World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

On what should the new cinema be based?

புதிய திரைப்படம் எதை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்?

17 June 1996
By David Walsh

Use this version to print | Send this link by email | Email the author

இதற்கு முன்னர் வெளிவந்த கட்டுரையில் San Francisco திரைப்பட விழாவில் சிறப்பாக இருந்த படங்களின் சில விபரங்களை கொடுக்க முனைந்திருந்தோம். உண்மையான, ஈடுபாடான மற்றும் கவித்துவ கணங்களுடன் மதிப்புடைய ஒரு சில படங்கள் திரையிடப்பட்டிருந்தன. வித்தியாசமான நாடுகளில் இருந்து பல திரைப்பட இயக்குனர்கள் சமூகம் அளித்திருந்ததுடன், அவர்களது நேர்மையையும் புத்திக்கூர்மையையும் வெளிக்காட்டியிருந்தார்கள். கொறியா, ஈரான், முன்னாள் சோவியத் ஆசிய குடியரசுகளில் இருந்தும் மற்றும் குறிப்பாக இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் இருந்தும் முக்கியத்துமுடைய தனிப்பட்ட படங்கள் வந்திருந்தன.

தற்போதைய திரைப்படம் ஒட்டுமொத்தத்தையும் யாரும் சிரத்தையுடன் கவனிக்கவில்லை, இது எப்படியிருந்தபோதும், திரைப்பட தயாரிப்பில் அனைத்துமே நன்றாக இருந்தது என துணிவுடன் கூறினால் ஏமாற்றுவதாக இருக்கும். அதற்கு மாறாக நடிகர்கள் மற்றும் நேர்மையான பட இயக்குனர்கள் திரைப்பட மாணவர்கள் மற்றும் பார்வையாள அங்கத்தவர்கள் ஆகியோர் ஏனைய அனைவரையும் விட ஆழமான திருப்தியின்மையை வெளிப்படுத்துகிறார்கள். ஏற்கனவே ஒரு புதிய மனநிலை அபிவிருத்தியடைந்து கொண்டிருப்பதன் ஒரு ஆரோக்கியமான அறிகுறியாக இது இருக்கிறது. எப்படியிருந்தபோதும், கடந்த அல்லது இரு தசாப்தங்களாக திரைப்படம் என்னவாக இருந்தது என்ற கேள்வியை நாம் கேட்டாக வேண்டும்?

இரண்டாந்தரமான மற்றும் மலட்டுத்தனமான வணிக சினிமாவினைப் பற்றிய புகார்களை இன்று ஒருவர் எங்கும் கேட்கக்கூடியதாக இருக்கிறது. உறுதியானமுறையில் பிரமாண்டமான அமெரிக்க பட நிறுவனங்களில் இருந்து குறைந்த அளவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனங்களில் இருந்துவரும் செயல்வல்லார் ''கலைத்துவ முடிவுகள்' பற்றி பேசும்பொழுது அது ஒரு வாய்தவறிய பேச்சாக மட்டுமே இருக்கிறது. பெரிய படப் பிடிப்பு நிலையங்களிடம் இருக்கும் தொழில்நுட்பத்திற்கும் மூச்சுமுட்டும் பிரமையை உருவாக்கும் ஆற்றலுக்கும் மற்றும் அவர்களது உருவாக்கத்தின் புத்திஜீவித மற்றும் ஒழுக்க வறுமைக்கும் இடையிலான இடைவெளியானது கவலைக்கிடமான முறையில் அதிகரித்து விட்டது. ஏதாவது ஒன்றை சொல்வதற்கு ஹாலிவுட் படத்தயாரிப்பாளர்களிடம் எதுவுமே இல்லை, ஆனால் பரந்தளவிலான வளங்கள் அனைத்தையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களது நனவான நோக்கம் எதுவாயினும், மனிதனைச் சாராத, ஆரவாரம் ஒலிநிறைந்த உருவாக்கம் பார்வையாளர்களை முட்டாள்களாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் ஆக்குவதுடன், அவனை அல்லது அவளை தற்காலிகமாக விமர்சன சிந்தனையற்றவர்களாக உருமாற்றுகிறது.

மேற்கைரோப்பிய மற்றும் ஜப்பானிய படத்தயாரிப்புகள் ஆரோக்கிய நிலையில் இல்லை. உண்மையான சிரிப்புகளற்ற நகைச்சுவை நாடகங்களாகவும், நாடகத்தன்மையற்ற துன்பியல் நாடகங்களாகவும், ''சிற்றின்ப எழுச்சி மிக்க நாடகங்களாகவும்'' இருப்பதுடன், அவை மனதை மேலீடாகக் கூட கீறிச்செல்லவில்லை. அழகான, வெறுமையான பரிமாற்றம் செய்யக் கூடிய முகங்களே எங்கும் காணக்கூடியதாக இருக்கிறது. ஹாலிவுட்டின் உணர்ச்சிக் கொந்தளிப்பு இல்லாமை கருத்துக்களின் பற்றாக்குறையின் மிகப்பெரும் சிரமத்தை குறைத்திருக்கிறது. ஒரு சில விதிவிலக்குகளுடன், தென் அமெரிக்க படத்தயாரிப்பானது அரசியல் மற்றும் ஒழுக்க பின்னடிப்பு பதிவினை மட்டுமே விட்டுச் செல்கின்றன. அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திலிருந்துவரும் இயக்குனர்களின் பெரும்பகுதியினருக்கு ஒரேயொரு நோக்கம் மட்டுமே இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, லோஸ் ஏஞ்சலுக்கு தலைமை கொடுப்பதும், தமது தனித்துவத்தை தொலைத்துவிட்டு, கூடியமட்டத்தில் அதற்குள் ஐக்கியமாவதுமே அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

ஸ்ராலினிசத்தின் உடைவானது புத்திஜீவித சுதந்திரத்தின் மறுபிறப்பினையும், முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கைரோப்பாவில் கலைத்துவ மறுமலர்ச்சியை உருவாக்கியிருப்பதனையும் எக்காள முழக்கத்துடன் அறிவிக்கிறதா? இந்தக் கேள்வியே அதற்கு பதிலளிக்கும். முன்னாள் ''கருத்துவேறுபாடு'' கொண்ட கலைஞர்கள், அவர்களில் பலர் சர்வாதிகார ஆட்சியினை துணிவுடன் எதிர்த்தபோதும் கூட, உண்மையிலே மிக வலிமையற்ற கருத்தியல் குப்பை கூழங்களால் அவர்கள் தம்மை பயிற்றுவித்திருக்கிறார்கள். மிக நேர்மையானவர்கள் எந்த முக்கியத்துவத்தினையும் உருவாக்கவில்லை, மோசமானவர்கள் உண்மையில் உயர்ந்தளவில் கூட இல்லாமல், சாதரணமாக முதலில் ஏலம் கேட்பவருக்கு தம்மை விற்றிருக்கிறார்கள்.

மாற்றீட்டு திரைப்படங்கள் என அழைக்கப்பட்டவற்றுக்கு வருகிறபோது, பொதுவாக எதுவுமே புத்திசாதுரியமானவையாக இருக்கவில்லை. அமெரிக்க ''சுயாதீன'' படத்தயாரிப்பு அண்மைய வருடங்களில் முக்கியமற்ற விஷயங்களின் ஒரு பயிற்சியாக இருந்துவருகிறது. 25 வயது நிரம்பிய, குழம்பிய நிலையிலுள்ள நடுத்தர வர்க்கத்தை, சுரண்டிக் கொண்ட (ஈர்த்த) நாடக பாணியிலான அல்லது கண்ணுக்கினியவை இல்லாமை நீண்டகாலத்திற்கு ஒருவரது நினைவிலும் இருக்கப் போவதில்லை. சுய கழிவிரக்கத்தின் முழு சர்வதேச சூழலின் ''தீவிர'' பெண்ணிலைவாத மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்கள் எவரும் கிட்டதட்ட நீடித்திருக்கும் எந்த மதிப்பினையும் உருவாக்கவில்லை. "hip, urban" சிடுமூஞ்சி கூட்டாளிகளின் (Jim Jarmusch, the Kaurismaki brothers, etc.) நக்கலான சிரிப்பின் எந்தவொரு சீரிய விமர்சன நடத்தையும் புத்திஜீவித சீரழிவின் இன்னொரு அறிகுறியாக மட்டுமே கொள்ளப்பட முடியும்.

உண்மையில் இவை அனைத்துக்குமான மதிப்புமிக்க விதிவிலக்காளர்கள் இங்கு இருக்கிறார்கள். ஆசியப் படத்தயாரிப்பாளர்களான Hou Hsiao-Hsien மற்றும் அவரது தாய்வான் கூட்டாளிகள், ஈரானியர்களான Abbas Kiarostami மற்றும் Mohsen Makhmalbaf. இதில் சிலர், சீனாவின் ''ஐந்தாவது மற்றும் ''ஆறாவது'' சந்ததியின் அங்கத்தவர்கள், கொறிய நாட்டவரான Park Kwang-su மற்றும் ஏனையவர்களும் அடங்குவர். உண்மையில் ஏனையவர்களும் இருக்கிறார்கள் ஆனால் எண்ணிக்கை மிக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது.

உறுதிப்படுத்தலும் செல்வத்தினை புகழ்ந்துரைத்தலும்

இதையொத்த கடுமையான குற்றச்சாட்டை ஒருவர் எமது சமகால திரைப்படங்கள் பலவற்றுக்கு எதிராக சுமத்தமுடியும். ஒன்று அவைகள் பலம், ஆழம் மற்றும் நோக்கம் அற்று இருப்பதுடன், சட்டம் ஒழுங்கு, நிலவும் நிலைமைகள் மற்றும் செல்வத்தினை புகழ்பாடுவதில் மிக இழிவான உறுதிப்படுத்தல் வாதத்தை வெளிப்படுத்துகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வருடங்களில் மிக அக்கறையான கலைஞர்களை உற்சாகப்படுத்திய புரட்சிகர ஆன்மா என்னவாகிவிட்டது? ''நாடு, மதம், குடும்பம் பற்றிய கருத்துப்பாடுகளை பாழாக்குவதன் பாகமாக அனைத்துமே செய்யவேண்டியவைகளாக இருக்கின்றன, அனைத்து வழிகளும் மதிப்பான முயற்சிகளே'' என்ற 30 களில் முன்னெடுக்கப்பட்ட கருத்துப்பாடுகளுக்கு பற்றார்வம் கொண்டிருக்கக் கூடியவர்கள் பிரெஞ்சு மிகையதார்த்தவாதிகள் மட்டும் அல்ல. ஒரு பட தொழிற்துறையினது மிக நிலையான கதாநாயகன் மாறுபட்ட வேடங்களில் பொலீசாக இருக்கையில் அதனைப் பேணுதலில் எதைக் கூற முடியும்?

மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை பெற்றுக்கொள்கிறார்கள், எதைப் பெறுகிறார்களோ அதற்கு ஏற்றதாய் இருக்கிறார்கள் என்பது போன்ற திரைப்பட நிறுவனங்களின் பிரதிநிகள் மற்றும் அதனது ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் விவாதமானது சுய சேவையாற்றுவதாக மட்டுமே இருக்கிறது. பரந்த முறையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான பொழுதுபோக்கு நிறுவனத்தினை கட்டுப்படுத்தி ஏகபோகத்தினை வைத்திருக்கும் மாபெரும் தொழில் நிறுவனங்களின் செல்வந்த, அறிவற்ற மேலதிகாரிகளால் தான் குறிப்பாக மக்கள் பெற்றுக்கொள்வது (ஆகையால் இந்த தர்க்கத்தின் பிரகாரம், என்ன ''விரும்புகிறார்களோ'' அதை) என்ன என்பது பற்றிய முடிவுகள் உருவாக்கப்படுகின்றன. யதார்த்தத்தில், சமூக மற்றும் வரலாற்று பிரச்சனைகள் பற்றி பேசும் ஒரு புத்திசாதுரியமான படைப்பு பரந்துபட்ட மக்களால் பார்க்ககூடியதாக இருந்து வருவதுடன், அவர்கள் அதற்கு பதிலளித்தும் இருக்கிறார்கள். மிக கலைத்துவமான மற்றும் உணர்ச்சிபூர்வமான முறையில் கோரும் படைப்புகள் பரந்த பார்வையாளர்களை ஈர்த்துக்கொள்வதில்லை, இது யாருடைய தவறு? தனிநபர் எதையும் உண்ணவில்லை ஆனால் bourguignon (பூர்க்கினொன்) மாட்டு இறைச்சியின் திடீர் அறிமுகத்துடன் ஏற்படும் ஜீரணப்பிரச்சனை அவனுக்கோ அல்லது அவளுக்கோ இருக்குமானால் உண்மையில் வருடக்கணக்காக தொடர்ந்துகொண்டிருக்கும் பழங் கஞ்சியைக் குற்றம்சாட்டமுடியாது.

படத்தயாரிப்பின் பொருளாதார சமூக உறவுகள் பிரச்சனைகளில் சிலவற்றை இங்கே விளக்குகின்றன. ஒரு நூறு மில்லியன் டாலர் வரவு செலவு திட்டம் சமூக பிரச்சனைகளினை பரிசோதனை செய்யவோ அல்லது பரீட்சிப்பதற்கு உற்சாகப்படுத்தவோ அனுமதிக்காது. சமூக அந்தஸ்த்தின் ஒரு பிரேத்தியேகமான நலன்களுடன் படத்தயாரிப்பின் ஒரு மாபெரும் பங்கு எப்போதையும் விட இன்று மாபெரும் நிறுவனங்களின் கைகளில் இருக்கின்றன. முன்னேப்போதும் இருந்திராத அளவுக்கு படத்தயாரிப்பாளர்களும் நடிகர்களும் மிக சலுகை படைத்த உயர் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வருபவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் வெற்றியடையும்போது, பிரமாண்டமான பணத்தினை பெற்றுக்கொள்வதுடன், பரந்து பட்ட பெரும்பான்மையான மக்களின் சமூக யதார்த்தத்திற்கு மிக அப்பால் மிகப்பாதுகாப்பான மற்றும் உயர்வான மதிற்சுவருக்குள் வசித்துவருகிறார்கள். பிழைப்புவாதம் மற்றும் பணப் பேராசை நோக்குடன் மட்டுமே வாழும் இப்படியான மனிதர்கள், மதிப்பு மிகுந்த எதையும் உருவாக்கியது கிடையாது. திரைப்படத் துறையானது தெளிவாக ஒரு தனியார் சொத்துடமையாக இருப்பதால் உதாரணத்திற்கு சுயாதீன திரைப்படத்தின் வெறுமையையோ அல்லது பொதுவாக எதிர்ப்பு மற்றும் கிளர்ச்சியின்மை, கலைத்துவம் மற்றும் புத்திஜீவிதம் அற்ற கிளர்வுகளையும், மூர்க்கத்தனத்தையும் விளக்கப்படுத்திவிட முடியாதிருக்கிறது என்பது தெளிவான நிரூபணமாக இருக்கின்றன. விடயமானது கொடூரமாக மட்டுமே இருக்கிறது என்பது மட்டுமல்ல இதனால் சிலர் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறார்கள்!

நாம் மேற்குறிப்பிட்டது போல் இறுதியில் ஒரு புதிய மனநிலை ஒன்று முன்னணிக்கு வந்துள்ளது. திருப்தியின்மை, அருவருப்பு, வெட்கக்கேடும் கூட புரட்சிகரமான உணர்வுகளாக வரக்கூடியவையாக இருக்கின்றன. தற்போதைய திரைபடங்களானது நவீன வாழ்வை மிக எளிமையான முறையில் பிரதிபலிக்கின்றன என்பதை பலர் இனம்கண்டு கொண்டுள்ளார்கள். கேள்வி என்னவாக எழுகிறது எனில், உண்மையான புதிய கலையும், சினிமாவும் எதனை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்?

கலையில் இருக்கும் பிரச்சனையானது மனித அறிவு திடீரென இருண்டுபோனதாலும் அல்லது இயங்காது நின்றதில் இருந்தும் உருவாகும் விளைவாக இருப்பதில்லை. பல துறைகளிலான கோட்பாட்டு மற்றும் நடைமுறைக்கிடும் விஞ்ஞானங்கள், மருத்துவம், கணினி தொழில்நுட்பம், ஊடக நுட்பங்கள் மற்றும் பல அபூர்வமான முன்னெடுப்புகளையும் ஒருவர் கவனித்தாக வேண்டும். அல்லது விளையாட்டுத்துறை சாதனை மற்றும் இன்னும் சில குறிப்பிட்ட துறைகளில் ஒரு உயர் தரமான கைத்தொழில் திறமை, இசை வெளிப்பாட்டின் விதிமுறை மிகுந்த ஒழுங்கு ஈடுபட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

கலை (குறிப்பாக இலக்கிய மற்றும் நாடக கலைகள்) மற்றும் அரசியல் துறைகளில் மாபெரும் தேக்க நிலை மற்றும் வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது. இது ஒரு விபத்தல்ல. மனித சமுதாயத்தின் சொந்த சமூக அமைப்பு மற்றும் வரலாறு பற்றிய புரிதல் துறைகளில் தான் இருக்கிறது --அவர்களை மாற்றும் போராட்டம் உள்ளடங்கலாக-- மற்றும் அத்தகைய விளக்கத்தின் அபிவிருத்தியுடன் இந்த கலைகள் அனைத்தும் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கின்றன, அங்கு மிகக் கடுமையான தாக்குதல்கள் தளராது நீடிக்கின்றன.

திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலையில் இருக்கும் தற்போதைய நிலைமை ஒரு வரலாற்று உற்பத்தி எனத்தான் விளங்கிக்கொள்ளப்பட முடியும். சினிமா நூறுவருட பழமையானது. அதனது வரலாறானது, ஏனைய எந்த கலை வடிவங்களையும் விட இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் விடயங்களுடன் அந்நியோன்னியமான முறையில் இணைந்திருக்கின்றன.

அந்த விடயங்களை ஆழமாக பரிசீலனை செய்வதற்கு இந்தக் கட்டுரை அதன் எல்லைக்கப்பால் இருக்கிறது, ஆனால் இந்த அளவு கூறப்பட முடியும்: முதலாம் உலக மகா யுத்தத்தின் பின்னரான சகாப்தத்தின் மாபெரும் கலைத்துவ நுரைத்துப் பொங்குதல், ரஷ்யப் புரட்சியினால் வளர்ச்சியடைந்த எதிர்பார்ப்பு (மற்றும் பயம், சர்ச்சை) களின் விளங்கப்படுத்தமுடியாத வெளிப்புற ஒரு ஆய்வாக, அதுவே அரை நூற்றாண்டு சோசலிச கலாச்சாரத்தின் ஒரு உற்பத்தியாக இருக்கிறது. அன்றைய கலைத்துவ இயக்கத்தில் பங்குகொண்ட கலைஞர்கள், முற்றாக அல்லது பரந்தளவில் கூட நனவான புரட்சிகரவாதிகளாக இருந்தார்கள் என சொல்லுவதுபோல் இது அதே மாதிரியான விடயமாக இல்லை. இதற்கு மாறாக இருக்கிறது. ஒரு புரட்சிகர சோசலிச போக்கு மாபெரும் ஒழுக்கத்தையும் மற்றும் புத்திஜீவித செல்வாக்கினையும் கொண்டிருந்த ஒரு சூழ்நிலைக்குள்தான் அவர்கள் (கலைஞர்கள்) வாழ்ந்தார்கள், சுவாசித்துக்கொண்டிருந்தார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி மூன்றாம் பாகத்தில் இருந்து விமர்சன மனநிலை கலாச்சாரம் கட்டியெழுப்பப் பட்டது --உதாரணத்திற்கு உளவியல் ஆய்வு அபிவிருத்தியையும் பரந்த அர்த்தத்தில் இதற்குள் விளக்கலாம்-- இந்த நூற்றாண்டின் முதலாவது தசாப்தங்களின் கலைத்துவ மேதைகள் வடிவமெடுத்த கடுஞ் சோதனைக்களமாக இருந்தது.

முதலாளித்துவத்தின் முரண்பாடு பற்றி கலைஞர்கள் மார்க்சிஸ்ட்டுகளுடன் உடன்படாமல் இருந்திருக்கலாம், ஆனால் பாரீஸ், லண்டன், வியொன்னா, பேர்லின், புட்டாபெஸ்ட் மற்றும் மொஸ்கோ எங்கிலும் இருந்த மிக ஆழமான புத்திஜீவிகளிடம் தற்போதைய சமூகம் காலாவதியாகிவிட்டது என்ற பொதுவான மற்றும் இயல்பான விளக்கம் இருந்து வந்தது மற்றும் வருங்கால மனித அமைப்பின் கலாச்சார பிரச்சனைக்கு சிந்தனை கொடுக்கப்பட இருந்தது. அமெரிக்க திரைப்படத்துறைக்கு பொருத்தமானதாக இது இருக்கிறதா என சந்தேகம் கொள்ளும் யாராவது ஒருவர் கீழ்க்காணும் படத்தயாரிப்பாளர்களின் பட்டியலை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்கள் அனைவரும் ஹோலிவுட்டில் பணிபுரிந்தவர்கள். அத்துடன் இவர்கள் 1885 மற்றும் 1907 இடையில் ஜேர்மனி, ஒஸ்ரியா, ஹங்கேரியில் பிறந்தவர்கள் அல்லது உருவானவர்கள்: Erich von Stroheim, Michael Curtiz, Fritz Lang, Ernst Lubitsch, William Dieterle, Josef von Sternberg, Douglas Sirk, Robert Siodmak, Edgar Ulmer, Max Ophuls, Billy Wilder, Otto Preminger and Fred Zinneman ஆவர்.

ஸ்ராலினிசமும் சோசலிச கலாச்சாரத்தின் மீதான தாக்குதலும்

1920 களின் மாபெரும் கலாச்சார மையத்தின் சூழலானது ஒரு புரட்சிக்கான ஒரு புத்திஜீவித தயாரிப்பாக இருந்தது, அது துன்பகரமான முறையில் இடம்பெற முடியாமல் போய்விட்டது என்று ஒருவர் கூற முடியும். இந்த பொய்க்கான முதன்மையான பொறுப்பு ஸ்ராலினிசத்துடன் கிடக்கிறது, வளர்ச்சியடைந்திருந்த அந்த விமர்சன சோசலிச கலாச்சாரத்திற்கு, உடலியல் ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் மாபெரும் இடர்களை அது விளைவித்தது. 1930 களின் இறுதியில் சோவியத் யூனியனின் எதிர்ப்புரட்சிகர, தேசியவாத அதிகாரத்துவம் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களையும், சோசலிச புத்திஜீவிகளை மட்டும் படுகொலை செய்யவில்லை, அது சுரண்டலற்ற மற்றும் ஒடுக்குமுறையற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவது சாத்தியமானது என்ற அற்புதமான மனநிலை மற்றும் அறிவின் நம்பிக்கையினை உலகெங்கும் ஆட்டம்காண வைத்தது. அது புத்திஜீவித சந்ததியினை ஊழல்மிக்கதாக்கியது அல்லது சோர்வடைய வைத்தது. இன்னொரு வகையில் கூறுவதென்றால்,1925 அல்லது 1935களில் சிந்திக்கும் ஒரு சிரத்தையான கலைஞன் முதலாளித்துவம் இயல்பாக சோசலிச திசையில் கவரப்படும் என்பதுடன் அதிருப்தியடைந்தான். இன்றைய நிலைமை அதுவாகவா இருக்கிறது? அதுவல்ல, "கம்யூனிசம்" மற்றும் "சோசலிசம்" ஆகிய வார்த்தைகளை சேற்றுக்குள் இழுத்ததற்கு, ஸ்ராலினிசமே பிரதானமாக குற்றம் சாட்டத்தக்கது.

எப்படி மனித சமூகம் அதனது தற்போதைய இக்கட்டான நிலைக்கு சென்றது என்பது பற்றிய சில தெளிவான படிநிலை உண்மையான கலைத்துவ எழுச்சியின் முதலாவது நிபந்தனையாக இருக்கிறது-அல்லது குறைந்தபட்சம் மிகத்தெளிவான பொய்மைப்படுத்தலுடன் ஒரு முறிவைச் செய்யவேண்டி இருக்கிறது. உதாரணமாக, கலாச்சார நெருக்கடி பற்றி பேசுவதில் அக்கறையாக இருக்கும் யாராவது ஒருவர் ஸ்ராலினிசம் மற்றும் மார்க்சிசம் பற்றிய தவறான இனம்காணலை நிராகரித்தாக வேண்டும். குறிப்பாக திரைப்படம், நாடகம் மற்றும் புனைகதை ஆகியன சமூக வாழ்க்கையுடன் அளவுக்கு அதிகமாய் நெருக்கமாக இருக்கும் அவர்களின் படைப்பில் ஈடுபடும் எவருக்கும் இந்தப் பணியைத் தவிர்ப்பது இயலக் கூடியதாகியிருக்கிறது. கலையும் சமூகவாழ்க்கையும் எதிர்பாராமல் தொடர்புடையனவாக இல்லை, "ஒன்றின் மூலமே மற்றொன்றை முழுமையாய் நாம் புரிந்து கொள்வது என்பதை நாம் கண்டுபிடிப்பதிலேயே" இருக்கிறது என்பதை ஹெகல் நிலைநாட்டினார். அவர் வார்த்தையில் குறித்தவாறு அவற்றின் "கவிந்த தழுவல்", புறநிலைப் பண்பைக் கொண்டிருக்கின்றன, அதனை மாபெரும் மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் அலட்சியம் செய்ததில்லை. கலையானது படிமங்களில் உள்ள சிந்தனைகளும் உணர்வுகளும் ஆகும். சமூக விஞ்ஞானத்திற்கு கலைத்துவம் தேவைப்படுமாயின், அந்த அளவுக்கு மிகுதியாக திரைப்படம் எடுப்பவருக்கு அல்லது புதினம் எழுதுபவருக்கு ஒரு அளவு விஞ்ஞானம் தேவைப்படுகிறது. வெளிப்படையாக வைத்தால், இன்றைய கலைஞர்கள் அவனது அல்லது அவளது சொந்த தனிமுறை சிறப்புத் தொழிலில் பயிற்சியுடன் சேர்த்து, வரலாற்றைப் படிப்பதையும், சிறப்பாக 1917 அக்டோபர் புரட்சியின் வரலாற்றையும் அதன் சீரழிவிற்கு எதிரான போராட்டத்தையும் படிப்பதை, பணியாகக் கொண்டிருக்கின்றனர். 1935ல் அந்திரே பிரெட்டொனின் இந்தக் குறிப்புக்கள் நமது நாளில் தப்பிக்க முடியாத கட்டளையிடுகின்ற பண்பை எடுக்கிறது: "சமுதாயத்தின் வரலாற்றுக்கு வெளியேயும் இலக்கிய வரலாற்றுக்கு வெளியேயும் இலக்கியம் படிக்கப்பட முடியாதது மட்டுமல்ல; எழுத்தாளர் இரு வேறுபட்ட ஸ்தூலமான நேர்வுகளை; அவரது காலம் வரையிலான வரலாறு, மற்றும் அவரது காலம் வரையிலான இலக்கிய வரலாறு இவற்றை ஒத்திசைவிக்காமல், ஒவ்வொரு சகாப்தத்திலும், அது எழுதப்படவும் கூட முடியாது."

கலையும் சமூகம் பற்றிய புரிதலும்

இது தனியே வரலாற்று அல்லது சமூக பாத்திர படைப்புகளுக்கான அழைப்பில்லை, இருந்தபோதும் அப்படியான படைப்புகள் சந்தேகத்திற்கு இடமற்று அவசியமாக இருக்கின்றன. இது ஒரு பரந்ததும் அதேநேரம் மிகவும் நடைமுறை ரீதியான விடயமுமாக இருக்கிறது. அடுத்த காலகட்ட கலையானது- பரிமாணத்தில் காவியமாக இருந்தாலும் சரி அல்லது மிகவும் நெருக்கமான உள்ளுணர்வுகளைத் தெரிவிப்பனவாக இருந்தாலு சரி-- அது நீடித்திருக்க வேண்டுமானால், ஒரு பரந்த சமூக வரலாற்று விளக்கத்தில் இருந்தே உயிர்ப்புடையதாக இருக்க முடியும். அது கலைஞர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலான சூழல்களினால் அவ்வாறு இருப்பதாக அழைக்கப்படும்.

இது ஒரு தெளிவான அரசியல் தன்மையின் படைப்புக்கான அழைப்பல்ல, இருந்தபோதும் அப்படியான படைப்புக்கும் இடம் இருக்கிறது. மனிதனின் நனவான சிந்தனைக்கும் கவித்துவ வெளிப்பாட்டுக்குமான முரண்பாடு பிரெட்டொன் (Breton) குறிப்பிட்டதுபோல், அவ்வளவு இலகுவாக தீர்த்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் கலைஞன் அவனது அல்லது அவளது அகத்திற்கு உண்மையாக இருந்தாக வேண்டும். குறைந்தபட்சம் எதிர்ப்பு பக்கத்தை எடுக்கவேண்டும் என மேலீடாக இது விளங்கிக்கொள்ளப்படக்கூடாது. அங்கே எந்தவித தீண்டத்தகா புனிதமும் இல்லை. மனித வாழ்வின் ஒவ்வொரு பாகமும், சமூக உறவுகளும் மற்றும் உளவியலும் புத்துணர்வுடன் அகழ்ந்தெடுக்கப்படுவதுடன் --"தன்னுள் கிறுகிறுக்க இறக்கம்" செய்வது-- அதேபோல மிகவும் புறநிலை சமூக போக்கினை பரீட்சித்தாக வேண்டியிருக்கிறது. படைப்பு உருவாக்கத்தின் நோக்கம், பிரெட்டொனின் வார்த்தையில் மீண்டும் கூறுவதனால், "உள் மற்றும் வெளிக்கு இடையிலே ஒரு துல்லியமான சமநிலையைக் கொண்டுவரல் பற்றியதாகும்; இந்த சமநிலைதான் புறநிலைரீதியாக அதன்மீது உண்மைத் தன்மையை அளிக்கும்."

வடிவம் அல்லது கருப்பொருளுக்கான பார்வையில் இருந்து மிக உண்மையான கலை மற்றும் திரைப்படத்துக்கான இன்றைய போராட்டம் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குவதில்லை. முதலாவதாக கட்டியெழுப்புவதற்கு கடந்தகால மாபெரும் தேட்டங்கள் இருக்கின்றன. ஒருவரை காலியானதாகவும் உணர்வற்றதாகவும் அடிக்கடி தாக்கத்திற்கு உள்ளாக்கும் அண்மைய புறநிலை வடிவம் சார்ந்த புதிது புனைதலின் பெரும்பான்மையினை, ஒரு குறித்த நோக்கத்திற்காகப் பயன்படுவதில் இணையும் பொழுது, பயனுள்ளது என நிரூபிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. சடரீதியான பொருட்கள், வடிவங்கள், தொழில்நுட்பங்கள் உடைய ஒரு உலகம், கற்பனைத் திறனுள்ளதாய் உலகை விளக்கும் செயல்பாடு அதனை மாற்றுகின்ற செயல்பாட்டுடன் இணைந்துள்ளது என்ற புரிதலால் பற்றிக் கொள்ளப்பட்ட கலைஞனுக்கு கதவைத் திறக்கும்.

கலைத்துவ மற்றும் வரலாற்று உண்மைக்கு அர்ப்பணிப்பின் மூலமாகவே உண்மையான படைப்பாற்றலை அடைய முடியும். இது கலைஞர்களும் படத்தயாரிப்பாளர்களும் தமதாக்கிக் கொள்வதற்கு அவசியமான பொதுவான வழிமுறையாக இருப்பதாக எமக்குப்படுகிறது.

See Also :

சோசலிசத்தின் அழகியற் கூறுகள்&ஸீதீsஜீ;
 

Top of page