World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

An interview with a supporter of the Stalinist Palestinian Peoples Party

ஸ்ராலினிச பாலஸ்தீனிய மக்கள் கட்சியின் ஆதரவாளருடன் ஒரு நேர்காணல்

4 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

மேற்குக் கரையில் உள்ள 37 வயதான அபெத் எனும் இளைஞர் ஸ்ராலினிசக் கட்சியான, பாலஸ்தீனிய மக்கள் கட்சியின் (PPP) ஆதரவாளர் ஆவார். அவரது உண்மையான பெயரை வெளியிட வேண்டாம் என அவர் எம்மை கேட்டுக் கொண்டார். அவர் ஒரு வேலையில்லாத பல்கலைக் கழக கல்வியாளர். ஊர்வலம் தொடர்பான அவரது எண்ணத்தையும் பாலஸ்தீனியர்கள் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலை மீதான அவரது கருத்துக்களையும் பற்றி நாம் அவரிடம் கேட்டோம். நிகழ்ச்சிகள் பற்றிய அவரது விளக்கத்தில் நிற்பது என்னவெனில் எவ்வாறு எதிர்ப்பானது பாலஸ்தீனிய நிர்வாகத்துக்குள்ளே அடிப்படையாக இருக்கும் வர்க்கப் பதட்டங்களுக்கு வெளிப்பாட்டை வழங்கியது என்பதாகும், அது பாலஸ்தீனிய மக்கள் கட்சி மற்றும் ஏனைய பகட்டு வெளிப்பாடான இடது வடிவங்களால் வர்க்கப் போராட்டம் தேசியப் போராட்டத்துக்கும் பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் கட்டாயம் கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்று நசுக்கப்பட்டு வருகின்றது.

அரபாத்துக்கு அரசியல் விசுவாசம் மூலமாக மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர் வர்க்கம் அதன் சொந்த சோசலிச இலக்குகளை அடைய, முதலாளித்துவ அரசை நிறுவும் வரைக்கும் கட்டாயம் காத்திருக்க வேண்டும் என அபெட் வலியுறுத்தினார். இதில் சோசலிசத்திற்கான போராட்டத்திற்கான எதிர்ப்பில் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுதந்திரம் இவற்றுக்கான எதிர்ப்பில், உலகரீதியாக ஸ்ராலினிசக் கட்சிகளால் வரலாற்று ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாட்டை -மக்கள் முன்னணிவாதத்தை மற்றும் இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தை: முதலாளித்துவத்துடனான கூட்டில் மற்றும் முதலாளித்துவத்தின் கீழ், முதலில் தேசிய விடுதலைக்கான போராட்டம், பின்னரே சோசலிசத்துக்கான போராட்டம் என்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்துகின்றார். இந்த வகையில் பாலஸ்தீனிய மக்கள் கட்சி தொழிலாள வர்க்கத்தின் சுதந்திரமான நடவடிக்கையினை நெரித்து விடுவதற்கு சேவை செய்யவும் இந்த பிராந்தியம் முழுவதும் உள்ள அரபு தொழிலாள வர்க்கத்தை தங்களின் யூத சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சோசலிச இயக்கத்தின் அபிவிருத்தியைத் தடுக்கவும் சேவை செய்கின்றது.

அபெட்: எல்லாவற்றுக்கும் முதலில், நான் எனக்காகப் பேசுகிறேன் எனது கட்சியின் சார்பாகப் பேசவில்லை. இரண்டாவது, இஸ்ரேலில் உள்ள பலர் நாங்கள் அரபாத்திற்கு எதிரானவர்கள் என நினைக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அதை தெளிவாகக் கூறுவேன்: நாங்கள் அரபாத் தலைமைக்கு எதிரானவர்கள் அல்லர், மாறாக சமூக- பொருளாதார மட்டத்தில் அவரின் கொள்கைக்கு எதிரானவர்கள். அரபாத்தை விமர்சிப்பது என்பது அவரது தலைமையை எதிர்ப்பதிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.

எனது கண்ணோட்டத்தில் ஆர்ப்பாட்டமானது, பாலஸ்தீனிய தொழிலாள வர்க்கத்தின் வெற்றிகரமான அணிதிரட்டலாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட்டாக, எனது மக்களின் சமூக விடுதலையை நான் ஆதரிக்கிறேன், மற்றும் அது எமது தேசிய விடுதலையைப் பெற்றதன் பின்னராக இருக்கும். இதற்கிடையில், நாம் ஜனநாயகத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது பிரதிநிதி சமூகக் கோரிக்கைகளுடன் ஒரு கடிதத்தை காசாவின் தலைவரான தாயெப் அபெட் எல்-ரஹிமிடம் அளித்தார். இன்னொருவர் பாலஸ்தீனிய தொழில் துறை அமைச்சகத்தில் மற்றும் பாலஸ்தீனிய தொழிலாளர் சங்கங்களின் இயக்கத்தில் (OPWP) உள்ள அதிகாரிகளைச் சந்தித்தார்.

உசோவத: தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரபாத்தின் விருப்பத்திற்கு காரணம் என்ன?

அபெட்: மக்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதை எமது தலைவர்கள் புரிந்துகொள்கிறார்கள் மற்றும் எம்மிடையே உள்நாட்டு யுத்தத்தைத் தவிர்க்க விரும்புகிறார்கள் என நான் நம்புகிறேன். வேலையின்மைக்கான நிதி உதவிகளை பெரும்பாலும் பெறக்கூடிய தொழிலாளர்களின் பெயர்களை அரபாத் வெளியிட்டார். எங்களது கோரிக்கை அச்சுறுத்தல் அல்ல மாறாக ஒரு மாற்றத்திற்கான அழைப்பு என நாம் கூறுகின்றோம்.

உசோவத: அரபாத் தொடர்பாக தொழிலாளர்களால் உணரப்பட்ட கோபம் நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதைவிடவும் ஆழமாக செல்கிறதாக நான் உணர்வைக் கொண்டிருக்கிறேன். மக்கள், தொழிலாள வர்க்கத்திற்கான தலைமையைப் பெற விரும்புகிறார்கள் மற்றும் பழைய பாலஸ்தீனிய முதலாளித்துவ தலைமையிலிருந்து விடுபட விரும்புகிறார்கள்.

அபெட்: நீங்கள் அப்படிக்கூறுவதன் மூலம் இறுதியில் நீங்கள் அரபாத்தைத் தூக்கிவீசும் இஸ்ரேலிய- அமெரிக்கப் பணிக்கு சேவை செய்கின்றீர்கள். இந்தக் கட்டத்தில், அவர் எமது தலைவர்.

உசோவத: அது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷால் ஆதரிக்கப்படும், ஏகாதிபத்திய ஆதரவு கைப்பொம்மைத் தலைமையால் அரபாத்தை பதிலீடு செய்வதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு நாங்கள் முற்று முழுதாக எதிராக இருக்கின்றோம். ஆனால் சமூக மற்றும் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு உண்மையான தொழிலாள வர்க்கத் தலைமை வெற்றிக்கான முன் நிபந்தனையாக இருக்கிறது.

அபெட்: நாங்கள் மிகவும் ஆரம்பக் கட்டத்திலே இருக்கின்றோம் என நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்; எமது தேசிய விடுதலை எமக்குத் தேவையாக இருக்கிறது. நான் சோசலிசத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் ஆனால் இஸ்ரேல் யுத்தக் குற்றங்களை இழைத்துக் கொண்டிருக்கும் பொழுது மற்றும் ஜெனின் அகதி முகாமில் பத்துக்கணக்கான பேர்களை படுகொலை செய்த பொழுது நீங்கள் எப்படி சோசலிசத்தைப் பற்றி விவாதிக்க முடியும்?

உசோவத: ஹாரெட்ஸ் நாளிதழ் ஜூன் 2 அன்று, தொழிலாளர்கள் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புக்கள் கலந்தாலோசனை செய்தனர், மற்றும் ஒரு NGO 12 நாட்களுக்கு முன்னர் சிறிய, சோதனை அடிப்படையிலான ஆர்ப்பாட்ட ஊர்வலத்திற்காக நிதி வழங்கியது, மற்றும் ஒன்று நேற்று நடந்த ஊர்வலத்தில் பதாகைகளுக்கு பணம் அளித்தது என்று செய்தி வெளியிட்டது. ஹாரெட்ஸ் , "இருப்பினும், இந்த அமைப்புக்களின் உறுப்பினர்கள் பதாகைகளின் உள்ளடக்கம் பற்றி ஆணையிடாது மற்றும் செல்வாக்கை பயன்படுத்தாது எச்சரிக்கையாக இருந்தனர்" என வலியுறுத்தியது. தற்போதைய இயக்கம் குரோதமான நலன்களுக்கு சேவை செய்ய ஏற்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்ற ஐயத்திற்கிடமில்லா எச்சரிக்கை இருக்கிறது. வெளியார் செல்வாக்குகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனவா?

அபெட்: நான் அதனை உறுதிப்படுத்தவோ அல்லது அதனுடன் முரண்படவோ விரும்பவில்லை. இது எனது வேலை அல்ல; நான் எந்தவித உத்தியோக ரீதியான பாத்திரத்தையோ அல்லது முன்னணிப் பதவியையோ வகித்துக்கொண்டிருக்கவில்லை. இருப்பினும், பரந்த எதிர்ப்பைக் கொண்ட, மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம், போதும் போதுமென்றாகிவிட்டது என கூறுவதற்காக சென்றது என்பதை நான் கட்டாயம் கூறவேண்டும். நாம் எமது தலைவரிடம் கூறுகிறோம்: ஆம், நாம் உம்முடன் இருக்கின்றோம், ஆனால் சுல்த்தாவில் (அராபிய மொழியில் பாலஸ்தீனிய நிர்வாகம்) ஒழுங்கை ஏற்படுத்தாமல் உங்களுக்கான ஆதரவை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது.

உசோவத: ஆனால் அரபாத்தால் உருவாக்கப்படும் எந்த ஒழுங்கும் பாலஸ்தீனிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு மட்டுமே சேவை செய்யும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அபெட்: என்ன முதலாளித்துவம்? தனியார் மயமாக்கல் அல்லது தேசியமயமாக்கல் பிரச்சினைகளை அணுகுவதற்கு எம்மிடம் குறைந்த பட்ச மூலதனமும் இல்லை. அரபாத் ஆளும் தட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் ஆனால் அதேவேளை எமது வரலாற்று தலைமையையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

உசோவத: நீங்கள் சொல்வது என்னவெனில் எதிர்ப்பு எவ்வளவு பெரிதாக இருப்பினும் பரவாயில்லை, அது தேசிய முதலாளித்துவத்திற்கு கீழ் தொடர்ந்தும் இருக்கவேண்டும் என்பதுதானே?

அபெட்: ட்ரொட்ஸ்கி அல்லது ட்ரொட்ஸ்கிசம் பற்றிய விவாதத்தில் ஈடுபட நான் விரும்பவில்லை, ஆனால் எமது யதார்த்தம் பற்றி மீண்டும் சிந்தித்துப் பார்க்குமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். புரட்சி பற்றி பேசுவதற்கு முன்னர் அல்லது "இப்பொழுது சோசலிசம்!" என முழங்குவதற்கு முன்னர், ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட எமது சொந்த பாலஸ்தீன அரசை நாம் பெறுவதற்கான எமது உறுதியான கோரிக்கையுடன் பக்கமாக "அமைதி இப்பொழுது" என நாம் கட்டாயம் கோரவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கவில்லையா? மற்றும் அகதிகள் திரும்புவதற்கான உரிமையைக் கோரவேண்டும் என நீங்கள் சிந்திக்கவில்லையா? பிற்பாடு, நாம் சோசலிசத்தைப் பற்றி விவாதிப்போம்.

உசோவத: இயக்கத்தைப் பற்றி மீண்டும் பேசுவோம். உங்களது கட்சி, பாலஸ்தீனிய தலைமையில் உங்களது பங்கேற்புக்கு ஒரு பக்கமாக, தொழிற்சங்கங்களில் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றுகிறது. இன்று ஹாரெட்ஸ் நாளிதழில், ஆசிரியர்களும் மருத்துவர்களும் தங்களின் குறைந்த சம்பளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பொழுது, பாலஸ்தீனிய நிர்வாகமானது அவர்களை தொழிற்சங்கத்தில் உள்ள அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என கூறப்படுவோரிடம் வேண்டுகோள் விடுக்குமாறு ஆணையிட்டது. ஆனால் தொழிற்சங்கங்களின் தலைவர்களது சம்பளங்கள் பாலஸ்தீனிய நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. அவர்களின் அடிப்படை விசுவாசம், பாலஸ்தீன நிர்வாகத்துக்கே அன்றி தொழிலாளர்களுக்கு அல்ல.

அபெட்: ஊழலானது தொழிற்சங்கங்கள் மத்தியிலும் முழு பாலஸ்தீனிய நிறுவனத்திலும் பரவி இருந்தது. இதனால்தான் நாம் இந்த ஊழலுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும் எதிரான எமது போராட்டத்தில் எம்மைப் பலப்படுத்தும் எமது சமூக மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு இதுதான் தருணம்.

இந்த எதிர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றது; 1933க்குப் பின்னர், தொழிலாளர்களின் சுதந்திரமான இயக்கத்தின் எந்தவிதமான வெளிப்பாடும் இருக்கவில்லை. உண்மை என்னவென்றால் அது, பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி அல்லது பாலஸ்தீன ஜனநாயக விடுதலை முன்னணி போன்ற அரபாத்தின் எதிர்க்கட்சி அணியினரால் ஒழுங்கு செய்யப்பட்ட அரசியல் எதிர்ப்பு அல்ல - ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிகாத் கூட சம்பந்தப்படவில்லை. எமது எதிர்ப்பு அரபாத்துக்கு மட்டுமல்லாமல் இந்திப் பிராந்தியத்தில் உள்ள ஏனைய ஆட்சியாளர்களுக்கும் கூட ஒரு தெளிவான செய்தியை: தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளுக்காக எழுந்து நிற்பர் என்பதை விடுத்திருக்கிறது என நான் நம்புகிறேன். இந்த எதிர்ப்பு நசுக்கப்பட்டிருந்தால், பாலஸ்தீனிய மக்கள் தங்களின் சகோதரர்களைப் பாதுகாத்திருப்பார்கள்.

உசோவத: இந்த புதிய அபிவிருத்தியில் ஒரு புரட்சிகர சாத்தியம் இருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?

அபெட்: அளவுக்கு மிஞ்சிய ஆரம்ப நிலையில் இருக்கின்றமையால் எதையும் சொல்லமுடியவில்லை. இந்தப் போராட்டம் எம்மைப் பிளவுபடுத்தும் என இஸ்ரேல் நினைக்குமாயின், அது பெரும் தவறைச் செய்கிறதாக இருக்கும். அது விடுதலைக்கான எமது போராட்டத்தில் எம்மைப் பலப்படுத்த மட்டுமே செய்யும். விடுதலைக்கான உறுதியான போராட்டத்தின் பக்கமாக சமூக சீர்திருத்தங்கள் எம்மை, ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நோக்கி இட்டுச்செல்லும். தற்போதைய மாற்றங்கள் கட்டாயம் அரபாத் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் என நான் நம்புகிறேன், மற்றும் இஸ்ரேல் அவரை அகற்ற முயற்சிக்குமாயின் நாம் இஸ்ரேலை அகற்றுவோம்.

உசோவத: அவர்களுக்கு வேலைகளை கொடுப்பதன் மூலம் எதிர்ப்பின் தலைவர்களை வாங்குவதற்கு ஏற்கனவே முயற்சிகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே.

அபெட்: அதனால் என்ன? ஒவ்வொரு முதலாளித்துவ சமுதாயத்திலும் அது கிட்டத்தட்ட விதியாக இருக்கிறது. எமது தலைவர்கள் இந்த லஞ்சங்களை வாங்க மறுத்தார்கள்.

உசோவத: எதிர்காலம் பற்றி என்ன?

அபெட்: நீங்கள் முன்னர் வலியுறுத்தியவாறு, தொழிலாளர்களின் தலைமைக்கான தேவை அங்கே இருக்கிறது. நாம் எமது சொந்த அரசைப் பெற்ற பின்னர், அது நிகழ்ச்சிநிரலில் இருக்கும் என நான் நம்புகிறேன். எமது எதிர்காலம் சோசலிச சமுதாயத்தில்தான் இருக்கிறது. அரபாத் ஒரு சோசலிஸ்ட் என நான் எண்ணவில்லை, ஆனால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைத் தோற்கடிப்பதற்கான போராட்டத்தில் நாம் ஐக்கியப்பட்டு இருக்கின்றோம்: 1967-ன் எல்லைகளில், எமது தேசத்தைப் பெறும் வரை எதிர்ப்புப் போராட்டம் முன்னே செல்லும்.

உசோவத: இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்காக ஏதாவது முன்னோக்கு உங்களிடம் இருக்கிறதா?

அபெட்: "இஸ்ரேலி" என்று நீங்கள் கூறும்பொழுது யாரை அர்த்தப்படுத்துகிறீர்கள்? யூதர்களையா? அரபுகளையா? இஸ்ரேலில் இரண்டு தேசங்கள் இருக்கின்றன. இஸ்ரேலியர்கள் தங்களின் இரத்தம்தோய்ந்த தலைமையைத் தூக்கி எறிவார்களாயின், இரண்டு தேசங்களும் ஒரு பொதுவான எதிர்காலத்தைக் கொண்டிருக்கும் என நான் நம்புகிறேன். எனது இறுதி தீர்வு நிச்சயமாக ஒரே சோசலிச அரசு. ஆனால் அதுவரைக்கும், ஒரே யதார்த்தமான தீர்வு இரு அரசுகளாக: இஸ்ரேல் பக்கமாக பாலஸ்தீனம் என இரட்டை தேசங்களாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

See Also :

காசாவில் வேலைகள் கோரி பாலஸ்தீனியர்கள் ஊர்வலம்

இஸ்ரேலிய மறுப்பாளருடன் நேர்காணல்: "நாங்கள் ஒரு புதிய தலைமையை அமர்த்துவோம்"

Top of page