World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US, UK step up air war on Iraq

அமெரிக்கா,பிரிட்டன் ஈராக் மீதான வான்வழிப் போரை விரைவுபடுத்துகின்றன

By Bill Vann
6 September 2002

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள், ஈராக்கின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்ட பறக்கத்தடை மண்டலங்கள என அழைக்கப்படுவதில், ஈராக்கிய விமான எதிர்ப்புப் பீரங்கிகளின் சுடுதலுக்கு உண்மையை மறைத்துக்காட்டும் விதத்தில் ஒரு பதிலாக, அண்மைய வாரங்களில் துல்லியமாய் வழி நடத்தக் கூடிய ஆயுதங்களுடன் ஈராக்கில் உள்ள இலக்குகளை திரும்பத்திரும்ப சுட்டிருக்கின்றன.

பாக்தாதிலிருந்து தென்மேற்காக சராசரியாக 240 மைல்கள் தொலைவில் அமைந்திருக்கும் வான்பரப்பில் அமைந்திருக்கும் கட்டுப்பாட்டு மையத்தின் மீதும் வான் பாதுகாப்பு ஆணையகத்தின் மீதும் செப்டம்பர் 5 அன்று சமீபத்திய குண்டுகள் போடப்பட்டன என்று பெண்டகன் மைய ஆணையகம் செய்தி வெளியிட்டது.

புஷ் நிர்வாகம் ஈராக் மீதான "முன்னதாகக் கைப்பற்றி தனதாக்கும்" ஆக்கிரமிப்புக்கான அதன் தரப்பு வாதத்தை ஆரவாரத்துடன் வலியுறுத்துவதுடன், அமெரிக்க இராணுவம் சூறையாடப்பட்ட அரபு தேசத்திற்கு எதிராக குறைந்த அளவு உக்கிரமான வான்வழிப் போரை வெடித்தெழ வைத்திருக்கிறது. இந்த ஆண்டில், இதுவரை நடத்தப்பட்ட 35 திடீர்க் குண்டுவீச்சு தாக்குதல்களில் 10 ஆகஸ்டில் இடம் பெற்றன, அவற்றுள் எட்டு தெற்கு ஈராக்கில் ஆகும்.

ஈராக்கிய மதிப்பீட்டின்படி, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் போர் விமானங்கள் 1998ன் பின்னர் மொத்தம் 42,000 தடவைகள் பறந்திருக்கின்றன, அவை துருக்கி, செளதி அரேபியா மற்றும் குவைத் ஆகியவற்றில் உள்ள தளங்களில் இருந்து பறந்து வருகின்றன. திடீர்க் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் பல நூறு பேர்கள் கொல்லப்பட்டதை வாஷிங்டனும் லண்டனும் "தற்காப்பு" நடவடிக்கைகள் என விவரித்தன. அதில் 1000க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

குடிமக்கள் கொல்லப்பட்டமை பற்றிய ஈராக்கிய அறிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் திரும்பத்திரும்ப மறுத்து வருகின்றனர், அதன் "விரைவு குண்டுகள்" (Smart bombs) இராணுவ இலக்குகள் நோக்கி செலுத்தப்பட்டன. இருப்பினும், ஐ.நா விசாரணை மற்றும் மற்றைய சுதந்திரமான ஆய்வுகள் வேறுவிதமாகக் காட்டி இருக்கின்றன. ஒரு இழிவான சம்பவத்தில், போர் விமானங்கள் ஆடு மேய்ப்பவர்களின் கூடாரத்தின் மீது உயர் வெடி பொருள்களைப் போட்டன, அதில் பெருமளவிலானோர் கொல்லப்பட்டனர் மற்றும் செம்மறி ஆட்டு மந்தைகளை படுகொலை செய்தன. இதனை அடுத்து பெண்டகன், அதன் விமான ஓட்டிகள் நீர் தொட்டியை, ஏவுகணை ஏவி என தவறாக எடுத்துக் கொண்டு விட்டனர் என கூறியது.

அண்மைய விரைவுபடுத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதல்களின் காலப் பொருத்தம், வான் கண்கானிப்பு ரோந்துகள் அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையிலான பெரும் பதட்டங்களைத் தூண்டிவிடும் வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை நன்கு எடுத்துக் கூறுகின்றது. மற்றும் அந்த சம்பவம், சாத்தியமான அளவு, அமெரிக்கா அந்நாட்டை ஆக்கிரமிப்பதற்கான சாக்குப்போக்காகப் பயன்படுத்தப்பட முடியும்.

அதிகரித்த எண்ணிக்கையிலான பறந்து செல்லும் தடவைகள் மற்றும் உக்கிரப்படுத்தப்பட்ட குண்டு வீச்சு நடவடிக்கை அமெரிக்கப் போர்விமானம் ஈராக்கிய எல்லையில் சுட்டு வீழ்த்தப்படும் அபாய நேர்வுகளைக் கூட்டி இருக்கின்றன. ஈராக் மீதான தூண்டப்படாத ஆக்கிரமிப்புக்கான ஒரு சாக்குப்போக்கை புனைவதற்கான புஷ் நிர்வாகத்தின் மிகச் சினமூட்டும் முயற்சிகளின் உள்ளடக்கத்தில், அத்தகைய சம்பவம் ஒரேயடியான போருக்கான நியாயப்படுத்தலாக பற்றிக்கொள்ளப்படும் என்ற சிறிதளவான ஐயம் அங்கு இருக்க முடியும்.

அண்மைய வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையின்படி, உயர் பதவியில் உள்ள அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு பொருதும் ரோந்துகளை முடிவுக்கு கொண்டுவர பரிந்துரை செய்தனர், ஆனால் பாதுகாப்புத் துறையின் குடிமக்கள் தலைமையால் அவை மீறப்பட்டன. அந்த வேலைத்திட்டத்தின் அடக்கச்செலவு ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்களுக்கும் மேல் ஆகும்.

போஸ்டின் படி, பறக்கத்தடை மண்டலங்களைத் தொடர்வதற்கான நியாயம் அவை அமெரிக்காவிற்கு ஆக்கிரமிப்பிற்கு தயார்செய்வதில் பயன்படுத்தக்கூடிய கணிசமான அளவு உளவுத் தகவலை வழங்கமுடியும். மேலும், அவை ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கப் போரை பகிரங்கமாகக் கண்டித்திருக்கும் செளதி அரேபியா மற்றும் துருக்கியை உடன் சேர்த்துக் கொள்ளச் செய்கின்ற சாதனங்களாக சேவை செய்ய முடியும்.

ஒரு பென்டகன் அதிகாரி, இந்நடவடிக்கை "இந்தப் பகுதி பற்றிய அறிவு மீதான எமது திறனை உயர்த்தவும் இந்தப் பகுதியில் பறத்தலில் எமது திறனை உயர்வாய் வைத்திருக்கவும் செய்கிறது. அதிலிருந்து நீங்கள் பெறும் நன்மைகள் --இராணுவ ரீதியாக சிலவற்றைச் செய்ய நீங்கள் தீர்மானித்தால்-- மதிப்பு (பெறுமதி) மிக்கவையாக இருக்கின்றன" என செய்தித்தாளிடம் கூறினார்.

1991 பாரசீக வளைகுடாப் போரின் பின்னர் ஈராக்கின் வடக்கில் உள்ள குர்திஷ் சிறுபான்மையினரையும் தெற்கில் உள்ள ஷியா பிரிவினரையும் தாங்கள் பாதுகாக்கப்போகிறோம் என்ற சாக்குப் போக்கின் கீழ் பறக்கத்தடை மண்டலங்களுக்கு ஆணையிடப்பட்டன. போர் முடிவுறுகையில் இருவரும் சதாம் ஹூசைன் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து வந்தனர். அமெரிக்கப் படைகள் பின்னால் நின்று கொண்டு, ஈராக் அரசாங்கத்தின் படைப்பிரிவுகள் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு அனுமதி அளித்தனர், மற்றும் பின்னரே பறக்கத் தடை மண்டலங்கள் திணிக்கப்பட்டன.

நடைமுறையில், இந்த மண்டலங்கள் எந்த மக்களையும் காப்பாற்றுவதில் ஒன்றும் செய்யவில்லை. பறக்கத்தடை விதிக்கும் கட்டுப்படுத்தல்களில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக, துருக்கிய இராணுவ விமானங்கள், குர்திஸ்தான் பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அங்காராவின் தொடர்ச்சியான கிளர்ச்சி எதிர்ப்பு தாக்குதல்களில் தொடர்ச்சியாக எல்லை கடந்த திடீர்த்தாக்குதல்களை மேற்கொண்டு வந்திருக்கின்றன.

ஆரம்பத்தில், இந்தப்பணிகள் அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு விமானங்களால் பறந்து மேற்கொள்ளப்பட்டன. 1998 அளவில் பிரான்ஸ் இந்த வேலைத் திட்டத்திலிருந்து முற்றிலுமாக தன்னை விலக்கிக் கொண்டது மற்றும் அதன் பின்னர் இருந்து பகிரங்கமாக அதனை எதிர்த்து வருகிறது. ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய நாடுகளும் கூட அதனை ஈராக்கின் இறையாண்மை மீதான சட்டப்படி உரிமை பெறாத மற்றும் சட்டவிரோத வரம்பு மீறிய செயல் என கண்டனம் செய்தன. பறக்கத்தடை மண்டலங்கள் எந்த விதமான ஐ.நா தீர்மானங்களாலும் ஒருபோதும் அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் அவை ஈராக் மீதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் செய்யப்படும் தன்னிச்சையான இராணுவத் தலையீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

ஈராக்கிய "பரந்த மக்களை அழிக்கும் ஆயுதங்களை" பற்றிய புஷ் நிர்வாகத்தின் எச்சரிக்கைகளை செய்தி ஊடகம் எக்காளம் இட்டு முழங்குவதால், ஈராக்கின் இலக்குகளுக்கு, இராணுவ மற்றும் குடிமக்கள் இலக்குகளுக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் அவற்றால் அலட்சியம் செய்யப்படுகின்றன. அதேபோல, அமெரிக்க ஆதரவு பொருளாதாரத் தடைகள் அந்நாட்டை அழிவிற்கு இட்டுச்சென்றுள்ளன மற்றும் --ஐக்கிய நாடுகள் முகவாண்மைகளின் படி-- பத்து இலட்சம் ஈராக்கியர்களின் உயிரை, அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள், காவு கொண்டன, அது உண்மையில் செய்தியாக அறிவிக்கப்படவில்லை.

See Also:

செனியின் போருக்கான விவரம்: பரந்த பொய்களும் வரலாற்று ரீதியான பொய்மைப்படுத்தல்களும்

உத்தியோகபூர்வ விவாதத்திற்குப் பின்னால், அமெரிக்கா ஈராக்கைத் தாக்குவதற்காக படைகளைத் தயாரிக்கிறது

ஜேர்மன் பிரதமர் ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தத்தை எதிர்த்துள்ளார்

ஈராக்கில் அமெரிக்க யுத்த நோக்கங்கள் குறித்து அமெரிக்க மக்கள் அறியாது மறைக்கப்பட்டுள்ளனர்

ஈராக்கிற்கு எதிரான போருக்கு அமெரிக்கா நெருங்குகிறது

அமெரிக்கா ஈராக்கின் மீது முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது

Top of page