World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani strongman imposes anti-democratic constitutional changes

பாகிஸ்தான் பலவான் ஜனநாயக விரோத அரசியலமைப்பு மாற்றங்களை திணிக்கின்றார்

By Vilani Peiris
5 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

பாகிஸ்தானின் இராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பேர்வஸ் முஷாரப் அக்டோபர் 10 இற்கு திகதியிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல்களுக்கூடாக நாட்டை ஜனநாயக ஆட்சிக்கு திருப்புதல் என்ற அவரது கூற்றுக்களை பரிகாசம் செய்கின்ற 29 அரசியலமைப்பு மாற்றங்களை விதித்துள்ளார். ஆகஸ்ட் 21 ஜனாதிபதி சாசனத்தால் விதிக்கப்பட்ட பிரேரணைகளின்படி வாக்களிப்பின் விளைவு என்னவாக இருந்தாலும் முஷாரப்பும் இராணுவமும் தொடர்ந்து நிறைவேற்று அதிகாரங்களை கொண்டிருப்பர்.

அரசியலமைப்பு மாற்றங்களின்படி முஷாரப் ஜனாதிபதி என்ற வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளை தனது விருப்பத்தின்படி கலைக்க மற்றும் மாகாண ஆளுநர்களை அமர்த்தவோ அல்லது நீக்கிவிடவோ முடியும். ஜனாதிபதியானவர் ஒன்றிணைந்த கூட்டுத்தலைமையகத் தலைவர் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட மூன்று இராணுவ சேவை தலைவர்களை நியமிக்கும் அதிகாரங்களை கொண்டிருப்பார்.

தேர்தல்களைத் தொடர்ந்து நாடு பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவையை கொண்டிருக்கும் அதேவேளை தேசிய பாதுகாப்பு சபையின் (NSC) ஸ்தாபிதத்தின் மூலம் இராணுவமானது சகல பாரிய கொள்கை தீர்மானங்களினதும் அதிகாரங்களை தனது பிடிக்குள் வைத்திருக்கும். முஷாரப் இச்சபையின் தலைவராக பதவிவகிப்பார். ஊழியர்களின் இராணுவ தலைவர், இராணுவ கடற்படை மற்றும் விமானப்படை தலைவர், பிரதம மந்திரி, எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் நான்கு மாகாணங்களினதும் முதல் அமைச்சர் ஆகியவர்களும் இதனுள் அடங்குவர்.

அரசியலமைப்பு மாற்றங்கள் அடையாள ஆலோசனைக்கான காலத்தை வழங்கும் பொருட்டு ஜூனில் முதலில் அறிவிக்கப்பட்டன. அரசியல் கட்சிகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகத்தினரின் பரந்த எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டமையால், பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலக முறையை குறைப்பது உட்பட ஒரு சில பூர்வாங்க திட்டங்களோடு முஷராப் முன்செல்லவில்லை. எனினும் இம்மாற்றங்கள் அதிகாரம் உறுதியாக அவரது கைகளில் தங்கியிருப்பது பற்றிய எந்த விடயத்துடனும் தொடர்புடையதல்ல.

முஷாரப் ஆகஸ்ட் 22 ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில், "எதிர்வரும் பாராளுமன்றம் இந்த பிரேரணைகளை மாற்றியமைக்க முனையுமாயின் அவர்கள் விலகவேண்டி நேரிடும் அல்லது நான் விலகுவேன்," என தெரிவித்தார். பிரேரணைகளின் சட்டத் தன்மைப் பற்றி வினவியபோது: "உயர் நீதிமன்றத்தால் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் மூலம் நான் அதை அரசியலமைப்பின் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்கின்றேன். எனக்கு சபையின் அனுமதி தேவையில்லை" என முஷாரப் தெரிவித்தார்.

அவரது சட்டங்களை சவால் செய்ய எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அவர் தெளிவுபடுத்தினார். எதிர்கட்சியினர் தேர்தலில் வெற்றியீட்டினால் என்ன நடக்கும் என கேட்டபோது: "அவர்கள் பாகிஸ்தானுக்காக செயற்படுவது நன்மையைத் தரும். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிப்பார்களாயின் அல்லது திரும்பவும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி சதி மூலம் நாட்டை கீழே கொண்டு செல்வார்களாயின், அதை செய்ய அவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என அவர் தெரிவித்தார்.

முஷாரப் தனிமைப்பட்டுள்ளார்

முஷாரப் தமது ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதற்காக இந்த அரசியலமைப்பு திருத்தத்தை ஒருதலைப்பட்சமாக முடிவு செய்தமை, அவரது நிர்வாகத்தின் வளர்ச்சிகண்டுவரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுகின்றது. 1999 இல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விரட்டும்போது, மக்கள் அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு கொள்கைகள் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் மீதான பரந்த எதிர்ப்பை முஷாரப்பால் சுரண்டிக்கொள்ள முடிந்தது. அவர் ஜம்மு காஷ்மீரில் இந்தியத் துருப்புக்களுடன் போராடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய ஆயுதப் போராளிகளை நசுக்குவதற்கான அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஷெரீப்பின் அடிபணிவையிட்டு ஆத்திரமுற்றிருந்த இஸ்லாமிய தீவிரவாத குழுக்களினதும் இராணுவத்தினதும் பின்னணியை கொண்டிருந்தார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் முஷாரப்பின் ஆதரவுகளில் பெரும்பாலானவை ஆவியாகிப்போயுள்ளன. ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்திற்கு ஆதரவளிப்பதென்ற அவரது முடிவும், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் மீது பாய்ந்துவிழுவதற்கான வாஷிங்டனின் கோரிக்கைகளுடனான உடன்பாடும் இஸ்லாமியக் குழுக்களையும் இராணுவத்தின் சில பகுதிகளையும் அன்னியப்படுத்தியுள்ளன. மேலும் வரையறுக்கப்பட்ட நிதி உதவிக்கான பிரதி உபகாரமாக, முஷாரப் வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்குமிடையிலான சமூக பிளவை ஆழமாக்கும் சந்தை சீர்திருத்தங்களை அமுலாக்குவதற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முஷாரப் ஏப்பிரலில் அவரது ஜனாதிபதி பதவி பற்றிய ஒரு கருத்துக் கணிப்பை நடத்துவதன் மூலமும், அக்டோபரில் பொதுத் தேர்தல்களுக்கு தயார் செய்வதன் மூலமும் தமது ஆட்சியை சட்டபூர்வமானதாக்க முனைந்தார். ஆனால் அந்த கருத்துக் கணிப்பின் பெறுபேறு பெருமளவில் மோசமானதாக கண்டனம் செய்யப்பட்டதுடன் அக்டோபர் தேர்தலும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஆகஸ்டில் கராச்சியில் நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு உரைநிகழ்வு, அவரது உளவுத் துறை தலைவர்களின் ஆலோசனையின் பேரில் இரத்துச் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரித்தானியாவை தளமாகக் கொண்ட "எகோணமிஸ்ட்" (Economist) சஞ்சிகையானது, முஷாரப்பின் தனிப்பட்ட பாதுகாப்பு இனிமேலும் உறுதியானதாக இல்லை என தெரிவித்திருந்தது.

முஷாரப்பின் தனிமைப்பட்டுள்ள நிலைமையின் அளவுகோலானது, 1999 சதி புரட்சிக்கு முன்னர் பரந்தளவில் செல்வாக்கிழந்து போயிருந்த முன்னாள் இரு பிரதம மந்திரிகளான பாகிஸ்தான் முஸ்லீம் கழக (PML) தலைவர் நவாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோ ஆகியோருக்காக புத்துயிர்பெறும் ஆதரவேயாகும். அரசியலமைப்பு திருத்தப் பிரேரணைகள் ஷெரீப்பும் பூட்டோவும் வேட்பாளர்களாக நிற்பதைத் தவிர்ப்பதை நோக்காகக் கொண்டவையாகும். வேறு பதிலீடுகள் இல்லாதவிடத்து, அவரது ஆட்சி மீதான வளர்ச்சி கண்டுவரும் எதிர்ப்பின் மையமாக அவர்கள் வரக்கூடும் என முஷாரப் அஞ்சுகின்றார்.

பாகிஸ்தான் சமூக விஞ்ஞானியான ஜபறுள்ளா கான், தேர்தல்கள் "சுதந்திரமானதும் நியாயமானதுமாயின்" பெரும்பான்மையான ஆசனங்களை இரு எதிர்க் கட்சிகளும் வெல்லும் என ஆகஸ்டில் நியூயோர்க் டைம்ஸ் இற்குத் தெரிவித்தார். பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இயக்குனரான ஏ.ரகுமான், அதேவிதமாக எதிர்வு கூறும்போது: "தற்போது அரசியல் கட்சிகள் ஒழுங்கமைப்பின்றி இருக்கலாம். ஆனால், தம்மை புதுப்பித்துக்கொள்ள தளபதி அர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மூலகங்களை வழங்கியுள்ளார்" என குறிப்பிட்டார்.

தேர்தல் ஆணைக்குழுவானது ஆரம்பத்தில் அக்டோபர் தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான பூட்டோ மற்றும் ஷெரீப்பின் பத்திரங்களை நிராகரித்தது. பத்திரிகையாளர்கள் வினவியபோது, அந்த இருவரையும் கோபத்துடன் கண்டனம் செய்த முஷாரப்: "கொள்ளையடிப்பவர்கள் மற்றும் சூறையாடுபவர்கள் மக்களால் மன்னிக்கப்படுவது பற்றிய உங்களது கருத்து என்ன?" எனப் பிரகடனப்படுத்தினார். ஷெரீப்பும் பூட்டோவும் பாகிஸ்தானிற்கு திரும்ப முயற்சிப்பார்களாயின் கைதுசெய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார்.

1988 இலும் மீண்டும் 1993 இலும் பிரதம மந்திரியாக இருந்த பூட்டோ பல ஆண்டுகளாக லண்டனிலும் டுபாயிலும் சுய விருப்பத்தின் பேரில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கடந்த மாதம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக ஆஜராகாத காரணத்தால் மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். ஷெரீப் 1999 இராணுவப் புரட்சியை தொடர்ந்து ஒரு தொகை ஊதிப்பெருப்பிக்கப்பட்ட குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போதிலும், பின்னர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது சவுதி அராபியாவில் தலைமறைவாக உள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவானது எதிர்தரப்பை பிளவுபடுத்தும் குரூர முயற்சியில் ஆகஸ்ட் 30 ஷெரீப்பின் நியமனத்தை ஏற்றுக்கொண்டு பூட்டோவின் நியமனத்தை அடுத்த நாள் நிராகரித்ததன் மூலம் தனது முன்னைய முடிவை மாற்றிக் கொண்டது. ஆணைக்குழுவின் தீர்ப்பிற்கு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும் பூட்டோவுடனான ஒருமைப்பாட்டினால், ஷெரீப் அவரது அபேட்சகத்தை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். அவரது மனு செப்டெம்பர் 11 விசாரணைக்கு எடுக்கப்படும்.

பூட்டோ மற்றும் ஷெரீப் இருவரும் முஷாரப்பை விமர்சித்ததுடன் ஜனநாயகத்திற்கான திரும்பலுக்காக பிரச்சாரம் செய்யப் போவதாக பிரகடனம் செய்துள்ளனர். பூட்டோ முஷாரப்பை ஒரு "தகரப்பானை சர்வாதிகாரி" என வர்ணித்ததுடன் தேவை ஏற்படின் பாகிஸ்தானுக்கு திரும்பி, ஜெயிலில் இருந்து ஜுன்டாவுக்கு எதிராக போராடுவதாக எச்சரித்துள்ளார். அதேவேளை, தேர்தல்களில் அவரது கட்சி வெற்றியீட்டுமாயின் இராணுவ நிர்வாகத்துடன் ஒத்துழைப்பதாக ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கடந்த மாதம் லண்டனில் இடம் பெற்ற ஒரு கூட்டத்தில், "எனது கட்சியானது அதிகளவு ஆர்வத்துடன் பாகிஸ்தானை ஜனநாயகமயமாக்கும் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக இராணுவ ஆட்சியுடனான பேச்சுக்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது என விளக்கினார்.

புஷ் நிர்வாகத்தின் ஆதரவை முஷாரப் தொடர்ந்தும் பெற்றுவருவதை இவ் இரு தலைவர்களும் அடையாளங் கண்டுள்ளனர். பூட்டோ, அமெரிக்கவின் "பயங்கரவாதத்துக்கு எதிரான பூகோள யுத்தத்திற்கு" தன்னை ஒரு உறுதியான ஆதரவாளராக அர்ப்பணிப்பதன் மூலம் வாஷிங்டனின் ஆதரவிற்கு தலை வணங்கியுள்ளார். அவர், அமெரிக்க அழுத்தத்தின் கீழ் சுற்றிவளைக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத அமைப்புக்களின் அங்கத்தவர்களை விடுதலை செய்ததன் மூலம் அவர்கள் மீது அதிக கருணை காட்டுவதாக முஷாரப்பை சாடியுள்ளார். "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்கள் பாகிஸ்தானில் நடைபெறுவதை உறுதிப்படுத்துவற்காக தலையீடு செய்யுமாறு அவர் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அரச திணைக்களம் அரசியலமைப்பு மாற்றங்கள் பற்றி சாந்தமாகவும் உத்தியோகபூர்வமாகவும் விமர்சனங்களை வெளியிட்டது. பேச்சாளர் பிலிப் றொக்கர்: "அவருடைய அண்மைய முடிவுகள் பாகிஸ்தானில் ஒரு உறுதியான ஜனநாயக ஸ்தாபனங்களை கட்டியெழுப்புவதை மேலும் கடினமாக்கும் என நாம் நம்புகின்றோம்," என குறிப்பிட்டார். எவ்வாறெனினும் அமெரிக்க ஜனாதிபதி புஷ் இந்த கூற்றை சக்திவாய்ந்த முறையில் அசட்டை செய்தார். "முஷாரப் இன்னமும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் எம்முடன் போராடிவருவதோடு, நான் இதையே மெச்சுகின்றேன்" என பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

பாகிஸ்தானிய தலைவர் தொடர்ந்தும் சரவதேச நிதி உதவிகளை பெற்று வருகின்றார். அவர் ஆகஸ்ட் 20 அன்று, சர்வதேச நாணய நிதிய நிர்வாக இயக்குநர் போல் கப்ரியலிடம், "அரசியலமைப்பு பிரேரணைகள், அரசாங்கம் முன்வைத்த தொடர்ச்சியான மறுசீரமைப்பிற்கு தேவையான காசோலைகளையும் மீதிகளையும் அதே இடங்களில் இடுவதற்கு உதவும்" எனத் தெரிவித்தார். அத்துடன் "அரசதுறை நிறுவனங்களின் மறுசீரமைப்பினை தொடர்வதாகவும் வாக்குறுதி அளித்தார். மூன்று நாட்களுக்கு பின்னர், பாகிஸ்தானுக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் நாட்டை ஒன்றிணைக்கவும் மறுசீரமைக்கவும் 3 பில்லியன் டாலர் கடனை அனுமதிக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

முஷாராப்பின் ஆதரவுக்கான தளம் தொடர்ச்சியாக சுருங்கி வருகையில், இந்த ஜனநாயக விரோத மற்றும் அதிகளவில் விரும்பப்படாத இராணுவ ஆட்சிக்கு ஆதாரமளிக்கும் முக்கிய காரணி, வாஷிங்டனில் இருந்து கிடைக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவேயாகும்.

Top of page