலமையும் கொண்ட மண்டேலுக்கு இந்த வசனங்கள் பழக்கமானதாகவே இருந்திருக்கும். ஆனால் அரசியல் நிலைப்பாடுகள் புத்தகங்களில் இருந்து மட்டும் எடுக்கப்படுவதில்லை. சட்மன் (Shatman) ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் மிக பரீட்சயமானவரும் ட்ரொட்ஸ்கியுடன் நெருங்கிய தனிப்பட்ட உறவையும் வைத்திருந்தவர்களில் ஒருவர். அத்துடன் ட்ரொட்ஸ்கியின் சாதுரியமான சிக்கலான எழுத்துக்களுடன் மற்றைய எல்லோரையும் விட மிக நெருக்கமானவர் ட்ரொஸ்கியின் மொழிபெயர்ப்பாளரும் சுயசரிதை எழுத்தாளருமான மக்ஸ் ஈஸ்ட்மன் (Max Eastman) ஆவார். ஆனால் இருவரும் ஈஸ்ட்மனும், சட்மனும் ஸ்ராலினிசத்தின் பலத்தினாலும் குற்றங்களாலும் உந்தப்பட்டு அரசியல் ரீதியாக ட்ரொட்ஸ்கியுடன் உடைத்துக் கொண்டனர். தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தின் மீது அவர்கள் எவ்வளவு நம்பிக்கை கொண்டிருந்தபோதும் சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தின் மீது ஸ்ராலினிசம் கொண்டிருந்த ஆளுமையானது இவை எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்களின் சிந்தனையில் ஸ்ராலினிச அதிகாரத்துவம், பாரிய சுயாதீனமான வரலாற்று சக்தியாக தோற்றம் அளித்தது. தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசத்தின் ஆளுமைக்குள் இருந்து விடுபட்டுவரும் என்ற நம்பிக்கையும் இழந்த பின்னர் ஈஸ்ட்மனும் பின்னர் சட்மனும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பங்கில் நம்பிக்கை கொண்டனர். ஈஸ்ட்மனையும், சட்மனையும் விட உண்மையில் பப்லோவும் மண்டேலும் வேறு அரசியல் நோக்கத்தை கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் 1940ன் இறுதிகளிலும் 1950களின் ஆரம்பத்திலும் அபிவிருத்தி செய்த நிலைப்பாடுகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் பலத்தை மிகை மதிப்பீடு செய்ததும், இது தவிர்க்கமுடியாது இதனுடன் சேர்ந்த பிழையான தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பாத்திரத்தின் பலத்தை குறைத்து மதிப்பீடு செய்ததுமாகும்.

ஸ்ராலினிசத்தின் அரசியல் வெற்றிகளாலும், உலகத் தொழிலாள வர்க்கத்தின் மீதான அதனது தொடர்ச்சியான ஆளுமைக்கும் அடிபணிந்து மண்டேலும், பப்லோவும் சோசலிசத்தை நடைமுறைப்படுத்துவது, இறுதி ஆய்வுகளில் சோவியத் யூனியனின்- நடவடிக்கையிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திலும் தங்கியுள்ளது எனவும் நான்காம் அகிலத்தின் தலைமை தாங்கப்படும் தொழிலாள வர்க்கத்தினால் முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு படிப்படியாக வந்தனர்.

உலக மாபெரும் மார்க்சிஸ்டுகளின் திறன்வாய்ந்த தத்துவார்த்த, அரசியல் வேலைகள் அனைத்திலும் மத்திய புள்ளியாகவும், விஞ்ஞான ரீதியான முடிவாகவும் இருந்தவை, முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று பங்களிப்பாகும் . வரலாற்றின் பொருள்முதல் வாத அடிப்படையிலிருந்து முதலாளித்துவ உற்பத்திமுறைகளுக்குள் இருப்பதும், தற்போதைய சொத்துடமைக்கு எதிரானதாக பிரதிப்படுத்தும் புறநிலைச்சக்தியை ஒரு மிகவும் அபிவிருத்தியடைந்த சமூக அமைப்பாக காட்டுவது சோசலிசத்தை கற்பனாவாதமாக காட்டுவதாக இருக்கும். எதுவாக இருந்தபோதும் அல்லது இல்லாவிடிலும் சோசலிசப் புரட்சி முன்னோக்கு எதில் தங்கியுள்ளதெனில், தொழிலாள வர்க்கத்தின் தகமையையும் அதன் வரலாற்று பங்களிப்பையும் ஒருவர் மதிப்பிடுவதில்தான் என்பதை கவனத்தில் எடுக்கவேண்டும்.

ஒருவர் 20ம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியின் நிகழ்வுகளைக் கொண்டு இரண்டு முழுமையான எதிர் எதிரான முடிவுகளுக்கு வரமுடியும். ஒன்று 1917 அக்டோபர் புரட்சி தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை தூக்கி வீசி, சோசலிச சமூகத்திற்கான அடித்தளங்களை இடமுடியும் என்பதனை எடுத்துக்காட்டியது. மற்றையது, சோவியத் அரசின் சீரழிவும், 1920-1930 களில் தொழிலாள வர்க்கத்தின் பல தோல்விகளும் எடுத்துக்காட்டியது யாதெனில், மார்க்சிசம் தொழிலாள வர்க்கத்திற்கு கற்பித்த வரலாற்றுத் தகைமைகளின் பற்றாக்குறைவை அது கொண்டிருந்தமையேயாகும். இத்தேர்வுகள் வித்தியாசமான வரலாற்று முன்கணிப்பிற்கு இட்டுச் சென்றது.

1939ல் ட்ரொட்ஸ்கி எழுதியதுபோல், நாங்கள் உண்மையைக் கூறுவோமானால், தோல்விகளுக்கான காரணம் தொழிலாள வர்க்கத்தின் சமூகத்தகமைகளுக்குள் தங்கியிருந்தது என்றால், புதிய சமூகத்தின் நிலைமை எவ்விதநம்பிக்கைக்கும் உரியதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முதலாளித்துவம் சீரழியும் காலகட்டத்தில் தொழிலாள வர்க்கம் எண்ணிக்கை ரீதியாகவோ அல்லது கலாச்சார ரீதியாகவோ வளர்ச்சியடைவதில்லை. எனவேதான் அது சிலவேளை புரட்சிகர கடமைகளை செய்யுமளவிற்கு வளச்சியடையும் என எதிர்பார்ப்பதற்கு எந்தக்காரணமும் இல்லை. எனவேதான் அதனது சோதனை தேவைகளுக்கு ஒடுக்கப்படும் மக்கள் முதலாளித்துவ சீரழிவுகளில் இருந்து, பிற்போக்குவாத, தேசியவாத, முற்றுமுழுதான முதலாளித்துவ தன்மைகளை கொண்ட காலவதியான தொழிலாளர் தலைமையில் இருந்து விடுபடுவதற்காக தொழிலாள வர்க்கத்தின் சிந்தனைகளை தெளிவாக்க வேண்டியுள்ளது. நாங்கள் இந்த இரண்டு முரண்பாடான முடிவுகளுக்குள்ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. (Leon Trotsky, In Defense of Marxism [London: New Park Publications, 1971], p.15).

ஆனால் பப்லோவும் மண்டேலும் இந்த இரண்டு தெரிவையும் தவிர்த்து மூன்றாவது மாற்றீடு ஒன்றைத்தேடினர். அதாவது தொழிலாள வர்க்கத்தின் நனவுபூர்வமான சுயாதீன அரசியல் இயக்கம் இல்லாது லெனினும் ட்ரொட்ஸ்கியும் எதிர்பார்த்ததற்கு மாறாக, அதிகாரத்துவத்தால் சோசலிசப் புரட்சி சாத்தியமாகும் என்றனர் (அல்லது பப்லோவும் மண்டேலும் அவர்களது கொள்கையை தொழிலாள வர்க்கமல்லாத சக்திகள் மீது அடித்தளமாக கொண்டனர்.) பப்லோவும் மண்டேலும் மார்க்சிசத்தை திரிபுபடுத்திய முக்கியபுள்ளி என்னவெனில், அவர்கள் சோசலிச முன்னோக்கின் அடித்தளமான தொழிலாள வர்க்கத்தை இரண்டாந்தர உதவியான பங்கு வகிக்கும் நிலைக்குத் தள்ளியதாகும்.

இந்த முன்னோக்கின் தத்துவார்த்த அடித்தளத்தை, பப்லோ 1951 "நாங்கள் எங்கே போகின்றோம்? என்ற ஆவணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார். "எங்களது இயக்கத்திற்கு புறநிலையான சமூக யதார்த்தம் முக்கியமாக முதலாளித்துவ அரசிலும் ஸ்ராலினிச உலகத்திலும் தங்கியுள்ளது. "மேலும் நாங்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த இரு பிரிவினருமே முக்கிய சமூக யதார்த்தத்தை பிரநிதித்துவப்படுத்துகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் பெரும்பான்மை சக்தி, தற்போது ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் ஆளுமை செலுத்தப்படுகின்ற அல்லது தலைமை தாங்கப்படுகின்ற சக்திகள் ஆகும்.

யுத்தமும் புரட்சியும் பற்றிய கொள்கை

The theory of war-revolution

பப்லோவும் மண்டேலும் போகும் திசை உறுதியாக ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்தை அமைப்பதற்கான முன்னோக்கை அடித்தளமாக கொண்ட தத்துவார்த்த ஆவணங்களில் எடுத்துக்காட்டிய திசையல்ல. இதற்கு மேலாக பப்லோவால் எடுத்துக்காட்டப்பட்ட புறநிலையான சமூக யதார்த்தம், மார்க்சினதும் ஏங்கல்ஸ்சினதும் வரலாறு தொடர்பான கொள்கைக்கு சிறிதளவும் பொருத்தமற்றதாகும். மண்டேலும், பப்லோவும் கூறுவது போல் புறநிலையான சமூக யதார்த்தம் முதலாளித்துவ அரசுகளையும், ஸ்ராலினிச உலகையும் உள்ளடக்கியுள்ளது என்றால் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன நிகழ்ந்தது? இந்த புதிய விடயத்தில் புரட்சிகர மாற்றத்திற்கான தீர்க்ககரமான, சுயாதீன கருவியான தொழிலாள வர்க்கம் இல்லாது போய்விடுகின்றது. இதற்கு பதிலாக முதலாளித்துவ அரசிற்கும், ஸ்ராலினிச உலகத்திற்கும் இடையேயான போராட்டத்தில் இந்த புதிய ஜதார்த்தத்தின் கீழ் தொழிலாள வர்க்கம் ஒரு பெறுமதியற்ற பிரிவாக கருதப்படுகின்றது. அத்துடன் சோசலிசம் இவ்விரு பிரிவினருக்கும் இடையேயான போராட்டத்தில் தங்கியுள்ளதாக்கப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கம் அடித்தளமான புரட்சிகர சக்தி என்பதை தத்துவார்த்த ரீதியில் கைவிடுதலின் விளைவுகள் பப்லோவும் மண்டேலும் சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தி எவ்வாறு நிகழும் எனக் கூறியதில் தெளிவாகத் தெரிகின்றது. அதாவது அவர்களது அனுமானத்தின்படி வர்க்கங்களுக்கு இடையேயான மோதுதலில் அபிவிருத்தியில்லாது, அமெரிக்காவினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முதலாளித்துவ அரசுகளுக்கும் சோவியத் அரசை அடித்தளமாக கொண்ட ஸ்ராலினிச உலகிற்கும் இடையேயான அணு இராணுவ மோதுதலுக்கு இடையே தீர்மானிக்கப்படும் என்றனர். இதை இவர்கள் "யுத்தமும் புரட்சியும்" என்பதன் கீழ் விபரணப்படுத்துகின்றனர்.

இன்று ஒருவர் இதைப்பற்றி பேசுவாரானால் வேறொரு கிரகத்தில் இருந்து பேசுவதை விடவும் இயற்கைக்கு மாறானதாக தெரியும். ஆனால் உண்மையில் குளிர்யுத்தத்திற்கு பின்னரான அரசியல் நிலைமைகள் நான்காம் அகிலத்தின் அரசியல் நடவடிக்கைகளிலும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களின் சாத்தியத்திலும் நம்பிக்கை இழந்த சீரழிந்த தீவிரவாத தத்துவார்த்த வாதிகளில் பிரதிபலித்ததன் விளைவுகளாகும்.

எவராவது இவர்களால் கூறப்படும் அடிப்படையான காரணங்களை ஏற்றுக் கொள்வாரானால், அதாவது ஸ்ராலினிசத்தால், கிழக்கைரோப்பிய தொழிலாள வர்க்கம் மயக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளதெனவும் அமெரிக்கா தொழிலாள வர்க்கம் மைக்கார்தியின் (McCarthyite) கம்யூனிச எதிர்ப்பினால் செயலிழக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்று கொண்டால் அவர்களது முடிவுகள் அவை தோன்றும் போதே தெளிவற்றதாகும். அதாவது அமெரிக்கா ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே உண்மையான முரண்பாடு உள்ளதென்பதும் இவ்விரு முரண்பாடான சத்திகளுக்கிடையிலான யுத்தம் சாத்தியமானதுடன் அவர்களது முரண்பாட்டிற்கான காரணம் இவ்விரு அரசுகளின் வித்தியாசமான சமூக அடித்தளமாகும். இதில் இருந்தே பப்லோவும் மண்டேலும் இவ் முரண்பாடு சோசலிசப் புரட்சிக்கான முக்கிய உந்து சத்தியாக இருக்கும் என்றனர்.

இந்த விபரிப்பின்படி சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான யுத்தமானது தவிர்க்க முடியாதபடி இரண்டு வித்தியாசமான சமூக அமைப்புக்களுக்கு இடையேயான பாரிய புரட்சிகர முரண்பாடாக மாற்றம் என்பதாகும். சீர்குலைந்த வடிவிலுள்ள, சோசலிசக் கொள்கையை உள்ளடக்கிய ஸ்ராலினிச அரசுகள் அது பிரதிநிதித்துவபடுத்தும் மக்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து புரட்சிகர அடித்தளத்தில் முதலாளித்துவ அரசுகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும். அதாவது பப்பிலோவின்படி "புரட்சியும் யுத்தமும் ஒன்றை ஒன்று நெருங்கி வருவதுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளதுடன் குறிப்பிட்ட காலகட்டங்களில் குறிப்பிட்ட நிலைமைகளில் பெரும்பாலும் ஒன்றில் இருந்து மற்றயதை பிரித்தறிய முடியாது."

யுத்தத்தின் தோற்றம் அது அணுவாயுத யுத்த வடிவங்களை எடுத்தாலும் சோசலிசத்தின் முன்னறிவிப்பு என்ற வகையில் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கவேண்டும். "யுத்தமும் புரட்சியும்" என்பதன் கீழ் பப்லோ "எமது சகாப்தத்தின் மார்க்சிஸ்டுகள் அடித்தளமாக கொள்ள வேண்டிய முன்னோக்கு இதுதான்" என்கிறார்.

இந்த "யுத்தமும் புரட்சியில்" ஸ்ராலினிச உலகம் வெற்றி பெறுமானால் அதன் சாம்பல்களில் இருந்து எழும் உருக்குலைந்த தொழிலாளர் அரசுகள் பல நூறுவருடங்களுக்கு நீடித்து இருக்கும். பப்லோ சகல பின்னடிகின்ற தன்மைகளையும் எச்சரிக்கையாக சுத்தம் செய்கிறார். இந்தப் புதிய முன்னோக்கு அமைதிவாத, பகட்டு பிரச்சாரவாதிகளையும் அல்லது உலகம் முழுவதும் ஸ்ராலினிசத்தின் அதிகாரம் பரம்பலையோ அல்லது அணு யுத்தத்தின் பின் உலகத்தின் முடிவு தொடர்பாக வருத்தம் தெரிவிப்பவர்களையும் சிலவேளை வியப்படையச் செய்யும் என மண்டேல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இந்த உணர்வு மிகுந்த உயிர்கள் இச்சிக்கலான காலகட்டத்தில் வர்க்கப் போராட்டம் கூர்மையடையும் நிலைமைகளுக்குள் போர்குணம் மிக்க அல்லது சகல மார்க்சிச காரியாளர் மத்தியில் எந்த இடத்தையும் பெறமுடியவில்லை. "யுத்தமும் புரட்சியும் என்ற இயக்கவியலை புறநிலை யதார்த்தம் முன்னோக்கி தள்ளுகின்றது. இது சகல அமைதிவாத கனவுகளையும் முடிவிற்கு கொண்டு வருவதோடு யுத்தத்திற்கும் புரட்சிக்குமான சக்திகளையும் அவர்களது மரணத்துக்கான போராட்டத்தையும் சமகாலத்தில் பிரித்து வைத்தலையும் தாமதம் செய்தலையும் அனுமதிக்கவில்லை" (பப்லோ)

இது சிலவேளை மண்டேலின் பின்னைய ஆதரவாளருக்கு மண்டேல் இப்படியான அபத்தமான மோசமான முன்னோக்கை முன்வைத்துள்ளாரா என்பது ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்துள்ளார்.

அவர் தொடர்ந்து எழுதுகையில் "மூன்றாம் உலக யுத்தத்தினால் உருவாகும் பாரிய அழிவுகள் உலகத்தின் பாரிய பகுதிகளில் உற்பத்தியில் சீர்குலைவை கொண்டுவரும். இது புதிய வெற்றிகரமான புரட்சிகளுக்கான ஆரம்ப அதிகாரத்துவ உருக்குலைப்பை எளிதாக்கும். ஆனால் எமது கருத்துப்படி ஒரு அழிவு மிக்க யுத்தத்தின் பின்னரும் கூட அமெரிக்கப் புரட்சியானது சோசலிச உலகுக்கு ஒரு வியக்கத்தக்க உற்பத்தி தகைமையை வழங்கும். மூன்றாம் உலகயுத்தத்தின் பின்னர் பாட்டாளி வர்க்கம் ஜனநாயகத்தில் எமக்கு எதிர்பார்ப்புடான நம்பிக்கை கொடுக்கும்.(National Education Department Socialist Workers Party, Towards a History of the Fourth International, June 1973, part 4, vol. 1, p. 5)

ஏர்னஸ் மண்டேல் முட்டாள் ஆகிவிடவில்லை. ஆனால் அவர் ஒரு முட்டாள்தனமான முன்னோக்கிற்கு அடிபணிந்து, தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர பங்கில் நம்பிக்கையிழந்ததன் விளைவான அரசியல் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகும். அல்லது இப்பிரச்சினையை வேறுவிதமாக விளக்குவதானால் தொழிலாள வர்க்கத்தை நான்காம் அகிலத்தால் வெற்றி கொள்ள முடியுமென அவர் நம்பவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாக ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டம் 20ம் நூற்றாண்டு முழுவதும் மார்க்சிச வேலைத்திட்டதின் மத்திய புள்ளியாக இருந்தது. யுத்தத்தை தடுப்பதற்கான சாதகம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர வர்க்க உணர்வை அபிவிருத்தி செய்வதில் தங்கியுள்ளது.

மண்டேலாலும் பப்லோவாலும் முன்வைக்கப்பட்ட முன்னோக்கு தொழிலாள வர்க்கத்தை முக்கியமாக அமெரிக்கா தொழிலாள வர்க்கத்தை, ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணிதிரட்ட முடியாது என்பதாகும், எனவே யுத்தம் அவர்களுக்கு தவிக்க முடியாததாகின்றது. அவர்கள் தங்களது ஐயுறவுவாதத்தினால் சோசலிசத்திற்கு முன்நிபந்தனையாக அணுவாயுத படுகொலைகள் தேவை என்கின்றனர்.

1951-1953 க்கு இடையில் பப்பிலோவாலும், மண்டேலாலும் எழுதப்பட்ட ஆவணங்கள் பிழையானவையும், புறநிலைமைகள் தொடர்பான தவறான மதிப்பீடுகளுமே மட்டும் என்றால், அவர்களது அரசியல் வாழ்க்கை வருந்தத்தக்க சம்பவமும், அவர்களது மதிப்பீடுகள் பிரச்சனைகளுக்கான தவறுகளையே அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர் என்றே ஒருவர் கருத முடியும். ஆனால் இந்த சம்பவம் இந்த இரு மனிதர்களது வாழ்கையிலும் தீர்க்கரமான அனுபவமாக இருந்ததோடு, அதைவிட முக்கியமாக நான்காம் அகிலத்தினுள் அதற்கு எதிரான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய பிரிவினரின் ஆரம்பமாகவும் இருந்தது.

பப்லோவும் மண்டேலும் அவர்களது அரசியல் ஆய்வுகளில் இருந்து வந்த நடைமுறை முடிவுகளை ஒருவர் பரிசீலித்து பார்த்தால் இது தெளிவாகின்றது. நிர்ணயிக்கப்படாத ஆனால் ஆட்சேபனைக்குரிய முன்கூறியவற்றில் இருந்து நான்காம் அகிலத்தின் சுயாதீன முன்னோக்கை நோக்கி தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முடியாது என்ற முடிவிற்கு பப்லோவும் மண்டேலும் வந்ததுடன், அவர்கள் இயங்கிக் கொண்டிருந்த நாடுகளில் இருந்த பாரிய இயக்கங்களுக்குள் தலையிடுவது அல்லது புதைத்து விடுவதுதான் அதிஸ்டமற்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு உள்ள ஒரேயொரு மாற்றீடு என்ற முடிவிற்கு வந்தனர். இந்த தந்திரோபயம் "இணையற்ற உட்புகுதல்" (Entrism Sui Genaris) என அழைக்கப்பட்டது. ஸ்ராலினிட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ட்ரொட்ஸ்கிஸ்டுகள், கம்யூனிட் கட்சிகளுடன் இணைந்து அவர்களுக்குள் இயங்க வேண்டும். இதன் மூலம் இவ் அமைப்புக்களுள் ஆதிக்கம் செலுத்தி அவற்றை இடதுபக்கம் திருப்ப முடியும் என்றனர்.

இந்த தந்திரோபாயம் மண்டேல் கூறியது போல் நிகழ்வுகளின் அழுத்தங்களுக்கு உள்ளாகி "புத்துயிரடைவதற்கான பாதையில் முதலடிகளை எடுத்து வைக்கும்" என நியாயப்படுத்தப்பட்டது. புரட்சிகர அபிவிருத்திகளின் பலம் ஸ்ராலினிச அமைப்புக்களை இடது பக்கம் திருப்பும் எனவும், "இணையற்ற உட்புகுதல் வாதம்" என்ற ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் நடவடிக்கைகள் இப் போக்கை எளிதாக்கும் எனவும் கூறினர்.

பப்லோவும் மண்டேலும் நான்காம் அகிலத்தின் கடமையை பின்வருமாறு வரையறுக்கின்றனர். "சம்பிரதாயமான சுயாதீனமோ அல்லது அது போன்ற சகல அமைப்பு ரீதியான கருத்துக்களையும் கீழ்படிய செய்ய வேண்டிய தேவையாக உள்ளதுடன், ஒவ்வொரு நாடுகளிலும் அவை எவ்வாறு தம்மை வெளிப்படுத்தினாலும், பாரிய இயக்கங்களுள் உண்மையான தலையீட்டை செய்வதற்கும் அல்லது இத்தலையீடு இந்த இயக்கங்களை நாம் எமது ஆதிக்கம் செலுத்துவதற்கான முக்கிய உந்து சத்தியாக இருக்கும். (Michel Pablo, "Main Report to the Congress: World Trotskyism Rearms," Fourth International, vol. 12, no. 6, November-December 1951, p. 172).

பப்லோவாலும் மண்டேலாலும் முன்வைக்கப்பட்ட தந்திரோபாய கண்டுபிடிப்புக்களின் முக்கிய உள்ளடக்கம் ட்ரொட்ஸ்கியினால் முக்கிய மத்திய மூலோபாயக் கடமையெனக் கூறப்பட்ட புரட்சிகர தலைமை நெருக்கடியை நான்காம் அகிலத்தை கட்டுவதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்கு எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. இதற்கு மாறாக 1953ம் ஆண்டு பப்லோ, தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர கட்சிக்கு வெற்றி கொள்வது பிரயோசனமற்றது என பின்வருமாறு எழுதுகின்றார். "இன்றைய திட்டவட்டமான வரலாற்று நிலைமைக்குள் மக்கள் ஸ்ராலினிச, சீர்திருத்தவாதிகளில் தவறான நம்பிக்கை கொண்டுள்ளதுடன் அவர்களது பாரம்பரிய மக்கள் கட்சிகளை உடைத்துக் கொண்டு எம்முடைய தற்போதைய கருவை நோக்கி வருவது மிகவும் சாதகமற்றதாக உள்ளதுடன், எம்முடைய தற்போதைய கருவானது, பிரத்தியோகமானதும் முக்கியமாகவும் உள்ளே எதுவுமற்ற சுயாதீன பண்பாகவே இருக்கின்றது. (Socialist Workers Party, Towards a History of the Fourth International, part 4, vol. 3, March 1974, p. 141).

1953ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் பப்லோவினதும் மண்டேலினதும் முன்னோக்கு, நான்காம் அகிலத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியமை தெளிவாகத் தெரிந்தது. பப்லோ தனது முன்னோக்கின்படி மண்டேலின் உதவியுடன் நான்காம் அகிலத்தின் செயலாளர் என்ற பதவியை சாதகமாகப் பாவித்துக் கொண்டு, அனைத்து தேசியப் பகுதிகளையும் சுயாதீன அமைப்புக்களாக கலைத்து, ஸ்ராலினிச கட்சிகளுக்குள் தலையீடு செய்யுமாறு வலியுறுத்தினார். பிரெஞ்சுப் பகுதியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததும் அவர்களை நியாயமற்ற முறையில் வெளியேற்றினர்.

இதே மாதிரியான உத்தரவு சீன ட்ரொஸ்கிஸ்ட்டுகளுக்கும் வழங்கப்பட்டது. "சீன மக்கள் குடியரசை நிபந்தனையின்றிப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை அடைவதற்கும் மாவோவின் அரசு மீதான விமர்சனத்துக்குரிய ஆதரவையும் கொடுக்க நான்காம் அகிலத்தின் சீனப் போராளிகள் அவர்களது நாடுகளில் உள்ள மக்கள் இயக்கங்களுக்குள் தம்மை முற்றுமுழுதாக ஈடுபடுத்தி கொள்ளவேண்டும்." இது நான்காம் அகிலத்தின் மூன்றாவது உலக மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. (Forth Internationl 1952 July, Auguest p118 )

மிக சிக்கலான நிலைமைகளுக்குள் இயங்கி வந்த சீன ட்ரொஸ்கிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன நலன்களை பாதுகாக்கவும் சோசலிசப் புரட்சிக்காக தொழிலாள வர்க்கத்தை வென்றெடுக்கும் முன்னோக்கை பாதுகாக்கவும் போராடினர். முக்கியமாக தொழிலாள வர்க்கத்தை கைவிட்டுவிட்டு, விவசாயிகளை தமது அடித்தளமாக கொண்ட மாவோவாதிகளது குட்டி முதலாளித்துவ முன்னோக்கிற்கு அடிபணிய பல பத்து வருடங்களாக இவர்கள் மறுத்து வந்தனர். இன்று இவர்கள் பப்லோவாலும் சீனப் புரட்சியின் "அகதிகள்" எனக்குறிப்பிட்டு மாவோவின் கட்சியில் சேருமாறு பணிக்கப்பட்டனர். இந்த "புத்திக் கூர்மையான" அறிவுரைகளின் அரசியலினை சீன ட்ரொஸ்கிஸ்டுகள் ஆராய முன்னரே அவர்களது அமைப்பு, ஒரு தொடர் கைது செய்தல்களால் உருக்குலைக்கப்பட்டது. பல ட்ரொட்ஸ்கிச தலைவர்கள் 1952ன் இறுதியில் கைது செய்யப்பட்டு 20,30 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேவேளை பப்பிலோ மண்டேலினது முன்னோக்கிற்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நான்காம் அகிலத்தினை உடைவிற்கு இட்டு சென்றது. 1953ம் ஆண்டு பப்பிலோவினதும், மண்டேலினதும் திரிபுவாதத்திற்கு எதிராக நான்காம் அகிலத்தின் அனைத்துலக்குழு (International Committee of the Fourth International) நிறுவப்பட்டது. இந்த உடைவிற்கு இட்டுச் சென்ற நிகழ்வுகள் முழுவதையும் விபரமாக மீள நினைவுபடுத்த இது இடமல்ல. எவ்வாறு இருந்த போதிலும் இறுதி ஆய்வுகளில் இவ்வுடைவானது பப்லோவாலும் மண்டேலாலும் செய்யப்பட்ட சதியின் விளைவல்ல என்பதை உண்மையாக ஏற்றுகொள்ள வேண்டும். அவர்களது முன்னோக்குக்கு நான்காம் அகிலத்தினுள் பரந்த ஆதரவு கிடைத்த்தற்கான காரணம், யுத்தத்திற்கு பிந்திய காலப்பகுதியிலான அரசியல் நிலைமைகளினதும் சமூக உறவுகளினதும் பிரதிபலிப்பாகும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான சோசலிசப் புரட்சியை தடைசெய்யும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தமது கட்டுப்பாட்டை பாதுகாத்து கொள்ள ஸ்ராலினிஸ்ட்டுக்களதும் சமூக ஜனநாயக வாதிகளும் முடிந்தமையே பப்லோவினதும் மண்டேலினதும் அரசியல் ஐயுறவுவாதத்தின் உருவாக்கமாகும்.

தமது நிலைப்பாடு ட்ரொஸ்கிசத்தில் இருந்து உடைவிற்கு செல்கிறது என்பதையோ அல்லது நான்காம் அகிலத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கியது என்பது தொடர்பாகவோ பப்லோவும் மண்டேலும் மூர்க்கமாக மறுத்தனர். ஆனால் உண்மையாக அவர்களது திரிபுவாத நிலைப்பாட்டினது தன்மை அவர்களது அமெரிக்கா ஆதரவாளர்களான கொக்கிரானிலும் கிளார்க்கினதும் நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாகவும் மோசமாகவும் வெளிப்பட்டது. அவர்கள் இன்றைய ஜதார்த்த நிலைமைகள் தொடர்பான சில முடிவுகளை நாம் பின்வருமாறு தொகுத்துப் பார்க்கலாம்.

''ஸ்ராலினிசம் தொடர்பான எமது முன்னோக்கு இரண்டாம் உலக யுத்தத்தின் போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் பிழையெனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிழக்கைரோப்பாவின் அரைவாசிப் பகுதி ஸ்ராலினிசம் ஆளுமை செலுத்துவதை நாம் காணக்கூடியதாக உள்ளதுடன், ஆசியாவில் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிட் கட்சிகள் தலைமை தாங்குவதுடன், பிரான்சிலும் இத்தாலியிலும் பலமான தொழிலாள வர்க்க இயங்கங்களாக அவர்கள் இருக்கின்றனர். மிகுதியான மேற்குலகில் சமூக ஜனநாயக கட்சிகள் உயிர் பெற்றுள்ளன. அமெரிக்காவில் தொழிற்கட்சி ஒரு சுயாதீன அரசியல் கட்சியாக முன்வரவில்லை. சீர்திருத்தவாத தொழிற்சங்க அதிகாரத்துவம் ஆதிக்கம் செலுத்துகின்றது.........

''கனன்வாதிகள் காலவதியான முன்னோக்கை இன்னும் கைவிடாததுடன், எப்படியாயினும் சிறிய புரட்சிகர கரு எதிர்வரும் புரட்சிகர போராட்டங்களில் சகல எதிர்ப்புக்களையும் தோற்கடித்து புரட்சிகர கட்சிகளாக மாறும் என நம்பிக்கொண்டு இருக்கின்றனர்''.

"உண்மையில் அடுத்த புரட்சிகர நிலைமைகள் அபிவிருத்தியடையாது பழையன தொழிலாளர் அமைப்புக்கள் உடையும் என்பதை எவரும் சாதகமானது என சிந்திக்க முடியாது என்பதே ட்ரொஸ்கிச முன்னோக்கு காலவதியாகிபோய் விட்டதற்கான தெளிவான சான்றாகும். ஒரு யுத்தத்திற்கு முன்னர் பேராளர்கள் தமது புரட்சிகர நோக்குகளை பழைய கட்சிகளுக்குள்ளேயே நடைமுறைப்படுத்தி கொள்ள முயல்வார்கள். எனவே பாரிய புதிய புரட்சிகர கட்சிகளுக்கான சாதகமான நிலைமை எதுவும் இல்லை......

"சர்வதேச தீர்மானத்தின் சரியான எடுத்துக்காட்டு எதிர்வரும் காலத்தின் புரட்சிகர கட்சிகளாக ட்ரொட்ஸ்கிச கட்சிகள் இருக்கப்போவதில்லை என்ற முடிவிற்கு எம்மை இட்டு செல்கின்றது. இதேவேளை நாம் எமது இயக்கத்தின் பாரம்பரியத்தையும் புரட்சிகர மரபுகளில் ட்ரொட்ஸ்கியின் பங்களிப்பையும் அல்லது ட்ரொட்ஸ்கியின் முக்கிய மதிப்பீடுகளையும் கோசங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் ........

"இறுதியாக இவ்வுலகத்தில் எமது விசேட பாரம்பரியத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய அத்தியவசியத்தை நாம் புகட்டுவதுடன், 1923ல் இருந்து ட்ரொஸ்கியினால் செய்யப்பட்ட சகல விசேட மதிப்பீடுகளினது உண்மையை நாம் வலியுறுத்த வேண்டும்.

இதற்கு முன்னர் நாம் தற்போதுள்ள இயக்கங்களுக்குள் எம்மை புகுத்திக் கொள்வதால் எமது தோழர்கள் உயிர்வாழ முடிவதுடன் அவர்களது கடமைகளை செய்யக்கூடியதாக இருக்கும். என கூறினோம். இப்போது நாம் இந்த நியாயமான முடிவுக்குள் பின்வரும் கருத்தை புகுத்திக்கொள்ளவேண்டும். வெவ்வேறு நாடுகளில் வித்தியாசமான நிலைமைகளுக்குள் வித்தியாசமான ஆளுமைக்குள் அபிவிருத்தியடையும் பாரியியக்கங்கள் மீதான எமது விசேட பாரம்பரியத்தை புகுத்துவதையும் சகல குழுவாத கருத்துக்களையும் கைவிடுவதன் மூலமே எமது அணுகு முறை வெற்றியைத் தருவதுடன் எமது பெறுமதிமிக்க தோழர்களின் எதிர்காலத்திற்கான உத்தரவாதத்தினை கொடுக்கமுடியும்...........

"ஐக்கிய அமெரிக்காவிலும் நிலைமை ஒரேமாதிரியாகவே இருக்கின்றது. அதாவது தொழிலாள வர்க்கம் அதனது சொந்தக் கட்சிக்குள் அணிதிரளாததோடு எவ்வாறு ஒழுங்கமைப்பது என்பது முழுச்சக்தியுடன் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. ஒருவர், கனனின் இல்லாத நாட்டில் வசிக்க வேண்டியுள்ளதுடன் அமெரிக்கா தொழிலாள வர்க்கம் தொடர்பான கொள்கையை அவதானமாக பகிரங்கப்படுத்த வேண்டியுள்ளது. அனைத்துலக தொழிலாள வர்க்கம், தொழிற்கட்சி தொடர்பான உணர்மையை இன்றும் அடையாததுடன் அடுத்த போராட்டத்தில் கனனினது புரட்சிகர வாதத்திற்கு நடந்து செல்லுமா அல்லது இதேபோல் தோற்றம் அளிக்கும் தொழிற்கட்சியுள் விழுந்து எழுந்து உடனடியாக தடைகளை உடைத்துக் கொண்டு அவர்களது படைத் தளபதிகளுடன் ஒன்றுசேருமா?..................

"இந்த ஆய்வுகளை அடித்தளமாக கொண்டு நாம் எம்மை CIO ஆல் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் அமைப்புக்களை நோக்கி, முக்கியமாக பாரிய உற்பத்தி தொழிற் சங்கங்களாகிய நோக்கி திரும்பியுள்ளோம். இதன் கருத்து தொழிற்கட்சி ஒன்று நிறுவப்படும் என்பது தொடர்பாக நாம் உறுதியாக நம்புகின்றோம் என்பதல்ல. எமது முன்னோக்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தொழிலாளர் இயக்கங்களுக்கூடாகவே புதிய அரசியல் நிகழும் என்பதும், அது மக்களை ஆகக்குறைந்த மட்டத்திலான ஒன்றிணைவிற்கான அரசியல் தன்மைகளை கொண்டிருக்கும் என்பதை அடித்தளமாக கொண்டதாகும்" என முடிக்கின்றனர்.

பப்லோவினதும் மண்டேலினதும் கொள்கைகள், அதிகாரத்துவத்தின் ஆதிக்கம் செய்யும் நிலைமைக்கு அடிபணிந்து போவதுடன், அதற்கு சமாதானம் கூறுவதுமாகும். அடுத்துவரும் வருடங்களில் மண்டேலின் தொழிற்பாடுகள் அனைத்தும் அதிகாரத்துவத்தின் தொழிற்பாடுகளை மொழி பெயர்ப்பதாகவே இருந்தது. அவர்களது செயற்பாடுகளும் தமது சொந்த மட்டங்களுடான முரண்பாடுகளும் மண்டேலினால் புரட்சிகர செயற்பாட்டினுள் பரந்த புறநிலை சத்திகளின் விளங்கமுடியாத தொழிற்பாடுகள் என விளங்கப்பட்டது.

உடைவின் பின்னர் மண்டேல் திரிபுவாதி என்ற குற்றச்சாட்டினால் வேதனையடைந்தார். ஏர்னஸ்ட் ஜேர்மைன் என்ற பல புத்திசாதுர்யமான கட்டுரைகளை எழுதிய மண்டேலை எவ்வாறு இப்படியான குற்றச்சாட்டிற்கு உள்ளாக்க முடியும். அவர் ஜோர்ஜ் பிரைட்மனுக்கு எழுதியதுபோல், "உலகம் முழுவதிலும் ட்ரொஸ்கிச இயக்கத்தைக் கட்டுவதில் வெற்றியடையாத போதும் அதற்காக முயற்சித்துக் கொண்டு இருக்கும் நாங்கள் ஸ்ராலினிசத்திற்கு அடிபணிந்து விட்டோம் என்பதை நீர் உண்மையாக நம்புகின்றீரா? என வேதனையடைந்தார்.

மண்டேலுக்கு கனனின் பதில்

Cannons reply to Mandel

ஜேம்ஸ். பீ. கனனால் 1954ம் ஆண்டு எழுதப்பட்ட முன்னோக்கு ஆய்வு ஒன்றில் (ஜேர்மைன்) மண்டேலுக்கு பதில் வழங்கப்பட்டது.

"எமது புறநிலைமைகள் ஜேர்மைனினது புறநிலைமைகளை விட அடிப்படையாக வித்தியாசமானது. இறுதியாக மேற்கோள் தொழிலாளர் இயக்கத்தினுள்ள மற்றைய பிரிவினர் தொடர்பான உறவு தொடர்பாகவும், புரட்சிகர முன்னணிப் படையின் பங்கு தொடர்பான வித்தியாசமான கொள்கையையும் ஆராய்கின்றது. ஜேர்மைன் இக் கேள்வி தொடர்பாக தான் ஒரு பாரம்பரியமானவர் என நினைக்கிறார். இது தொடர்பாக நான்காம் அகிலம் (அனைத்துலக்குழுவின் வெளியீடான Quatrième Internationale) சஞ்சிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளபோதும், நடைமுறையில் அத்தத்துவத்துடன் உடன்பாட்டிற்குச் செல்கிறார். நாங்கள்தான் லெனினினதும், ட்ரொட்ஸ்கியினதும் கட்சி என்பது உணர்மையான பாதுகாவலன் என்பதையும் புரட்சிகர போராட்டங்களின் அதன் தலைமைப்பங்கு தொடர்பான கொள்கையினதும் நிபந்தனையற்ற பாதுகாவலர்களாகும். இந்தக் கொள்கை இன்றைய சகாப்தத்தில் மற்றைய எல்லாவற்றையும் விட ஆளுமை செலுத்துவதும் மிகவும் முக்கியத்துவம் வகிப்பதும் ஆகும்.

"தலைமை தொடர்பான பிரச்சினையானது நீடித்த காலப்பகுதியிலான சுயாதீன வர்க்கப் போராட்டங்களின் எல்லைக்குட்பட்டதோ அல்லது விசேடமாக பலவீனமாக உள்ள ஏதாவது ஒரு முதலாளித்துவ நாட்டில் அதிகாரத்துவத்தை கைப்பற்றுவதுடன் தொடர்பானதல்ல, இது உலகப் புரட்சியுடனும் சமூகம் சோசலிச முறைக்குள் மாறுவதுடனும் தொடர்புபட்டது. இது சுயாதீனமாக நிகழும் என கூறுவது மார்க்சிசத்தை முற்றுமுழுதாக கைவிடுவாதாகும். இதற்கு மாறாக தேவையானது என்னவெனில் உணர்மையான செயற்பாட்டும், வரலாற்று போக்கின் உணர்மையான பிரிவாக மார்க்சிச கட்சியின் தலைமை தன்னை எடுத்துக்காட்டுவதாலேயே முடியும். எந்த ஒரு கட்சியும் இதனை செய்யாது. தொழிலாள இயக்கத்தில் உள்ள எந்தவொரு பிரிவினரும் சரியான பிரதியீடாக இருக்கமுடியாது. எனவேதான் இக் கட்சிகள் தொடர்பான எமது நிலைப்பாடு தவிர்க்க முடியாதபடி எதிரானதாகும்.

"இப்படியான எதிரான பிரிவினரால் அதாவது ஸ்ராலினிச, ஜனநாயக, மத்தியவாதிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் இயக்கங்களுக்குள் எமது பேராளர்கள் அடிபணிய சக்திகளின் உறவு தீர்மானிக்குமானால் அப்படியான அடிபணிவுகள் எப்போதும் தந்திரோபாயமானதாக கருதி அவர்களுக்கு எதிரான போராட்டத்தை சாதகமானதாக்க வேண்டுமே தவிர அவர்களுடன் ஒன்றிணைவாதாகவோ அல்லது அவர்களை வரலாற்றின் முக்கிய பங்கு வகிப்பவர்களாக காட்ட முயல்வதும் அவர்களுக்கு சிநேகித பூர்வமான ஆலோசனைகளையும், கீழ்படிந்த விமர்சனங்களை வைப்பதும் மார்க்சிஸ்டுக்களை இரண்டாந்தர கடமைகளை செய்யவைப்பதாகும். இதையே பப்லோவின் பிரான்ஸ் பொது வேலைநிறுத்ததின் போதான விமர்சனங்களில் காணக்கூடியதாக இருந்தது." [Trotskyism Versus Revisionism, vol.28 (London:NewPark,1974), P.65].