World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

UN resolution on Iraq: a cynical cover for US aggression

ஈராக் மீதான ஐ.நா தீர்மானம்: அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான ஒரு சிடுமூஞ்சித்தனமான மூடிமறைப்பு

By the Editorial Board
9 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக் புதிய ஆயுத சோதனை குழுவுடன் ஒத்துழைக்காவிட்டால் "கடும் விளைவுகளை" எதிர்கொள்வது பற்றிய அமெரிக்க-பிரிட்டிஷ் தீர்மானம் மீதாக வெள்ளிக்கிழமை அதன் ஏகமனதான வாக்குகளுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையானது புஷ் நிர்வாகத்திற்கு, அரபு நாட்டிற்கு எதிராக அது திட்டமிட்டு வரும் போருக்கான சர்வதேச மூடுதிரையை வழங்கி இருக்கின்றது.

தீர்மானம் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமான பத்திரமாக இருக்கிறது, அது ஈராக்கால் நிறைவேற்ற இயல முடியாத தேவைகளை திட்டமிட்டே முன்னெடுக்கிறது. அது அதன் மூலம் வாஷிங்டனின் நோக்கங்களை --பாதுகாப்பு சபையிடமிருந்து முன்கூட்டிய அங்கீகாரத்தை அமெரிக்கா பெறவேண்டியது தேவைப்படாமல், ஏற்கனவே நன்கு தயாரிப்பில் இருக்கும் ஒரு போரைத் தொடுப்பதற்கான ஒரு சாக்குப்போக்கை வடிவமைப்பதற்கு திருப்திப்படுத்துகிறது.

உய்த்தறிய வேண்டியதல்லாத விஷயங்கள் மீதான மும்முரமான பேச்சுவார்த்தைகளின் மூலமாக ஒரு சமரசத்தை அடைந்தாக புஷ் நிர்வாகத்தாலும் செய்தி ஊடகத்தாலும் காட்டிக்கொள்ளப்படும் அதேவேளை, தீர்மானமானது, உண்மையில், பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியனவற்றால் வாஷிங்டனிலிருந்து வரும் கடும் அழுத்தங்களுக்கு தலைவணங்கியதைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

தீர்மானத்திற்கு சிரியாவின் வாக்களிப்பு அரபு தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அப்பட்டமான பிற்போக்கு மற்றும் துரோகத்தனமான பாத்திரத்தின் இன்னொரு விளக்கிக்காட்டலாக இருக்கிறது, அதன் ஒரே அரபுகள் என்ற அரபு முழுமைக்குமான பாசாங்குகளுடன் நில்லாமல், அரபு மக்களுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை ஆதரிப்பதன் மூலம் அதனுடன் நல்லெண்ணத்தைப் பெறுதற்கு அது என்றும் தயாராக இருக்கிறது.

வெள்ளைமாளிகையின் ரோஜா தோட்டத்தில் பேசுகையில், அமெரிக்கா அதன் போர்த்திட்டங்களை ஒரு முறைமைப்படுத்துதலாகப் பார்க்கிறது என்று புஷ் தெளிவாக்கினார். எந்த விதமான "ஒத்துப்போகாமை" யையும் முழு அளவிலான அதன் போர்த்திட்டங்களுக்கு ஒரு சாக்குப்போக்காக அவரது நிர்வாகம் பற்றிக் கொள்ளும் என்பதில் அவர் சந்தேகத்தை விட்டு வைக்கவில்லை. "இந்தத் தீர்மானத்தின் பந்தியுடன் ஈராக்கிய ஒத்துப்போகாமையின் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுக்கள் அபாயகரமானதா இல்லையா..... என்பதன்மீது ஆக்கமற்ற வாதங்களுக்குள் உலகம் கட்டாயம் பிறழ்வுறக்கூடாது" என்று அவர் கூறினார்.

புஷ் தொடர்ந்தார்: "அமெரிக்கா ஒரே ஒரு உறுதியை மட்டும் செய்யும்: ஈராக் பாதுகாப்பு சபையின் விதிமுறைகளை ஏற்கிறதா அல்லது இல்லையா? ஐக்கிய அமெரிக்க நாடுகள் பாதுகாப்பு சபையுடன் எந்தவித விதிமுறை மீறல் தொடர்பாகவும் விவாதிக்க சம்மதிக்கிறது, ஆனால் எமது நாட்டைப் பாதுகாப்பதற்கான எமது சுதந்திரமான நடவடிக்கையை குலைத்துவிடாமல். ஈராக் முழுமையாய் ஒத்துழைக்கத் தவறினால், ஐக்கிய அமெரிக்க அரசுகளும் ஏனைய நாடுகளும் சதாம் ஹூசைனின் தீங்கு செய்யும் ஆற்றலைக் குறைக்கும்."

லண்டனில் பேசுகையில், பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் புஷ்ஷின் பாதிக்கும் எச்சரித்தலை எதிரொலித்தார், பாக்தாதுக்கு கூறினார், "ஐக்கிய நாடுகளது விருப்பை மறு, நாம் பலாத்காரத்தால் உன்னை வலுக்குறைப்போம்."

தொடக்கத்தில், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா இரண்டும் அந்த நாடு பரிசோதனை குழுவினருடன் இணங்காமலிருக்கும் நிகழ்ச்சியில் ஈராக்கிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையை அங்கீகரிப்பது தொடர்பாக பாதுகாப்பு சபை இரண்டாவது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. ஆயினும், அந்தக் கோரிக்கை வாஷிங்டனின் இணங்காமையின் முன் கைவிடப்பட்டு விட்டது.

முடிவில், தீர்மானமானது, ஈராக் ஆயுத பரிசோதனைகளில் தலையீடு செய்ததாய் குற்றம் சாட்டப்பட வேண்டுமா என "சூழலை கருதிப்பார்க்க" பாகாப்பு சபை கூடும் என மட்டும் உறுதி அளித்தது. முடிவில், ராஜதந்திர மொழி மீதான சச்சரவு, பாதுகாப்பு சபையின் ஏனைய உறுப்பினர்கள் வாஷிங்டனுக்கு அவர்களின் சரணாகதிக்கான அரசியல் மூடுதிரையை உத்திரவாதப்படுத்துவதற்கான ஆவலால் இயக்கப்பட்டது.

அமெரிக்காவானது இத்தீர்மானத்தை ஆக்கிரமிப்பின் தூண்டப்படாத போருக்கான ஐ.நா அனுமதியாகக் காட்டிக் கொள்ளும். புஷ் நிர்வாகமானது எந்தவிதமான ஐ.நா பாத்திரத்தையும் அவமதித்துக் குரல் எழுப்பும் அதேவேளை, ஒருதலைப்பட்சமான அமெரிக்கத் தாக்குதலை மிகப் பெரும்பான்மையினர் எதிர்ப்பதை அமெரிக்க கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு காட்டுவதை எதிர்கொள்கையில், மற்றும் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் அதிகமாய் குவிந்து வரும் எதிர்ப்புக்களை எதிர்கொள்கையில், அது இறுதியில் ஐ.நாவின் மூடிமறைப்பை பயனுள்ள முயற்சியாய் பின்பற்ற முடிவு செய்தது.

பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகியன இறுதித் தீர்மானத்தில் தங்களின் மானத்தைக் காப்பாற்றும் மொழிக்கு சற்று கூடுதலாய் பெற்றன. அது அமெரிக்க ஒருதலைப்பட்ச தாக்குதலை குறிப்பாக அங்கீகரிக்கவில்லை, ஆனால் ஒன்றையும் தடுக்கவில்லை. இறுதித் தீர்மானத்தில், ஒவ்வொரு தரப்பும் தங்களுக்குப் பொருந்துகிறவாறு அதன் மொழியை விளக்கப்படுத்துவதற்கு சுதந்திரமாக இருந்தார்கள். பாதுகாப்பு சபையின் ஏனைய உறுப்பினர்கள் விவாதிப்பதற்கு சுதந்திரமாக இருக்கின்றனர், அதேவேளை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆக்கிரமிக்க சுதந்திரமாய் இருந்தார்கள்.

பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனா ஆகிய அனைத்தும் ஈராக்கிற்கு எதிரான ஒருதலைப்பட்சமான போரை அந்த நாட்டின் எண்ணெய் செல்வத்தில் அவர்களின் கணிசமான நலன்கள் என்ற நிலைப்பாட்டிலிருந்து ரஷ்யாவின் லுக் ஆயில் பெரும் அக்கறையைக் கொண்டிருக்கிறது--மேற்கு கோர்மோ எண்ணெய் வயலை அபிவிருத்தி செய்வதற்காக, 23 ஆண்டுகால, 3.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய (பெறுமதி உடைய) ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறது. பிரெஞ்சு அரசாங்கத்திற்குச் சொந்தமான Total Fina Elf நிறுவனம் மஜ்னூன் எண்ணெய் வயலை சுரண்டுதற்கான ஒரு பேரத்தின் மீது பேச்சுவார்த்தைகளை முடிப்பதில் நெருங்கி இருந்தது. அந்த எண்ணெய் வயல் 30 பில்லியன் பீப்பாய்கள் சேர்ம இருப்பைக் கொண்டிருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதற்கிடையில், சீன தேசிய பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் இதற்கிடையில், ருமல்லா பகுதியை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைக் கொண்டிருந்தது.

"பேரழிவுகரமான ஆயுதங்கள்" பற்றிய ஐ.நா தீர்மானங்களை அமல்படுத்தல் எனும் பாசாங்கின் கீழ் அமெரிக்க ஆக்கிரமிப்பு, செளதி அரேபியாவுக்கு இரண்டாவதாக மட்டுமே இருக்கும், ஈராக்கின் எண்ணெய் சேர்ம இருப்புக்கள் மீதாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டை திடப்படுத்துவதை அதன் மைய நோக்காகக் கொண்டிருக்கும் என்பதை இவ்வனைத்து மூன்று அரசாங்கங்களும் அறியும். ஈராக்கை வெற்றி கொள்வதற்கான மற்றும் அதனை அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு அரசாங்கம் மூலம் ஆள்வதற்கான வாஷிங்டனின் திட்டங்கள், அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் கார்ப்பொரேஷன்களிடம் நாட்டின் எண்ணெய் வயல்களை ஒப்படைப்பதை சந்தேகத்திற்கிடமின்றி உள்ளடக்கும்.

திரைமறைவிற்குப் பின்னால் அமெரிக்கா தலைமையிலான போர் நிகழ்வில், வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகள் தங்களின் நலன்களில் சிலவற்றை உத்தரவாதம் செய்வதை நோக்கம் கொண்ட பேச்சுவார்த்தைகள் அங்கு இருந்திருக்கின்றன. ஆயினும், வாஷிங்டனில் நிர்வாகத்திற்கு நெருக்கமானவர்கள், ஒன்றும் உறுதி கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்று சுட்டிக் காட்டுகின்றனர்.

ஐ.நா-வால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆயுத சோதனை விவகாரத்தை ஒரு போருக்கான சாக்குப் போக்காக வாஷிங்டன் பயன்படுத்தலை மட்டும் கோடிட்டுக்காட்டுகிறது. முந்தைய ஆயுத பரிசோதகர்களின் முன்னணி நபர்கள் ஈராக்கின் இராணுவ ஆயுதங்கள் கடந்த வளைகுடாப் போரைத் தொடர்ந்து வந்த ஏழாண்டுகள் சோதனைகளின் பொழுது சக்திமிக்க வகையில் ஏற்கனவே அழிக்கப்பட்டிருக்கின்றன என்று வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும், புதிய தீர்மானமானது ஆயுதங்கள் அழித்தலை நோக்கியது பற்றிய விதிமுறைகளை அல்லாமல், ஈராக்கின் இறையாண்மையை மற்றும் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையை அழிக்கும் விதிமுறைகளையே உள்ளடக்கியுள்ளது.

ஐ.நா ராஜதந்திரிகள் "மறைவாய் விசை அழுத்திகள் இல்லா" தீர்மானத்தை நிறைவேற்றியது பற்றி தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கின்றனர். உண்மையில், விசை அழுத்திகள் வெளியில் திறந்த நிலையில் இருக்கின்றன. ஐ.நா ஆயுதப் பரிசோதகர்களாலேயே தேவையற்ற ஆத்திரமூட்டல் மட்டுமல்லாமல், நிறைவேற்றப்பட முடியாதவையாகவும் இருக்கும் ஷரத்துக்கள் நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

அத்தகைய முதலாவது "விசை அழுத்தி" ஈராக் "முந்தைய ஐ.நா தீர்மானங்களின் கீழ் அதன் கடப்பாடுகளை" சடரீதியான மீறலாய் தொடர்ந்திருக்கிறது மற்றும் இருந்திருக்கிறது என்பதாகும். ஆயுத பரிசோதகர்கள் ஈராக்கிற்குள் திரும்பவும் அனுப்பப்பட்டால் அவர்கள் என்ன கண்டு பிடிப்பார்கள் என்பதைப் பார்க்க காத்திருக்கும் ஒரு பாசாங்கைக் கூட செய்யாமல், இந்த மொழியானது, பாக்தாது என்னென்ன செய்தாலும் அமெரிக்க இராணுவத் தாக்குதலை சக்தி மிக்க வகையில் நியாயப்படுத்துகிறது.

அப்பத்திரமானது ஈராக் அதன் ஆயுத வேலைத்திட்டங்கள் என்று கூறப்படுவது மட்டுமல்லாமல், அனைத்துவகையான இராணுவமல்லாத இரசாயன, உயிரியல் மற்றும் அணு ஆராய்ச்சி வேலைத் திட்டங்கள் அல்லது வாய்ப்பு வசதிகளைப் பற்றியதையும் கூட "துல்லியமான, முழுமையான மற்றும் நிறைவான உறுதிமொழியை" வழங்குவதற்கு ஈராக்கிற்கு 30 நாட்கள் காலக்கெடுவை அமைத்துக் கொடுக்கிறது. நாட்டின் அதிக அளவிலான பெட்ரோலியம் இரசாயனத் தொழிற்துறையை எடுத்துக் கொண்டால், பாக்தாது அத்தகைய கணக்கெடுப்பை ஒரு மாதத்தில் நிறைவேற்றும் சாத்தியம் முடியாது என்று ஐ.நா அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

"ஈராக்கியர்கள் இணங்கிப் போக விரும்பினாலும் கூட, அவர்கள் செய்வார்கள் என்று எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை, இந்தத் தீர்மானத்துடன் அவர்கள் இணங்கிச் செல்ல முடியும் என்பதில் நான் சந்தேகப்படுகிறேன்," என்று ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர், டெனிஸ் ஹாலிடே கூறினார். அவர் "இன அழிப்பு" என்று விவரித்த, ஈராக்கிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மீதாக தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் அனுமதிக்கப்பட்ட தீர்மானம் "திரு. புஷ்ஷால் முற்றிலும் ஒரு போருக்காக வடிவமைக்கப்பட்ட" ஷரத்துக்களை உள்ளடக்கி உள்ளன என்றார்.

ஈராக் ஆட்சி ஐ.நாவுக்கான அதன் அறிக்கையில் "போலி அறிக்கைகளை" கொடுத்திருந்ததாக காணப்பட்டால், ஐ.நா தீர்மானங்களை "மேலும் சடரீதியான வகையில் மீறியதாக" அது கருதப்படும் மற்றும் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். ஆயுதங்கள் வேலைத்திட்டங்கள் பற்றிய புஷ் நிர்வாகத்தின் காட்டுத்தனமான குற்றச்சாட்டுக்களை மற்றும் அவை இருக்கவில்லை என்ற ஈராக்கின் மறுப்பையும் கூட எடுத்துக் கொண்டால், வாஷிங்டன் பாக்தாது பொய் கூறுகிறது என குற்றம் சாட்டும் என்று முன் கூட்டிய முடிவு இருக்கிறது.

30 நாட்கள் இறுதிக் கெடு ஈராக்கிய ஆயுதங்களில் இருந்து எந்த விதமான அழுத்தத்தை சந்திக்காமல் இருக்க அமைக்கப்படவில்லை, மாறாக ஜனவரி அல்லது பெப்ரவரியில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கான உகந்த சூழ்நிலையாக பென்டகனால் உறுதி செய்யப்பட்ட காலகட்டத்தை முன்னெடுப்பதில் போருக்கான ஒரு சாக்குப் போக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஆகும்.

இந்தத் தீர்மானத்தில் உள்ள ஏனைய ஷரத்துக்கள் ஒன்றில் ஈராக்கால் நிராகரிக்கப்படக் கூடியதாகவோ மற்றும் வாஷிங்டனுக்கு ஒரு உடனடி போர்க் காரணத்தை அளிக்கக் கூடியதாகவோ அல்லது அதனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக, நாட்டை இராணுவ ஆக்கிரமிப்பு சேர்ப்பதை விளைவிப்பதாகவோ இருக்கும்.

ஆயுதப் பரிசோதகர்களுக்கு "எந்தவிதமான மற்றும் அனைத்துவிதமான, நிலவறைகள், பகுதிகள், வாய்ப்பு வசதிகள், கட்டிடங்கள், சாதனம், நிலைச் சான்றுகள் மற்றும் போக்குவரத்து சாதனங்கள் உள்பட அனைத்தையும், உடனடியாக, தடைஇல்லாமல், நிபந்தனை இல்லாமல் மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக் கூடியதாக" ஈராக் அனுமதிக்க வேண்டும் என பத்திரம் கோருகிறது. அது அவர்களுக்கு அவர்கள் நுழைய விரும்பும் எந்த வாய்ப்பு வசதிகளை சுற்றியும், அந்தப் பகுதியிலிருந்து மக்கள், வாகனங்கள் மற்றும் வானூர்திகள் பறக்கத்தடை-- ஓட்டத் தடை மண்டலங்களை அறிவிக்க அவர்களை அனுமதிக்கிறது. இறுதியில், அது அவர்களைக் காப்பதற்கு "போதுமான ஐ.நா பாதுகாப்பு காவலர்களை" வழங்குகிறது.

இதன் அர்த்தம், வரையற்ற எண்ணிக்கையில் ஆயுதம் தாங்கிய துருப்புக்கள் புடைசூழ ஆயுதப் பரிசோதகர்கள் விருப்பம்போல் நாட்டிற்குள் சுற்றிவருவதையும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த மற்றும் ஒவ்வொரு வசதி வாய்ப்புக்களையும் அவர்கள் வழியில் நிர்பந்திப்பதையும், மற்றும் அவர்கள் பொருத்தமானது என காணும் பகுதிகள் முழுவதையும் மூடுவதையும் ஈராக் கட்டாயம் ஏற்கவேண்டும்.

இந்த ஆயுதப் படைகளின் "ஈடுபாட்டு விதிமுறைகள்" கூறப்படவில்லை, ஆனால் அவை பெரும்பாலும் பென்டகனால் நிர்ணயிக்கப்படலாம். திடீரென்று திணிக்கப்படும் "தடை மண்டலத்தை" மீறுவதாகக் காணப்படும் ஈராக் அதிகாரிகளை அல்லது குடிமக்களை சுடுவதற்கு நீல -ஹெல்மட் அணிந்த ஐ.நா துருப்புக்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமா? இந்தப் பிரச்சினை பற்றியதில் தீர்மானம் மெளனமாக இருக்கிறது.

இறுதித் தீர்மானம் ஆயுதப் பரிசோதகர்களை "பாதுகாக்க" ஐ.நா உறுப்பு நாடுகள் நேரடியாக தங்களின் சொந்தப் படைகளை அனுப்ப அனுமதிக்கும் ஆரம்ப வரைவுகளிலிருந்து வார்த்தைகளை சேர்க்காத அதேவேளை, அத்தகைய படை அனுப்பலை அது விலக்கவும் இல்லை. ஈராக்கில் தளத்தில் அதன் சொந்த ஆயுதப் படைப் பிரிவுகளை சேர்த்துக் கொள்வதற்கு அமெரிக்கா அழுத்தத்தைக் கொடுக்கும் என்ற சிறிது ஐயம் அங்கு இருக்கிறது.

மேலும், தீர்மானமானது, ஈராக் ஜனாதிபதி சதாம் ஹூசேனாலும் ஈராக்கிய உயர் அதிகாரிகளாலும் பயன்படுத்தப்படும் எட்டு வாய்ப்பு வசதியுள்ள இடங்களை சோதனை செய்வதற்கு விதிமுறைகள் வகுக்கும் 1998 ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானத்தை தெளிவாகவே ரத்து செய்கிறது. அந்தத் தீர்மானம் ஆயுதப் பரிசோதகர்களுடன் ராஜீய அதிகாரிகளும் உடனிருக்க வகைசெய்கிறது. அதற்குப் பதிலாக, இந்த புதிய தீர்மானம் ஆயுதப் பரிசோதகர்களும் அவர்களின் ஆயுதமேந்திய காவலர்களும் "மற்றைய பகுதிகளுக்கு சமமாக" இந்த வசதி வாய்ப்பிடங்களை "நிபந்தனை அற்ற" வகையில் அடையக் கூடியதாய் இருப்பர் என வலியுறுத்துகிறது.

ஐ.நா பரிசோதிப்பு முகவாண்மைகள் "அவர்களின் பரிசோதனை குழுக்களின் சேர்க்கையை தீர்மானிக்கும் மற்றும் இந்த குழுக்கள் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மற்றும் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள் இருக்கக் கூடியதாக அமைக்கப்படும்" என்றும் கூட அது வலியுறுத்துகின்றது.

முன்னர் 1998ல் வாஷிங்டனின் வற்புறுத்தலின் பேரில் ஆயுதப் பரிசோதகர்கள் வாபஸ் பெறப்பட்டனர், அது இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருக்கின்ற அமெரிக்க நபர்களில் பலர், ஆயுதப் பரிசோதனைகள் பற்றி ஒன்றும் தெரிந்திராத மறைமுக சி.ஐ.ஏ முகவர்கள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான இராணுவப் பிரிவின் தட்டின் உறுப்பினர்கள் ஆவர். அவர்கள் ஈராக் ஆட்சியாளரை உளவு பார்க்கவும் ஆத்திர மூட்டல்களைத் தயாரிக்கவும் அங்கு இருந்தனர்.

அத்தகைய சக்திகள் மறுபடியும் அந்நாட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை. இருப்பினும், இதற்கிடையில், சதாம் ஹூசேனை கொல்வதற்காக அதன் ஆதரவை புஷ்நிர்வாகம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இவ்வாறு, ஐ.நா தீர்மானம் ஈராக் ஜனாதிபதியின் இல்லங்களையும் அலுவலகங்களையும், அவரது படுகொலையை ஆதரிக்கும் ஒரு ஆட்சியால் அனுப்பப்பட்ட பயிற்சி பெற்ற கொலைகாரர்கள் கட்டுப்பாடற்ற வகையில் அடைவதற்கு கோருகிறது

ஆயுதப் பரிசோதகர்கள் "ஆள் உள்ள மற்றும் ஆளில்லாத வேவு வாகனங்கள் உள்பட, நிலையான அல்லது ரோட்டரி இறக்கை கொண்ட வானூர்திகள் சுதந்திரமாக தங்குதடையின்றி பயன்படுத்துவதையும் இறங்குவதையும்" கொண்டிருப்பர் என்று தீர்மானமானது மேலும் கூறுகிறது. யேமனில் ஆறு தனி நபர்களைக் படுகொலை செய்ய ஆளில்லாத சி.ஐ.ஏ வானூர்தி (CIA drone) அண்மையில் பயன்படுத்தப்பட்டதை எடுத்துக் கொண்டால், இந்த விதிமுறைகள் இன்னொரு தீக்குறியான அச்சுத்தலை எழுப்புகிறது.

ஆயுதப் பரிசோதகர்கள் சந்திக்க விரும்பும் எந்த விஞ்ஞானிகளையும் அல்லது அதிகாரிகளையும் அனுப்ப செவிசாய்ப்பது ஈராக் ஆட்சிக்கு தேவைப்படும். அது ஐ.நா பரிசோதனை முகவாண்மைகள் "ஈராக்கிற்கு உள்ளோ அல்லது வெளியிலோ தங்களின் உசிதம்போல் நேர்காணல்களை நடத்தலாம்" மற்றும் "நேர்காணல் செய்யப்பட்டோரின் அல்லது அவர்களது உறவினரின் பயண ஏற்பாடுகளை ஈராக்கிற்கு வெளியில் அமைக்கலாம்" என்று தெளிவாகக் கூறுகிறது.

இது ஈராக்கின் விஞ்ஞானிகள் சமூகத்தை கட்டாயப்படுத்தி ஒப்படைப்பதை எளிதாக இசையக் கூடிய ஒரு அமைப்பு முறையை முன்வைக்கிறது, அந்நாட்டின் சிதறுண்டு போன பொருளாதாரத்தையும் தொழில்துறை அடித்தளத்தையும் மேலும் கீழறுக்கிறது. தங்களது குடும்பத்தினருடன் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்கப்படுபவர்கள் --உண்மையான அல்லது கண்டுபிடிக்கப்பட்ட-- பாதிக்கும் தகவல்களை வழங்கவும் களங்கப்படுத்தவும் கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவர். ஒத்துழைப்பவர்களுக்கு பதவிகளும் பணம்காசுகளும், அதோடு ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு வஞ்சத் தீர்வுகளின் அச்சுறுத்தலும் ஐயத்திற்கிடமற்ற வகையில் வழங்கப்படும்.

இறுதியாக, தீர்மானமானது "ஈராக் ஐக்கிய நாடுகள் சபையின் அல்லது சபையின் எந்த தீர்மானத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கும் எந்த உறுப்பு நாடுகளின் எந்த நபர்களுக்கும் அல்லது பிரதிநிதிகளுக்கும் எதிராக இயங்கும் குரோதமான நடவடிக்கைகளை அச்சுறுத்தாது அல்லது எடுக்காது" என அறிவிக்கிறது. இந்த மொழியானது, வட ஈராக்கிலும் தென் ஈராக்கிலும் வாஷிங்டன் மற்றும் லண்டனால் ஒருதலைப் பட்சமாய் அறிவிக்கப்பட்ட மற்றும் வலிந்து அமல்படுத்தப்பட்ட பறக்கத் தடை மண்டலங்களில் இடைவிடா அமெரிக்க குண்டு வீச்சுக்களுக்கும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கும் எந்த விதமான ஈராக்கிய எதிர்ப்பையும் தடுப்பதை வெளிப்படையாகவே நோக்கங்கொண்டது.

இந்த மண்டலங்கள் எந்தவிதமான ஐ.நா தீர்மானத்தின் அனுமதியும் இன்றி திணிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, வாஷிங்டனானது வடக்கில் உள்ள குர்திஷ் சிறுபான்மையினருக்கும் தெற்கில் உள்ள ஷியா பிரிவினருக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கான ஐ.நா நடவடிக்கைகளை உயர்த்திப் பிடிக்க தாங்கள் நோக்கம் கொண்டிருப்பதாகக் கூறிக் கொள்கிறது. யதார்த்தத்தில், இந்த பறக்கத் தடை மண்டலங்களை திணித்தல், ஈராக்கின் இறையாண்மைக்கு உத்தரவாதப்படுத்தும் ஐ.நா தீர்மானங்களை படுமோசமாய் அத்து மீறி இருக்கிறது. ஆயினும், இது தொடர்பாக பாதுகாப்பு சபை குரல் எழுப்பாது இருந்து வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவானது அதன் ஆக்கிரமிப்பை முன்னெடுப்பதில் ஈராக்கின் வான்பாதுகாப்பை துடைத்து அழிப்பதை நோக்கம் கொண்ட ஈராக்கிற்கு எதிரான கடுமை குறைந்த வான் போரைத் தொடுப்பதற்கு அமெரிக்கா பறக்கத்தடை மண்டலங்களை பயன்படுத்தி இருக்கிறது.

புதிய தீர்மானமானது, இந்த வலுச்சண்டையைப் பொருதி மோதுவதிலிருந்து ஈராக்கைத் தடுப்பது மட்டுமல்ல, ஈராக் இலக்குகள் மீது குண்டு வீசும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் வானூர்திகளுக்கு எதிராக ஈராக் எந்த விதமான சூடு நடத்துவதையும் தடை செய்கிறது. ஐ.நா வாக்களிப்பின் போது, அமெரிக்க போர் விமானங்களுக்கு எதிரான ஈராக்கிய விமான எதிர்ப்பு தாக்குதல்களின் முன்னர் விளக்கப்பட்ட வீடீயோ பதிவுக் காட்சிகளை செய்தி ஊடகத்திற்காக மீண்டும் திரையிட்டது தற்செயலானது அல்ல.

முழுமையையும் எடுத்துக் கொண்டால், இந்த நிபந்தனைகள் ஈராக் மீதான நிறைவான மற்றும் முற்று முழுதான இழிவு படுத்தலை அது ஏற்கவைப்பதை நோக்கங் கொண்டதாக, அதன் தேசிய இறையாண்மையின் கடைசி அடையாளத்தையும் பறித்தெடுப்பதாக இருக்கின்றன. போரைத் தொடுப்பதற்கு புஷ் நிர்வாகத்திற்கு பல்முனை சாக்குப் போக்குகளை வழங்குவது ஒரு பக்கம் இருக்க, தீர்மானமானது பாக்தாதில் உள்ள தற்போதைய அரசாங்கத்தை கீழறுப்பதையும் கூட அர்த்தப்படுத்துகிறது. ஈராக் இத்தீர்மானத்தை ஏற்றால், ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு ஊக்கம் கொடுக்கும் முயற்சியில் ஈராக் ஆட்சியை சக்தி அற்றதாக ஆக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்படும்.

அத்தகைய பிற்போக்கு நவகாலனித்துவ தலையீடிற்கு பாதுகாப்பு சபையின் ஆதரவானது, ஐக்கிய நாடுகள் சபையின் முற்போக்குப் பாத்திரம் என்று கூறப்படுவதில் அல்லது அமெரிக்க இராணுவ வாதத்தின் பூகோள வெடித்தெழலுக்கு ஒரு தடையாக பணி ஆற்றும் வாஷிங்டனின் ஏகாதிபத்தியப் போட்டியாளர்களின் திறன் என்று கூறப்படுவதில் உள்ள எந்தவிதமான பிரமைகளின் உறுதியான மறுதலிப்பாக நிற்கிறது.

See Also:

ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்ப்பதற்கு ஒரு சோசலிச மூலோபாயம்

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை எதிர்!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இயக்கத்தைக் கட்டி எழுப்பு!

Top of page