World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Israel steps up assault on Palestinian Authority

இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் அதிகாரத்தை அழித்தொழிக்க முன்னேறுகின்றது

By Chris Talbot
22 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த சில தினங்களாக இஸ்ரேல் அரசாங்கத்தின் இராணுவ கெடுபிடிகள் அது பாலஸ்தீன அதிகாரத்துக்கு (PA) எதிரான யுத்தத்தை விரிவுபடுத்தியுள்ளதை காட்டுகின்றது. மேற்குக்கரை பகுதியில் றமாலா (Ramallah) எனும் இடத்தில் இருக்கும் அரபாத்தின் தலைமைக் காரியாலயம் டாங்கிகள் மற்றும் கனரக ஆயுத வாகனங்களால், ஒரு 30 மீற்றர் தூரவித்தியாசத்தில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரேல் துருப்புக்கள் டாங்கிகளையும் மற்றும் புல்டோசர்களையும் பாலஸ்தீன வானொலிச் சேவை (Voice of Palestine) இருக்கும் இடத்திற்குள் செலுத்தி அங்கே அந்நிலையத்தையும் குண்டு வைத்து தகர்த்தனர்.

அதற்கு முன்தினம், F16 ஜெட் அதனது ராக்கட் தாக்குதல்களால் Tulkarem எனும் நகரத்தில் உள்ள பாலஸ்தீன பொலிஸ் நிலையத்தை தரைமட்டமாக்கியது. இத் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மேலும் மேற்குக்கரையில் உள்ள Qalqilya உட்பட மற்றும் ஏனைய Jenin, Nablus போன்ற இடங்களுக்கும் பரவியுள்ளன. றமாலா ஏற்கனவே இஸ்ரேலின் முடிவுக்கிணங்க அரபாத்தை வீட்டுக் காவலில் வைக்கும் திட்டத்துடன் ஆறு வாரங்களுக்கு முன்னரே இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டன.

இக் கெடுபிடி இராணுவ நடவடிக்கைகளை கையாள்வதின் நோக்கம் யாதெனில், பாலஸ்தீன அதிகாரத்துக்கு ''ஒருபோதும் மறக்காமல் இருக்கும் ஒரு பாடம்'' வழங்கப்பட்டுள்ளதென அதன் உத்தியோகபூர்வமான இஸ்ரேல் பிரச்சாரங்கள் தெரிவித்துக் கொண்டன. மேலும் இதை நியாயப்படுத்துவதற்காக, ஒரு யூத தினக் கொண்டாட்டத்தில் ஆறு பேரை துப்பாக்கியால் கொலை செய்த ஒரு பாலஸ்தீனருடைய சம்பவம் இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அத் துப்பாக்கி பிரயோகி அரபாத்தின் Fatah இயக்கத்தின் போராளிப் பிரிவான al-Aqsa Brigade எனும் அமைப்பில் ஒரு அங்கத்தவராவார். அல்-குவாசா பிரிகாட் அமைப்பு வெளிவிட்ட ஒரு அறிக்கையில், அவர்களது இந்த பயங்கரவாத நடவடிக்கை, இஸ்ரேல் படைகள் தமது தலைவர்களில் ஒருவரான Raed al-Karmi என்பவரை கடந்த வாரம் கொலை செய்ததற்கான ஒரு பழிவாங்கல் நடவடிக்கை எனத் தெரியப்படுத்தியது.

இவ்விதமான ஒரு தொடரான நடவடிக்கைகள் தவறுகளின்றி இடம் பெற்றுள்ளன. பாலஸ்தீன தலைவரை இஸ்ரேல் கொலை செய்ததின் மூலம், பயங்கரவாத தாக்குதல்களுக்கான பழிக்குப் பழி ஆத்திரமூட்டலை அது கிளப்பிவிட்டிருக்கிறது, பின்னர் இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் துருப்புக்களின் இராணுவ அடக்குமுறை இடம்பெற்று வருகின்றது.

ஆத்திரமும், வெறுப்பும் அடைந்திருந்த இளம் பாலஸ்தீன மக்கள் மத்தியில், அல் கார்மியின் கொலையானது Hadera வில் காணப்பட்டதுபோல் ஒரு மிகவும் கணிசமான கவலைக்குரிய பிரதிபலிப்பை உருவாக்கியுள்ளது. BBC யின் செய்தியாளரான Rachel Harvey என்பவர், இஸ்ரேல் இராணுவத்தின் இந் நடவடிக்கையை, ''மிக அவதானமாக அரங்கேற்றப்பட்ட ஒரு நிகழ்சி'' என கூறியுள்ளார்.

அல் கார்மியின் கொலை, இது இஸ்ரேல் பாதுகாப்பு படையினரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அரசியல் கொலைகளின் வரிசையில் இடம் பெறுகிறது. இஸ்ரேலின் ஆட்சிக்கு எதிரான பாலஸ்தீன தலைவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் அல்லது அவர்களை சீர்குலைக்க வேண்டும் என பிரதம மந்திரி ஆரியல் ஷரோன் அறிவித்துள்ளார். மேற்படி கொலைகளை அரசாங்கம் நிராகரிக்கையில், New York Times பத்திரிகை, ''இஸ்ரேல், இந்தக் கொலைகளுக்கான ஒரு பாத்திரத்தை வகித்து வந்ததை அறியக்கூடியதாக இருக்கிறது'' என ஒரு முக்கிய அரசியல்வாதி குறிப்பிட்டுள்ளார் என கருத்து தெரிவித்தது.

''திருப்பித் தாக்குதல் தொடுப்பதற்கான இராணுவ நடவடிக்கை இவ்வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அது மேலும் தொடரும், இந் நடவடிக்கை பாலஸ்தீன அதிகாரத்துவத்திற்கும், Fatah எனும் இயக்கத்துக்கும் எதிராக ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்'' என பாதுகாப்பு படைகள் கூறியதாகவும், அல் கார்மியை தவிர்த்து, ''இவ் இயக்கத்தின் ஏனைய தலைவர்கள் தமக்கு வரவிருக்கும் அபாயத்தை தெரிந்து கொண்டுள்ளனர் என Haaretz எனும் இஸ்ரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அரபாத் பாலஸ்தீன போராளிகளை ஒடுக்குகின்றார்

அல் கார்மியின் கொலையானது, இஸ்ரேல் மக்கள் எவரும் ஒரு அரசியல் தாக்குதல் மூலம் கொலை செய்யப்படாத மூன்று வாரத்துக்கு பின்னர் நடைபெற்றது. அத்துடன் இது PFLP என்னும் அமைப்பின் போராளிகள் மற்றும் ஹாமாஸ், இஸ்லாமிய ஜிகாத் போன்ற இயக்கங்களுக்கு அரபாத் விடுத்த ஓர் யுத்தநிறுத்த அழைப்பின் பின்னர் இடம்பெற்றது. அரபாத் இன்ரிபாடாவை (Intifada) அடக்கிவிட முயற்சித்தார், இது ஒரு பாலஸ்தீன இளைஞர்களின் எழுச்சியாக, செப்டம்பர் 2000 ஆண்டின் காம்ப் டேவிட் - இஸ்ரேல், பாலஸ்தீன உச்சி மாநாட்டின் உடைவிலும், ஜெருசலேமில் உள்ள Al Aqsa பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த Sharon னின் ஆத்திரமூட்டல் நடவடிக்கையின் போதும் ஆரம்பமானது.

கடந்த வருடம் நவம்பரில் இடம் பெற்ற ஹாமாஸ் இயக்கத் தலைவரான Mahmoud Abu Hanoud வின் கொலையானது, தற்கொலை குண்டு வெடிப்பு சம்பவங்களாக எழுந்து ஜெருசலேம், Haifa போன்ற இடங்களில் இஸ்ரேலிய மக்கள் 25 பேரை கொலை செய்வதற்கு வழிவகுத்தது. இவ்வாறான குண்டுவைப்பு சம்பவங்கள் முற்று முழுதாக ஒரு பிற்போக்கானவையே, இவை எவ்வகையிலும் பாலஸ்தீன விடுதலைக்கான ஒரு வழி அல்ல, அதே சமயம் இந் நடவடிக்கை சியோனிஸ்ட் தலைவர்களின் கைகளையே நேரடியாகப் பலப்படுத்துகின்றது. அவர்களுடைய விரக்திமிக்க செயல்பாடானது, ஒரு மட்டத்திற்கு பாலஸ்தீன மக்களை இஸ்ரேலின் தொடர்ச்சியான அடக்கு முறைக்கு கீழ் மட்டும் உட்படுத்தவில்லை, மாறாக அவர்கள் முன்னெடுக்கும் தேசியவாத அரசியலுக்கும் அது ஒரு முற்றுப் புள்ளியை இடுகிறது. al-Aqsa வின் அங்கத்தவர்கள் தீவிரவாத இஸ்லாமிய குழுக்களையும் விட, அரபாத்தின் தலைமை அமெரிக்கா, மற்றும் மேற்கு நாடுகளின் பின்னணியுடன் மேற்கொண்ட பேச்சுவார்தை உடன்பாடுகளைப் போன்றதொரு முட்டுச் சந்திக்குள் போகும் நடவடிக்கைகளிலேயே இறங்கியுள்ளது.

வாஷிங்டன் மத்திய கிழக்கில், ''அமைதி நிலமை'' களைப் பற்றி தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருக்கும் அதே சமயம் அமெரிக்கா ஷரோனுக்கு பச்சை விளக்கு காட்டுகிறது. ஷரோன் சென்ற மாதம், ''அரபாத் என ஒருவர் இல்லை எனவும்'', இஸ்ரேல் அரசாங்கம் இனி மேற்கொண்டு இவருடன் கையாள்வதற்கு எதுவுமே இருக்காது எனக் கூறியிருந்தார்.

கடந்த டிசம்பரில், பாலஸ்தீன நகரங்களை இஸ்ரேல் அரசாங்கம் இராணுவ பயங்கரவாத அடக்கு முறையினூடு தாக்கினர், அதைத் தொடர்ந்து பாலஸ்தீனர்களுடைய அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகாயப்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டபோதும், அமெரிக்கா ஷரோன் அரசாங்கத்தின் இந்த அண்மைக்கால நடவடிக்கைகளைப் பற்றி விமர்சிக்கவில்லை. அமெரிக்க அரசாங்க திணைக்களத்தின் பேச்சாளரான Philip Reeker இஸ்ரேலின் சார்பில் நின்று கொண்டு, இந்த வன்முறை எழுச்சிகளுக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் அரபாத்தே பொறுப்பாளர் எனவும், எனவே அவர்தான் ''உடனடியாக இந்த பயங்கரவாதத்திற்கும், வன்முறைக்கும் காரணமான கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டும்'' என குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த வாரம், பாலஸ்தீன அதிகாரிகளுடன் Ramallah ல் இடம் பெற்ற கூட்டத்தில், அரபாத் PFLP அமைப்பின் தலைவரான Ahmed Saadat என்பவரை கைதுசெய்யுமாறு கட்டளையிட்டார். இஸ்ரேலின் கருத்துப்படி, இந்த Ahmed Saadat என்பவர்தான் கடந்த அக்டோபரில் இஸ்ரேல் அமைச்சரவையின் மந்திரியான Rahavam Zeevi என்பவரை கொலை செய்ததற்கு பொறுப்பானவர் ஆவார். PFLP எனும் அமைப்பு இது ஒரு ''மிகவும் ஆபத்தான அபிவிருத்தி'' எனக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் பாலஸ்தீன அதிகாரத்தின் (PA) இச் செயல்பாட்டை கண்டித்த PFLP யின் உபசெயலாளர், ''இது அதனது அனைத்து தேசிய மற்றும் இஸ்லாமிய பிரிவுகளுக்கும் எதிரான ஒரு பெரிய முரண்பாட்டுக்கு இட்டுச் செல்வதை தவிர்க்க முடியாது'' எனக் கூறியுள்ளார். பிரித்தானிய பத்திரிகையான Guardian, அரபாத்துடைய அலுவலகம் இஸ்ரேலின் யுத்த டாங்கிகளால் சுற்றி வளைக்கையில், 4000 பாலஸ்தீனர்கள் வரையில் இத் தாக்குதலுக்கு எதிராகவும், அதே சமயம் கைது செய்யப்பட்ட Ahmed Saadat மற்றும் ஏனைய போராளிகளையும் விடுதலை செய்வதற்கான போராட்ட ஊர்வலத்தையும் மேற்கொண்டனர். அவர்கள் அங்கே ''பாலஸ்தீன அதிகாரத்துவம் ஒரு துரோகிகள், அரசியல் கைதிகளை விடுதலை செய்'' போன்ற ஆரவாரத்துடன் சென்றனர் எனவும் கூறியது.

அமெரிக்க பேச்சாளர் ஒருவர், அரபாத்தினுடைய இந்த ஒடுக்குதலால் ''எவ்விதமான ஒரு பிரதிபலிப்பையும் காணமுடியவில்லை'', எனவும் PLO வின் தலைவர் முதல் அமெரிக்காவின் வேண்டுகோள் வரையிலும் ''வன்முறைகள் குறைக்கப்படுவதற்கான முயற்சிகளே நூறு வீதம் எடுக்கப்படல் வேண்டும்'' எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இக் காரணத்திற்காக, வாஷிங்டன் ஒரு அமெரிக்க பிரதிநிதியான Anthony Zinni என்பவரை மேற்கொண்டு நடைபெறும் யுத்தநிறுத்த பேச்சுவார்த்தைக்காக அப் பிராந்தியத்துக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளது.

Economist சஞ்சிகை ஜனவரி 18ல் வெளியிட்ட கட்டுரையில், ஷரோனின் நடவடிக்கைகள் மேற்குகரை மற்றும் காஸா போன்ற இடங்களிலான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு ஒரு முடிவுக்கு வராது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது, மேலும் அறியப்பட்டுள்ள செய்திகளின்படி ''இராணுவத் தாக்குதல், பொருளாதார மந்தப்படுத்தல் மற்றும் அரசியல் வெடிப்பு, போன்றவற்றிற்கு திரு. அரபாத்தும் அவருடைய பாலஸ்தீன அதிகாரமுமே ஒரு பேரழிவுகளாகும்.'' எனவும் தெரியப் படுத்தியது.

இஸ்ரேலின் இவ்வாறான தொடர்ச்சியான தாக்குதலுக்கு ஐரோப்பாவின் ஆதரவு கிடைக்கவில்லை, அதேசமயம் இதனால் வளர்ச்சியடையும் ஸ்திரமற்ற நிலமைகள் மத்திய கிழக்கு பூராவும் பரவலாம் எனும் ஒரு பயமும் இருந்து கொண்டுள்ளது. இப் பிராந்தியத்துக்கு கடந்த வாரம் ஐரோப்பியக் கூட்டின் சார்பில் விஜயம் செய்த ஸ்பானிய வெளிநாட்டு அமைச்சரான Josep Pique, ''அமைதிக்கான வேறு புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் அராபிய பத்திரிகையான Al-Hayat ல் ''இஸ்ரேலுடைய நடவடிக்கை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Karine A பற்றிய சம்பவம்

இம் மாத ஆரம்பத்தில் இஸ்ரேல் கொமான்டோ, Karine A எனும் கப்பலை சோதனையிட்டதில் 50 தொன் எடையுள்ள ஆயுதங்களை கைப்பற்றியது. இந்த கப்பல் முதலில் ஈரானில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு, அரபாத்தின் தனிப்பட்ட கோரிக்கையின் பேரில் பாலஸ்தீன அதிகாரத்துக்காக கொண்டு வரப்பட்டது என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீனர்களுக்கு எதிராக இயங்க இஸ்ரேல் ஒரு மிகப்பெரிய இராணுவ அமைப்பை கொண்டுள்ளபோதும் அது பாலஸ்தீன குழுவின் பொலிஸ் படைக்காக சாதாரண ஆயுதங்களை விட வேறு ஆயுதங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கமுடியாது என கூறியுள்ளது. ஷரோன் Karine A சம்பவத்தை, இது ஒரு ''பயங்கரவாதக் கப்பல்'' எனக் குற்றம் சாட்டியதுடன், அரபாத் கடைசியாக கேட்டுக் கொண்ட யுத்த நிறுத்தம் என்பது, இது பாலஸ்தீன அதிகாரம் தன்னை இராணுவ ரீதியில் நிறைவுபடுத்துவதற்காக எடுத்துக் கொண்ட ஓர் முயற்சியாகும் எனவும் கூறினார். எனவே இவ்வாறான இஸ்ரேலின் செல்வாக்கை அதிகரிப்பதற்கான பிரச்சாரங்கள், இவை பல முரண்பாடுகளை கொண்டுள்ள ஒரு கதை என இராஜதந்திரிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒரு வெளிப்படையான பிரச்சனை யாதெனில், ஒரு டசின் கணக்கான அமெரிக்க கடற்படையினரால் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிப்போகும் பயங்கரவாதிகளை சோதனையிடும் கடல் வழியாக ஏன் ஈரான் இப்படியான கப்பலை அனுப்பவேண்டும் என்பதாகும்.

மேலும் இந்த Karine A சம்பவம் பல சந்தேகங்களை கிளப்பிவிட்டிருக்கின்றன. அதாவது இது ''பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தம்'' என்பதிற்கு கீழ் உள்ள அல் கொய்தா மற்றும் தலிபான் இயக்கங்களுக்கு அடுத்தாக பாலஸ்தீன அதிகாரத்துவத்தையும், ஈரானையும் மற்றுமொரு எதிரியாக காட்டி அமெரிக்காவை நம்பவைப்பதற்கு இஸ்ரேல் எடுக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இந்த நிரூபணமில்லாத ஆயுதங்களைக் கொண்ட கப்பல் சம்பவம், அத்துடன் தெற்கு காஸாவில் ஹாமாசால் கொலை செய்யப்பட்ட நாலு இஸ்ரேல் இராணுவத்தினரின் சம்பவம் போன்றவை, அல் கார்மியின் கொலை நடைபெறுவதற்கு முன்பாகவே இடம்பெற்ற தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்த இஸ்ரேல் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகின்றது.

ஜனவரி 10ல், இஸ்ரேல் இராணுவம் எகிப்தின் எல்லைக்கு அருகே உள்ள காஸா திடலில் அமைந்துள்ள Rafah எனும் அகதிகள் முகாமில் இருக்கும் வீடுகளை உடைத்து தள்ளியுள்ளது. இவ் வீடுகள் காலியாக இருப்பதாகவும், எகிப்திலிருந்து ஆயுதங்கள் இங்கே கடத்தப்படுவதாகவும் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. எனவே ஒரு புதிய ''பாதுகாப்பு வலையம்'' இவ் எல்லையின் ஊடாக நிறுவப்பட்டுள்ளது.

BBC வெளியிட்ட ஒரு செய்தியின் படி, மேற்குறிப்பிட்ட தாக்குதலுக்கு பொறுப்பான ஒரு இஸ்ரேல் இராணுவ அதிகாரியான Shlomo Dagan என்பவர், ''இஸ்ரேலின் பாதுகாப்பு பிரிவு (IDF) அப்பிராந்தியத்தில் 300- 400 மீற்றர் தூரத்துக்கு விசாலமாக அமைந்துள்ள அனைத்து வீடுகளையும் உடைத்து எறியும் என குறிப்பிட்டுள்ளார். வேறு ஏதாவது (பாலஸ்தீனர்களுடன்) ஒப்பந்தங்கள் இருப்பதைப் பற்றி அக்கறையில்லை, இது எகிப்துடனான எமது எல்லையாகும். அவர் மேலும், ஒவ்வொரு சம்பவங்களையும் அடுத்து, அரபாத் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் எனவும், மேலும் இங்கே இரண்டு, மூன்று வரிசைகளில் அமைந்துள்ள வீடுகளும் கட்டாயம் உடைக்கப்படும்.'' எனவும் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் ஒரு மனித உரிமைக் குழுவான B'Tselem இன் விசாரணையின்படி, இந்நடவடிக்கையில் 60 வீடுகள் இதுவரையில் முற்றாக உடைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பிராந்தியத்தில் 112 குடும்பங்களும், அவற்றைச் சேர்ந்த 614 குடும்ப அங்கத்தவர்களும் தற்போது வீடில்லாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் இராணுவத்தால் பாலஸ்தீனர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இவ்வாறான அனைத்து அடக்குமுறை நடவடிக்கைகளையும் அமெரிக்காவே வழி நடத்துகின்றது. ஷரோனின் கூட்டாட்சியாளரான தொழிற் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கெதிரான ஒரு பலவீனமான எதிர்ப்பை கூட நடைமுறையில் மறந்து போயுள்ளதோடு, மேலும் வலது பக்கமாகவே சென்றுள்ளனர். இக் கட்சி, ஷரோனின் அமைச்சரவையைச் சேர்ந்த பாதுகாப்பு மந்திரியான Benjamin Ben-Eliezer என்பவரையே கடந்த டிசம்பர் மாதத்தில் அதற்கான ஒரு புதிய தலைவராக தெரிவு செய்துள்ளது. இந்த பென்ஜமின் பெல்- எலிஸர் என்பவர் பாலஸ்தீன தலைவர்களை கொன்றொழிப்பதற்கும், மேற்குகரையின் நகரத்தில் தடைகளை இடுவதற்குமான பூரண சம்மதத்தை தெரிவித்தவர் ஆவார். இவர் ஷரோன் கூறுவதையே அதாவது, அரபாத்தின் ''வரலாற்றுக் கடமை முடிவு பெற்றுவிட்டது. இவ் வன்முறையை நிறுத்துவதற்கான ஒரு மூலோபாய நிலைப்பாட்டை எடுப்பதற்கு இவர் தவறிவிட்டார்.'' என்பதையே மீண்டும் அவர் எதிரொலிக்கிறார்.