World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Sharon's latest war crime: Gaza missile attack kills 15

ஷரோனின் அண்மைய யுத்தக்குற்றம் : காஸா மீதான ஏவுகணைத் தாக்குதல் 15 பேரை பலிகொண்டது

By Chris Marsden and Jean Shaoul
24 July 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஜூலை 23 ம் திகதி காலை காஸாவின் குடியிருப்பு பகுதி ஒன்றின் மீது நடாத்தப்பட்ட இஸ்ரேலிய ஏவுகணைத்தாக்குதலில் ஒன்பது சிறுவர்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் இயக்கத்தின் இராணுவத் தலைவரான Sheikh Salah Shahada இத்தாக்குதலின் இலக்காவார்.

மரணமடைந்த சிறுவர்களின் வயது 2 மாதத்திற்கும் 13வருடத்திற்கும் இடைப்பட்டதாக உள்ளதாக அறிவுக்கப்பட்டுள்ளது.

அப்பாவி ஆண்கள், பெண்கள், சிறுவர்களின் உயிரை முற்றாக கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாத அதனது உறுதிப்படுத்தப்பட்ட அரசியல்கொலை கொள்கையை பாரியளவில் விரிவுபடுத்தியுள்ள இஸ்ரேலின் அண்மைய யுத்தக் குற்றங்களால் 145 பேர் காயமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் பலர் கட்டிட சிதைவுகளுக்குள் புதையுண்டிருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலின் நடவடிக்கையினால் இன்னும் 7 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்தாக்குதலை தொடர்ந்்து உருவாகிய ஆத்திரத்தினால் பாலஸ்தீனியர்களுக்கும், Gush Katif எனப்படும் யூதக் குடியிருப்பில் காவலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 2 பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.

13 பாலஸ்தீனிய தேசியவாத, இஸ்லாமிய பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் குழு இறந்த 15 பேருக்கான ஒன்றிணைந்த மரணச்சடங்குக்கு அழைப்புவிட்டது. இதற்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அணிதிரண்டதுடன், பலர் துப்பாக்கிகளுடனும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேலிய பிரதமரான ஆரியல் ஷரோன் இத்தாக்குதல் மீதான விமர்சனத்தை நிராகரித்ததுடன், இது ஒரு ''பாரிய வெற்றி'' என கூறியுள்ளார். இதேவேளை வெளிநாட்டு அமைச்சரான கிடியோன் மியர் ''நாம் செய்வது சுபாதுகாப்பு'' எனக் குறிப்பிட்டார். இன்னொரு அரசாங்க பேச்சாளர் Sheikh Salah Shahada ''ஆயிரம் பேரின் மரணத்திற்கு'' காரணமாக கூடிய பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக கூறியுள்ளார்.

இக்கொடும் செயலுக்கு முன்னராக, இஸ்ரேலிய படைகள் மேற்குகரையிலிருந்தும், காஸாவிலிருந்தும் வாபஸ் பெறும்பட்சத்தில் தனது தற்கொலை தாக்குதல் பிரச்சாரத்தை நிறுத்துவது தொடர்பாக ஹமாஸ் இயக்கம் கலந்துரையாடியது தொடர்பாக தெளிவான சமிக்கைகள் காணப்பட்டன.

இதற்கு முந்திய நாள் அன்று, ஜூலை 22ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தின் நிறுவனரும், தலைவருமான Sheikh Ahmed Yassin,'' இஸ்ரேல் மேற்குகரை நகரங்களில் இருந்்து இராணுவத்தை வாபஸ் பெறும் பட்டசத்தில் தனது இயக்கம் தற்கொலைத் தாக்குதல்களை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கும் எனவும், உங்களது ஆக்கிரமிப்பையும், வீடுகளை அழிப்பதையும் நிறுத்துங்கள். கைதிகளை விடுவித்து கொலைகளை நிறுத்துங்கள். எம்மக்கள் மீதான ஆக்கிரமிப்பும் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படின் ஒரு சாதகமான வழியில் நாம் மாவீரர்களாகும் நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக ஆராயத்தயார்'' என குறிப்பிட்டார்.

தற்போது ஹமாஸ் பழிவாங்கல் தொடர்பாக எச்சரித்துள்ளது.

பாலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை பின்வாங்குவதை உறுதிப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகளை இஸ்ரேல் குழப்புவதற்கு சதிசெய்வதாக குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலிய தாராளவாத பத்திரிகையான Haaretz, பாலஸ்தீனிய உள்நாட்டு அமைச்சரான Abdel Razek Yehiyeh இஸ்ரேலிய வெளிநாட்டு அமைச்சரான சிமோன் பெரஸிடம் பாலஸ்தீனிய இன்டிபாடா ஆரம்பிப்பதற்கு முன்னர் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளை கொண்ட சகல 7 நகரங்களிலிருந்தும் முற்றுமுழுதாக வாபஸ் பெறப்படும் பட்சத்தில் தற்கொலை தாக்குதல்களை நிறுத்த உறுதியளித்தது தொடர்பான ஒரு பாதுகாப்பு அறிக்கை பற்றி குறிப்பிட்டுள்ளது.

ஷரோன் மீண்டும் ஒருதடவை பாலஸ்தீனியர்களின் மாற்றத்திற்கு பயங்கரவாத ஆத்திரமூட்டல்கள் மூலம் பதிலளித்துள்ளார். இது அண்மைக்காலத்தில் முதலாவது தடவை அல்ல.

கடந்த ஜூலை 19ம் திகதி வெள்ளிக்கிழமை, தற்கொலைத் தாக்குதல்களை ஒழுங்குசெய்ததாக இஸ்ரேல் குற்றம்சாட்டும் 2 போராளிகளின் உறவினரான 21பேரை பாதுகாப்புபடையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களை ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் சிறையாக மாறியுள்ள மின்சாரவேலிகளால் சூழப்பட்ட காஸா பிரதேசத்திற்கு மேற்குகரையிலிருந்து நாடுகடத்தப்போவதாக அறிவித்தது. கைதுசெய்யப்பட்டுள்ள 21 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை.

9 பேர் மரணமான ஜூலை 16ஆம் திகதி இம்மானுவேல் குடியிருப்பில் பஸ் இன் மீது தாக்குதல் நடாத்தியதாக ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த Nasser al-Din மீதும், 3 பேர் மரணமான ஜூலை 17ஆம் திகதி டெல் அவீவ் இல் இரட்டை தற்கொலைத்தாக்குதல் நடாத்தியதாக பாத் இயக்கத்தின் அல் அக்ஸா படைப்பிரிவை சேர்ந்த இராணுவ வீரனான Ali Ahmad al-Ajouri மீதும் இஸ்ரேல் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தேடப்படும் இவ்விருவரும் மறைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.

இஸ்ரேலிய இராணுவம் இவ்விருவரினதும் வீட்டை அழித்துள்ளதுடன், அயலிலுள்ள வீடுகள் பாரிய சேதத்திற்குள்ளாகியதால் பல டசின் மக்களை வீடற்றவராக்கியுள்ளது. இதனை பாதுகாப்பு காரணங்களுக்காக என நியாயப்படுத்தியுள்ளனர்.

B'Tselem மனித உரிமைக்குழு 1967 இருந்து 1992 வரை இஸ்ரேல் 1522 பாலஸ்தீனியர்களை நாடுகடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எவ்வாறிருந்தபோதிலும், தமது உறவினரின் நடவடிக்கைகளுக்கு சம்பந்தமற்ற ஐயுறவிற்குரிய பயங்கரவாதிகளின் குடும்பங்களை முதல் தடவையாக நாடுகடத்து முயல்கின்றது.

இந்நடவடிக்கை ஐக்கிய நாடுகளின் செயலாளரான கொபி அனான் மற்றும் அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரான றிச்சன் பெளச்சர் உட்பட உலக கண்டனத்தை இஸ்ரேல் எதிர்நோக்கியுள்ளது. ஆனால் தொழிற்கட்சியின் சிமொன் பெரஸ் இதற்கான தனது ஆதரவை வழங்கியுள்ளார். அவர் இதனை குண்டுகளுக்கு ''ஆதரவான சூழ்நிலையை'' உருவாகுவதை மறுப்பது என நியாயப்படுத்தியுள்ளார்.

ஷரோன் இந்நாடுகடத்தலை தொடர்ந்தால் தாம் ''இஸ்ரேலில் சகல இடத்திலும்'' தொடர்ந்த தற்கொலைத்தாக்குதலை நடாத்தப்போவதாக ஹமாஸும், இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் பதில் தாக்குதலுக்கு பயமுறுத்தியுள்ளன.

இக்கருத்துக்களின் மத்தியில், சட்டமா அதிபரான Elyakim Rubinstein ''தடுத்து வைத்திருப்பவர்களுக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தொடர்பு இருக்கும் பட்சத்திலேயே அரசாங்கம் பயங்கரவாதிகளின் உறவினரை அல்லது அவர்களின் கமாண்டர்களை நாடுகடத்து முடியும் '' என தெரிவித்துள்ளார். அதாவது சட்டமுறைகள் ஒழுங்கமைக்கும் வரையிலாகும். இது ஜூலை 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 21பேரையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையான Shin Bet 12 மணித்தியால அவகாசம் மட்டும் வழங்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பெறப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் அவர்களை நாடுகடத்த சட்டமா அதிபரின் சமாளிப்பானது ஷரோனுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதே நாளன்று, சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு பணிந்து போன்று ஷரோனின் அரசாங்கம் பாலஸ்தீனியர்களும் ஜோர்டானியர்களும் உள்ளடங்கலாக சட்டவிரோதமான 50,000 வெளிநாட்டு தொழிலாளர்களை 12 மாதங்களுக்குள் நாடுகடத்துவதை உடனடியாக ஆரம்பிக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டது. 150-200 வரையிலான பொலிஸார் அடங்கிய விஷேட பிரிவு ஒன்றுடன் உருவாக்கப்பட்டு, பின்னர் அதனுடன் ''குடியகல்வு அதிகாரிகளும்'' உள்நாட்டு அமைச்சால் உள்ளடக்கப்பட்டு 2005 இற்கிடையில் 100,000 சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை நாடுகடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனது ஒவ்வொரு கொடுமையான நடவடிக்கைகளையும் இஸ்ரேல் அவை தற்கொலைத் தாக்குதலுக்கு எதிரான பதிலடி அல்லது தனது ''பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்குகான'' நடவடிக்கை என கூறுகின்றது. ஜூலை 22ஆம் திகதி Washington Post பத்திரிகையில், Jackson Diehl என்பவர் ''இத் தற்கொலைத் தாக்குதலானது மேற்குகரையிலும் காஸாப்பிரதேசத்திலும் அண்மையில் ஷரோனால் அமைக்கப்பட்ட யூத குடியேற்றங்களை ''அடைகாத்து பாதுகாக்க முயலுவதற்கான'' அரசியல் நல்லதிஷ்டம் '' என சரியாக அவதானித்துள்ளார். ஷரோன் பதவிக்கு வந்த 18 மாதங்களுக்குள் மேற்குகரையில் 300 பிரிவுகளை உள்ளடக்கிய 44 புதிய குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் கடந்த 3 மாதங்களில் உருவாக்கப்பட்ட 9 குடியிருப்புக்களும் அடங்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலியர்களை இக்குடியேற்றங்களுக்குள் உள்ளிழுப்பதற்காக அரசாங்க வரவுசெலவுத்திட்டம் 64 மில்லியன் டொலரை மானியமாக ஒதுக்கியுள்ளது. அத்துடன் குடியேற்றங்களின் அபிவிருத்திக்காக மேலும் 19 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் டொலர் செலவில் இக்குடியேற்றங்களுக்காக 9 புதிய வீதிகள் அமைக்கப்பட்டுவருவதுடன், 957 புதிய பிரிவுகளை அமைப்பதற்கான கட்டிட ஒப்பந்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு சிறியதானதாக இருந்தாலும், இடையிடையே பிரிவுகளான மற்றும் பக்க துணை எதுவுமற்ற பாலஸ்தீனிய அரசாங்கம் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் இல்லாதொழிக்கும் பரந்த நோக்கம் இந்த தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களும் யுத்த குற்றங்களும் அடங்கிய ஷரோனின் கொள்கையை வழிநடத்துவதை இது உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலைமையை தணிக்கும் பேச்சுவார்த்தைக்கான சிறிய சாத்தியப்பாடுகள் இருந்தாலும், கலகமூட்டுவதும் அல்லது நிலைமையை மோசமடையச் செய்யும் நோக்கமுடைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.

See Also :

ஸ்ராலினிச பாலஸ்தீனிய மக்கள் கட்சியின் ஆதரவாளருடன் ஒரு நேர்காணல்

இஸ்ரேலிய மறுப்பாளருடன் நேர்காணல்: "நாங்கள் ஒரு புதிய தலைமையை அமர்த்துவோம்"

பி.எல்.ஓ தலைவர் புஷ்ஷூக்கு சிரம் சாய்த்தார்

மிலோசிவிக்கும் ஷரோனும்: ஒரு போர்க்குற்றவாளி எப்பொழுது போர்க்குற்றவாளி இல்லாமல் போகிறார்?

இஸ்ரேலின் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலுக்கு புஷ் பகிரங்க அனுமதி வழங்கியுள்ளார்

Top of page