World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Sharon forced to call new elections

100,000 march for peace in Tel Aviv

இஸ்ரேல்: ஷரோன் புதுத் தேர்தலுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்.

ஓரு லட்சம் பேர் டெல்அவீவில் பேரணி

By David Cohen
9 November 2002

Use this version to print | Send this link by email | Email the author

இஸ்ரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோன், ஜனாதிபதி மோஷே கட்ஸாவிடம், நெஸ்ஸெட் (இஸ்ரேலிய பாராளுமன்றம்) -ஐ கலைக்க கேட்டுக்கொண்டார். தொழிற் கட்சி அரசை விட்டு விலகிய பின், ஷரோன் புதுக் கூட்டணிக்கான பெரும்பான்மையைக் காட்ட முடியாது போயிற்று. அரசு தொடர்வதற்கான அதிவலதுசாரிகளைத் திருப்தி அடையச் செய்யவும் அவர் தன்னால் இயன்றதையெல்லாம் செய்தார், ஆனால் பயனற்றதாயிற்று.

ஷரோன், முன்னாள் இராணுவத் தலைவர் ஷால் மொபாஸை (Shaul Mofaz) அடுத்த பாதுகாப்பு அமைச்சர் ஆக்கிட, முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவினை ஷிமோன் பெரசுக்குப் பதிலாக வெளியுறவு அமைச்சர் ஆகும்படி கேட்டார். ஒஸ்லோவின் 1993ம் ஆண்டு அமைதி ஒப்பந்தங்களை வெளிப்படையாக மறுத்தவர்களை அரசின் தலைமைப் பொறுப்புக்களில் அமர்த்தினார்.

நெத்தன்யாகு விரைவில் அடுத்த தேர்தலுக்கான தேதி - நவம்பர் 2003க்கு பதிலாக பெப்ரவரியோ அல்லது மார்ச்சோ- அறிவிக்கப்பட்டால் மட்டுமே தான் வெளியுறவு அமைச்சராக ஒப்புக்கொள்வேன் என்று வற்புறுத்தினார். ஷரோன் நெத்தன்யாகுவின் வற்புறுத்தலை ஏற்க மறுத்து, தேசிய ஒற்றமை- இஸ்ரேல் தாயகம் எனும் வலதுசாரி குடியேற்றக்காரர்களின் கட்சியை அரசுடன் சேர்த்து அதை வீழ்ச்சியின்று காக்க கேட்டுக்கொன்டார். அதன் ஒரு பிரிவின் (கன்னையின்) தலைவரான அவிக்தோர் லீபர்மான் (Avigdor Lieberman) அரஃபாத்தை வெளியேற்றல் உட்பட, பாலஸ்தீன நிர்வாகத்தை ஒழிக்க பாலஸ்தீனியருக்கு எதிரான கட்டுப்பாடற்ற இராணுவ போராட்டத்தை தொடுக்க ஷரோன் உடன்பட்டாலன்றி கூட்டணியில் சேர அவர் மறுத்தார். ஈராக்கிற்கு எதிரான போருக்காக, அரபுக்களின் ஆதரவைப் பெறும் தமது முயற்சிகளில் பிளவு படுத்தும்படியாக, பொதுக்கொள்கையில் எந்த மாற்றமும் வேண்டாம் என புஷ் நிர்வாகம் வலியுறுத்துவதால் ஷரோனால் இதை செய்ய இயலவில்லை.

இவ்வாறு ஷரோன் தேவைப்பட்ட ஆதரவாளர் அறுபத்தி ஒருவரை நெஸ்ஸெட் இல் திரட்ட வென்றெடுக்க முடியாது போனது, தனது கொள்கைகள் எதிர்கட்சிகளால் தடுக்கப்படும் முடமாகிப்போன நிர்வாகத்தின் பொறுப்பாளராக ஆக்கியது. நெத்தன்யாகுவின் கோரிக்கையான முன்கூட்டியே தேர்தல் என்பதை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லாதுபோயிற்று. பிரதமர் பதவிக்கான நபர் யார் என தெரிவு செய்யும் பொழுது லிக்குட் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஷரோனும் நெதன்யாகுவும் அடுத்த மாதம் போட்டியிடுவர்.

மத்திய குழுவால் நடத்தப்படும் தேர்தலில் நெதன்யாகுவை ஷரோன் குறுகிய வித்தியாசத்தில் வெல்வார் என தற்போதைய கணிப்புக்கள் கூறுகின்றன. தொழிற்கட்சியோ முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான பின்யமின் பென்-எலைசர் (Binyamin Ben-Eliezer) என்பவருக்கு முன்னணியில் நிற்கும், ஹைப்பா நகர மேயர் அம்ரம் மிர்ஸ்னா (Amram Mitzna) மற்றும் நெஸ்ஸெட் இல் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான குழுத் தலைவர் ஹைம் ரமோன் ஆகியோரிடையேயான தெரிவில் மூழ்கியுள்ளது. இப்போதைய கணிப்புப்படி லிக்குட் கட்சிக்கே வெற்றி கிடைப்பினும் இஸ்ரேலில் பரந்துபட்ட ஸ்திரமின்மையும் சமூக மற்றும் அரசியல் துருவமுனைப்படலுக்கான களம் உறுதி செய்யப்படுகிறது.

லிக்குட் கட்சியின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகள் மற்றும் பாலஸ்தீனியருக்கு எதிரான அதன் போர் ஆகியவற்றுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் எதிர்ப்பால், பென்-எலைசர் கூட்டணியிலிருந்து விலகுவதற்கு நிர்பந்திக்கப்பட்டார். ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் நூறாயிரக்கணக்கான இஸ்ரேலிய ஷெக்கல்களில் (பண்டைய யூதரின் வெள்ளி நாணையம்) முதலிட நினைத்த ஷரோனின் திட்டத்திற்கு நெருக்கடி தருவதாக அமைந்தது. தமது சொந்த அரசியல் மரண எச்சரிக்கையில் அரசாங்கம் கையெழுத்தின்றி தொழிற்கட்சியும் ஆதரவைத் தொடரமுடியாது போயிற்று.

ஷரோன் மற்றும் லிக்குட்டுடன் கூட்டணியில் தொழிற்கட்சிக்கு தலைமை வகித்த ஷிமோன் பெரஸ் ஹரெட்ஸ் -ல் எழுதினார்: ''மக்கள் பசித்திருக்கையில் சமூக பிரச்சனையே நமது நிழ்ச்சி நிரலில் முதலாவதாக இருந்தாக வேண்டும். பொருளாதாரத்தை சீர்செய்யாது சமூக நிலையை மாற்ற முடியாது. இஸ்ரேலில் முதலீடுகள் புதுப்பிக்கப்படாது சுற்றுலா பயணிகள் மீண்டும் வராதவரை, இஸ்ரேலிலிருந்து முதலீடு வெளிச்செல்வது நிறுத்தப்படாதவரை, குறுகிய நோக்கத்திற்காக நிதி நிலை அறிக்கை செய்யும் வரை பொருளாதாரம் மீளாது. பாதுகாப்பு நிலை ஸ்திரமில்லாத வரையிலும் சமூக மற்றும் பொருளாதார சீரழிவுக்கான அடிப்படை நிலைமைகள் மாறாது'' என்றார்.

லிக்குட்-க்கு எதிராகத் தாராண்மை எதிர்ப்புக் குரலை எழுப்புவதாக கருதப்படும் ஹரெட்ஸ் வெளியேறும் அரசாங்கம் கவிழ்வது வரவேற்கத்தக்கது. இஸ்ரேலிய வரலாற்றில் அரசாங்கங்களில் மட்டமான ஒன்றாக அது நினைவுகூரப்படும். நாட்டை சரியான வழியில் இட்டுச்செல்லவும் இழப்பை ஈடுகட்டவும் வரும் தேர்தல் ஒரு நேர்மையான கூட்டணியைத் தருமென நம்புவோம் என்றது. ஆனால் தேர்தலுக்கு முற்போக்கான வெளிப்பாடு என்பது, ஷரோன் மேலும் தொடரமுடியாத நிலைவரை தாங்கிப் பிடித்த தொழிற் கட்சியுடன், அரசியல் ரீதியாக தொழிலாள வர்க்கம் முறித்துக் கொள்வதை சார்ந்து இருக்கிறது.

நியூயோர்க் போஸ்ட் இன் மத்திய கிழக்கு செய்தியாளரும் ஷரோனின் நெருங்கிய நண்பருமான ஊரி டான், லிக்குட் கட்சிக்கு தொழிற்கட்சி செய்த உதவி பற்றி சரியாக, வலதுசாரி ஜெருசலேம் போஸ்ட்- ல் எழுதினார்: ''நோபல் பரிசு வென்ற ஷிமோன் பெரஸ் அரசாங்கத்தில் ஒத்துழைப்பதன் மூலம் மட்டுமே ஷரோன் இன்னொரு நோபல் பரிசு வென்ற யாசிர் அரபாத்தை அசட்டை செய்ய முடியும்.'' பில் கிளின்டன் ஜனாதிபதியாக இருக்கையில், பெரஸூம் சேர்ந்து, செப்டம்பர்,13,1993 அன்று அரபாத்துக்கு, கதவை திறந்து விடுகின்ற, பயங்கர வரலாற்றுத் தவறுக்குப்பின் வெள்ளை மாளிகை இப்போது அரபாத்துக்கு மூடப்பட்டுள்ளது. ஷரோன், பின்னியமின்-பென் எலைன் மற்றும் ஷிமோன் பெரசுடன் சேர்ந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு சுதந்திரத்தை மீட்டுத்தரவும் -அவர்கள் பயங்கரவாதிகளை விசாரிப்பதோ, கொல்வதோ கைது செய்வதோ- மேற்கு கரையை விட்டு திரும்பவும் காசாபகுதிக்கு தேடுதல் வேட்டை நடத்தவும் -வேறு வார்த்தைகளில் சொன்னால், நாள் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடியும்'' என்றார். முடிவாக ''தனது இருபது மாதங்கள் கொண்ட தேசிய ஒற்றுமை அரசின் தலைமையை ஏற்ற ஷரோன், கரும்பலகையிலிருந்து ஒஸ்லோ சோகத்தை துடைத்தழிக்க அழிப்பானாக தொழிற் கட்சியை மாற்றிவிட்டார்" என்றார்.

தொழிற்கட்சியின் வலதுசாரி வரைகோடு, ஷரோனின் போருக்கு, வரவு-செலவுத் திட்டத்தில் வெட்டுக்கு எதிர்ப்புக்கள் கடைசி அணிகளுக்கு வெளியே பெருமளவில் வளர்ந்து வருவதை அர்த்தப்படுத்துகின்றது. சென்ற வாரம் ரெல் அவீவில் ஒரு லட்சம் பேருக்கு மேலானோர் நடத்திய அமைதிப் பேரணியைக் கண்டது. குஷ்ஷலோம் அமைதி இயக்கத்தின் பேச்சாளர் ஆதாம் செல்லர், முன்னணி தொழிற்கட்சி அமைச்சர் மற்றும் எம்கே (இஸ்ரேலின் பாராளுமன்ற அங்கத்தவர்) இன் வராமை பற்றி குறைகூறினார்.

அவர் இந்த ஆண்டு பேரணியில் கலந்து கொள்வது குறைந்த பட்சமாக -மற்ற இரு ஆண்டுகள் போலன்றி பாலஸ்தீனியர்களுக்கு எதிரான போரில் நேரடியாக ஈடுபட்ட- நவம்பர் 2000, பேரணியில்... பிரதமர் எகு பாரக், 2001 பேரணியில் துணைப் பாதுகாப்பு அமைச்சர் டாலியா ராபின் பெலோசோப்- மைய பேச்சாளர் உரையைக்கேட்டு மன வேதனைக்குள்ளாக்குவது சம்பந்தப்பட்டது அல்ல.

"ஆக இந்த ஆண்டு ராபின் பேரணியில் (முன்னாள் தொழிற்கட்சி பிரதமர் வலதுசாரி மத வெறியரால் கொல்லப்பட்டவர்) 7, ஆண்டுகளுக்கு பின் ஆயினும், அதிகாரபூர்வமாக "கட்சி சார்பற்றதாய்" வலிந்து அறிவிக்கப்பட்டமை ஒரு வகையில் புது அரசியல் உண்மையை வெளிக்காட்டலாக இருந்தது. மற்ற காலங்களில், 'நாங்கள் அமைதியை விரும்புகிறோம்' எனும் பெரும் அறிவிப்பு வெறும் ஆவலாகவோ அல்லது கடமை பேணுகிற ஆவலாகவோ இருந்திருக்கலாம்; 2002 நவம்பர், இஸ்ரேலில் அது இன்னும் கூடியதாக இருந்தது: பெரிதும் இளைஞர்களைக் கொண்ட ஒரு லட்சம் பேர் கொண்ட கூட்டம், "அமைதி இறந்து விட்டது" என்ற போக்கை சவால் செய்தது.

உலக சோசலிச வலைத் தளம், ஈராக்கிற்கு எதிரான போரை எதிர்க்கும் வெளியீடுகளை விநியோகித்தது. அது ஊர்வலத்தில் கலந்து கொண்டோர், வெளிநாட்டு நிருபர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது. பெரும்பாலானோர் உ.சோ.வ.த- வை அறிந்திருப்பதாகவும் தொடந்து படித்து வருவதாகவும் கூறினர்.

உலக சோசலிச வலைத் தளம் ஊர்வலத்தில் பங்கேற்ரோரைப் பேட்டி கண்டது. ஷரோனுடன் ஒத்துழைப்பதற்காக தொழிற் கட்சியின் மீது ஆர்ப்பாட்டத்தினர் கசப்பு தெரிவித்தனர்.

சுமி (26,வயது) எனும் ரெல் அவிவ் பல்கலைக் கழக மாணவர்: "மாணவர் தொழிலாளர், இளைஞர் மற்றும் ஓய்வு பெற்றோரின் (இளைப்பாறியோரின்) எதிர் காலம் பற்றிய, உண்மையான அக்கறையால் தொழிற் கட்சி ஷரோனை விட்டு விலகியது என்பதை என்னால் நம்பமுடியாது. அவ்வாறு ஏன் செய்ததெனில், லிக்குட் கட்சி இஸ்ரேலிய மக்களின் அக்றை கொண்ட பகுதியையும் தொழிற்கட்சி தலைவர்களையும் வென்றெடுத்து, தமது கட்சியை மீண்டும் கட்டி அமைக்க என்பதை தொழிற் கட்சி அறியும். ஆயினும், நானறிந்த வரை இதுவே மட்டமான ஆட்சி நாம் ஷரோனை கீழ் இறக்க வேண்டும். வலது சாரியினருடனான ஷரோனின் அரசாங்கம் இஸ்ரேல் அரசியலில் புது காலகட்டத்தைக் குறிக்கும். அதுவும் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் பெரும்பான்மையான மக்களைக் கைவிட்டுவிட்டு, பணத்தை தொழிலில் முதலீடு செய்யும் செய்வதன் காரணமாக" எனக் கூறினார்.

டெப்ரா (37,வயது) எனும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்: ''புஷ்ஷின் ஈராக் மீதான போர், 'ஜனநாயகம்' அல்லது 'பேரழிவுகர ஆயுதங்கள்' பற்றியது அல்ல என்பதில் நான் உடன்படுகின்றேன். 1990களுக்கு முன் ஹூசேனின் (சதாம்) பின்னே அமெரிக்கா தான் நின்றதென ஏன் பத்திரிகைகள் வெளியிடுவதில்லை? ஏன் பத்திரிகைகள் இது எண்ணெய்க்கான போர் எனும் உண்மையை ஏற்பது இல்லை? எனது அச்சம் எல்லாம், ஈராக்கில் சதாம் மட்டும் இல்லை என்றால் ஆப்கானிஸ்தான் போல அமெரிக்கா எங்கும் சர்வாதிகாரத்தை காட்டியிருக்கும் என்பதுதான். இந்த ஆட்சியாளர் மீண்டும் பேரழிவு ஆயுதங்களை பின்நாளில் தயாரிக்கமாட்டார் அவரின் ஆதரவாளர் அமெரிக்காவை ஏமாற்றமாட்டார் என யார் எமக்கு உறுதி அளிக்க முடியும்?'' என்றார்.

சில்வியா எனும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கூறினார்: "உ.சோ.வ.த-வை படிப்பது மிக நன்றாக இருக்கிறது. என்ன வியப்பு! நான் நூற்றுக்கு நூறு தொழிற் கட்சி ஆதரவாளன் எனினும் உங்கள் பிரிட்டிஷ் நண்பர்கள் சொல்லுவதை பெரும்பாலும் உண்மை என்றே கருதுகிறேன். இஸ்ரேலுக்கு வந்து பார்த்தேன், மொத்தத்தில் நான் அதிர்ச்சி அடைந்தேன். இஸ்ரேல் அரசு, மக்களின் வாழ்வை நரகத்தில் தள்ளியிருக்கிறது. ஆக்கிரமிப்புத்தான் பொருளாதார வீழ்ச்சியின் பிரதான காரணி. மேலை நாடுகள் எதிலும் இந்த அளவுக்கு அதிகமான சமூகப் பிணிகளை: வறுமை, பிச்சை எடுத்தல், பட்டினி இவற்றை காணமுடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு விருப்பமே'' என்றார்.

"இஸ்ரேலையும் பாலஸ்தீனர்களையும் காக்கும் ஒரே வழி எதுவெனில், ஜெருசலேத்தை தலைநகராக்கி பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் பக்கத்தில் வைத்திருப்பதே."

எய்டன் (21,வயது) இஸ்ரேலின் பாதுகாப்பு படை வீரர் கூறுவதாவது, "மேற்கு கரையிலோ காசாவிலோ நான் பணியாற்ற மாட்டேன். தங்களை அச்சத்திலிருந்து காத்துக்கொள்ள ஆட்சியாளர்கள் எங்களை மனிதக்கேடயமாகப் பயன்படுத்துவதாகவே எண்ணுகின்றேன். நாம் ஷரோனையும் அரபாத்தையும் பதவி இறக்க வேண்டும். நான் தொழிற் கட்சியை ஆதரிக்கமாட்டேன் காரணம் இளைய தலைமுறையிடமிருந்து விலகி நிற்கும் பணக்காரத் தட்டினரின் கட்சியான அது, முதலாளித்துவ வாதிகளையும் கொள்ளையர்களையும் கொண்டுள்ளது!. எனக்கு ஜனநாயக சோசலிசம், சுதந்திரம், குடிமக்கள் உரிமை மற்றும் மனித உரிமைகள் பற்றிய அரசியலில் நம்பிக்கை உண்டு ராபின் நம் நாட்டை சமூக ஜனநாயக அம்சங்கள், எதிர்கால அமைதி மற்றும் மக்கள் சுதந்திரம் இவை நோக்கி இட்டுச்சென்றார். அமைதிக்கும் விடுதலைக்கும் பாடுபடும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சியை கட்டி எழுப்புவதன் மூலமே ஷரோனை வெளியேற்ற முடியும்.

Top of page