World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The war against Iraq and America's drive for world domination

ஈராக்கிற்கு எதிரான போரும் உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க முன்னெடுப்பும்

By David North
4 October 2002

பகுதி-1 |பகுதி-2 |பகுதி-3

Use this version to print | Send this link by email | Email the author

பின்வருவது உலக சோசலிச வலை தளத்தின் ஆசிரியர் குழு தலைவரான, டேவிட் நோர்த்தால் அக்டோபர் 1, 2002 அன்று அன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பலர் வருகை தந்திருந்த பகிரங்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிக்கை ஆகும்.

செப்டம்பர் 17, 2002 அன்று புஷ் நிர்வாகமானது அதன் "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தை" வெளியிட்டது. இந்த முக்கியமான பத்திரம் பற்றி செய்தி ஊடக அமைப்பில் இதுவரையிலும் அக்கறை கொண்ட ஆய்வு எதுவும் இல்லாமல் இருந்து வருகிறது. குறைந்த பட்சம் சொன்னால், இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால் இந்தப் பத்திரம் அமெரிக்க இராணுவ வாதத்தின் பிரம்மாண்டமான வெடிப்புக்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த நியாயத்தை முன்னெடுக்கின்றது. அப்பத்திரமானது உலகில் எங்கும், அது தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்திலும் அமெரிக்க நலன்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் என நம்பும், அல்லது சில கட்டங்களில் அச்சுறுத்தலாக ஆகும் எனக் கருதும் எந்த நாட்டிற்கும் எதிராக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை ஐக்கிய அமெரிக்க அரசுகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக வலியுறுத்துகின்றது. இப்பொழுது ஐக்கிய அமெரிக்க அரசுகளால் செய்யப்பட்டுக் கொண்டிருப்பது போல், பூகோள தலைமை நிலைக்கு --அல்லது, மிகவும் அப்பட்டமாகக்கூறினால், உலக மேலாதிக்கத்துக்கு-- அத்தகைய ஒரேயடியான கூற்றை வலியுறுத்தி இருப்பது நவீன வரலாற்றில்வேறு எந்த நாடும் இல்லை, ஹிட்லரின் பைத்தியக் காரத்தனத்தின் உச்சியில் நாஜி ஜேர்மனி கூட இருந்ததில்லை.

இந்தப் பத்திரத்தின் செய்தியானது அதன் சிடுமூஞ்சித்தனமான இடக்கரடக்கலை (தீய சொல்லை மறைத்துக் கூறும் மங்கல் சொல்லை) மற்றும் திட்டமிட்ட மழுப்புதலை துகிலுரித்தது தவறில்லாமல் தெளிவாகிறது. ஐக்கிய அமெரிக்க அரசுகள் அது தேர்ந்தெடுக்கும் நாட்டின் மீது குண்டு வீசுவதற்கான, ஆக்கிரமிப்பதற்கான மற்றும் அழிப்பதற்கான உரிமையை உறுதிப்படுத்திக் கூறுகிறது. வேறு எந்த நாட்டின் இறையாண்மை பற்றிய சர்வதேச விதிமுறையின் விஷயத்தில் அது மதிப்பதற்கு மறுக்கிறது, மற்றும் உலகின் எந்த பகுதியிலும் உள்ள, அதாவது ஐக்கிய அமெரிக்க அரசுகள் அதன் முக்கிய நலன்கள் என்று கருதப்படுவனவற்றுக்கு பகையாக தோன்றக்கூடிய அல்லது என்றோ ஒரு நாள் ஆகக் கூடிய ஆட்சிக்கு, எந்த ஆட்சியிலுருந்தும் விடுபடுவதற்குள்ள உரிமையை தனக்கு ஒதுக்கி வைக்கின்றது. குறுகிய காலத்தில் அதன் அச்சுறுத்தல்கள், "தோல்வியுற்ற அரசுகள்" என அழைக்கப்படுவதற்கு எதிராக விடுக்கப்பட்டன --அதாவது, ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் கொள்கைகளால் சூறையாடப்பட்ட ஏழ்மை பீடித்த மற்றும் முன்னாள் காலனிகளான மூன்றாம் உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஏகாதிபத்திய காட்டுமிராண்டிப் பேச்சைப் புதுப்பிப்பதில், பத்திரம் "பெரும் வல்லரசுகள்" என குறிக்கும் ஐக்கிய அமெரிக்க அரசுகளின் பெரும் போட்டியாளர்கள், புஷ் நிர்வாகத்தின் துப்பாக்கி இலக்குகளில் எந்த வகையிலும் வைக்கப்படவில்லை. ஐக்கிய அமெரிக்க அரசுகள் இப்பொழுது தயாரித்துக் கொண்டிருக்கும் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளுக்கு எதிரான போர்கள் --அனைத்திற்கும் முதலாவதாக ஈராக்கிற்கு எதிரான போர்-- மிகவும் வல்லமை மிக்க இலக்குகளுக்கு எதிரான இராணுவ கடுந்தாக்குதலுக்கான தயாரிப்பாக இருக்கும் என நிரூபிக்கும்.

இப்பத்திரமானது "ஐக்கிய அமெரிக்க அரசுகள் உலகில் முன்னர் என்றுமிருந்திாரத --மற்றும் சமமற்ற -- பலத்தையும் செல்வாக்கையும் பெற்றிருக்கிறது" என்ற செருக்குடன் ஆரம்பிக்கின்றது. "ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் நமது மதிப்பு மற்றும் நமது தேசிய நலன்களின் ஐக்கியத்தை எதிரொலிக்கும் வேறுபட்ட அமெரிக்க சர்வதேசிய வாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்" என்ற மூச்செடுக்கும் தன்முனைப்புடன் அது அறிவிக்கின்றது. இந்த சூத்திரம் அது நினைவு கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தைக் கவருகிறது: அமெரிக்க மதிப்புக்கள் + அமெரிக்க நலன்கள் = ஒரு வேறுபட்ட அமெரிக்க சர்வதேசியம். அது அமெரிக்காவுக்கு எது நல்லதோ அது உலகத்திற்கு நல்லது என உறுதிப்படுத்தும் ஒரு மிகவும் வேறுபட்ட வகையிலான சர்வதேசியம்! இந்தப் பத்திரத்தின் முன்னுரையில் புஷ் உறுதிப்படுத்துகின்றவாறு, அமெரிக்காவின் மதிப்புக்கள் "ஒவ்வொரு சமுதாயத்திற்கும், ஒவ்வொரு நபருக்கும் சரியானது மற்றும் உண்மையானது..."

இந்த மதிப்புக்கள், "தனிச்சொத்துடைமைக்கான மதிப்பு"; வர்த்தக முதலீட்டை, புதுமுறை காணலை, மற்றும் தொழில்துறை உரிமையாளர் நடவடிக்கை ஆகியவற்றை ஊக்கப்படுத்துகின்ற வளர்ச்சி சார்பான சட்டரீதியான மற்றும் ஒழுங்குமுறை கொள்கைகள்"; "வரிக்கொள்கைகள்--வேலைக்கான ஊக்கத் தொகையை முன்னேற்றும் மற்றும் முதலீட்டை முன்னேற்றும்-- குறிப்பாக குறைந்த விளிம்பு நிலை வட்டிவீதங்கள்; மூலதனத்தை அதன் மிகத் திறமையான பயன்படுத்தத்தில் வைப்பதற்கு அனுமதிக்கும் வலுவான நிதி அமைப்பு முறைகள்"; "வர்த்தக நடவடிக்கைக்கு ஆதரவு தரும் நல்ல நிதிக் கொள்கைகள்" போன்ற-- அமெரிக்க செல்வராட்சியின் நன்கறியப்பட்ட அரசியல் சமூக சீர்திருத்த சட்டங்களின் தொகுப்பு தவிர வேறு எதுவும் அல்ல. அப்பத்திரம் பின்வருமாறு அறிவிக்கின்றது: "வரலாற்றுப் படிப்பினைகள் தெளிவாக இருக்கின்றன: சந்தைப் பொருளாதாரங்கள், அரசாங்கத்தின் கடும் தலையீட்டில் பொருளாதாரங்களை ஆணையிடுவன மற்றும் கட்டுப்படுத்துவன அல்லாதிருப்பது, முன்னேற்றத்தைக் கொண்டுவருதற்கான மற்றும் வறுமையைக் குறைப்பதற்கான சிறந்த வழியாக இருக்கின்றன. சந்தை ஊக்கத்தொகைகளை மற்றும் சந்தை நிறுவனங்களை மேலும் பலப்படுத்தும் கொள்கைகள் எல்லாப் பொருளாதாரங்களுக்கும் -தொழில்துறை நாடுகள், தோன்றிக் கொண்டிருக்கும் சந்தைகள், மற்றும் வளர்ச்சி அடைந்து-- கொண்டிருக்கும் உலகம் அனைத்திற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன."

இந்தவிதமான வலதுசாரி வெற்றுரைகள் ஆழமாகிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடிக்கு இடையில் ஒன்றை உறுதிபடக் கூறுகின்றன, அதில் முழுக் கண்டங்களும் சந்தைப் பொருளாதாரங்களின் விளைபயன்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றன, அது அவற்றின் சமூக உள்கட்டமைப்புக்கள் என ஒருசமயம் நிலைகொண்டிருந்தவற்றை தகர்த்திருக்கின்றது மற்றும் பில்லியன் கணக்கான மக்களை விவரிக்க முடியாத நிலைமைகளுள் ஆழ்த்தியுள்ளது. சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் கலைந்துபோன மற்றும் அதன் முதலாளித்துவ மீட்சியின் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ரஷ்யாவின் இறப்புவீதம் அதன் பிறப்பு வீதத்தை மிஞ்சுகிறது. சர்வதேச நாணய நிதியம் அதன் சமூகவிரோத பரிசோதனைகளை எக்களிப்புடன் நடைமுறைப்படுத்தும் ஒரு ஆய்வுக் கூடமான தென் அமெரிக்கா, ஒரு பொருளாதார சிதைவு நிலையில் இருக்கின்றது. தென் ஆபிரிக்காவில், மக்கள் தொகையின் கணிசமான பகுதியினர் ஹெச்.ஐ.வி (HIV) வைரஸ்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலக வங்கியின் படி,

"எய்ட்ஸ் நெருக்கடியானது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் மீது, சிறப்பாக ஆபிரிக்காவில் அழிவுகரமான பாதிப்புக்களைக் கொண்டிருக்கிறது. --ஒவ்வாத மற்றும் மோசமான நிர்வாகம் அவற்றுடன், எய்ட்ஸ் பாதிப்பால் பலவீனப்பட்டிருக்கும், சுகாதாரப் பராமரிப்பு அமைப்புமுறைகள் பாரம்பரிய நோய்களுடன் சமாளிக்க முடியவில்லை. மலேரியா மற்றும் காசநோய் பத்துலட்சக்கணக்கான மக்களைக் கொல்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது -- மலேரியா மட்டுமே ஆபிரிக்க துணை சஹாராவில் சராசரியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதங்களை ஆண்டுக்கு சராசரியாக 0.5 வீதம் குறைப்பதாக மதிப்பிடப்படுகிறது. இந்தப் பிராந்தியத்தில் வாழ்நாள் எதிர்பார்ப்பு 1987ல் 50 ஆண்டுகளாக இருந்ததில் இருந்து 1999ல் 47 ஆண்டுகளாக குறைந்துள்ளது; எய்ட்சால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் (போஸ்ட்வானா, சிம்பாப்வே, தென் ஆபிரிக்கா மற்றும் லெசாத்தோ போன்றவற்றில்) சராசரி ஆயுட் காலம் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமானவற்றால் குறுக்கப்பட்டிருக்கிறது."[1]

இந்த அழிவுகரமான சூழ்நிலைகள் முதலாளித்துவ அமைப்பு முறையின் மற்றும் சந்தையின் ஆட்சியின் உற்பத்தி ஆகும். இந்த மூலோபாய பத்திரம் "மனித இனத்தின் பாதிப்பகுதியினர் ஒரு நாளைக்கு 2 டாலர்களுக்கும் குறைவான பணத்தில் வாழ்கின்றனர்" என கூறுவதில் உறுதிப்படுத்துகிறது, ஆனால், எதிர்பார்க்கப்படுவது போல், புஷ் நிர்வாகத்தினால் பெறப்பட்ட குறிப்பு, உலகம் முழுவதிலும் நிலைகொண்டிருக்கும் துன்பத்திற்கு பொறுப்பான பொருளாதாரக் கொள்கைகளை மிகவும் தீவிரமாகப் பயன்படுத்தலாக இருக்கிறது.

" வேறுபட்ட அமெரிக்க சர்வதேசியம்" என்ற அதன் கருத்தை வரையறை செய்கையில், பத்திரமானது "சர்வதேச சமூகத்தின் ஆதரவை பட்டியலிட ஐக்கிய அமெரிக்க அரசுகள் மாறாது முயற்சிக்கும் அதேவேளை, தனியாக செயல்படுவதற்கு நாம் தயங்கமாட்டோம்..." என விளக்குகின்றது. இன்னொரு பந்தியில், ஐக்கிய அமெரிக்க அரசுகள் "எமது பூகோளப் பாதுகாப்பில் மேற்கொள்ளப்படும் பொறுப்புக்களை மற்றும் அமெரிக்கர்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நிறைவேற்றுதற்கான எமது முயற்சிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் (ICC) புலனாய்வு செய்யப்படுவதால், விசாரிக்கப்படுவதால் மற்றும் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படுவதால் பாதிப்படையாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும், அதன் விசாரணை அதிகாரம் அமெரிக்கர்களுக்கு நீட்டிக்கப்படவில்லை மற்றும் நாம் அதனை ஏற்கவில்லை" என எச்சரிக்கிறது. வேறுவார்த்தைகளில் சொன்னால், ஐக்கிய அமெரிக்க அரசுகளின் தலைவர்களின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின் மாநாடுகளால் கட்டுப்படுத்தப்படாது.

நூரெம்பேர்க் போர்க்குற்றங்கள் நடுவர் மன்றம்

நூரெம்பர்க் போர்க்குற்றங்கள் நடுவர் மன்ற ஆய்வு ஒன்றில், அமெரிக்கத்தரப்பு தலைமை வழக்கறிஞரின் உதவியாளராக பணியாற்றிய, றொபர்ட் ஹெச். ஜாக்சன் (Robert H. Jackson) --போரின் விதிகள் வென்றடக்கப்பட்ட தேசங்களின் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளுக்குப் பொருந்தாது. ஆய்வுக்குள்ளாக்கப்படுவதிலிருந்து நாடுகளை காப்புத்தடை செய்துகொள்வதற்கான தார்மீக மற்றும் சட்டரீதியான அடிப்படை இல்லை. போரின் விதிகள் ஒரு வழிப்பாதை கொண்ட தெரு அல்ல. "[2] சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் அங்கீகரிக்க மறுப்பது மிகப் பெரிய சர்வதேச அரசியல் முக்கியத்துவம் உடையதாகும், மற்றும் தங்களின் கொள்கைகள் குற்றத்தன்மை வாய்ந்தவை மற்றும் சர்வதேச சட்டம் அமல்படுத்தப்பட்டால், அவர்களை மிகவும் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கக் கூடும் என்ற அமெரிக்க தலைவர்களின் கூர்ந்த விழிப்புணர்வுக்கு அது சான்றளிக்கிறது.

டெல்போர்ட் டெய்லர் (Telford Taylor) வலியுறுத்துகின்றவாறு, நூரெம்பேர்க் வழக்கு விசாரணையில் நாஜித் தலைவர்களின் வழக்கு விசாரணை புதியசட்டக் கருத்துருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது: ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கான முடிவு மற்றும் அவர்களின் திட்டமிடல் ஒரு குற்றத்தைக் கொண்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் குடிமக்களுக்கு, யூதர்களுக்கு எதிராக மற்றும் போர்க் கைதிகளுக்கு எதிராக நாஜிக்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களில் எண்ணிக்கையில் கூட முந்திச்சென்றது. டெய்லரால் தயாரிக்கப்பட்ட நினைவுக்குறிப்பு ஆக்கிரமிப்புப் போரைத் திட்டமிட்டதற்காக நாஜிதலைவர்களை குற்றம்சாட்டுவதற்கு ஆதரவாக வாதிக்கின்றது, அவர் எழுதினார்:

"ஆக்கிரமிப்புப் போர்க் குற்றம் செய்தல் ஒரு குற்றம் என முன்னர் எந்த நடுவர் மன்றமும் என்றும் தீர்மானிக்காவிட்டாலும், ஆக்கிரமிப்புப் போர்க் குற்றம் செய்பவர் அவரது குற்றச்செயலுக்காக தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இடரில் உள்ளதாக நடிப்பார் என்ற முடிவால், அதிர்ச்சிக்குள்ளாக்கப்படுவதாக மிக இழிவான சட்டவாதிகள் மட்டுமே பாசாங்கு செய்ய முடியும்."[3]

டெய்லர் தொடர்ந்தார்:

"வழக்கு போருக்கான காரணம் பற்றிய விசாரணையாக ஆகவில்லை என்பது முக்கியமானது. போருக்கான முற்றமுழு காரணம் ஹிட்லரிசமாக இருந்தது என்று அது நிலைநாட்டப்பட முடியாது, மற்றும் அங்கு இதனைச் செய்வதற்கு முயற்சி இருக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல நாடுகள் மத்தியில் போரை விளைவித்ததற்கான பொறுப்பினை பங்கிட்டுக் கொடுப்பதில் எந்த முயற்சியும் அல்லது நேரமும் அங்கு செலவழிக்கப்பட்டு இருந்திருக்கும் என நானும் நம்பவில்லை. காரணம் பற்றிய பிரச்சினை முக்கியமானது மற்றும் அது பல ஆண்டுகளுக்கு விவாதிக்கப்படும், ஆனால் அதற்கு இந்த வழக்கு விசாரணையில் இடமில்லை, போரைத் தொடுப்பதற்கும் திட்டமிடுவதற்கும் பிரதிவாதிகளைப் பாதித்தது என்னென்ன காரணிகளாகவும் இருக்கலாம், அது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தல் மற்றும் திட்டமிடுதல் சட்டவிரோதமானது என்ற கோட்பாட்டை விடாது பற்றுவதில் கடுங்கண்டிப்பாய் கட்டாயம் இருக்க வேண்டும். பங்களிப்பு செய்த காரணிகள் பிரதிவாதிகளால் வரலாற்றின் முறைமன்றத்தில் சாக்குப்போக்காக காரணங்கூறி வாதாடப்படலாம், ஆனால் நடுவர் மன்றத்தின் முன் அல்ல."[4]

இந்தப் பிரச்சினை --ஈராக்கிற்கு எதிரான தூண்டப்படாத அமெரிக்க போர் ஒன்றுக்கான மற்றும் தற்போதைய நடந்து கொண்டிருக்கும் மிகவும் முன்னதான தயாரிப்புக்கள் தொடர்பாக மட்டும் முக்கியத்துவம் உடையதாக அல்லாமல், இன்று பிறவகையிலும் அசாதாரணமான முக்கியத்துவம் உடையதாகும். நூரெம்பேர்க்கில் நிலைநாட்டப்பட்ட முன்நிகழ்வு ஏதாவது நிகழ்காலப் பொருத்தத்தைக் கொண்டிருக்குமானால், இந்தப் பத்திரத்தில் நுட்பமாக விளக்கப்பட்ட முழு மூலோபாயமும் சர்வதேச விதியின் எல்லைகளுக்கு வெளியில் செல்கிறது. இந்தப் பத்திரத்தில் வலியுறுத்தப்பட்ட, அமெரிக்க மூலோபாயத்துக்கு அத்திவாரமாக சேவைசெய்யும் அடிப்படைக்கூற்று, தாக்குதலுக்கான தெளிவான மற்றும் ஆதாரம் காட்டத்தக்க அச்சுறுத்தலைத் தடுப்பதற்கு தான் செயல்படுகிறது என, நம்பத் தகுந்த ஆதாரங்களை வழங்காமல், இன்னொரு நாட்டுக்கு எதிராக ஒரு தலைப்பட்சமான இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு உள்ள ஐக்கிய அமெரிக்க அரசுகளின் உரிமை ஆகும். எப்பொழுதெல்லாம் தீர்மானிக்கிறதோ அப்பொழுது அவ்வாறு செய்வதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதற்கு அனைத்து வகையிலும் சூழ்ந்து கொண்ட அரசுகளின் இந்த வலியுறுத்தலானது, மேலோட்டமான ஆய்வுகளுடன் கூட ஈடுகொடுக்க முடியாத இறுக்கமில்லாமல் -வடிவமைக்கப்பட்ட மொழியுடன் நியாயப்படுத்தப்படுகிறது: "போக்கிரி அரசுகளையும் அவர்களின் பயங்கரவாத கட்சிக்காரர்களையும் அவர்கள் அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கும் நமது கூட்டாளிகளுக்கும் நண்பர்களுக்கும் எதிராக பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடும் அல்லது அச்சுறுத்த முனையும் முன்னர், தடுத்து நிறுத்துவதற்கு நாம் கட்டாயம் தயாரிப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்."

எதை ஒரு "போக்கிரி அரசு" என யார் வரையறை செய்வது? ஏதாவது அரசு அமெரிக்க நலன்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சவால்செய்கிறதா? புஷ் நிர்வாகம் "போக்கிரி அரசுகளாக" கருத இருக்கும், "போக்கிரி அரசுகளின்" சாத்தியம் விளக்கப்படாத, அந்த அனைத்து நாடுகளின் பட்டியலானது மிகவும் நீண்ட ஒன்று. இந்தப் பட்டியல் நிச்சயமாக கியூபாவையும் உள்ளடக்கி இருக்கிறது. அது ஹெகார்ட் ஷ்ரோடரினது (Gerhardt Schroeder) பிரதமராக மறுதேர்வு செய்யப்பட்டதன் பின்னர் ஜேர்மனியையும் கூட உட்சேர்த்துக் கொள்ளக் கூடும்!

"பயங்கரவாதி" பற்றிய திட்டவட்டமான வரையறைக்காகவும் நாம் கேட்க வேண்டும். இகழார்ந்த வகையில் தெளிவில்லாமல் அரசியல் சூழ்ச்சிக்கு உள்ளாக்கப்படும் வார்த்தை இதுவாகும். மேலும், அமெரிக்க ஐக்கிய அரசுகள் "போக்கிரி அரசை" தாக்கும் முன்னர் "போக்கிரி அரசு" என்று அழைக்கப்படுவதற்கும் ஒரு "பயங்கரவாத கட்சிக்காரருக்கும்" இடையிலான தொடர்பை நிலைநாட்டுவதற்கு எந்தத் தரத்திலான சான்று தேவைப்படும்? சற்றே மற்றொருநாள், ஜனாதிபதி, அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் ஈராக்கிற்கும் அல் கொய்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று, இந்தக் கூற்றுக்கு உண்மை நிகழ்வோடு தொடர்புடைய எந்த ஆதாரமும் வழங்காமல் அறிவித்தனர், மற்றும் மாறுபாடான வகையில் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் தொடர்பான ஈராக்கின் மதச்சார்பற்ற ஆட்சியின் குரோதமான நோக்கு பற்றி உண்மையில் அறியப்பட்டிருக்கிறது.

இறுதியாக, "பரந்த அழிவுகரமான ஆயுதங்களைப் பயன்படுத்த இயலும் முன்னர் அல்லது அச்சுறுத்த இயலும் முன்னர் போக்கிரி அரசுகளுக்கும் அவர்களின் பயங்கரவாத கட்சிக்காரர்களுக்கும்" எதிராக இராணுவ நடவடிக்கையை எடுப்பதற்கான உரிமை பற்றிய வலியுறுத்தலானது, அமெரிக்க ஐக்கிய அரசுகளானது அச்சுறுத்தும் சாத்தியம் உள்ளதாக எந்தெந்த அரசுகளை இனங்காட்டுகிறதோ அவற்றைத் தாக்கும் உரிமையைப் பற்றி அது கூறுகிறது என்று மட்டுமே அர்த்தப்படுத்த முடியும். தற்போது ஒரு அரசு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்காவிட்டாலும்; அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிராக ஒரு தாக்குதலை செயலூக்கத்துடன் தயாரிக்காதது ஒரு புறம் இருக்கட்டும், தற்போது அது திட்டமிடலில் இல்லாதிருந்தாலும், அமெரிக்க அரசாங்கம் அதனை அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு ஒரு சாத்தியமான அல்லது கருவடிவிலான அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக இனங்கண்டால், அது தாக்குதலுக்கான முறைமையான இலக்காக இன்னும் இருக்கும்.

"அச்சுறுத்தல்" பற்றிய ஒரு வரையறைக்கு, அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு எதிரான எல்லாருக்கும் தெரியத்தக்க வெளிப்படையான நடவடிக்கை தேவைப்படவில்லை, மாறாக எதிர்காலத்தில் சில கட்டத்தில் அச்சுறுத்தல் ஆவதற்குரிய சாத்தியம் ஒன்றே, அமெரிக்கத் தாக்குதலுக்கான சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் உண்மையில் உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும் வைக்கும். இது ஒரு மிகைப்படுத்தல் அல்ல. அப்பத்திரம் "பகைவர்கள்" பற்றி மட்டும் பேசவில்லை, "சாத்தியமுள்ள பகைவர்கள்" பற்றியும் கூட பேசுகிறது, மற்றும் அவற்றை "அமெரிக்க அரசுகளின் ஆற்றலை கடந்து செல்லும் அல்லது சமப்படுத்தும் நம்பிக்கைகளில் ஒரு இராணுவத்தைக் கட்டுவதை" மேற்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறது. "முன்னேறிய இராணுவ செயல்வல்லமைகளை" சீனா அடைய முயற்சிப்பதற்கு எதிராக அது நேரடியாக எச்சரிக்கிறது, அவ்வாறு செய்வதன் மூலம் "சீனா காலாவதியாகிப் போன ஒரு பாதையைப் பின்பற்றுகிறது, இறுதியில் அது தேசிய பெருமை பற்றிய அதன் சொந்தப் பின்பற்றலை இடையூறுக்கு உள்ளாக்கும்" என உறுதியாகக் கூறுகிறது --அதாவது, அது ஒரு அச்சுறுத்தலாக வெளிப்படும், அதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளால் முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் இராணுவ பதில் நடவடிக்கை தேவைப்படலாம் என்கிறது.

அறிக்கையானது "முன்னேறிய இராணுவ செயல்வல்லமைகளை" சீனா பின்பற்றுவதன் அர்த்தம் "காலாவதியாகிப் போன பாதையை" பின்பற்றுவதாகும் என சீனாவிற்குக் கூறும் அதேவேளை, சற்றே இரண்டு பக்கங்கள் தள்ளி, போலி நடிப்பாய் ஏய்க்கும் விதத்தில் அமெரிக்க இராணுவ பலத்தின் அத்தியாவசியப் பாத்திரத்தினை மீள உறுதிப்படுத்துவதற்கான நேரம்" என்று முடிவாய் வலியுறுத்தி அறிவிக்கிறது. சவாலுக்கு அப்பால் எமது பாதுகாப்புக்களை நாம் கட்டாயம் கட்டி எழுப்ப வேண்டும் மற்றும் பராமரிக்க வேண்டும் என்கிறது. "மற்றும் இந்த செயல் வேலைத் திட்டம் உலகம் முழுவதும் அமெரிக்காவின் இராணுவ நிலைகொள்ளலின் பரந்த விரிவாக்கத்தை இன்றியமையாததாக்குகிறது. "உறுதியிலாத்தன்மையுடன் போராடுவதற்கு மற்றும் நாம் எதிர் கொள்ளும் பல பாதுகாப்பு சவால்களை சந்திப்பதற்கு அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு மேற்கு ஐரோப்பா மற்றும் வடகிழக்கு ஆசியாவுக்கு உள்ளேயும் அப்பாலும் நிலையங்களும் தளங்களும் தேவைப்படுகின்றன, அதேபோல அமெரிக்கப் படைகளை நீண்ட தொலைவுக்கு அனுப்புவதற்கான தற்காலிக ஏற்பாட்டு வசதிகளும் தேவைப்படுகின்றன.

பத்திரமானது நிலவுகின்ற மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் புதிய கோட்பாட்டை திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றது, மற்றும் அமெரிக்க ஐக்கிய அரசுகள் எதிர்பார்த்திராத மற்றும் கற்பனை செய்யமுடியாத புதிய ஆபத்தை திடீரென்று எதிர்கொள்ளும்பொழுது, பின்வாங்கச் செய்யும்படியான முந்தைய கோட்பாட்டைக் கைவிடுதல் செப்டம்பர்11, 2001 நிகழ்ச்சிகளுக்கு ஒரு அவசியமான பதிலாக இருக்கிறது. "குளிர் யுத்த அச்சுறுத்தலின் தன்மையானது, பரஸ்பரம் உத்தரவாதம் செய்யப்பட்ட அழிவின் விட்டுக் கொடுக்காத மூலோபாயத்தினை உண்டுபண்ணும் பகைவர்கள் பலத்தைப் பயன்படுத்தலை பின்வாங்கச் செய்வதற்கு வலியுறுத்தல் செய்வது, அமெரிக்க ஐக்கிய அரசுகளுக்கு தேவைப்பட்டது" என அறிக்கை வலியுறுத்தல் செய்கிறது. சோவியத் ஒன்றியத்தின் பொறிவுடனும் குளிர் யுத்தத்தின் முடிவுடனும், எமது பாதுகாப்பு சூழல் பெரும் மாற்றங்களுக்குள் சென்றிருக்கிறது." சிலவற்றுக்குப் பின்னர், பத்திரமானது சோவியத் ஒன்றியத்தை "பொதுவாக இதுகாறும் உள்ள நிலையில், ஆபத்து-தீங்கு விளைவிக்கும் பகைவன்" என விவரிக்கிறது. "பின்வாங்கச் செய்தல் பலனுள்ள பாதுகாப்பாக இருந்தது" என்கிறது.

1980 கள் ஒப்பீட்டளவில் அண்மைய வரலாறாக இருக்கும் எம்மைப் பொறுத்தவரை, 1960களை இன்னும் நினைவு கூரக் கூடியவர்களை, மற்றும் 1950 களின் வரலாறு பற்றி கூட சிலவற்றை அறிந்திருப்பவர்களைப் பொறுத்தவரை, இவை குறிப்பிடத்தக்க வார்த்தைகளாக இருக்கின்றன. குளிர் யுத்த வரலாற்றுடன் பரிச்சயமில்லாதவர்கள், இந்த மூலோபாயப் பத்திரத்தின் ஆசிரியர்கள் --சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை இப்பொழுது கிட்டத்தட்ட பழங்கால நாட்ட வார்த்தையில் "கெளரவமாய் மற்றும் பணிவான வகையில் பின்வாங்கச்செய்தல் பயன்மிக்கதாய் இருந்த அதற்கு எதிராக, பொதுவாக இதுகாறும் உள்ள நிலையில், ஆபத்து (தீங்கு) விளைவிக்கும் பகைவன்" என விவரிக்கும் அவர்கள்-- கிட்டத்தட்ட அதே ஆட்கள், 1980கள் போல் அண்மையில், சோவியத் ஒன்றியத்தை "தீமையின் குவிமையம்" என விவரித்தனர், அதற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க அரசுகள் ஒரேயடியான போருக்காக தயார் செய்யவேண்டும் என விவரித்தனர். தற்போதைய பாதுகாப்பு செயலாளர், டொனால்ட் ரம்ஸ்பெல்ட் நெருக்கமாகத் தொடர்புடைய தற்போதைய ஆபத்துக்கான வலதுசாரிக் குழு, 1970களில் அமைக்கப்பட்டது, அது சோவியத் ஒன்றியத்துடன் ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையை வெறுப்புடன் எதிர்த்தது. இந்த அமைப்பு சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு எதிராக பெரும் இராணுவக் கட்டி எழுப்பலைக் கோரியது, மற்றும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அணு ஆயுதப் போரை அமெரிக்க ஐக்கிய அரசுகள் நடத்தும் சாத்தியம் பற்றியும் அதில் வெல்லும் சாத்தியம் பற்றியும் விவாதித்தது. "நட்சத்திரப் போர்" (Star Wars) என்று பெயர் பெற்ற றேகன் நிர்வாகத்தின் ஆதரவு பெற்ற மூலோபாய பாதுகாப்பு முன்னெடுப்பானது (Strategic Defense Initiative [SDI]), குடியரசுக் கட்சியில் உள்ள அதி வலதுசாரி சக்திகள் --அவர்களின் மத்தியில் இப்போது காணப்பட இருக்கின்ற, புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளை இயக்கும் பிரதான நாடக நபர்கள், சிறப்பாக செனி, ரம்ஸ்பெல்ட் மற்றும் உல்போவிட்ஸ் ஆகியோர் -- அமெரிக்க ஐக்கிய அரசுகளைப் பொறுத்தவரையில் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்திற்கு எதிராக சக்தியுள்ள ஒரு இராணுவ தேர்வாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை எண்ணிப்பார்ப்பதை சாத்தியமாக்கும் தொழில் நுட்பத்தினை அபிவிருத்தி செய்வதற்கான --கோரிக்கையில் இருந்து எழுந்தது.

இங்கு புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ் இருக்கும் வரலாற்று பொய்மைப்படுத்தலுக்கும் அரசியல் ஏமாற்றுக்கும் நாம் வருகின்றோம் --இன்றியமையாத வகையில் செப்டம்பர் 11 நிகழ்வுகளுக்கு ஒரு பதிலாக இருக்கின்ற, அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள கொள்கைகள், அல்கொய்தா மற்றும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களினால் அமெரிக்க ஐக்கிய அரசுகள் மீது திணிக்கப்பட்ட தப்பிக்க முடியாத இராணுவ கடப்பாடுகளால் தீர்மானிக்கப்பட்டன மற்றும் வடிவமைக்கப்பட்டன. புஷ் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் குறிக்கப்பட்டுள்ள உலக மேலாதிக்கத்திற்கான திட்டமானது செப்டம்பர்11, 2001 நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கான பதிலாக இருக்கின்றதற்கும் அப்பால், அது ஒரு தசாப்தத்திற்கும் மேலான அபிவிருத்தியில் இருந்து வந்திருக்கின்றது.

1. PovertyNet, Poverty Reduction and the World Bank, World Bank Executive Summary.
2. The Anatomy of the Nuremberg Trials (New York, 1992), p. 641.
3.
Ü«î ËTM,பக்கம் 51.
4.
அதே நூல், பக்கம் 51-52.

தொடரும்........

See Also :

ஈராக்கிய ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் பாக்தாதில் "ஆட்சி மாற்றத்திற்கான" அமெரிக்க திட்டங்களும்
பகுதி I
| பகுதிII

சர்வதேச சங்கத்திற்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது

புஷ் நிர்வாகம் போரை விரும்புகிறது

ஐ.நா சபையில் புஷ்: உலகத்துக்கு வாஷிங்டனின் போருக்கான இறுதி எச்சரிக்கை

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

Top of page