World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :செய்திகள் & ஆய்வுகள்: ஆசியா : ஆப்கானிஸ்தான்

Was the US government alerted to September 11 attack?

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?

பகுதி3: அமெரிக்க ஐக்கிய அரசுகளும் மத்திய கிழக்கு பயங்கரவாதமும்

By Patrick Martin
22 January 2002

Use this version to print | Send this link by email | Email the author

பார்க்க: பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள், பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல்

உலக வர்த்தக மையத்தின் மீதும் பென்டகன் மீதும் ஆன தாக்குதல்களின் உத்தியோகரீதியான கருத்துப்பாங்கின் அத்தியாவசிய அம்சம் --இந்தத் தாக்குதல்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் உளவுத்துறைக்கும் முற்றிலும் வியப்பூட்டும்படியாக இருந்தது என்று பராமரிக்கும்-- சி.ஐ.ஏவும் ஏனைய உளவு முகவாண்மைகளும் (ஏஜன்சி) பயங்கரவாத அமைப்புகளுக்குள்ளே ஊடுருவி சம்பவம் நடக்கையில் தகவல் தரும் முகவர்களைவிடவும், மின்னணுவியல் கவனக் கண்காணிப்பைத்தான் தாங்கள் மிகவும் நம்பி இருந்தார்கள் என்று கூறிக்கொள்வதாகும்.
அந்தக் கதை கூறுகிறவாறு, அதன்விளைவாக, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியில் ஏஜண்டுகள் இல்லாமல், சி.ஐ.ஏவும் எப்.பி.ஐ யும் ஒசாமா பின் லேடனின் திட்டங்களை கண்டுபிடிக்க முடியாது மற்றும் அவற்றைப்பற்றி முன்கூட்டிக் கணிக்க முடியாது. ஆதாரம் பற்றி எந்த ஆய்வும் செய்யாமல் அமெரிக்க முகவர்கள் (ஏஜண்டுகள்) அங்கு இல்லாமை சாதாரணமாய் வலியுறுத்திக் கூறப்பட்டது. இவ் விவாதமானது பெரும்பாலும் வட்டமாகச்சுற்றி வருகிறது. செப்டம்பர் 11 தாக்குதலின் வெற்றியானது விமானக் கடத்தல்காரர்களுக்கு ஆதரவளித்த குழுவில் அமெரிக்க அரசாங்கத்திற்கு முகவர்கள் இல்லை என்பதாகும்.
இங்கு இரு கருதுகோள்கள் இருக்கின்றன: அமெரிக்க முகவர்கள் பயங்கரவாத வட்டங்களை ஊடுருவ முடியவில்லை என்பது முதலாவது; அமெரிக்க முகவர்கள் அதனை முன்னதாகவே அறிந்திருந்தால் தாக்குதலைத் தடுப்பதற்கு தலையீடு செய்திருக்க முடியும் என்பது இரண்டாவது. இரு கருதுகோள்களுமே கேள்விக்குரியனவாகும்.
செப்டம்பர்11 பற்றி "மனித உளவறிதல்" இல்லை என்ற உத்தியோக ரீதியிலான கூற்று பதிவுவாத அல்லது தடய அறிவியல் சான்று அடிப்படையில் ஆய்வு செய்தலோ அல்லது மறுதலித்தலோ கடினமானதுதான். அவை ரகசியமாக இடம்பெறுகின்றன மற்றும் பெரும்பாலும் பொதுவில் யாரும் அதனை அறியமாட்டார்கள் என்ற அதன் இயல்பில் அது இருக்கின்றது. ஆனால் இந்தக் கூற்றின் நம்பகத்தன்மை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கும் இடையிலான உறவின் வரலாற்று பதிவுச்சான்றின் ஒளியில்தான் தீர்ப்பளிக்கப்பட முடியும்.
அமெரிக்க ஐக்கிய அரசுகளானது மத்திய கிழக்கில் ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலாகவும் ஆப்கானிஸ்தானில் இரு தசாப்தங்களுக்கு மேலாகவும் ஆழமாய் ஈடுபட்டிருக்கிறது. அமெரிக்க உளவு முகவாண்மைகள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் நீண்ட மற்றும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருந்ததுடன் அவற்றை பயங்கரவாத வன்முறையில் ஈடுபடுத்துவதற்கு ஊக்கப்படுத்தி வந்தன. அமெரிக்காவின் பங்கு இல்லாமல் அல் கொய்தா இருந்திருக்க முடியாது, பின் லேடன் செளதி அரேபியாவில் கட்டுமானத்துறை பெரும்புள்ளியாக இருந்திருப்பார், செப்டம்பர் 11 ஒருபோதும் இடம்பெற்றிருக்க முடியாது.
முஜாஹைதின் தோற்றம்

செப்டம்பர்11, 2001 பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள், அமெரிக்க அரசாங்கமானது வன்முறை கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு முதலாவதாக ஆதரவு கொடுக்கத் தொடங்கிய பொழுது, மற்றும் மத்திய கிழக்கில் அரசியல் எதிராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்திய பொழுது, பிறந்தே இருக்கமாட்டார்கள். 1950கள் அளவில் பின்னோக்கிப் பார்த்தால், அமெரிக்க ஐக்கிய அரசுகளும் அதன் பிரதான ஆதரவு அரசான செளதி அரேபியாவும் எகிப்தில் உள்ள முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற அடிப்படைவாத குழுக்களை புகழ்ந்தனர். அமெரிக்க அதிகாரிகள் எகிப்தின் கமால் அப்தெல் நாஸரின் அரபு முழுமைக்குமான தேசியவாதம், அதேபோல அரபு தொழிலாள வர்க்கத்தில், சிறப்பாக செளதி எண்ணெய் வயல்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தில் உள்ள சோசலிச சக்திகள், இவற்றுக்கு எதிராக அடிப்படைவாதிகளை பின்புலமாய் இருந்து ஆதரித்தார்கள்.

இந்நிகழ்ச்சிப்போக்கு பற்றி ஒரு ஆய்வாளர் எழுதுகிறார்: "1958-60 காலகட்டத்தின் பொழுது மத்திய கிழக்கில் கம்யூனிஸ்டுகளது அச்சுறுத்தல் பற்றி அமெரிக்க அரசாங்கத்துறை மிகைப்படுத்த ஆரம்பித்தது, மற்றும் ARAMCO CIA, மற்றும் உண்மையில் பெய்ரூட், கெய்ரோ சி.ஐ.ஏக்கள், நாஸருக்கு எதிர் எடையாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள். இது ஈரானில் இடதுசாரிகளுக்கு எதிராக முஸ்லிம் சக்திகளை (ஃபதாயீன்) கிம் ரூஸ்வெல்ட்டின் ஆரம்பகால வெறிகரமாய்ப் பயன்படுத்தலின் ஒரு பகுதியாக இருந்தது. நாஸர் எதிர்ப்பு முஸ்லிம் சகோதரத்துவம் நிதி ஆதரவளிக்கப்பட்டது, அதன் முஸ்லிம் விரோத வழிமுறைகளுக்காக சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தைத் தாக்குதற்கு மதத்தலைவர்கள் குத்தித் தூண்டப்பட்டனர். (Said K. Aburish, The Rise, Corruption and Coming Fall of the House of Saud, St. Martin'sPress, New York, NY, 1996, p. 161).

இந்த உறவானது ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு யுத்த வெடிப்புடன் அளவு ரீதியாகவும் பண்புரீதியாகவும் நீண்டது. 1979 டிசம்பரில் நாடு சோவியத் ஒன்றியத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதற்கு முன்னர்கூட, காபூலில் 1978 ஏப்ரலில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் அதிகாரத்துக்கு வந்திருந்த, சோவியத் ஆதரவு ஆட்சிக்கு எதிராக கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளுக்கு நிதி மற்றும் இராணுவ ஆதரவை வழங்க அது தீர்மானித்திருந்தது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜ்பிக்நீவ் ப்ரிஜேஜின்ஸ்கி, ஆப்கானிஸ்தானில் முழு அளவிலான யுத்தம் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு வியட்னாம் இருந்ததைப்போல சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்துக்கு சோர்வடையவைக்கும் என்பதை நிரூபிக்கும் என்றார். காட்டர் நிர்வாகம் சிறப்பாக மிகவலதுசாரி இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு சாதகமாக, ஆயுதங்களையும் பணத்ததையும் கொட்ட ஆரம்பித்தது. அவர்கள் தலிபானுக்கும் ஒசாமா பின் லேடனுக்கும் சித்தாந்த ரீதியாக முன்னோடிகளாக ஆயினர்.

காட்டரை அடுத்து வந்த ரொனால்ட் றேகன் ஆர்வத்துடன் அடிப்படைவாதிகளை அணைத்துக் கொண்டார். அவர் மத்திய காலத்து இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட அரசை நிறுவ விரும்பும் அரசியல் இயக்கங்களை "விடுதலைப் போராளிகள்" எனப் புகழ்ந்தார். அந்த இஸ்லாமியச் சட்டம் என்பது அடிமை முறை, பெண்ஒடுக்குமுறை, சட்டம் ஒழுங்கை மீறுபவர்கள் எனக் கூறப்படுவோரை காட்டுமிராண்டித்தனமாக உறுப்புக்களைத் துண்டித்தல் ஆகியவற்றை செயல்படுத்தும் மதச் சர்வாதிகாரம் ஆகும்.

ஆனால் அல் கொய்தாவின் "நிறுவனத் தந்தை" என்ற பட்டத்துக்கு உண்மையாய் தகுதி உடையவர் றேகனின் சி.ஐ.ஏ இயக்குநர் வில்லியம் கேசி ஆவார். ஆப்கானிஸ்தானுக்கு வந்து சோவியத்- எதிர்ப்பு பணியில் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் திரட்டுவதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் கேசிதான். மொரோக்கோவில் இருந்து இந்தோனேஷியா வரையிலான, டஜன் கணக்கான நாடுகளில் இருந்து மற்றும் அமெரிக்க ஐக்கிய அரசுகளில் உள்ள சில கறுப்பு முஸ்லிம்கள் உள்பட இஸ்லாமிய அடிப்படைவாதிகள் - சி.ஐ.ஏ- யின் மேற்பார்வையின்கீழ் ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்தனர், சி.ஐ.ஏ யின் பயிற்சியாளர்களிடமிருந்து ஆயுதப்பயிற்சியையும் வெடிமருந்துகளைக் கையாள்வதில் பயிற்சியையும் பெற்றனர் மற்றும் அமெரிக்கா வழங்கிய ஆயுதத்துடன் போரிடச் சென்றனர்.

ஒசாமா பின் லேடனே இந்த நிகழ்ச்சிப்போக்கின் ஒரு விளைபொருளாவார். அவர் முதன்முதலாக 1980ல் ஆப்கான் முஜாஹைதினின் ஒரு ஆதரவாளராக ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். அவரது கட்டுமானம் தொடர்பான அறிவைப் பயன்படுத்தி சாலைகள், தளங்கள் மற்றும் ஏனைய வசதிகளை அமெரிக்கப் பணத்துடன் தனது சொந்தப் பணத்தையும்போட்டு அமைத்துக் கொடுத்தார். உலக ரீதியாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியில் தொடர்புகளை அவர் ஏற்படுத்திக்கொண்டது ஆப்கானிஸ்தானில் இருந்த பொழுதுதான். பின்னர் அமெரிக்க இலக்குகள் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திய இயக்கத்தை அமைப்பதை அது சாத்தியமாக்கியது. புஷ் நிர்வாகமும் அமெரிக்க செய்தி ஊடகமும் இன்று இஸ்லாமிய தீவிரவாதிகளின் பூகோள சதி என்று பூதாகாரமாகக் காட்டப்படுவது, இவ்வாறாக அமெரிக்க அரசாங்கத்தினாலேயே உருவாக்கப்பட்ட ஆக்கியவருக்கே அழிவு தரும் ஒன்றாகும்.

இந்த வரலாறானது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கான மிகநனவு கொண்ட மூலோபாய வல்லுநர்களால் நன்றாகப் புரிந்து கொள்ளப்படும். ஜ்பிக்னீவ் ப்ரிஜேஜின்ஸ்கி சில ஆண்டுகளுக்கு முன்னர், அல் கொய்தாவின் தோற்றம் மத்திய கிழக்கிலும் சர்வதேசிய ரீதியிலும் மேலும் அமெரிக்க நலன்களுக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவிலையாகும் என்று சிடுமூஞ்சித்தனமாகக் கூறினார். அவர் பிரெஞ்சு செய்தித்தாளிடம் பின்வருமாறு கூறினார்: "உலக வரலாற்றில் மிக முக்கியமானதாக எது இருந்தது? தலிபானா அல்லது சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? ஒரு சிலரா இஸ்லாமியவாதிகள் அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலை மற்றும் குளிர் யுத்தத்தின் முடிவு பற்றி மிகை உணர்வு வயப்படுகிறார்கள்? "(Interview with Vincent Javert in Le Nouvel Observateur, January 15-21, 1998)

அல் கொய்தாவும் சி.ஐ.ஏ யும்

இப்பொழுது பரவலாக செய்தி அறிவிக்கப்படுகிறவாறு, வளைகுடா போரின் பொழுது பெரிய எண்ணிக்கையில் அமெரிக்கத் துருப்புக்கள் செளதி அரேபியாவில் இறக்கப்பட்ட பின்னர், பின் லேடன் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு எதிராக திரும்பினார். இது அமெரிக்க உளவுத் துறைக்கும் அல் கொய்தாவை அமைக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் இடையிலான அனைத்துத் தொடர்புகளின் முடிவைக் குறிக்கிறது என்பது உத்தியோக ரீதியான கூற்று ஆகும்.

இங்கு எமது ஆய்வானது, ஏற்படுத்தப்பட்ட உண்மைகள் சிலவாக மற்றும் அருமையாக, மற்றும் ஊகம் மற்றும் நிகழ்தகவில் தங்கி இருந்தாக வேண்டிய பகுதிக்கு அவசியமாக செல்கிறது. ஆப்கான் முஜாஹைதினுடன் தசாப்தகால மிக நெருக்கமான பிணைப்பிற்குப் பின்னர், சி.ஐ.ஏ திடீரென்று எல்லாத் தகவல்களிலுமிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது மற்றும் அதன் முன்னாள் காப்பிற்கு உட்பட்டவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என தீர்மானிக்க முடியாதிருந்தது என்பது நம்பக்கூடியதா?

அடிமைத்தனமுடைய அமெரிக்க செய்தி ஊடகம் புஷ் நிர்வாகத்தை, பென்டகனை அல்லது எப்.பி.ஐ பேச்சாளரை இந்த விஷயம் தொடர்பாக ஒருபோதும் சவால் செய்யவில்லை மற்றும் அதிகமாய் சம்பளம் பெறும் அமெரிக்க பத்திரிக்கையாளர் அத்தகைய கேள்விகளைக் கேட்பதன்மூலம் தனது வேலையை இரண்டுக்கும் இடைப்பட்ட கோட்டில் வைக்கும்வரை ஒருவர் தனது மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் சி.ஐ.ஏ க்கும் ஆப்கன் முஜாஹைதினுக்கும் இடையிலான நீண்ட கால, நெருக்கமாகப் பின்னப்பட்ட உறவு அனைத்து விமான உளவு ஆதாரங்களையும் திடீரென வற்றச் செய்தல் இயல்பாக எளிதில் நடைபெற முடியாததாக உள்ளது.

சி.ஐ.ஏ யானது அதன் ஒத்துழைப்பாளர்களை மிக நெருக்கமாக அறியும் வேலையில் இருக்கிறது, மற்றும் அது டஜன் கணக்கான ஆண்டுகள் பின் லேடனுடனும் அவரது ஆதரவாளர்ள் மற்றும் பின்பற்றாளர்களுடனும் வேலைசெய்திருக்கிறது. ஒரு தசாப்தகால அதிகரித்த குரோதங்களுக்குப் பின்னர் இன்றும்கூட, அமெரிக்க அரசாங்கத் தகவல்களால் பின்லேடனின் முக்கிய உதவியாளர்கள் என விவரிக்கப்படுபவர்கள், பெரும்பாலும் ஆப்கானிஸ்தானில் யுத்தத்தின் பொழுது எகிப்திய மற்றும் செளதி இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் இருந்து பெறப்பட்டவர்கள் ஆவர். சி.ஐ.ஏ அவர்களின் குடும்பங்களை, அவர்களின் பலவீனங்களை மற்றும் அவர்களின் தீயொழுக்கங்களை அறியும், மற்றும் அது அத்தகைய தகவல்களை தனிநபர்கள் சமரசம் செய்துகொள்ளப்பயன்படுத்தி, அதன் நோக்கங்களுக்காக ஒத்துழைப்பை உத்தரவாதப்படுத்துவதில் ஒருபோதும் எதிர்பார்ப்பு உடையதாக இருக்கவில்லை.

அது அங்கு பின் லேடனுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையில் உண்மையான மோதல் இல்லை என்று சொல்வதற்கு அல்லது அல் கொய்தா சாதாரணமான முன்னணி இயக்கம் என்று சொல்வதற்கு இல்லை. பயங்கரவாத குழுவால் வைக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் பற்றி அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒன்றும் தெரியாது என்ற கூற்றை நிராகரிக்க அத்தகைய சதிக் கொள்கையை வகுப்பது அவசியமில்லை. உலகின் மிகவும் விரிந்தகன்ற மற்றும் நன்றாக நிதியூட்டப்பட்ட உளவு நிறுவனம் அதன் முன்னாளைய பணியாளர்களைக் கொண்ட அமைப்பில் தடத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கூற்று: உத்தியோக ரீதியான தனிமுறைக் கருத்துப்பாங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாதது மற்றும் அதிகம் தட்டிக்கழிப்பானது.

தற்போதைய உத்தியோகபூர்வ புதிராக்கம் இருப்பினும், பின் லேடன் மற்றும் குழுவினர், சொல்வதானால், வட வியட்னாம் அல்லது வடகொரியா போன்ற ஸ்ராலினிஸ்டுகள் ஆளும் ஆட்சிகளை விடவும் மிகவும் அடைய முடியாத இலக்காக இருந்தனர். சி.ஐ.ஏ 1950 களில் இருந்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியில் தகவல் ஆதாரங்களை உருவாக்கி இருக்கின்றது. மேலும் --இஸ்ரேலைக் கூறவேண்டாம்-- குறைந்த பட்சம் எகிப்து, செளதி அரேபியா மற்றும் பாக்கிஸ்தான் உள்ளடங்கிய நட்புரீதியான உளவுத்துறை சேவைகள் --அவர்களின் சொந்தத் தொடர்புகளைக் கொண்டிருக்கக்கூடும்.

ஆத்திரமூட்டும் பங்காற்றுபவர் பாத்திரம்

அமெரிக்க இலக்குகள் மீதான ஆரம்பகால பயங்கரவாதத் தாக்குதல்கள், குறிப்பாக உலக வர்த்தக மையம் மீதான 1993 குண்டுத் தாக்குதல் மற்றும் கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்க தூதரகங்கள் மீதான 1998 குண்டுத் தாக்குதல்கள் இவற்றின் உள்ளடக்கத்தில் செப்டம்பர் 11 தாக்குதலை எண்ணிப்பார்த்தல் முக்கியமானது. அந்த இரு தாக்குதல்களிலும் அமெரிக்க ஆத்திரமூட்டாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர் என்பது தெரிய வந்திருக்கிறது. இது அமெரிக்க உளவுத்துறை அல் கொய்தாவை ஊடுருவ முடியவில்லை என்ற கூற்றுக்கள் மீது சந்தேகத்தை எழுப்புகிறது. மற்றும் இது அதேபோன்ற முகவர்கள் (ஏஜண்டுகள்) செப்டம்பர்11 உடன் தொடர்பு கொண்டிருப்பார்களோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

1993 உலக வர்த்தக மைய குண்டு வெடிப்பு தாக்குதலுக்காக மற்றும் நியூயோர்க் மாநகரத்தில் இலக்குகளைத் தகர்க்க அடுத்தடுத்த சதிக்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானில் சண்டையிட்ட முன்னாள் கொரில்லாப் போராளிகள் ஆவர். அவர்கள் அமெரிக்க, உளவுத்துறை முகவாண்மைகளுக்கு உதவி புரிபவர் என்ற மூடுதிரையில் அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். அவர்களுள் முன்னாள் எகிப்திய உளவு முகவர் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கான தகவலாள், எமாட் சலேம் ஒருவரும் ஆவார். எமாட் சலேம் நியூயோர்க் மாநகர பகுதியில் இலக்குகளில் குண்டுகளை வைப்பதற்கு திட்டமிட்ட பிரதான தூண்டுதலளித்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சலேமும் எப்.பி.ஐயும் 1991-92ல் சலேம் தகவலாள் ஆக தொழிற்பட்டிருக்கிறார் மற்றும் மீண்டும் 1993 ஏப்ரலில் இருந்து அல்லது இரட்டைக் கோபுரத்தின் துணைக்கீழ்த்தளப் பகுதியை அழித்த மற்றும் ஆறுபேர்களைக் கொன்ற 1993 மார்ச் குண்டுவெடிப்பை உண்மையாய் ஒழுங்கமைத்த காலப் பகுதியில் அல்லாமல், ஏப்ரலில் இருந்து தொழிற்பட்டிருக்கிறார். தனது தகவலாளால் தகவலளிக்கப்பட்ட எப்.பி.ஐ தாக்குதலைத் தடுத்து நிறுத்த எதையும் செய்யவில்லை என்பது பற்றி எழுப்பப்படும் கேள்விகளைத் தவிர்ப்பதற்கான தெளிவான முயற்சியாக அது இருந்தது.

1998 சம்பவங்களில், கென்ய குண்டுவெடிப்பு நடைபெறுவதற்கு இருவாரங்களுக்கு முன்னரே அமெரிக்க அரசாங்கம் முன்கூட்டிய எச்சரிக்கையைப் பெற்றது என்பது காட்டப்பட்டது. கடந்த ஆண்டு இந்த குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் வழக்கின்போது, அமெரிக்க அதிகாரிகள் எச்சரிக்கைகளை அச்சுறுத்தப்பட்ட தூதரக அலுவலர்களுக்கு அனுப்பவில்லை, இவ்வாறு அதிக இறப்பு எண்ணிக்கைக்கு இடமளித்தனர், சிறப்பாக குண்டு வெடித்தநேரத்தில் அங்கு இருந்த அல்லது அருகே இருந்த உள்ளூர் குடிமக்கள் மத்தியில் அதிக இறப்பை ஏற்படுத்தியது என்று பிரதிவாதி பாதுகாப்பு வழக்குரைஞர்கள் எடுத்துக்காட்ட முடிந்தது.

செப்டம்பர் 11 பற்றிய எச்சரிக்கைகளுள் குறைந்த பட்சம் ஒன்றான, இந்த தகவல் இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாத்திடம் இருந்துவந்தது. மேலும் கென்யா மற்றும் தன்சானியாகுண்டு வெடிப்புக்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவர் முன்னாள் பச்சைத் தொப்பி சார்ஜெண்ட்டும் சிறப்பு யுத்த ஆலோசகருமான அலி ஏ. மொகம்மது ஆவார். இவர் இன்னொரு முன்னாள் எகிப்திய பாதுகாப்பு அதிகாரி, இவர் முக்கிய தகவலாள்களுக்கு குடிஉரிமை அளிப்பதற்கான சி.ஐ.ஏ-ன் சிறப்பு வேலைத்திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்குள் கொண்டு வரப்பட்டவர். 1991 வளைகுடாயுத்தத்தின் காரணமாக மொகம்மது அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பிவிட்டார் என்று கூறப்பட்டாலும், அவர் 1995 இறுதிவரை அரசாங்க தகவலாள் ஆக சேவை செய்தார்.

1993 உலக வர்த்தக மைய குண்டு வெடிப்பு, கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் குண்டு வெடிப்பு மற்றும் அதே போன்ற தாக்குதல்களில் பங்கெடுத்தோருள் பெரும்பான்மையினர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக இருந்தனர் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு எப்படியோ எதிராகத்தாக்குதல் தொடுத்திருந்தனர் என்று நம்பினர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் முகவர்கள், இருபக்க முகவர்கள், ஆத்திரமூட்டும் முகவர்கள் இவர்களின் இருளார்ந்த உலகில், அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கங்களுக்கு சேவை செய்ய நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்--அது பயங்கரவாதத் தாக்குதலை- எல்லாவற்றுக்கும் மேலாக செப்டம்பர்11 தாக்குதலை-- வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதலை மேற்கொள்ளவும் ஆன ஒரு சாக்காகப் பயன்படுத்தி இருக்கிறது.

நோக்கம் அல்லது சாக்கு எதுவாக இருப்பினும் அவை அரசியல் ரீதியில் பிற்போக்கானவை. மேலும், வெகு ஜனங்களின் அரசியல் நனவை வளர்த்தெடுப்பதற்கான போராட்டத்துக்கு சிறு துளி சிறுபான்மையரின் ஆயுத நடவடிக்கையை பயங்கரவாதம் பதிலீடாகக் கொள்வதன் காரணமாக, சம்பந்தப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாய் பாசாங்கு காட்டுதல், மற்றும் அதில் ஊடுருவி அதனைக் கையாளுதல் ஏகாதிபத்திய முகவர்களைப் பொறுத்தவரை மிக எளிதானதாகும். இந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து, அமெரிக்க உளவுத்துறையால் அல் கொய்தாவை ஊடுருவ முடியவில்லை என்ற கூற்று நம்ப இயலாததாக இருக்கிறது.

சில ஆர்வமுள்ள தொடர்புகள்

ஒருவேளை செப்டம்பர் 11-ன் இருளார்ந்த அம்சங்கள் பின் லேடனுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் இடையில் உண்மையான தொடர்பை ஏற்படுத்துவதாகும். அவர் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சி.ஐ.ஏவின் சொத்தாக இருந்தவர்தான். அவர் செளதி கட்டுமான பில்லியனரின் (கோடீசுவரர்) பல டஜன் மகன்களுள் ஒருவர் ஆவார். அவரது குடும்பம் அமெரிக்காவுடன் நீண்டகால பிணைப்பைக் கொண்டிருக்கிறது, மற்றும் குறிப்பாக, ஜோர்ஜ் டபிள்யு. புஷ் குடும்பத்துடன் நீண்டகால பிணைப்பைக் கொண்டிருந்தது. (பின் லேடன்கள் கார்லைல் குழுமத்தில் முதலீட்டாளர்களாவர். அது பல பில்லியன் டொலர்கள் மூலதனம் கொண்ட நிறுவனம் ஆகும். அது தற்போதைய ஜனாதிபதியின் தந்தையான முன்னாள் ஜனாதிபதியை, மத்திய கிழக்கில் வர்த்தக பூரிப்பின் பொழுது அதிக சம்பளம் பெற்ற "rainmaker" ஆக பணியில் அமர்த்தியது. அவர்கள் நிறுவனத்தில் உள்ள அவர்களின் பங்குகளை செப்டம்பர்11 க்குப் பிறகு விற்றனர்.)

சரியாக 1996 இறுதிவாக்கில், ஒசாமா பின் லேடன் அமெரிக்காவை சவுதியைவிட்டு வெளியேற்றுவதற்கான தனது விருப்பத்தை அறிவித்த பின்னர், அவரை ஒப்படைப்பதற்காக சூடானின் முன்வருதலை அமெரிக்க அரசாங்கம் ஏற்கமுடியாதென்று அறிவித்தது. அமெரிக்க அதிகாரிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் பின் லேடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றம்சாட்டும் அளவுக்குப் போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று கூறினார்கள். 1998 தூதரகங்கள் மீதான குண்டு வெடிப்பிற்குப் பின்னர் கூட குடும்பத்தை பெயர் குறிப்பிடமுடிந்த சி.ஐ.ஏ ஆப்கானிஸ்தானில் கண்டுபிடிக்க வியப்பூட்டும் வகையில் கஷ்டப்பட்டிருந்தது.

கடந்த அக்டோபர் 31 அன்று, நாட்டின் மிகப் பழமைவாத பத்திரிக்கைகளுள் ஒன்றான பிரெஞ்சு செய்தித்தாள் Le Figaro- பின்லேடன் ஜூலை 4-14, 2001ல் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உள்ள துபாய் அமெரிக்க மருத்துவ மனையில், இரு வார கால தங்கலின் பொழுது சி.ஐ.ஏஅதிகாரிகளை சந்தித்து இருந்தார் என்று கூறும் பரபரப்பூட்டும் விஷயத்தை வெளியிட்டிருந்தது. அங்கு அவர் சிறு நீரக நோய்க்காக மருத்துவ சிகிச்சை எடுத்தார் என்றது.

இந்தச் செய்தி அமெரிக்க மற்றும் அரபுஎமிரேட்டுகளின் அதிகாரிகளால் முற்றிலும் மறுக்கப்பட்டது. அதனை சுதந்திரமாய் சரி பார்க்க வழி இல்லை. ஆனால் செய்தித்தாளானது நிச்சயமாக நன்னாறகத் தொடர்புடையதாக இருந்தது. அதன் பிரதான முதலீட்டாளர்களுள் கார்லைல் குழுமமும் அடங்கும், அது புஷ் குடும்பத்துடனும் பின்லேடன் குடும்பத்துடனும் நேரடித் தொடர்புடைய தனியார்பங்கு நிறுவனம் ஆகும்.

அமெரிக்க அரசாங்கத்திற்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இடையிலான உறவுகள் அமெரிக்க ஊடகங்களில் தோன்றுவது போல் அல்ல என்ற வேறுகுறிகாட்டல்களும் அங்கு இருக்கின்றன.

ஜூன் 2001ல் போலி கடவுச்சீட்டுடன் ஒரு டிராக்டரில் ஒளிந்து நியூயோர்க் எல்லையைக் கடக்கும்பொழுது, நயகரா நீர்வீழ்ச்சி அருகே பிடிபட்ட நபில் அல் மராப் என்பவரது வழக்கு ஒன்று அங்கு இருக்கிறது. அவர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்." ஒன்பது மாதங்களுக்கு முன்னால் அவர் அமெரிக்க உளவு முகவர்களிடம் அமெரிக்காவில் உள்ள ஒசாமா பின் லேடனின் இயக்கிகளுள் ஒருவர் என இனங் காணப்பட்டிருக்கிறார். அமெரிக்க சுங்கத்துறை முகவர்கள் மத்திய கிழக்கில் உள்ள ஒசாமா பின் லேடனின் தொடர்பாளருக்கு அவர் அனுப்பிய பணம் பற்றி அறிந்திருக்கின்றனர். அவர் நண்பர் ஒருவரை கத்தியால் குத்தியதற்காக முதல்முறை குற்றத்திற்கான நன்னடத்தைச் சோதனைக் காலத்தை மீறியதற்காக அவரை கைது செய்யவேண்டி போஸ்டன் போலீஸ் கைதாணை பிறப்பித்து இருந்தது. "அல்மராப் கனடாவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார், பின்னர் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் சிகாகோ அருகில் கைது செய்யப்பட்டார். அவர் கனடாவில் சிறையில் இருந்தவேளை, "மராப் தனது சிறை நண்பர்களிடம் தான் 'எப்.பி.ஐ-க்கு வேண்டப்பட்டவர்' என்று செருக்குடன் கூறியுள்ளார்." ( New York Times, October 5, 2001)

செப்டம்பர் 24 அன்று நியூஸ்வீக் இல் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அவ்வார இதழானது செப்டம்பர் 10 அன்று "பென்டகன் உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அடுத்த நாள் காலை திடீரென்று பயணத்திட்டங்களை விலக்கிக் கொண்டனர், இது வெளிப்படையாக பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆகும் " என்று செய்தி வெளியிட்டிருந்தது. இது அமெரிக்க அரசின் சில உயர் மட்டத்தினர் உடனடியாக நிகழப்போகிற ஆபத்துபற்றி மட்டுமல்லாமல் அது நிகழப்போகின்ற நேரத்தையும் கூட துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்று கருத்துரைக்கிறது. பிரதான அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த அறிக்கையைப் பின் தொடரவில்லை என்பதைக் கூறத் தேவை இல்லை.

செப்டம்பர் 23 அன்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், முதல் பக்கத்தில் இரட்டைத் தலைப்புக்களின் கீழ் இடம்பெற்ற கட்டுரை தொடர்பாக ஒருவர் என்ன செய்வது: "விசாரணையாளர்கள் பின் லேடனுடன் தொடர்பு கொண்ட 4 லிருந்து 5 வரையிலான குழுக்கள் அமெரிக்காவில் இயங்குவதாக அடையாளம் கண்டனர். 19 விமானக் கடத்தல்காரர்களுக்கும் 'செல்' உறுப்பினர்களுக்கும் இடையில் தொடர்பு இல்லை, அதிகாரிகள் அறிவிப்பா?"

எப்.பி.ஐபல அல் கொய்தா குழுக்கள் "கடந்த பல ஆண்டுகளாக" அமெரிக்காவில் இயங்குகின்றனர் என்று கூறியதாக கட்டுரை குறிப்பிடுகிறது. ஆனால் அவர்களுக்கும் செப்டம்பர் 11 தாக்குதலை நடத்திய 19 விமானக் கடத்தல்காரர்களுக்கும் இடையில் தொடர்பு கண்டறியப்படவில்லை. ஒசாமா பின் லேடன் தற்கொலை விமானக் கடத்தல்களுக்குப் பொறுப்பு என்பதை வைத்து உறுதிப்படுத்தி முழு அமெரிக்க இராணுவமும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செய்த பிரச்சாரத்தை எடுத்துக் கொண்டால், இது வியப்பூட்டும் ஒப்புக்கொள்ளல் ஆக இருக்கிறது. கட்டுரை தொடர்கிறது:

"எப்.பி.ஐ எந்த கைதையும் செய்யவில்லை ஏனென்றால் குழு உறுப்பினர்கள் சமீப ஆண்டுகளில் நாட்டிற்குள் சட்டரீதியாக நுழைந்துள்ளனர் மற்றும் அவர்கள் வந்த பின்னர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

"அரசாங்க அதிகாரிகள் செல்கள் ஏன் இங்கு இருக்கின்றனர், அவர்களின் நோக்கம் என்ன அல்லது அவர்களின் உறுப்பினர்கள் தாக்குதல் எதனையும் திட்டமிடுகிறார்களா எனத் தமக்குத் தெரியாது என்று கூறுகின்றனர். மற்றவர்கள் அதிகமான அளவு கெட்ட அர்த்தத்தைக் கொண்டிருத்ததுடன் பொதுமக்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக உறுதிப்பாடுகள் கொடுத்தபோதும், ஒரு அதிகாரி அவர்களது வருகையை 'சாத்தியமான வகையில் ஏதும் இல்லாதது' என்று கூட விவரித்தார்."

இங்கு மனம் சந்தேகங்களை எழுப்புகிறது: வேறு எதற்காகவும் அன்றி தங்களின் தேசிய மூலம் மற்றும் மதத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான அரபு அமெரிக்கர்கள் மற்றும் முஸ்லிம் அமெரிக்கர்கள் நாடுமுழுவதும் வலைவிரித்து, சுற்றி வளைக்கப்பட்டு கேள்விக்குள்ளாக்கப்படுவதற்கு மத்தியில், எப்.பி.ஐ ஆனது தலைநகரில் பிரதான செய்தித்தாள்களிடம், ஒசாமா பின் லேடனுடன் ஒத்துழைத்து இயங்குபவர்கள் எனத் தெரிந்தவர்களை, அவர்கள் அமெரிக்கா வந்ததன் பின்னர் இருந்து தவறு எதையும் செய்யாததன் காரணமாக தாம் கைது செய்யவில்லை என்று கூறியது. கிட்டத்தட்ட 3000 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்னரும் அவர்களது வருகையைப் பற்றிக் குறிக்கையில் "ஏதும் இல்லாத" என்று வியப்பூட்டும் பெயருரிச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

போஸ்ட் கட்டுரையானது போப் உட்வர்ட் மற்றும் வால்ட்டல்ர் பிங்கஸ் ஆகியோரால் கூட்டாக எழுதப்பட்டது. அதன் உண்மைகள் அதன் முக்கியத்துவத்தைக் கூட்டுகின்றன. வாட்டர் கேட் ஊழல் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு உட்வர்ட் பற்றி அறிமுகப்படுத்தத் தேவை இல்லை. அவர் அமெரிக்க வரலாற்றிலேயே பெரும்பாலான புகழ்பெற்ற செய்திக் கசிவுகளைப் பெற்றவர். வாட்டர்கேட்டில் நிக்சனின் நடவடிக்கைகளைப் பற்றிய உள்தகவல்களை பெறும் வகையில் "ஆழமான தொண்டை" யை உட்வர்ட் ஒலிப்பதிவு செய்தார். அவர் யாரென்று ஒருபோதும் இனம்காட்டப்படவில்லை, ஆனால் அவர் தேசிய பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஒரு உயர் அதிகாரி என நம்பப்படுகிறது. வாட்டர் பிங்கஸ் சி.ஐ.ஏ மற்றும் பெண்டகனை செய்திக் கவனத்தில் கொள்ளும் போஸ்டிற்கான தேசிய பாதுகாப்பு பற்றிய செய்தியாளர் ஆவார். அவர் 1960களில் தேசிய மாணவர் மன்றத்தின் உறுப்பினராக, ஒரு சி.ஐ.ஏ இயக்கியாக பணி ஆற்றி இருக்கிறார். இந்த உண்மை தசாப்தவருடங்கள் கழித்தே தெரிய வந்தது.

இவ்விரு தனிநபர்களினால் எழுதப்பட்ட கட்டுரை, வாஷிங்டன் போஸ்ட் முன்பக்க வெளியீடானதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கொண்டால், அது ஒசாமா பின் லேடனுடனான அமெரிக்க உளவுத்துறையின் உறவானது தற்போது செய்தி ஊடகங்களில் மேலாதிக்கம் செய்கின்ற பிரச்சாரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதை விடவும் மிகச் சிக்கலானது என்று அமெரிக்க உளவுத் துறையால் செய்யப்பட்டபாதி உத்தியோகரீதியான மறைக்குறிப்பு என்பது புரிந்து கொள்ளப்பட முடியும்

( தொடரும்.....)

பார்க்க:

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி 1: முன்கூட்டிய எச்சரிக்கைகள்

அமெரிக்க அரசாங்கம் செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கை செய்யப்பட்டதா?
பகுதி 2: விமானக் கடத்தல்காரர்களைக் கண்காணித்தல்